Jump to content

தமிழர் பிரதேசங்களில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு


Recommended Posts

656X60-X150.gif
தமிழர் பிரதேசங்களில் இன்றையதியம் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் அனுஷடிக்கப்பட்டது.

குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு உட்பட பல தமிழர் பிரதேசங்களில் கார்த்திகை 27 ஆம் திகதி மாவீரர் நாள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

 

 

திருகோணமலை,  மூதூர் கிழக்கு - சம்பூர் ஆலங்குளம் 

திருகோணமலை,  மூதூர் கிழக்கு - சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள் இன்று (27)மாலை இடம் பெற்றது.

மிகவும் பாதுகாப்புகெடுபிடிக்கும் மத்தியில் மக்கள் தோரணங்கள் அமைத்து மாவீரர் நினைவு நாளை கொண்டாடினர்.

இதில் பெருந்திரளான மக்கள் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

இதில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சிவில் உடையில் அங்கு நடைபெறும் நிகழ்வுகளை அவதானித்துக் கொண்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

1574863236704_image2.jpeg

1574863236976_image1.jpeg

1574863238772_image3.jpeg

1574863238415_image4.jpeg

 

 

மட்டக்களப்பு - வாகரை

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் தேசிய மாவீரர் தினம் புதன்கிழமை மாலை 6.05 மணிக்கு மழைக்கு மத்தியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

வாகரைப் பிரதேச இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாவீரர் தின நினைவு கூரலின் போது வீரமரணம் எய்திய மாவீரர்களுக்கு மூன்று நிமிடம் மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டதுடன், மாவீரர்களின் உறவுகள் கண்ணீர் மல்க மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து வாகரைப் பிரதேசத்தின் மாங்கேணியைச் சேர்ந்த 4 உறவுகளை உயிர் தியாகம் செய்த வேலன் தங்கம்மா (வயது 77) என்ற தாயினால் மாவீரர் ஈகைச் சுடரேற்றப்பட்டதுடன், பின்னர் கலந்து கொண்ட அனைவராலும் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வாகரைப் பிரதேசத்தில் கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் அச்சத்திற்கு மத்தியில் இடம்பெற்ற தேசிய மாவீரர் தினத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் காலநிலை மாற்றத்திற்கு மத்தியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், பிரதேச சபை உறுப்பினர்களான க.கமலநேசன், கி.சேயோன், வ.சுரேந்திரன் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது தேசிய மாவீரர் தினத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஏற்பாட்டாளர்களினால் தென்னம் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தரவை, மாவடிமுன்மாரி, தாண்டியடி, வாகரை ஆகிய நான்கு இடங்களிலும் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் தேசிய மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

01__1___1_.JPG

01__2___1_.JPG

01__3___1_.JPG

01__6___1_.JPG

01__6___1_.JPG

01__9_.JPG

01__8_.JPG

01__12_.JPG

01__15_.JPG

01__24_.JPG

01__22_.JPG

 

மன்னார் - மடு - பண்டிவிரிச்சான்

திடீர் என அமைக்கப்பட்ட இராணுவ முகாம் , அகற்றப்பட்ட நினைவு தூபி திடீர் மின் வெட்டு மற்றும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் என அனைத்து தடைகளையும் தாண்டி எழுச்சி பூர்வமாக மன்னார் மடு பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று புதன் கிழமை மாலை  நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றுள்ளது.

 

நேற்று முன் தினம் திங்கட்கிழமை தொடக்கம் தொடர்ச்சியாக இராணுவத்தினரால் தடைகள் விதிக்கப்பட்ட நிலையிலும் நினைவேந்தல் நிகழ்வுக்கு என அமைக்கப்பட்ட நினைவு தூபி அகற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தடை செய்யப்பட்ட நிலையிலும் இன்று புதன் கிழமை மாலை 6.05 மணிக்கு மாவீரர்களுக்கான பொதுச் சுடர் ஏற்றப்பட்டு நூற்றுக்கணக்கான மக்களின் கண்ணீர் மத்தியில் மாவீரர் தினம் எழுச்சியுடன் இடம் பெற்றது.

 

பண்டிவிரிச்சான் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெறுவதற்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னர் பண்டிவிருச்சான் பிரதான பாதையில் திடீர் சோதனை சாவடி அமைக்கப்பட்டதுடன் புலனாய்வுத்துறையினர் மற்றும் பொலிஸ் ,இராணுவத்தினர் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும் மக்கள் அச்சம் இன்றி நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இன்றைய நினைவேந்தல் நிகழ்விற்கு வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மல நாதன் , நானாட்டன் பிரதேச சபை தவிசாளர் பரஞ்சோதி மன்னார் மற்றும் நானாட்டன் நகர பிரதேச சபை உப தவிசாளர்கள் அருட்தந்தையர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

1__8_.jpg

2__6_.jpg

4__4_.jpg

3__6_.jpg

IMG_4722.jpg

IMG_4730.jpg

IMG_4729.jpg

 

ஆனந்தபுரம் - இரட்டைவாய்க்கால் 

ஆனந்தபுரம் சமரில் வீரமரணமடைந்த தளபதிகள் விதைக்கப்பட்ட முல்லைத்தீவு  இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லத்தில் மாவீரர்நாள் நிகழ்வுகள் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றது .

இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதான சுடரினை மாவீரர் லெப் கேணல் நிலான் அவர்களின் துணைவியார் ஏற்றினார். சம நேரத்தில் ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது .

3cfee.jpg

3333333.jpg

1111111.jpg

33333333333.jpg

 

கிளிநொச்சி - முழங்காவில்

கிளிநொச்சி முழங்காலில் மாவீரர் துயிலும் இல்லத்தில் 3000 அதிகமான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். 

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. 

1750 ஈகைச்சுடர்கள் ஏற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மாவீரரின் தந்தையான கே.நாகராசா பொதுச்சுடரினை ஏற்றியதை அடுத்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலிக்கப்பட்டது.

20191127_180421.jpg

20191127_174410.jpg

20191127_180602.jpg

20191127_180636.jpg

20191127_164739.jpg

 

மட்டக்களப்பு - கல்லடி

மட்டக்களப்பு - கல்லடி மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த கூடியிருந்தபோதிலும் பொலிஸார் தடை செய்தமையால் பொதுமக்கள் தமது அஞ்சலியை வீதியில் நின்றவாறு மேற்கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு கல்லடி மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்குகேற்றி அஞ்சலி செலுத்துவதற்காக  இன்று புதன்கிழமை (27) மாலை துப்புரவுப்பணியில் இளைஞர்கள்  ஈடுபட்டபோது  பொலிசார் அதனை தடுத்து நிறுத்தி சோடிக்கப்பட்ட தோரணங்கள் கழற்றப்பட்ட சம்பவத்தையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது  

 

குறித்த தூபி முருகன் கோவில் ஆலயத்திற்கு அருகில் கடந்த 2002 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் மாவீரர்களை நினைவு கூறுவதற்காக அமைக்கப்பட்டது. இருந்தபோதும் அது பற்றைவளர்ந்து கவனிப்பாரற்று கிடந்துள்ளது.

 

இந்த நிலையில்  கடந்த ஆண்டு அந்த தூபியில் சிலர் சென்று விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து இந்த முறை அதனை பிரதேச இளைஞர்கள் ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்துவதற்காக சம்பவதினமான இன்று புதன்கிழமை மாலை துப்புரவு பணியில் ஈடுபட்டு தோரணங்கள் கட்டப்பட்ட நிலையில் கோவில் நிர்வாகம் இந்த மாவீரர் நினைவு தூபியில் விளக்கு ஏற்றக் கூடாது என கூறியுள்ளனர் 

 

இதனையடுத்து குறித்த பகுதிக்கு பொலிசார் வந்து இதில் விளக்கு ஏற்ற முடியாது மீறி ஏற்றும் பட்டத்தில் கைது செய்யப்படும் என தெரிவித்து கட்டப்பட்ட தோரணங்களை களற்றவைத்து விளக்கு ஏற்றிஅ ஞ்சலி செய்ய தடைவிதித்தனர். 

 

IMG-20191127-WA0020.jpg

IMG-20191127-WA0021.jpg

IMG-20191127-WA0019.jpg

IMG_20191127_172821.jpg

IMG_20191127_172817.jpg

IMG_20191127_172654.jpg

IMG-20191127-WA0021.jpg

 

யாழ்.கொடிகாமம்

யாழ்ப்பாணம், கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தின் நினைவேந்தல் நிகழ்வு துயிலுமில்லத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.

நினைவேந்தலில் முதன்மைச் சுடரினை மாவீரர்களின் பெற்றோர்கள் ஏற்றிவைத்தனர்.

மாவீரர் தின நிகழ்வில் மாவீரர்களின் குடும்பங்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தினர் முகாம் அமைத்து ஆக்கிரமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

01__7_.jpg

01__6_.jpg

01__5_.jpg

01__4_.jpg

01__3_.jpg

01__2_.jpg

01__1_.jpg

 

யாழ். கோப்பாய்

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாவீரர் தின நினைவுகூரல் இடம்பெற்றது.

இன்று மாலை 6.05 மணிக்கு பிரதான ஈகைச் சுடர் ஏற்றப்பட்ட நினைவுகூரல் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு ஈகைச்சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

IMG_7573.JPG

IMG_7619.JPG

IMG_7621.JPG

IMG_7627.JPG

IMG_7661.JPG

IMG_7740.JPG

IMG_7762.JPG

IMG_7744.JPG

 

https://www.virakesari.lk/article/69917

 

கண்ணீரால் கரைந்தது தேராவில்  மாவீ­ரர் துயி­லும் இல்­லம்

தேராவில்  மாவீ­ரர் துயி­லும் இல்லத்தில் இன்று மாலை 6 மணிக்கு மணியொலி எழுப்பட்டதையடுத்து அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

.3213453.JPG

இதையடுத்து பிரதான பொதுச் சுடரினை மாவீரர்  கடற்கரும்புலி மேஜர் மதன்,மேஜர் சுடர்வண்ணன்,விரவேங்கை அறிவழகன் ஆகிய மாவீர்ர்களின் தந்தையான திருமலையை சேர்ந்த நல்லையா சிதம்பரநாதன்  ஏற்றியுள்ளனர்.

 

_MG_8841.JPG

தொடர்ந்து துயிலுமில்ல பாடல் ஒலிக்கவிடப்பட்டதையடுத்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பபட்டன.

_MG_8848.JPG

2019 ஆம் ஆண்டிற்கான மாவீ­ரர் நாள் நினை­வேந்­தல் சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்களின் பங்குபற்றலுடன்  மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது

_MG_8851.JPG

 

_MG_8855.JPG

_MG_8857.JPG

_MG_8862.JPG

_MG_8864.JPG

_MG_8867.JPG

_MG_8866.JPG

 

_MG_8870.JPG

_MG_8874.JPG

_MG_8876.JPG

 

_MG_8885.JPG

_MG_8888.JPG

_MG_8889.JPG

 

_MG_8928.JPG

_MG_8893.JPG

_MG_8893.JPG

_MG_8931.JPG

_MG_8936.JPG

 

 

_MG_8940.JPG

 

_MG_8941.JPG

 

_MG_8965.JPG

https://www.virakesari.lk/article/69910

 

வவுனியாவில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் நாள்

வுனியா பிரஜைகள் குழுவின் எற்பாட்டில் வவுனியா நகரசபை மண்டபத்தில் பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட நினைவாலயத்தில் மாவீரர்நாள் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.

1.jpg

மூன்று மாவீரர்களின் தாயாரான தனலட்சுமியினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மாவீரர்களின் பெற்றோரும் மாவீரர்களின் நினைவுருவப்படத்திற்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

4.jpg

இதேவேளை மாவீரர் நாளை அனுஸ்டிப்பதற்காக வருகை தந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்தியதுடன் மலரஞ்சலியும் செலுத்தி மாவீரர்களை வணங்கியிருந்தனர்

DSC05783.JPG

 

DSC05792.JPG

 

DSC05807.JPG

 

DSC05813.JPG

https://www.virakesari.lk/article/69913

 

முல்லைத்தீவில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகள் !

தமிழீழ விடுதலைப்போரில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவேந்தும் மாவீரர் நாள் நிகழ்வுக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பல்வேறு துயிலுமில்லங்களில் இன்றையதினம் இடம்பெற்றது .

IMG_6678.jpg

படையினர் மற்றும் பொலிசாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் மக்கள் தமது பிள்ளைகளை உறவினர்களை நினைவில் இருத்தி துயிலுமில்லங்களுக்கு சென்று தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர் .  

முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் ,முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் , களிக்காடு மாவீரர் துயிலுமில்லம் ,முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லம் , இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம் ,தேராவில் மாவீரர் துயிலுமில்லம், வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லம் ,தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லம், இரட்டைவாய்க்கால்  மாவீரர் துயிலுமில்லம் ,ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லம் ,முல்லைத்தீவு நகர கடற்கரை  ஆகிய பதினொரு துயிலுமில்லங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது .

மக்கள் வீடுகளிலும் , வியாபார நிலையங்களிலும் , ஆலயங்களிலும் , பொது இடங்களிலும் விளக்கேற்றி மாவீரரை நினைவேந்தினர் .

IMG_6728.jpg

IMG_6686.jpg

IMG_6729.jpg

IMG_6685.jpg

IMG_6683.jpg

IMG_6682.jpg

https://www.virakesari.lk/article/69915

 

 

திருகோணமலையிலும் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

மாவீரர்களை நினைவுகூர்ந்து திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (27) மாலை 6.10 மணியளவில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

DSC_0024.JPG

கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அலையும் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆசா தலைமையில் இடம்பெற்றது.

திருகோணமலையில் வழமையாக சிவன் கோயிலுக்கு அருகில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த இந்த அனுஷ்டானம் இம்முறை அனுஷ்டிக்கப்படவில்லையெனவும், சிவன் கோயிலை சுற்றி இராணுவத்தினர் குவிக்கப்பட்டடிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

DSC_0060.JPG

இதேவேளை  2015ம் ஆண்டு தொடக்கம் சிவன் கோயிலுக்கு அருகில் இடம்பெற்று வந்த இந்த நினைவு தினம் இம்முறை நடாத்தினால் பாதிப்பு ஏற்படும் என அஞ்சி நடாத்தப்படவில்லையெனவும் தெரியவருகின்றது. 

ஆனாலும் தமிழ் உறவுகளுக்காக தம்மை வித்திட்டவர்களை நினைவு கூற பயந்து இருந்தபோதும் திருகோணமலையில் இவ்வாறான நினைவேந்தலை  செய்ய வேண்டுமெனவும் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அலையும் சங்கத்தின் தலைவி பயமின்றி முன்னெடுத்ததும் குறிப்பிடத்தக்கது 

https://www.virakesari.lk/article/69916

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புகைப்படங்களை பார்க்கும் பொழுது கண்கள் குளமாகி, நெஞ்சம் விம்மி அடைக்கிறது.
உங்கள் உணர்வுக்கு கைகூப்பி தொழுகிறேன் . 🙏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.