• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
பிழம்பு

சீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்

Recommended Posts

2 hours ago, ஈழப்பிரியன் said:

சீமான் செய்வேன் என்று சொன்னவைகளை அடுத்த மாநிலத்தவன் அமுல்படுத்திறான்.

அவர்கள் படிப்பறிவே இல்லாதவர்கள் ...........

எங்கள் கல்வி அறிவென்ன  சிந்தனா சக்தி என்ன 
உலக அரசியலில் புடுங்கிய ஆணிகள் என்ன 
முறிந்த பனைகளை முளைக்க பண்ணும் வித்துவான்கள் நாங்கள். 

அதெப்பிடி சீமான் எழுந்து தமிழரே தமிழர்தான் அழவேண்டும் என்று சொல்வது? 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
21 hours ago, ராசவன்னியன் said:

என்ன சாமிகளே, இப்படி தொபுக்கடீர்ன்னு தீர்ப்பு சொல்லீட்டீங்களே..? 😥

யாழில் இருப்பவர்கள் அனைவரும் முன்னே பின்னே இருந்தாலும் தங்கள் நண்பர்கள்தானே..? இல்லையா பின்னே..??  😋

தங்களின் அனுபவத்திலோ, இல்லை செய்திகளிலோ நிச்சயம் படித்திருப்பீர்கள்..

எனது அனுபவத்தில் தமிழ்நாட்டில் திராவிட சிந்தனையை மட்டும் விதைக்காமலிருந்தால் எங்கோ குக்கிராமத்திலிருந்து வந்த நானெல்லாம் பட்ட மேற்படிப்பு வரை படித்திருக்க முடியாது. வெளிநாடு வந்து இப்படி குப்பை கொட்டியிருக்க முடியாது. கல்வி எங்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்திருக்கும். இன்றுவரை அரசு அலுவலகங்களிலும், வங்கிகளும், நீதி மன்றங்களிலும் பார்த்தால் மேல்தட்டு மக்களின் ஆதிக்கமே உள்ளது. மிகக் குறிப்பாக பிராமணீயம். சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும், வழிபாட்டு தலங்களிலும் உதாசீனத்தை அனுபவித்தவர்களுக்கு புரியும்.

தனிப்பட்ட அரசியல் தலைவர்களின் ஈகோவினால், கட்சிகள் உடைந்து சிதறினாலும், இன்னமும் திராவிட சிந்தனையும், அதனை சார்ந்த மொழி உணர்வுமே தமிழ்நாட்டின் உயிர்துடிப்பு (கடவுள் மறுப்பு கொள்கையை தவிர - இது மக்கள் மனதில் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை). அதனாலேயே சிறிதாவது சமூக மாற்றங்களும், நீங்கள் கூறிய சாதிய விலக்கல்களும் மட்டுப்படுத்தபட்டன. இத்துடிப்பு மட்டும் இல்லையெனில் ஆரிய சக்திகள் எப்போழுதோ தமிழகத்தை விழுங்கியிருக்கும். 

"துமாரா நாம் க்யாஹை..?" என நான் இந்திதளத்தில் எழுதிக்கொண்டிருந்திருப்பேன்.நீங்கள் இலங்கையன், நான் இந்தியன் என கோடுபோட்டு பிரிந்திருப்போம், ஈழத்தைப் பற்றி தெரிந்தே இருக்காது.

சீமானும் மற்றவர்களைப் போலவே இன்று வந்து திராவிட சிந்தனையின் ஒரு பகுதியை (தமிழுணர்வு) மட்டும் தூக்கிப் பிடித்து அரசியல் வியாபாரம் செய்கிறார், செய்யட்டும். 

ஆனால் இந்த புனைவுகள், புரட்டுகள் வேண்டாமென்றுதானே சொல்கிறோம்..?

உங்கள் பதில் கருத்துக்கு நன்றிகள்

நீங்கள் முன்வைக்க முற்படும் கருத்துக்களை 12 வருடங்களுக்கு முன்னர் இக்களத்தில் பதிந்துள்ளேன். சிவப்பு நிறத்தில் உள்ளவை பதிந்தவை மேற்கோள் காட்டப்பட்டவை அதற்கான ஆதராங்கள். 

திராவிட கருத்தியல் அது ஏற்படுத்திய நன்மைகள் என்பதில் எனக்கு எந்த குழப்பமும் இல்லை ஆனால் இப்போது இருக்கும் பிரச்சனைகள் வேறு. தமிழகத்தின் சமூக பொருளாதரா சாதீய மத ஒடுக்குமுறைகளில் இருந்து விடுதலை நோக்கிய திராவிட இயக்க கருத்தியல் தளத்தை தகர்த்தெறிவது சீமான் அல்ல. அதை செய்தது திராவிட அரசியல் கட்சிகள். அதற்கு எதிர்வினைதான் நாம்தமிழர். மேலும் இது கருத்தியல் தளத்தில் நடக்கும் எதிர்வினையில்லை மாறாக அரசியல் அதிகார தளத்தில் நடக்கும் பிரச்சனை. திராவிட அரசியல் கட்சிகள் பெரும் முதலாளித்துவ வாதிகளாகிவிட்டனர். பெரும் நிறுவனங்களை உருவாக்கி விட்டனர். வாரிசு அரசியலை உருவாக்கி மன்னராட்சிபோல் அரசியலை சுயநலத்துக்கு பயன்படுத்த பாதை அமைத்துவிட்டனர். தமிழகத்தின் இயற்கை வழங்களை காப்பாற்ற தவறியதோடில்லாமல் சுயநலத்துக்காக சுரண்டி சுருட்டிவிட்டனர். ஆறு குளம் குட்டடைகள் என எல்லா பொது சொத்தையும் பட்டா போட்டு புது நிலச் சுவாந்தர் சமூகம் உருவாகிவிட்டது. சாதீய அரசியலை வாக்கு வங்கிக்காக தக்கவைத்துக்கொண்டனர். பார்ப்பனிய அதிகாரத்துடன் அரசியல் உறவை உருவாக்கிவிட்டனர்.  சமூகக் கேடான சாராய ஆலைகள் உட்பட ஏராளமான சிக்கலை உருவாக்கிவிட்டனர். கல்வி மருத்துவம் குடிநீர் இன்று தூய காற்றுவரை வியாபாரமாகிவிட்டது. ஏழைக்கு எட்டாக் கனியாகிக்கொண்டிருக்கின்றது. திராவிட  கருத்தியல் புரட்சி என்பதால் விடுதலை பெற்று திராவிட அரசியல் அதிகார கட்சிகளால் மரணிப்பதாக நிலமை உள்ளது. சுருக்கமான சொன்னால் ஆப்ரேசன் வெற்றி ஆனால் நோயாளி பலியாகிவிட்டார். 

அரசியல் சுழலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப எமது நிலைப்பாடும் அறம் சார்ந்த சிந்தனை முறையும் மாறுவதுதான் சரியானதாக இருக்க முடியும். திராவிட கருத்தியலில் கொள்கைக்கு விசுவாசமாக இருக்கின்றோம் என்ற போர்வையில் திராவிட அரசியல் கட்சிகளை ஆதரிப்பது அறத்துக்கு எதிரானது. நாட்டை சுடுகாடாக்குவதற்கு துணைபேவதற்கு ஒப்பானது.  

------------------------

 

யாழ்பாணத்து வரலாற்றை பின்நோக்காக பார்க்கும் சிலர் வெள்ளாளர் மேலாண்மைக்கோட்பாட்டினை (The Theory of Vellala Domination) எடுத்துரைப்பார். போத்துக்கேய ஒல்லாந்த ஆட்சி ஆவணங்களை ஆராயும் பொழுது இவ்வுண்மை நன்கு புலனாகின்றது. ஒல்லாந்தர் கால யாழ்பாண ஆட்சி முறையை நன்கு எடுத்துக்காட்டுவதாக அமையும் சுவார்டெக்குறுன் நினைவேட்டில் (memoir left by hendrick Zwaardracoon(1697) Colanbo,1911) இப்பிரச்சனைகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றது. ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் வெள்ளார் மற்றயை சாதியினரை அடக்கி வந்தவர் என்றும் தாழ்ந்த சாதியினர் தமக்கெதிராக முறைப்பாடுகள் சமர்பிக்க முடியாத வண்ணம் அடக்கி வைத்திருந்தனர் என்றும் அந்நிலையை தான் மாற்றி அமைக்க முனைந்ததாகவும் கூறியுள்ளார். பன்னெடுங்காலமாக இருந்துவரும் வெள்ளாள மேன்மைக்கு இவர்கள் இடம் கொடுத்து வந்தனர் என்பது 1661ல் எழுதப்பட்ட ஓர் அறிவுறுத்தல் குறிப்பில் இருந்து பெறப்படுகின்றது. ஒல்லாந்தர் காலத்தில் முக்கிய தமிழ் பிரதானிகள் புரட்டஸ்தாந்தை தழுவியிருந்தனரென்பது அவர்களது பெயர்களால் தெரியப்படுகின்றது.

 

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும் இம் முறைமை தொடர்ந்து நிலவி வந்தது. ஒல்லாந்தர் காலத்தைப் போலவே , ஆங்கில ஆட்சியின் முற்கூற்றிலும் பெரும் பதவிகள் சாதியதிகார அடிப்படையிலேயே வழங்கப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சியமைப்பை மாற்றி ஆங்கிலக்கல்வியை பதவி நுழைவுச் சீட்டாக்கிய பொழுதும் இந் நன்மையை இவர்களே பெற்றனர். கிறிஸ்துவக் கல்லூரிகள் ஆங்கிலம் கற்பிப்பதால் தேசிய வாழ்வின் பண்பாட்டடிப்படை தகர்க்கப்படுகின்றதென்பதை உணர்ந்து செயற்பட்ட ஆறுமுக நாவலர் சாதியவாதியாக இருந்தார் என்பதை அவரது பல்வேறு கட்டுரைகள் நன்கு புலப்படுத்துகின்றது. நாவலரின் சாதிவாதத்தினால் உயர்சாதியல்லாத சைவத் தமிழறிஞ்ஞர் ஒருவர் நாவலரைக் கண்டிக்க நேர்ந்தமை இன்றைய இலக்கிய வரலாற்றேடுகளிற் காணப்படாத உண்மையாகும். தேசியவாதம் கூட யாழ்ப்பாணத்தில் சாதியடிப்படையை பேணுவதற்கான ஓர் அம்சமாக மாற்றப்பட்டது. யாழ்பாணத்துத் தாழ்த்தப்பட்ட சாதியினர் பலர் கிறிஸ்தவத்தை தழுவியமைக்கு காரணம் உயர்சாதி சைவர்கள் அவர்களை அடக்கி வைத்திருந்தமையே என்பது கிறிஸ்தவ ஏடுகளில் இருந்து புலனாகின்றது. சைவ ஆங்கிலப்பாடசாலைகளிலே தாழ்த்தப்பட்ட சாதிப்பிள்ளைகளுக்கு பலகாலமாக இடம் வழங்கப்படாமல் இருந்தது. ஆரம்ப பாடசாலைகள் கூட சாதியடிப்படையில் இயங்கி வந்ததென்பது பலர் அறிந்த உண்மை.

(யாழ்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை பக்கம் 11, 12)

 

 

  Quote
இந்திய பள்ளிக்கல்வி நிலை (1881-82)

பார்பனர்கள் நடுநிலைப்பள்ளி 30.7 உயர்நிலைப்பள்ளி 40. 29

தாழ்த்தப்பட்டவர்கள் நடுநிலைப்பள்ளி 0.14 உயர்நிலைப்பள்ளி 0

 

(புதிய கட்சியின் எழுச்சியும் பின்னடைவும் ஓர் வரலாற்று ஆய்வு பக்கம் 83)

 

இன்றைய நிலையிலும் தொடரும் பிரச்சனை

 

 

  Quote
அம்பலப்படுத்துகிறது, நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய தேர்வாணையத்தின் பார்ப்பன தர்பார்

 

நாட்டின் உயர்பதவிகளுக்கு வேட்பாளர்களாக தேர்வு செய்யும் அதிகாரம் கொண்டது மத்திய தேர்வாணையம். இந்தத் தேர்வாணையத்தை தனது பிடிக்குள் வைத்திருக்கும் பார்ப்பன அதிகார வர்க்கம், ஒடுக்கப்பட்டோரின் நியாயமான உரிமைகளைப் பறித்துக் கொண்டிருக்கிறது. அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற அகில இந்திய சர்வீசுகளுக்கான தேர்வுகளிலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோரின் நியாயமான உரிமைகளை இந்த ஆணையம் தொடர்ந்து பறித்து வருகிறது. திறந்த போட்டியில் தகுதி அடிப்படையில் தேர்வு பெற்ற தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோரை, இடஒதுக்கீடு கோட்டாவின் கீழ் தொடர்ந்து நிரப்பி வருகிறது இந்த ஆணையம். அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் - இந்த முறைகேட்டைக் கண்டித்ததோடு, 2004 ஆம் ஆண்டு முதல் அகில இந்திய சர்வீசுகளுக்கான தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட பட்டியல் அனைத்தையும் முழுமையாக ரத்து செய்து பாராட்டத்தக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

 

முழுமையாக படிக்க

http://www.keetru.com/periyarmuzhakkam/apr08/frontline.php

 

குலத் தொழிலை செய்யாவிடில் அபராதம்!

பார்ப்பனர்கள் மிரட்டல்

http://www.keetru.com/periyarmuzhakkam/aug05/bramin.php

 

சட்டமன்றத்தின் தீர்மானத்தைத் தூக்கி வீசுகிறது, நீதிமன்றம்!

மீண்டும் நுழைகிறது, நுழைவுத் தேர்வு

http://www.keetru.com/periyarmuzhakkam/mar06/entrance.php

 

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள் எவ்வாறு மறுக்கப்பட்டது, எத்தனை போராட்டங்கள் ஊடாக கல்வியை பெற்றனர், இடஒதுக்கீட்டின் முக்கியத்துவம் என்ன அதற்காக நடந்த போராட்டங்கள் என்ன என்பது பற்றி சற்று சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

தாள்ந்த சாதிகளுக்கு கல்வி அடியோடு மறுக்கப்பட்டது. கல்விகற்பதற்காக கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய வரலாறு நிறைய உண்டு.

உழவுத் தொழிலையே பாவத்தொழிலாக சித்தரிக்கும் மனுதர்மக் கோட்பாடுகள் மத்தியில் தாள்ந்த சாதிகள் கல்வி கற்பதை கற்பனை செய்து பார்க்க வேண்டும்.

தாள்ந்த சாதி பெண்கள் மார்பை மறைப்பதற்கே நூற்றாண்டாக தோழ்சீலைப்போராட்டம் செய்த சாதிய ஆழம் தீண்டாமை என்னும் சாதிய ஆழம் எதனையும் தொழில்சார் அடிப்படையில் அடக்கி விட முடியாது. இவ்வாறான ஆழத்தில் கல்வி கற்பது எவ்வாறு மறுக்கப்பட்டிருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

இவ்வாறன வக்கிரங்கள் நிலைபெற வழி வகுத்தது கடவுளோடும் மதத்தோடும் ஆன்மீகத்தோடும் இணைத்து நடைமுறைப்படுத்தப்பட்ட சாதிய ஒடுக்குமுறை. கடவுள் ஏற்றதாழ்வுகளுடனே மக்களை படைத்தான். பிரம்மனின் நெற்றி தோழ் இடுப்பு காலில் இருந்து மக்கள் பிறந்தனர். பஞ்சமர் அதிலிருந்தும் பிறக்கவில்லை என்று ஏற்படுத்தப்பட்ட கோட்பாடுகள். இது கடவுளின் விதி என்று மக்களை அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ள வைத்தனர். கடவுளோடு சம்மந்தப்படுத்தப்பட்டதால் மக்கள் பயத்துடன் அதை அனுசரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

 

ஒரு கடவுள் இவ்வாறான ஒரு கேவலத்தை செய்வாரா? அப்படிப்பட்ட ஒன்று கடவுளாக இருக்க முடியுமா என்று சிந்திக்க வைத்த தந்தை பெரியாரின் புரட்சி என்பது சாதராணமானதொன்றல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நடைமுறைப்படுத்தப்பட்ட அடிமைத்தன வாழ்வில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. பெரியார் வாழ்ந்த காலத்திலும் சூழலிலும் அவர் செய்தது மகத்தான சாதனை. அதனாலேயோ அவரை தந்தை என்று அழைக்கின்றனர். இங்கு நாலுபேர் வெறிபிடித்து கத்தினால் போல் அவர் காட்டிய பாதை மாறிவிடாது. அன்றும் பெரியாருக்கு செருப்பால் எறிந்தவர்கள் இருந்தார்கள், அதற்கெல்லாம் அஞ்சியவர் இல்லை அவர்.

 

ராமசாமி ராமசாமி என்று இங்கு கத்துபவர்களை பார்க்க வரலாற்று நினைவுதான் வருகின்றது. இராமலிங்க வள்ளலார் காலத்தில் நாவலரும் இவ்வாறு தான் கத்தினார். வள்ளலார் தன்னுயிரைப்போல் பிற உயிரை நேசி என்று சொன்னார். சாதி வேற்றுமைகள் மூட நம்பிக்கைகள் களையப்பட்ட ஒரு நன்மைபயக்கும் ஆன்மீக வழியை மக்களுக்கு போதித்தார். இதற்கு யாழ்பாணத்தில் இருந்து நாவலர் கத்தோ கத்தென்று கத்தி தீர்த்தார். கருத்தை எதிர்க்க துப்பில்லாமல் வள்ளலாரின் மனைவியை தரக்குறைவாக பேசினார்.

 

 

  Quote
நாவலருக்கு சைவ சமய -சாதிகட்கு எதிரி என்று யாரெல்லாம் பட்டார்களோ அவர்களை எல்லாம் வரம்பு மீறி வகைதொகையின்றி நா அடக்கமின்றி அவதூறாக பேசுவது ரொம்ப இயல்பாகவே இருந்திருக்கின்றது ! நாவலரின் இந்த ஆத்திரம் அடங்காத கோபம் வெறி நா அடக்கமின்மை பற்றியெல்லாம் பேசாமல் இருப்பதே சான்றாண்மை ! (பக்கம் 32)

என்று ராஜ்கொளத்தமன் தனது ஆய்வில் கூறுகின்றார்.

 

சாதியம் என்பது மனித குல விரோதச்செயல். காட்டுமிராண்டித்தனமான செயல் என்பதை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து விலகவேண்டுமே தவிர அதை நியாயப்படுத்தி பூசி மொழுகும் வேலையை செய்யக் கூடாது.

 

பொருளாதாரம் விருத்தியடையும் போதும் கல்வியில் மேன்மை வரும் போதும் மாற்றம் வரும் என்பது யாவரும் அறிந்ததே. பொருளாதார விருத்திக்கும் கல்வி மேன்மைக்கும் வித்திட்டவர்களை தான் இங்கு சிலர் கொச்சைப்படுத்துகின்றனர். இவை எவ்வாறு கடவுள் பெயராலும் சாதிய வெறியாலும் தடுக்கப்பட்டன என்பதையும் தடையை தாண்டி எவ்வாறு மக்கள் முன்னோக்கி தமது போராட்டங்கள் ஊடாக நகர்கின்றார்கள் என்பதையும் அவ்வாறு நடக்க தூண்டியவர் பெரியார் என்பதை யாவரும் அறிவார். அவரைத்தான் இங்கு எதிர்க்கின்றனர். பள்ளிக்கூடத்தில் அனுமதி இல்லை . கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று எத்தனை கோடங்கி காட்டுமிராண்டி கோட்பாடுகளை எத்தனை போராட்டங்கள் ஊடாக தகர்த்தெறிந்தனர் என்பதை யாவரும் அறிவார். அதை முன்னெடுத்து செய்த பெரியாரை என் இங்கு எதிர்க்கின்றனர் என்பதையும் யாவரும் அறிவார்.

 

எல்லாவற்றையும் விட ஈழத்தமிழர் போராட்டத்தை ஆதரிப்பது பெரியார் கொள்கை சார்பானவர்கள். எதிர்பது பார்பனர்கள். இது உலகறிந்த உண்மை. ஆனால் ஆதரிப்பவரை எதிர்போம் எதிர்பவரை ஆதரிப்போம். இதன் மூலம் தமிழ்தேசியத்தை பலப்படுத்துவோம். என்ன பிழைப்பைய்யா இது?

 

 

 • Like 1
 • Thanks 2

Share this post


Link to post
Share on other sites

எங்கள் பிரச்சினைகள் 100%மும் விவாதாங்கள் தீர்மானங்களும் தீர்வும் இல்லாமல் இருக்கு. அவற்றை விவாதிப்போம். தமிழகத்தில் ஈழ ஆதரவுக் குரல் கொடுப்பவர்களிடை ஆயிரம் உட்பிரச்சினைகள். இவற்றுக்குள் நாம் மூக்கை நுழைப்பது பிழையான ராஜதந்திரமாகும். நண்பர்கள் உதவுகிறவர்கள் ஆதரவு சக்திகளிடையே நிலவும் மோதல்களில் எவ்வண்ணம் நிலைபாடு எடுப்பது என்பதை பலஸ்தீனிய தலைவர் ஜசீர் அரபாத்திடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். எல்லோருடைய ஆதரவுக்குரலும் உதவியும் நிலைப்பது முக்கியம் என்பதை பலஸ்தீனியர்கள் உணர்ந்திருந்தனர். அந்த சரியான இராஜதந்திரத்தில் இருந்து ஈழ இறுதி யுத்தத்தின்போது பலஸ்தீனியர்கள் தவறிவிட்டார்கள் என்பது என் கவலை. தமிழக நட்புச் சக்திகளின் உள்விவகாரம் நமக்கு வேண்டாம். பஞ்சாயத்துக்களை அவர்களே தீர்த்துக் கொள்ளட்டும்.

Share this post


Link to post
Share on other sites

திரு.சுகன்,

'எங்கேயடா நம்மாளைக் காணோ' மென நினைத்தேன், பெரும் பத்தியில் கனதியான விவரணைகளோடு வந்துள்ளீர்கள்..!   vil-cligne.gif

1 hour ago, சண்டமாருதன் said:

கடவுளோடும் மதத்தோடும் ஆன்மீகத்தோடும் இணைத்து நடைமுறைப்படுத்தப்பட்ட சாதிய ஒடுக்குமுறை. கடவுள் ஏற்றதாழ்வுகளுடனே மக்களை படைத்தான். பிரம்மனின் நெற்றி தோழ் இடுப்பு காலில் இருந்து மக்கள் பிறந்தனர். பஞ்சமர் அதிலிருந்தும் பிறக்கவில்லை என்று ஏற்படுத்தப்பட்ட கோட்பாடுகள். இது கடவுளின் விதி என்று மக்களை அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ள வைத்தனர். கடவுளோடு சம்மந்தப்படுத்தப்பட்டதால் மக்கள் பயத்துடன் அதை அனுசரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

ஒரு கடவுள் இவ்வாறான ஒரு கேவலத்தை செய்வாரா? அப்படிப்பட்ட ஒன்று கடவுளாக இருக்க முடியுமா என்று சிந்திக்க வைத்த தந்தை பெரியாரின் புரட்சி என்பது சாதராணமானதொன்றல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நடைமுறைப்படுத்தப்பட்ட அடிமைத்தன வாழ்வில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. பெரியார் வாழ்ந்த காலத்திலும் சூழலிலும் அவர் செய்தது மகத்தான சாதனை. அதனாலேயோ அவரை தந்தை என்று அழைக்கின்றனர். இங்கு நாலுபேர் வெறிபிடித்து கத்தினால் போல் அவர் காட்டிய பாதை மாறிவிடாது. அன்றும் பெரியாருக்கு செருப்பால் எறிந்தவர்கள் இருந்தார்கள், அதற்கெல்லாம் அஞ்சியவர் இல்லை அவர்.

மேலே குறிப்பிட்டவை மக்களை சிந்திக்க வைத்தவை.

தங்களுக்கு நன்றி. தாங்கள் கொடுத்துள்ள இணைப்புகளும் நான் ஏற்கனவே படித்ததுதான்.

நீங்கள் சிவப்பு எழுத்துகளில் எழுதியுள்ளவற்றை ஏற்றுக்கொள்ளும் அதேவேளையில், இங்கிருக்கும் தற்போதைய அரசியல் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் அரசியல் முதலீடு செய்ய ஒரு வெற்றிகரமான குறியீடு(icon) அத்தியாவசிய தேவையாகிறது.

நீதிக்கட்சியிலிருந்து மருவி உருமாற்றம் பெற்ற கட்சிகளும் வர்ணாசிரமம், குலத்தொழில் என்ற பெயரில் சீழ்பட்டுக்கிடந்த அவலத்தை சரிசெய்து மீட்க, சமூகநீதியென அதன் தலைவர்கள் பெரியார், அண்ணா போன்றவர்கள் போராடி, தமிழகத்தில் வெற்றிகரமாக அடித்தளமிட்டது இந்த திராவிட கோட்பாடுகள்.

இது தாங்கள் அறியாததல்ல.

திராவிட கோட்பாடுகளில் பிழைகள் இருக்கலாம், ஆனால் நன்மைகளும், உடனடி பயன்களும் அதிகமிருந்ததால் மக்கள் பெருவாரியாக விரும்பி வரவேற்று வாக்களித்தனர். அதுவே தமிழ்நாட்டின் தனிதன்மைக்கான அடித்தளம்.

1 hour ago, சண்டமாருதன் said:

திராவிட  கருத்தியல் புரட்சி என்பதால் விடுதலை பெற்று திராவிட அரசியல் அதிகார கட்சிகளால் மரணிப்பதாக நிலமை உள்ளது. சுருக்கமான சொன்னால் ஆப்ரேசன் வெற்றி ஆனால் நோயாளி பலியாகிவிட்டார். 

அரசியல் சுழலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப எமது நிலைப்பாடும் அறம் சார்ந்த சிந்தனை முறையும் மாறுவதுதான் சரியானதாக இருக்க முடியும். திராவிட கருத்தியலில் கொள்கைக்கு விசுவாசமாக இருக்கின்றோம் என்ற போர்வையில் திராவிட அரசியல் கட்சிகளை ஆதரிப்பது அறத்துக்கு எதிரானது. நாட்டை சுடுகாடாக்குவதற்கு துணைபேவதற்கு ஒப்பானது. 

மேலேயுள்ள நிலைக்கு வித்திட்டது யார்..?

அண்ணாவிற்கு பின் வந்த மு.க, காணாதவன் சோற்றைக் கண்டமாதிரி, ஆரம்பித்து வைத்த பெரும் ஊழல், முறைக்கேடுகள், பதவி ஆசை போன்றவைகள் அதன் வழித்தோன்றலான அதிமுகவிற்கும் தொற்றிவிட, தற்பொழுது திராவிட கருத்தியலையே அசைத்துப் பார்க்கும் அளவிற்கு நிலைமை கீழ்நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறது. கட்சிகளும் சுயநலத்திற்காக விலை போய்க்கொண்டிருக்கின்றன.

எந்த புதிய கட்சிக்கும் அடிப்படை சித்தாந்தம் அமைக்க, மக்களிடம் வெற்றி பெற்ற ஃபார்முலாவும் அதை உருவாக்கிய குறியீடும் தேவை.

திராவிடக் கட்சிகளின் குறியீடான பெரியார், அண்ணாவை இப்பொழுதிருக்கும் கட்சிகள் பயன்படுதுவதுபோல இப்பொழுது சீமான் 'பிரபாகரம்' என்ற கூடுதலான குறியீட்டையும் கலந்து அரசியல் அறுவடை செய்ய எண்ணுகிறார்.

செய்யட்டும்,தவறில்லை, வாழ்த்துவோம்!

ஆனால் பழைய தானைத்தலீவர் மு.க. பயன்படுத்துவது போன்ற புனைவுகள், மலிவான யுக்திகள் போன்றவைகள் தேவையா..? என்பதுவே இங்கே கேள்வி..!

'திராவிடமும், பிரபாகரமும் இணைந்து நம் மக்களிடம் பிழைக்குமா..?' என காலம் பதில் சொல்லட்டும்.

அதுவரைக்கும் நாம் அனைவரும் நண்பர்கள்..! ஓகே..?  hello.gif

Edited by ராசவன்னியன்
 • Like 2

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, ஈழப்பிரியன் said:

சின்ன காலால ஓடிப் போய் ஒரு பெட்டி பியரும் வாங்கி வையுங்கள்.

அதென்னன்டு கோஷனுக்கு  சின்ன காலென்று  உங்களுக்கு தெரியும்?🤣

Share this post


Link to post
Share on other sites
On 12/5/2019 at 10:04 AM, ரதி said:

தம்பி,நீங்கள் வேண்டுமானால் சூடு ,சுரணை, தன்  மானம் இல்லாத தமிழனாய் இருக்கலாம்  நாங்களும் அப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கா ஏலாது தானே 

 

முதலில் நாமும் நம்மை சார்ந்தவர்களும் சூடு, சுரணை மானம் உள்ளவர்களா என   சுய பரிசோதனை செய்துவிட்டு இதெல்லாம் எழுதவேணும். நான் என்ன சொல்ல வாறன் எண்டு விளங்குதுதானே ரதியக்கா!

Share this post


Link to post
Share on other sites
On 12/4/2019 at 9:20 PM, Maruthankerny said:

இதில் எனக்கும் நிறைய முரண்பாடு இருக்கிறது ... அதே நேரம் நிஜ உலகிலும் நிறைய முரண்பாடு இருக்கிறது.எமது தமிழ்மொழிக்கு வெளியில் இருந்து வந்த வீரமாமுனிவர் போன்றவர்களும் நிறைய உழைத்து இருக்கிறார்கள். இவையெல்லாம் எந்த கண்ணகில் சேரும் என்பதோடு. சோனியா பிரதமராக முடியாது  கோத்தபாய ஜனாதிபதியாக இருந்த தடைகள் என்று நிறைய இருக்கிறது. நான் நேற்றுதான் அமெரிக்கா வந்தேன் எனது பிள்ளை வேண்டுமானால் நாளை அமெரிக்க ஜனாதிபதியாக முடியும். அப்படி ஆக முடியாது என்பது எந்த அளவில் எனது பிள்ளையின் வாழ்வை சீரழிக்கும் என்ற கேள்விகளும் உண்டு. 
தமிழர்களை தமிழர்கள் ஆளவேண்டும் என்பதில் நிறைய உடன்பாடு உண்டு என்பதை விட உலகம் பூராக இதுதான் நடைமுறையில் இருக்கிறது. யார் தமிழர்? தமிழகம் வந்த மாற்று மாநிலத்தவர்கள் தங்களை எவ்வாறு அடையாளப்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்கு உள்ளானது. தமிழன் என்பது உணர்வுபூர்வமானதுதானே தவிர இதுக்கு ஒரு அளவு கோள் என்று ஒன்றும் இல்லை. சீமானும் இதைத்தான் சொல்கிறார் ... நடைமுறைக்கும் அதுதான் சாத்தியம். சட்டமுறைமையில் சீமான் சொல்லுபவர்கள்தான் தமிழர்கள் என்று எழுத முடியாது. தமிழ் உணர்வாளர்களை முன்னே வாருங்கள் என்பதுதான் சீமானின் கோசம் ... உங்களால்தான் தமிழ் நாட்டை காப்பற்ற முடியும் என்பதுதான் அவரது கோசம். இதுக்குள் ஒரு எதிர்மறை கருத்தையும் ஒரு அதிகார தொனியையும் சீமானுக்கு எதிரானவர்கள்தான் தோற்றுவிக்கிறார்கள். 

கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பல கேள்விக்குளை எனக்குள் உண்டுபண்ணியது  எதிராக்கால உலகம் பற்றி சிந்திக்கும்  யாவருக்கும் அந்த கேள்விகள் வந்திருக்கும். டிரம் வெறும் வெள்ளை இன துவேஷ வெறியை தூண்டித்தான்  ஜனாதிபதியானார். இன துவேஷம் என்பது உலகு எங்கும் இருக்கிறது வாழ்கிறது என்பதுக்கு கடந்த  இந்திய இந்துவாத்வா வெற்றியும்  இலங்கை கோத்தாவின் வெற்றியும் கூட ஆதாரங்கள். ஆகவே தமிழர்களின்  எதிர்கால வெற்றி என்பது எங்கு இருக்கிறது? இதுக்கான பதிலை எழுத்தில் என்னவாக வேண்டுமானாலும்  எழுதிவிட்டு போகலாம். நிஜத்தில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதுதான் எனது கேள்வி ?  வெறும் சீமானிய எதிர்ப்பை விட்டு உங்களிடம் இருந்து ஒரு ஆக்கபூர்வமான பதிலை எதிர்பார்க்கிறேன். சீமான் மீது இங்கு பலரும் சேறு அடித்து இருக்கிறார்கள் .....அவற்றை வெறும் சேறாகவே நான் பார்க்கிறேன். உங்கள் கருத்துக்கு நான் பதில் எழுதியது ஒரு ஆக்கபூர்வமான விவாத்துக்ககவே. 
சீமானை எதிர்ப்பதில் என்ன வெற்றி இருக்க போகிறது? சீமானை ஆதரிப்பதால் என்ன தோல்வி வர போகிறது? சீமானை அவரின் குறைகளை போக்கி எம்மால் ஒரு வெற்றி காண முடியாதா? என்ற கேள்விகள்தான்  இன்று ஆக்க பூர்வமானவை. 

 

 

On 12/4/2019 at 6:55 PM, Maruthankerny said:

எல்லாம் பார்ப்பவனின்  பார்வையில் இருக்கிறது.

மலையடி ஓரமாக ஒரு கல்லு கிடக்கிறது அதை ஒரு சிற்பி எடுத்து நடராஜர் போல 
சிலை செதுக்கிறான் .... அதை கொண்டு சென்று சிதம்பரம் கோவிலில் வைக்கிறார்கள் 
இன்று கோடி கணக்கானவர்கள் அந்த கல்லை கண்டு அருள் பெறுவதுக்காக வரிசையாக 
நிற்கின்றார்கள் தினமும். சிற்பியின் உளி கல்லின் சில பாகங்களை அகற்றியதை தவிர 
கல்லில் வேறு எந்த மாற்றமும் இன்றுவரை இல்லை அதன் மீதி கற்கள் எல்லாம் அதே தண்மையுடன் 
இன்றும் ஒரு மலையடி வாரத்தில் கிடக்கலாம். ஆனால் இன்று சிதம்பரம் செல்லும் பலர் திரும்பி வந்து தமது வாழ்வை மாற்றி இருக்கிறார்கள் எதோ ஒரு அருள் சக்தி கிடைத்தாக உணர்ந்துகொள்கிறார்கள். சிதம்பரம் சென்ற ஒருவர் எமக்கு நாயன்மாரில் ஒருவராக இருக்கிறார். நீங்கள் கல்லின் தன்மையை பற்றியே பேசுகிறீர்கள். நீங்கள் சொல்வது உண்மைதான் கல்லின் தன்மை பக்கதர்கள் வந்துபோவாதல் எந்த மாறுதலையும் பெறவில்லை. அது முன்பு எவ்வாறு இருந்ததோ இப்போதும் அவ்வாறே இருக்கிறது.

இங்கு மேலைநாடுகளில்  அடிக்கடி மோட்டிவேஷனல் ஸ்பீக் என்று நடக்கும் நீங்களும் 
சிலதுக்கு கட்டாயம் சென்று இருப்பீர்கள் நானும் சென்று இருக்கிறேன். முன்னைநாள் ஜனாதிபதிகள் 
பில்லியனர்கள்  அவ்வாறு எதையாவது சாதித்தவர்கள் வந்து வெறும் 10-15 நிமிடம் பேசுவார்கள் 
அதுக்கு சென்ற பலர் அன்றில் இருந்து தமது வாழ்வை மாற்றி பல ஆயிரக்காணோர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்ருக்கிறார்கள். இதை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு வெறும் 10 நிமிட பேச்சுதான் .
ஆனால் அதுக்கு $1000-1500 வரை டிக்கெட் வாங்கி உள்ளே போனவன் பார்வை அது அல்ல. அவனுடைய கவனம் எல்லாம்  எதோ ஒரு மந்திரத்தையையோ தந்திரத்தையோ நான் முன்னேறுவதுக்காக இவர் சொல்லப்போகிறார்  என்ற கவனம் மட்டுமே இருக்கும் .....அதை அவன் வெறும் 10 நிமிடமாக பார்ப்பதில்லை.
அதிலும் விட மிக அழகாக அதே விடயத்தை வெளியிலே பலர் சொல்லியிருப்பான்  ஆனால் சிலருக்கு  அது தீயாக  பற்றிக்கொள்கிறது.  பல பணக்காரர்கள் பிரபலமான பணக்காரர்களுடன் சும்மா ஒரு 30 நிமிட லஞ்ச் சாப்பிடுவதுக்கு  $50000 - ஒரு லட்ஷம் வரை கூட காசு கட்டி போகிறார்கள் அந்த 30 நிமிடத்தில் பேசமுடியாத  விடயங்களை  கூட அதே பிரபல்யம் புத்தகமாக மிக விளக்கமாக எழுதி விட்டிருப்பார்கள். நான் இவருடன்  லஞ்ச் சாப்பிடடேன்   என்ற ஒரு தகுதியை வைத்துக்கொண்டே மேலே மேலே முன்னேறிய பலர் எங்கும்  இருக்கிறார்கள். அதுக்காக அந்த பிரபலம் தனது வேலையை விட்டுவிட்டு இவருடன் சாப்பிட்டு கூத்தடித்ததாக  அது பொருள்படுமா? 

பிரபாகரனுடன் கூடவே இருந்த ஒருவர் எனக்கு தெரிய இன்று சுவிஸ் நாட்டில் இருக்கிறார் 
இவர்கள் ஒவ்வரு நாளும் பிரபகரனை பார்த்தவர்கள். ஆனால் இன்று எம்மைப்போல சாதாரண 
ஒரு புலம்பெயர் அகதியாக இன்று இருக்கிறார். இவ்வாறுதான் எல்லோரும் இருக்கவேண்டுமா?
ஒரு நாளில் பார்த்த சீமான் பிராபகரனை தமிழகத்த்தின் பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சென்று சேர்த்து இருக்கிறான். பிரபாகரனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள் என்பதுதான் உங்களில் மாறுதலை கொண்டுவருவது தவிர  ..... பிராபகரன் மாறுவதில்லை பிரபாகரன் ஒரு பிரபாகரன்தான். 

உங்கள் இந்திய நண்பருக்கு சொல்லுங்கள் ஆப்பிள் கீழே வீழும்போது எடுத்து உண்டுகொண்டு இருந்த 
உலகில்தான்  நியூட்டனும் இருந்தான் என்று. அவன் உணவை தாண்டி ஏன் வீழ்கிறது? என்ற கேள்விக்கு சென்றாதல்  இன்றும் உலகில் வாழ்கிறான் இனியும் வாழ்வான். நியுடனுக்காக ஆப்பிள் மாறியதில்லை 
ஆப்பிள் ஆப்பிளாகவே இருந்தது. மாறியது ஒரு மனிதனின் பார்வையும் சிந்தனையும் என்று சொல்லுங்கள். 

பச்சை தீர்ந்துவிட்டது நண்பா! (மேலுள்ள இரண்டு  கருத்தாடல்களும்)

Share this post


Link to post
Share on other sites
43 minutes ago, Eppothum Thamizhan said:

முதலில் நாமும் நம்மை சார்ந்தவர்களும் சூடு, சுரணை மானம் உள்ளவர்களா என   சுய பரிசோதனை செய்துவிட்டு இதெல்லாம் எழுதவேணும். நான் என்ன சொல்ல வாறன் எண்டு விளங்குதுதானே ரதியக்கா!

அருமை ந‌ண்பா 

Share this post


Link to post
Share on other sites
18 hours ago, ராசவன்னியன் said:

Picture1.jpg

DecentAdorableAfricanbushviper-size_rest

நெம்ப சந்தோசம்ணே.

18 hours ago, ஈழப்பிரியன் said:

சின்ன காலால ஓடிப் போய் ஒரு பெட்டி பியரும் வாங்கி வையுங்கள்.

வாங்கி வர நான் ரெடி ஆனால் யார் குடிக்கிறதாம்?

On 12/5/2019 at 2:59 AM, Maruthankerny said:

எங்களுக்கு தெரியாமல் லாராவிடம் ஓன்லைனின் டியூசன் எடுக்கிறீர்களா?
ஒரே கான்ஸ்பிரஸி தியறியாக இருக்கு 

அட ஆமால்ல? இது தொத்து வியாதியா இருக்குமோ😀

Share this post


Link to post
Share on other sites
On 12/5/2019 at 9:43 AM, Maharajah said:

Che, 

நான் பொதுவாகத்தான் குறிப்பிட்டடிருந்தேன். உங்களை சுட்டி அல்ல.  எனது குறிப்பிக்களை பார்த்தீர்களானால் களத்திலுள்ளோருக்கு தெளிவாகப் புரியும் நான் சீமானின்,  அவரின் பேச்சுகளையோ ப கொள்கைகளையோ பற்றி நான் கருத்திடவில்லை.  எமதாட்களின் விமரிசன முறையையில் தான் திருத்தம் வேண்டும் என கூறி வருகிறேன். விட்டால் குடுமி தட்டினால் மொட்டை என்கின்ற வகையில் தான் விமர்சனங்கள் உள்ளன.  ஏற்கனவே அழிந்து விட்டோம்.  இருக்கின்றன கொஞ்ச நஞ்ச அனுதாபங்களையும் இழக்கக்கூடாதல்லவா. 

அந்த நப்பாசைதான் இஞ்ச நான்வந்து கரையுறதுக்கு காரணம்.  வேறு என்னவாக இருக்கும்? 

மகாராஜா,

விளக்கதுக்கு நன்றி.

யாரையும் பகைக்க கூடாது என்பது சரிதான். ஆனால் சீமானுக்காக மற்ற எல்லாரையும் பகைக்கும் போக்குத்தான் இப்போ நம்மவரில் அதிகம்.

சீமானை ஆதரிக்கிறோம் என்று இணைய வெளியில் நாயக்கர் இன மக்கள் மீது ஈழத்தமிழர் வெறுப்பை உமிழ்வது - தமிழ் நாட்டில் சகல மட்டங்களிலும் அதிகாரம் கொண்ட, ஒரு தமிழ் பேசும் சமூகத்தையே நமக்கெதிராக திருப்பி விட்டுள்ளது.

இதில் ஒரிசாவின் பிஜு பட்நாயக்கும், தெலுங்கு நாயுடுக்களும், பண்டாரநாயக்கவும்  ஒன்றுதான் எனும் சீமானின் அரிய முட்டாள்தனமா கண்டுபிடிப்பை இதே யாழில் கூட சிலர் காவி வந்தனர்.

நாயகம், நாயக், நாயகன் என்பன இந்திய மொழிகள் எல்லாவறிலும், சிங்களத்திலும் “தலைமை” என்பதை குறிக்கும் சொல் என்பதை இலகுவாக மறந்து விட்டு.

 

Share this post


Link to post
Share on other sites
21 hours ago, ராசவன்னியன் said:

ஒரு நகைச்சுவை திரி, இவ்வளவு நேரம் எரிவது யாழில் இதுவே முதல்தடவை என நினைக்கிறேன்..! rire-2009.gif

ஒரு தமிழனை, தமிழனே ஆளவேண்டும் என்று ஒருவன் சொல்வது நகைச்சுவையானது என்று நினைப்பதென்பது, தமிழக மக்கள் இன்றும் திராவிட அடிமைகளாக இருக்கவே விரும்புகிறார்கள் என்பதை மிகத்தெளிவாகவே காட்டுகிறது. என்ன செய்வது, எல்லாம் டாஸ்மார்க், சினிமாக்களின் உப(பா)யம்.

Share this post


Link to post
Share on other sites
15 hours ago, குமாரசாமி said:

பொய் சொல்கிறாரா? நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உயர் திரு உருத்திரா அவர்கள் 
தலைவரின் விருந்தோம்பலைப்பற்றி இது வரை பேசாமல் விட்டவர்கள் எவருமில்லை...
 

 

அண்ணர், 

பிரபாவின் விருந்தோம்பல் பற்றி யாரும் கதைக்கவில்லை. அது மிக பிரசித்தமானதே.

ஆனால் சீமான் சாப்பிடுவதை பின்னால் இருந்து ஒருவர் குறிப்பெடுக்கும் அளவுக்கு பிரபா ஒரு ஆள் வலுவை வீணடிதிருப்பாரா? 

ஒருவர் சாப்பிடுவதை அவருக்கு தெரிய “கணக்கு போடும்” அளவுக்கு இங்கிதம் இல்லாதவர்களா புலிகள்?

என்னை கேட்டால் இரெண்டு கேள்விக்கும் பதில் இல்லை என்பதே.

சீமான், வன்னிக்கு போனார், பிரபாவை ஒரு 5 நிமிடம் பார்த்தார். பாலகுமார் போன்ற 3ம் நட்ட தலைவர்களுடன் பேசினார். அவ்வளவுதான். இதற்கு மேலே சீமான் சொல்வதெல்லாம் புழுகு.

இப்படி ஒருவர் தன் மக்களையே ஏமாற்ற புழுகும் போது, அவர் எம்மீது வைத்திருக்கும் கரிசனையும் பொய்தானா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

 

4 minutes ago, Eppothum Thamizhan said:

ஒரு தமிழனை, தமிழனே ஆளவேண்டும் என்று ஒருவன் சொல்வது நகைச்சுவையானது என்று நினைப்பதென்பது, தமிழக மக்கள் இன்றும் திராவிட அடிமைகளாக இருக்கவே விரும்புகிறார்கள் என்பதை மிகத்தெளிவாகவே காட்டுகிறது. என்ன செய்வது, எல்லாம் டாஸ்மார்க், சினிமாக்களின் உப(பா)யம்.

தமிழனை சாதிய அடிப்படையில் தமிழன்/தமிழன் அல்லாதவன் என்று பிரிக்கும் மிலேச்சன் ஆளாதவரை பரவாயில்லை.

22 hours ago, விசுகு said:

நன்றாக  உற்றுப்பாருங்கள்

புலிகளை ஏதாவது  காரணங்களைத்தேடி வசை பாடியோரில்  அநேகர்    தான்

இப்போ சீமான்  புலிகளை  இளக்காரம்  செய்கிறார்

தலைவரை  மதிப்பிறக்கம்  செய்கிறார்  என்பவர்கள்.

ஏதாவது  புரிகிறதா  சகோ.....???

எனக்குப் புரிந்தது.

சிலருக்கு எப்போதும் வாழ்கையில் ஒரு ஹீரோ தேவை. இந்த ஹீரோவை வணங்கி வழிபடாமல் இவர்களால் வாழ முடியாது.

இவர்களின் உண்மையான ஹீரோ பிரபா போய்விட்டார். இவர்கள் இப்போ ஒரு ஹீரோ வேடம் போடும் சீரோவை (சீமான்) ஹீரோவாக கொண்டாடுகிறனர்.

Share this post


Link to post
Share on other sites
20 minutes ago, goshan_che said:

 

 

தமிழனை சாதிய அடிப்படையில் தமிழன்/தமிழன் அல்லாதவன் என்று பிரிக்கும் மிலேச்சன் ஆளாதவரை பரவாயில்லை.

 

தமிழனை தமிழ் பேசும் தெலுங்கனோ , கன்னடனோ, மலையாளியோ ஆளக்கூடாது என்பதுதான் சீமானின் வாதம். அதில் ஏன் சாதியத்தை கொண்டுவந்து புகுத்துகிறீர்கள்?

Share this post


Link to post
Share on other sites
37 minutes ago, goshan_che said:

 

 

.

எனக்குப் புரிந்தது.

சிலருக்கு எப்போதும் வாழ்கையில் ஒரு ஹீரோ தேவை. இந்த ஹீரோவை வணங்கி வழிபடாமல் இவர்களால் வாழ முடியாது.

இவர்களின் உண்மையான ஹீரோ பிரபா போய்விட்டார். இவர்கள் இப்போ ஒரு ஹீரோ வேடம் போடும் சீரோவை (சீமான்) ஹீரோவாக கொண்டாடுகிறனர்.

எழுதும்  போதே  உங்களுக்குப்புரியும்  என்று  தெரியும்  தானே??

சிலருக்கு ஹீரோவா  இருந்து

ஒரு  சிலரால்  வறுத்தெடுக்கப்பட்டவர்

இப்ப  எல்லோருக்கும் ஹீரோ என்பது தானே  எனது பதிவு....

Share this post


Link to post
Share on other sites
11 minutes ago, Eppothum Thamizhan said:

தமிழனை தமிழ் பேசும் தெலுங்கனோ , கன்னடனோ, மலையாளியோ ஆளக்கூடாது என்பதுதான் சீமானின் வாதம். அதில் ஏன் சாதியத்தை கொண்டுவந்து புகுத்துகிறீர்கள்?

அவர்கள் தெலுங்கு, மலையாளம் பேசும் தமிழர்கள். 

இலங்கை சாதிய அமைப்பு தமிழக சாதிய அமைப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

தமிழ் நாட்டில் குறித்த சாதியினரில், குறித்த அளவினர் மட்டும் (எல்லோரும் அல்ல) வேறு மொழிகளும் பேசுவர்.

உதாரணத்துக்கு உதயநிதி ஸ்டாலின். அவர்   தெலுங்கை பூர்வீகமாக கொண்ட இசைவேளாளர் (நட்டுவர்). ஆனால் தெலுங்கு பேசாதவர். அவரின் தந்தை ஸ்டாலினும் அப்படியே. பாட்டன் கருணாநிதிக்கு தெலுங்கு பேச வரும் ஆனால் பேசுவதில்லை என்கிறனர். 

உதயநிதியை போல பல மில்லியன் கணக்காணவர்கள் தம்மை தமிழ்-நாயக்கர், தமிழ்-முதலியார் என அடையாளம் காண்கிறனர்.

இப்போ உதயநிதி தெலுங்கரா அல்லது  தமிழரா. சீமான் அவரை தெலுங்கர் என்கிறார்.

 

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, Eppothum Thamizhan said:

முதலில் நாமும் நம்மை சார்ந்தவர்களும் சூடு, சுரணை மானம் உள்ளவர்களா என   சுய பரிசோதனை செய்துவிட்டு இதெல்லாம் எழுதவேணும். நான் என்ன சொல்ல வாறன் எண்டு விளங்குதுதானே ரதியக்கா!

ஒரு தமிழச்சியாய் இருந்து கொண்டு எனக்கு எழுத சுதந்திரம் இருக்குது என்று நினைக்கிறேன் ...உங்களுக்கு தன்மானம் இல்லா விட்டால் பேசாமல் இருங்கள் அல்லது யாருக்கும் வால் பிடியுங்கள் ...அதை பற்றி எனக்கு கவலை இல்லை.
உங்கட கதையை பார்த்தால் கொலைக்காரன் தான் கொலையைப் பற்றி எழுத வேண்டும் என்பது போல் அல்லவா இருக்குது 

நீங்கள், சீமானை விழுந்து கும்பிடுங்கோ, அவரது உணர்ச்சிகரமான பேச்சை கேட்டு ரசியுங்கோ.அது உங்கட விருப்பம்...அதே போல் என் கருத்தை சொல்ல எனக்கு உரிமை உள்ளது.

சீமான் தமிழ் நாட்டில் இருக்கும் மக்களுக்கே ஒன்றும் செய்து கிழிக்கேல்ல ...இதில் எங்களுக்கு ஏதாவது செய்திட்டாலும் 

நான் போராடாமல் ஓடி வந்திருக்கலாம். ஆனால் தலைவரது பெயரையோ அல்லது புலிகளது பெயரை சொல்லியோ நான் என் வயித்தை வளர்க்கேல்ல 

 • Like 1
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
On 12/5/2019 at 9:21 AM, Maharajah said:

 

நான் ஆரம்பத்திலிருந்தே கூறுவதுபோல திரும்பவும் கூறுகிறேன்.  எங்கள் விமரிசனம் பிறரை வழிநடத்தவேண்டுமே ஒழிய,  அவனை காயப்படுத்தி களத்தில் இருந்து ஓடவைக்க கூடாது. 

எவரையும் காயப்படுத்தவேண்டும் என்ற நோக்கில் கருத்துக்களை நான் எழுத முனைவதில்லை. ஆனால் மனதில் தோன்றுவதை யாழ் களத்தின் விதிகளை மீறாமல் சொல்லவே முனைகின்றேன். இருந்தும் தவறாக விளங்கியவர்களும் உண்டு. 

நான் தமிழ் இனப்பற்றும், மொழிப்பற்றும் நிறையவே உள்ளவன். அதைப் போல பிற இன, மத, மொழி அடையாளங்களை பெருமையாக கொண்டவர்களை ஏற்றுக்கொள்ளவும் தெரியும்.

என் இனம்தான் பெரிது என்று மார்தட்டி பிற இனத்தவரை, மொழிபேசுபவர்களை இகழ்ந்தும் தூற்றியும் தமிழ் இனப்பற்றை வளர்க்கமுடியாது. வெறும் துவேஷத்தையும், பிளவுகளையும்தான் வளர்க்கலாம். இதனை இன்றைய சமூகவலை உலகத்தில் இளையவர்கள் புரிந்துகொண்டிருப்பதால்தான் சீமான் போன்றவர்களுக்கான ஆதரவுத் தளம் சில்லறையாகவே உள்ளது. அது பெருகும் என்று மனப்பால் குடிப்பவர்களுக்கு இன்னும் பத்து வருடங்களுக்குப் பிறகும் இதே கருத்தை திருப்பிச் சொல்லும் நிலைதான் இருக்கும். அதுவரை..

டொட்.

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, விசுகு said:

எழுதும்  போதே  உங்களுக்குப்புரியும்  என்று  தெரியும்  தானே??

சிலருக்கு ஹீரோவா  இருந்து

ஒரு  சிலரால்  வறுத்தெடுக்கப்பட்டவர்

இப்ப  எல்லோருக்கும் ஹீரோ என்பது தானே  எனது பதிவு....

யாரும் எனக்கு எப்போதும் யாரும் ஹீரோ இல்லை அண்ணர். மனிதர்களை மனிதர்களாக பார்க்கும் பாக்கியம் பெற்றவன் நான். செயற்கரியதை செய்யும் மனிதனை புகழும், அவர்களின் தனித்துவ குணவியல்புகளை சிலாகிக்கிக்கும் அதே நொடியில் அவர்களின் சறுக்கல்களை இனம்காணவும், விமர்சிக்கவும் முடிவது அதனால்தான்.

இந்த தெளிவு இல்லாத படியால்தான் உங்களுக்கு சீரோக்களை இனம்காணுவதில் பிரச்சினை வருகிறது.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
23 hours ago, வல்வை சகாறா said:

ரதி சத்தியமா எனக்குப் புரியேல்லை.

உண்மையில் கவலை தரக் கூடிய விசயம் அக்கா... "ஈழம்" என்பது எல்லோரது கனவு, எதிர்பார்ப்பு தான் ... அதற்காக வெறும் உசுப்பேத்தல்  கதைகளையும், உணர்ச்சி கரமான பேச்சுகளையும் இன்னும் கதைத்துக் கொண்டு இருந்தால் சரியா?...அதுவும் ஊரில் இருக்கும் மக்களது கள நிலவரம் தெரியாமல்... மு.வாய்க்காலில் இருந்து மீண்டு வருவதற்கே இன்னும் 30,40 வருடங்கள் எடுக்கும்.

பையனுக்கு தான் உணர்ச்சி வசப்படும் வயது என்று பார்த்தால் இங்கு நடுத்தர வயதை தாண்டிய பலர் பையனை விட  உணர்ச்சி வசப்படுவதை பார்க்க என்னாலே முடியல்ல 😞


 

 • Thanks 2

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, ரதி said:

உண்மையில் கவலை தரக் கூடிய விசயம் அக்கா... "ஈழம்" என்பது எல்லோரது கனவு, எதிர்பார்ப்பு தான் ... அதற்காக வெறும் உசுப்பேத்தல்  கதைகளையும், உணர்ச்சி கரமான பேச்சுகளையும் இன்னும் கதைத்துக் கொண்டு இருந்தால் சரியா?...அதுவும் ஊரில் இருக்கும் மக்களது கள நிலவரம் தெரியாமல்... மு.வாய்க்காலில் இருந்து மீண்டு வருவதற்கே இன்னும் 30,40 வருடங்கள் எடுக்கும்.

பாதிக்கப்பட்ட மக்கள் மீது அரசியல்வாதிகளுக்கு எந்த அக்கறையும் இல்லை அப்படி இருக்கும் போது 30,40 விட பல ஆண்டுகள் ஆகும் மக்கள் வாழ்வு இயல்பை அதாவது பூரணமான நிறைவான வாழ்க்கை அடைய

Share this post


Link to post
Share on other sites

ஒரு உறவு ஆவது குரல் கொடுப்பதை ஆதரிப்போம்...அதை விட்டுவிட்டு கனடாவிலும் சீமானுகு எதிடாக குரல் ஒன்று வெளிப்படையாகுது....பின் பக்கம் எதுவும் இல்லை....முகப்புத்தகம் மட்டும் இருக்கு..

Share this post


Link to post
Share on other sites
On 12/5/2019 at 5:41 PM, ampanai said:

புருடா என்றால் என்ன ? புலுடாவிற்கும் புருடாவிற்கும் என்ன வித்தியாசம்? .இரண்டும் ஒன்றுதான்.
தமிழகத்தில் புருடா விடும் அரசியல்வாதிகள்.  ஈழத்தில் புலுடா விடும் அரசியல்வாதிகள். 

புருடாவும் புலுடாவும் இருந்தால் தான் அரசியல் அரியணை தமிழகத்தில் ஏறலாம். ஏறியபின்னர் மக்களுக்கு யார் என்ன செய்தார்கள் என பார்த்தால் எம்.ஜி.ஆர். அவர்களை தவிர ஈழ மக்களுக்கு யாரும் எதையும் செய்யவில்லை 😞 

சிங்களத்தில் புருடாவ என்பார்கள்

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, colomban said:

சிங்களத்தில் புருடாவ என்பார்கள்

Fraud என்பதைதான் இப்படி சொல்கிறோமா?

Share this post


Link to post
Share on other sites

பாவனை செய்தல் அல்லது பம்மத்து காட்டுதல்

8 minutes ago, goshan_che said:

Fraud என்பதைதான் இப்படி சொல்கிறோமா?

 

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, ரதி said:

உண்மையில் கவலை தரக் கூடிய விசயம் அக்கா... "ஈழம்" என்பது எல்லோரது கனவு, எதிர்பார்ப்பு தான் ... அதற்காக வெறும் உசுப்பேத்தல்  கதைகளையும், உணர்ச்சி கரமான பேச்சுகளையும் இன்னும் கதைத்துக் கொண்டு இருந்தால் சரியா?...அதுவும் ஊரில் இருக்கும் மக்களது கள நிலவரம் தெரியாமல்... மு.வாய்க்காலில் இருந்து மீண்டு வருவதற்கே இன்னும் 30,40 வருடங்கள் எடுக்கும்.

பையனுக்கு தான் உணர்ச்சி வசப்படும் வயது என்று பார்த்தால் இங்கு நடுத்தர வயதை தாண்டிய பலர் பையனை விட  உணர்ச்சி வசப்படுவதை பார்க்க என்னாலே முடியல்ல 😞


 

நினைத்துப் பார்த்தால், இப்படி தாம் மிகவும் பாதுகாப்பாக இருந்தபடி ஊரில் உள்ளவர்களை உசுப்பேற்றுபவகளை பார்க்க கடும் கோவம் வரும்.

முகம் தெரியா விடினும் பையன் மீது எனக்கு ஒரு இனம் புரியாத அக்கறை உண்டு. அவர் வயதை ஒத்தவர்கள், குறும்படம், இன்ன பிற விடயங்களில் ஈடுபட, சொந்த செலவில் அவர் இனத்துக்காக என நினைத்துச் செய்யும் செயல்களை பாராட்ட முடியாவிட்டாலும், அவரின் உணர்சியை மெச்சவாவது முடிகிறது.

ஆனாலும் அவர் ஒன்றும் பபபா இல்லை. ஒரு இளந்தாரி.

சும்மா பென்சன் எடுத்து விட்டு, யாழில் பொழுது போக நீட்டி முழக்குபவர்களுக்கும் சம்பந்தன், சுமந்திரனுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இதை பையன் உணர வேண்டும்.

இங்கே எழுதும் ஐயாமார் பலரது செயல்பாடெல்லாம் மறைமுகமாக இருக்குமாம். ஊரிலேயே இருப்பவன் காயடிக்க படவேண்டுமாம்.

வெளிநாட்டில் புலி - ஊருக்கு போகும் போது எலி. இங்கே இன விடுதலை மாய்மாலம் போடும் பலரின் வேசம் இதுதான்.

இதை பையன் இனம் காண வேண்டும். கூடவே யதார்த்தையும் புரிய வேண்டும்.

உதாரணதுக்கு - அண்மையில் ஊருக்கு போய் வந்துள்ளார். ஊரில் நிண்ட போது வெளிப்படையாக புலிகள், ஈழ ஆதரவு பற்றி ஒரு கூட்டம் போட்டிருக்கலாம்தானே?

குறைந்த பட்சம் யாழில் ஒரு நாம் தமிழர் ஆதரவுக் கூட்டமாவது போட்டிருக்கலாம்?ஏதுமில்லை. முடியாது. 

ஆனால் இந்த ஆபத்துக்களை சதா எதிர் கொள்ளும், அங்கேயே வாழும் தனி போன்றவர்கள் எழுதும் போது - அவர்களை ஏதோ துரோகி ரேஞ்சில் திட்டுகிறார்.

இதை சொல்லிக் கொடுக்க வேண்டிய பெரியவர்களோ - ”விடாதயடா தம்பி பிடி” என்கிறார்கள்.

 • Like 1
 • Thanks 1
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • கூட்டமைப்புக்கு வாக்களித்தால் கன்னியா போல கோணேஸ்வரமும் பறிபோகும் : விக்னேஸ்வரன் எச்சரிக்கை அரசாங்கத்திடம் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளப்போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அறிவித்துள்ளதாக ஊடகங்களில்  வெளியான செய்திகள் தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் விக்னேஸ்வரன், சுமந்திரன் தனக்கும்  டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் போன்றவர்களும் இடையில் ஏதேனும் வேறுபாடு இருந்தால் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். புத்தூரில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் கூட்டம் ஒன்றில் இவ்வாறு தெரிவித்த விக்னேஸ்வரன் ” தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தால் எதிர்கட்சி தலைவர் பதவிக்காக கன்னியா வென்னீரூற்றை பறி கொடுக்க முன்வந்தது போல் நாளை அமைச்சுப் பதவிகளுக்காக கோணேஸ்வரத்தையும் நல்லூரையும் பறி கொடுக்கத் தயங்க மாட்டார்கள் இவர்கள்” என்றும் கூறியிருக்கிறார். விக்னேஸ்வரன் அங்கு மேலும் பேசுகையில், அரசாங்கத்திடம் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளப்போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் திரு.சுமந்திரன் அவர்கள் அறிவித்துள்ளதாக வெளிவந்துள்ள ஊடக செய்திகள் எனக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் மிகவும் தெட்டத்தெளிவாக இதனைச் சொல்லியிருக்கின்றார். அத்துடன் தாம் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு தமிழ் மக்கள் தமக்கு ஆணை தரவேண்டும் என்று துணிந்து வெட்கம் இல்லாமல் கேட்டிருக்கின்றார். எமது தமிழ் மக்களை திரு.சுமந்திரன் அவர்கள் எந்தளவுக்கு முட்டாள்கள் என்றும், சுய கௌரவம் இல்லாதவர்கள் என்றும் ஏமாளிகள் என்றும் நினைக்கின்றார் என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது. அத்துடன் முன்னைய ஆட்சியிலும் அமைச்சுப் பதவிகளை பெற்றிருந்திருக்க வேண்டும் என்ற கருத்தையும் அவர் கூறி இருக்கின்றார். இது எந்தளவுக்கு  சரணாகதி அரசியல் சிந்தனைக்குள்ளும் சலுகை அரசியல் சிந்தனைக்குள்ளும் கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டிருக்கின்றது என்பதைத் தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இதனால் எந்தளவுக்கு இனஅழிப்பு மற்றும் போர்குற்றங்களுக்கான சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெறுவதை தடுத்து நிறுத்தும் வகையிலும் கூட்டமைப்பு இதுகாறும் செயற்பட்டிருக்கின்றது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. அத்துடன் அத்தகைய ஒரு பெரும் துரோகத்துக்கும் காட்டிக்கொடுப்புக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகிவருகின்றது என்பதை திரு. சுமந்திரன் அவர்களின் பேச்சு எடுத்துக் காட்டுகின்றது. அவர் அபிவிருத்திக்காக அமைச்சுப்பதவிகளைப்  பெறவேண்டும் என்று கூறுவது வெறும் முதலைக்கண்ணீர் வடிப்பதாகும். தமிழ் மக்களின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் உண்மையான அக்கறை இருந்திருந்தால் வட மாகாணசபை ஆட்சியில் இருந்தபோது முதலமைச்சர் நிதியத்தை ஏற்படுத்தி வெளிநாடுகளில் இருந்து நிதியைப் பெறுவதற்கு திரு.சம்பந்தனும் திரு.சுமந்திரனும் எனக்கு ஒத்துழைப்பு வழங்கி இருப்பர். முதலமைச்சர் நிதியத்தை நாம் பெற அவர்கள் எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை. மாறாக முறைமுக எதிர்ப்புக்களையே தெரிவித்து வந்தனர். திரு. சுமந்திரனின் கூற்றில் முரண்பாடு இருக்கிறது. இது எந்தளவுக்கு அவரின் கண்களை அமைச்சு பதவிகள் மறைக்கின்றன என்பதை எடுத்துக் காட்டுகின்றது. அதாவது அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்றமைக்காக திரு.ஜி. ஜி பொன்னம்பலம் அவர்கள் பின்னர் வருந்தியதாகத் தெரிவிக்கும் திரு.சுமந்திரன், தாங்கள் அமைச்சுப் பதவிகளைப் பெறப்போவதாகக் கூறுகின்றார். ஒரு பெரும் இனப்படுகொலையை நிகழ்த்திய அரசாங்கத்துக்கு எதிராக நிலத்திலும் புலத்திலும் எமது மக்கள் அல்லும் பகலும் போராடும்போது தம்மைக் காப்பாற்றும் வகையில் அமைச்சுப் பதவிகளைப் பெற்று அரசாங்கத்துடன் இணைவதற்கு எவ்வாறு திரு.சுமந்திரனுக்கு சிந்தனை தோன்றியதோ என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்று அமைச்சரவையில் அங்கம் வகித்து எவ்வாறு எமது மக்களுக்கான இன அழிப்புக்கு நீதி பெறுவார்கள் என்பதையும் எவ்வாறு பொறுப்புக்கூறல் பொறிமுறையை  ஐ. நா ஊடாக முன்னெடுப்பார் என்பதற்கான அவரின் திட்டத்தையும் எமது மக்கள் முன் திரு.சுமந்திரன் அவர்கள் வெளிப்படுத்த வேண்டும். அதாவது இன அழிப்புக்கு இனிமேல் நான் நீதி கேட்க மாட்டேன். பொறுப்புக்கூறல் பொறி முறையை நான் ஐ.நா ஊடாக முன்னெடுக்கமாட்டேன் என்று அவர் இனி வெளிப்படையாகக் கூறி எம் மக்களிடம் வாக்குக் கேட்க வேண்டும். கடந்த காலங்களில் டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் போன்றவர்களும் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்களால் எதைச் சாதிக்க முடிந்தது? திரு.சுமந்திரன் மட்டும் அரசாங்கத்தில் அமைச்சர் ஆகினால் எமது மக்களின் அரசியல் பிரச்சனைகளைத் தீர்க்க போகின்றாறா? டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான்  ஆகியோருக்கும் திரு.சுமந்திரனுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை என்று இப்போது ஆகிவிட்டது. இதே டக்ளஸைத்தான் திரு.சுமந்திரன் முன்னைய காலங்களில் வெகுவாக விமர்சித்தார். அவரின் கட்சியினர் டக்ளஸை துரோகி என்றார்கள். இப்போது அவரின் கட்சி திரு. சுமந்திரன் பற்றி என்ன கூறப்போகின்றது? போராடாத எந்த இனமும் விடுதலை பெறப்போவதில்லை என்பது உலக நியதி. உண்மை அப்படி இருக்க, சலுகைகளுக்கும், பதவிகளுக்கும், சரணாகதி அரசியலுக்கும் எமது மக்களை மூளை சலவை செய்ய முயலுகின்றார் திரு.சுமந்திரன். ஆகவே, எனதருமை மக்களே, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தால் எதிர்கட்சி தலைவர் பதவிக்காக கன்னியா வென்னீரூற்றை பறி கொடுக்க முன்வந்தது போல் நாளை அமைச்சுப் பதவிகளுக்காக கோணேஸ்வரத்தையும் நல்லூரையும் பறி கொடுக்கத் தயங்க மாட்டார்கள் இவர்கள். நீங்கள் தீர்க்கமான முடிவெடுக்கும் காலம் வந்துவிட்டது.  உங்களை சுற்றி ஒரு பெரும் சதிவலை பின்னப்பட்டு வருகின்றது. அதை முறியடித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு ஆசனம்  கூடப்  பெறமுடியாமல் செய்து ஒரு பெரும் வரலாற்றுத் தீர்ப்பினை நீங்கள் அக் கட்சிக்கு அளித்து அதர்மத்துக்கு சாவுமணி அடிக்கும் காலம் வந்துவிட்டது. தம்பி பிரபாகரன் ஒன்றிணைத்த ஐந்து கட்சித் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போது குற்றுயிராகக் கிடக்கின்றது. அதனைக் கருணைக் கொலை செய்வது குற்றமில்லை என்பது என் கருத்து. வெறும் அரசியல் போட்டி காரணமாக நான் இந்தக் கருத்துக்களை வெளிக் கொண்டு வரவில்லை. வரலாற்றைப்  பாருங்கள். அந்த அனுபவத்தில் இருந்து உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள். திட்டமிட்டு எமது மக்களை இனஅழிப்பு செய்த ஒரு அரசாங்கத்திடம் இருந்து இந்த நாட்டில் இனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ள அரசாங்கத்திடம் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைச்சுக்களைப் பெறுவதால் எமக்கான அதிகாரத்தையோ, நீதியையோ அல்லது அபிவிருத்தியையோ அரசு தரும் என்று எதிர்பார்க்க முடியுமா? எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறுவதற்கும் இதேமாதிரியான கதைகளைத் தான் சொன்னார்கள். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக் காலத்தில் வாய் தவறி கூட எமது மக்களுக்கு ‘இன அழிப்பு’ நடந்தது என்று எங்கேயாவது கூறினார்களா? மாறாக, ஐ. நா மனித உரிமைகள் சபையில்  அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கு மட்டுந் தான் அதனைப் பயன்படுத்தினார்கள்.ஏற்கனவே நாம் எமது காணிகளை இழந்துவிட்டோம். மேலும் காணிகள் பறிபோகின்றன. தமிழ்க் கைதிகள் தொடர்ந்து சிறையில் உள்ளார்கள். இராணுவத்தொகை இன்று வடக்கிலும் கிழக்கிலும் பெருகிவருகின்றது. பௌத்தமயமாக்கலும் சிங்கள மயமாக்கலும் சிங்களக் குடியேற்றங்களும் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றது. இவர்கள் அமைச்சர்களாக வந்தால் தமது அமைச்சுக்களை காப்பாற்ற மௌன மடந்தைகளாக இருப்பார்கள். விரைவில் வடகிழக்கின் தமிழ் மக்கட் தொகை கூனிக் குறுகி விடும். ஆகவே இன்று என் மக்கள் முன் இந்த விடயத்தை அவசரமாகக் கூற வேண்டியிருந்ததால் இந்த விபரங்களை நான் உடனுக்குடனேயே பகிர்ந்து கொள்கின்றேன். நீங்கள் யாவரும் வரும் ஆகஸ்ட் 5ந் திகதி காலையிலேயே வாக்குச் சாவடிக்குச் சென்று மீன் சின்னத்திற்கு உங்கள் புள்ளடிகளை வைப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் எனது சிற்றுரையை முடித்துக்கொள்கின்றேன்.     http://www.samakalam.com/செய்திகள்/கூட்டமைப்புக்கு-வாக்களி/
  • 5 வயது சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியவர் அடித்து கொலை! பாணந்துறை- மொரன்துட்டுவ பகுதியில் 5 வயது சிறுமியை வன்கொடுமைக்கு உட்படுத்தியவர் சிறுமியின் உறவினர்களாளேயே அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 45 வயதானவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சிறுமியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டிற்கு வருகை தந்த  சந்தேகநபர்,  அந்த சிறுமியை வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். குறித்த சம்பவத்தை அறிந்த  சிறுமியின் தந்தை மற்றும்  மாமன்மார் சந்தேகநபரை கொட்டனால் அடித்து கொன்றுள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/5-வயது-சிறுமியை-பாலியல்-வன/
  • பிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும் அவரது மகனுக்கும் கொரோனா தொற்று! இந்தியாவின் பிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இன்று (சனிக்கிழமை) உறுதிசெய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அமிதாப் பச்சனுக்கு 77 வயதான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் அவருக்கு உடல்நிலை சிறப்பாக உள்ளதாக மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார். இதேவேளை, இதுகுறித்து அமிதாப் பச்சன் ருவிற்றரில் தெரிவிக்கையில், “கொவிட்-19 பரிசோதனையில் எனக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எனது குடும்பத்தினரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 10 நாட்களில் எனக்கு நெருக்கமாக இருந்த அனைவருமே தயவுசெய்து தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/பிரபல-பொலிவூட்-நடிகர்-அம/
  • இதில் தரவுகள் கள ஆய்வுகள் என்று  என்ன இருக்கிறது கிருபன், நாமேதான் தரவுகள், நாமேதான் சாதிய  களத்தில் நிற்பவர்கள். இந்த சமூக வலிகளுக்கு வக்கீல்களும் நாங்கள்தான், நீதிபதிகளும் நாங்கள்தான், ஆனால் நியாயமான தீர்ப்பு மட்டும் ஒருபோதும் வராது. இங்கே  சாதியம் என்று சொல்லும்போது உயர் சாதியை சேர்ந்தவர்கள்தான் தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவர்களை கொடுமை படுத்துகிறார்கள்  மனதை உடைக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. மீன் பிடிப்பவரா இல்லை அவர்கள் பிடித்த மீனை வாங்கி விறபவர்களா உயர்ந்தவர்கள்  என்ற சாதி போராட்டம்.. குப்பை அள்ளுபவரா  ஆஸ்பத்திரிகளில் மனித கழிவுகளை அகற்றுபவரா  உயர்ந்த சாதி எனும் போராட்டம்.. துணி துவைப்பவரா மயிர் வெட்டுவரா  உயர்ந்தவர்  எனும் சாதி போராட்டம், மரமேறுபவரா மூட்டை சுமப்பவரா சாதியில் பெரியவர் என்ற போராட்டம்... சாதி போராட்டம் என்பது உயர்ந்த சாதிக்கும் தாழ்ந்த சாதிக்கும் இடையிலானதல்ல.. தாழ்ந்த சாதிக்கும் தாழ்ந்த சாதிக்கும் இடையிலான போரும் கூட.   புலம்பெயர் தேசத்தில் ஏறக்குறைய  பெற்றோர்கள் நினைத்தால்கூட  பிள்ளைகள் யாருடன் பழகவேண்டும் என்பதை அவர்களால் தீர்மானிக்க முடியாது. ஏறக்குறைய அவர்கள் விரும்பியவருடன் சாதியை கடந்து அல்ல நாடுகளை கடந்தே டேற்றிங் போகிறார்கள். இதன் தலைமுறை கடந்த தொடர்ச்சியாக  ஈழதமிழர் வழி வந்த வாரிசுகள் ஆபாச படங்களில்கூட நடிப்பார்கள். அதை தவறு என்று யாரும் சொன்னால் சட்டம் குற்றம் சொல்பவர்களை மட்டுமே தண்டிக்கும். அதைதான் வீதங்களில் ஒப்பிட்டு சொன்னேன்.. முத்தாய்ப்பா சொல்லவேண்டுமென்றால் சாதிய கொடுமை என்பது உயர்ந்த சாதி தாழந்த சாதி சம்பந்தப்பட்ட ஒரு விசயம் அல்ல, தாழ்ந்த சாதி தாழ்ந்த சாதிக்கும் இடையில் சம்பந்தப்பட்ட விசயம்கூட.