Jump to content

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தயாரித்த, மசாலாத் தோசை!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

kamala-haris.jpg

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரும், நகைச்சுவை நடிகையும் தயாரித்த மசாலாத் தோசை!

இந்திய வம்சாவளியினர் வீடுகள் மற்றும் இந்திய உணவகங்களில் சாதாரணமாகக் கிடைக்கும் ஓர் உணவு மசாலாத் தோசைதான்.

ஆனால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரும் பிரபல நகைச்சுவை நடிகை ஒருவரும் இணைந்து அந்த மசாலாத் தோசையைத் தயாரித்தால் சற்று சுவாரஸ்யமாக இருக்கும்.

2020 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள செனட்டர் கமலா ஹாரிஸும் (Kamala Harris) நகைச்சுவை பிரபல நடிகை மிண்டி கலிங்கும் (Mindy Kaling – Vera Mindy Chokalingam) இணைந்து மசாலா தோசைகளை தயாரித்துள்ளனர்.

அதனைக் காணொளியாக Youtube பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் செனட்டர் கமலா தேவி ஹாரிஸ்.

இருவரும் இந்தியப் பின்னணியைப் பற்றிப் பேசிக்கொண்டே மசாலாத் தோசையைத் தயார்செய்யும் காணொளி Youtube இல் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இரண்டு பிரபலங்களும் இந்திய வம்சாவளியைக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/அமெரிக்க-ஜனாதிபதி-வேட்பா/

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மசலாத் தோசை நல்லா வந்திருக்கு.....இந்தப் பதவியில் இருந்தால் என்ன பெண்கள் பெண்கள்தான்.....ஒரு நிமிட இடைவெளி இல்லாமல் பேசிக்கொண்டே அழகாக மசலாத் தோசை செய்து விட்டார்களே. அவர்களுக்கு இந்த சமோசாவை குடுக்கலாம்.......!  😂

வெறும் கோதுமையில் செய்த சமோசா. நீங்களும் செய்து பார்க்கலாம்.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

அவயள் முறையாக சுடவில்லை தோழர் .. தோசை மீது குழைவான வற்றல் மிளகாய் தடவி அதன் மேல் உருளை கிழங்கு மசாலாவை வைக்க வேண்டும்.. ☺️ தேத்தண்ணீர் கடை சமோசா அருமை..👌

maxresdefault.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அவயள் முறையாக சுடவில்லை தோழர் .. தோசை மீது குழைவான வற்றல் மிளகாய் தடவி அதன் மேல் உருளை கிழங்கு மசாலாவை வைக்க வேண்டும்.. ☺️ தேத்தண்ணீர் கடை சமோசா அருமை..👌

maxresdefault.jpg

தோழர் நீங்கள் தோசைகளைப் பார்த்தீர்கள் , நான் தோழிகளைப் பார்த்தேன்.அவர்கள் பேசுவதை கேட்டேன் ..ஜஸ்ட் லைக் தட் ........!   😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.