Jump to content

சீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Maharajah said:

சீமானின் பேச்சுக்களில் பிழை இருப்பின் அதனை பண்பாக சுட்டிக்காட்ட வேண்டும்.  மாறாக சேறடித்தல் ஒரு தகுதிவாய்ந்தவனின் செயல் அல்ல.

நாங்கள் ஒன்றை இலகுவாக மறந்துவிடுகின்றோம். இங்கு யாரும்  சீமானை பிழைவிடாத ஒருவர் என்று கூறவில்லை.  ஆனால் சகட்டுமேனிக்கு வசைபாடுதல்,  தூற்ருதல் தவிர்க்கப்பட வேண்டும்.  

தற்போதைய சூழலில்,  தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் சார்பாக குரல் கொடுப்பவர்களில் சீமானும் திருமுருகனும் முக்கியமானவர்கள். இவர்களின் செயட்பாடுகள்தான் இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக, தமிழக மக்களுக்கு எப்போதும் எம்மை நினைவுபடுத்திக்கொண்டு இருக்கிறது.  இவர்களை நாங்கள் காயப்படுத்துவது எந்த அளவில் தகுதியான செயல் ?? 

நாங்கள் அவர்களை தூக்கிப் பிடிக்காவிட்டாலும்,  காயப்படுத்தாமல் இருக்கலாமல்லவா  ??? 

நான் எங்கே ஐயா சீமானைத் தூற்றினேன்.

பிரபாகரன், புலிகளுடன் தனக்கு இருந்த தொடர்பை பற்றி நகைபுக்கிடமாக கதைத்து, அதன் மூலம் புலிகளை பற்றி வேண்டும் என்றே ஒரு தவறான கீழ்மதிப்பீட்டை தமிழ்நாட்டில் ஏற்படுத்துவது.

புலிகளுக்கு சற்றேனும் சம்பந்தமில்லாத இனகுரோதத்தை கையில் எடுத்து, வைகோ முதல் பெரியார் வரை அத்தனை தமிழ் தலைவர்களையும் திட்டித் தீர்ப்பது, தம்பிமாரை விட்டு சைக்கோ, கொல்டி, என தூசிக்க வைப்பது. இதன்மூலம் தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் மத்தியில் சாதிய அடிப்படையில் ( முக்குலத்தோர், வன்னியர், பறையர், பள்ளர், நாடார், பிராமணர் தமிழர் ஆனால் நாயக்கர், முதலியார், பிள்ளைகள், கோனார், யாதவர் இதர சாதிகள் தமிழர் அல்லாதோர்)  ஒரு பிரிவினையை ஏற்படுத்துவது. 

இப்படியான நடவடிக்கைகள் சீமானின் மீதான பின்வரும் சந்தேகம்களை ஏற்படுத்துகிறது.

1. சீமான் ஒரு Trojan Horse. தமிழ்நாட்டில் திராவிட கொள்கையை அகற்றி, அந்த வெற்றிடத்தை இந்துதுவா நிரப்பும் நிகழ்சி நிரலில், முதல் அங்கம் திராவிடத்தை அகற்றுவது, இரெண்டாவது அங்கம் அந்த வெற்றிடத்தை இந்துதுவாவால் நிரப்புவது. சீமானின் பிராமணபாசம், முருகன் முப்பாட்டன், வீரத்தமிழ் முண்ணணி, தனியே திராவிட தலைவர்களை தாக்காமல், திராவிட கொள்கைகளை குறிவைத்து தாக்குவது ( குறிப்பாக பெரியாரை தாக்குவது) என்பன சீமானின் நிகழ்சி நிரல் யாதென கூறி நிற்கிறன.

2. சீமானின் ரெண்டாவது வேலை, தமிழ்நாட்டில் தமிழ் தேசியத்தை தலை எடுக்கவிடாமல் செய்தல். தமிழ் தேசியத்தை தானே சுவீகரித்து, திருமுருகன் காந்தி போன்றோரை கூட துரோகிகளாக சித்தரித்து, நெடுமாறனை ஒதுக்கி, தமிழ் நாட்டில் - தமிழ் தேசியம் என்றாலே, பாசிசம், வன்முறை வழிப்பட்ட இனவாதம் எனும் பிம்பத்தை சாதாரண மக்கள் மத்தியில் மிக வினைத்திறனாக கட்டி எழுப்புகிறார் சீமான்.

இது கூடிக் கெடுக்கும் யுக்தி. தமிழ்நாட்டில் மக்கள் இன்னும் 100 வருடங்களுக்கு தமிழ்தேசிய அரசியல் பக்கமே தலைவைத்தும் படுக்கா வண்ணம், தமிழ் தேசிய அரசியல் மீது அருவருப்பை ஏற்படுத்துவது சீமானின் இரெண்டாவது கொண்டிராக்ட்.

இந்த நூதன திருட்டு பற்றி யோசிக்காமல்- வெளித்தோற்றதுக்கு எம்மை பற்றி கதைக்கும் ஐந்தாம் படைகளை எல்லாம் ஆதரிக்க வேண்டாமே என்பதே என் நிலைப்பாடு.

8 hours ago, பையன்26 said:

இதை சொன்ன‌வ‌ர் எந்த‌ க‌ட்சியை சேர்ந்த‌வ‌ர் , 

சீமான் ரோவின் ஆளும் கிடையாது உள‌வுத்துறையின் ஆளும் கிடையாது , 2009ம் ஆண்டு இருந்த‌ சீமான் தான் இப்ப‌ , சீமான் வெறும் பைய‌ன் என்று சொல்லுப‌வ‌ர்க‌ள் ஏன் க‌த‌றின‌ம் அவ‌ர‌ க‌ண்டு , அவ‌ர‌ அவ‌ர் பாட்டில‌ விட‌ வேண்டிய‌து தானே , 

மாவீர‌ர் மீது உறுதிமொழி எடுத்து விட்டு தான் த‌மிழ் நாட்டில் ஒவ்வொரு தொகுதியிலும் கிளை திற‌க்கின‌ம் , 

அடுத்த‌வ‌ன் ஆயிர‌ம் சொல்லுவான் அதை எல்லாம் ந‌ம்புவ‌தா 

கட்சி சாராதவர். சீமானை விட தனிப்பட்டு எம் போராட்டத்துக்கு உதவியவர். ஆனால் வெளுத்ததெல்லாம் பால் என நம்பும் அப்பாவி கோவிந்தன் இல்லை.

8 hours ago, Maruthankerny said:

எல்லாம் பார்ப்பவனின்  பார்வையில் இருக்கிறது.

மலையடி ஓரமாக ஒரு கல்லு கிடக்கிறது அதை ஒரு சிற்பி எடுத்து நடராஜர் போல 
சிலை செதுக்கிறான் .... அதை கொண்டு சென்று சிதம்பரம் கோவிலில் வைக்கிறார்கள் 
இன்று கோடி கணக்கானவர்கள் அந்த கல்லை கண்டு அருள் பெறுவதுக்காக வரிசையாக 
நிற்கின்றார்கள் தினமும். சிற்பியின் உளி கல்லின் சில பாகங்களை அகற்றியதை தவிர 
கல்லில் வேறு எந்த மாற்றமும் இன்றுவரை இல்லை அதன் மீதி கற்கள் எல்லாம் அதே தண்மையுடன் 
இன்றும் ஒரு மலையடி வாரத்தில் கிடக்கலாம். ஆனால் இன்று சிதம்பரம் செல்லும் பலர் திரும்பி வந்து தமது வாழ்வை மாற்றி இருக்கிறார்கள் எதோ ஒரு அருள் சக்தி கிடைத்தாக உணர்ந்துகொள்கிறார்கள். சிதம்பரம் சென்ற ஒருவர் எமக்கு நாயன்மாரில் ஒருவராக இருக்கிறார். நீங்கள் கல்லின் தன்மையை பற்றியே பேசுகிறீர்கள். நீங்கள் சொல்வது உண்மைதான் கல்லின் தன்மை பக்கதர்கள் வந்துபோவாதல் எந்த மாறுதலையும் பெறவில்லை. அது முன்பு எவ்வாறு இருந்ததோ இப்போதும் அவ்வாறே இருக்கிறது.

இங்கு மேலைநாடுகளில்  அடிக்கடி மோட்டிவேஷனல் ஸ்பீக் என்று நடக்கும் நீங்களும் 
சிலதுக்கு கட்டாயம் சென்று இருப்பீர்கள் நானும் சென்று இருக்கிறேன். முன்னைநாள் ஜனாதிபதிகள் 
பில்லியனர்கள்  அவ்வாறு எதையாவது சாதித்தவர்கள் வந்து வெறும் 10-15 நிமிடம் பேசுவார்கள் 
அதுக்கு சென்ற பலர் அன்றில் இருந்து தமது வாழ்வை மாற்றி பல ஆயிரக்காணோர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்ருக்கிறார்கள். இதை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு வெறும் 10 நிமிட பேச்சுதான் .
ஆனால் அதுக்கு $1000-1500 வரை டிக்கெட் வாங்கி உள்ளே போனவன் பார்வை அது அல்ல. அவனுடைய கவனம் எல்லாம்  எதோ ஒரு மந்திரத்தையையோ தந்திரத்தையோ நான் முன்னேறுவதுக்காக இவர் சொல்லப்போகிறார்  என்ற கவனம் மட்டுமே இருக்கும் .....அதை அவன் வெறும் 10 நிமிடமாக பார்ப்பதில்லை.
அதிலும் விட மிக அழகாக அதே விடயத்தை வெளியிலே பலர் சொல்லியிருப்பான்  ஆனால் சிலருக்கு  அது தீயாக  பற்றிக்கொள்கிறது.  பல பணக்காரர்கள் பிரபலமான பணக்காரர்களுடன் சும்மா ஒரு 30 நிமிட லஞ்ச் சாப்பிடுவதுக்கு  $50000 - ஒரு லட்ஷம் வரை கூட காசு கட்டி போகிறார்கள் அந்த 30 நிமிடத்தில் பேசமுடியாத  விடயங்களை  கூட அதே பிரபல்யம் புத்தகமாக மிக விளக்கமாக எழுதி விட்டிருப்பார்கள். நான் இவருடன்  லஞ்ச் சாப்பிடடேன்   என்ற ஒரு தகுதியை வைத்துக்கொண்டே மேலே மேலே முன்னேறிய பலர் எங்கும்  இருக்கிறார்கள். அதுக்காக அந்த பிரபலம் தனது வேலையை விட்டுவிட்டு இவருடன் சாப்பிட்டு கூத்தடித்ததாக  அது பொருள்படுமா? 

பிரபாகரனுடன் கூடவே இருந்த ஒருவர் எனக்கு தெரிய இன்று சுவிஸ் நாட்டில் இருக்கிறார் 
இவர்கள் ஒவ்வரு நாளும் பிரபகரனை பார்த்தவர்கள். ஆனால் இன்று எம்மைப்போல சாதாரண 
ஒரு புலம்பெயர் அகதியாக இன்று இருக்கிறார். இவ்வாறுதான் எல்லோரும் இருக்கவேண்டுமா?
ஒரு நாளில் பார்த்த சீமான் பிராபகரனை தமிழகத்த்தின் பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சென்று சேர்த்து இருக்கிறான். பிரபாகரனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள் என்பதுதான் உங்களில் மாறுதலை கொண்டுவருவது தவிர  ..... பிராபகரன் மாறுவதில்லை பிரபாகரன் ஒரு பிரபாகரன்தான். 

உங்கள் இந்திய நண்பருக்கு சொல்லுங்கள் ஆப்பிள் கீழே வீழும்போது எடுத்து உண்டுகொண்டு இருந்த 
உலகில்தான்  நியூட்டனும் இருந்தான் என்று. அவன் உணவை தாண்டி ஏன் வீழ்கிறது? என்ற கேள்விக்கு சென்றாதல்  இன்றும் உலகில் வாழ்கிறான் இனியும் வாழ்வான். நியுடனுக்காக ஆப்பிள் மாறியதில்லை 
ஆப்பிள் ஆப்பிளாகவே இருந்தது. மாறியது ஒரு மனிதனின் பார்வையும் சிந்தனையும் என்று சொல்லுங்கள். 

கொஞ்சம் கருணை காட்டுங்கள் மருது. நான் பட்ட துன்பம் என்னோடு போகட்டும், இதை அவருக்கு வாசித்துக் காட்டப்போய், பாவம் வாழ வேண்டிய வயசு 😂

Link to comment
Share on other sites

 • Replies 193
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒரு இந்திய பேராசிரியருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. சீமானைப் பற்றிப் பேச்சு வந்தபோது சில அரசியல் விடயங்கள் தீவிரமாக மக்கள் மத்தியில் அலசப்படும் போதெல்லாம் இப்படியான சீமானின் பேச்சு மக்கள் மனங்களை  திசை திருப்புவதற்காக றோவினால் பயன்படுத்தப்படுகிறார் என்றும் அவர் சாதாரணமாக சுயநினைவுடன் பேசும்போது இப்படிப் பேசுவதில்லை என்றும் மதுபானம் குடித்து விட்டே சுரனையே இல்லாது இப்படி உளறுகிறார் என்கிறார். 

எனது நண்பர் பரந்த அறிவு, அரசியல் ஞானம் உள்ளவர். ஒரு மரக்கறி கடையில் வேலை செய்கிறார்.

சீமான் குடித்து விட்டு மேடை ஏறுவதில்லை. உங்கள் நண்பர் என்ன ஊத்தி கொடுத்தாரா அல்லது மணந்து பார்த்தாரா. குடி வெறியில் பேசுபவரை பார்த்தாலே தெரியாதா ?

சீமான் ஒரு அற்புதமான ஆனால் நாகரீகம் தப்பிய மேடை பேச்சாளன். 

1 hour ago, பையன்26 said:

உங்க‌ளின் க‌ருத்துட‌ன் உட‌ன் ப‌டுகிறேன் ம‌ருத‌ங்கேணி அண்ணா , 

குவாட்ட‌ரும்  பிரியாணியும் இல்லாம‌ ஒரு கூட்ட‌ம் கூடுது என்றால் அது நாம் க‌ட்சிக்கு தான் , யாழில் புது புர‌ளிய‌ கில‌ப்பியாச்சு , அண்ண‌ன் சீமான் குடிகார‌ன் என்று , நீங்க‌ள் சொன்ன‌ மாதிரி இதை க‌ட‌ந்து செல்வ‌து தான் ச‌ரி ,

அண்ண‌ன் மீண்டும் த‌லைவ‌ரின் விருந்தை ப‌ற்றி ஏன் க‌தைக்க‌ வேண்டி வ‌ந்த‌து என்றால் , அண்ண‌ன் சும்மா இருந்தாலும் திருட்டு திராவிட‌ கும்ப‌ல்க‌ள் ஆமைக் க‌றி ஏக்கே , இதை தான் ப‌ல‌ வ‌ருட‌மாய் அவ‌ர் மேல் குற்ற‌ சாட்டாய் வைக்கின‌ம் ( அண்ண‌ன் சீமான் மேல் அவ‌ர்க‌ளால் வேறு குற்ற‌ சாட்டுக‌ள் வைக்க‌ முடியாது ) 

இந்த‌ திரியில் பிழ‌ப்பு இணைத்த‌ காணொளி 4 நிமிட‌த்துக்கு கிட்ட‌ , போலிம‌ர் தொலைக் காட்சி யாருடைய‌ தொலைக் காட்சி , அது முற்றிலும் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு எதிரான‌ தொலைக் காட்சி , 

2009 ம‌ற்றும் 2010 இந்த‌ இர‌ண்டு ஆண்டும் அண்ண‌ன் சீமானின் வாழ்க்கை சிறையில் , ஈழ‌ பெண்னை தான் திரும‌ண‌ம் செய்வேன் என்று விடா பிடியில் நின்று பிற‌க்கு அது ஏன் த‌டை ப‌ட்ட‌து என்று உங்க‌ளுக்கு ந‌ல்லாவே தெரியும் ம‌ருத‌ங்கேணி அண்ணா , 

அந்த‌ திரும‌ண‌ வாழ்க்கையிலும் ப‌ல‌ அவ‌மான‌ங்க‌ளை ச‌ந்திச்சார் , அண்ண‌ன்  முன்னால் போராளியின் ம‌னைவியை ம‌ற‌ந்தாலும் கூட‌ திராவிட‌ம் அதையே தூக்கி பிடிச்ச‌து , ஈழ‌ பெண்னை திரும‌ண‌ம் செய்கிறேன் என்று சொல்லி போட்டு இப்ப‌ க‌ய‌ல்விழியை செய்து விட்டார் என்று தூற்றீனார்க‌ள் , அதையும் தாங்கி கொண்டு அர‌சிய‌ல் ப‌ய‌ண‌த்தை தொட‌ர்ந்தார் , 

2015ம் ஆண்டு த‌மிழ் நாட்டில் த‌ங்கி இருக்க‌ வேண்டி வ‌ந்த‌து , அப்போது அண்ண‌ன் சீமானை ப‌ற்றி தெரிந்து கொள்ள‌ ந‌ல்ல‌ வாய்ப்பு கிடைத்த‌து ( சுமேஸ் அண்ணா சீமான் அண்ண‌னின் நெருங்கிய‌ ந‌ண்ப‌ர் )  சுமேஸ் அண்ணாவும் உங்க‌ளை மாதிரி என‌க்கு ந‌ல்ல‌ ஒரு அண்ணா , நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு சுமேஸ் அண்ணாவின் ப‌ங்கு பெரிய‌து , 

அண்ண‌ன் சீமான் நேரில் ஆள் மிக‌வும் அமைதி , க‌ள்ள‌ம் க‌வ‌ட‌ம் இல்லா அன்பான‌ வார்த்தைக‌ளில் தான் க‌ல‌ந்துரையாடினார் என்னுட‌ன் ,

முந்தி எல்லாம் , அண்ண‌ன் சீமான் ஒரு பொது கூட்ட‌த்தில் பேச‌ போன‌ பாதுகாப்பு இல்லாம‌ பேசி போட்டு வ‌ருவார் , இப்போது அண்ண‌னின் ஜீப்பை பின் தொட‌ர‌ இர‌ண்டு வாக‌ண‌ங்க‌ள் , கார‌ண‌ம் அண்ண‌ன் சீமானை எப்ப‌டியாவ‌து போட்டு த‌ள்ளிட‌னும் என்று , திராவிட‌ம் தொட்டு இன்னும் ப‌ல‌ர் அண்ணன் சீமானின் த‌லைக்கு விலை பேசின‌ம் , ப‌கிர‌ங்க‌ மிர‌ட்ட‌லும் விடின‌ம் , 

இந்த‌ 9 வ‌ருட‌த்தில் த‌மிழ் நாட்டிலும் ச‌ரி புல‌ம்பெய‌ர் நாட்டிலும் ச‌ரி அண்ண‌ன் சீமான் எவ‌ள‌வோ ந‌ல்ல‌தை எடுத்து சொல்லி இருப்பார் , அது இவ‌ர்க‌ளின் காதில் கேட்டாலும் கேக்காது போல் ந‌டிப்பார்க‌ள் , 

அண்ண‌ன் சீமானுக்கு எதிராக‌ எழுதும் இவ‌ர்க‌ள் அவ‌ரின் க‌ட்சி கொள்கை தாங்க‌ள் ஆட்சிக்கு வ‌ந்தால் என்ன‌ எல்லாம் செய்வோம் என்று பெரிய‌ அறிக்கையாய் வெளியிட்ட‌வை , அதை இவ‌ர்க‌ள் வாசித்து இருக்க‌ வாய்ப்பு இல்லை , 

க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் அண்ண‌ன் சீமான் சொன்ன‌து இப்போது நிஜ‌த்தில் ந‌ட‌க்குது , 

இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு ம‌ருத‌ங்கேணி அண்ணா , நானோ நீங்க‌ளோ ஆயிர‌ம் ந‌ல்ல‌து எழுதினாலும் இதுங்க‌ள் திருந்த‌ போர‌து இல்லை , அவ‌ர் சொன்னார் இவ‌ர் சொன்னார் என்று பூஞ்சாண்டி க‌தைக‌ள் எழுதிவின‌ம் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் 

பையா அல்லது மருது,

அப்படி என்ன இக்கட்டு வந்து சீமானால் சொன்னபசி ஒரு ஈழத்தில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் முடிக்க, முடியாமல் போனது?

சொன்னால் நாங்களும் சீமானின் தியாகத்தை பற்றி அறிந்து கொள்வோமே.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நான் எங்கே ஐயா சீமானைத் தூற்றினேன்.

பிரபாகரன், புலிகளுடன் தனக்கு இருந்த தொடர்பை பற்றி நகைபுக்கிடமாக கதைத்து, அதன் மூலம் புலிகளை பற்றி வேண்டும் என்றே ஒரு தவறான கீழ்மதிப்பீட்டை தமிழ்நாட்டில் ஏற்படுத்துவது.

புலிகளுக்கு சற்றேனும் சம்பந்தமில்லாத இனகுரோதத்தை கையில் எடுத்து, வைகோ முதல் பெரியார் வரை அத்தனை தமிழ் தலைவர்களையும் திட்டித் தீர்ப்பது, தம்பிமாரை விட்டு சைக்கோ, கொல்டி, என தூசிக்க வைப்பது. இதன்மூலம் தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் மத்தியில் சாதிய அடிப்படையில் ( முக்குலத்தோர், வன்னியர், பறையர், பள்ளர், நாடார், பிராமணர் தமிழர் ஆனால் நாயக்கர், முதலியார், பிள்ளைகள், கோனார், யாதவர் இதர சாதிகள் தமிழர் அல்லாதோர்)  ஒரு பிரிவினையை ஏற்படுத்துவது. 

இப்படியான நடவடிக்கைகள் சீமானின் மீதான பின்வரும் சந்தேகம்களை ஏற்படுத்துகிறது.

1. சீமான் ஒரு Trojan Horse. தமிழ்நாட்டில் திராவிட கொள்கையை அகற்றி, அந்த வெற்றிடத்தை இந்துதுவா நிரப்பும் நிகழ்சி நிரலில், முதல் அங்கம் திராவிடத்தை அகற்றுவது, இரெண்டாவது அங்கம் அந்த வெற்றிடத்தை இந்துதுவாவால் நிரப்புவது. சீமானின் பிராமணபாசம், முருகன் முப்பாட்டன், வீரத்தமிழ் முண்ணணி, தனியே திராவிட தலைவர்களை தாக்காமல், திராவிட கொள்கைகளை குறிவைத்து தாக்குவது ( குறிப்பாக பெரியாரை தாக்குவது) என்பன சீமானின் நிகழ்சி நிரல் யாதென கூறி நிற்கிறன.

2. சீமானின் ரெண்டாவது வேலை, தமிழ்நாட்டில் தமிழ் தேசியத்தை தலை எடுக்கவிடாமல் செய்தல். தமிழ் தேசியத்தை தானே சுவீகரித்து, திருமுருகன் காந்தி போன்றோரை கூட துரோகிகளாக சித்தரித்து, நெடுமாறனை ஒதுக்கி, தமிழ் நாட்டில் - தமிழ் தேசியம் என்றாலே, பாசிசம், வன்முறை வழிப்பட்ட இனவாதம் எனும் பிம்பத்தை சாதாரண மக்கள் மத்தியில் மிக வினைத்திறனாக கட்டி எழுப்புகிறார் சீமான்.

இது கூடிக் கெடுக்கும் யுக்தி. தமிழ்நாட்டில் மக்கள் இன்னும் 100 வருடங்களுக்கு தமிழ்தேசிய அரசியல் பக்கமே தலைவைத்தும் படுக்கா வண்ணம், தமிழ் தேசிய அரசியல் மீது அருவருப்பை ஏற்படுத்துவது சீமானின் இரெண்டாவது கொண்டிராக்ட்.

இந்த நூதன திருட்டு பற்றி யோசிக்காமல்- வெளித்தோற்றதுக்கு எம்மை பற்றி கதைக்கும் ஐந்தாம் படைகளை எல்லாம் ஆதரிக்க வேண்டாமே என்பதே என் நிலைப்பாடு.

கட்சி சாராதவர். சீமானை விட தனிப்பட்டு எம் போராட்டத்துக்கு உதவியவர். ஆனால் வெளுத்ததெல்லாம் பால் என நம்பும் அப்பாவி கோவிந்தன் இல்லை.

கொஞ்சம் கருணை காட்டுங்கள் மருது. நான் பட்ட துன்பம் என்னோடு போகட்டும், இதை அவருக்கு வாசித்துக் காட்டப்போய், பாவம் வாழ வேண்டிய வயசு 😂

எங்களுக்கு தெரியாமல் லாராவிடம் ஓன்லைனின் டியூசன் எடுக்கிறீர்களா?
ஒரே கான்ஸ்பிரஸி தியறியாக இருக்கு 

Link to comment
Share on other sites

12 hours ago, நிழலி said:

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து வீழ்ந்த பின் அங்குள்ள தலித்துகள் மீது ஏவப்பட்ட வன்முறைக்கான அடிப்படை சாதியம். அந்த சாதியம் இந்துத்துவத்தில் இருந்தும் பார்ப்பனியத்திலும் இருந்து தான் மூர்க்கம் கொள்கின்றது. சீமான் செய்வது அந்த பார்ப்பனியத்தை எதிர்க்கமால் வெறும் திராவிடத்தை எதிர்த்து செய்யும் வெற்று கோச அரசியல். தமிழ் நாட்டில் இன்றும் பிஜேபி போன்ற வகுப்புவாதக் கட்சி தலையெடுக்க முடியாமல் இருப்பதன் காரணம் இன்றும் அங்கு இருக்கும் திராவிட கொள்கையின் செல்வாக்கினால் மட்டுமே. அத்துடன் வட மானிலங்களில் இடம்பெறும் மதச் சண்டை, தலித்துகள் மீதான நிறுவனப்படுத்தப்பட்ட வன்முறை, சிறுபான்மையினர் மீதான வன்முறை போன்றவை தமிழகத்தில் நிகழாமைக்கு அடிப்படை காரணம் பெரியாரின் செல்வாக்கும் திராவிட கொள்கையுயே. திமுக / அதிமுக போன்ற திராவிடக் கட்சிகள் ஊழலிலும், பதவி வெறியிலும் திளைத்து கொள்ளை அடித்தமையை வைத்துக் கொண்டு திராவிடக் கொள்கை முற்றிலும் பிழை என்று சொல்லி அதற்கு பதிலாக தனித் தமிழர் எனும் பாசிச கொள்கையை பொய்யும் பிரட்டும் பித்தலாட்டம் ஊடாக முன் வைப்பவராகவே சீமானை பார்க்கின்றேன். சீமானின் அரசியல் தமிழ் நாட்டை பார்ப்பனியத்துக்கு தாரை வார்க்கும் அரசியல். பிஜேபி தான் காலூன்ற சீமானை கண்டும் காணமல் இருப்பதன் காரணமும் இதுவே.

ஆமாம் இந்த சம்பவத்திற்கு இரண்டு சாதிகள் தான் காரணம். ஆனால் அதில்  பார்பன உயர்சாதி  சம்மந்தப்படவில்லை. அதற்கு பல படிநிலைகள் கீழடுக்கில் உள்ள இரண்டு சாதிகள் சம்மந்தப்படுகின்றன.. திராவிடக் கொள்கையின் படி  பார்பனரை ஒழிப்பதால் இந்த சாதியப் பிரச்சனை எப்படி முடிவுக்கு வரும் ?  இல்ல பல சாதிகளுக்கு இடையில் இருக்கும் பிரச்சனைகள் முடிவுக்கு வருமா ?  1944 ல் தொடங்கிய திராவிடக்கழகம் இன்றுவரையான நகர்வில் எந்த சாதியும் ஒழியவும் இல்லை பார்ப்பன ஆதிக்கம் வீழவும் இல்லை. மாறாக இன்றய  நவீன சமூக ஊடகங்களில் சாதியம் வளர்கின்றது. அதே நேரம் திராவிடக் கழகத்தில் இருந்து தோற்றம் பெற்ற திமுக அதிமுக அரசியல்வாதிகள் அரசியலை பயன்படுத்தி உழலை செய்து சாராய ஆலைகளையும் மது  விற்பனையையும் ஆட்சி செல்வாக்கை பயன்படுத்தி தமக்கு சாதகமாக்கி பெரும் முதலாளித்துவ வர்க்கமாக உருவெடுத்துவிட்டது. கடந்த ஐம்பதாண்டுக்குமேலாக நடந்த இவர்களது ஆட்சியில் தமிழ்நாட்டின் இயற்கை வளம் நீர்வளம் பெருமளவு சூறையாடப்பட்டுவிட்டது. ஆறு குளங்கள் நீர் நிலைகள் அழிக்கப்பட்டுவிட்டது. இதற்கு எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத்தில் பல்லாயிரம் மக்கள் படுகொலை செய்யப்படும் போதும் சரி தமிழக மீனவர்கள் கொல்லப்படும் போதும் சரி இந்த திராவிட ஆட்சி அரசியலால் அதை தடுக்க முடியவில்லை. இவ்வாறான பல நிகழ்வுகளுக்கு எதிர்வினை ஒன்று உருவாகும். அது தமிழ்நாட்டில் நடக்கின்றது. முன்னர் திராவிடம் சார்பாக பல கருத்துக்களை இந்தக் களத்திலேயே நான் பதிந்துள்ளேன் அதற்காக இப்போதும் நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்று தொங்க முடியாது. ஒவவொன்றின் விழைவுகளை பொறுத்தும் கேள்விகள் எழும்,  நியாயங்களை நோக்கிய சிந்தனைகள் எழும். புதிய கெள்கைகள் இயக்கங்கள் மக்கள் எழுச்சிகள் உருவாகும். அதை மறுதலிக்க முடியாது. திராவிட இயக்கம் ஒன்றும் திடீர் என வானத்தில் இருந்து குதித்ததில்லை. அயோத்திதாசரால் ஆயிரத்தி எண்ணூறுகளின் கடசியில் திராவிட மகாஜன சபை பின்னர் தென்னிந்திய மகாஜன சபை நீதிக்கட்சி மறைமலை அடிகளின் தனித்தமிழ் இய்கம் அதற்கு முரண்பாடாக திராவிடக் கழகம் (உதராணமாக தமிழ் நீசபாசை என்று பார்பானியம் சொல்லும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் சொல்வார். )  கால ஓட்டத்தில் நகர்கின்றது. இன்றய காலத்தில் மேலே உள்ள கேள்விகளால் நாம் தமிழர் என்று திராவிடத்துக்கு முரண்பாடன கருத்தியல் உருவாகின்றது.  இந்த கருத்தியல் தனி மனித  கற்பனையில் இருந்து உருவாவதில்லை மாறாக பல நிகழ்வுகள் கேள்விகள் பாதிப்புகள் அரசியல் வஞ்சகங்கள் என பலதரப்பட்ட நிலையின் விழைவால் உருவாகின்றது.  இதையெல்லாம் பொய் பித்தலாட்டம் பாசிசம் குடித்துவிட்டு உளருகின்றார் றோவின் ஆள் அது இது என்று எமக்கு விருப்பப் பட்ட கண்ணாடிகளை போட:டுக்கொண்டு பார்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு எழுச்சி எந்த பின்னணியில் உருவாகின்றது அதற்கான தேவை என்ன போன்ற நோக்கிலேயே எனது ஆர்வம் உள்ளது. 

ஒரு பதிவில் உள்ள கருத்துக்கு எனது பதில் கருத்தே நான் எழுதுவது  தவிர கருத்தை எழுதுபவருக்கான பாதில் இல்லை. எனக்கு இக்களத்தில் யாரையும் தெரியாது என்னையும் யாருக்கும் தெரியாது. யாரும் நண்பனும் இல்லை பகைவனும் இல்லை , இந் நிலையில் அனுதாபங்கள் கைதட்டுகளுக்கு எல்லாம் எந்த அர்த்தமும் இல்லை என்பதால் அவ்வாறான உங்கள் கருத்துக்கு என்னிடம் பதில் இல்லை. 

-----------------------------------------------

திராவிடக் கட்சிகளான திமுக அதிமுக இதுவரையில் வன்னியர் ஓட்டு அதிகமுள்ள இடத்தில் வன்னியரை வேட்பாளராக நிறுத்துகின்றது அதேபோல் கவுண்டனர் தேவர் என எந்த சாதி ஓட்டு எங்கு அதிகமோ அங்கு அந்த சாதி வேட்பாளரை நிறுதிவந்திருக்கின்றது. இதனால் சாதிக் கட்சிகள் வெல்லவில்லை சாதியை வைத்து வென்றது திராவிடக் கட்சிகளே,  சாதியால் இப்போது யாருக்கு லாபம் ? சாதியை தக்கவைத்தது யார் வளர்த்தது யார்? பயன்படுத்தியது யார் ? கேள்விகள் எழுகின்றது. கேள்வி எழுப்புவதை பாசிசம் பொய் பித்தலாட்டம் என்றால் அது சாதிய தக்கவைப்பு என்றே அர்த்தமாகும்.. கேள்விகளில் நியாயம் இருக்கும் போது அதை மதிப்பது அறிவா இல்லை மறுதலிப்பது அறிவா ? கேள்வியை எழுப்புவது யார் அவர் எமக்கு பிடித்தவரா என்று பார்ப்பவர்களே இக்களத்தில் அதிகம் ஆனால் எனக்கு நபரை விட அவர் எழுப்பும் கேள்விகளே முக்கியம்.  அக் கேள்விகளின் பின்னணியே முக்கியம். ஒருவரை பிடிக்கா விட்டால் அவரின் எந்தக் கருத்தையும் உள்வாங்குவதில்லை. ஆனால் அவரை பற்றி கருத்தாடுகின்றோம் என்ற போர்வையில் வாந்தி எடுப்பது. 

தொடர்புபட்டது ஆனால் உங்கள் கருத்துக்கன பதில் இல்லை

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நான் எங்கொ ஒரு சந்தர்ப்பத்தில்கூறியது நினைவிருக்கு
மத்திய அரசின் வெளியுறவுக்கொள்கையாளர்கள் தங்களுக்கு எது தேவையோ அதை மத்திய அரசின் உளவுத்துறைமூலம் சாதிப்பார்கள். சீமானை தம்ழ்த்தேசியம் எனும் கோசத்தில் வளரவிட்டு பின்பு அவரிடமுள்ள தவறுகளையோ வழக்குகளையோ வைத்துப் பயமுறுத்திதங்கள் வழிக்குக்கொண்டுவந்துவிட்டார்கள். பொதுவெளியில் இதுவரை சீமான் தன்னை அப்பழுக்கற்ற சுத்தமானவர் எனக்காட்டிக்கொண்டிருக்கிறார் ஆனால் கடந்தகாலத் தவறுகளில் ஏதாவது உளவுத்துறையிடம் மாட்டியிருக்கும் அல்லது வழக்குகள்மூலம் அவரை வருடக்கணக்கில் அரசியலில் இயங்கவிடாமல்செய்யலாம். இவைகளைப் பின்னணியாகவைத்து மத்திய உளவுத்துறை சீமானை வழிநடத்தலாம்.

தவிர, ஈழத்தில் முள்ளிவாய்க்கலிலும் அதற்குமுன்பும் நடந்தேறிய இனச்சுத்திகரிப்பு, இனப்படுகொலை இவைகளில் இந்தியாவின் பங்களிப்பே பிரதானமிதனால் தமிழ்நாட்டில் தமிழ்தேசியம்சார்ந்தோர் உண்மையான ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாக ஒன்றுபடுவது மத்திய அரசுக்கு ஆபத்தானதாகும் சிலவேளை அது காலப்போக்கில் வளர்ச்சி அடைந்தால் எதிர்காலத்தில் சிக்கல் ஏற்படலாம் அதுவே தனித்த தமிழ்நாடு எனும் கோசத்தை ஊக்குவிக்கலாம்.

ஆதலான் ஒரு போலித் தமிழ்தேசிய இயக்கத்தை நாமே உருவாக்கு அல்லது உருவாகியுள்ள தமிழ்தேசிய உணர்வுள்ள இயக்கத்தைக் கைப்பற்றி தமிழ்நாட்டிலுள்ள தமிழ்த்தேசிய உணர்வுள்ளோரை அதற்குள் விழவைத்தால் காலப்போக்கில் அவர்களது எண்ணங்களை, அவர்களது தோல்வியின்மூலம் நீர்த்துப்போகச்செய்யலாம். எதிர்காலத்திலும் இப்படி முயற்சிசெய்வோருக்கும் அவ்வியக்கத்தின் தோல்விகண்டு தமிழ்தேசியத்தின்பால் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவதில் தயக்கம் ஏற்படும் என்பதன் நோக்கமே சீமானை வளரவிட்டு தங்கள் கைக்குள் கொண்டுவந்து பின்பு காயடிப்பதற்கான இப்போதைய நடவடிக்கை.

அதைவிட இன்னுமொன்று மத்த்ய அரசுக்கு தமிழ்நாட்டில் வாண்டப்பட்டவர் நடிகர் ரஜனிகாந் அவர் எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் முக்கிய அரசியல்வாதியாக வரவேண்டுமெனில் தமிழர் தமிழர் அல்லாதோர் தமிழ்த்தேசியவாதி இந்தியத்தேசியவாதி, திராவிடர் வடமாநிலத்தார் எனும் ஒரு குழப்பநிலை நீடித்திருக்கவேண்டும் அப்போதுதான் காலப்போக்கில் அதிமுகவை பஜக தன்வசப்படுத்தி சின்னம் கொடி இவைகளுடன் செய்கூலி சேதாரம் இல்லாமல் ரஜனியின் கைகளில் ஒப்படைக்கலாம் .

இதில் ஓபிஎஸ் ஈபிஎஸ்  தப்புவதற்கு அவர்கள் செய்த ஊழலே தடையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சண்டமாருதன் said:

...

... எனக்கு இக்களத்தில் யாரையும் தெரியாது என்னையும் யாருக்கும் தெரியாது. யாரும் நண்பனும் இல்லை பகைவனும் இல்லை...

...

என்ன சாமிகளே, இப்படி தொபுக்கடீர்ன்னு தீர்ப்பு சொல்லீட்டீங்களே..? 😥

யாழில் இருப்பவர்கள் அனைவரும் முன்னே பின்னே இருந்தாலும் தங்கள் நண்பர்கள்தானே..? இல்லையா பின்னே..??  😋

தங்களின் அனுபவத்திலோ, இல்லை செய்திகளிலோ நிச்சயம் படித்திருப்பீர்கள்..

எனது அனுபவத்தில் தமிழ்நாட்டில் திராவிட சிந்தனையை மட்டும் விதைக்காமலிருந்தால் எங்கோ குக்கிராமத்திலிருந்து வந்த நானெல்லாம் பட்ட மேற்படிப்பு வரை படித்திருக்க முடியாது. வெளிநாடு வந்து இப்படி குப்பை கொட்டியிருக்க முடியாது. கல்வி எங்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்திருக்கும். இன்றுவரை அரசு அலுவலகங்களிலும், வங்கிகளும், நீதி மன்றங்களிலும் பார்த்தால் மேல்தட்டு மக்களின் ஆதிக்கமே உள்ளது. மிகக் குறிப்பாக பிராமணீயம். சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும், வழிபாட்டு தலங்களிலும் உதாசீனத்தை அனுபவித்தவர்களுக்கு புரியும்.

தனிப்பட்ட அரசியல் தலைவர்களின் ஈகோவினால், கட்சிகள் உடைந்து சிதறினாலும், இன்னமும் திராவிட சிந்தனையும், அதனை சார்ந்த மொழி உணர்வுமே தமிழ்நாட்டின் உயிர்துடிப்பு (கடவுள் மறுப்பு கொள்கையை தவிர - இது மக்கள் மனதில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை). அதனாலேயே சிறிதாவது சமூக மாற்றங்களும், நீங்கள் கூறிய சாதிய விலக்கல்களும் மட்டுப்படுத்தபட்டன. இத்துடிப்பு மட்டும் இல்லையெனில் ஆரிய சக்திகள் எப்போழுதோ தமிழகத்தை விழுங்கியிருக்கும். 

"துமாரா நாம் க்யாஹை..?" என நான் இந்திதளத்தில் எழுதிக்கொண்டிருந்திருப்பேன்.நீங்கள் இலங்கையன், நான் இந்தியன் என கோடுபோட்டு பிரிந்திருப்போம், ஈழத்தைப் பற்றி தெரிந்தே இருக்காது.

சீமானும் மற்றவர்களைப் போலவே இன்று வந்து திராவிட சிந்தனையின் ஒரு பகுதியை (தமிழுணர்வு) மட்டும் தூக்கிப் பிடித்து அரசியல் வியாபாரம் செய்கிறார், செய்யட்டும். 

ஆனால் இந்த புனைவுகள், புரட்டுகள் வேண்டாமென்றுதானே சொல்கிறோம்..?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maharajah said:

முதலில் பாசிசவாதி என இன்னொருவரை முத்திரை குத்துவதற்க்கு கண்டனம் தெரிவிப்பீர்களா  ??  

பாசிஸம் என்பது  மிகவும் பிற்போக்கான,  அப்பட்டமான, அதி கொடூரமான சர்வாதிகாரம். பாசிஸம் இடதுசாரி எதிர்ப்பையும் இனவெறியையும் தன் பிரதான கருவிகளாகப் பயன்படுத்துவது. இப்படியான அணுகுமுறைகளைக் கொண்டு அரசியல் செய்பவரை பாசிஸவாதி என்று சொன்னால் கண்டனம் தெரிவிக்க அவசியமில்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Maharajah said:

சீமான் விடுதலைப் புலிகளை அவமானப்படுத்துவது ஒரு பக்கம் இருக்கட்டும். 

சீமான் விடுதலைப் புலிகளை அவமானப் படுத்தினார் என்று சொல்லுவதற்கு எனக்கு தகுதி வேண்டுமில்லையா  ? 

தம்பி,நீங்கள் வேண்டுமானால் சூடு ,சுரணை, தன்  மானம் இல்லாத தமிழனாய் இருக்கலாம்  நாங்களும் அப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கா ஏலாது தானே 
 
1 hour ago, Elugnajiru said:

நான் எங்கொ ஒரு சந்தர்ப்பத்தில்கூறியது நினைவிருக்கு
மத்திய அரசின் வெளியுறவுக்கொள்கையாளர்கள் தங்களுக்கு எது தேவையோ அதை மத்திய அரசின் உளவுத்துறைமூலம் சாதிப்பார்கள். சீமானை தம்ழ்த்தேசியம் எனும் கோசத்தில் வளரவிட்டு பின்பு அவரிடமுள்ள தவறுகளையோ வழக்குகளையோ வைத்துப் பயமுறுத்திதங்கள் வழிக்குக்கொண்டுவந்துவிட்டார்கள். பொதுவெளியில் இதுவரை சீமான் தன்னை அப்பழுக்கற்ற சுத்தமானவர் எனக்காட்டிக்கொண்டிருக்கிறார் ஆனால் கடந்தகாலத் தவறுகளில் ஏதாவது உளவுத்துறையிடம் மாட்டியிருக்கும் அல்லது வழக்குகள்மூலம் அவரை வருடக்கணக்கில் அரசியலில் இயங்கவிடாமல்செய்யலாம். இவைகளைப் பின்னணியாகவைத்து மத்திய உளவுத்துறை சீமானை வழிநடத்தலாம்.

தவிர, ஈழத்தில் முள்ளிவாய்க்கலிலும் அதற்குமுன்பும் நடந்தேறிய இனச்சுத்திகரிப்பு, இனப்படுகொலை இவைகளில் இந்தியாவின் பங்களிப்பே பிரதானமிதனால் தமிழ்நாட்டில் தமிழ்தேசியம்சார்ந்தோர் உண்மையான ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாக ஒன்றுபடுவது மத்திய அரசுக்கு ஆபத்தானதாகும் சிலவேளை அது காலப்போக்கில் வளர்ச்சி அடைந்தால் எதிர்காலத்தில் சிக்கல் ஏற்படலாம் அதுவே தனித்த தமிழ்நாடு எனும் கோசத்தை ஊக்குவிக்கலாம்.

ஆதலான் ஒரு போலித் தமிழ்தேசிய இயக்கத்தை நாமே உருவாக்கு அல்லது உருவாகியுள்ள தமிழ்தேசிய உணர்வுள்ள இயக்கத்தைக் கைப்பற்றி தமிழ்நாட்டிலுள்ள தமிழ்த்தேசிய உணர்வுள்ளோரை அதற்குள் விழவைத்தால் காலப்போக்கில் அவர்களது எண்ணங்களை, அவர்களது தோல்வியின்மூலம் நீர்த்துப்போகச்செய்யலாம். எதிர்காலத்திலும் இப்படி முயற்சிசெய்வோருக்கும் அவ்வியக்கத்தின் தோல்விகண்டு தமிழ்தேசியத்தின்பால் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவதில் தயக்கம் ஏற்படும் என்பதன் நோக்கமே சீமானை வளரவிட்டு தங்கள் கைக்குள் கொண்டுவந்து பின்பு காயடிப்பதற்கான இப்போதைய நடவடிக்கை.

அதைவிட இன்னுமொன்று மத்த்ய அரசுக்கு தமிழ்நாட்டில் வாண்டப்பட்டவர் நடிகர் ரஜனிகாந் அவர் எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் முக்கிய அரசியல்வாதியாக வரவேண்டுமெனில் தமிழர் தமிழர் அல்லாதோர் தமிழ்த்தேசியவாதி இந்தியத்தேசியவாதி, திராவிடர் வடமாநிலத்தார் எனும் ஒரு குழப்பநிலை நீடித்திருக்கவேண்டும் அப்போதுதான் காலப்போக்கில் அதிமுகவை பஜக தன்வசப்படுத்தி சின்னம் கொடி இவைகளுடன் செய்கூலி சேதாரம் இல்லாமல் ரஜனியின் கைகளில் ஒப்படைக்கலாம் .

இதில் ஓபிஎஸ் ஈபிஎஸ்  தப்புவதற்கு அவர்கள் செய்த ஊழலே தடையாக இருக்கும்.

சுகன், நீங்கள் தேவையில்லாமல் அதிகம் உணர்ச்சி வசப்படுகிறீர்கள்...முதலில்  ஈழ அரசியலை பற்றி கவலைப்படுவோம்

இந்த திரியை எடுத்துப்  பார்த்தாலே தெரியும்...சீமானை ஆதரிப்போர் தான் மாறி,மாறி தங்களுக்குள் பச்சை  குத்திக் கொள்ளினம் ...ஓரு சிலர் கருத்தை பார்க்காமல் யார் எழுதினோம் என்று பார்க்கினம் தான் இல்லை என்று சொல்லவில்லை...ஆனால் எல்லோரும் அப்படியில்லை....நாங்கள் எழுதுவதை வாசித்து விட்டு அப்படியே ஆமாம் போட்டுட்டு போகோணும் அல்லது அமைதியாய் இருக்கோணும் என்றால் அது  எங்கள் பிழை.

இது இத் திரி சம்மந்தப்பட்ட கருத்தில்லை

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

செபஸ்தியன் எனப்படும் சீமானின் தேசிக்காய்தனமான கருத்துக்கள் எனக்கு அறவே பிடிக்காது. இவரது உரைகளில் மிகவும் தமிழ் துவேசத்தை கணலாம். தேசிக்கய்தனமான இந்த கருத்துக்களில் எதுவும் சாதிக்க முடியாது. 

தவறு எம்மிடமுள்ளது. பல்வேறு இயக்கங்களாக பிரிந்து அடிப்பட்டு எந்த விட்டுக்கொடுப்புகளும் இல்லாமல், ஆளை ஆள் போட்டுத்தள்ளி எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும் எல்லாவற்றையும் விட்டு விட்டு இன்னும் பிரிந்து அடிபடுகின்றோம். இரண்டு நாட்களிற்கு முன்பு ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்ட்ட நளினி என்னும் தாய் தன்னை கருணைக்கொலையாவது செய்யும்படி கேட்டிருந்தார். எவ்வளவு கொடுமை! குற்றம் செய்யாத இந்ததாயை தேசிக்காய்கள் கவனிப்பதில்லை. புலிகளின் பெயரில் உள்ள பினாமி வெளினாட்டு சொத்துக்களை ஆட்டையை போட்டவர்களே இந்த தாயின் ரத்தக்கண்ணீர் உங்களுக்கு தெரியவில்லையா? உங்களுக்குள் இன்னுமா அடிபாடு?

இது இந்த ஏழையின் இயலாமையில் வெளிப்பாடு
 
Link to comment
Share on other sites

நான் ஈழத்திலிருந்து சொல்கிறேன் இனி ஓர் ஈழம் வேண்டாம் அதை நிர்வகிக்கும் திறமை எந்த ஒரு ஈழத்திலிருக்கும் ஒருவனுக்கும் அந்த திறமை கிடையாது 

சீமான் வேண்டுமானால் அங்கிருக்கும் 115 முகாம்களில் லட்சக்கணக்கில்  வாழும் ஈழ மக்களுக்கு குடியுரிமையும் , நல்ல வாழ்வையும் , தொழிலையும் ஏற்படுத்திக்கொடுக்கட்டும் நாங்கள் இங்கிருந்து வாழ்த்துவோம்.

அத விட்டுட்டு ஈழம் ஈழம் கத்துக்கொண்டே இருப்பாரானால் அரசியலில் அப்படியே கத்திக்கொண்டே இருப்பார்................முன்னேற்றம் இல்லாமல் 

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

தம்பி,நீங்கள் வேண்டுமானால் சூடு ,சுரணை, தன்  மானம் இல்லாத தமிழனாய் இருக்கலாம்  நாங்களும் அப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கா ஏலாது தானே 
 
சுகன், நீங்கள் தேவையில்லாமல் அதிகம் உணர்ச்சி வசப்படுகிறீர்கள்...முதலில்  ஈழ அரசியலை பற்றி கவலைப்படுவோம்

இந்த திரியை எடுத்துப்  பார்த்தாலே தெரியும்...சீமானை ஆதரிப்போர் தான் மாறி,மாறி தங்களுக்குள் பச்சை  குத்திக் கொள்ளினம் ...ஓரு சிலர் கருத்தை பார்க்காமல் யார் எழுதினோம் என்று பார்க்கினம் தான் இல்லை என்று சொல்லவில்லை...ஆனால் எல்லோரும் அப்படியில்லை....நாங்கள் எழுதுவதை வாசித்து விட்டு அப்படியே ஆமாம் போட்டுட்டு போகோணும் அல்லது அமைதியாய் இருக்கோணும் என்றால் அது  எங்கள் பிழை.

இது இத் திரி சம்மந்தப்பட்ட கருத்தில்லை

மன்னிக்கவும் ரதி அக்கா, 

நான்  எழுதியதை,  குறிப்பாக எனக்கு என எழுதியதை கொஞ்சம் ஆற அமர இருந்து வாசியுங்கள் எல்லாம் புரியும். 

Link to comment
Share on other sites

2 hours ago, கிருபன் said:

பாசிஸம் என்பது  மிகவும் பிற்போக்கான,  அப்பட்டமான, அதி கொடூரமான சர்வாதிகாரம். பாசிஸம் இடதுசாரி எதிர்ப்பையும் இனவெறியையும் தன் பிரதான கருவிகளாகப் பயன்படுத்துவது. இப்படியான அணுகுமுறைகளைக் கொண்டு அரசியல் செய்பவரை பாசிஸவாதி என்று சொன்னால் கண்டனம் தெரிவிக்க அவசியமில்லை.

அப்படியானால் நீங்கள் தாராளமாக எனக்கு கண்டனம் தெரிவிக்கலாம்.  

சீமான் பாசிசவாதி என்றால் அவரை ஆதரிப்பவர்களும் பாசிசவாதிகள்தானே ??

நான் ஆரம்பத்திலிருந்தே கூறுவதுபோல திரும்பவும் கூறுகிறேன்.  எங்கள் விமரிசனம் பிறரை வழிநடத்தவேண்டுமே ஒழிய,  அவனை காயப்படுத்தி களத்தில் இருந்து ஓடவைக்க கூடாது. 

Link to comment
Share on other sites

7 hours ago, goshan_che said:

நான் எங்கே ஐயா சீமானைத் தூற்றினேன்.

பிரபாகரன், புலிகளுடன் தனக்கு இருந்த தொடர்பை பற்றி நகைபுக்கிடமாக கதைத்து, அதன் மூலம் புலிகளை பற்றி வேண்டும் என்றே ஒரு தவறான கீழ்மதிப்பீட்டை தமிழ்நாட்டில் ஏற்படுத்துவது.

புலிகளுக்கு சற்றேனும் சம்பந்தமில்லாத இனகுரோதத்தை கையில் எடுத்து, வைகோ முதல் பெரியார் வரை அத்தனை தமிழ் தலைவர்களையும் திட்டித் தீர்ப்பது, தம்பிமாரை விட்டு சைக்கோ, கொல்டி, என தூசிக்க வைப்பது. இதன்மூலம் தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் மத்தியில் சாதிய அடிப்படையில் ( முக்குலத்தோர், வன்னியர், பறையர், பள்ளர், நாடார், பிராமணர் தமிழர் ஆனால் நாயக்கர், முதலியார், பிள்ளைகள், கோனார், யாதவர் இதர சாதிகள் தமிழர் அல்லாதோர்)  ஒரு பிரிவினையை ஏற்படுத்துவது. 

இப்படியான நடவடிக்கைகள் சீமானின் மீதான பின்வரும் சந்தேகம்களை ஏற்படுத்துகிறது.

1. சீமான் ஒரு Trojan Horse. தமிழ்நாட்டில் திராவிட கொள்கையை அகற்றி, அந்த வெற்றிடத்தை இந்துதுவா நிரப்பும் நிகழ்சி நிரலில், முதல் அங்கம் திராவிடத்தை அகற்றுவது, இரெண்டாவது அங்கம் அந்த வெற்றிடத்தை இந்துதுவாவால் நிரப்புவது. சீமானின் பிராமணபாசம், முருகன் முப்பாட்டன், வீரத்தமிழ் முண்ணணி, தனியே திராவிட தலைவர்களை தாக்காமல், திராவிட கொள்கைகளை குறிவைத்து தாக்குவது ( குறிப்பாக பெரியாரை தாக்குவது) என்பன சீமானின் நிகழ்சி நிரல் யாதென கூறி நிற்கிறன.

2. சீமானின் ரெண்டாவது வேலை, தமிழ்நாட்டில் தமிழ் தேசியத்தை தலை எடுக்கவிடாமல் செய்தல். தமிழ் தேசியத்தை தானே சுவீகரித்து, திருமுருகன் காந்தி போன்றோரை கூட துரோகிகளாக சித்தரித்து, நெடுமாறனை ஒதுக்கி, தமிழ் நாட்டில் - தமிழ் தேசியம் என்றாலே, பாசிசம், வன்முறை வழிப்பட்ட இனவாதம் எனும் பிம்பத்தை சாதாரண மக்கள் மத்தியில் மிக வினைத்திறனாக கட்டி எழுப்புகிறார் சீமான்.

இது கூடிக் கெடுக்கும் யுக்தி. தமிழ்நாட்டில் மக்கள் இன்னும் 100 வருடங்களுக்கு தமிழ்தேசிய அரசியல் பக்கமே தலைவைத்தும் படுக்கா வண்ணம், தமிழ் தேசிய அரசியல் மீது அருவருப்பை ஏற்படுத்துவது சீமானின் இரெண்டாவது கொண்டிராக்ட்.

இந்த நூதன திருட்டு பற்றி யோசிக்காமல்- வெளித்தோற்றதுக்கு எம்மை பற்றி கதைக்கும் ஐந்தாம் படைகளை எல்லாம் ஆதரிக்க வேண்டாமே என்பதே என் நிலைப்பாடு.

கட்சி சாராதவர். சீமானை விட தனிப்பட்டு எம் போராட்டத்துக்கு உதவியவர். ஆனால் வெளுத்ததெல்லாம் பால் என நம்பும் அப்பாவி கோவிந்தன் இல்லை.

கொஞ்சம் கருணை காட்டுங்கள் மருது. நான் பட்ட துன்பம் என்னோடு போகட்டும், இதை அவருக்கு வாசித்துக் காட்டப்போய், பாவம் வாழ வேண்டிய வயசு 😂

Che, 

நான் பொதுவாகத்தான் குறிப்பிட்டடிருந்தேன். உங்களை சுட்டி அல்ல.  எனது குறிப்பிக்களை பார்த்தீர்களானால் களத்திலுள்ளோருக்கு தெளிவாகப் புரியும் நான் சீமானின்,  அவரின் பேச்சுகளையோ ப கொள்கைகளையோ பற்றி நான் கருத்திடவில்லை.  எமதாட்களின் விமரிசன முறையையில் தான் திருத்தம் வேண்டும் என கூறி வருகிறேன். விட்டால் குடுமி தட்டினால் மொட்டை என்கின்ற வகையில் தான் விமர்சனங்கள் உள்ளன.  ஏற்கனவே அழிந்து விட்டோம்.  இருக்கின்றன கொஞ்ச நஞ்ச அனுதாபங்களையும் இழக்கக்கூடாதல்லவா. 

அந்த நப்பாசைதான் இஞ்ச நான்வந்து கரையுறதுக்கு காரணம்.  வேறு என்னவாக இருக்கும்? 

Link to comment
Share on other sites

இந்த தருணத்தில் இந்த திரியில் நான் நாதமுனியை அதிகமாக மிஸ் பண்ணுகின்றேன். ஆள் ஒருமையில் விளிக்காமல், சக கருத்தாளர்களை அவமதிக்காமல், சைக்கோ என்றெல்லாம் மற்றவர்களை திட்டாமல் சீமானுக்கு ஆதரவாக வலிமையாக எழுதுகின்றவர். அனேகமாக ஓரத்தில் இருந்து கொண்டு இந்தத் திரியை பார்த்துக் கொண்டு இருப்பார் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் ஈழத்திலிருந்து சொல்கிறேன் இனி ஓர் ஈழம் வேண்டாம் அதை நிர்வகிக்கும் திறமை எந்த ஒரு ஈழத்திலிருக்கும் ஒருவனுக்கும் அந்த திறமை கிடையாது 

சீமான் வேண்டுமானால் அங்கிருக்கும் 115 முகாம்களில் லட்சக்கணக்கில்  வாழும் ஈழ மக்களுக்கு குடியுரிமையும் , நல்ல வாழ்வையும் , தொழிலையும் ஏற்படுத்திக்கொடுக்கட்டும் நாங்கள் இங்கிருந்து வாழ்த்துவோம்.

அத விட்டுட்டு ஈழம் ஈழம் கத்துக்கொண்டே இருப்பாரானால் அரசியலில் அப்படியே கத்திக்கொண்டே இருப்பார்................முன்னேற்றம் இல்லாமல் 

நீங்க  ஈழத்திலிருந்து???

அது  எங்க  இருக்கு  சொன்னால் நான்  உடனே  வாறன்

உங்களைப்போல சொன்ன ஆயிரக்கணக்கானவரை  எனக்குத்தெரியும்

அவர்களும்  இங்கு  வந்த  உடனேனே  ஈழத்தை  தேடுகிறார்கள்

பிரபாகரனின்  பெரிய  படத்தை  வீட்டில்  மாட்டி  வைத்திருக்கிறார்கள்

ஈழம் என்பது எங்களது  கனவு (நானும்  நீங்களும்  ஏன்  சீமானும்  தான்)

அதை சந்தர்ப்பங்களுக்கு  அல்லது காலத்துக்கு ஏற்றவாறு  மறுப்பதற்கு உரிமையுண்டு

ஆனால்  அது  நிதர்சனமோ  அல்லது  நிரந்தரமோ  இல்லை.

Link to comment
Share on other sites

26 minutes ago, விசுகு said:

விசுகண்ணா, ஈழம் என்பது இலங்கையை குறிப்பதற்கு பல காலமாக சொல்லப்படும் ஒர் சொல் ஆகும். ஈழம் என்பது கீழம் (கீழ் பகுதியில் வாழ்ந்தவர்கள் - இந்தியாவின் கீழே அமைந்திருக்கும் தீவைச் சேர்ந்தவர்கள்) என்பதில் இருந்து மருவியது என்றும்  பாளிமொழிச் சொல்லான 'சிஹலம்'  இல் இருந்து வந்ததென்றும் இன்னும் சிலர் சிஹலம் (சிங்களம்) எனும் சொல் ஈழம் என்ற சொல்லின் மருவிய சொல் என்றும் சொல்கின்றனர்.

தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதியை குறிப்பதற்காக தான் பின்னாளில் தமிழ் ஈழம் எனும் பெயர் உருவானது. அதாவது ஈழம் எனும் தேசத்தில் தமிழர் வாழும் தாயகம் தமிழ் ஈழம்.

பின் குறிப்பு:

நிழலி என்பவர் தான் ஒருவரிடம் கேள்வி கேட்டால் இன்னொருவர் வந்து பதில் சொன்னால் அதற்கு பொதுவாக பதில் கொடுக்க மாட்டன் என்று சொல்பவர் என்பதால் நீங்களும் தனிக்காட்டு மன்மத ராசாவிடம் (சான்று கலியாணம் முடிச்சு ஒரு வருடத்துக்குள் குழந்தை) கேட்ட கேள்விக்கு நிழலி ஏன் பதில் சொன்னார் என்று கோபிக்க கூடாது.

Link to comment
Share on other sites

On ‎11‎/‎28‎/‎2019 at 9:43 AM, பிழம்பு said:

அத்துடன் தான் கட்சி ஆரம்பித்தது ஆட்சியை பிடிச்சு முதலைச்சர் ஆகவெல்லாம் இல்லையாம். இப்படியான  பேச்சுகளை பேசுவதற்காகவாம் என்று தன் அரசியல் குறிக்கோலை குபீரென போட்டுடைத்தார் தமிபிகளின் முன்

புருடா என்றால் என்ன ? புலுடாவிற்கும் புருடாவிற்கும் என்ன வித்தியாசம்? .இரண்டும் ஒன்றுதான்.
தமிழகத்தில் புருடா விடும் அரசியல்வாதிகள்.  ஈழத்தில் புலுடா விடும் அரசியல்வாதிகள். 

புருடாவும் புலுடாவும் இருந்தால் தான் அரசியல் அரியணை தமிழகத்தில் ஏறலாம். ஏறியபின்னர் மக்களுக்கு யார் என்ன செய்தார்கள் என பார்த்தால் எம்.ஜி.ஆர். அவர்களை தவிர ஈழ மக்களுக்கு யாரும் எதையும் செய்யவில்லை 😞 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, நிழலி said:

விசுகண்ணா, ஈழம் என்பது இலங்கையை குறிப்பதற்கு பல காலமாக சொல்லப்படும் ஒர் சொல் ஆகும். ஈழம் என்பது கீழம் (கீழ் பகுதியில் வாழ்ந்தவர்கள் - இந்தியாவின் கீழே அமைந்திருக்கும் தீவைச் சேர்ந்தவர்கள்) என்பதில் இருந்து மருவியது என்றும்  பாளிமொழிச் சொல்லான 'சிஹலம்'  இல் இருந்து வந்ததென்றும் இன்னும் சிலர் சிஹலம் (சிங்களம்) எனும் சொல் ஈழம் என்ற சொல்லின் மருவிய சொல் என்றும் சொல்கின்றனர்.

தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதியை குறிப்பதற்காக தான் பின்னாளில் தமிழ் ஈழம் எனும் பெயர் உருவானது. அதாவது ஈழம் எனும் தேசத்தில் தமிழர் வாழும் தாயகம் தமிழ் ஈழம்.

பின் குறிப்பு:

நிழலி என்பவர் தான் ஒருவரிடம் கேள்வி கேட்டால் இன்னொருவர் வந்து பதில் சொன்னால் அதற்கு பொதுவாக பதில் கொடுக்க மாட்டன் என்று சொல்பவர் என்பதால் நீங்களும் தனிக்காட்டு மன்மத ராசாவிடம் (சான்று கலியாணம் முடிச்சு ஒரு வருடத்துக்குள் குழந்தை) கேட்ட கேள்விக்கு நிழலி ஏன் பதில் சொன்னார் என்று கோபிக்க கூடாது.

விளக்கத்துக்கு நன்றி  ராசா

எனக்கு  ஈழம்  என்றாலும்  தமிழீழம்  என்றாலும்  ஒன்று  தான் அது எனது  தாயகம்

நிலப்பரப்பு குறைந்திருக்கலாம் அல்லது  ஆக்கிரமிக்கப்பட்டிருக்கலாம்

ஈழத்திலிருந்து  நான் சொல்கின்றேன்  என்ற  தம்பியின் எழுச்சி  போற்றுதற்குரியது

ஆனால் இதே  சொல்லை  அவர்  தற்பொழுது  வாழும் இடத்தில்  பாவிக்கவே  முடியாது  என்பது  தான்  உண்மை

ஆனால்  என்னால்   உங்களால்  முடியும்

எனவே  ஒரு சிலர்  அதை  தமக்கே  உரித்தானது  என

அரசியல் கால  நேர காரணங்க்காக உரிமை  கொண்டாடுவது  ஆபத்தானது என்பதற்கான 

தார்மீக  கோபமே அந்த எழுத்து.

மற்றும்படி  அவன்  என்  தம்பி புரிந்து கொள்வான்

விளக்கம் எவரும்   கொடுக்கலாம் தம்பி

எமக்கு  விளக்கமும் புரிந்து கொள்ளலும்  தான் முக்கியமே  தவிர  முகங்கள்  அல்லவே

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் ஈழத்திலிருந்து சொல்கிறேன் இனி ஓர் ஈழம் வேண்டாம் அதை நிர்வகிக்கும் திறமை எந்த ஒரு ஈழத்திலிருக்கும் ஒருவனுக்கும் அந்த திறமை கிடையாது 

இந்த வரிகளுக்குள்தான் எத்தனை அர்த்தங்கள்.

நிர்வகிக்கும் திறனுடன் ஒருவன் இருந்தான் , 

இப்போ அவர் இல்லை.

போனாபோவுதுனு யாரும் ஈழம் எங்கிற பெயரில் எமக்கு உரிமை   தந்தாலும் அவரைபோல் இந்த மந்தை கூட்டங்களை கட்டிக்காக்க  யாருமில்லை.

சிங்களவன் தந்த ஈழத்தை அவன் ஏதும் லஞ்சம் தந்தால்..

 திருப்பி  அவனிடமே ஒப்படைப்பார்கள்.

உங்களைபோன்றவர்கள் பகிரும் இந்த  கருத்துடன் எப்போதுமே கேள்வியே கேட்காமல் எனக்கு உடன்பாடு உண்டு.

ஆவேசமாய் ஈழத்தவர்களுக்காய் சில தசாப்தங்களாய் குரல் எழுப்பிய அரசியல்வாதிகள்  பலர்...

அது வைகோ...ஐயா நெடுமாறன்..திருமா..மருத்துவர் ராமதாஸ்..

அதில் பத்தோடு பதினொன்றாய் சீமானும் இணைந்து கொண்டார் என்பதை தவிர எந்தவொரு சிறப்பும் ஈழ தமிழர்களுக்கு இந்திய அரசியல்வாதிகளால் வந்துவிடபோவதில்லை.

திருவாளர் நெடுமாறன் அவர்களை மட்டுமே ஐயா என்றே சொல்லலாம்..

இந்த அப்பழுக்கில்லாத மனிதன் எந்த நிலையிலும் எந்த கட்சி சார்ந்தும் ஈழத்தை விட்டு கொடுத்ததில்லை.

எம்ஜிஆர் எனும் பெரும் சகாப்தத்தை தவிர புலிகளை உண்மையாய் நேசித்த பதவியில் இருக்கும்போதே ஈழத்தை தூய சிந்தனையுடன் ஆதரித்த எந்த தமிழக அரசியல் தலைவரும் வரலாற்றில்  இல்லை.

இலங்கை தமிழருக்கு ஒரு நல்லது நடக்க வேண்டுமென்றால்..

அதை தமிழகத்திலிருந்து இந்திய மத்திய அரசை பணிய வைக்ககூடிய ஒரு சக்திவாய்ந்த மாநில அரசு வேண்டும்..

அந்த பதவியிலிருந்தும், 

எம்ஜிஆரால்   ..

ராஜீவ்- ஜெயவர்தன  ஒப்பந்தத்தை தடுக்கவோ..;.

அல்லது இந்திய இலங்கை என்ற ஒப்பந்ததில்  ஈழத்தவர்களுக்காய்  ..காலம் முழுவதும் போராடி வாழ்ந்த புலிகளையும் ஒரு சாராய் சேர்க்கவேண்டும் என்றோ..

அவர் நினைத்திருந்தால்கூட முடியாத காரியமாய் போனது..

ஏனென்றால் இலங்கை தமிழர்களுக்கான தீர்வென்பது 

தமிழக ஆவேச பேச்சுக்களில் அல்ல..

அதிகாரம் கொண்ட தமிழக தலைவர்களினால் மட்டுமே முடியும் காரியம் அது.

ஆனால் அது எம்மையும் எமது போராட்ட சக்தியையும் பலமான நிலையில் இருந்துகொண்டே ஆதரித்த அவராலேயே முடியாமல் போனதே...

இனிமேல் எவரால் முடியும்?

ஒரு மத்திய அரசின்மீது அழுத்தம் தரகூடியது..

ஒரு மாநிலத்தில் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் அமைந்த ஆட்சியால் மட்டுமே முடியும்...

234 தொகுதிகள் கொண்ட தமிழக சட்ட சபை தேர்தல் அமைப்பில்...

சீமானால்... 

என்றைக்காவது ஒரு தொகுதியிலாவது  தன்னை எதிர்த்து நின்று வெற்றி பெற்ற  ஒரு  வேட்பாளரை தோற்கடித்துண்டா?

தமிழக அரசியல் என்பது ஒருவகை எழுதப்படாத விதி...

பாரம்பரிய வாக்குவங்கிகள் கொண்ட அந்த மாநிலம் தேர்தல் என்று வந்தால்..

அதிமுகவ..வா?

அல்லது திமுகவா என்றே பார்ப்பார்கள்..

இடையில் சிந்தி சிதறும் ஓட்டுக்களே...

ஒரு மூன்றாம் ஆட்சி சக்தியை தமிழகத்தில் தீர்மானிக்கும்.

இந்த  இருபெரும் திராவிட கட்சிகளின் மயக்கத்தில் இருக்கும் தமிழக வாக்காளர்களை தோற்கடித்து ..

சீமான் என்ன எந்த சூப்பர்மேனாலும் தமிழக ஆட்சியை பிடிக்க முடியாது.

சீமான் தமிழக முதல்வராகவேண்டும் என்பது..

தமிழீழ தமிழர்களின் ஆசையாக இருந்து ஒன்றுமே ஆகபோவதில்லை..

சீமான் முதல்வராய் ஆகவேண்டுமென்பது தமிழக தமிழர்களின் ஆசையாய் இருக்கவேண்டும்..

அது சாத்தியமா?

தமிழகத்தில் இருந்துகொண்டு ஒரு பலமான ஆதரவை  தந்த எம்ஜிஆராலும்...

தமிழீழத்தில் இருந்து கொண்டு தன்  உயிரை கொடுத்து போராடிய எம் தலைவராலும் 

முடியாத ஒன்றை இனி எவரும் முயற்சித்தும் பார்க்ககூடாது...

அப்படி சீமான் போன்றவர்களால் முடிந்தாலும்...

அந்த வெற்றியை இப்போ இருக்கும் எந்த ஈழ தலைமையிடம் ஒப்படைப்பார்?

சம்பந்தன்..

சுமந்திரன்..

விக்கி..

மாவை..

கருணா.

டக்ளஸ்..

செல்வம் அடைக்கலநாதன்..

??

இவர்களில் யார் உங்கள் தெரிவாய் இருக்கும் சீமான் ?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ராசவன்னியன் said:

என்ன சாமிகளே, இப்படி தொபுக்கடீர்ன்னு தீர்ப்பு சொல்லீட்டீங்களே..? 😥

யாழில் இருப்பவர்கள் அனைவரும் முன்னே பின்னே இருந்தாலும் தங்கள் நண்பர்கள்தானே..? இல்லையா பின்னே..??  😋

தங்களின் அனுபவத்திலோ, இல்லை செய்திகளிலோ நிச்சயம் படித்திருப்பீர்கள்..

எனது அனுபவத்தில் தமிழ்நாட்டில் திராவிட சிந்தனையை மட்டும் விதைக்காமலிருந்தால் எங்கோ குக்கிராமத்திலிருந்து வந்த நானெல்லாம் பட்ட மேற்படிப்பு வரை படித்திருக்க முடியாது. வெளிநாடு வந்து இப்படி குப்பை கொட்டியிருக்க முடியாது. கல்வி எங்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்திருக்கும். இன்றுவரை அரசு அலுவலகங்களிலும், வங்கிகளும், நீதி மன்றங்களிலும் பார்த்தால் மேல்தட்டு மக்களின் ஆதிக்கமே உள்ளது. மிகக் குறிப்பாக பிராமணீயம். சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும், வழிபாட்டு தலங்களிலும் உதாசீனத்தை அனுபவித்தவர்களுக்கு புரியும்.

தனிப்பட்ட அரசியல் தலைவர்களின் ஈகோவினால், கட்சிகள் உடைந்து சிதறினாலும், இன்னமும் திராவிட சிந்தனையும், அதனை சார்ந்த மொழி உணர்வுமே தமிழ்நாட்டின் உயிர்துடிப்பு (கடவுள் மறுப்பு கொள்கையை தவிர - இது மக்கள் மனதில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை). அதனாலேயே சிறிதாவது சமூக மாற்றங்களும், நீங்கள் கூறிய சாதிய விலக்கல்களும் மட்டுப்படுத்தபட்டன. இத்துடிப்பு மட்டும் இல்லையெனில் ஆரிய சக்திகள் எப்போழுதோ தமிழகத்தை விழுங்கியிருக்கும். 

"துமாரா நாம் க்யாஹை..?" என நான் இந்திதளத்தில் எழுதிக்கொண்டிருந்திருப்பேன்.நீங்கள் இலங்கையன், நான் இந்தியன் என கோடுபோட்டு பிரிந்திருப்போம், ஈழத்தைப் பற்றி தெரிந்தே இருக்காது.

சீமானும் மற்றவர்களைப் போலவே இன்று வந்து திராவிட சிந்தனையின் ஒரு பகுதியை (தமிழுணர்வு) மட்டும் தூக்கிப் பிடித்து அரசியல் வியாபாரம் செய்கிறார், செய்யட்டும். 

ஆனால் இந்த புனைவுகள், புரட்டுகள் வேண்டாமென்றுதானே சொல்கிறோம்..?

சீமான் அடிக்கடி  சொல்லும் ஒரு  விடயம்

என்னுடைய  வாக்காளர்கள்  பாடசாலைகளில் படித்துக்கொண்டிருகஇகிறார்கள்  என்று

அதன்  உண்மையான அர்த்தம்

உங்களது  இந்த  திராவிட  சிந்தனை  சார்ந்த  எழுத்தை  வாசித்தபோது  தான் புரிந்தது

சரி  சரி  என்  பேரனின் வாக்குக்காக  காத்திருப்போம்:grin:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ராசவன்னியன் said:

என்ன சாமிகளே, இப்படி தொபுக்கடீர்ன்னு தீர்ப்பு சொல்லீட்டீங்களே..? 😥

யாழில் இருப்பவர்கள் அனைவரும் முன்னே பின்னே இருந்தாலும் தங்கள் நண்பர்கள்தானே..? இல்லையா பின்னே..??  😋

தங்களின் அனுபவத்திலோ, இல்லை செய்திகளிலோ நிச்சயம் படித்திருப்பீர்கள்..

எனது அனுபவத்தில் தமிழ்நாட்டில் திராவிட சிந்தனையை மட்டும் விதைக்காமலிருந்தால் எங்கோ குக்கிராமத்திலிருந்து வந்த நானெல்லாம் பட்ட மேற்படிப்பு வரை படித்திருக்க முடியாது. வெளிநாடு வந்து இப்படி குப்பை கொட்டியிருக்க முடியாது. கல்வி எங்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்திருக்கும். இன்றுவரை அரசு அலுவலகங்களிலும், வங்கிகளும், நீதி மன்றங்களிலும் பார்த்தால் மேல்தட்டு மக்களின் ஆதிக்கமே உள்ளது. மிகக் குறிப்பாக பிராமணீயம். சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும், வழிபாட்டு தலங்களிலும் உதாசீனத்தை அனுபவித்தவர்களுக்கு புரியும்.

தனிப்பட்ட அரசியல் தலைவர்களின் ஈகோவினால், கட்சிகள் உடைந்து சிதறினாலும், இன்னமும் திராவிட சிந்தனையும், அதனை சார்ந்த மொழி உணர்வுமே தமிழ்நாட்டின் உயிர்துடிப்பு (கடவுள் மறுப்பு கொள்கையை தவிர - இது மக்கள் மனதில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை). அதனாலேயே சிறிதாவது சமூக மாற்றங்களும், நீங்கள் கூறிய சாதிய விலக்கல்களும் மட்டுப்படுத்தபட்டன. இத்துடிப்பு மட்டும் இல்லையெனில் ஆரிய சக்திகள் எப்போழுதோ தமிழகத்தை விழுங்கியிருக்கும். 

"துமாரா நாம் க்யாஹை..?" என நான் இந்திதளத்தில் எழுதிக்கொண்டிருந்திருப்பேன்.நீங்கள் இலங்கையன், நான் இந்தியன் என கோடுபோட்டு பிரிந்திருப்போம், ஈழத்தைப் பற்றி தெரிந்தே இருக்காது.

சீமானும் மற்றவர்களைப் போலவே இன்று வந்து திராவிட சிந்தனையின் ஒரு பகுதியை (தமிழுணர்வு) மட்டும் தூக்கிப் பிடித்து அரசியல் வியாபாரம் செய்கிறார், செய்யட்டும். 

ஆனால் இந்த புனைவுகள், புரட்டுகள் வேண்டாமென்றுதானே சொல்கிறோம்..?

Image may contain: 3 people

Link to comment
Share on other sites

7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் ஈழத்திலிருந்து சொல்கிறேன் இனி ஓர் ஈழம் வேண்டாம் அதை நிர்வகிக்கும் திறமை எந்த ஒரு ஈழத்திலிருக்கும் ஒருவனுக்கும் அந்த திறமை கிடையாது 

சீமான் வேண்டுமானால் அங்கிருக்கும் 115 முகாம்களில் லட்சக்கணக்கில்  வாழும் ஈழ மக்களுக்கு குடியுரிமையும் , நல்ல வாழ்வையும் , தொழிலையும் ஏற்படுத்திக்கொடுக்கட்டும் நாங்கள் இங்கிருந்து வாழ்த்துவோம்.

அத விட்டுட்டு ஈழம் ஈழம் கத்துக்கொண்டே இருப்பாரானால் அரசியலில் அப்படியே கத்திக்கொண்டே இருப்பார்................முன்னேற்றம் இல்லாமல் 

உங்க‌ளை மாதிரி ஆட்க‌ள் ப‌ல‌வித‌ வேட‌ம் போடுவிம் , ஏதோ ஒரு நாட்டின் உத‌வியோடு நாம் மீண்டும் எழுந்தால் , உட‌ன‌ வ‌ந்து எழுதுவிங்க‌ள் ( புலி ப‌துங்கின‌து பாய‌த் தான் )

வாழ்க்கையில் ஒரு கொள்கையோடு ப‌ய‌ணிப்ப‌வ‌ன் தான் உண்மையான‌ ஆண் ம‌க‌ன் , 
உங்க‌ளின் இந்த‌ எழுத்து உங்க‌ளின் கோழைத் த‌ன‌த்தை வெளிச்ச‌ம் போட்டு காட்டுது ,

உங்க‌ளை விட‌ துணிவோடு  செய‌ல் ப‌ட‌ த‌மிழீழ‌ ம‌ண்ணில் எத்த‌னையோ ஆயிர‌ம் இளைஞ‌ர்க‌ள் இருக்கின‌ம் , 

உங்க‌ளின் வ‌ச‌திக்கு ஏற்ப்ப‌ போல‌ எழுதி கால‌த்தை ஓட்டுவ‌த்தில் உங்க‌ளை மிஞ்ச‌ ஆட்க‌ள் இல்லை , 

அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் என்னோடு இன்னொரு திரியில் விவாத‌ம் செய்து மூக்கு உடை ப‌ட்ட‌ நீங்க‌ள் , இந்த‌ திரியிலும் அதே ப‌ல்ல‌வியை தான் திருப்ப‌வும் எழுதுறீங்க‌ள் , உங்க‌ளுக்கு புரியும் ப‌டி விள‌க்க‌ம் த‌ந்தும் இன்னும் அது உங்க‌ளுக்கு புரிய‌ வில்லை , சீமான் விடைய‌த்தில் நீங்க‌ள் பேசாம‌ இருப்ப‌து ந‌ல்ல‌ம் ( பொல்லை குடுத்து அடி வேண்ட‌ வேண்டாம் )

வைக்கோ மாதிரி சீமான் சொன்ன‌து இல்லை , த‌ன‌து தொண்ட‌ர்க‌ளுட‌ன் போய் ஈழ‌த்தை மீட்பேன் என்று ,

சீமான் க‌ட்சி ஆர‌ம்பிச்சு 10 ஆண்டுக‌ளும் ஆக‌ வில்லை , வைக்கோ
திருமாள‌வ‌ன்
ராம‌தாஸ் இவ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளின் தொகுதிக‌ளில் வென்று ச‌ட்ட‌  ம‌ன்ற‌ம் பார‌ள‌ ம‌ன்ற‌ம் வ‌ரை போன‌வை ( ஈழ‌ அக‌தி முகாமை மூட‌ ப‌த‌வியில் இல்லாத‌ அண்ண‌ன் சீமான் ப‌ல‌ த‌ட‌வை முற்சி எடுத்தார் அது கை கூட‌ வில்லை ,

சீமான் ஆட்சியில் இருந்து , ஏன் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளை இன்னும் அக‌தி முக‌முக்குள் வைத்து இருக்கிறீங்க‌ள் என்று கேட்டால் அதில் ஒரு ஞாய‌ம் இருக்கு , அட்சியில் ப‌த‌வியில் இல்லாத‌ ஒருவ‌ரிட‌ம் போய் உங்க‌ள் ( வ‌ன்ம‌த்தை கொட்டுவ‌து கேவ‌ல‌த்தின் விட‌ கேவ‌ல‌ம் )

எம்ம‌வ‌ர்க‌ள் வ‌ன்னியில் இருந்த‌ போது 2008ம் ஆண்டு கால‌ப் ப‌குதியில்  யாழில் நீங்க‌ள் எழுதின‌ ப‌திவுக‌ளை மீண்டும் ஒரு முறை வாசித்து பாருங்க‌ள் , 

( சீ , உத‌வி செய்யாட்டியும் உப‌த்திர‌ம் செய்ய‌  வேண்டாம் என்று அதிக‌ம் யாழில் எழுதின‌து நீங்க‌ள் )

உங்க‌ளால் முடிய‌ வில்லை என்றால் ஓர‌மாய் போய் நில்லுங்கோ , உங்க‌ளை மாதிரி ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் கோழைக‌ள் போல் இருக்க‌ தூண்ட வேண்டாம் ,

த‌மிழீழ‌ ம‌ண்ணில் என்ன‌ ந‌ட‌ந்தாலும் அடுத்த‌ க‌ன‌மே த‌க‌வ‌ல் வ‌ரும் உல‌க‌த்தில் நாம் வாழுகிறோம் ,  நீங்க‌ள் வ‌ந்து எழுதி தான் நாட்டு ந‌ட‌ப்பு நாம் அறிய‌ வேண்டும் என்று இல்லை ,

இனி எம்ம‌வ‌ர்க‌ளால் ஒரு ஆணியிம் புடுங்க‌ முடியாது என்று வெக்க‌ம் இல்லாம‌ நீங்க‌ள் தொட‌ர்ந்து எழுதுறீங்க‌ள் , எம்ம‌வ‌ர்க‌ளால் ப‌ல‌ ஆணிக‌ள் புடுங்க‌ முடியும் , அதுக்காண‌ கால‌மும் ந‌ல்ல‌ நேர‌மும் கூடி வ‌ர‌னும் ,

( மாவீர‌ர்க‌ளின் தியாக‌த்தையும் வீர‌த்தையும் கொச்சை ப‌டுத்த‌ வேண்டாம் , அவ‌ர்க‌ள் உங்க‌ளை மாதிரி இர‌ண்டு நாக்கு ப‌டைத்த‌ ம‌னித‌ர்க‌ள் இல்லை ஒரு நாக்கு ஒரு கொள்கை , அவ‌ர்க‌ளின் ஒரு கொள்கை ( அது த‌மிழீழ‌ம் )
ந‌ன்றி 

Link to comment
Share on other sites

1 hour ago, valavan said:

இந்த வரிகளுக்குள்தான் எத்தனை அர்த்தங்கள்.

நிர்வகிக்கும் திறனுடன் ஒருவன் இருந்தான் , 

இப்போ அவர் இல்லை.

போனாபோவுதுனு யாரும் ஈழம் எங்கிற பெயரில் எமக்கு உரிமை   தந்தாலும் அவரைபோல் இந்த மந்தை கூட்டங்களை கட்டிக்காக்க  யாருமில்லை.

சிங்களவன் தந்த ஈழத்தை அவன் ஏதும் லஞ்சம் தந்தால்..

 திருப்பி  அவனிடமே ஒப்படைப்பார்கள்.

உங்களைபோன்றவர்கள் பகிரும் இந்த  கருத்துடன் எப்போதுமே கேள்வியே கேட்காமல் எனக்கு உடன்பாடு உண்டு.

ஆவேசமாய் ஈழத்தவர்களுக்காய் சில தசாப்தங்களாய் குரல் எழுப்பிய அரசியல்வாதிகள்  பலர்...

அது வைகோ...ஐயா நெடுமாறன்..திருமா..மருத்துவர் ராமதாஸ்..

அதில் பத்தோடு பதினொன்றாய் சீமானும் இணைந்து கொண்டார் என்பதை தவிர எந்தவொரு சிறப்பும் ஈழ தமிழர்களுக்கு இந்திய அரசியல்வாதிகளால் வந்துவிடபோவதில்லை.

திருவாளர் நெடுமாறன் அவர்களை மட்டுமே ஐயா என்றே சொல்லலாம்..

இந்த அப்பழுக்கில்லாத மனிதன் எந்த நிலையிலும் எந்த கட்சி சார்ந்தும் ஈழத்தை விட்டு கொடுத்ததில்லை.

எம்ஜிஆர் எனும் பெரும் சகாப்தத்தை தவிர புலிகளை உண்மையாய் நேசித்த பதவியில் இருக்கும்போதே ஈழத்தை தூய சிந்தனையுடன் ஆதரித்த எந்த தமிழக அரசியல் தலைவரும் வரலாற்றில்  இல்லை.

இலங்கை தமிழருக்கு ஒரு நல்லது நடக்க வேண்டுமென்றால்..

அதை தமிழகத்திலிருந்து இந்திய மத்திய அரசை பணிய வைக்ககூடிய ஒரு சக்திவாய்ந்த மாநில அரசு வேண்டும்..

அந்த பதவியிலிருந்தும், 

எம்ஜிஆரால்   ..

ராஜீவ்- ஜெயவர்தன  ஒப்பந்தத்தை தடுக்கவோ..;.

அல்லது இந்திய இலங்கை என்ற ஒப்பந்ததில்  ஈழத்தவர்களுக்காய்  ..காலம் முழுவதும் போராடி வாழ்ந்த புலிகளையும் ஒரு சாராய் சேர்க்கவேண்டும் என்றோ..

அவர் நினைத்திருந்தால்கூட முடியாத காரியமாய் போனது..

ஏனென்றால் இலங்கை தமிழர்களுக்கான தீர்வென்பது 

தமிழக ஆவேச பேச்சுக்களில் அல்ல..

அதிகாரம் கொண்ட தமிழக தலைவர்களினால் மட்டுமே முடியும் காரியம் அது.

ஆனால் அது எம்மையும் எமது போராட்ட சக்தியையும் பலமான நிலையில் இருந்துகொண்டே ஆதரித்த அவராலேயே முடியாமல் போனதே...

இனிமேல் எவரால் முடியும்?

ஒரு மத்திய அரசின்மீது அழுத்தம் தரகூடியது..

ஒரு மாநிலத்தில் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் அமைந்த ஆட்சியால் மட்டுமே முடியும்...

234 தொகுதிகள் கொண்ட தமிழக சட்ட சபை தேர்தல் அமைப்பில்...

சீமானால்... 

என்றைக்காவது ஒரு தொகுதியிலாவது  தன்னை எதிர்த்து நின்று வெற்றி பெற்ற  ஒரு  வேட்பாளரை தோற்கடித்துண்டா?

தமிழக அரசியல் என்பது ஒருவகை எழுதப்படாத விதி...

பாரம்பரிய வாக்குவங்கிகள் கொண்ட அந்த மாநிலம் தேர்தல் என்று வந்தால்..

அதிமுகவ..வா?

அல்லது திமுகவா என்றே பார்ப்பார்கள்..

இடையில் சிந்தி சிதறும் ஓட்டுக்களே...

ஒரு மூன்றாம் ஆட்சி சக்தியை தமிழகத்தில் தீர்மானிக்கும்.

இந்த  இருபெரும் திராவிட கட்சிகளின் மயக்கத்தில் இருக்கும் தமிழக வாக்காளர்களை தோற்கடித்து ..

சீமான் என்ன எந்த சூப்பர்மேனாலும் தமிழக ஆட்சியை பிடிக்க முடியாது.

சீமான் தமிழக முதல்வராகவேண்டும் என்பது..

தமிழீழ தமிழர்களின் ஆசையாக இருந்து ஒன்றுமே ஆகபோவதில்லை..

சீமான் முதல்வராய் ஆகவேண்டுமென்பது தமிழக தமிழர்களின் ஆசையாய் இருக்கவேண்டும்..

அது சாத்தியமா?

தமிழகத்தில் இருந்துகொண்டு ஒரு பலமான ஆதரவை  தந்த எம்ஜிஆராலும்...

தமிழீழத்தில் இருந்து கொண்டு தன்  உயிரை கொடுத்து போராடிய எம் தலைவராலும் 

முடியாத ஒன்றை இனி எவரும் முயற்சித்தும் பார்க்ககூடாது...

அப்படி சீமான் போன்றவர்களால் முடிந்தாலும்...

அந்த வெற்றியை இப்போ இருக்கும் எந்த ஈழ தலைமையிடம் ஒப்படைப்பார்?

சம்பந்தன்..

சுமந்திரன்..

விக்கி..

மாவை..

கருணா.

டக்ளஸ்..

செல்வம் அடைக்கலநாதன்..

??

இவர்களில் யார் உங்கள் தெரிவாய் இருக்கும் சீமான் ?

எனது தெரிவு இதில் யாரும் இல்லை இவர்களால் நிர்வகிக்க முடியாது 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2019 at 10:56 PM, விளங்க நினைப்பவன் said:

சீமானது புருடா பேச்சுகளை இரசித்து அவர் இவ்வளவு கெட்ட பெயர் வாங்க உங்களை போன்றோர் காரணம்.

👍

நாங்கள் அவர் கூறும் நல்ல  செய்திகள், கருத்துக்களை மட்டுமே உள்வாங்குகிறோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.