• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

நினைவழியா நிகழ்வுகள்..மாவீரர் நாளும் பாடலும்

Recommended Posts

நினைவழியா நிகழ்வுகள்..மாவீரர் நாளும் பாடலும்

_22550_1574782586_46F18DA2-484A-4B39-90CA-84215E59FBF9.jpeg

(நவ. 27 மாவீரவர் நாள். மாவீரர் நாள் என்றதுமே, தமிழர் தாயகம் எங்கும் உணர்ச்சி பெருக்கெடுத்துப் பாயும். அந்த உணர்ச்சியை கட்டுக்குள் வைத்து, மனதைக் கனக்க வைப்பதாக ஒலிக்கும், “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய...” மாவீரர்நாள் பாடல். மாவீரர்களை நினைவுகூருவது தொடர்பில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இவ்வாறான பாடல் ஒன்றின் தேவையை, அப்போதைய மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் ஜெயா முன்வைத்திருந்தார். 1992 மாவீரர் நாள் நினைவேந்தலின்போது கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் வர்ணராமேஸ்வரன்  இப்பாடலைப் பாடினர். அச்சமயம் அங்கு நின்ற போராளி ஒருவர், இப்பாடல் குறித்து “வெளிச்சம் இதழில்” இக்கட்டுரையை எழுதியிருந்தார். அக்கட்டுரை மீள்பிரசுரமாகிறது.)

1992 ஆம் ஆண்டின் மாவீரர் நாள் பிறக்கப் போகின்றது. இந்த நாளின் பிறப்பின்போது, நாம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நிற்க வேண்டும். இதற்காககச் சென்று கொண்டிருக்கிறோம். பகலிலேயே எங்கோ ஒருவரைத்தான் காணக்கூடியதாக இருக்கும் இராசபாதையில் நள்ளிரவிலும் ஒரே மக்கள் கூட்டம். இந்த வீதியிலிருந்து மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் செல்லும் வீதியில் இன்னும் கூடுதலான மக்கள் திரள்திரளாகச் செல்கிறார்களே.... இவர்கள் கிளாலியை நோக்கிச் செல்லும் மக்கள் கூட்டமல்ல... நல்லூர் திருவிழா முடிந்ததும் கடலைக் கடைகளுக்கும் ஐஸ்கிறீம் கடைகளுக்கும் வேடிக்கை பார்க்கும் கூட்டமுமல்ல... அனைவருமே உணர்ச்சிப் பிளம்புகளாய் காட்சியளிக்கிறார்கள். சத்தியம் செய்யும் அந்தக் கூட்டத்தினூடேதான் போய்க் கொண்டிருக்கிறோம். இது ஒரு வித்தியாசமான அனுபவம்தான். நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின்போதும் மனதுள் ஏதோ ஒன்று... அதை விபரிக்க முடியவில்லை.

“என்ரை ராசா... கிளியண்ணை வந்திருக்கிறார் ஒருக்காப் பார் ராசா...”, ஒரு மாவீரனின் சமாதியில் அவர் தாய் அழுதுகொண்டே சொல்லும் வார்த்தைகள் எமது நெஞ்சைப் பிழிகின்றது. கண்ணீர் முட்டுகிறது. கூட வந்தவர்களுக்குத் தெரியாதபடி துடைத்துக் கொள்கிறேன். இப்போதே அழத் தொடங்கினால்.... கஷ்டப்பட்டு கண்ணீரைச் சிக்கனப்படுத்திக் கொள்கிறேன். பின்பு தேவையல்லவா.

வழியில் இந்த ஆண்டு மாவீரர் தினம் பிறக்கும் வேளையில் மணியோசைக்குப் பின் ஒலிக்கவிருக்கும் மாவீரர் பாடலைப் பாடவிருக்கும் வர்ணராமேஸ்வரன் வருகிறார். “ராமேஸ்வரன் எனக்குப் பக்கத்தில நில்லுங்கோ... நீங்கள்தான் எனக்குப் பக்கத்தில நிண்டு பாடுறது.”, உரிமையுடன் கட்டளையிடுகிறார் புதுவையண்ணா. இப்படித்தான் நாங்கள் எங்கள் மக்களை வசப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

சுற்றுமுற்றும் பார்க்கிறேன். மாவீரர் சமாதியில் ஊதுவர்த்திகளைக் கொழுத்தியும் மலர் வைத்தும்... எந்த ஒரு ஆலயமும் இந்த மாதிரியான புற அகத் தூய்மையோடு காணப்படுவதில்லை... கண்ணீரைக் கட்டுப்படுத்த சிரமமாயிருக்கிறது. சாதாரணமாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளச் சிரமப்படுகிறேன். ஒவ்வொரு விநாடியும் செல்லச் செல்ல மயிர்க்கால்கள் குத்திடுகின்றன.

மாவீரர் துயிலுமில்லத்தில் முதலாவது சுடர் ஏற்றப்படும் இடம் - அந்த நேரத்தை எதிர்பார்த்தபடி மனம் எதையோ தேடுகின்றது. 12.00 மணி. யாழ். மாவட்ட விசேட தளபதி தமிழ்ச்செல்வன் முதலாவது சுடரை ஏற்றுகிறார். எங்கும் ஆலய மணியோசை. தீபத்தில் ஏற்றப்படும் ஒளியைத் தொடர்ந்து எனது கண்கள் எனது கட்டுப்பாட்டை இழக்கின்றன. ஆலய மணியின் ஓசை ஒலிக்கு மட்டும் மௌனமாக நின்று அஞ்சலிக்கின்றோம். ராமேஸ்வரன் பாடுகிறார். இதே பாடல் ஒலிபெருக்கியிலும்... நாம் உறுதியெடுத்துக் கொள்கின்றோம்...

“வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி.
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி.
இழிவாக வாழோம் தமிழீழப் போரில் இனிமேலும் ஓயோம் உறுதி.”

நான் ஏன் அழுகின்றேன்... இழப்புகளினால் உரமேறிய தேசமல்லவா... எனது தேசம். ஐயாயிரத்துக்கும் மேலும் சில நூறு பேர்களை இழந்து விட்டோம். இன்னுமா மாறவில்லை. சீலனது வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. “போராளிகள் மென்மையான மனமுடையவர்கள். மற்றவர்களுக்கு ஏற்படும் துன்பங்களைக் கண்டு மனம் சகிக்க முடியாதவர்களே போராளியாகின்றனர். அதைத் தாங்கிக் கொண்டு சாதாரணமாக இருக்கக்கூடியவர்கள்தான் போராட்டத்துக்கு வெளியில் நிற்கிறார்கள்.”, எவ்வளவு அச்சொட்டான வார்த்தைகள் இவை. சூழவுள்ள மக்களைப் பார்க்கிறேன். எத்தனை எத்தனை ஆயிரம் சொந்தங்கள் எமக்கு. எல்லோரும் எம்மவர்கள்... ஆனால் அன்று நீயும் ஆனந்தும் எரிக்கப்படும்போது உங்களுக்குப் பக்கத்தில் ஒருவருமே இல்லையே... உனது வீரச்சாவுச் செய்தி கேட்டு திருமலையிலிருந்து பறந்து வந்த உனது அம்மா உனது உடலைத் தரும்படி எவ்வளவு மன்றாடியிருப்பார் சிறீலங்கா இராணுவத்திடம். அவர்கள் உனது உடலைக் கொடுக்கவில்லையே... பௌத்த தர்மம் அதற்கு இடமளிக்கவில்லை... இன்று இந்தத் தேசமே சொந்தம் கொண்டாடுகிறது. நாங்கள் வளர்ந்துவிட்டோம்... எங்கும் போராளிகள் பொதுமக்கள்...

ஒரு தாக்குதலுக்காக யாழ். நகரப் பகுதிக்குள் சென்று கொண்டிருக்கிறோம் மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் இராணுவத்தினர் இரண்டு வாகனங்களில் வந்து இறங்குகின்றனர். கம்பீரமான தோற்றத்துடன் தனக்குச் சொந்தமில்லாத மண்ணில் நடமாடுகின்றனர் இராணுவத்தினர். அப்போது நீ சொல்கிறாய், “இதைப் போல நாங்களும் ஆம்ஸைக் கட்டிக் கொண்டு சுதந்திரமா திரிய வேணும் அப்ப அது புதினமில்லாத மாதிரி சனம் போக வேணும்”, எவ்வளவு ஆசையாகச் சொன்னாய். இந்தப் போராட்டம் வெல்லும் நாங்கள் வளர்வோம் என்பதெல்லாம் நாம் எதிர்பார்த்ததுதான். ஆனால், இவ்வளவு விரைவாக... எனல்லாம் இன்றுபோல் இருக்கிறது.

“உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்...”

இதேநேரம் இந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் ஏதோ ஒரு இடத்தில் அழுது கொண்டிருப்பார்கள் எனது குஞ்சம்மாவும், குஞ்சையாவும். எனது இளமைக் காலங்கள் நினைவுக்கு வருகின்றன. இவர்களின் மகன் நக்கீரன் (செந்தில்குமரன்) அப்போது பிறக்கவில்லை. (ஆறு பெண் பிள்ளைகளுக்குப் பின்னே இவன் பிறந்தான். ) ஒவ்வொரு பிள்ளையும் பிறக்கும்போது இது ஆண்பிள்ளையாக இருக்காதா என்ற எதிர்பார்ப்பாயிருக்கும். இனி ஆண் பிள்ளையே பிறக்காது. நமக்கு இறுதிக்கடன் செய்ய ஆண்பிள்ளை இல்லையே என்று குஞ்சையாவுக்கு ஒரு ஏக்கம். அதனால் அவர் என்னுடன் கூடியளவு பாசத்துடன் இருந்தார். ஒருநாள் எனக்குத் தேவையான பழவகைகளை வாங்கி வந்து “குஞ்சையாவுக்கு கொள்ளி வைப்பியா மனா?”, என்று கேட்டார். நானும் CV “ஓம்” என்றேன். அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அதன் பிறகு எனது தேவைகளை நிறைவேற்றுமிடத்தை நான் தெரிந்து கொண்டேன். ஒவ்வொரு தடவையயும் அவர் என்னைக் கேட்பார் “குஞ்சையாவுக்கு என்ன செய்வாய்?”, “கொள்ளி வைப்பன்”, இதன் தாக்கம் விளங்காது பதில் சொல்லும் வயது.

ஏழாவதாகச் செந்தில்குமரன் பிறந்தான். அவன் மீது பாசமாகக் கொட்டி வளர்த்தார்கள். நானும் வளர்ந்து விட்டேன். அப்போதெல்லாம் இந்தப் பழைய சம்பவத்தை எனது குடும்பத்தாரிடம் சொல்லிச் சிரிப்பேன். “இப்ப குஞ்சையா செத்து நான் கொள்ளி வைக்கப் போனால் குஞ்சையா பெட்டிக்குள்ளால எழும்பி “ஏன் நீ கொள்ளி வைக்கிறாய் செந்தில் எங்கை போட்டான்” எண்டு கோட்பார் என்று சொல்லிச் சிரிப்பேன்.

அவன் இயக்கத்துக்குப் போய் மாவீரர் ஆனதும் நான் அங்கே போனேன். அப்போது அவர், “டேய் நீ சின்னனாய் இருக்கேக்கை குஞ்சையாவுக்கு கொள்ளி வைப்பனெண்டெல்லோ சொன்னனீ... வைப்பாய்தானே...” என்றார்.

புரியாத வயதில் சொன்ன அந்த வார்த்தைகளில் இத்தனை அர்த்தமா...? இத்தனை தாக்கமா...? தொடர்ந்து பாடல் ஒலிக்கிறது.

“.... .... அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்...”

அடிபட்ட பந்தாக மீண்டும் சீலனை நோக்கி நினைவுகள்... சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத் தாக்குதல். மேல் மாடியில் காலில் காயப்பட்ட சீலன் காலை இழுத்துக் கொண்டு இயலாத நிலையில் றிப்பிட்டரைக் கொடுத்து விட்டு அந்த பொலிஸ் நிலைய வளவில் தேறங்கியிருந்த மழைத்தண்ணீரைக் குடிக்கிறான். தொடர்ந்து படுத்தபடியே அவனது உத்தரவுகள், “ஒண்டையும் விடக்கூடாது எல்லாத்தையும் ஏத்தவேணும்”, இயந்திரமாக இயங்குகிறோம். எல்லாவற்றையும் ஏற்றியதும் மினிபஸ் புறப்படுகிறது. அழுதபடியே ரஞ்சன் காயப்பட்ட எல்லாரையும் கொஞ்சுகிறான். (சீலன், புலேந்திரன்....) எல்லாரையும் காப்பாற்ற விரைவாக வாகனத்தை செலுத்துகிறான் சங்கர். அன்று மற்றவர்கள் காயப்பட்டதற்காக அழுத ரஞ்சன் உட்பட ஏனைய அனைவரையும் தொலைத்து விட்டு நிற்கிறோம். அதே வரிகள் மீண்டும்.

“.... .... அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்...”

வரிசையாக நினைவுக்கு வருகின்றனர். “யாழ்ப்பாணத்த்துக்கு வெளியில அடிக்க வேணும்”, என்று அடிக்கடி கூறும் செல்லக்கிளியம்மான்.

உமையாள்புரத்தில் இராணுவத்தினர் ஓடும்போது சிரித்தபடியே “துரத்துங்கடா” என்றபடியே அவர்களின் ட்றக்கில் ஏறிய செல்லக்கிளியம்மான்... களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத் தாக்குதலில், “அம்மாட்டச் சொல்லுங்கோ நான் சண்டையிலதான் செத்தனெண்டு”, என்று சொன்ன பரமதேவா. ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடுமையாகச் சண்டை நடந்து கொண்டிருக்கும்போது, “ரெலண்டு கிறனைட் தாங்கோ நான் உள்ளுக்கை போய்க் காட்டுறன்” என்று சொன்ன விசாகன். “அண்ணே ஒரு சக்கைக் கானைத் தாங்கோ நான் கொழுத்திக் கொண்டு போய் உள்ளுக்கை வைச்சிட்டு வாறன்” என்று சக்கைக்கானை வாங்கிக் கொண்டு துப்பாக்கி வேட்டுகளுக்கிடையே பொலிஸாருக்கு மத்தியில் அதை வைத்து விட்டு வந்த கமல்... இன்னும் எத்தனை... எத்தனை...

“எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்”

தவிக்கும் மனதின் வார்த்தைப் பிளம்பு இது. எனக்கு இதற்கும் மேல்... “ழ”கரம், “ல”கரம் வித்தியாசமில்லாமல் மழலையாக ஒலிக்கும் சீலனின் வார்த்தைகளைக் கேட்க வேண்டும் போல் இருக்கிறது.

“நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமுமை வணங்குகின்றோம்”

பகீனுக்கு எப்போதும் சந்தேகம் இந்த சயனைற் வேலை செய்யுமாவென்று, அடிக்கடி கேட்பான். “அண்ணை இது வேலை செய்யுமோ?”
“அது வேலை செய்யும் நீ போடா”, வல்வெட்டித்துறைக்கு அனுப்பி வைப்போம். நாம் எத்தனை தரம் சொன்னாலும் அவனுக்குத் திருப்தியில்லை.

ஒருநாள் நள்ளிரவு. களைத்துப்போய் வந்த நான் படுக்கப்போகிறேன்.. அப்போதும் கேட்கிறான். “அண்ணை இது வேலை செய்யுமோ?” - எனக்கு எரிச்சல். “வேலை செய்யாது போல கிடக்கு... உன்னிலதான் ரெஸ்ற் பண்ண வேணும்... போய்ப் படடா”

அவன்தான் எமது இயக்கத்தில் முதன் முதல் சயனைற் உட்கொண்டவன். அந்தச் செய்தி கிடைத்ததும் நான்... இந்த வாயால இனி எதுவும்...

“எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்”

கண்ணால் காண முடியவில்லைத்தான். ஆனால், மனதில் அனைவரது முகங்களும்... அங்கிருந்து நகர்கிறேன்.

“உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம் - அதை
நிரை நிரையாக நின்றினி விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்.”

என்ற வரிகளை மனதில் சுமந்தபடி அங்கிருந்து நகர்கிறேன். கடந்த வருடத்தைப் போலவே. அங்கு பலர் மயங்கி விழுகின்றார்கள். முதலுதவிப் படையினர் அழைக்கப்படுகின்றனர். 
அறிவிப்பாளரின் மொழியில் கூட சோகம்...
உலகத்தில் எந்தவொரு விடுதலைப் போராட்டத்திலும் இப்படியொரு காட்சியைக் காண முடியாது என்று என் மனது சத்தியம் செய்கிறது
 

http://www.battinaatham.net/description.php?art=22550

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • எமது மக்களின் சுயதம்பட்டத்துக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. பிள்ளை பொலீஸ் அலுவலகத்தில் கிளார்க் இப்போ பொலீஸ் உத்தியோகத்துக்கு முயல்கிறாவாம். சந்தோசம் ஆனால் பேப்பரில போடும் அளவுக்கு இது சாதனையா என்ன 🤦‍♂️. எனக்கென்னமோ இது சாமத்திய வீடு மாரி ஒரு தம்பட்டம் அடிக்கும் செயல்பாடு மாரியே விளங்குகிறது.
  • செருப்பரசியல்! தமிழர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறு கொண்டவர்கள். தொன்மையான பண்பட்ட நாகரிகம் கொண்டவர்கள். இப்படியெல்லாம் “புகழ் பூத்த” வரலாறு கொண்ட தமிழினம் செய்யும் சில வேலைகளுக்கான விளக்கத்தை யாரவது சொன்னால் நன்றாக இருக்கும்.   மற்றவரை அவமானப்படுத்த வேண்டுமென்றால் அவரது முகத்தில் காறி உமிழ்தல், அவரை செருப்பால் அடித்தல் போன்ற தண்டனை முறைகளை எங்குதான் கற்றுக் கொண்டார்கள், பரம்பரை பரம்பரையாக அந்த உயரிய பண்பாட்டுமுறைகளை எவ்வாறு பின்பற்றி வருகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  செருப்புக்கு தெற்காசிய நாட்டில் ஒரு நீண்ட வரலாறு உள்ளது. மன்னர் காலத்தில் இருந்தே நீண்ட காலமாக மேட்டுக் குடிக்கு மட்டுமே உரிமமாக இருந்த ஒன்றுதான் செருப்பு அணியும் தகுதி. இலங்கையில் போர்த்துகேயர் ஆண்ட காலத்தில் செருப்பு அணிவதற்கு வரி கட்ட வேண்டியிருந்தது என்பதும் வரலாறு. பல இடங்களில் செருப்பு அணிந்ததுக்காக உயர்சாதி என்று தம்மை சொல்லிக்கொண்டவர்களால் மற்றவர்கள் கொடூரமாக தண்டிக்கப்பட்டதும் நடந்தது. ஒருகாலத்தில் கௌரவத்தின் அடையாளமாகவும் சமூகத்தில் ஒரு பகுதியினருக்கு எட்டாக்கனியாகவும் காணப்பட்ட செருப்பு கடந்த சில தசாப்தங்களாக அவமானப்படுத்த பயன்படுத்தும் கருவியாகிவிட்டது. இந்திய சினிமாக்களில் செருப்பை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள், என்பதை நான் சொல்லவேண்டியதில்லை.  பெரியார் இருந்த காலத்திலேயே 1971 இல் ஊர்வலமொன்றில் இராமரின் படத்தை தி.மு.க.வினர் செருப்பாலடித்ததாக கூறப்படுகிறது. இலங்கையிலும் மக்கள் தங்கள் வெறுப்பைக் (எதிர்ப்பைக்) காட்ட செருப்பு, விளக்குமாறு போன்றன அண்மையிலும் பயன்படுத்தியதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.  எம்மைப் போல நீண்டகால பண்பாடு இல்லாத, குறுகியகால வரலாறு மட்டுமே கொண்ட எத்தனையோ சமூகங்கள் செருப்பை காலணியாக மட்டுமே பயன்படுத்துகின்றன. நாகரிக முன்னோடியான நாம் செருப்பின் பயன்பாட்டினை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போனதற்காக பெருமை கொள்ளாலாம்தானே?    
  • சரியான திசையில் காலடி எடுத்து வைத்துள்ளனர். அரசியல் கலப்பில்லாமல் நோக்கம் நிறைவேற முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.
  • நூறு கதை நூறு படம்: 41 பூவே உனக்காக July 3, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் / தொடர் அவர்கள் கூற்றின்படி நீ எப்போது உன் வாழ்வின் காதலை சந்திப்பாயோ அப்போது காலம் அப்படியே உறைந்துவிடும். அது உண்மையுங்கூட Big Fish (திரைப்படத்திலிருந்து) எல்லோரும் நல்லவரே என்பது ஸ்வீட் நத்திங் வகையறா சினிமா. காலம் காலமாக அப்படியான படங்களை யாராவது எடுத்துக்கொண்டே இருப்பார்கள். ஊரே ஒதுங்கும் திசையைவிட்டுத் தனக்கென்று தனித்திசை காண்பது அப்படியான ஜிகினாப் பொய் ஒன்றை நிசமென்று நிறுவ விழையும் சினிமா முயல்வு வகைமை. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தனது புது வசந்தம் படத்தின் மூலமாகத் திரைக்கணக்கைத் தொடங்கிய விக்ரமன் பிறகு எடுத்த அனேக படங்களின் மூலமாக விக்ரமன் படங்கள் என்றே தனித்த வகைமையாக உருக்கொண்டது நிகழ்ந்தது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளில் பத்துக்கும் மேற்பட்ட அதிரி புதிரி வெற்றிகளின் மூலமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவராக மாறிய விக்ரமன் மனித மனங்களின் மென்மையான நசிவுகளை அவற்றின் ஊசலாட்டங்களை முடிவெடுக்க இயலாத மனத்திணறலைப் படமாக்கி வகையில் நினைவில் கொள்ளப்பட வேண்டியவராகிறார். அவருக்குக் காலமும் நடிகர்களும் நல்ல முறையில் ஒத்துழைக்கவே எளிதாக மக்களுக்குப் பிடித்தமான படங்களாக மாறின விக்ரமனின் படங்கள்   . ஆணையும் பெண்ணையும் பரஸ்பரம் ஏமாற்றுகிற கைவிடுகிற காதல் தோல்விக்குக் காரணமாகிற ஆண்களையும் பெண்களையும் அவர்கள் திரும்பி திருந்தி வருகிறதற்குள் வேறொரு நல்வாழ்க்கையை நல்ல இணையரைக் கண்டறிந்து விடுகிற எல்லோருக்கும் எப்போதும் பிடித்தமான படங்களை அதிகம் உருவாக்கினார் விக்ரமன். தொண்ணூறுகளில் காதல் முன்பிருந்த நிலையிலிருந்து மெல்ல நகர்ந்து புதிய திசைக்குச் செல்வதற்கு முந்தைய பயண முன் பொழுதுக் காத்திருப்புக் கணங்களின் திசைகளற்ற மாற்றங்களெனவே விக்ரமனின் ஒரு டஜன் காதல்படங்கள் கரைந்து கலைந்தன என்றாலும் அவற்றைக் கொண்டாடியவர்கள் அடுத்த காலத்தில் மத்யம வயதுகளிலிருந்து நினைத்துப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொள்ளக்கூடிய பழைய புனித ஞாபக வழிபாட்டு உப பொருளாகவே தங்கள் காதலைப் பத்திரப்படுத்த விழைந்தார்கள். விக்ரமன் எடுத்த படங்களிலிருந்து பூவே உனக்காக எப்படி வேறுபடுகிறது என்றால் அதுவரை என்ன மாதிரியான படங்களில் நடித்து எப்படி நிலைகொள்வதென்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்த விஜய் என்கிற புதிய நடிகரது ஏழெட்டுப் படங்கள் வெளியாகி ஓரளவு மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் மட்டும் கொண்டிருந்த நிலையில் அவரது முதல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக வெளியான புண்ணியத்தைக் கட்டிக்கொண்டது பூவே உனக்காக. ஒரே இரவில் சாக்லேட் பய்யன் நிலையிலிருந்து கன்னத்தைக் கிள்ளி அரவணைத்துக் கொண்டு நீ நம்ம பய்யண்டா கண்ணா எனக் கண் கலங்கக் கசிந்துருகும் நிலைக்கு அவரை நம்மில் ஒருவராக்கியது சாதனைதான். அதுவும் ஒரே படத்தில் மட்டுமே நிகழக்கூடிய அற்புதம் பூவே உனக்காக என்பது அந்த ஒரு படமானது. எஸ்.ஏ.ராஜ்குமார், வாலி தலா ஒரு பாடல்களை எழுத பழனிபாரதி மற்ற எல்லாப் பாடல்களையும் எழுதினார். மல்லிகைப்பூ வாசம் என்னைக் கொல்லுகின்றது அடி பஞ்சுமெத்தை முள்ளைப்போலக் குத்துகின்றது போன்ற வரிகள் சாகாவரம் பெற்றன இதயங்கள் இணைந்தது இது என்ன மாயம் போன்ற சிறுபாடல்கள்கூட மனதைக் கவர்ந்தன. பாடிய குரல்கள் பாடல்களின் ஆன்மாவாகவே மாறின. இசையில் எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு புதிய முகவரி மாற்றத்தை இப்படம் நிகழ்த்தியது. இதில் நடித்தவர்களுக்கு எல்லாமும் இப்படம் ஒரு புதிய திசையைத் திறந்தது. சார்லி, மதன்பாப், மீசைமுருகேசன், சங்கீதா, எம்.என்.நம்பியார் இவர்களோடு விஜய் இணைந்து நிகழ்த்திய காமெடி காட்சிகள் பரவலான வரவேற்பைப் பெற்றன. பூவே உனக்காக ஒருதலை காதலை காதல் கை கூடாத ஏமாற்றத்தை காதலுக்காகத் தன் உயிரையே வார்த்தெடுத்துத் தரும் உன்னதத்தை காதலின் ஒருசார்பு புனிதங்களை எல்லாம் அப்படியே அங்கீகரித்தபடியே இன்னொரு மறுபக்கத்தை மேலெழுதிய ஒன்றாயிற்று. காதலியின் காதலை நிசமாக்கித் தரும் ஒருவனாக விஜய் எல்லோர் கண்வழி மனங்களை வென்றார். முதல் ஒரே காதல் பூ போன்றது அது அப்படியேதான் இருக்கும் அதனை மறக்கவே முடியாது. மீண்டும் மீண்டும் பூப்பதற்கில்லை அந்த முதல் மலர் என்று விஜய் கண்கலங்கச் செப்பியபோது ரசிகர்கள் கண்களிலிருந்து தாரைகள் வழிந்தன. இந்தப் படம் வெளியாகி இருபத்தி மூன்று ஆண்டுகளாகின்றன. இன்று இதன் கதையை மறுபடி எடுத்தால் அதன் முந்தைய வரவேற்பை முற்றிலுமாக இழந்திருக்கும் என்பதே நகர்ந்திருக்கும் புதிய நிஜம் என்றாலும் காதல் எனும் நுட்பமான உணர்வின் சன்னிதியில் அவரவர் அறிதல்கள் அவரவர் ஞானம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அந்தவகையில் பூவே உனக்காக காதலின் க்ளாஸிக் கானம்.   https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-41-பூவே-உன/    
  • போன வார இறுதியில் அகன்ற திரையரங்கில் நிரம்பிவழிந்த கூட்டத்தினருடன் தலீவரின் தர்பார் படம் பார்த்தேன்😎 குழந்தைகளையும் அனுமதிப்பதற்காக பல கோரமான காட்சிகளை வெட்டிவிட்டதனால் படம் தொய்வின்றிப் போனது. ரஜினி இன்னமும் அநாசயமாக நடிக்கின்றார்! இயக்குநர் ஒரு தேர்ந்த நடிகருக்கு சவாலன காட்சிகளைக் கொடுக்க மறந்துவிட்டார்!