• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Kaviarasu

என் தமிழச்சி

Recommended Posts

p.txt.jpg

என்னை சுமந்த உன்னை 
நான் சுமக்க ஆசை  படுகிறேன் 
தாய்யாகவா ?
அல்லது தாரமாகவா ?
 நீயே சொல்  என் தமிழே...!

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, Kaviarasu said:

p.txt.jpg

என்னை சுமந்த உன்னை 
நான் சுமக்க ஆசை  படுகிறேன் 
தாய்யாகவா ?
அல்லது தாரமாகவா ?
 நீயே சொல்  என் தமிழே...!

 

வணக்கம் கவியரசு.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்....! வாங்கோ....! வாழ்த்துக்கள்.....!!!

தமிழை தாயாக்கினால் எல்லோரும் பாதம் தொடலாம்.  தாரமாக்கினால் நீங்கள் மட்டுமே காயம் தொடலாம்.....!  😂

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Ähnliches Foto

வணக்கம் கவியரசு...  :)
உங்களை அன்புடன்,  யாழ்.களம்  வரவேற்கின்றது.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • சபாஸ் சரியான போட்டி.  பாவம் பிரபாகரனும் அவனின் பிள்ளைகளும். (அடுத்தது என்ன சாதிக்கொரு வேட்பாளரா ?)
  • தமிழ் மக்களின் ஒற்றுமையை இதுவரையில் திட்டம் போட்டுக் குலைத்து வருபவர்கள் யார் ? கஜேந்திரகுமாருக்கு விக்கேஸ்வரன் கேள்விக்கணைகள் யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்காக தமிழர் அனைவரும் உணர்வெழுச்சியுடன் பங்குகொள்ளும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் தாம் மட்டும் வேறான இடத்தில் தமது நிகழ்வை நிகழ்த்தி பிரிவினையை வளர்ப்போர் யார்? என வட.மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் குறித்த கட்சியின் கருத்துக்கு பதிலளித்துள்ளார்.அத்துடன் சி.வி.விக்கேஸ்வரனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும் அவர் வழங்கிய பதில்களும் பின்வருமாறு அமைந்துள்ளது. கேள்விகள்:- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நீங்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் தமிழ் மக்களை ஏமாற்றி முடக்குவதற்கு ஈ.பீ.ஆர்.எல்.எப். கட்சிக்குள் இணைந்துள்ளதாக கூறுகின்றனரே? உங்கள் கருத்தென்ன? பதில்:- யார் இந்தத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர்? அந்தப் பழைய தமிழ் காங்கிரஸ் சின்னத்தில் பயணிப்பவர்களைத் தானே நீங்கள் கூறுகின்றீர்கள்? கேள்வி:- ஆம். பதில்:- அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியினர் தமது யாப்பை மாற்றி விட்டார்களா? எனக்குத் தெரிந்தவரையில் ஒற்றையாட்சிக்குள் ஐம்பதுக்கு ஐம்பது என்று தான் ஜீ.ஜீ. கூறிவந்தார். இப்போதைய முன்னணியினர் அதனை மாற்றிவிட்டார்களா? அப்படியானால் என்னவென்று? இப்பொழுது அவர்கள் சமஷ்டி என்று மாற்றியிருந்தால் ஜீ.ஜீ. தனது கட்சியில் இருந்த தந்தை செல்வாவிடம் மண்டியிட்டதாக அர்த்தமாகும். தனித்தமிழ் ஈழம் என்று மாற்றியிருந்தால் அவர் சி.சுந்தரலிங்கம், வி.நவரத்தினம் ஆகியோரின் கருத்துக்களை ஏற்றதாக முடியும். ஜீ.ஜீ.சிங்களவரிடம் மண்டியிட்டாலும் இன்னொரு தமிழரிடம் மண்டியிடமாட்டாரே! எனக்குத் தெரிந்த வரையில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் இன்று வரையில் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட ஒரு கட்சி தான்! அவ்வாறான கட்சியின் சின்னத்தையும் பதிவையும் தொடர்ந்து பாவிக்கும் முன்னணியினர் எவ்வாறு மற்றவர்களை தமிழ் மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சிக்குள் முடக்க எத்தனிக்கின்றார்கள் என்று கூறலாம். நாங்கள் கேட்பது சமஷ்டி. அது எல்லோருக்குந் தெரிந்த விடயம். நாங்கள் ஒற்றையாட்சிக்குள் மக்களைக் கொண்டு செல்ல எத்தனிக்கின்றோம் என்றால் எமக்கும் மத்திய அரசாங்கங்களுக்கும் இடையில் ஏதோவொரு கரவான (மறைவான) இணக்கப்பாடு இருப்பதாகக் கூறுகின்றார்களா? :கேள்வி- ஆமாம். அவ்வாறுதான் கூறுகின்றார்கள்! பதில்:- சரி! எங்களுக்கு அவ்வாறான உறவு இருப்பதானால் நாங்கள் தமிழ் மக்களிடையே ஒற்றுமையை உண்டு பண்ண எத்தனித்திருக்க மாட்டோம் அல்லவா? அதாவது நாங்கள் மத்திய அரசாங்கங்களுடன் கரவான உறவு வைத்திருப்பது உண்மையானால் நாங்கள் என்ன செய்வோம்? எந்தத் தருணத்திலும் தமிழ் மக்களோ மக்கள் தலைவர்களோ ஒன்று சேரவிடாது தடுப்போம் அல்லவா? அதாவது தமிழ் மக்களிடையே ஒற்றுமை ஏற்படுவதால் மத்திய அரசாங்கத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்பைத் தடுப்போம் அல்லவா? கேள்வி:- ஆமாம். பதில்:- நாம் அப்படியொன்றும் செய்யவில்லையே! இன்றும் நாங்கள் தமிழர் ஒற்றுமைக்காக கஜேந்திரகுமாரை எங்களுடன் சேருமாறு தானே கூறிவருகின்றோம்? அவரின் மூன்று தலைமுறையினரைத் தெரிந்த என்னால் என் மகனுடன் இறுதிச் சட்டப் பரீட்சை செய்த மற்றும் என் நண்பர் தர்மராஜா தன் மகன் போல் அரவணைத்த கஜேந்திரகுமாரை விமர்சிப்பது எனக்கு சங்கடமாக இருக்கின்றது. ஆனால் உண்மைகளை வெளியிட வேண்டிய தருணம் வந்துவிட்டது. 1.தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை முதலில் 2009ல் குலைத்தவர் யார்? 2.தமிழ் மக்கள் பேரவையின் ஒற்றுமையைக் குலைத்து அதன் முக்கியத்துவத்தை மழுங்கச் செய்தவர் யார்? 3.பல்கலைக்கழகத்தில் ஆறு கட்சிகள் சேர்ந்து தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஆவணப்படுத்த எத்தனித்தபோது அதன் ஒற்றுமையைக் குலைத்தது யார்? 4.காணாமல் போனோரின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து தமக்குள் ஒரு ஐக்கியத்தைத் தேடியபோது தம் கட்சிக்கென வேறு ஒரு அலகை உண்டுபண்ணி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை இரண்டு அணிகளாகப் பிரித்து அவர்கள் போராட்டத்தை திட்டமிட்டு மழுங்கடிப்பவர் யார்? 5.யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்காக தமிழர் அனைவரும் உணர்வெழுச்சியுடன் பங்குகொள்ளும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் தாம் மட்டும் வேறான இடத்தில் தமது நிகழ்வை நிகழ்த்தி பிரிவினையை வளர்ப்போர் யார்? 6.ஈ.பீ.ஆர்.எல்.எப்.உடன் கூட்டுச் சேருவதாகக் கூறி காலத்தைக்கடத்தி அவர்கள் கூட்டைச் சிதைத்தவர்கள் யார்? 7.எமது இரண்டாவது ‘எழுக தமிழ்’ நிகழ்வை எப்படியாவது குலைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒற்றுமையைச் சிதைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியவர்கள் யார்? 8.தமது கொள்கை ஒற்றையாட்சியா, சமஷ்டியா, தனி நாடா என்பதை வெளிப்படுத்தாமல் ஒற்றையாட்சி காங்கிரஸ் சின்னத்தையும் கட்சியையும் தொடர்ந்து பாவித்து வருபவர்கள் யார்? 9.இந்தியா வழி நடத்துகின்றது என்று மற்றக் கட்சிகளை கண்டித்துக் கொண்டு இரவில் ஜெட் விங்ஸில் சீனப் பிரதிநிதிகளைக் கரவாகக் கண்டு வந்தவர்கள் யார்? 10.கோட்டாபய பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது தமது சகோதரனை விடுவிக்க கோட்டாபயவுடன் கரவான ஒப்பந்தங்களில் ஈடுபட்டவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்? 11.தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் விரக்தி கொண்ட மக்களை அவர்கள் நேசித்த தமிழ் மக்கள் பேரவை மூலம் தமக்கு ஆதரவைப் பெற தமிழ் தேசிய பேரவை என்ற ஒன்றை உருவாக்கி தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவான மக்களின் வாக்குகளை 2018ல் ஏமாற்றிப் பெற்றவர்கள் யார்? 12.பேசுவது முன்னணி, தஞ்சமடைவது காங்கிரஸ் என்ற ரீதியில் தம்மை ஒற்றையாட்சிக் காங்கிரசினுள் இணைத்து வைத்து அரசாங்கத்திற்கு ஒற்றையாட்சி என்ற தலையையும் தமிழ் மக்களுக்கு இன்னொரு முகமாக வாலையும் விலாங்கு மீன் போலக் காட்டும் கட்சி எந்தக் கட்சி? 13.ஈ.பி.ஆர்.எல்.எப்.ஐ.வெளியேற்று இல்லையேல் நாங்கள் உங்கள் கூட்டில் இணையமாட்டோம் என்று எங்களுடன் இன்றுவரையில் அடம் பிடிப்பவர்கள் யார்? 14.தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெற்கில் சோரம் போன நிலையில் அரசியலை கொண்டுசெல்ல வலுவானதொரு அரசியல் கூட்டு உருவாகும் போது தேசிய நலன் கருதி தாமும் கைகொடுத்து இணையாமல் மக்களுக்கு துரோகம் செய்பவர்கள் யார்? ஆகவே தமிழ் மக்களின் ஒற்றுமையை இதுவரையில் திட்டம் போட்டுக் குலைத்து வருபவர்கள் யார் என்று நான் உங்களுக்குக் கூறத்தேவையில்லை. நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகின்றேன். தமிழ் மக்களின் பிளவு அல்லது ஒற்றுமையின்மை யாருக்கு நன்மை அளிக்கும்? கேள்வி :- அரசாங்கத்திற்கும், பேரினவாதிகளுக்கும்! பதில்:- சரியாகச் சொன்னீர்கள்! அரசாங்கத்திற்கும் பேரினவாதிகளுக்கும் நன்மை அளிப்பதற்காக இவ்வாறான செயல்களில் தொடர்ந்து ஒரு கட்சி ஈடுபட்டு வருகின்றதென்றால் தமிழ் மக்களை ஏமாற்றி வருவது நாங்களா? அவர்களா?அத்துடன் இத்தனை தரம் மக்களைப் பிரித்துப் பிரித்து செயற்ப்பட்டமை தற்செயலாக நடந்த நிகழ்வுகளாக இருக்க முடியாது. யாரோ ஒருவரின் அல்லது பலரின் வழி நடத்தலில்த்தான் இவர்கள் இவ்வாறு நடக்கின்றார்கள் என்பது எனது சந்தேகம். எனது சந்தேகம் பிழையென்றால் இப்பொழுதாவது தமது குலைக்கும், சிதைக்கும் சிந்தனைகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு ஒற்றுமையின் பேரில் எம்முடன் சேர்ந்து பயணிக்கச் சொல்லுங்கள் காங்கிரஸாரை என சி.வி. குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் தமிழ் மக்களை ஏமாற்றி முடக்குவதற்கு ஈ.பீ.ஆர்.எல்.எப்.கட்சிக்குள் இணைந்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியமைக்கு வட.மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்-மக்களின்-ஒற்றுமையை/
  • வணக்கம் !வாங்கோ !! வாழ்த்துக்கள் !!! 
  • பாலியல் தொழிலுக்கு சட்டபூர்வமான அங்கீகாரம்: “இவங்களுக்கு காசு கொடுக்கத் தேவையில்லைதானே.” தலைநகரத்தின் வீதிகளில் பயணிக்கின்ற நாம் நிச்சயம் தெருவோரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க காத்துக்கொண்டிருப்பவர்களை நிச்சயம் கடந்திருப்போம். ஏன் இன்னும் சொல்லப்போனால் அவர்களது அதீத அலங்காரங்களையோ உடைகளையோ நகப்பூச்சு நிறங்களையோ பார்த்துக் கிண்டலடித்திருப்போம். குறைந்தபட்சம் நம்முடன் வருபவர்கள் அல்லது நண்பர்களிடம் அங்கே பாரு ஒரு …… நிற்கிறது என்று கூறியிருப்போம். சில வேளைகளில் சிலர் இப்படி எம்மிடம் சொல்லுவதையாவது கேட்டுமிருப்போம். தொழில்களை சாதியாக்கி அதனை சண்டைகள் வரை கொண்டு சென்ற நமக்கு அன்றிலிருந்தே பாலியல் தேவைக்கென குறிப்பிட்ட பெண்கள் ஒதுக்கப்பட்டிருந்தார்கள் என்பதும் நாமனைவரும் அறிந்த விடயமே. உழைப்பிற்கு அல்லது சேவைக்கு ஊதியம் பெறப்படின் அதனை தொழில் என வரையறுக்கும் நாம் ‘விபச்சாரம்’, ‘விபச்சாரி’ (இப் பெண்பால் சொல்லிற்கான ஆண்பால் சொல் என்ன என்பது கூட தெரியாது. ஆனால் பல நாடுகளில் ஆண்களும் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றார்கள்) என்கின்ற பதங்களைக் தவிர்த்து ‘பாலியல் தொழிலாளி’ என்கிறதான சொற்பதங்களை கையாள முயல்வதே நம் முதற்கண் நாகரீகம் என கருத வேண்டும். பாலியல் தொழிலை சட்டமாக்குவதற்கான விவாதங்கள் இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற அதேவேளை பல நாடுகள் அதனை சட்டபூர்வமானதாக்கி பாலியல் தொழிலாளர்கள் நலனில் அக்கறை செலுத்தி வருகின்றன.”பாலியல் தொழில் சட்டபூர்வமாக்கப்படல் வேண்டுமா?” என்கின்ற வினாவை இம்முறை இரு பாலியல் தொழிலாளிகளிடம் கட்டுரைக்காக அணுகி கேட்டிருந்தோம். மல்வந்தி (வயது – 23, பெயர் மாற்றப்பட்டுள்ளது) பதினெட்டு வயதில் திருமணமாகி இன்று நான் இரு குழந்தைகளுக்கு தாய்.  கடைசிக்குழந்தை வயிற்றிலிருக்கும் போது எனது கணவரை போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுபண்ணி விட்டார்கள். தற்போது வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. குழந்தை பிறக்கும் வரை எம்மிடம் இருந்த நகைகள் பொருட்களை வைத்து காலந்தள்ளினோம். பின்னர் ஒன்றும் செய்ய என்னால் முடியவில்லை. பிள்ளைகளுக்கும் கணவரின் வழக்கு செலவிற்கும் நிறைய பணம் தேவைப்பட்டது. தெரிந்தவர்களும் பெரிதாக உதவி செய்ய முன்வரவில்லை. எனக்கும் படிப்பறிவு இல்லை. கணவர் முன்னர் வேலை செய்த முதலாளியிடம் உதவி கேட்டேன். சிறிதளவு பணம் தந்தார். மறுபடியும் உதவி செய்ய வேண்டும் எனின் தன்னுடைய பாலியல் தேவைக்கு உடன்படுவதாயின் தருவதாக சொன்னர். எனக்கும் ஆரம்பத்தில் தயக்கமாகவிருந்தாலும் குறைந்தபட்சம் என் குழந்தைகளுக்கு உணவளிப்பதற்காகவது பணம் தேவையாயிருந்தது. தற்கொலை செய்யவும் முயற்சித்தேன். அதுவும் முடியவில்லை. இறுதியில் அந்த முதலாளியின் விருப்பத்திற்கு உடன்பட்டேன். ப்பணம் கிடைத்தது. அவர் மூலம் அவரது நண்பர்களின் அறிமுகமும் கிடைத்தது. அவர்களது பாலியல் தேவைகளையும் நிறைவேற்றுவதன் மூலம் மேலும் சம்பாதிக்க ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட ஆறு மாதங்களின் பின்னர் என்னுடைய ஊரிலிருந்து இவ்வாறான தொடர்புகளை மேற்கொள்ள முடியவில்லை. பின்னர் தலைநகருக்கு வந்து வீதிகளில் நின்று ஆட்களைப் பிடிக்கிறேன்.  கடந்த மூன்று வருடங்களாக இவ்வாறு தான் சம்பாதிக்கிறேன். ஊரிலிருந்து இத்தொழிலை செய்தால் என் இரு பெண் பிள்ளைகளினதும் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் இங்கு வந்து போவது நல்லதெனப்படுகிறது. பிள்ளைகளை எங்கள் பக்கத்து வீட்டு ஆச்சியிடம் விட்டுவிட்டு காலையில் வேலைக்கு போவதாக கூறி இங்கு வருவேன். மாலையில் பெரும்பாலும் ஆறு மணிக்கு முன் வீடு சென்று விடுவேன். யாரும் சந்தேகப்படவில்லை. கொழும்பிலுள்ள கடையொன்றில் வேலை செய்வதாக தான் நினைக்கிறார்கள். கேள்வி: இது பற்றி உங்கள் கணவருக்கு தெரியுமா? பதில்: (முதலில் சிரித்து பின்னர் கைகளை பிசைந்த படி கலங்கிய கண்களுடன்…) ஒருநாள் கணவரைச் சந்திக்க சிறை சென்றபோது சொல்லி விட்டேன். இரண்டு மூன்று தடவைகள் பார்க்க சென்றபோது கோபத்தில் பேசவில்லை… பிறகு சரி… குடும்பம் பற்றி கவலை இருந்திருந்தால் இப்படி குடு வேலைக்கு போய் மாட்டி எங்கள நடுத்தெருவில விட்டுட்டு போயிருப்பாரா? கேள்வி: பாலியல் நோய்கள் மற்றும் தொற்றுக்கள் குறித்த வைத்திய பரிசோதனைகள் செய்வதுண்டா? பதில்: இல்லை… அந்தப் பரிசோதனைகள் எங்கு செய்கின்றார்கள் என்று தெரியாது. அதிகளவு பணம் கொடுத்து செய்ய எங்களைப் போன்றவர்களிடம் பணம் இல்லை. (தனது கைகளைத் திருப்பிக்காட்டியபடி…) இப்படி ஏற்படுகின்ற காயங்களுக்கு மட்டும் மருந்து ஏதும் கட்டுவதுண்டு… கேள்வி: காயங்களா? பதில்: ம்ம்ம்ம்…..பாலியல் தொழிலுக்காக வருகிறவர்கள் சில நேரங்களில் எம்மை அடித்துத் துன்புறுத்துவதுமுண்டு. அப்படி வருகின்ற காயங்கள் தான் இவை… கேள்வி: பாலியல் தொழிலை சட்டபூர்வமானதாக்குவதில் உங்கள் கருத்து? பதில்: அப்படி ஆக்கினால் நல்லம் தான். மருந்துகளை நாங்கள் எடுக்க முடியும்…. கொஞ்சம் மரியாதையும் கிடைக்கும்…. ### சாமிலி (வயது 41, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னுடைய தாயாரும் ஒரு பாலியல் தொழிலாளிதான். அப்பாதான் என் அம்மாவை வற்புறுத்தி இத்தொழிலுக்கு அனுப்பினார். அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் சிறிதளவை எமக்கு தந்துவிட்டு அவர் மிச்சத்தினை வைத்து தொடர்ந்து குடிப்பார், சூதாடுவார். எனக்கு 16 வயதிருக்கும்போது அம்மாவுக்கு திடீரென்று கடுங்காய்ச்சல் வந்தது. நான்கு நாட்களில் இறந்துவிட்டார். பிறகு நானும் அம்மாவைப் போல் இத்தொழிலுக்கு வந்துவிட்டேன். என்னுடைய சகோதரர்கள் இருவரை படிப்பித்து, இன்று அவர்கள் நல்ல நிலையில் இருக்கின்றார்கள். ஆனால், என்னை சகோதரி என்றே சொல்ல மாட்டார்கள். அவர்கள் பெயர் கெட்டுவிடும் என்று பயம். கேள்வி: பாலியல் நோய்கள் மற்றும் தொற்றுக்கள் குறித்த வைத்திய பரிசோதனைகள் செய்வதுண்டா? பதில்: என் உள்ளுறுப்புகளில் ஒருவித தொற்று ஏற்பட்ட போது மருத்துவரிடம் சென்று மருந்தெடுத்துள்ளேன். இரத்தப்பரிசோதனை எல்லாம் செய்ததில்லை. இரு முறை கருக்கலைப்பும் செய்துள்ளேன். அதில் முதல் முறை அதிக இரத்தப்பெருக்காகி கடும் கஸ்டப்பட்டுவிட்டேன். கேள்வி: பாலியல் தொழிலை சட்டபூர்வமானதாக்குவதில் உங்கள் கருத்து? பதில்: நல்லம்தான், இப்போது நாம் வீதியில் நின்று இந்த தொழிலைச் செய்கின்றோம். யாருடனாவது விடுதிகளுக்கு போய் விட்டால் பொலிஸார் வந்து விடுவார்கள். எம்மிடம் பணம் கேட்பார்கள். கொடுக்காவிட்டால் வீதியில் வைத்து அடித்து துன்புறுத்தி ஏற்றிப்போவார்கள். அவர்களிடம் இருந்து விடுதலையாகி வருவதற்கு செலவளிப்பதை விட கேட்கும் போது கொடுத்து விட்டால் நல்லம் என்று தான் நினைத்துக்கொடுப்போம். தொழில்செய்யும் ஒரு பிள்ளையை வந்தவன் அடிச்சு கையில் சிகரெட்டால் சுட்டு காசையும் பறிச்சிட்டான். அந்தப்பிள்ளையுடன் நானும் பொலிஸுக்கு போய் முறையிட்டம். தொழில் செய்றவங்கள் இதெல்லாம் தாங்கத்தான் வேணும், எங்களுக்கு பணம் தரவேணும் இல்லாட்டி ஏதாவது செய்வம் என்று பொலிஸாரும் பணம் வாங்கிவிட்டார்கள். கடைசியில் நீதி கிடைக்கல, இருந்த பணமும் பொய்ட்டுது. நாம் இதனை செய்ய அனுமதி கிடைத்தால் இவங்களுக்கு காசு கொடுக்கத் தேவையில்லைதானே. இவ்வாறான பல மல்வந்திக்களும் சாமிலிக்கலும் எம் தெருக்களில் நின்றுகொண்டு தம் அன்றாட வாழ்விற்காக பாலியல் தொழில் செய்துகொண்டுதானிருக்கின்றார்கள். இப்பாலியல்  தொழிலினை சட்டபூர்வமானதாக்குவதன் மூலம் மற்றும் நிர்வாக அலகாக ஸ்தாபிப்பதன் மூலம் பாதுகாப்பான உறவிற்கான பாலியல் கல்வியை வழங்கலாம் வயதெல்லைகளை நிர்ணயிப்பதன் மூலம் சிறுவர்கள் இத்தொழிலிற்கு நிர்ப்பந்திக்கப்படுவதை அல்லது கடத்தப்படுவதை (Child Trafficking) தடுக்கலாம். சட்ட பூர்வமானதாக்கி நிர்வாக கட்டமைப்பினை உருவாக்கினால் பாலியல் தொழிலாளிகள் சித்திரவதைக்கு உள்ளாவதைத் தடுக்கலாம். குறைந்தபட்சம் சித்தரவதைக்குள்ளாவதைக் குறைக்கலாம். அனுமதிக்கப்பட்ட வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் பாலியல் தொற்றுக்கள் மற்றும் நோய்களைத் தடுக்கலாம் அல்லது வெகுவாகக் குறைக்கலாம். இலங்கை போன்ற சுற்றுலாத்துறை சார் அபிவிருத்திகளை மேற்கொள்ளும் நாடுகள் இத்தகைய பாலியல் சார் தொழில்களை சட்டபூர்வமானதாக்குவதன் ஊடாக பாலியல் சார் வன்முறைகள், சித்திரவதைகளைக் குறைக்கவும் எதிர்காலத்தில் நிவர்த்திக்கவும் முடியும். சட்டவிரோதமாக நடாத்தப்படுகின்ற இவ்வாறான விடயங்களில் தங்கள் அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தி சுரண்டல்களை மேற்கொள்கின்றவர்களிடமிருந்து பாதுகாப்பினை பெற்றுக்கொடுக்க முடியும். பாலியல்சார் தேவைகளாயினும் சரி தொழிலாயினும் சரி காலங்காலமாக மாறாததொன்று. இதனை சட்டபூர்வமானதாக்கினாலும் இல்லாவிட்டாலும் இத்தொழில் குறைவடையவோ நிறுத்தப்படவோ போவதில்லை. இதில் ‘கலாசாரம்’ என்பதைக் காட்டி எதுவும் ஆகிவிடப்போவதுமில்லை. குறைந்தபட்சம் நாட்டு மக்களின் வாழ்தலுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கி கொடுப்பது அரசின் தலையாய கடமையல்லவா…. கேஷாயினி எட்மண்ட் https://maatram.org/?p=8315  
  • வணக்கம்  வருக வருகவே.