பிழம்பு

சீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்

Recommended Posts

11 hours ago, சண்டமாருதன் said:

தமிழகத்தின் பிரச்சனைகளின் மூலத்தை தேடுவதின் விழைவாகவே திராவிட அரசியலுக்கு மாற்று அரசியலும் தமிழரல்லாதோர் என்ன செய்கின்றார்கள் என்ற கேள்வியும் எழுகின்றது.  

மேலும் உங்கள் சொல்லாடல்கள் எல்லாம் தனியே கருத்தியல் ரீதியான எதிர்வினையாக இல்லை. போராட்ட காலத்தில் தேனீ இணையம் தமிழரங்கம் இரயாகரன் சிறிரங்கன் யுரிஎச் ஆர்  போன்றவர்கள் பாசிசப் புலிகள் என்று கத்தினதையே நினைவுபடுத்துகின்றது. போராட்டம் முடிந்தவடன் அவர்கள் சத்தமும் நின்றவிட்டது.  தமிழர்களின் அரசியலை சூனியத்தை நோக்கி நகர்த்துவதே அவர்கள் நோக்கமாக இருந்தது. அதுவும் நடந்தது. அவர்களிடம் இருந்த மேலாதிக்க  வக்கிரத்தை அறிவை பயன்படுத்தி ஜனநாயகவாதிகள் என்ற போர்வையில் இன விடுதலைப்போரை எதிர்த்தார்கள். அவர்களால் எதையும் இனத்துக்காக செய்ய முடியாது என்பதை நூறுவீதம் அறிந்தும் இனத்தின் எதிர்காலம் குறித்து எந்த வருத்தமும் இல்லாமல் செய்தார்கள்.புலிகளின் முடிவோடு அவர்களும் அமைதியானார்கள். இப்போது அதே பாணியை தமிழகத்தில் எழும் நாம் தமிழர் என்ற குரலுக்கு எதிராக இங்கு கிழம்புகின்றார்கள். இந்த குரலை நிர்மூலமாக்கி சூனியமான ஒரு நிலையை தோற்றுவிப்பதற்கு தங்களாலான பங்களிப்பை செய்கின்றார்கள். இது பாசிசம் என்பதை கண்டுபிடிக்க பயன்படுத்தும் மகா அறிவை இது தமிழர்களுக்கான தேசியத்தின் ஜனநாயக சக்தி என்று ஒரு துரும்பை சுட்டிக்காட்டுங்களேன்.. எல்லோரும் அதை பின்பற்றி பலப்படுத்தலாம். 

நேற்று மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து 17 பட்டேல் இன அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். அதை நியாயம் கேட்டவர்கள் போலீசால் அடித்து இழுத்து செல்லப்பட்டனர். தமிழகம் மட்டுமல்ல ஈழத்திலும் எமது சமூகக் கட்டமைப்பே பாசிசம் தான் .  இதற்குள் யாரொருவரும் ஜனநாயகவாதியாக தமது அறிவைக்கொண்டு மாறிவிட முடியாது.. இனமாக மேலெழுவதற்கு எது கிடைக்கின்றதோ அது பயன்படும் வரை அதைப்பிடித்து மேலேள வேண்டியதுதான். இல்ல கீழ இழுத்து விழுத்திவிட்டுசாதித்து விட்டதாக அதே இடத்தில் நிற்பதுதான் அறிவென்றால் அதற்கு யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. 

கருத்தாடல்களில் கருத்தியல் பஞ்சம் வரும் போது அதற்குள் புலிகளையும் இழுத்து விட்டுவிட்டு அனுதாபம் தேடும் வங்குரோத்தனப் போக்கில் தான் உங்கள் பதிலும் அமைந்து இருக்கின்றது. கருத்தை கருத்தால் எதிர் கொள்ள முடியாமல்  தேனீயையும் என்னையும் சமப்படுத்துவதன் மூலம் கைதட்டல்கள் மட்டுமே வாங்க முடியும். பொய் பித்தலாட்டம் எனும் சொற்களை தவிர்த்து விட்டு பாசிசம் என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் தேர்ந்தெடுத்து எதிர்வினையாற்ற முனைகின்றீர்கள்.

அத்துடன் புலிகளையும் சீமானையும் ஒரே தட்டில் வைத்து ஒப்பிடுகின்றதன் மூலம் புலிகளையும் அவர்களின் தியாகங்களையும் மலினப்படுத்திக் கொண்டு செல்கின்றீர்கள்.

இன்னொரு திரியில் உங்களின் கருத்தை quote பண்ணி சீமானின் தமிழ் தேசியம் என்பது பார்ப்பனியத்துக்கு சமாந்தரமாக பயணிக்கும், தமிழ் தேசியத்தை மலினப்படுத்தி வெற்று கோசமாக்கும் அரசியல் என பதிலளித்து இருந்தேன். வசதிக்காக அதற்கு பதில் கொடுக்காமல் இதற்கு பதில் கொடுத்துள்ளீர்கள்.

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து வீழ்ந்த பின் அங்குள்ள தலித்துகள் மீது ஏவப்பட்ட வன்முறைக்கான அடிப்படை சாதியம். அந்த சாதியம் இந்துத்துவத்தில் இருந்தும் பார்ப்பனியத்திலும் இருந்து தான் மூர்க்கம் கொள்கின்றது. சீமான் செய்வது அந்த பார்ப்பனியத்தை எதிர்க்கமால் வெறும் திராவிடத்தை எதிர்த்து செய்யும் வெற்று கோச அரசியல். தமிழ் நாட்டில் இன்றும் பிஜேபி போன்ற வகுப்புவாதக் கட்சி தலையெடுக்க முடியாமல் இருப்பதன் காரணம் இன்றும் அங்கு இருக்கும் திராவிட கொள்கையின் செல்வாக்கினால் மட்டுமே. அத்துடன் வட மானிலங்களில் இடம்பெறும் மதச் சண்டை, தலித்துகள் மீதான நிறுவனப்படுத்தப்பட்ட வன்முறை, சிறுபான்மையினர் மீதான வன்முறை போன்றவை தமிழகத்தில் நிகழாமைக்கு அடிப்படை காரணம் பெரியாரின் செல்வாக்கும் திராவிட கொள்கையுயே. திமுக / அதிமுக போன்ற திராவிடக் கட்சிகள் ஊழலிலும், பதவி வெறியிலும் திளைத்து கொள்ளை அடித்தமையை வைத்துக் கொண்டு திராவிடக் கொள்கை முற்றிலும் பிழை என்று சொல்லி அதற்கு பதிலாக தனித் தமிழர் எனும் பாசிச கொள்கையை பொய்யும் பிரட்டும் பித்தலாட்டம் ஊடாக முன் வைப்பவராகவே சீமானை பார்க்கின்றேன். சீமானின் அரசியல் தமிழ் நாட்டை பார்ப்பனியத்துக்கு தாரை வார்க்கும் அரசியல். பிஜேபி தான் காலூன்ற சீமானை கண்டும் காணமல் இருப்பதன் காரணமும் இதுவே.

//இனமாக மேலெழுவதற்கு எது கிடைக்கின்றதோ அது பயன்படும் வரை அதைப்பிடித்து மேலேள வேண்டியதுதான்/ / என நினைப்பதே மிக பலவீனமான ஒரு கருத்தியல். மேலே எழும்புவதற்கு எது உகந்தது, எது இலக்கை அடைய வைப்பது, எது இறுதிவரைக்கும் தாங்கிப் பிடிக்க கூடியது என ஆராயாமல் மிக இலகுவில் உடைந்து விடுவதுடன் முன்னைவிட பலகீனமான நிலைக்கு தம்மை இட்டுச் செல்லும் ஒன்றை கெட்டியாக பிடித்துக் கொண்டு ஒரு போதும் எழும்பிவிட முடியாது. அது முன்னிருந்த நிலையை விட கீழான நிலைக்கு இறுதியில் இட்டுச் செல்லும். சீமானும் அவ்வாறான ஒன்றுதான். ஏனைய பல மானிலங்களை விட பல விதங்களில் மேன்மை நிலையில் இருக்கும் தமிழகத்தின் மக்கள் நிச்சயம் பலகீனமான ஒன்றை பிடித்து கீழே விழக் கூடியவர்கள் அல்ல என திடமாக நம்புகின்றேன்.

மற்ற திரியில் உங்களுக்கு வைத்த, நீங்கள் வசதியாக மறந்து தவிர்த்த  என் கருத்து

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, goshan_che said:

சீமானை பற்றி போதியளவு எழுதியாகிவிட்டது. எனவே அதை கடந்து போகிறேன்.

ஆனால் நேற்று இதை ஒரு இந்திய நண்பரிடம் சிலாகித்த போது, அவர் சொன்னார்:

”சீமான் ஒரு வெறும் பயல் என்பது எனக்கே தெரிகிறது, பிரபாகரனை சந்தித்த போது சீமான் ஒரு ரெண்டு படம் எடுத்த பையன். அவருக்கு போய் பிரபாகரன் இவ்வளவு முக்கியதுவம் கொடுத்தார், ஒரு போராளியை, கடும் சண்டை ஆளணி பற்றாக்குறையின் மத்தியிலும் இப்படி வீணடித்தார் எனும் போது, பிரபாகரனின் ஆளுமை நிர்வாகத் திறன் பற்றிய என் மேலான மதிப்பீடு தகர்கிறது” என்றார்.

பிரபா அப்படிச் செய்திருக்கமாட்டார், அப்படி சீமானின் பெறுதி தெரியாத ஆளில்லை அவர் என விளங்கப் படுத்திவிட்டு வந்தேன்.

ஆனால் இப்படி இன்னும் எத்தனை தமிழக மக்கள் மத்தியில் சீமானின் பேச்சு, எமது போராட்டம், புலிகள், பிரபா பற்றிய எதிர் மறை கருத்தை விதைக்கிறது என்பது நம் எல்லாரினதும் கவனத்துக்குரியது.

இப்படி செய்யும் படி ரோ சீமானை ஏவுவதாயும் இருக்க கூடும்.

இதை சொன்ன‌வ‌ர் எந்த‌ க‌ட்சியை சேர்ந்த‌வ‌ர் , 

சீமான் ரோவின் ஆளும் கிடையாது உள‌வுத்துறையின் ஆளும் கிடையாது , 2009ம் ஆண்டு இருந்த‌ சீமான் தான் இப்ப‌ , சீமான் வெறும் பைய‌ன் என்று சொல்லுப‌வ‌ர்க‌ள் ஏன் க‌த‌றின‌ம் அவ‌ர‌ க‌ண்டு , அவ‌ர‌ அவ‌ர் பாட்டில‌ விட‌ வேண்டிய‌து தானே , 

மாவீர‌ர் மீது உறுதிமொழி எடுத்து விட்டு தான் த‌மிழ் நாட்டில் ஒவ்வொரு தொகுதியிலும் கிளை திற‌க்கின‌ம் , 

அடுத்த‌வ‌ன் ஆயிர‌ம் சொல்லுவான் அதை எல்லாம் ந‌ம்புவ‌தா 

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, goshan_che said:

சீமானை பற்றி போதியளவு எழுதியாகிவிட்டது. எனவே அதை கடந்து போகிறேன்.

ஆனால் நேற்று இதை ஒரு இந்திய நண்பரிடம் சிலாகித்த போது, அவர் சொன்னார்:

”சீமான் ஒரு வெறும் பயல் என்பது எனக்கே தெரிகிறது, பிரபாகரனை சந்தித்த போது சீமான் ஒரு ரெண்டு படம் எடுத்த பையன். அவருக்கு போய் பிரபாகரன் இவ்வளவு முக்கியதுவம் கொடுத்தார், ஒரு போராளியை, கடும் சண்டை ஆளணி பற்றாக்குறையின் மத்தியிலும் இப்படி வீணடித்தார் எனும் போது, பிரபாகரனின் ஆளுமை நிர்வாகத் திறன் பற்றிய என் மேலான மதிப்பீடு தகர்கிறது” என்றார்.

பிரபா அப்படிச் செய்திருக்கமாட்டார், அப்படி சீமானின் பெறுதி தெரியாத ஆளில்லை அவர் என விளங்கப் படுத்திவிட்டு வந்தேன்.

ஆனால் இப்படி இன்னும் எத்தனை தமிழக மக்கள் மத்தியில் சீமானின் பேச்சு, எமது போராட்டம், புலிகள், பிரபா பற்றிய எதிர் மறை கருத்தை விதைக்கிறது என்பது நம் எல்லாரினதும் கவனத்துக்குரியது.

இப்படி செய்யும் படி ரோ சீமானை ஏவுவதாயும் இருக்க கூடும்.

எல்லாம் பார்ப்பவனின்  பார்வையில் இருக்கிறது.

மலையடி ஓரமாக ஒரு கல்லு கிடக்கிறது அதை ஒரு சிற்பி எடுத்து நடராஜர் போல 
சிலை செதுக்கிறான் .... அதை கொண்டு சென்று சிதம்பரம் கோவிலில் வைக்கிறார்கள் 
இன்று கோடி கணக்கானவர்கள் அந்த கல்லை கண்டு அருள் பெறுவதுக்காக வரிசையாக 
நிற்கின்றார்கள் தினமும். சிற்பியின் உளி கல்லின் சில பாகங்களை அகற்றியதை தவிர 
கல்லில் வேறு எந்த மாற்றமும் இன்றுவரை இல்லை அதன் மீதி கற்கள் எல்லாம் அதே தண்மையுடன் 
இன்றும் ஒரு மலையடி வாரத்தில் கிடக்கலாம். ஆனால் இன்று சிதம்பரம் செல்லும் பலர் திரும்பி வந்து தமது வாழ்வை மாற்றி இருக்கிறார்கள் எதோ ஒரு அருள் சக்தி கிடைத்தாக உணர்ந்துகொள்கிறார்கள். சிதம்பரம் சென்ற ஒருவர் எமக்கு நாயன்மாரில் ஒருவராக இருக்கிறார். நீங்கள் கல்லின் தன்மையை பற்றியே பேசுகிறீர்கள். நீங்கள் சொல்வது உண்மைதான் கல்லின் தன்மை பக்கதர்கள் வந்துபோவாதல் எந்த மாறுதலையும் பெறவில்லை. அது முன்பு எவ்வாறு இருந்ததோ இப்போதும் அவ்வாறே இருக்கிறது.

இங்கு மேலைநாடுகளில்  அடிக்கடி மோட்டிவேஷனல் ஸ்பீக் என்று நடக்கும் நீங்களும் 
சிலதுக்கு கட்டாயம் சென்று இருப்பீர்கள் நானும் சென்று இருக்கிறேன். முன்னைநாள் ஜனாதிபதிகள் 
பில்லியனர்கள்  அவ்வாறு எதையாவது சாதித்தவர்கள் வந்து வெறும் 10-15 நிமிடம் பேசுவார்கள் 
அதுக்கு சென்ற பலர் அன்றில் இருந்து தமது வாழ்வை மாற்றி பல ஆயிரக்காணோர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்ருக்கிறார்கள். இதை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு வெறும் 10 நிமிட பேச்சுதான் .
ஆனால் அதுக்கு $1000-1500 வரை டிக்கெட் வாங்கி உள்ளே போனவன் பார்வை அது அல்ல. அவனுடைய கவனம் எல்லாம்  எதோ ஒரு மந்திரத்தையையோ தந்திரத்தையோ நான் முன்னேறுவதுக்காக இவர் சொல்லப்போகிறார்  என்ற கவனம் மட்டுமே இருக்கும் .....அதை அவன் வெறும் 10 நிமிடமாக பார்ப்பதில்லை.
அதிலும் விட மிக அழகாக அதே விடயத்தை வெளியிலே பலர் சொல்லியிருப்பான்  ஆனால் சிலருக்கு  அது தீயாக  பற்றிக்கொள்கிறது.  பல பணக்காரர்கள் பிரபலமான பணக்காரர்களுடன் சும்மா ஒரு 30 நிமிட லஞ்ச் சாப்பிடுவதுக்கு  $50000 - ஒரு லட்ஷம் வரை கூட காசு கட்டி போகிறார்கள் அந்த 30 நிமிடத்தில் பேசமுடியாத  விடயங்களை  கூட அதே பிரபல்யம் புத்தகமாக மிக விளக்கமாக எழுதி விட்டிருப்பார்கள். நான் இவருடன்  லஞ்ச் சாப்பிடடேன்   என்ற ஒரு தகுதியை வைத்துக்கொண்டே மேலே மேலே முன்னேறிய பலர் எங்கும்  இருக்கிறார்கள். அதுக்காக அந்த பிரபலம் தனது வேலையை விட்டுவிட்டு இவருடன் சாப்பிட்டு கூத்தடித்ததாக  அது பொருள்படுமா? 

பிரபாகரனுடன் கூடவே இருந்த ஒருவர் எனக்கு தெரிய இன்று சுவிஸ் நாட்டில் இருக்கிறார் 
இவர்கள் ஒவ்வரு நாளும் பிரபகரனை பார்த்தவர்கள். ஆனால் இன்று எம்மைப்போல சாதாரண 
ஒரு புலம்பெயர் அகதியாக இன்று இருக்கிறார். இவ்வாறுதான் எல்லோரும் இருக்கவேண்டுமா?
ஒரு நாளில் பார்த்த சீமான் பிராபகரனை தமிழகத்த்தின் பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சென்று சேர்த்து இருக்கிறான். பிரபாகரனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள் என்பதுதான் உங்களில் மாறுதலை கொண்டுவருவது தவிர  ..... பிராபகரன் மாறுவதில்லை பிரபாகரன் ஒரு பிரபாகரன்தான். 

உங்கள் இந்திய நண்பருக்கு சொல்லுங்கள் ஆப்பிள் கீழே வீழும்போது எடுத்து உண்டுகொண்டு இருந்த 
உலகில்தான்  நியூட்டனும் இருந்தான் என்று. அவன் உணவை தாண்டி ஏன் வீழ்கிறது? என்ற கேள்விக்கு சென்றாதல்  இன்றும் உலகில் வாழ்கிறான் இனியும் வாழ்வான். நியுடனுக்காக ஆப்பிள் மாறியதில்லை 
ஆப்பிள் ஆப்பிளாகவே இருந்தது. மாறியது ஒரு மனிதனின் பார்வையும் சிந்தனையும் என்று சொல்லுங்கள். 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
9 minutes ago, நிழலி said:

கருத்தாடல்களில் கருத்தியல் பஞ்சம் வரும் போது அதற்குள் புலிகளையும் இழுத்து விட்டுவிட்டு அனுதாபம் தேடும் வங்குரோத்தனப் போக்கில் தான் உங்கள் பதிலும் அமைந்து இருக்கின்றது.

புலிகளை எங்கே அவர்  இழுத்தார்? மேற்கோள் காட்ட முடியுமா?
தலைப்பும் கருத்துக்களும் ஈழத்தமிழர் தமது வேலையை பார்ப்பார்கள் சீமானுக்கு 
இது தேவை இல்லாத வேலை என்பது போன்றே செல்கிறது அங்குதான் புலிகள் வருகிறார்கள். 

கருத்தை கருத்தால் எதிர் கொள்ள முடியாமல்  தேனீயையும் என்னையும் சமப்படுத்துவதன் மூலம் கைதட்டல்கள் மட்டுமே வாங்க முடியும். பொய் பித்தலாட்டம் எனும் சொற்களை தவிர்த்து விட்டு பாசிசம் என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் தேர்ந்தெடுத்து எதிர்வினையாற்ற முனைகின்றீர்கள்.

பாசிசம் என்று எழுதியவரே நீங்கள்தானே? புலிகள் பாசிஸ்ட்டுக்கள் என்று தேனீ போன்ற ஈசல்கள் எழுதியதுபோல நீங்களும் எழுதுகிறீர்கள் என்றுதானே எழுதினார். இங்கே கருத்து கருத்தல்தால்தான் எதிர்கொள்ள பட்டு இருக்கிறது. இப்போது சீமனிசம் என்பது பாசிசம்தான் என்று நிருப வேண்டியதுதான் உங்கள் கடமை. நீங்கள்தான் கருத்தை கருத்தால் எதிர்கொள்ளவில்லை. நீங்கள் எழுதியதையே நீங்களே பொய் என்கிறீர்கள். 

அத்துடன் புலிகளையும் சீமானையும் ஒரே தட்டில் வைத்து ஒப்பிடுகின்றதன் மூலம் புலிகளையும் அவர்களின் தியாகங்களையும் மலினப்படுத்திக் கொண்டு செல்கின்றீர்கள்.

புலிகளையும் சீமானையும்  சீமானே ஒரேதட்டில் வைக்க ஒரு போதும் முயன்றதில்லை 
அந்த இமயங்கள் சாதித்ததில் ஒரு பகுதி என்றாலும் எம்மால் சாதிக்க முடியாதா?  என்ற ஆதங்கம்தான் 
சீமானே வெளிப்படுத்துவது. முதலில் பாசிசம் என்று சொன்னதுபோல இதையும் கலந்துவிடுகிறீர்கள் 

இன்னொரு திரியில் உங்களின் கருத்தை quote பண்ணி சீமானின் தமிழ் தேசியம் என்பது பார்ப்பனியத்துக்கு சமாந்தரமாக பயணிக்கும், தமிழ் தேசியத்தை மலினப்படுத்தி வெற்று கோசமாக்கும் அரசியல் என பதிலளித்து இருந்தேன். வசதிக்காக அதற்கு பதில் கொடுக்காமல் இதற்கு பதில் கொடுத்துள்ளீர்கள்.

நீங்கள் என்ன எழுதினீர்கள் எழுதுகிறீர்கள் என்பது ஆதாரத்தின் அடிப்படையில் இருக்கிறதா?
பார்ப்பனீயம் என்பது தான் மேலானவன்  மற்றவன் எல்லாம் கீழ் ஆனவன் என்பது.  சீமானின் தமிழ்த்தேசியம் 
என்பது சுயநிர்ணயம் சார்ந்தத. தமிழா நீயும் மற்ற மனிதருக்கு சமன் ஆனவன் என்பது. இதுக்கும் பார்ப்பினியத்துக்கும் எங்கு சாமந்தரம் வருகிறது? பார்பனீயமும்  சீமானின் தமிழ்தேசியமும் சமாந்தரமாகும் இடத்தை கொஞ்சம் விளக்கமாக எழுத்துங்களேன். 

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து வீழ்ந்த பின் அங்குள்ள தலித்துகள் மீது ஏவப்பட்ட வன்முறைக்கான அடிப்படை சாதியம். அந்த சாதியம் இந்துத்துவத்தில் இருந்தும் பார்ப்பனியத்திலும் இருந்து தான் மூர்க்கம் கொள்கின்றது. சீமான் செய்வது அந்த பார்ப்பனியத்தை எதிர்க்கமால் வெறும் திராவிடத்தை எதிர்த்து செய்யும் வெற்று கோச அரசியல்.

மீண்டும் மீண்டும் நிஜ களத்துக்கு மாறாக தேனீ சாணி போன்ற எழுத்துகளைத்தான் எழுதுகிறீர்கள் 
தமிழன் தமிழனாக தலை நிமிர்ந்தால் பார்ப்பனியம் தானாகவே அழிந்துபோகும். நீங்கள் குனியும்வரை 
வருபவன் போகிறவன் எல்லோரும்தான் குட்டி கொண்டு இருப்பான். தனி தனியாக எதிர்த்து நேரத்தை வீணாக்காது நீயும் நிமிர்ந்து நில் யார் குட்டுகிறான் என்று பின்பு பார் என்பதே சீமானின் கொள்கை. 
அடுத்தவன் அராஜகம் அளவுக்கு நாம் இறங்க வேண்டியதில்லை நாம் நாமாக இருப்போம் என்பதுதான் சீமானின் நிலைப்பாடு. திராவிடம் என்பது இல்லாத மாயை தமிழர்கள் மீது போர்த்தியிருக்கும் ஒரு பொய் தமிழனை தமிழனாக தலை நிமிராமல் வைத்திருப்பது இந்த போலி திராவிடம்தான். அது இல்லை என்று நீங்கள் சொன்னால்  ..... திராவிடம் மெய்யானது .. அதுதான் தமிழரை வாழவைக்கும் ... எவ்வாறு வாழவைக்கும் என்று நீங்கள் எழுத வேண்டும்.  

தமிழ் நாட்டில் இன்றும் பிஜேபி போன்ற வகுப்புவாதக் கட்சி தலையெடுக்க முடியாமல் இருப்பதன் காரணம் இன்றும் அங்கு இருக்கும் திராவிட கொள்கையின் செல்வாக்கினால் மட்டுமே. அத்துடன் வட மானிலங்களில் இடம்பெறும் மதச் சண்டை, தலித்துகள் மீதான நிறுவனப்படுத்தப்பட்ட வன்முறை, சிறுபான்மையினர் மீதான வன்முறை போன்றவை தமிழகத்தில் நிகழாமைக்கு அடிப்படை காரணம் பெரியாரின் செல்வாக்கும் திராவிட கொள்கையுயே.

திராவிடம் என்பதே மாயை எனும்போது அதுக்கு ஒரு கொள்கை என்று என்ன இருக்கப்போகிறது?
அதை திராவிடர் என்று சொல்லக்கூடிய மலையாளி ஆந்திர கன்னடன் ஏற்றுக்கொள்கிறானா? 
இதில் ஓரளவு ஏற்றுக்கொள்ள கூடிய உண்மை இருக்கிறது. ஆனாலும் இது விரிவான வாதத்துக்கு உட்படுத்த வேண்டியதும் கூடியதும் ஆகும். தமிழக மேடையில் இதுவரை இவர்கள்தான் ஆடினார்கள் ஆதலால்தான் சுந்தர்பிச்சை கூகிளுக்கு சி ஈ ஓ ஆனார் என்று எல்லாம் சொல்ல முடியாது. ஆனால் கல்வி தராதரம் வேறு பட்டு இருப்பதுக்கு இவர்களின் கொள்கை வகுப்பு காரணமாக இருப்பின் அது நல்ல விடயமும் உண்மையும் ஆகும். சமகாலத்தில் தமிழ்நாடு சூறையாட படுகிறது இதை திராவிடம் என்ற மாயை எவ்வாறு காக்கும்? தமிழன் நான் தமிழன் என்று சொல்வதில் திராவிடத்துக்கு என்ன வில்லங்கம்? மலையாளி தெலுங்கன் கன்னடன் எல்லாம் தான் தான் என்றுதானே சொல்கிறான்? 

திமுக / அதிமுக போன்ற திராவிடக் கட்சிகள் ஊழலிலும், பதவி வெறியிலும் திளைத்து கொள்ளை அடித்தமையை வைத்துக் கொண்டு திராவிடக் கொள்கை முற்றிலும் பிழை என்று சொல்லி அதற்கு பதிலாக தனித் தமிழர் எனும் பாசிச கொள்கையை பொய்யும் பிரட்டும் பித்தலாட்டம் ஊடாக முன் வைப்பவராகவே சீமானை பார்க்கின்றேன். சீமானின் அரசியல் தமிழ் நாட்டை பார்ப்பனியத்துக்கு தாரை வார்க்கும் அரசியல். பிஜேபி தான் காலூன்ற சீமானை கண்டும் காணமல் இருப்பதன் காரணமும் இதுவே.

நிழலி என்று நீங்கள் உங்களை சொல்வதில் என்ன பாசிசம் இருக்கிறது?
என்ன பொய் இருக்கிறது? என்ன பித்தலாட்டம் இருக்கிறது? கொஞ்சம் விளக்கமாக எழுதுவீர்களா? 
நாங்கள் கடந்த 6000 வருடமாக தமிழராகவே இருந்து இருக்கிறோம் ..... இனியும் இருப்பதில் என்ன பாசிசம்?தமிழர் என்பதுதான் பாசிசமா?  "சீமானின் அரசியல் பார்பனீயத்துக்கு தமிழ் நாட்டை தாரைவார்க்கும்" எவ்வாறு என்று நீங்கள்தான் விளக்க வேண்டும். தமிழனின் முதுகில் ஏறி இருப்பவனை தனி தனியே சுட்டிடாது தமிழனை தமிழனே ஆளவேண்டும் என்பதுதான் சீமானின் கொள்கை. தமிழன் தலை  நிமிரும்போது  முதுகில் ஏறி இருந்த தெலுங்கர்கள்  இந்தி காரர்கள்  பன்னாட்டு நிறுவனர்கள்  பார்ப்பான் என்று எல்லோருமே இறங்கி கொள்கிறார்கள் இதில் எப்படி பார்ப்பான் மட்டும் தப்பிப்பான்? நீங்கள்தான் சொல்ல வேண்டும் 

//இனமாக மேலெழுவதற்கு எது கிடைக்கின்றதோ அது பயன்படும் வரை அதைப்பிடித்து மேலேள வேண்டியதுதான்/ / என நினைப்பதே மிக பலவீனமான ஒரு கருத்தியல். மேலே எழும்புவதற்கு எது உகந்தது, எது இலக்கை அடைய வைப்பது, எது இறுதிவரைக்கும் தாங்கிப் பிடிக்க கூடியது என ஆராயாமல் மிக இலகுவில் உடைந்து விடுவதுடன் முன்னைவிட பலகீனமான நிலைக்கு தம்மை இட்டுச் செல்லும் ஒன்றை கெட்டியாக பிடித்துக் கொண்டு ஒரு போதும் எழும்பிவிட முடியாது. அது முன்னிருந்த நிலையை விட கீழான நிலைக்கு இறுதியில் இட்டுச் செல்லும். சீமானும் அவ்வாறான ஒன்றுதான். ஏனைய பல மானிலங்களை விட பல விதங்களில் மேன்மை நிலையில் இருக்கும் தமிழகத்தின் மக்கள் நிச்சயம் பலகீனமான ஒன்றை பிடித்து கீழே விழக் கூடியவர்கள் அல்ல என திடமாக நம்புகின்றேன்.

உங்களுக்கு அவர் எழுதியது விளங்கவில்லை அல்லது அதை திரிக்க முற்படுகிறீர்கள் என்று எண்ணுகிறேன்."முன்னேறுவதுக்கு எது உகந்ததோ"  அதை பற்றும்போதும் முன்னேறித்தான் இருப்பீர்கள். இங்கு பின்னேறுவதுக்கு இடமில்லை அதுதான் அழுத்தமாக முன்னேறுவது என்று எழுதி இருக்கிறது. சீமானை பார்த்தாலே தமிழ் அழியும் எனக்கு தமிழ் வருக்குதில்லை என்று என்ன வேண்டுமானலும் நீங்கள் எழுதலாம்.அது எவ்வாறு என்பதை எழுதினால்தான் அது பற்றி விவாதிக்கலாம். நீங்கள் தமிழரின் வரலாறை எங்கு இருந்து தொடங்குகிறீர்கள்? கடந்த 1000 வருடமாக தமிழன் இழந்துகொண்டுதான் வருகிறான் ..... அதை சோமாலியாவுடன் ஒப்பிட்டு முன்னேறி இருக்கிறான் என்று எதை வைத்து நிறுவுகிறீர்கள்? தமிழர்கள் எதை இழந்துகொண்டு வருகிறார்கள்  ....... இதில் இருந்து தப்பிக்க என்ன வலி என்பதுதான் விவாதம். மற்றவன் எவ்வளவு தாழ்வு நிலையில் இருக்கிறான் என்பது எமக்கு தேவை இல்லாதது.   

மற்ற திரியில் உங்களுக்கு வைத்த, நீங்கள் வசதியாக மறந்து தவிர்த்த  என் கருத்து

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

மருது,

நான் பொதுவாக ஒருவரது கருத்தை கோட் பண்ணி எழுதினால், அவரிடம் இருந்து வரும் பதிலுக்கு மாத்திரமே பதில் கருத்து எழுதுவது வழக்கம். அவருக்காக இன்னொருவர் வந்து பதில் எழுதும் போது அதற்கு பதில் எழுதுவதில்லை. ஆயினும் உங்களின் பல கேள்விகளில் இரண்டுக்கு மாத்திரம் பதில் சொல்கின்றேன்.

சீமானின் அரசியல் பாசிசம்  என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. தமிழ் நாட்டை பச்சைத் தமிழன் மட்டுமே ஆள வேண்டும் என்றும் அங்கு நூற்றுக்கணக்கான வருடங்களாக வாழ்ந்து வருகின்றவர்களுக்கு அந்த உரிமை இல்லை என்பது பாசிசத்தின் முக்கிய அம்சமாக பார்க்கின்றேன். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் உள்ள வேறு தேசங்களில் இருந்து வந்தவர்களின் இரண்டாம் மூன்றாம் தலைமுறைகள் அதிகாரங்களை நோக்கி சனனாயக ரீதியில் முன்னேறிக் கொண்டு இருக்கும் போது தமிழகத்தில் வந்து குடியேறி நூறு வருடங்களுக்கு மேல் வாழ்கின்றவர்களை வந்தேறு குடிகள் என்று சொல்லி பச்சைத் தமிழன் தான் ஆள வேண்டும் என்பது பாசிசம். சீமான் தன் ஏனைய பொய் பிரட்டு பித்தலாட்டங்களுடன் இந்த பாசிசத்தையும் சேர்த்தே அரசியல் செய்கின்றார்.

இதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால் இது என் கருத்து. சீமான் பொய் புரட்டு சொல்லி பாசிசம் வளர்க்கின்றார் என்பது என் கருத்து. இந்த கருத்தியலுக்கு ஏற்றவாறுதான் அன்றில் இருந்து இன்று வரைக்கும் செயலாற்றுகின்றார். இதை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் பிரச்சனை / உரிமை

மற்றது தமிழ் நாடு ஏனைய பல மானிலங்களை விட பல விடயங்களில் நன்றாக இருக்கு என்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. வட மானில பத்திரிகையான இந்தியா டுடே கூட இரண்டு வாரங்களுக்கு முன் தமிழகத்தை முன்னேறிய மானிலங்களில் முன்நிலையில் இருக்கும் மானிலமாக தெரிவு செய்து இருந்தது. தமிழக அரசியல்வாதிகளின் கோமாளித்தனங்களையும் மீறி தமிழகம் முன்னேறிக் கொண்டு தான் இருக்கின்றது. மதக்கலவரம், சாதிக்கலவரம், தலித்துகள் மீதான வன்முறை என்பன மிகக் குறைவாக இடம்பெறும் மானிலமாக மட்டுமன்றி பொருளாதார ரீதியிலும் மகாராஷ்டிராவுக்கு (410 பில்லியன் அமெரிக்க டொலர்) அடுத்தபடியாக முன்னேறி (230 பில்லியன் அமெரிக்க டொலர்) இரண்டாம் நிலையில் இருக்கும் மானிலமாகவே இருக்கின்றது.

நான் தமிழகத்தின் முன்னேற்றத்தினை இந்தியாவின் ஏனைய மானிலங்களுடன் ஒப்பிட்டு பார்க்கின்றேன். நீங்கள் கலிபோர்னியா போன்ற வட அமெரிக்க மானிலங்களுடன் ஒப்பிட்டு பார்க்கின்றீர்கள் போலும்

டொட்

 • Like 3
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, நிழலி said:

கருத்தாடல்களில் கருத்தியல் பஞ்சம் வரும் போது அதற்குள் புலிகளையும் இழுத்து விட்டுவிட்டு அனுதாபம் தேடும் வங்குரோத்தனப் போக்கில் தான் உங்கள் பதிலும் அமைந்து இருக்கின்றது. கருத்தை கருத்தால் எதிர் கொள்ள முடியாமல்  தேனீயையும் என்னையும் சமப்படுத்துவதன் மூலம் கைதட்டல்கள் மட்டுமே வாங்க முடியும். பொய் பித்தலாட்டம் எனும் சொற்களை தவிர்த்து விட்டு பாசிசம் என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் தேர்ந்தெடுத்து எதிர்வினையாற்ற முனைகின்றீர்கள்.

அத்துடன் புலிகளையும் சீமானையும் ஒரே தட்டில் வைத்து ஒப்பிடுகின்றதன் மூலம் புலிகளையும் அவர்களின் தியாகங்களையும் மலினப்படுத்திக் கொண்டு செல்கின்றீர்கள்.

இன்னொரு திரியில் உங்களின் கருத்தை quote பண்ணி சீமானின் தமிழ் தேசியம் என்பது பார்ப்பனியத்துக்கு சமாந்தரமாக பயணிக்கும், தமிழ் தேசியத்தை மலினப்படுத்தி வெற்று கோசமாக்கும் அரசியல் என பதிலளித்து இருந்தேன். வசதிக்காக அதற்கு பதில் கொடுக்காமல் இதற்கு பதில் கொடுத்துள்ளீர்கள்.

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து வீழ்ந்த பின் அங்குள்ள தலித்துகள் மீது ஏவப்பட்ட வன்முறைக்கான அடிப்படை சாதியம். அந்த சாதியம் இந்துத்துவத்தில் இருந்தும் பார்ப்பனியத்திலும் இருந்து தான் மூர்க்கம் கொள்கின்றது. சீமான் செய்வது அந்த பார்ப்பனியத்தை எதிர்க்கமால் வெறும் திராவிடத்தை எதிர்த்து செய்யும் வெற்று கோச அரசியல். தமிழ் நாட்டில் இன்றும் பிஜேபி போன்ற வகுப்புவாதக் கட்சி தலையெடுக்க முடியாமல் இருப்பதன் காரணம் இன்றும் அங்கு இருக்கும் திராவிட கொள்கையின் செல்வாக்கினால் மட்டுமே. அத்துடன் வட மானிலங்களில் இடம்பெறும் மதச் சண்டை, தலித்துகள் மீதான நிறுவனப்படுத்தப்பட்ட வன்முறை, சிறுபான்மையினர் மீதான வன்முறை போன்றவை தமிழகத்தில் நிகழாமைக்கு அடிப்படை காரணம் பெரியாரின் செல்வாக்கும் திராவிட கொள்கையுயே. திமுக / அதிமுக போன்ற திராவிடக் கட்சிகள் ஊழலிலும், பதவி வெறியிலும் திளைத்து கொள்ளை அடித்தமையை வைத்துக் கொண்டு திராவிடக் கொள்கை முற்றிலும் பிழை என்று சொல்லி அதற்கு பதிலாக தனித் தமிழர் எனும் பாசிச கொள்கையை பொய்யும் பிரட்டும் பித்தலாட்டம் ஊடாக முன் வைப்பவராகவே சீமானை பார்க்கின்றேன். சீமானின் அரசியல் தமிழ் நாட்டை பார்ப்பனியத்துக்கு தாரை வார்க்கும் அரசியல். பிஜேபி தான் காலூன்ற சீமானை கண்டும் காணமல் இருப்பதன் காரணமும் இதுவே.

//இனமாக மேலெழுவதற்கு எது கிடைக்கின்றதோ அது பயன்படும் வரை அதைப்பிடித்து மேலேள வேண்டியதுதான்/ / என நினைப்பதே மிக பலவீனமான ஒரு கருத்தியல். மேலே எழும்புவதற்கு எது உகந்தது, எது இலக்கை அடைய வைப்பது, எது இறுதிவரைக்கும் தாங்கிப் பிடிக்க கூடியது என ஆராயாமல் மிக இலகுவில் உடைந்து விடுவதுடன் முன்னைவிட பலகீனமான நிலைக்கு தம்மை இட்டுச் செல்லும் ஒன்றை கெட்டியாக பிடித்துக் கொண்டு ஒரு போதும் எழும்பிவிட முடியாது. அது முன்னிருந்த நிலையை விட கீழான நிலைக்கு இறுதியில் இட்டுச் செல்லும். சீமானும் அவ்வாறான ஒன்றுதான். ஏனைய பல மானிலங்களை விட பல விதங்களில் மேன்மை நிலையில் இருக்கும் தமிழகத்தின் மக்கள் நிச்சயம் பலகீனமான ஒன்றை பிடித்து கீழே விழக் கூடியவர்கள் அல்ல என திடமாக நம்புகின்றேன்.

மற்ற திரியில் உங்களுக்கு வைத்த, நீங்கள் வசதியாக மறந்து தவிர்த்த  என் கருத்து

நிழ‌லி சார்
இந்த‌ நூற்றாண்டில் ( ஜ‌யா ias sagayam போல்  த‌மிழின‌த்தில் நேர்மையான‌ ம‌னித‌ர்க‌ள்  இல்லை ) ச‌காய‌ம் ஜ‌யா அண்ண‌ன் சீமானுட‌ன் ந‌ல்ல‌ உற‌வை பேனி வ‌ருகிறார் , த‌மிழ் நாட்டு இளைஞ‌ர்க‌ள் ம‌த்தியில் ஜ‌யா ச‌காய‌த்துக்கு ந‌ல்ல‌ பெய‌ரும் புக‌ழும் இருக்கு , ஜ‌யா ச‌க‌யாம் இதுவ‌ரை சொன்ன‌து இல்லை சீமான் பொய் சொல்லுகிறார்  பித்த‌லாட்ட‌ம் ப‌ண்ணுகிறார் என்று , அண்ண‌ன் சீமானின் அர‌சிய‌லை பாராட்டி ஊக்க‌மும் குடுத்த‌வ‌ர்  ஜ‌யா ச‌க‌யாம் , ஜ‌யா ச‌காய‌த்தின் ம‌க‌னுக்கு ( திலீப‌ன் என்று பெய‌ர் வைத்த‌வ‌ர் , பெய‌ர் ஏன் த‌ன் ம‌க‌னுக்கு வைச்சேன் என்ற‌துக்கும் அருமையான‌ விள‌க்க‌ம் குடுத்த‌வ‌ர் , எம் இன‌த்து அகிம்சை வீர‌னின் பெய‌ரை த‌ன் ம‌க‌னுக்கு வைச்ச‌வ‌ர் , க‌ருணா
கேபி பத்மநாதன் தொட்டு எத்த‌னை பேர் எம் த‌லைவ‌ருக்கும் மாவீர‌ர்க‌ளுக்கும் துரோக‌ம் செய்த‌வை , ( ஏன் கூட‌ எழுதுவான் எங்க‌ட‌ த‌லைவ‌ருக்கு பின்னால‌ குத்தின‌ க‌ருனாவை யாழில் புக‌ழ் பாட‌ ஒரு சில‌ர் இருக்கின‌ம் , நீங்க‌ள் தானே த‌லைவ‌ர் மீதும் மாவீர‌ர்க‌ள் மீதும் ப‌ற்று கொண்ட‌ நீங்க‌ள் , இன‌த் துரோகி க‌ருணாவை புக‌ழ் பாடும் போது உங்க‌ள் இர‌த்த‌ம் கொதிக்க‌ வில்லையா 😠

என‌க்கும் பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்ட‌ தெரியும் ஆனால் நான் அந்த‌ வேலை செய்வ‌தில்லை 

சீமான் இந்த‌ 10 ஆண்டு எம் இன‌த்துக்காக‌ சிந்தின‌ வேர்வையில் நீங்க‌ள் சிறு துளி வேர்வை த‌ன்னும் சிந்தி இருக்க‌ மாட்டீங்க‌ள் , இது தான் நித‌ர்ச‌ன‌ உண்மையும் கூட‌   / 

ரிக்ராக்கில் அண்ண‌ன் சீமானின் பேச்சு முத‌ல் இட‌ம் பிடிச்ச‌து , கோடான‌ கோடி பேருக்கு தெரியும் சீமான் என்றால் யார் என்று , 

இப்ப‌டியே உங்க‌ளின் எழுத்து தொட‌ருமானால் , நீங்க‌ளும் கொத்துரொட்டி லிஸ்ரில் இட‌ம் பிடிப்பீங்க‌ள் 😁😂

அண்ண‌ன் சீமான் த‌லைவ‌ரையோ மாவீர‌ர்க‌ளையோ ஒரு போதும் விட்டு கொடுத்த‌து இல்லை கேவ‌ல‌ப் ப‌டுத்திய‌தும் இல்லை , 

உங்க‌ளால் துண்ட‌றிக்கை பார்க்காம‌ எம் இன‌ பிர‌ச்ச‌னை எம் அடுத்த‌ த‌லைமுறை பிள்ளைக‌ளின் எதிர் கால‌த்தை ப‌ற்றி மேடையில் 4லு ம‌ணித்தியாள‌த்துக்கு மேல் பேச‌ முடியுமா , 

ஏன் கூட‌ குத்தி முறிவான் , ( சுமேஸ் அண்ணாவுட‌ன் க‌தைத்து விட்டு என‌து ம‌ற்ற‌ கைபேசியில் இருந்து உங்க‌ளையும் அண்ண‌ன் சீமானையும் நான் க‌தைக்க‌ வைக்கிறேன் , நீங்க‌ள் க‌தைக்கும் போது நானும் சுமேஸ் அண்ணாவும் எங்க‌ள‌து போனில் இருந்து கேட்டு கொண்டு இருப்போம் , என‌து ம‌ற்ற‌ போனில்  இருந்து நாலு பேர் ஒரு லையினில் க‌தைக்க‌லாம், அண்ண‌ன் சீமான் சொல்லுவ‌து பொய் பித்த‌லாட்ட‌ம் என்று எழுதுறீங்க‌ளே , அதை போனுக்காள் நேராக‌ சொல்லுங்கோ , அண்ண‌ன் சீமான் அத‌ற்கு என்ன‌ ப‌தில் சொல்லுகிறார் என்ற‌தையும் பாப்போம் ,

என‌து ச‌வாலுக்கு நீங்க‌ள் த‌யார் என்றால் நானும் தயார் ,விவாத‌த்துக்கு நீங்க‌ள் த‌யார் என்றால் உங்க‌ளின் கைபேசி ந‌ம்ப‌ரை த‌னி ம‌ட‌லில் அனுப்ப‌வும் 

ந‌ன்றி 

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, Maharajah said:

சீமானின் பேச்சுக்களில் பிழை இருப்பின் அதனை பண்பாக சுட்டிக்காட்ட வேண்டும்.  மாறாக சேறடித்தல் ஒரு தகுதிவாய்ந்தவனின் செயல் அல்ல.

நாங்கள் ஒன்றை இலகுவாக மறந்துவிடுகின்றோம். இங்கு யாரும்  சீமானை பிழைவிடாத ஒருவர் என்று கூறவில்லை.  ஆனால் சகட்டுமேனிக்கு வசைபாடுதல்,  தூற்ருதல் தவிர்க்கப்பட வேண்டும்.  

தற்போதைய சூழலில்,  தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் சார்பாக குரல் கொடுப்பவர்களில் சீமானும் திருமுருகனும் முக்கியமானவர்கள். இவர்களின் செயட்பாடுகள்தான் இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக, தமிழக மக்களுக்கு எப்போதும் எம்மை நினைவுபடுத்திக்கொண்டு இருக்கிறது.  இவர்களை நாங்கள் காயப்படுத்துவது எந்த அளவில் தகுதியான செயல் ?? 

நாங்கள் அவர்களை தூக்கிப் பிடிக்காவிட்டாலும்,  காயப்படுத்தாமல் இருக்கலாமல்லவா  ??? 

உங்களிட்ட என்ன பிடிச்சது என்றால் சீமான் புலிகளை அவமானப்படுத்தினதே உங்களுக்கு புரியலை என்றது தான்🤣...அவர் கதைச்சது கேவலமாய்ப் படேல்லை🤣...அவரை இங்க கழுவி ஊத்தும் போது உங்கள் மீசை துடிக்குதாக்கும்.🤣

Share this post

Link to post
Share on other sites
9 minutes ago, நிழலி said:

மருது,

நான் பொதுவாக ஒருவரது கருத்தை கோட் பண்ணி எழுதினால், அவரிடம் இருந்து வரும் பதிலுக்கு மாத்திரமே பதில் கருத்து எழுதுவது வழக்கம். அவருக்காக இன்னொருவர் வந்து பதில் எழுதும் போது அதற்கு பதில் எழுதுவதில்லை. ஆயினும் உங்களின் பல கேள்விகளில் இரண்டுக்கு மாத்திரம் பதில் சொல்கின்றேன்.

சீமானின் அரசியல் பாசிசம்  என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. தமிழ் நாட்டை பச்சைத் தமிழன் மட்டுமே ஆள வேண்டும் என்றும் அங்கு நூற்றுக்கணக்கான வருடங்களாக வாழ்ந்து வருகின்றவர்களுக்கு அந்த உரிமை இல்லை என்பது பாசிசத்தின் முக்கிய அம்சமாக பார்க்கின்றேன். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் உள்ள வேறு தேசங்களில் இருந்து வந்தவர்களின் இரண்டாம் மூன்றாம் தலைமுறைகள் அதிகாரங்களை நோக்கி சனனாயக ரீதியில் முன்னேறிக் கொண்டு இருக்கும் போது தமிழகத்தில் வந்து குடியேறி நூறு வருடங்களுக்கு மேல் வாழ்கின்றவர்களை வந்தேறு குடிகள் என்று சொல்லி பச்சைத் தமிழன் தான் ஆள வேண்டும் என்பது பாசிசம். சீமான் தன் ஏனைய பொய் பிரட்டு பித்தலாட்டங்களுடன் இந்த பாசிசத்தையும் சேர்த்தே அரசியல் செய்கின்றார்.

இதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால் இது என் கருத்து. சீமான் பொய் புரட்டு சொல்லி பாசிசம் வளர்க்கின்றார் என்பது என் கருத்து. இந்த கருத்தியலுக்கு ஏற்றவாறுதான் அன்றில் இருந்து இன்று வரைக்கும் செயலாற்றுகின்றார். இதை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் பிரச்சனை / உரிமை

மற்றது தமிழ் நாடு ஏனைய பல மானிலங்களை விட பல விடயங்களில் நன்றாக இருக்கு என்பதிலும் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. வட மானில பத்திரிகையான இந்தியா டுடே கூட இரண்டு வாரங்களுக்கு முன் தமிழகத்தை முன்னேறிய மானிலங்களில் முன்நிலையில் இருக்கும் மானிலமாக தெரிவு செய்து இருந்தது. தமிழக அரசியல்வாதிகளின் கோமாளித்தனங்களையும் மீறி தமிழகம் முன்னேறிக் கொண்டு தான் இருக்கின்றது. மதக்கலவரம், சாதிக்கலவரம், தலித்துகள் மீதான வன்முறை என்பன மிகக் குறைவாக இடம்பெறும் மானிலமாக மட்டுமன்றி பொருளாதார ரீதியிலும் மகாராஷ்டிராவுக்கு (410 பில்லியன் அமெரிக்க டொலர்) அடுத்தபடியாக முன்னேறி (230 பில்லியன் அமெரிக்க டொலர்) இரண்டாம் நிலையில் இருக்கும் மானிலமாகவே இருக்கின்றது.

நான் தமிழகத்தின் முன்னேற்றத்தினை இந்தியாவின் ஏனைய மானிலங்களுடன் ஒப்பிட்டு பார்க்கின்றேன். நீங்கள் கலிபோர்னியா போன்ற வட அமெரிக்க மானிலங்களுடன் ஒப்பிட்டு பார்க்கின்றீர்கள் போலும்

டொட்

இதில் எனக்கும் நிறைய முரண்பாடு இருக்கிறது ... அதே நேரம் நிஜ உலகிலும் நிறைய முரண்பாடு இருக்கிறது.எமது தமிழ்மொழிக்கு வெளியில் இருந்து வந்த வீரமாமுனிவர் போன்றவர்களும் நிறைய உழைத்து இருக்கிறார்கள். இவையெல்லாம் எந்த கண்ணகில் சேரும் என்பதோடு. சோனியா பிரதமராக முடியாது  கோத்தபாய ஜனாதிபதியாக இருந்த தடைகள் என்று நிறைய இருக்கிறது. நான் நேற்றுதான் அமெரிக்கா வந்தேன் எனது பிள்ளை வேண்டுமானால் நாளை அமெரிக்க ஜனாதிபதியாக முடியும். அப்படி ஆக முடியாது என்பது எந்த அளவில் எனது பிள்ளையின் வாழ்வை சீரழிக்கும் என்ற கேள்விகளும் உண்டு. 
தமிழர்களை தமிழர்கள் ஆளவேண்டும் என்பதில் நிறைய உடன்பாடு உண்டு என்பதை விட உலகம் பூராக இதுதான் நடைமுறையில் இருக்கிறது. யார் தமிழர்? தமிழகம் வந்த மாற்று மாநிலத்தவர்கள் தங்களை எவ்வாறு அடையாளப்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்கு உள்ளானது. தமிழன் என்பது உணர்வுபூர்வமானதுதானே தவிர இதுக்கு ஒரு அளவு கோள் என்று ஒன்றும் இல்லை. சீமானும் இதைத்தான் சொல்கிறார் ... நடைமுறைக்கும் அதுதான் சாத்தியம். சட்டமுறைமையில் சீமான் சொல்லுபவர்கள்தான் தமிழர்கள் என்று எழுத முடியாது. தமிழ் உணர்வாளர்களை முன்னே வாருங்கள் என்பதுதான் சீமானின் கோசம் ... உங்களால்தான் தமிழ் நாட்டை காப்பற்ற முடியும் என்பதுதான் அவரது கோசம். இதுக்குள் ஒரு எதிர்மறை கருத்தையும் ஒரு அதிகார தொனியையும் சீமானுக்கு எதிரானவர்கள்தான் தோற்றுவிக்கிறார்கள். 

கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பல கேள்விக்குளை எனக்குள் உண்டுபண்ணியது  எதிராக்கால உலகம் பற்றி சிந்திக்கும்  யாவருக்கும் அந்த கேள்விகள் வந்திருக்கும். டிரம் வெறும் வெள்ளை இன துவேஷ வெறியை தூண்டித்தான்  ஜனாதிபதியானார். இன துவேஷம் என்பது உலகு எங்கும் இருக்கிறது வாழ்கிறது என்பதுக்கு கடந்த  இந்திய இந்துவாத்வா வெற்றியும்  இலங்கை கோத்தாவின் வெற்றியும் கூட ஆதாரங்கள். ஆகவே தமிழர்களின்  எதிர்கால வெற்றி என்பது எங்கு இருக்கிறது? இதுக்கான பதிலை எழுத்தில் என்னவாக வேண்டுமானாலும்  எழுதிவிட்டு போகலாம். நிஜத்தில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதுதான் எனது கேள்வி ?  வெறும் சீமானிய எதிர்ப்பை விட்டு உங்களிடம் இருந்து ஒரு ஆக்கபூர்வமான பதிலை எதிர்பார்க்கிறேன். சீமான் மீது இங்கு பலரும் சேறு அடித்து இருக்கிறார்கள் .....அவற்றை வெறும் சேறாகவே நான் பார்க்கிறேன். உங்கள் கருத்துக்கு நான் பதில் எழுதியது ஒரு ஆக்கபூர்வமான விவாத்துக்ககவே. 
சீமானை எதிர்ப்பதில் என்ன வெற்றி இருக்க போகிறது? சீமானை ஆதரிப்பதால் என்ன தோல்வி வர போகிறது? சீமானை அவரின் குறைகளை போக்கி எம்மால் ஒரு வெற்றி காண முடியாதா? என்ற கேள்விகள்தான்  இன்று ஆக்க பூர்வமானவை. 

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
10 minutes ago, பையன்26 said:

ஏன் கூட‌ குத்தி முறிவான் , ( சுமேஸ் அண்ணாவுட‌ன் க‌தைத்து விட்டு என‌து ம‌ற்ற‌ கைபேசியில் இருந்து உங்க‌ளையும் அண்ண‌ன் சீமானையும் நான் க‌தைக்க‌ வைக்கிறேன் , நீங்க‌ள் க‌தைக்கும் போது நானும் சுமேஸ் அண்ணாவும் எங்க‌ள‌து போனில் இருந்து கேட்டு கொண்டு இருப்போம் , என‌து ம‌ற்ற‌ போனில்  இருந்து நாலு பேர் ஒரு லையினில் க‌தைக்க‌லாம், அண்ண‌ன் சீமான் சொல்லுவ‌து பொய் பித்த‌லாட்ட‌ம் என்று எழுதுறீங்க‌ளே , அதை போனுக்காள் நேராக‌ சொல்லுங்கோ , அண்ண‌ன் சீமான் அத‌ற்கு என்ன‌ ப‌தில் சொல்லுகிறார் என்ற‌தையும் பாப்போம் ,

என‌து ச‌வாலுக்கு நீங்க‌ள் த‌யார் என்றால் நானும் தயார் ,விவாத‌த்துக்கு நீங்க‌ள் த‌யார் என்றால் உங்க‌ளின் கைபேசி ந‌ம்ப‌ரை த‌னி ம‌ட‌லில் அனுப்ப‌வும் 

ந‌ன்றி 

நல்லது, நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். சீமானின் நம்பரைத் தாருங்கள், நானே நேரடியாக கதைக்கின்றேன்.  கன நாளாக நாக்கை புடுங்குற மாதிரி நாலு கேள்விகள் கேட்க வேண்டும் என காத்து இருக்கின்றேன்.
சீமானின் செல்லப் பிள்ளை நீங்கள் என்பதால் நான் என்ன கதைத்தேன் என்று சீமானிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

2 minutes ago, Maruthankerny said:

சீமானை எதிர்ப்பதில் என்ன வெற்றி இருக்க போகிறது? சீமானை ஆதரிப்பதால் என்ன தோல்வி வர போகிறது? சீமானை அவரின் குறைகளை போக்கி எம்மால் ஒரு வெற்றி காண முடியாதா? என்ற கேள்விகள்தான்  இன்று ஆக்க பூர்வமானவை. 

எனக்கு மட்டுமன்ன சீமானுடன் எல்லைத் தகறாரா அல்லது தனிப்பட்ட விரோதமா?

யாழில் வசம்பண்ணையுடன் ஒரு முறை சீமானுக்காக வரிந்து கட்டி விவாதித்தும் இருக்கின்றேன் மருது. அவரில் ஆரம்பத்தில் மிகுந்த நம்பிக்கை மட்டுமல்ல எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் இன்று இவை எதுவுமே இல்லை. கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக அவரைப் பற்றி யாழில் பெரியளவில் (அவரது தேர்தல் வாக்குறுதிகளை விமர்சித்தை தவிர) விமர்சிக்கவும் இல்லை.

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, goshan_che said:

சீமானை பற்றி போதியளவு எழுதியாகிவிட்டது. எனவே அதை கடந்து போகிறேன்.

ஆனால் நேற்று இதை ஒரு இந்திய நண்பரிடம் சிலாகித்த போது, அவர் சொன்னார்:

”சீமான் ஒரு வெறும் பயல் என்பது எனக்கே தெரிகிறது, பிரபாகரனை சந்தித்த போது சீமான் ஒரு ரெண்டு படம் எடுத்த பையன். அவருக்கு போய் பிரபாகரன் இவ்வளவு முக்கியதுவம் கொடுத்தார், ஒரு போராளியை, கடும் சண்டை ஆளணி பற்றாக்குறையின் மத்தியிலும் இப்படி வீணடித்தார் எனும் போது, பிரபாகரனின் ஆளுமை நிர்வாகத் திறன் பற்றிய என் மேலான மதிப்பீடு தகர்கிறது” என்றார்.

பிரபா அப்படிச் செய்திருக்கமாட்டார், அப்படி சீமானின் பெறுதி தெரியாத ஆளில்லை அவர் என விளங்கப் படுத்திவிட்டு வந்தேன்.

ஆனால் இப்படி இன்னும் எத்தனை தமிழக மக்கள் மத்தியில் சீமானின் பேச்சு, எமது போராட்டம், புலிகள், பிரபா பற்றிய எதிர் மறை கருத்தை விதைக்கிறது என்பது நம் எல்லாரினதும் கவனத்துக்குரியது.

இப்படி செய்யும் படி ரோ சீமானை ஏவுவதாயும் இருக்க கூடும்.

ஒரு இந்திய பேராசிரியருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. சீமானைப் பற்றிப் பேச்சு வந்தபோது சில அரசியல் விடயங்கள் தீவிரமாக மக்கள் மத்தியில் அலசப்படும் போதெல்லாம் இப்படியான சீமானின் பேச்சு மக்கள் மனங்களை  திசை திருப்புவதற்காக றோவினால் பயன்படுத்தப்படுகிறார் என்றும் அவர் சாதாரணமாக சுயநினைவுடன் பேசும்போது இப்படிப் பேசுவதில்லை என்றும் மதுபானம் குடித்து விட்டே சுரனையே இல்லாது இப்படி உளறுகிறார் என்கிறார். 

Share this post

Link to post
Share on other sites
14 minutes ago, நிழலி said:

நல்லது, நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். சீமானின் நம்பரைத் தாருங்கள், நானே நேரடியாக கதைக்கின்றேன்.  கன நாளாக நாக்கை புடுங்குற மாதிரி நாலு கேள்விகள் கேட்க வேண்டும் என காத்து இருக்கின்றேன்.
சீமானின் செல்லப் பிள்ளை நீங்கள் என்பதால் நான் என்ன கதைத்தேன் என்று சீமானிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

குழ‌ந்தை பிள்ளை எழுத்தை என்னோடு காட்ட‌ வேண்டாம் நிழ‌லி சார் , யாழ் நிர்வாக‌த்துக்கு என்று ஒரு க‌ட்டுப்பாடு இருக்கு , அதில் நாம் த‌லையிட‌ முடியாது , நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு என்று சில‌ விதிமுறைக‌ள் இருக்கு நிழ‌லி சார் ,

இவ‌ள‌வு நேர‌ம் ஒதுக்கி எழுதுற‌ உங்க‌ளால் ஏன் தொலைபேசி க‌ல‌ந்துரையாட‌லுக்கு த‌ய‌க்க‌ம் , 

உங்க‌ளை மாதிரி ப‌ல‌ பேரை அண்ண‌ன் பார்த்து விட்டார் , நீங்க‌ள் கூட‌ துள்ளூறீங்க‌ள் அதுக்கு தான் சாவாலுக்கு நீங்க‌ள் த‌யாரா என்று கேட்டேன் , 

வீர‌னுக்கு அழ‌கு இன்னொரு வீர‌ன் கூட‌ நேருக்கு நேர் மோதுவ‌து , கோழைத்த‌ன‌மாய் எழுத்தில் இருக்க‌ கூடாது வீர‌ம் நிழ‌லி சார் ,

சீமான் என் இன‌த்தை கேவ‌ல‌ப் ப‌டுத்த‌ வில்லை , ஆனால் நீங்க‌ள் எழுதும் இட‌ம் எல்லாம்  சீமான் பொய்ய‌ர் பித்த‌லாட்ட‌ கார‌ன் என்று எழுதும் போது , என‌க்கும் அட‌க்க‌ முடியாத‌ கோவ‌ம் வ‌ருது , 

நீங்க‌ள் எம் இன‌த்துக்கு ந‌ல்ல‌து செய்ய‌ வெளிக்கிடும் போது அடுத்த‌வை அதை குழ‌ப்ப‌ நினைத்தால் , நான் உங்க‌ள் ப‌க்க‌ம் தான் நிப்பேன் 

okay bye ,take care 
 
Share this post

Link to post
Share on other sites
45 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒரு இந்திய பேராசிரியருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. சீமானைப் பற்றிப் பேச்சு வந்தபோது சில அரசியல் விடயங்கள் தீவிரமாக மக்கள் மத்தியில் அலசப்படும் போதெல்லாம் இப்படியான சீமானின் பேச்சு மக்கள் மனங்களை  திசை திருப்புவதற்காக றோவினால் பயன்படுத்தப்படுகிறார் என்றும் அவர் சாதாரணமாக சுயநினைவுடன் பேசும்போது இப்படிப் பேசுவதில்லை என்றும் மதுபானம் குடித்து விட்டே சுரனையே இல்லாது இப்படி உளறுகிறார் என்கிறார். 

ஆதார‌ம் இல்லா போலி குற்ற‌ சாட்டு இது 😠

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

உங்களிட்ட என்ன பிடிச்சது என்றால் சீமான் புலிகளை அவமானப்படுத்தினதே உங்களுக்கு புரியலை என்றது தான்🤣...அவர் கதைச்சது கேவலமாய்ப் படேல்லை🤣...அவரை இங்க கழுவி ஊத்தும் போது உங்கள் மீசை துடிக்குதாக்கும்.🤣

சீமான் விடுதலைப் புலிகளை அவமானப்படுத்துவது ஒரு பக்கம் இருக்கட்டும். 

சீமான் விடுதலைப் புலிகளை அவமானப் படுத்தினார் என்று சொல்லுவதற்கு எனக்கு தகுதி வேண்டுமில்லையா  ? 

Edited by Maharajah
சொற்பிழை

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, பையன்26 said:

ஆதார‌ம் இல்லா போலி குற்ற‌ சாட்டு இது 😠

நான் எப்போதாவது இப்பிடிவந்து எழுதியதை பார்த்தீர்களா????

நான் சீமானைக் கணக்கில் எடுப்பதே இல்லை என்பது வேறு. கண்மூடித்தனமாக நீங்கள் விசுவாசமாக இருப்பது உங்கள் பிரச்சனை. ஆனால் அது எம் இனத்தை, போராட்டத்தை மற்றவர் கதைக்க வழிவகுக்கும்.

Share this post

Link to post
Share on other sites
9 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் எப்போதாவது இப்பிடிவந்து எழுதியதை பார்த்தீர்களா????

நான் சீமானைக் கணக்கில் எடுப்பதே இல்லை என்பது வேறு. கண்மூடித்தனமாக நீங்கள் விசுவாசமாக இருப்பது உங்கள் பிரச்சனை. ஆனால் அது எம் இனத்தை, போராட்டத்தை மற்றவர் கதைக்க வழிவகுக்கும்.

நீங்கள் கணக்கில் எடுக்காமலா இங்கே கருத்து எழுதுகிறீர்கள்.  சும்மா கதை விடாதேயுங்கோ அக்கா  😃

Share this post

Link to post
Share on other sites

இங்கே பலர் சனநாயகவாதிகளாக,  முற்போக்குவாதிகளாக பாசிசத்தை எதிர்பவர்களாக நியாயவாதிகளாக தம்மை கட்டடிக்கொள்ள விழைகின்றனர்.  அவர்களை மற்றவர்கள் சிறிதும் கவனத்தில் எடுப்பதில்லை என்பதிலிருந்தே பிரச்சனை ஆரம்பமாகிறது.  சீமானை ஆதரிப்போர் சீமானை கண்டனம் தெரிவிப்பார்களாக மாறினால் இவர்களெல்லோரும் சீமானுக்கு ஆதரவு தெரிவிப்போராக மாறுவர்.  

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites

இங்கு நான் சீமனைப்பற்றிப் பேசவரவில்லை

ஆனால் ஒரு விடையம் சமாதான காலத்தில் புலம்பெயர் தேசங்களிலிருந்து இளையோர்களை அங்குள்ள கள நிலமைகளைபார்ப்பதற்கும் அவர்கள் திரும்பவும் புலம்பெயர்தேசங்களுக்குச் சென்று  தேசியத்துக்கான முன்னெடுப்பெளக்களை செய்வதை ஊக்குவிப்பதற்குமாக ஒவ்வொரு நாட்டிலிருந்து குறிப்பிட்ட காலப்பகுதியில் வன்னிக்குச் சென்றிருந்தார்கள். ஆனால் அப்படிப்போனவர்களில் அனேகர் புலம்பெயர் தேசத்துச் செயற்பாட்டாளர்களுக்கு மிகவும் வேண்ட்டப்பட்டவர்ளும் அடக்கம்.

சிலவேளை அவர்களில் யாரையாவது சந்தித்தால் ஒருக்கல் கேட்டுப்பாருங்கள் அவர்களது விருந்தோம்பல் எப்படி இருந்ததென, சாப்பிட்டவுடன் கைகழுவ தண்ணீரை குவளையிலெடுத்து அவர்களுக்கு ஊத்தியது விடுதலைப்போராளிகள்.

ஆனால் இதில் என்ன விடையமென்றால் நான் வாழும் நாட்டிலிருந்து போனவர் தனிமனித ஒழுக்க நெறி  இல்லாதவர்.  யாரோடோ தொடர்பிலிருந்த பின்னிஸ் காரப்பெண்ணுடன் களவொழுக்கத்தில் ஈடுபட்டு அதன் பயனாக பிள்ளைபெற்றுக்கொண்டவர் அந்த அளவுக்கு இருக்கு எமது செய்ற்பாட்டாளர்களது நடவடிக்கை.  .

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, பையன்26 said:

குழ‌ந்தை பிள்ளை எழுத்தை என்னோடு காட்ட‌ வேண்டாம் நிழ‌லி சார் , யாழ் நிர்வாக‌த்துக்கு என்று ஒரு க‌ட்டுப்பாடு இருக்கு , அதில் நாம் த‌லையிட‌ முடியாது , நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு என்று சில‌ விதிமுறைக‌ள் இருக்கு நிழ‌லி சார் ,

இவ‌ள‌வு நேர‌ம் ஒதுக்கி எழுதுற‌ உங்க‌ளால் ஏன் தொலைபேசி க‌ல‌ந்துரையாட‌லுக்கு த‌ய‌க்க‌ம் , 

உங்க‌ளை மாதிரி ப‌ல‌ பேரை அண்ண‌ன் பார்த்து விட்டார் , நீங்க‌ள் கூட‌ துள்ளூறீங்க‌ள் அதுக்கு தான் சாவாலுக்கு நீங்க‌ள் த‌யாரா என்று கேட்டேன் , 

வீர‌னுக்கு அழ‌கு இன்னொரு வீர‌ன் கூட‌ நேருக்கு நேர் மோதுவ‌து , கோழைத்த‌ன‌மாய் எழுத்தில் இருக்க‌ கூடாது வீர‌ம் நிழ‌லி சார் ,

சீமான் என் இன‌த்தை கேவ‌ல‌ப் ப‌டுத்த‌ வில்லை , ஆனால் நீங்க‌ள் எழுதும் இட‌ம் எல்லாம்  சீமான் பொய்ய‌ர் பித்த‌லாட்ட‌ கார‌ன் என்று எழுதும் போது , என‌க்கும் அட‌க்க‌ முடியாத‌ கோவ‌ம் வ‌ருது , 

நீங்க‌ள் எம் இன‌த்துக்கு ந‌ல்ல‌து செய்ய‌ வெளிக்கிடும் போது அடுத்த‌வை அதை குழ‌ப்ப‌ நினைத்தால் , நான் உங்க‌ள் ப‌க்க‌ம் தான் நிப்பேன் 

okay bye ,take care 
 
பையா !
சீமானுடன் பேசுவது என்றாலும்  எதிர்க்கருத்து இருப்பவர்கள் ஒரு ஆக்க பூர்வமான 
உரையாடலைதான் விரும்புவார்கள். ஒன்றில் சீமானின் நிலைப்பாடு பிழை என்பதை சீமானுக்கு 
விளங்கபடுத்துவது. அல்லது தமது நிலைப்பாடு சரி என்று சீமானுக்கு விளங்க படுத்துவது.
சும்மா சேறு அடித்து கொண்டு இருப்பவர்கள்தான் எழுந்த மாத்திரத்தில் பேசலாம் என்பது 
அவர்கள் வேண்டும் என்றால் சீமானை தூஷணத்திலும் பேசுவார்கள் அவர்களிடம் ஆக்கபூர்வம் ஒன்றும் இல்லை தொடங்கிவிட்டொம் என்று தொடருவது. மேலே சீமான் குடித்துவிட்டு வெறியில் உளறுகிறார் 
என்பது அதுவேறு ரகம். அவற்றை நீங்களும் கண்டும் காணாமல் செல்வதுதான் உங்களுக்கும் நன்று.
காரணம் சீமான் குடிப்பதில்லை என்று எழுத்தில் உங்களால் இங்கு நிரூபிக்க முடியாது.  ஒரு குறித்த வீடியோவை போட்டு இதில் சீமானுக்கு வெறி என்று எழுதினால் இல்லை அவருக்கு வெறி இல்லை என்று 
எழுதிக்கொண்டு இருக்க முடியுமா? அவர்கள் ஒரு தாற்காலிக மகிழ்ச்சிக்கு எழுதுகிறார்கள் .... அப்பாடா இன்று கொஞ்ச சேறை அடித்துவிட்டோம் என்னு பெரு மூச்சு விட்டு விட்டு படுத்துவிடுவார்கள். அவர்கள் நிம்மதியை நாம் ஏன் கெடுக்க வேண்டும்?

நிழலி சொல்லும் குற்றசாட்டு சீமான் பாசிச வாதி போல நடக்கிறார் என்பது.
சீமான் தமிழர்தான் எல்லாம் மீதி எல்லோரையும் வெட்டுவோம் வீழ்த்துவோம் என்றால் அது பாசிசம்தான்  
அதுக்கு கண்ணைமூடிக்கொண்டு ஈழத்தமிழராகிய நாம் ஆதரவு கொடுக்க முடியாது. பண்டாரநாயக்க  ஒரு அற்ப  தேர்தலை வெல்லுவதுக்கு எடுத்ததுதான் இனவாதம் அந்த தவறை பண்டாரநாயக்க செய்யாது போயிருந்தால்  இன்று ஒருவேளை இலங்கை சிங்கப்பூரிலும் உயர்த்தியாக இருந்து இருக்கும். எமக்கும் சாதாரண  சிங்கள குடிகளுக்கு எந்த முரண்பாடும் இல்லை. தேர்தலை வெல்ல பண்டார நாயக்க செய்த சூழ்ச்சியால் மொத்த இலங்கையே இன்று பிச்சை எடுத்து திரிகிறது. இதுபற்றிய விவாதம் ஆரோக்கியமானதுதான்  அதைவிட தேவையுமானது. சீமான் தனது நிலைப்பாட்டை பல நேர்காணலில் சொல்கிறார்  இந்த கேள்விகள் ஏற்கனவே சீமானிடம் கேட்கபட்டு அவர் தகுந்த பதில்களை கொடுத்து இருக்கிறார். இதை நானும் நீங்களும் பார்த்து இருக்கிறோம் .... மீதி எத்தனை பேர்கள் பார்த்தார்கள் என்பதுதான்  கேள்வி?  வெட்டி ஒட்டிய 1 நிமிட வீடியோவை எத்தனை பேர் பார்க்கிறார்கள். முழு விடீயோவையும்  எத்தனை பேர்கள் பார்க்கிறார்கள் என்பதுதான் இங்கு பிரச்சனையாக இருக்கிறது என்று  நான்  எண்ணுகிறேன். 

ஆகவே தொலைபேசுவது  எல்லாம் இரண்டாம் பட்ஷம் 
ஒரு ஆரோக்கியமான விவாதத்தில் சீமானின் பார்வை சரியானது என்று நிருபுவதும் அதற்கான 
ஆதரங்களை கொடுப்பதும்தான் சந்தேகத்தில் இருப்பவர்கள் இடத்த்திலும் ஓர் நம்பிக்கையை உண்டுபண்ணும். நீங்கள் சும்மா சேறடித்து திரிபவர்களுக்கு பதில்கள் எழுதி நேரத்தை வீணாக்காதீர்கள். 
இந்த "தமிழர்தான்" என்ற கருத்தியல் பற்றிய வீடியோக்களை முடிந்தால் தயவு செய்து இணையுங்கள்.   நானும் தேடி பார்க்கிறேன் 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
7 minutes ago, Maharajah said:

இங்கே பலர் சனநாயகவாதிகளாக,  முற்போக்குவாதிகளாக பாசிசத்தை எதிர்பவர்களாக நியாயவாதிகளாக தம்மை கட்டடிக்கொள்ள விழைகின்றனர்.  அவர்களை மற்றவர்கள் சிறிதும் கவனத்தில் எடுப்பதில்லை என்பதிலிருந்தே பிரச்சனை ஆரம்பமாகிறது.  சீமானை ஆதரிப்போர் சீமானை கண்டனம் தெரிவிப்பார்களாக மாறினால் இவர்களெல்லோரும் சீமானுக்கு ஆதரவு தெரிவிப்போராக மாறுவர்.  

எங்கள் யாழ் மேட்டுக்குடி வர்க்கத்தை இங்கு சரியாக புரிந்து வைத்திருப்பவர் சான்டமருதன் அவர்கள்தான் 
ஊரே பற்றி எரிந்தாலும் ஒரு குவளை தண்ணி கூட இவர்கள் தெளிப்பதில்லை ... அதுக்குள்ளும் தாம்தான் அறிவாளிகள் படிப்பாளிகள் என்று நிறுவி கொண்டு இருப்பதை தவிர வேறு ஒரு ஆணியும் புடுங்குவது கிடையாது. இதை நாம் கடந்த 30 வருட போரில் நேரடி அனுபவமாக பெற்றவர்கள்.

எமது இனம் மீள ஒரு வழி? அது என்ன வடிவில் சாத்தியமாக இருக்கிறது என்பதை தெரிந்து 
மண்புழுபோல சத்தம் இல்லாமல் அதை நோக்கி நகருவதுதான் இப்போதைக்கு சிறந்த நகர்வு.
ஆதலால்தான் நிழலி போன்றவர்கள் சீமான் சும்மா சத்தம்போட்டு இருப்பதையும் கெடுக்கிறார் என்று 
எண்ணுகிறார்களோ தெரியவில்லை. சிங்களவன் சிங்கள துவேஷம் பேசித்தான் வெல்கிறான் .... அந்த வெற்றியை வைத்துதான் எம்மை அடிக்கிறான். நாங்கள் இன துவேஷிகளிடம்தான் அடிவாங்கிக்கொண்டு இருக்கிறோம் தமிழ்நாட்டில் பார்ப்பனிய துவேசம் அங்கும் அதனால்தான் தமிழன் அடிமை ஆகிறான். 
பிழைக்கு பிழை செய்யலாமா? இல்லாமல் எவ்வாறு வெல்வது? என்ற பாதை ஊடாகதான் நாம் பயணிக்க முடியும். 

உங்களுடைய கடைசி வரி மிகவும் அர்த்தம் உடையது 
அவ்வாறான மனநிலையில் பல கருத்துக்கள் இங்கு அடிக்கடி பதிய படுகின்றன  

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, Maharajah said:

இங்கே பலர் சனநாயகவாதிகளாக,  முற்போக்குவாதிகளாக பாசிசத்தை எதிர்பவர்களாக நியாயவாதிகளாக தம்மை கட்டடிக்கொள்ள விழைகின்றனர்.  அவர்களை மற்றவர்கள் சிறிதும் கவனத்தில் எடுப்பதில்லை என்பதிலிருந்தே பிரச்சனை ஆரம்பமாகிறது.  சீமானை ஆதரிப்போர் சீமானை கண்டனம் தெரிவிப்பார்களாக மாறினால் இவர்களெல்லோரும் சீமானுக்கு ஆதரவு தெரிவிப்போராக மாறுவர்.  

யாழ் களத்தில் உள்ளவர்கள் கொள்கை இல்லாதவர்கள் என்று சொல்வது கண்டனத்திற்குரியது. சீமானின் தீவிர ஆதரவாளர்கள் எனது நண்பர்களிலும் இருக்கின்றார்கள். அவரைக் கனடாவில் இருந்து கலைத்ததற்கான காரணத்தையும் அறிந்திருப்பீர்கள். உணர்ச்சியைத் தூண்டி வெறுப்புக்களை விதைப்பதால் தமிழ் தேசியத்தை வளர்க்கமுடியாது.

யாழ் களத்தில் முன்னர் பல தடவை சொன்னதுதான். செந்தமிழன் சீமான் தமிழகத்தில் தொடர்ச்சியாக தேர்தல்களில் தோற்பார். NOTA க்குப் போடும் வாக்குகள் அளவுக்குத்தான் அவர் கட்சிக்கும் கிடைக்கும். எனவே, கோடிகளில் சில லட்சங்கள் பெரிய இலக்கமாக இருக்கமுடியாது என்பதை உணர்ந்தால் சீமானுக்கு மேடை கொடுப்பது வீண்வேலை என்பது புரியும்!

Share this post

Link to post
Share on other sites

2009 இல் முள்ளிவாய்க்கால் அவலத்தைத் தடுக்கமுடியாத தலைவர்களாக இருந்த கருணாநிதி தொடக்கம், வைகோ, நெடுமாறன், சீமான் மற்றும் மகிந்தவை நேரே பார்த்து பல்லிளித்த கனிமொழி, திருமாமளவன் வரை எவர் மீதும் மதிப்பில்லை. ஆனால் ஏதாவது செய்யவேண்டுமே என்று தவித்த தமிழக மக்கள்மீது பெரிய மதிப்பு எப்போதும் இருக்கின்றது.

Share this post

Link to post
Share on other sites

சீமான்,

சமாதான காலம் ஆரம்பித்த போது, புலிகள் ஒரு தீர்மானம் எடுத்திருந்தார்கள் தமக்கு எதிரானவர்களை நடுநிலைக்கு கொண்டுவருதல். மிக முழுவீச்சாக தமிழகத்திலும், சிங்களப்பகுதிகளில் மக்களுக்கு தங்களது போராட்டா நியாயங்களை எடுத்து கூறல், 

இதற்கு தமிழகத்தில் புதிய முகத்தை தேடிக்கொண்டிருந்தார்கள். சினிமா ஊடாக தமிழக மக்களுக்கு சொல்வது சுலபம் என்பதால் சினிமா துறைசார்ந்த சிலரை சேரலாதன் ஊடாக வன்னிக்கு தமிழீழ திரைப்பட இயக்கம் தொடர்பாக என கூறி வரவழைத்தார்கள். முதலில் வந்தவர்கள் வயதானவர்கள் & பலர் திரைப்படத்தை தவிர அரசியல் தமக்கு சரிவராது என ஒதுங்கிக் கொள்ள கடைசியாக சேரலாதன் இறக்குகிறார் சீமானை. சீமான் வன்னிக்கு வரும் போது இராணுவம் புலிகள் முரண்பாடுகள் மெல்ல மெல்ல தொடங்குகிறது. சீமானை பொறுப்பாளர்கள் சந்தித்து தமது கோரிக்கையை வைக்க சீமானும் சம்மதிக்கிறார். அதை தொடர்ந்து தலைவரை சந்திக்கிறார்.

சீமானுக்கு கொடுக்கப்பட்ட வேலை புலிகளுக்கான ஆதரவு நிலையை தமிழக மக்களிடம் கட்டியெழுப்புதல். இதற்கான ஒரு தொகைப் பணம் அனைத்துலக தொடர்பகத்தால் வழங்கப்படுகிறது. புலிகளின் வெளிநாட்டு கிளைகளுக்கு அறிவித்தல் வருகிறது " நிகழ்வுகளுக்கு சீமானை கூப்பிட்டுங்கள்". சேரலாதனின் கீழ் இருந்த சீமான் தற்போது அரசியல் துறையின் கீழ் வருகிறார்.

ஆணிவேர், 

பிரித்தானியாவிலிருந்து டில்கோ திலகர் சமாதான காலத்தில் யாழ் நகர், மண்டைதீவு & அனலைதீவு போன்ற இடங்களில் காணிகளை வாங்குகிறார், தென்னிந்திய சினிமா துறையில் ஓர் சிலரை தெரிந்தமையால் சினிமா சம்பந்தமாக வன்னியில் சேரலாதனின் தொடர்பை ஏற்படுத்தினார்.அதை தொடர்ந்து ஆணிவேர் திரைப்பட தயாரிப்பில் இறங்குகிறார். சேரலாதன் ஊடாக சில தளபதிகளையும் திரு.திருமதி. பாலசிங்கம் தம்பதிகளையும் தலைவரின் மனைவி & பாலச்சந்திரன் ஆகியோரை சந்திக்கிறார் மறக்காமல் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஆணிவேர் திரைப்பட தயாரிப்பை ஆரம்பித்து இடையில் கைவிடுகிறார். திரைப்படத்தை சுவிஸ் நாட்டை சேர்ந்தவர்கள் தொடந்து தயாரித்து வெளியிட்டார்கள்.

இந்த படத்திற்கும் சீமானிற்கும் ஒரு தொடர்பும் இல்லை.

குறிப்பு : 2009 வரை ஒழுங்காக இருந்த சீமான் இன்று கிறுக்குத்தனமாக உளறுகிறார் அவரை தற்போது யார் இயக்குகிறார்களோ தெரியாது.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
24 minutes ago, MEERA said:

நீங்கள் சொல்வதை கொஞ்சம் தெளிவாகவும் சுருக்கமாகவும் கூறமுடியுமா ?? 

1 hour ago, கிருபன் said:

யாழ் களத்தில் உள்ளவர்கள் கொள்கை இல்லாதவர்கள் என்று சொல்வது கண்டனத்திற்குரியது. சீமானின் தீவிர ஆதரவாளர்கள் எனது நண்பர்களிலும் இருக்கின்றார்கள். அவரைக் கனடாவில் இருந்து கலைத்ததற்கான காரணத்தையும் அறிந்திருப்பீர்கள். உணர்ச்சியைத் தூண்டி வெறுப்புக்களை விதைப்பதால் தமிழ் தேசியத்தை வளர்க்கமுடியாது.

யாழ் களத்தில் முன்னர் பல தடவை சொன்னதுதான். செந்தமிழன் சீமான் தமிழகத்தில் தொடர்ச்சியாக தேர்தல்களில் தோற்பார். NOTA க்குப் போடும் வாக்குகள் அளவுக்குத்தான் அவர் கட்சிக்கும் கிடைக்கும். எனவே, கோடிகளில் சில லட்சங்கள் பெரிய இலக்கமாக இருக்கமுடியாது என்பதை உணர்ந்தால் சீமானுக்கு மேடை கொடுப்பது வீண்வேலை என்பது புரியும்!

எனக்கு கண்டனம் தெரிவிப்பது ஒருபக்கம் இருக்கட்டும்.

முதலில் பாசிசவாதி என இன்னொருவரை முத்திரை குத்துவதற்க்கு கண்டனம் தெரிவிப்பீர்களா  ??  

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, கிருபன் said:

யாழ் களத்தில் உள்ளவர்கள் கொள்கை இல்லாதவர்கள் என்று சொல்வது கண்டனத்திற்குரியது. சீமானின் தீவிர ஆதரவாளர்கள் எனது நண்பர்களிலும் இருக்கின்றார்கள். அவரைக் கனடாவில் இருந்து கலைத்ததற்கான காரணத்தையும் அறிந்திருப்பீர்கள். உணர்ச்சியைத் தூண்டி வெறுப்புக்களை விதைப்பதால் தமிழ் தேசியத்தை வளர்க்கமுடியாது.

யாழ் களத்தில் முன்னர் பல தடவை சொன்னதுதான். செந்தமிழன் சீமான் தமிழகத்தில் தொடர்ச்சியாக தேர்தல்களில் தோற்பார். NOTA க்குப் போடும் வாக்குகள் அளவுக்குத்தான் அவர் கட்சிக்கும் கிடைக்கும். எனவே, கோடிகளில் சில லட்சங்கள் பெரிய இலக்கமாக இருக்கமுடியாது என்பதை உணர்ந்தால் சீமானுக்கு மேடை கொடுப்பது வீண்வேலை என்பது புரியும்!

இது கொஞ்சம் புதுசா இருக்கு .... 
நியாமான கோரிக்கைகள் கொள்கைகள் என்பது 
இந்த உலகில் ஒருபோதும் வென்றதில்லை. இந்த உலகின் மனித வரலாற்றின் ஆதி தொட்டு இன்றுவரை 
போர்களும்  போராட்டங்களும் அடக்குமுறைகளும் தொடர்கின்றன. பார்க்கப்போனால் புலிகளும்தான் தோற்றுப்போய் இருக்கிறார்கள். சீமான் வெல்ல மாட்டார் என்பதுக்கும்  சீமான் பற்றிய காழ்ப்புணர்வு கருத்துக்களுக்கும் என்ன சம்பந்தம்? 

நாம்தமிழர் என்பது அரசியலே தவிர அது தேர்தலுக்கான போட்டி இல்லை 
நாம்தமிழர் அரசியல் என்பது வெற்றிப்பாதையில்தான் செல்கிறது. இன்று தமிழகத்தின் ஓர் 
அரசியல் அங்கமாக வடிவெடுத்து இருக்கிறது. தேர்தல் வாக்கு அடிப்படையில் கூட முன்னேற்றம் கண்டே வருகிறது. தமிழ் நாட்டில் 50-60% வாக்கு தி மு க   அ தி மு க என்று நிரந்தரமாக இருக்கிறது இவர்களுக்கு யார் கட்சியில் இருக்கிறார் யார் தலைவர் என்பது எல்லாம் த்தேவை இல்லை போவார்கள் குத்துவார்கள் வருவார்கள். இப்போ அதுகொஞ்சம் மாறி வருகிறது யார் இலவசம் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு குத்திவிட்டு வருவது. ஜெயலலிதாவின் இறுதி காலத்தில் 3 கண்டைனர்கள் கோடி கோடி பணத்துடன் பிடிபட்ன 
அவை ஒரு வேளை  பிடிபடாது போயிருப்பின் தேர்தல் முடிவு மாறாக கூட இருந்து இருக்கலாம். 
ஊழல்  கொள்ளை என்பது எல்லா காலமும் ஒரே போல இருக்கப்போவதில்லை ஆகவே  இனிவரும் தேர்தல்கள்  
என்பது தமிழ்நாட்டில் முன்பு போல இருக்காது என்பது எல்லோருக்கும் தெரியும். அதுதான் இந்த ரஜினி கமல் அரசியலும்  அதன் பின்னணியும் கூட . எதிர்காலத்தில் சீமானின் வாக்குகளை இவர்கள் பிரித்துக்கொள்வார்கள்  என்றுதான் இவர்கள் களத்தில் இறக்கிவிட பட்டுள்ளார்கள். சீமானின் வெற்றி என்பது திடமானது  எந்த கலப்படமும் இல்லாதது இது கூடிக்கொண்டு வருகிறது என்பதுதான் பெருத்த வெற்றி.
தேர்தல்கள் பரப்புரைகளை எதிர்கொள்ள இவர்களிடம் பணம் இருக்குமா என்பதுதான் கேள்விக்கு உள்ளானது. 
 
Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Maruthankerny said:

பையா !
சீமானுடன் பேசுவது என்றாலும்  எதிர்க்கருத்து இருப்பவர்கள் ஒரு ஆக்க பூர்வமான 
உரையாடலைதான் விரும்புவார்கள். ஒன்றில் சீமானின் நிலைப்பாடு பிழை என்பதை சீமானுக்கு 
விளங்கபடுத்துவது. அல்லது தமது நிலைப்பாடு சரி என்று சீமானுக்கு விளங்க படுத்துவது.
சும்மா சேறு அடித்து கொண்டு இருப்பவர்கள்தான் எழுந்த மாத்திரத்தில் பேசலாம் என்பது 
அவர்கள் வேண்டும் என்றால் சீமானை தூஷணத்திலும் பேசுவார்கள் அவர்களிடம் ஆக்கபூர்வம் ஒன்றும் இல்லை தொடங்கிவிட்டொம் என்று தொடருவது. மேலே சீமான் குடித்துவிட்டு வெறியில் உளறுகிறார் 
என்பது அதுவேறு ரகம். அவற்றை நீங்களும் கண்டும் காணாமல் செல்வதுதான் உங்களுக்கும் நன்று.
காரணம் சீமான் குடிப்பதில்லை என்று எழுத்தில் உங்களால் இங்கு நிரூபிக்க முடியாது.  ஒரு குறித்த வீடியோவை போட்டு இதில் சீமானுக்கு வெறி என்று எழுதினால் இல்லை அவருக்கு வெறி இல்லை என்று 
எழுதிக்கொண்டு இருக்க முடியுமா? அவர்கள் ஒரு தாற்காலிக மகிழ்ச்சிக்கு எழுதுகிறார்கள் .... அப்பாடா இன்று கொஞ்ச சேறை அடித்துவிட்டோம் என்னு பெரு மூச்சு விட்டு விட்டு படுத்துவிடுவார்கள். அவர்கள் நிம்மதியை நாம் ஏன் கெடுக்க வேண்டும்?

நிழலி சொல்லும் குற்றசாட்டு சீமான் பாசிச வாதி போல நடக்கிறார் என்பது.
சீமான் தமிழர்தான் எல்லாம் மீதி எல்லோரையும் வெட்டுவோம் வீழ்த்துவோம் என்றால் அது பாசிசம்தான்  
அதுக்கு கண்ணைமூடிக்கொண்டு ஈழத்தமிழராகிய நாம் ஆதரவு கொடுக்க முடியாது. பண்டாரநாயக்க  ஒரு அற்ப  தேர்தலை வெல்லுவதுக்கு எடுத்ததுதான் இனவாதம் அந்த தவறை பண்டாரநாயக்க செய்யாது போயிருந்தால்  இன்று ஒருவேளை இலங்கை சிங்கப்பூரிலும் உயர்த்தியாக இருந்து இருக்கும். எமக்கும் சாதாரண  சிங்கள குடிகளுக்கு எந்த முரண்பாடும் இல்லை. தேர்தலை வெல்ல பண்டார நாயக்க செய்த சூழ்ச்சியால் மொத்த இலங்கையே இன்று பிச்சை எடுத்து திரிகிறது. இதுபற்றிய விவாதம் ஆரோக்கியமானதுதான்  அதைவிட தேவையுமானது. சீமான் தனது நிலைப்பாட்டை பல நேர்காணலில் சொல்கிறார்  இந்த கேள்விகள் ஏற்கனவே சீமானிடம் கேட்கபட்டு அவர் தகுந்த பதில்களை கொடுத்து இருக்கிறார். இதை நானும் நீங்களும் பார்த்து இருக்கிறோம் .... மீதி எத்தனை பேர்கள் பார்த்தார்கள் என்பதுதான்  கேள்வி?  வெட்டி ஒட்டிய 1 நிமிட வீடியோவை எத்தனை பேர் பார்க்கிறார்கள். முழு விடீயோவையும்  எத்தனை பேர்கள் பார்க்கிறார்கள் என்பதுதான் இங்கு பிரச்சனையாக இருக்கிறது என்று  நான்  எண்ணுகிறேன். 

ஆகவே தொலைபேசுவது  எல்லாம் இரண்டாம் பட்ஷம் 
ஒரு ஆரோக்கியமான விவாதத்தில் சீமானின் பார்வை சரியானது என்று நிருபுவதும் அதற்கான 
ஆதரங்களை கொடுப்பதும்தான் சந்தேகத்தில் இருப்பவர்கள் இடத்த்திலும் ஓர் நம்பிக்கையை உண்டுபண்ணும். நீங்கள் சும்மா சேறடித்து திரிபவர்களுக்கு பதில்கள் எழுதி நேரத்தை வீணாக்காதீர்கள். 
இந்த "தமிழர்தான்" என்ற கருத்தியல் பற்றிய வீடியோக்களை முடிந்தால் தயவு செய்து இணையுங்கள்.   நானும் தேடி பார்க்கிறேன் 

உங்க‌ளின் க‌ருத்துட‌ன் உட‌ன் ப‌டுகிறேன் ம‌ருத‌ங்கேணி அண்ணா , 

குவாட்ட‌ரும்  பிரியாணியும் இல்லாம‌ ஒரு கூட்ட‌ம் கூடுது என்றால் அது நாம் க‌ட்சிக்கு தான் , யாழில் புது புர‌ளிய‌ கில‌ப்பியாச்சு , அண்ண‌ன் சீமான் குடிகார‌ன் என்று , நீங்க‌ள் சொன்ன‌ மாதிரி இதை க‌ட‌ந்து செல்வ‌து தான் ச‌ரி ,

அண்ண‌ன் மீண்டும் த‌லைவ‌ரின் விருந்தை ப‌ற்றி ஏன் க‌தைக்க‌ வேண்டி வ‌ந்த‌து என்றால் , அண்ண‌ன் சும்மா இருந்தாலும் திருட்டு திராவிட‌ கும்ப‌ல்க‌ள் ஆமைக் க‌றி ஏக்கே , இதை தான் ப‌ல‌ வ‌ருட‌மாய் அவ‌ர் மேல் குற்ற‌ சாட்டாய் வைக்கின‌ம் ( அண்ண‌ன் சீமான் மேல் அவ‌ர்க‌ளால் வேறு குற்ற‌ சாட்டுக‌ள் வைக்க‌ முடியாது ) 

இந்த‌ திரியில் பிழ‌ப்பு இணைத்த‌ காணொளி 4 நிமிட‌த்துக்கு கிட்ட‌ , போலிம‌ர் தொலைக் காட்சி யாருடைய‌ தொலைக் காட்சி , அது முற்றிலும் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு எதிரான‌ தொலைக் காட்சி , 

2009 ம‌ற்றும் 2010 இந்த‌ இர‌ண்டு ஆண்டும் அண்ண‌ன் சீமானின் வாழ்க்கை சிறையில் , ஈழ‌ பெண்னை தான் திரும‌ண‌ம் செய்வேன் என்று விடா பிடியில் நின்று பிற‌க்கு அது ஏன் த‌டை ப‌ட்ட‌து என்று உங்க‌ளுக்கு ந‌ல்லாவே தெரியும் ம‌ருத‌ங்கேணி அண்ணா , 

அந்த‌ திரும‌ண‌ வாழ்க்கையிலும் ப‌ல‌ அவ‌மான‌ங்க‌ளை ச‌ந்திச்சார் , அண்ண‌ன்  முன்னால் போராளியின் ம‌னைவியை ம‌ற‌ந்தாலும் கூட‌ திராவிட‌ம் அதையே தூக்கி பிடிச்ச‌து , ஈழ‌ பெண்னை திரும‌ண‌ம் செய்கிறேன் என்று சொல்லி போட்டு இப்ப‌ க‌ய‌ல்விழியை செய்து விட்டார் என்று தூற்றீனார்க‌ள் , அதையும் தாங்கி கொண்டு அர‌சிய‌ல் ப‌ய‌ண‌த்தை தொட‌ர்ந்தார் , 

2015ம் ஆண்டு த‌மிழ் நாட்டில் த‌ங்கி இருக்க‌ வேண்டி வ‌ந்த‌து , அப்போது அண்ண‌ன் சீமானை ப‌ற்றி தெரிந்து கொள்ள‌ ந‌ல்ல‌ வாய்ப்பு கிடைத்த‌து ( சுமேஸ் அண்ணா சீமான் அண்ண‌னின் நெருங்கிய‌ ந‌ண்ப‌ர் )  சுமேஸ் அண்ணாவும் உங்க‌ளை மாதிரி என‌க்கு ந‌ல்ல‌ ஒரு அண்ணா , நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு சுமேஸ் அண்ணாவின் ப‌ங்கு பெரிய‌து , 

அண்ண‌ன் சீமான் நேரில் ஆள் மிக‌வும் அமைதி , க‌ள்ள‌ம் க‌வ‌ட‌ம் இல்லா அன்பான‌ வார்த்தைக‌ளில் தான் க‌ல‌ந்துரையாடினார் என்னுட‌ன் ,

முந்தி எல்லாம் , அண்ண‌ன் சீமான் ஒரு பொது கூட்ட‌த்தில் பேச‌ போன‌ பாதுகாப்பு இல்லாம‌ பேசி போட்டு வ‌ருவார் , இப்போது அண்ண‌னின் ஜீப்பை பின் தொட‌ர‌ இர‌ண்டு வாக‌ண‌ங்க‌ள் , கார‌ண‌ம் அண்ண‌ன் சீமானை எப்ப‌டியாவ‌து போட்டு த‌ள்ளிட‌னும் என்று , திராவிட‌ம் தொட்டு இன்னும் ப‌ல‌ர் அண்ணன் சீமானின் த‌லைக்கு விலை பேசின‌ம் , ப‌கிர‌ங்க‌ மிர‌ட்ட‌லும் விடின‌ம் , 

இந்த‌ 9 வ‌ருட‌த்தில் த‌மிழ் நாட்டிலும் ச‌ரி புல‌ம்பெய‌ர் நாட்டிலும் ச‌ரி அண்ண‌ன் சீமான் எவ‌ள‌வோ ந‌ல்ல‌தை எடுத்து சொல்லி இருப்பார் , அது இவ‌ர்க‌ளின் காதில் கேட்டாலும் கேக்காது போல் ந‌டிப்பார்க‌ள் , 

அண்ண‌ன் சீமானுக்கு எதிராக‌ எழுதும் இவ‌ர்க‌ள் அவ‌ரின் க‌ட்சி கொள்கை தாங்க‌ள் ஆட்சிக்கு வ‌ந்தால் என்ன‌ எல்லாம் செய்வோம் என்று பெரிய‌ அறிக்கையாய் வெளியிட்ட‌வை , அதை இவ‌ர்க‌ள் வாசித்து இருக்க‌ வாய்ப்பு இல்லை , 

க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் அண்ண‌ன் சீமான் சொன்ன‌து இப்போது நிஜ‌த்தில் ந‌ட‌க்குது , 

இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு ம‌ருத‌ங்கேணி அண்ணா , நானோ நீங்க‌ளோ ஆயிர‌ம் ந‌ல்ல‌து எழுதினாலும் இதுங்க‌ள் திருந்த‌ போர‌து இல்லை , அவ‌ர் சொன்னார் இவ‌ர் சொன்னார் என்று பூஞ்சாண்டி க‌தைக‌ள் எழுதிவின‌ம் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.