Recommended Posts

625.187.560.350.160.300.053.800.330.160.

நவ. 27 மாவீரவர் நாள். மாவீரர் நாள் என்றதுமே, தமிழர் தாயகம் எங்கும் உணர்ச்சி பெருக்கெடுத்துப் பாயும். அந்த உணர்ச்சியை கட்டுக்குள் வைத்து, மனதைக் கனக்க வைப்பதாக ஒலிக்கும், “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய...” மாவீரர்நாள் பாடல்.

மாவீரர்களை நினைவுகூருவது தொடர்பில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இவ்வாறான பாடல் ஒன்றின் தேவையை, அப்போதைய மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் ஜெயா முன்வைத்திருந்தார்.

1992 மாவீரர் நாள் நினைவேந்தலின்போது கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் வர்ணராமேஸ்வரன் இப்பாடலைப் பாடினர். அச்சமயம் அங்கு நின்ற போராளி ஒருவர், இப்பாடல் குறித்து “வெளிச்சம் இதழில்” இக்கட்டுரையை எழுதியிருந்தார். அக்கட்டுரை மீள்பிரசுரமாகிறது.)

1992 ஆம் ஆண்டின் மாவீரர் நாள் பிறக்கப் போகின்றது. இந்த நாளின் பிறப்பின்போது, நாம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நிற்க வேண்டும். இதற்காககச் சென்று கொண்டிருக்கிறோம்.

பகலிலேயே எங்கோ ஒருவரைத்தான் காணக்கூடியதாக இருக்கும் இராசபாதையில் நள்ளிரவிலும் ஒரே மக்கள் கூட்டம். இந்த வீதியிலிருந்து மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் செல்லும் வீதியில் இன்னும் கூடுதலான மக்கள் திரள்திரளாகச் செல்கிறார்களே....

இவர்கள் கிளாலியை நோக்கிச் செல்லும் மக்கள் கூட்டமல்ல... நல்லூர் திருவிழா முடிந்ததும் கடலைக் கடைகளுக்கும் ஐஸ்கிறீம் கடைகளுக்கும் வேடிக்கை பார்க்கும் கூட்டமுமல்ல... அனைவருமே உணர்ச்சிப் பிளம்புகளாய் காட்சியளிக்கிறார்கள்.

சத்தியம் செய்யும் அந்தக் கூட்டத்தினூடேதான் போய்க் கொண்டிருக்கிறோம். இது ஒரு வித்தியாசமான அனுபவம்தான். நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின்போதும் மனதுள் ஏதோ ஒன்று... அதை விபரிக்க முடியவில்லை.

“என்ரை ராசா... கிளியண்ணை வந்திருக்கிறார் ஒருக்காப் பார் ராசா...”, ஒரு மாவீரனின் சமாதியில் அவர் தாய் அழுதுகொண்டே சொல்லும் வார்த்தைகள் எமது நெஞ்சைப் பிழிகின்றது.

கண்ணீர் முட்டுகிறது. கூட வந்தவர்களுக்குத் தெரியாதபடி துடைத்துக் கொள்கிறேன். இப்போதே அழத் தொடங்கினால்.... கஷ்டப்பட்டு கண்ணீரைச் சிக்கனப்படுத்திக் கொள்கிறேன். பின்பு தேவையல்லவா.

வழியில் இந்த ஆண்டு மாவீரர் தினம் பிறக்கும் வேளையில் மணியோசைக்குப் பின் ஒலிக்கவிருக்கும் மாவீரர் பாடலைப் பாடவிருக்கும் வர்ணராமேஸ்வரன் வருகிறார்.

“ராமேஸ்வரன் எனக்குப் பக்கத்தில நில்லுங்கோ... நீங்கள்தான் எனக்குப் பக்கத்தில நிண்டு பாடுறது.”, உரிமையுடன் கட்டளையிடுகிறார் புதுவையண்ணா. இப்படித்தான் நாங்கள் எங்கள் மக்களை வசப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

சுற்றுமுற்றும் பார்க்கிறேன். மாவீரர் சமாதியில் ஊதுவர்த்திகளைக் கொழுத்தியும் மலர் வைத்தும்... எந்த ஒரு ஆலயமும் இந்த மாதிரியான புற அகத் தூய்மையோடு காணப்படுவதில்லை... கண்ணீரைக் கட்டுப்படுத்த சிரமமாயிருக்கிறது.

சாதாரணமாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளச் சிரமப்படுகிறேன். ஒவ்வொரு விநாடியும் செல்லச் செல்ல மயிர்க்கால்கள் குத்திடுகின்றன.

மாவீரர் துயிலுமில்லத்தில் முதலாவது சுடர் ஏற்றப்படும் இடம் - அந்த நேரத்தை எதிர்பார்த்தபடி மனம் எதையோ தேடுகின்றது. 12.00 மணி. யாழ். மாவட்ட விசேட தளபதி தமிழ்ச்செல்வன் முதலாவது சுடரை ஏற்றுகிறார். எங்கும் ஆலய மணியோசை.

தீபத்தில் ஏற்றப்படும் ஒளியைத் தொடர்ந்து எனது கண்கள் எனது கட்டுப்பாட்டை இழக்கின்றன. ஆலய மணியின் ஓசை ஒலிக்கு மட்டும் மௌனமாக நின்று அஞ்சலிக்கின்றோம். ராமேஸ்வரன் பாடுகிறார். இதே பாடல் ஒலிபெருக்கியிலும்... நாம் உறுதியெடுத்துக் கொள்கின்றோம்...

“வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி. விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி. இழிவாக வாழோம் தமிழீழப் போரில் இனிமேலும் ஓயோம் உறுதி.”

நான் ஏன் அழுகின்றேன்... இழப்புகளினால் உரமேறிய தேசமல்லவா... எனது தேசம். ஐயாயிரத்துக்கும் மேலும் சில நூறு பேர்களை இழந்து விட்டோம். இன்னுமா மாறவில்லை. சீலனது வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன.

“போராளிகள் மென்மையான மனமுடையவர்கள். மற்றவர்களுக்கு ஏற்படும் துன்பங்களைக் கண்டு மனம் சகிக்க முடியாதவர்களே போராளியாகின்றனர். அதைத் தாங்கிக் கொண்டு சாதாரணமாக இருக்கக்கூடியவர்கள்தான் போராட்டத்துக்கு வெளியில் நிற்கிறார்கள்.”,

எவ்வளவு அச்சொட்டான வார்த்தைகள் இவை. சூழவுள்ள மக்களைப் பார்க்கிறேன். எத்தனை எத்தனை ஆயிரம் சொந்தங்கள் எமக்கு. எல்லோரும் எம்மவர்கள்... ஆனால் அன்று நீயும் ஆனந்தும் எரிக்கப்படும்போது உங்களுக்குப் பக்கத்தில் ஒருவருமே இல்லையே...

உனது வீரச்சாவுச் செய்தி கேட்டு திருமலையிலிருந்து பறந்து வந்த உனது அம்மா உனது உடலைத் தரும்படி எவ்வளவு மன்றாடியிருப்பார் சிறீலங்கா இராணுவத்திடம். அவர்கள் உனது உடலைக் கொடுக்கவில்லையே...

பௌத்த தர்மம் அதற்கு இடமளிக்கவில்லை... இன்று இந்தத் தேசமே சொந்தம் கொண்டாடுகிறது. நாங்கள் வளர்ந்துவிட்டோம்... எங்கும் போராளிகள் பொதுமக்கள்...

ஒரு தாக்குதலுக்காக யாழ். நகரப் பகுதிக்குள் சென்று கொண்டிருக்கிறோம் மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் இராணுவத்தினர் இரண்டு வாகனங்களில் வந்து இறங்குகின்றனர். கம்பீரமான தோற்றத்துடன் தனக்குச் சொந்தமில்லாத மண்ணில் நடமாடுகின்றனர் இராணுவத்தினர்.

அப்போது நீ சொல்கிறாய், “இதைப் போல நாங்களும் ஆம்ஸைக் கட்டிக் கொண்டு சுதந்திரமா திரிய வேணும் அப்ப அது புதினமில்லாத மாதிரி சனம் போக வேணும்”, எவ்வளவு ஆசையாகச் சொன்னாய்.

இந்தப் போராட்டம் வெல்லும் நாங்கள் வளர்வோம் என்பதெல்லாம் நாம் எதிர்பார்த்ததுதான். ஆனால், இவ்வளவு விரைவாக... எனல்லாம் இன்றுபோல் இருக்கிறது. “உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்...”

இதேநேரம் இந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் ஏதோ ஒரு இடத்தில் அழுது கொண்டிருப்பார்கள் எனது குஞ்சம்மாவும், குஞ்சையாவும். எனது இளமைக் காலங்கள் நினைவுக்கு வருகின்றன.

இவர்களின் மகன் நக்கீரன் (செந்தில்குமரன்) அப்போது பிறக்கவில்லை. (ஆறு பெண் பிள்ளைகளுக்குப் பின்னே இவன் பிறந்தான். ) ஒவ்வொரு பிள்ளையும் பிறக்கும்போது இது ஆண்பிள்ளையாக இருக்காதா என்ற எதிர்பார்ப்பாயிருக்கும்.

இனி ஆண் பிள்ளையே பிறக்காது. நமக்கு இறுதிக்கடன் செய்ய ஆண்பிள்ளை இல்லையே என்று குஞ்சையாவுக்கு ஒரு ஏக்கம். அதனால் அவர் என்னுடன் கூடியளவு பாசத்துடன் இருந்தார்.

ஒருநாள் எனக்குத் தேவையான பழவகைகளை வாங்கி வந்து “குஞ்சையாவுக்கு கொள்ளி வைப்பியா மனா?”, என்று கேட்டார். நானும் CV “ஓம்” என்றேன். அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை.

அதன் பிறகு எனது தேவைகளை நிறைவேற்றுமிடத்தை நான் தெரிந்து கொண்டேன். ஒவ்வொரு தடவையயும் அவர் என்னைக் கேட்பார் “குஞ்சையாவுக்கு என்ன செய்வாய்?”, “கொள்ளி வைப்பன்”, இதன் தாக்கம் விளங்காது பதில் சொல்லும் வயது.

ஏழாவதாகச் செந்தில்குமரன் பிறந்தான். அவன் மீது பாசமாகக் கொட்டி வளர்த்தார்கள். நானும் வளர்ந்து விட்டேன். அப்போதெல்லாம் இந்தப் பழைய சம்பவத்தை எனது குடும்பத்தாரிடம் சொல்லிச் சிரிப்பேன்.

“இப்ப குஞ்சையா செத்து நான் கொள்ளி வைக்கப் போனால் குஞ்சையா பெட்டிக்குள்ளால எழும்பி “ஏன் நீ கொள்ளி வைக்கிறாய் செந்தில் எங்கை போட்டான்” எண்டு கோட்பார் என்று சொல்லிச் சிரிப்பேன்.

அவன் இயக்கத்துக்குப் போய் மாவீரர் ஆனதும் நான் அங்கே போனேன். அப்போது அவர், “டேய் நீ சின்னனாய் இருக்கேக்கை குஞ்சையாவுக்கு கொள்ளி வைப்பனெண்டெல்லோ சொன்னனீ... வைப்பாய்தானே...” என்றார்.

புரியாத வயதில் சொன்ன அந்த வார்த்தைகளில் இத்தனை அர்த்தமா...? இத்தனை தாக்கமா...? தொடர்ந்து பாடல் ஒலிக்கிறது. “.... .... அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்...”

அடிபட்ட பந்தாக மீண்டும் சீலனை நோக்கி நினைவுகள்... சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத் தாக்குதல். மேல் மாடியில் காலில் காயப்பட்ட சீலன் காலை இழுத்துக் கொண்டு இயலாத நிலையில் றிப்பிட்டரைக் கொடுத்து விட்டு அந்த பொலிஸ் நிலைய வளவில் தேறங்கியிருந்த மழைத்தண்ணீரைக் குடிக்கிறான்.

தொடர்ந்து படுத்தபடியே அவனது உத்தரவுகள், “ஒண்டையும் விடக்கூடாது எல்லாத்தையும் ஏத்தவேணும்”, இயந்திரமாக இயங்குகிறோம். எல்லாவற்றையும் ஏற்றியதும் மினிபஸ் புறப்படுகிறது. அழுதபடியே ரஞ்சன் காயப்பட்ட எல்லாரையும் கொஞ்சுகிறான்.

(சீலன், புலேந்திரன்....) எல்லாரையும் காப்பாற்ற விரைவாக வாகனத்தை செலுத்துகிறான் சங்கர். அன்று மற்றவர்கள் காயப்பட்டதற்காக அழுத ரஞ்சன் உட்பட ஏனைய அனைவரையும் தொலைத்து விட்டு நிற்கிறோம். அதே வரிகள் மீண்டும்.

“.... .... அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்...” வரிசையாக நினைவுக்கு வருகின்றனர். “யாழ்ப்பாணத்த்துக்கு வெளியில அடிக்க வேணும்”, என்று அடிக்கடி கூறும் செல்லக்கிளியம்மான்.

உமையாள்புரத்தில் இராணுவத்தினர் ஓடும்போது சிரித்தபடியே “துரத்துங்கடா” என்றபடியே அவர்களின் ட்றக்கில் ஏறிய செல்லக்கிளியம்மான்... களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத் தாக்குதலில், “அம்மாட்டச் சொல்லுங்கோ நான் சண்டையிலதான் செத்தனெண்டு”,

என்று சொன்ன பரமதேவா. ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடுமையாகச் சண்டை நடந்து கொண்டிருக்கும்போது, “ரெலண்டு கிறனைட் தாங்கோ நான் உள்ளுக்கை போய்க் காட்டுறன்” என்று சொன்ன விசாகன்.

“அண்ணே ஒரு சக்கைக் கானைத் தாங்கோ நான் கொழுத்திக் கொண்டு போய் உள்ளுக்கை வைச்சிட்டு வாறன்” என்று சக்கைக்கானை வாங்கிக் கொண்டு துப்பாக்கி வேட்டுகளுக்கிடையே பொலிஸாருக்கு மத்தியில் அதை வைத்து விட்டு வந்த கமல்... இன்னும் எத்தனை... எத்தனை...

“எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள் ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்”

தவிக்கும் மனதின் வார்த்தைப் பிளம்பு இது. எனக்கு இதற்கும் மேல்... “ழ”கரம், “ல”கரம் வித்தியாசமில்லாமல் மழலையாக ஒலிக்கும் சீலனின் வார்த்தைகளைக் கேட்க வேண்டும் போல் இருக்கிறது.

“நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமுமை வணங்குகின்றோம்” பகீனுக்கு எப்போதும் சந்தேகம் இந்த சயனைற் வேலை செய்யுமாவென்று, அடிக்கடி கேட்பான்.

“அண்ணை இது வேலை செய்யுமோ?” “அது வேலை செய்யும் நீ போடா”, வல்வெட்டித்துறைக்கு அனுப்பி வைப்போம். நாம் எத்தனை தரம் சொன்னாலும் அவனுக்குத் திருப்தியில்லை.

ஒருநாள் நள்ளிரவு. களைத்துப்போய் வந்த நான் படுக்கப்போகிறேன்.. அப்போதும் கேட்கிறான். “அண்ணை இது வேலை செய்யுமோ?” - எனக்கு எரிச்சல். “வேலை செய்யாது போல கிடக்கு... உன்னிலதான் ரெஸ்ற் பண்ண வேணும்... போய்ப் படடா”

அவன்தான் எமது இயக்கத்தில் முதன் முதல் சயனைற் உட்கொண்டவன். அந்தச் செய்தி கிடைத்ததும் நான்... இந்த வாயால இனி எதுவும்... “எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள் ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்”

கண்ணால் காண முடியவில்லைத்தான். ஆனால், மனதில் அனைவரது முகங்களும்... அங்கிருந்து நகர்கிறேன். “உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம் - அதை நிரை நிரையாக நின்றினி விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்.”

என்ற வரிகளை மனதில் சுமந்தபடி அங்கிருந்து நகர்கிறேன். கடந்த வருடத்தைப் போலவே. அங்கு பலர் மயங்கி விழுகின்றார்கள். முதலுதவிப் படையினர் அழைக்கப்படுகின்றனர்.

அறிவிப்பாளரின் மொழியில் கூட சோகம்... உலகத்தில் எந்தவொரு விடுதலைப் போராட்டத்திலும் இப்படியொரு காட்சியைக் காண முடியாது என்று என் மனது சத்தியம் செய்கிறது.

625.147.560.350.160.300.053.800.264.160.

https://www.tamilwin.com/articles/01/232310?ref=home-feed

 • Thanks 3

Share this post


Link to post
Share on other sites

முல்லைத்தீவில் மாவீரர் தின நிகழ்விற்கு ஏற்பட்ட தடைகளை தகர்த்தெறிந்த இளஞ்செழியன்!

தமிழர் தாயகப பகுதியெங்கும் மாவீரர் தின நிகழ்வுகளை முன்னெடுப்பதற்காக கடந்த சில நாட்களாக அதற்கான முன் ஏற்பாடுகள் மக்களால் முன்னெடுக்கப்பட்டுவந்தன.

அந்தவகையில, முல்லைத்தீவு கடற்கரையிலும் மாவீரர் தின நிகழ்வுக்கான வேலைகள் நேற்று காலை 10 மணியில் இருந்து நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நேற்று இரவு 9.30 மணியளவில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இருந்து பொலிஸார் குறித்த இடத்துக்கு சென்று உடன் அனைத்து வேலைகளையும் நிறுத்துமாறு இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியனிடம் அறிவுறுத்தியுள்ளனர்.

அதன் பின்பு இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன் அங்கு சென்றிருந்த பொலிஸாரிடம் மாவீரர் தின நிகழ்வானது தொடர்ந்து 5 ஆவது வருடம் இங்கு நடைபெறுவதற்கு ஏற்பாடு நடைபெறுவதாகவும் கடந்த 4 வருடங்களாக நாம் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்காது மாவீரர் தின நிகழ்வு நடைபெற்றதாகவும் தொடர்ந்து இம்முறையும் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்காது மாவீரர் தின நிகழ்வு நடைபெறும் எனவும் பொலிஸாரிடம் எடுத்துரைத்தார்.

தொடந்து பொலிஸார் இங்கு வித்துடல்கள் புதைக்கப்பட்டதா? இல்லை ஆகவே குறித்த இடத்தில் மாவீரர் நாள் நிகழ்வு நடத்த கூடாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தொடந்தும் பல கேள்விகளை தொடுத்துள்ளனர்.

பொலிஸாரின் கேள்விகளுக்கு பீட்டர் இளஞ்செழியன், தனக்கு அறிவு எட்டிய காலத்தில் இருந்து கடலில் காவியமாகிய அனைவருக்கும் இவ்விடத்திலே மாவீரர் தின நிகழ்வு நடை பெறுவதாகவும். வித்துடல்களை விதைத்த இடத்தில் அதற்கு மேல் இராணுவம் இருந்தால் எம் மாவீரர்களுக்கு எங்கு அஞ்சலி செலுத்துவது என்றும் வினாவை எழுப்பியுள்ளார்.

அதன் பின்பும் மாவீரர் தின நிகழ்வை தடை செய்யவே பொலிஸார் திட்டம் தீட்டி கொண்டிருந்தனர். அதை உணர்ந்த பீற்றர் இளஞ்செழியன் உடனடியாக பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

உடனடியாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய தலைமை அதிகாரியுடன் (HQ) தொடர்பு கொண்டுள்ளார். அதன் பின்பு தொடர்ந்து மாவீரர் தின நிகழ்வை தடை இன்றி நடத்த அனுமதி கிடைத்ததாக பீற்றர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்துரைத்த பீற்றர் இளஞ்செழியன் கடந்த 4 வருடங்களாக எந்த தடையும் இன்றி மாவீரர் தின நிகழ்வு நடைபெற்று வந்தது. அதை பொலிஸாரும் அறிந்திருந்தனர். நேற்று காலை 10 மணியில் இருந்து நடைபெற்று வரும் மாவீரர் தின முன்னாயத்தங்கள் இரவு 9.30 மணிக்கு தான் முல்லைத்தீவு நகரில் உள்ள பொலிஸாரின் கண்களுக்கு தெரிந்ததா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பின்னால் ஏதோ ஒரு சூழ்ச்சி இருப்பதாகவும் எந்த சூழ்ச்சியும் எந்த தடையும் தொடர்ந்து வந்தாலும் மாவீரர் தின நிகழ்வு நடை பெறும் என பீற்றர் இளஞ்செழியன் தெரிவித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/131960?ref=home-imp-parsely

Share this post


Link to post
Share on other sites

இராணுவத்தினரின் கெடுபிடிக்கு மத்தியிலும் கொடிகாமம் மற்றும் வடமராட்சியில் மாவீரர் நாள் நினைவேந்தல்

49shares
 
Lankasrimarket.com
 

கொடிகாகம் துயிலுமில்லம் முன்பாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஷ்டிக்க முற்பட்ட போது இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் கொடிகாகம் துயிலுமில்லத்திற்கு அருகில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டதாக சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இதேவேளை வடமராட்சி எல்லங்குளம் இடித்தழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்த முற்பட்டபோது அங்கும் இராணுவத்தினர் தடுத்தனர்.

பின்னர் இராணுவ முகாமிற்கு அருகாமையில் சுடர் ஏற்றி அஞ்சலிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இன்றைய தினம் குறித்த இரு இடங்களிலும் இராணுவ முகாம்களிற்கு முன்னால் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதன் காரணமாகவே இராணுவத்தினர் தடுத்திருந்தனர் எனவும், அதன் பின்னர் இராணுவ முகாமிற்கு அருகில் சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டதாகவும் பொதுமக்களும் அச்சமின்றி நினைவேந்தலில் கலந்து கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/131973?ref=home-imp-parsely

Share this post


Link to post
Share on other sites

தடைகளை மீறி ஆரம்பமானது நினைவேந்தல்!! யாழ்.நல்லூரில் குவியும் பொதுமக்கள்!!(video)

யாழ்ப்பாணம் நல்லூரில் 25000 மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நல்லூரில் திலீபனின் நினைவுத் தூபி முன்பாக விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களின் சொந்த பெயர்களை வைத்து அஞ்சலி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

எனினும் இதற்குத் தடைகள் சில ஏற்படுத்தப்பட்டிருந்த போதும் அந்தத் தடைகளைத் தாண்டியும் 25000 மாவீரர்களின் கல்வெட்டுக்கள் வைக்கப்பட்டு அஞ்சலிசெலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது பெருமளவானோர் தமது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

தமிழ் மக்களின் விடுதலைக்கானஆயுதப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை தியாகம் செய்த 25,000 மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் நல்லூரிலுள்ள தியாக தீபம்தீலிபனின் நினைவுத் தூபிக்கு முன்னாள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டிலேயே நல்லூரில் திலீபனின் நினைவுதூபி முன்பாக தமிழீழ விடுதலை போராட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களின் சொந்த பெயர்களைவைத்து அஞ்சலி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

உள்ளூர் நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு குறித்த அஞ்சலிநிகழ்வை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகள் இன்றுமுற்பகல் முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது சம்பவ இடத்திற்கு சென்ற யாழ்.பொலிஸார் மாவீரர்களின் பெயர்களை வைக்கமுடியாது என்று கூறி நிகழ்வை தடுக்க முற்பட்டுள்ளனர்.

எனினும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள பெயர்கள் அனைத்தும் உயிரிழந்த எமதுஉறவினர்கள் என்றும், அவர்களுடைய சொந்த பெயர்களையே அஞ்சலிக்காகவைக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் பொலிசாருக்கு தெரிவித்தனர்.

எனினும் அஞ்சலி நிகழ்வுகளுக்கு தடை விதித்த யாழ் பொலிஸார், நிகழ்வு ஏற்பாட்டாளர்களை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறிச் சென்றுள்ளனர். இருப்பினும் அஞ்சலிநிகழ்வு யார் தடுத்தாலும் நடாத்தப்படும் என்று ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தநிலையில் இன்று மாலை திட்டமிட்டபடி 25000 மாவீரர்களின் பெயர்கள்பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் வைக்கப்பட்டு அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து ஏராளமானோர் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிக்கு சென்று பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தியதாக எமது யாழ் செய்தியாளர்தெரிவித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/131925?ref=rightsidebar

 

 

வடமராட்சியில் பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் உணர்வெழுச்சியுடன் தீபமேற்றி அஞ்சலி!

வடமராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள பகுதியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற உறவுகள் பொலிஸாரின் பாதுகாப்புக் கெடிபிடிகளுக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக தீபம் ஏற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.

தமிழர் தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இன்று மாலை 6.05 மணிக்குக் கடைப்பிடிக்கப்பட்டது. மாவீரர் இருவரின் தந்தையான பொன்னுத்துரை சுப்பிரமணியம் சக்கர நாக்காலியில் வந்து பொதுச் சுடர் ஏற்றி வைத்தார்.

இந்த நிலையில் வடமராட்சி எல்லங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள இடத்தில் அஞ்சலி செலுத்தச் சென்ற உறவுகள் சோதனைகளுக்கு உள்படுத்தப்பட்டனர்.

அங்கு ஒலிபெருக்கி இயக்குவதற்கும் கொடிகள் கட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. அஞ்சலி செலுத்தச் சென்ற உறவுகள் சிவில் உடையில் நின்ற புலனாய்வாளர்களால் ஒளிப்படம் எடுக்கப்பட்டனர்.

எனினும் பாதுகாப்புக் கெடிபிடிகளுக்கு மத்தியில் உறவுகள் உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

வடமராட்சி எல்லங்குளம் துயிலும் இல்லம் இடித்தழிக்கப்பட்டு தற்போது அங்கு இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/131996

 

பெற்றோர் உறவுகளின் கண்ணீரின் மத்தியில் கனகபுரம் துயிலும் இல்லத்தில் ஈகைச்சுடரேற்றல்!

கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினம் நினைவுகூரும் நிகழ்வுகள் சற்று முன்னர் மிகவும் உணர்வு பூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.

மாலை 6.5 மணிக்கு மணியொலி எழுப்பப்பட்டதையடுத்து அகவணக்கம் செலுத்தப்பட்டு பிரதான பொதுச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

நான்கு மாவீரர்களின் தந்தையான வைத்தியலிங்கம் சண்முகம் பொதுச் சுடரினை ஏற்றி வைத்துள்ளார்.

அதனையடுத்து துயிலுமில்ல பாடல் ஒலிக்க விடப்பட்டு ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றன.

இதன் போது, பெருமளவான மக்கள் கலந்து கொண்டு கண்ணீருடன் போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு தமது அஞ்சலிகளை செய்து வருகின்றனர்.

 

 

https://www.ibctamil.com/srilanka/80/131993

முல்லைத்தீவு ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் இன்றையதினம் மாவீரர் நாள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் முல்லைத்தீவு ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் நிலையில் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக துயிலும் இல்லத்திற்கு அருகாமையிலுள்ள ஒரு இடத்திலே விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி ஆக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

குறித்த பகுதியில் மாவீரர் தினம் ஏற்பாடுகள் நேற்றைய தினம் இடம்பெற்ற வேளையில் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்துக்கு முன்பாக கட்டப்பட்டிருந்த வளைவினை நேற்றைய தினம் ஆயுதம் தாங்கிய பொலிசார் வருகை தந்து உழவு இயந்திரத்தால் அகற்றி சென்றதோடு அந்த சம்பவங்களை படம் பிடிக்காத அளவில் குறித்த இடத்தில் இருந்த மக்களது கையடக்க தொலைபேசிகள் அனைத்தையும் பறித்து விட்டு குறித்த விடயம் நடைபெற்றதன் பின்னர் கைது பேசிகளையும் அவர்களிடம் கையளித்து விட்டு சென்றிருந்தனர்.

இவ்வாறான சூழ்நிலையில் தற்போது எந்தவித அசம்பாவிதங்களும் இல்லாத நிலையில் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் நினைவேந்தல் நிகழ்விற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி ஆக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

 

https://www.ibctamil.com/srilanka/80/131992

Edited by Rajesh

Share this post


Link to post
Share on other sites

தமிழர் தாயக மாவீரர் துயிலும் இல்லங்களில் வெளிநாட்டவர்கள்!

மாவீரர் தினமான இன்றைய தினம் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் எழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக இலங்கையில் தமிழர் தாயக பகுதி எங்கும் படையினர் மற்றும் பொலிஸாரின் தடைகளை மீறி உணர்வெளிச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில் அங்கு வெளிநாட்டவர்களும் வருகை தந்து ஏற்பாட்டுக்குழுவுடனும் உறவினர்களுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/131995?ref=imp-news

 

சென்னை பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி!!

தமிழ்நாடு சென்னை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர்களுக்ககான அஞ்சலி:

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/india/80/131982?ref=home-imp-parsely

 

பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் அம்பாறை கஞ்சிகுடிசாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் 800க்கு மேற்பட்ட தீபங்களுடன் மழையிலும் உறவுகளின் கண்ணீரிலும் ஈகைச்சுடரேற்றல்!

அம்பாறை கஞ்சிகுடிசாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை 6.5 மணியளவில் ஏரம்பு செல்லம்மா என்ற நான்கு மாவீரர்களின் தாயார் முதல் ஈக சுடரினை ஏற்றி வைக்க ஏனைய உறவுகளும் நினைவேந்தல் சுடரினை ஏற்றி வைக்க உணர்வு பூர்வமாக கொட்டும் மழைக்கு மத்தியிலும் தாய்மார், உறவுகளின் கண்ணீரின் மத்தியிலும் உணர்வுபூர்வமாக மாவீரர் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

தாயக விடுதலையை தங்கள் இலட்சியமாக கொண்டு களமாடி மடிந்த மாவீரர்கள் இந்த புனித நாளில் நினைவு கூரப்பட்டனர் .

அம்பாறை கஞ்சிகுடிசாறு மாவீரர் துயிலும் இல்ல ஒருங்கிணைப்பு குழு தலைவர் நாகமணி கிருஷ்ணப்பிள்ளை தலைமையில் நினைவேந்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிட தக்கது.

தாயக விடுதலை என்ற இலட்சியத்தை நெஞ்சிலே சுமந்து களமாடி மடிந்த காவிய நாயகர்களை எண்ணி மாவீரர்களின் பெற்றோர்களும் ,உறவுகளும் கண்ணீரில் கரைந்த நிகழ்வுகள் அனைவரது இதயங்களையும் கனக்க செய்தது.

மேலும் இராணுவ தரப்பினர் மற்றும் பொலிஸார் உறவினர் கொண்டு வந்த மாவீர்களின் உருவப்படங்களை துயிலும் இல்லத்திற்குள் எடுத்துவர அனுமதிக்கப்படவில்லை. அத்தோடு கீதங்களும் இசைக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது .

காலை முதல் பொழிந்து கொண்டிருக்கும் அடை மழையிலும் தாயக கனவான்களின் நினைவேந்தல் உணர்ச்சி பெருக்கோடு அனுஷ்டிக்கபட்டது.

அம்பாறை கஞ்சிகுடிசாறு மாவீரர் துயிலும் இல்லம் நினைவேந்தலுக்கு தயார் நிலையில் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

எண்ணூறுக்கு மேற்பட்ட தீபங்கள் மாவீரர்களை நினைவு கூர தயார் படுத்தப்பட்டு உணர்ச்சி பெருக்கோடு காட்சியளிக்கின்றது.

பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் ஆடம்பரம் இன்றி மாவீரர்களை நினைவுகூருமாறு பாதுகாப்பு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/131991

Share this post


Link to post
Share on other sites

கொட்டும் மழையிலும் மட்டக்களப்பில் மாவீரர் தின நிகழ்வுகள்

IMG_9268.jpg

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொட்டும் மழையிலும் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

மட்டக்களப்பு, படுவான்கரையில் உள்ள மாவடிமுன்மாரியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

துமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியதேந்திரன் தலைமையில் இந்த நிகழ்வு கொட்டும் மழையிலும் நடைபெற்றுள்ளது.

பிரதான ஈகைச்சுடர் மாவீரர் ஒருவரின் தாயாரினால் ஏற்றப்பட்டு பின்னர் உயிர் நீர்த்த மாவீரர்களின் உறவுகளினால் ஈகச்சுடர்கள் ஏற்றப்பட்டு மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிகழ்வில் மாவீரர்களின் உறவினர்கள், முன்னாள் போராளிகள், அரசியல்வாதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

IMG_9274.jpg

IMG_9279.jpg

http://athavannews.com/கொட்டும்-மழையிலும்-மட்டக/

Share this post


Link to post
Share on other sites

கிழக்கு பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி!

வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் கார்த்திகை 27 மாவீரர் தினம் இன்று உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழக கலை காலசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு உயிர் நீத்த மாவீர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/131978

Share this post


Link to post
Share on other sites

தடைகளை உடைத்து யாழ் பல்கலையில் மாவீரா் நாள் அனுஸ்டிப்பு!!

 

 

பல்வேறு தடைகளையும் தகர்த்து கொட்டும் மழையிலும் யாழ். பல்கலையின் சரியாக 6.05 மணிக்கு நினைவேந்தல்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் பல வழிகளிலும் தடைகளை ஏற்படுத்திய போதிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.

சரியாக 6.05 மணிக்கு மாவீரர் தின ஒழுங்குக்கமைய மணியோசை ஒலிக்க, அகவணக்கம் செலுத்தப்பட்டு, பொதுச் சுடரேற்றப்பட்டது. பொதுச் சுடரினை மூன்று மாவீரர்களின் தந்தை ஒருவர் ஏற்றி வைத்தார். பொதுச்சுடரேற்றலைத் தொடர்ந்து மாவீரர் பாடல் இசைக்க கலந்து கொண்ட மாணவர்கள், ஊழியர்கள் அனைவரும் ஈகச் சுடர்களையேற்றி அஞ்சலி செய்தனர்.

மாவீரர் தின ஏற்பாடுகளை முடக்கும் வகையில் பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரியினால் இன்றும் (27) நாளையும் (28) மாணவர்கள் எவரும் உள்நுழையா வண்ணம் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன், நிகழ்வுகள் எவையும் நடத்தப்படக்கூடாது என மாணவர் ஒன்றியத்துக்கு கண்டிப்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இன்று காலை தடைகளை மீறி பூட்டப்பட்டிருந்த பிரதான வாயிலால் உள்நுழைந்து மாவீரர் தின நிகழ்வுகளை மேற்கொண்டிருந்தனர். அதனையடுத்து பல்கலைக்கழக வளாகத்தினுள்ளிருந்து ஊழியர்கள் உட்பட அனைவரையும் பிற்பகல் 2 மணியுடன் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டதுடன், 4 மணியளவில் பல்கலைக் கழகத்தின் பிதான நுழைவாயில் சங்கிலியால் பூட்டப்பட்டது. அத்தனை தடைகளையும் மீறி மாணவர்கள் மிகவும் உணர்வு பூர்வமாக நினைவேந்தலை நடாத்தியிருந்தனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/131999

Share this post


Link to post
Share on other sites

அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மன்னாரில் எழுச்சிபூர்வமாக  நடைபெற்ற மாவீரர் நினைவஞ்சலி

மன்னார் - பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த நினைவேந்தலுக்கு பல்வேறு வகையிலும் தடைகளும், அச்சுறுத்தல்களும் வந்த போதும் நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் தினத்தை அனுஷ்டிக்க வேண்டாமென இராணுவத்தினர் இரண்டு நாட்களாக பல அச்சுறுத்தல்களை நேரடியாக விடுத்திருந்தனர்.

இருந்தபோதிலும் அஞ்சலிக்காக திரண்டிருந்த மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் பக்கபலமாக நின்று மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபட்டிருந்தார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

https://www.tamilwin.com/community/01/232380?ref=home-feed

 

 

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவுகூரல்

Mannar-Aadkaddiveli-ThuyilumiIllam-2019.jpg

மன்னார் மாவீரர் தின நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவுகூரல் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது இன்று (புதன்கிழமை) மாலை 6.5 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. பண்டிவிருச்சானைச் சேர்ந்த மூன்று மாவீரர்களின் தந்தையான பொன்னுச்சாமி இராமநாதன் என்பவரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாவீர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள் போராளிகள், அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் உள்ளடங்கலாக ஆயிரக் கணக்காணவர்கள் கலந்துகொண்டு மலர்தூவி, ஈகைச் சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இறுதியில் மாவீரர்களின் நினைவாக குடும்பத்தினருக்கு தென்னங் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

Mannar-Aadkaddiveli-ThuyilumiIllam-2019-

Mannar-Aadkaddiveli-ThuyilumiIllam-2019-

Mannar-Aadkaddiveli-ThuyilumiIllam-2019-

Mannar-Aadkaddiveli-ThuyilumiIllam-2019-

http://athavannews.com/மன்னார்-ஆட்காட்டிவெளி-மா/

Share this post


Link to post
Share on other sites

வவுனியாவில் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்ட மாவீரர் நாள்!

வவுனியாவில் உணர்வுபூர்வமாக மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா பிரஜைகள் குழுவின் எற்பாட்டில் வவுனியா நகரசபை மண்டபத்தில் பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட நினைவாலயத்தில் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.

மூன்று மாவீரர்களின் தாயாரான தனலட்சுமியினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மாவீரர்களின் பெற்றோரும் மாவீரர்களின் நினைவுருவப்படத்திற்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதேவேளை மாவீரர் நாளை அனுஸ்டிப்பதற்காக வருகை தந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியதுடன் மலரஞ்சலியும் செலுத்தி மாவீரர்களை வணங்கியிருந்தனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/131998

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

வன்னிவிளாங் குளத்தில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு

Mullaitivu-Vannivilankulam-Maveerar-Thuyilum-Illam-2019.jpg

முல்லைத்தீவு, வன்னிவிளாங் குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

இன்று (புதன்கிழமை) மாலை 6.6 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு பிரதான ஈகைச்சுடர் ஏற்றிவைக்கபட்டது.

மூன்று மாவீரர்களின் தாயாரான சுப்பிரமணியம் செல்வராணியால் பிரதான ஈகை சுடர் ஏற்றிவைக்கபட்டது. அதனைத் தொடர்ந்தது ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டன.

இம்முறையும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்திருந்ததுடன் அழுகுரல்களிற்கு மத்தியில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

Mullaitivu-Vannivilankulam-Maveerar-Thuy

Mullaitivu-Vannivilankulam-Maveerar-Thuy

Mullaitivu-Vannivilankulam-Maveerar-Thuy

Mullaitivu-Vannivilankulam-Maveerar-Thuy

http://athavannews.com/வன்னிவிளாங்-குளத்தில்-மா/

Share this post


Link to post
Share on other sites

இராணுவத்தின் தடைகளையும் தாண்டி எழுச்சி பூர்வமாக பண்டிவிரிச்சானில் இடம் பெற்ற மாவீரர் தினம்!

மன்னார் பண்டிவிரிச்சானில் திடீர் என உருவாக்கப்பட்ட இராணுவ முகாம், அகற்றப்பட்ட நினைவு தூபி, திடீர் மின் வெட்டு, புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் என அனைத்து தடைகளையும் தாண்டி எழுச்சி பூர்வமாக மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றுள்ளது.

நேற்று முன் தினம் தொடக்கம் தொடர்சியாக இராணுவத்தினரால் தடைகள் விதிக்கப்பட்ட நிலையிலும் நினைவேந்தல் நிகழ்வுக்கு என அமைக்கப்பட்ட நினைவு தூபி அகற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தடை செய்யப்பட்ட நிலையிலும் இன்று மாலை 6.05 மணிக்கு மாவீரர்களுக்கான பொது சுடர் ஏற்றப்பட்டு நூற்றுக்கணக்கான மக்களின் கண்ணீர் மத்தியில் மாவீரர் தினம் எழுச்சியுடன் இடம் பெற்றது.

பண்டிவிருச்சான் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெறுவதற்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னர் பண்டிவிருச்சான் பிரதான பாதையில் திடீர் சோதனை சாவடி அமைக்கப்பட்டதுடன் புலனாய்வாளர், பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும் மக்கள் அச்சம் இன்றி நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இன்றைய நினைவேந்தல் நிகழ்விற்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் நானாட்டன் பிரதேச சபை தவிசாளர் திரு பரஞ்சோதி மன்னார் மற்றும் நானாட்டன் நகர பிரதேச சபை உப தவிசாளர்கள் அருட்தந்தையர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு தமிழீழ கனவுடன் மரணித்து போன மறவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/132002

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

ஈச்சங்குளத்தில் மாவீரர் நாள் அனுஸ்டிப்பு

48878208_Unknown.jpg

வவுனியா ஈச்சங்குளத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

தமிழர் தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்று(புதன்கிழமை) மாலை 6.05 மணிக்கு அனுஷ்டிக்கப்பட்டது.

ஈச்சங்குளம் மாவீரர் மயானம் இராணுவ முகாமாக காணப்படுவதால் அதற்கு அருகாமையால் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

http://athavannews.com/ஈச்சங்குளத்தில்-மாவீரர்/

Share this post


Link to post
Share on other sites

பாதுகாப்பு தரப்பினரின் தடைகளை மீறி மட்டக்களப்பு வாகரையில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வு காட்சிகள்

மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் பாதுகாப்பு தரப்பினரின் தடைகளை மீறி மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

பிரதான ஈகைச் சுடரினை கரும்புலி மேஜர் ரங்கன் அவர்களின் தாயார் ஏற்றிவைத்தார்.

இதில் ஆயிரக்கணக்கான மாவீரர் குடும்பங்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

எழுச்சி பாடல்கள் ஒளிபரப்பு செய்வதற்கும், மாவீரர்களின் படங்களை வைத்து அஞ்சலி செலுத்துவதற்கும் பொலீசார் தடைவிதித்ததிருந்தனர்.

மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்னால் நடப்பட்ட கொடிகளை அகற்றுமாறும் ஏற்பாட்டாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்ததிருந்தனர்.

மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த வாகரை பிரதேசத்திற்குள் நுழையும் பகுதிகளில் வழமைக்கு மாறாக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வீதியில் செல்லும் வாகனங்கள் சோதனையும் செய்யப்பட்டன.

பாதுகாப்பு படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் ஏராளமான பொதுமக்கள் மாவீரர் தின நிகழ்வுகளில் பங்குபற்றியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/132000

 

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அனுஷ்டிப்பு

Kilinochchi-Mulankavil-Maveerar-Thuyilum-Illam-2019.jpg

கிளிநொச்சி முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் 3000 அதிகமான மக்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

1750 ஈகைச் சுடர்கள் ஏற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

மாவீரரின் தந்தையான கே.நாகராசா பொதுச்சுடரினை ஏற்றியதை அடுத்து ஈகைச் சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலிக்கப்பட்டது.

Kilinochchi-Mulankavil-Maveerar-Thuyilum

Kilinochchi-Mulankavil-Maveerar-Thuyilum

http://athavannews.com/முழங்காலில்-மாவீரர்-துயி/

Share this post


Link to post
Share on other sites

தமிழ் நாட்டில் விடுதலைப்புலிகள் பயிற்சி பெற்ற இடத்தில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்!!

தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் என்ற இடத்திலே இராணுவப் பயிற்சிகளை பெற்றிருந்தார்கள்.

அந்த கொளத்தூர் பிரதேசத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெற்றறன.

ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் மணி தலைமயில் நிகழ்வுகள் இடம்பெற்றன..

தமிழக சட்டமன்ற உறுப்பினர் தனியரசு உட்பட ஈழ ஆதரவாளர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/india/80/132003?ref=imp-news

Edited by போல்
 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

களிக்காடு மாவீரர் துயிலும் இல்லம்

 

0
FB_IMG_1574864712085.jpg

முல்லைத்தீவு – களிக்காடு மாவீரர் துயிலும் இல்லத்திற்கான நினைவேந்தல் நிகழ்வு மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் இன்று (27) மாலை இடம்பெற்றது.

 • FB_IMG_1574864712085.jpg
 • FB_IMG_1574864708286.jpg
 • FB_IMG_1574864706688.jpg
 • FB_IMG_1574864701524.jpg
 • FB_IMG_1574864699658.jpg
 • FB_IMG_1574864696209.jpg
 • FB_IMG_1574864694246.jpg
 • FB_IMG_1574864691346.jpg
 • FB_IMG_1574864689283.jpg
 • FB_IMG_1574864687165.jpg

கொடிகாமத்தில் மாவீரர் நாள் அனுஷ்டிப்பு

0
5ECAC4D1-BEF3-450F-8AD5-75D7D6816D82-960

யாழ்ப்பாணம் – கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கான நினைவேந்தல் நிகழ்வு மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் இன்று (27) மாலை இடம்பெற்றது.

இந்நினைவேந்தலில் பிரதான ஈகைச்சுடரினை மாவீரர்களின் பெற்றோர்கள் ஏற்றிவைத்தனர்.

இவ்மாவீரர் தின நிகழ்வில் மாவீரர்களின் குடும்பங்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தினர் முகாம் அமைத்து ஆக்கிரமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/கொடிகாமத்தில்-மாவீரர்-நா/

Share this post


Link to post
Share on other sites

மல்லாவி ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இரண்டு மாவீரர்களின் சகோதரனால் பொதுச்சுடரேற்றி அஞ்சலி!

முல்லைத்தீவு மல்லாவி ஆலங்குளத்தில் உணர்வு பூர்வமாக மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டது. ஆலங்குளம் கிராம மக்களின் ஏற்பாட்டில் பொதுக்காணி ஒன்றில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட நினைவாலயத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.

இரண்டு மாவீரர்களின் சகோதரரான அருமைத்துரை தவராசாவினால் பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மாவீரர்களின் பெற்றோரும் மாவீரர்களின் நினைவுருவப்படத்திற்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/132004

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்

IMG-e8385a46cb5a80bab9300a5ff53ac066-V-1
 

யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ மாவை சோ சேனாதிராசா அவர்களின் தலைமையில் வழமை போன்று மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வானது (கார்த்திகை 27) இன்று நடைபெற்றது.

இவ் நினைவேந்தல் நிகழ்வில் அறப் போரில் ஆகுதியாகிய வீர மறவர்களுக்காக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. முதற் சுடரை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோ சேனாதிராசா அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து ஏனையோர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் கலந்து கொண்டிருந்ததுடன் தனது அஞ்சலியையும் செலுத்தினார்.

இவ் நினைவேந்தலில் வடக்கு மாகாண அவைத் தலைவர் கௌரவ சீ.வீ.கே சிவஞானம் அவர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

IMG-e8385a46cb5a80bab9300a5ff53ac066-V-1IMG-72b071ea24f03eb2a9d3c6e5a0fcaca1-V-3IMG-e96a5d8864323ad6036c120fed88c24b-V-3

http://nakarvu.com/2019/11/27/இலங்கைத்-தமிழ்-அரசுக்-கட/

 • Thanks 2

Share this post


Link to post
Share on other sites

தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே…!

maveerar-naal.jpg

தாயகக் கனவு சுமந்து, சுதந்திரக் காற்றின் சுவாசத்தைத் தேடி இன்னுயிர்களை ஈந்தவர்களை நினைவில் கொள்ளுவோம்.

http://www.puthinappalakai.net/2019/11/27/news/41379

Share this post


Link to post
Share on other sites

பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்!! பெருமளவில் திரண்ட தமிழர்கள்!!

பிரித்தானியாவின் ExCeL மண்டபத்தில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகளில் பெருமளவிலான தமிழ் மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/uk/80/132006

 • Thanks 2

Share this post


Link to post
Share on other sites

சாட்டியில் உணர்வுடன் மாவீரர் நாள் நினைவேந்தல்

158048A6-C7E1-4CBD-98F5-899DFBB7424E.jpe
 

யாழ்ப்பாணம் – சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

 • 16515399-F753-460F-82EA-6D73E0A5AF43.jpe
 • E25F3509-C9F9-4D8B-A26D-EDC1286BF900.jpe
 • FF51DFC2-C63A-4433-9440-FB62B6FC4452.jpe

https://newuthayan.com/சாட்டியில்-உணர்வுடன்-மாவ/

Share this post


Link to post
Share on other sites

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் 3 மாவீரரின் தாயார் பொதுச்சுடரினை ஏற்றி அஞ்சலி!

முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஈகைச்சுடரேற்றி உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது.

அத்துடன் தமிழர் வாழும் தாயக பகுதிகள் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக இடம்பெற்று வருகிறது.

அந்தவகையில் 3 மாவீரரின் தாயாரான சுப்பிரமணியம் செல்வராணி பொதுச்சுடரினை ஏற்றிவைத்ததை தொடர்ந்து ஏனைய மாவீரர்களுக்கும் உறவுகள் தீபமேற்றி அஞ்சலி செலுத்தினர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/131997

Edited by போல்
 • Like 2

Share this post


Link to post
Share on other sites

தடைகளை மீறி யாழ். பல்கலைக்கழகத்தில் கொட்டும் மழைக்கு மத்தியில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல்

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தினுள் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் பல வழிகளிலும் தடைகளை ஏற்படுத்திய போதிலும் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக் கழகத்தினுள் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. 

5D326351-E0CF-4992-8164-D317031E8B55.jpe

சரியாக 6.05 மணிக்கு மாவீரர் தின ஒழுங்குக்கமைய மணியோசை ஒலிக்க, அகவணக்கம் செலுத்தப்பட்டு, பொதுச் சுடரேற்றப்பட்டது. 

பொதுச் சுடரினை மூன்று மாவீரர்களின் தந்தை ஒருவர் ஏற்றி வைத்தார். 

பொதுச்சுடரேற்றலைத் தொடர்ந்து மாவீரர் பாடல் இசைக்க கலந்து கொண்ட மாணவர்கள், ஊழியர்கள் அனைவரும் ஈகச் சுடர்களையேற்றி அஞ்சலி செய்தனர். 

மாவீரர் தின ஏற்பாடுகளை முடக்கும் வகையில் பல்கலைக் கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரியினால் இன்றும் (27) நாளையும் (28) மாணவர்கள் எவரும் உள்நுழையா வண்ணம் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன், நிகழ்வுகள் எவையும் நடத்தப்படக்கூடாது என மாணவர் ஒன்றியத்துக்கு கண்டிப்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

எனினும் இன்று காலை தடைகளை மீறி - பூட்டப்பட்டிருந்த பிரதான வாயிலால் உள்நுழைந்து மாவீரர் தின நிகழ்வுகளை மேற்கொண்டிருந்தனர். அதனையடுத்து பல்கலைக்கழக வளாகத்தினுள்ளிருந்து ஊழியர்கள் உட்பட அனைவரையும் பிற்பகல் 2 மணியுடன் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டதுடன், 4 மணியளவில் பல்கலைக் கழகத்தின் பிதான நுழைவாயில் சங்கிலியால் பூட்டப்பட்டது. 

அத்தனை தடைகளையும் மீறி மாணவர்கள் மிகவும் உணர்வு பூர்வமாக நினைவேந்தலை நடாத்தியிருந்தனர்.

https://www.virakesari.lk/

Share this post


Link to post
Share on other sites

மாவீரர் நினைவேந்தல்...

image_00056a27ad.jpg

வடக்கின் பல்வேறு பகுதிகளிலும், இன்று (27) மாவீரர் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது, மாவீர்ர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

image_12b307f8c2.jpgimage_a87053dc68.jpg


http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/மவரர-நனவநதல/46-241604

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட  மாவீரர் தினம் 

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

WhatsApp_Image_2019-11-27_at_18.27.22__1

மண்ணுக்காக போரடி தமதுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களை நினைவுகூறும் கார்த்திகை 27 (இன்று) தமிழர் தாயகப்பகுதிகள் எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. 

WhatsApp_Image_2019-11-27_at_18.27.22.jp

இந்நிலையில் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற்கற்கைகள் நிறுவக மாணவர்கள் நிறுவக இராஜதுரை மண்டபத்தில் மாவீரர் தினத்தை மெழுகுதிரிச் சுடரேற்றி உணர்வு பூர்வமாக அனுஷ்டித்தனர். 

WhatsApp_Image_2019-11-27_at_18.27.24__1

இன்று மாலை 6.05 மணியளவில் சுடர்கள் ஏற்றப்பட்டு மாணவர்கள் தமது நினைவஞ்சலியைச் செலுத்தினர்.

WhatsApp_Image_2019-11-27_at_18.27.24__2

https://www.virakesari.lk/article/69907

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இங்கு மாரிகாலங்களில் சில இடங்களில் அட்டை கால் வைக்க இடமில்லாமல் ஊர்ந்து திரியும், உங்கள் அவுஸ் விண்ணப்பமும் நிரகாரிப்பட்டுவிட்டது😀
  • கறுப்பு அட்டையை காராகவும், சிகப்பு பஸ்ஸாகவும் பார்த்து விளையாடியிருந்தா இந்த பிரச்சனை வராது.
  • நன்றி புலவர் தாங்கள் தமிழரிடையே கிறீத்துவர்கள் என்று பிரித்துப் பார்ப்பதில்லையென்று கூறியதற்கு. அது உங்கள் நல் மனதைக் காட்டுகிறது. 🙏 எனது நண்பர்களில் 99%மானோர் சைவ சமயத்தவர்களே. எங்களிடையே எந்த விதமான சமயம் சார்  வேறுபாடுகளோ சாதி சார்பான வேறுபாடுகளோ எதனையும் நானும் எனது சகோதரர்களும் உணர்ந்ததேயில்லை என்பதை பெருமையுடன், நெஞ்சை நிமிர்த்திக் கூறுவேன். 😀 யாழ் மாநகர சபைக்குட்பட்ட சைவக் கோவில் ஒன்றின் நிர்வாக சபை தெரிவுக் கூட்டமொன்றிற்கு நானும் எனது சகோதரர்களும் நண்பர்கள் அனைவரும் ஒருமுறை போயிருந்தோம்.  என்னையும் எனது சகோதரர்களையும் அடையாளம் கண்டு கொண்ட தர்மகர்த்தா கூட்டத்தின் இடையில் எழுந்து நின்று எல்லோர் முன்னிலையிலும் எங்களை நோக்கி தம்பிகள் நீங்கள் வேதக்காறர் நிர்வாக சபைத் தெரிவில் வாக்களிக்க முடியாது என்று கூறினார். நான் கூறினேன் இல்லை அண்ணர் சும்மா பொடியங்களோட வந்தனாங்கள் என்று கூறி மண்டபத்திலிருந்து வெளியேற முற்பட்டோம்.  அப்போது அவர் எங்களை மறித்து, தம்பிமார் நீங்கள் போகத் தேவையில்லை. வாக்களிக்காவிட்டால் சரி என்றார். 😀 நாம் தமிழராய் இருந்த காலம் அது 😀 ஆனால்  இது உண்மையான நிலவரத்தைக் காட்டபில்லை என்பதை பின்னர் உணர்ந்தேன். ☹️ கிறீத்துவர்கள் தாங்கள் வேறுபாட்டை உணர்வதாகக் கூறும்போது உடனே நிராகரிக்காமல் ஏன் அப்படி உணர்கிறீர்கள் என்று அவர்களிடம் கேளுங்கள். அப்போதுதான் இருபகுதியினருக்கும் இடையேயான புரிந்துணர்வு உண்டாகும் என நம்புகிறேன். 👍 இங்கே மேலும் ஒன்ரைத் தெளிவாகக் கூறுகிறேன். பெரும்பாலான கிறீத்துவர்கள் தங்களைத் தமிழராகத்தான் உணர்கிறார்கள். ஆனால் பாகுபடு காட்டப்படுவதும் அதை உணரும் சந்தர்ப்பங்களும்  சாதாரண நடுத்தர மக்களிடையே வெகு அரிதான சந்தர்ப்பங்கள். ஆனால் சமூகத்தின் வகுப்புப் பிரிவு நிலைகளின் உயரத்திற்குச் செல்லும்போது அந்த வேற்றுமையை உணரலாம். ☹️ இவை எனது அனுபவங்கள். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். 👍
  • அது சிம்பிள் அக்கா. உந்த கொத்து ரொட்டி போடுறியள் எல்லோ... அப்படியே அட்டைக் கொத்து எண்டு ஊர்ல ஒரு புது அயிட்டத்தை போட்டு விடுங்கோ. வியாபாரமும் ஓகோ எண்டு போகும்..... அட்டையும் இல்லாமல் போயிடும்.... ஆகா.... நல்ல வருமானம், நல்ல வருமானம் என்று அத்தார் கல்லாவில காசை வாங்கிப் போடுற மாதிரியும் இருக்கும். என்ன சொல்லுறியள்?