பிழம்பு

சீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்

Recommended Posts

21 minutes ago, colomban said:

பாவனை செய்தல் அல்லது பம்மத்து காட்டுதல்

Fraud ற்கு ஆங்கிலத்தில் ரெண்டு அர்த்தம் உண்டு. 

1. ஏமாற்றுதல் ( செயல் -வினைச்சொல்)

2. ஏமாறுக்காரன் ( பெயர்ச்சொல்) உ+ம் - he is not a real doctor, he is a fraud. 
2ம் அர்த்தத்தில் - சிங்களத்தில் சொப்ப, பொரு கலர்ஸ், சொபனை - என்ற அர்தங்களிலும் ஆங்கிலத்தில் fraud பாவிக்க படுகிறது.

தமிழ்நாட்டில் fraud ஐயே கிராமங்களில் பிராது என்பார்கள்.

Share this post

Link to post
Share on other sites

பேச்சு வழக்கு 

Share this post

Link to post
Share on other sites

சீமான் ஈழத்தில் சாப்பிட்டது உண்மையா? - இடும்பாவனம் கார்த்திக் | ஆதனின் அரசியல் மேடை..

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 12/7/2019 at 6:43 AM, goshan_che said:

யாரும் எனக்கு எப்போதும் யாரும் ஹீரோ இல்லை அண்ணர். மனிதர்களை மனிதர்களாக பார்க்கும் பாக்கியம் பெற்றவன் நான். செயற்கரியதை செய்யும் மனிதனை புகழும், அவர்களின் தனித்துவ குணவியல்புகளை சிலாகிக்கிக்கும் அதே நொடியில் அவர்களின் சறுக்கல்களை இனம்காணவும், விமர்சிக்கவும் முடிவது அதனால்தான்.

இந்த தெளிவு இல்லாத படியால்தான் உங்களுக்கு சீரோக்களை இனம்காணுவதில் பிரச்சினை வருகிறது.

unconscious bias

Share this post

Link to post
Share on other sites

இசைக்கலைஞன் இந்த வீடியோவை நாம் தமிழர் பாகங்களில் இணைத்தாரோ தெரியவில்லை! 

Share this post

Link to post
Share on other sites
On 12/6/2019 at 8:22 PM, ரதி said:

ஒரு தமிழச்சியாய் இருந்து கொண்டு எனக்கு எழுத சுதந்திரம் இருக்குது என்று நினைக்கிறேன் ...உங்களுக்கு தன்மானம் இல்லா விட்டால் பேசாமல் இருங்கள் அல்லது யாருக்கும் வால் பிடியுங்கள் ...அதை பற்றி எனக்கு கவலை இல்லை.
உங்கட கதையை பார்த்தால் கொலைக்காரன் தான் கொலையைப் பற்றி எழுத வேண்டும் என்பது போல் அல்லவா இருக்குது 

நான் சொன்னது சூடு, சுரணை, மானம், ரோஷம் உள்ளவனா என்று மற்றவனை கேட்கும் தகுதி உங்களுக்கு இருக்கா அல்லது அந்த தகுதியை யார் உங்களுக்கு கொடுத்தது என்பதுதான். அதுக்கு ஏன் சம்பந்தமில்லாமல் கொலைகாரனை இங்கு இழுக்கிறீர்கள். நீங்கள் மற்றவனை சொல்லலாம் அதையே உங்களுக்கு சொன்னால் உறைக்கிதோ?

நீங்கள், சீமானை விழுந்து கும்பிடுங்கோ, அவரது உணர்ச்சிகரமான பேச்சை கேட்டு ரசியுங்கோ.அது உங்கட விருப்பம்...அதே போல் என் கருத்தை சொல்ல எனக்கு உரிமை உள்ளது.

உங்கள் கருத்தை நீங்கள் தாராளமாக சொல்லலாம் அதுக்காக மற்றவர்களை மட்டம் தட்டாதீர்கள். எழுதுவதற்கு எங்களுக்கும் சுதந்திரம் இருக்கு ஆனால் என்ன மட்டுறுத்தினர்களுக்கு வேலை கூடும்??

சீமான் தமிழ் நாட்டில் இருக்கும் மக்களுக்கே ஒன்றும் செய்து கிழிக்கேல்ல ...இதில் எங்களுக்கு ஏதாவது செய்திட்டாலும் 

உங்கடை கொம்மான் கிழக்கு மக்களுக்கு என்ன செய்து கிழித்தவர் எண்டு இவ்வளவுநாளும் வாய்கிழிய கத்தி சப்போர்ட் பண்ணுறியள்! அதுபோலத்தான் இதுவும். ஒரு நம்பிக்கை!! சீமான் பதவிக்கு வந்தால்தானே ஏதாவது செய்ய முடியும்.

நான் போராடாமல் ஓடி வந்திருக்கலாம். ஆனால் தலைவரது பெயரையோ அல்லது புலிகளது பெயரை சொல்லியோ நான் என் வயித்தை வளர்க்கேல்ல 

சீமான்   தனது வயித்தை வளர்க்க அந்த இரண்டுமே தேவையில்லை!!

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
On 12/7/2019 at 11:40 PM, குமாரசாமி said:

சீமான் ஈழத்தில் சாப்பிட்டது உண்மையா? - இடும்பாவனம் கார்த்திக் | ஆதனின் அரசியல் மேடை..

கலைஞருக்கு ஒரு வைகோ

சீமானுக்கு ஒரு இடும்பாவனம் கார்திக்

ஆனால், சீமான் போலன்றி, கார்திக் பேச்சில் பொய்மை குறைவு

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Eppothum Thamizhan said:

முதலில் இந்த திரியில் என்ன நடக்குது,யார் என்ன எழுதினம்[முதலில் எழுதி இருக்கினம்] என்று வாசித்து விட்டு உங்கள் ஒப்பாரியை தொடருங்கள்...என்னுடைய கருத்துக்கள் உங்களுக்கு பிடிக்காட்டில் வாசிக்க வேணாம் ...யாரும் உங்களை கட்டாயப்படுத்தவில்லை...கருணா என்ன செய்தவர் என்று தலைவருக்கு தெரியும்...அவரது கால் தூசியை கூட சீமானோடு ஒப்பிட முடியாது….தவிர  நான் ஒன்றும் கருணாக்காக வாக்கு கேட்டு உங்களிடம் அழவில்லை
கடைசியாய் உங்கள் விதண்டாவாதத்தை  வேறு யாரிடமும் வைத்துக் கொள்ளுங்கள்...நன்றி ,வணக்கம் 

Share this post

Link to post
Share on other sites
On 12/8/2019 at 9:50 AM, கிருபன் said:

இசைக்கலைஞன் இந்த வீடியோவை நாம் தமிழர் பாகங்களில் இணைத்தாரோ தெரியவில்லை! 

இதை சொல்வதால் என்னை குதற வேண்டாம். உண்மையிலேயே பிரபாவை பார்த்து இவர் உடம்ப குறைக்க சொல்லி இருப்பாரா?

இப்படியான தனிப்பட்ட விமர்சனங்களை பிரபா சகிப்பதில்லை என்பதே நான் அறிந்தது.

Share this post

Link to post
Share on other sites
18 minutes ago, goshan_che said:

இதை சொல்வதால் என்னை குதற வேண்டாம். உண்மையிலேயே பிரபாவை பார்த்து இவர் உடம்ப குறைக்க சொல்லி இருப்பாரா?

இப்படியான தனிப்பட்ட விமர்சனங்களை பிரபா சகிப்பதில்லை என்பதே நான் அறிந்தது.

அவரே தனது உடம்பை பற்றி கிண்டல் அடிப்பது உண்டாம் 

இவர்களிடம் சாதாரணமாக நாம் செய்யும் நக்கல் நளினம் எல்லாம் உண்டு.

பின்னாளில் இவரோடு வயதில் ஒத்தவர்கள் எல்லோரும் இல்லாமல் போய்விடார்கள் 
எமது சமூகத்த்தில் மிக சாதாரணமாக இருக்கும் வயதுக்கு தகுந்த (என்ற போலி) மரியாதை 
இருந்ததால் ........ பின்னைய நாட்களில் அது கொஞ்சம் குறைந்து போயிருக்கலாம். 

பிரபாகரன் சீரியசான விடயங்களை கூட நகைச்சுவையோடு பேசுபவர் 
இதுக்கு ஆதாரமாக பல வீடியோக்களே உண்டு. 

இதில் ஒருவரை ஒருவர் தோற்றம் பற்றி நக்கல் நளினம் செய்வது இருக்கிறது 

Share this post

Link to post
Share on other sites

புத்தர் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக முழு உலகமும் நம்புகிறது 
கோடி கணக்கானவர்களை இன்றும் நம்ப வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

நானும் நீங்களும் இதை ஆழமாக சிந்தித்து ஆராய போனால் 
இதுக்குள்ளும் ஒரு பிராட்டு தனம் அல்லது ஞானம் என்றால் என்ன?
ஒரு இடத்துக்கு போகலாம்.

அதுபோல சீமானின் பெருமிதங்கள் என்பது அவருடைய உணர்வு சார்ந்தது 
அதை நாம் பிச்சு புடுங்க போனால் ...... உண்மை என்ரூ உலகில் என்ன இருக்கிறது?
எல்லாம் வெறும் மாயைதான் ......... நாம் எங்கிருந்து எதை பார்க்கிறோம் என்பதுதான் 
இங்கு முழுவத்துக்குமான பதில். 

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
12 hours ago, ரதி said:

முதலில் இந்த திரியில் என்ன நடக்குது,யார் என்ன எழுதினம்[முதலில் எழுதி இருக்கினம்] என்று வாசித்து விட்டு உங்கள் ஒப்பாரியை தொடருங்கள்...என்னுடைய கருத்துக்கள் உங்களுக்கு பிடிக்காட்டில் வாசிக்க வேணாம் ...யாரும் உங்களை கட்டாயப்படுத்தவில்லை...

நீங்கள் உங்கள் கருத்துக்களை தாராளமாக எழுதுங்கள். மற்றவனை சூடு, சுரணை, மான ரோஷம் இல்லாதவன் என்று சொல்ல நீங்கள் யார் என்பதுதான் இங்கு கேள்வி! இதையே நாங்கள் உங்களுக்கு சொன்னால் கோபம் வருதுதானே!! அதுபோலத்தான் மற்றவர்களுக்கும்.

கருணா என்ன செய்தவர் என்று தலைவருக்கு தெரியும்...

அவர் என்ன  செய்தவர் என்று இந்த உலகத்துக்கே தெரியும்!!!

உங்கள் விதண்டாவாதத்தை  வேறு யாரிடமும் வைத்துக் கொள்ளுங்கள்...நன்றி ,வணக்கம் 

நீங்கள் ஒன்று சொன்னால் அது வாதம் அதைக்கேள்வி கேட்டால் விதண்டாவாதம். இது நல்ல இருக்கே??

Share this post

Link to post
Share on other sites
On 12/7/2019 at 1:55 PM, goshan_che said:

ஆனால் இந்த ஆபத்துக்களை சதா எதிர் கொள்ளும், அங்கேயே வாழும் தனி போன்றவர்கள் எழுதும் போது - அவர்களை ஏதோ துரோகி ரேஞ்சில் திட்டுகிறார்.

உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி தெளிவாக சொன்னால் நான் துரோகி இதெல்லாம் பழகியதால் என்னவோ கோபம் என்பது வருவது குறைவாக இருக்கிறது சிறிய புன்னகையினால் கடந்து செல்கிறேன் நடக்கும் சம்பவங்களை நினைத்து 

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
On 12/9/2019 at 7:05 PM, Maruthankerny said:

அவரே தனது உடம்பை பற்றி கிண்டல் அடிப்பது உண்டாம் 

இவர்களிடம் சாதாரணமாக நாம் செய்யும் நக்கல் நளினம் எல்லாம் உண்டு.

பின்னாளில் இவரோடு வயதில் ஒத்தவர்கள் எல்லோரும் இல்லாமல் போய்விடார்கள் 
எமது சமூகத்த்தில் மிக சாதாரணமாக இருக்கும் வயதுக்கு தகுந்த (என்ற போலி) மரியாதை 
இருந்ததால் ........ பின்னைய நாட்களில் அது கொஞ்சம் குறைந்து போயிருக்கலாம். 

பிரபாகரன் சீரியசான விடயங்களை கூட நகைச்சுவையோடு பேசுபவர் 
இதுக்கு ஆதாரமாக பல வீடியோக்களே உண்டு. 

இதில் ஒருவரை ஒருவர் தோற்றம் பற்றி நக்கல் நளினம் செய்வது இருக்கிறது 

ம்ம்ம், பிரபா கிட்டு, மாத்தையாவோடு இப்படி உரையாடி இருக்கலாம். ஆனால் பால்ராஜ், தீபன், சொர்ணம் முதலானவர்களோடு கூட இப்படி பேசி இருப்பார் என நினைக்கவில்லை. 

நம்ப நட, நம்பி நடவாதே என்பது பிரபாவின் தாரக மந்திரம். குறிப்பாக தமிழக தலைவர்கள், ஆதரவாளர்கள் எல்லாருடனும் அவர் சர்வ ஜாக்கிரதையாகவே பழகினார்.

சீமான் ஒரு ரோ உளவாளியாக கூட இருந்திருக்கலாம், இப்படி பட்ட சீமானை, முதன் முதலான இலங்கை  விஜயத்திலேயே பதுங்கு குழியில் இருத்தி இப்படி தமிழக அரசியல்வாதிகளை பற்றி பிரபா புறணி கூறி இருப்பார் என்பது நம்பவியலாலது.

On 12/9/2019 at 7:16 PM, Maruthankerny said:

புத்தர் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக முழு உலகமும் நம்புகிறது 
கோடி கணக்கானவர்களை இன்றும் நம்ப வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

நானும் நீங்களும் இதை ஆழமாக சிந்தித்து ஆராய போனால் 
இதுக்குள்ளும் ஒரு பிராட்டு தனம் அல்லது ஞானம் என்றால் என்ன?
ஒரு இடத்துக்கு போகலாம்.

அதுபோல சீமானின் பெருமிதங்கள் என்பது அவருடைய உணர்வு சார்ந்தது 
அதை நாம் பிச்சு புடுங்க போனால் ...... உண்மை என்ரூ உலகில் என்ன இருக்கிறது?
எல்லாம் வெறும் மாயைதான் ......... நாம் எங்கிருந்து எதை பார்க்கிறோம் என்பதுதான் 
இங்கு முழுவத்துக்குமான பதில். 

அதாவது, சீமான் புலியை ஆதரிப்பது போல காட்டியபடி, தமிழ் தேசியத்துக்கு ஆப்படிச்சாலும் எல்லாம் மாயை என்று கண்டும் மன்னாரு விடல் வேண்டும்?

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, goshan_che said:

அதாவது, சீமான் புலியை ஆதரிப்பது போல காட்டியபடி, தமிழ் தேசியத்துக்கு ஆப்படிச்சாலும் எல்லாம் மாயை என்று கண்டும் மன்னாரு விடல் வேண்டும்?

இது ஒரு அழமான பார்வை 
அதே நேரம் மேலோட்ட்மாக பார்த்தால் பைத்தியகார சிந்தனை போல இருக்கும்.
மற்றவர்களை புண்படுத்ததாது நாகரீகமாக நடந்துகொள்வோம் என்றுதான் 
பலவற்றை ஏற்றுக்கொள்கிறோம். 
நாம் சிறுவர்களாக இருக்குபோது சிரட்டைகள் எடுத்து சட்டி பானை 
என்று சொல்லி அதுக்குள் சோறு கறி காய்ச்சி விளையாடுவோம் 
சிறுவயதில் சிறட் டைகளை சட்டி பானை என்று கற்பனை செய்ததில் தவறு இல்லை 
அது மனிதனின் மூளை வளர்ச்சி என்றுதான் எண்ணுகிறேன்.

இதையே நான் வளர்ந்து ஆளான பிறகு எமது இந்து கோவிலுக்கு சென்று 
பார்த்துக்கொண்டு இருந்தால். நாம் ஐந்து ஆறு வயதில் விளையாடியதை 
அவர்கள் ஐம்பது வயது வந்தும் விளையாடிக்கொண்டு இருப்பார்கள்.
ஒரு கல்லை வைத்துவிட்டு அதுக்கு ஒரு பெயரை சொல்வார்கள் அம்மன் பிள்ளையார் முருகன் 
என்று பின்பு அவர்களுக்கு குளிக்க வார்க்கிறோம் என்று தண்ணி பால்  என்று ஊத்துவார்கள் 
பின்பு சேலை என்று ஒரு துண்டு துணியை சுத்துவார்கள் பூ பொட்டு எல்லாம் வைத்துவிட்டு 
தீபம் என்று காட்டுவார்கள் நாம் மணி அடித்து சங்கு ஊதி ஆர்பரிப்போம். 
இதை எல்லாம் பார்த்தல் ஏதும் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை .... ஆனாலும் 
இவற்றை எல்லாம் கடந்து எவ்வாறு வாழ்வது .... அதில் என்ன சுவாரசியம் இருக்க போகிறது?

ஒன்றை திடமாக நம்புகிறவன் அதன் வழியே போகிறான் 
வெளியில் இருந்து பார்த்தால் அதில் பெரிதாக அர்த்தம் இருக்காது  
எத்தனையோ பேர்கள்  காதல் கைகூடவில்லை என்று தற்கொலை செய்கிறான் 
அவன் காதலித்திலும் அழகான அன்பான பெண்கள் ஆயிர கணக்கில் இருக்கிறார்கள் 
ஆனாலும் அவள் இல்லை என்று ஆனதும் இந்த உலகே இல்லை என்று ஆகிறார்கள்.
அவர்கள் அளவுக்கு எமக்கு ஒரு பெண் மீது காதல் வரும்வரைக்கும் ... அது ஒரு பைத்தியகாரதனம் 
போல இருக்கும். அது வந்துவிட்டால் நாமும் மாறிவிடுகிறோம். 

கண்டும் காணாமல் விடுவது என்பது நாம் பழகிக்கொண்டே ஒன்று 
மனித வாழ்வே அதில்தான் சுவாரிஸ்யமாக இருக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்பதே 
வெறும் பித்தலாட்டம்தான். ஒரு பெண் தனக்கு விரும்பிய ஆணோடு உறவை கொண்டு திருப்தி 
கொள்ளவதில் லாபம்தான் நிறைய உண்டு. நஸ்ட்டம் என்பது இந்த  ஒருவனுக்கு ஒருத்தி என்ற 
போலி விளையாட்டில்தான் நிறைய உண்டு. பறவைகள் விலங்குகள் எல்லாம் ஆரோக்கியமான குஞ்சுகளையும் குட்டிகளையும்தான் போடுகின்றன. நாம் மட்டுமே பலவீனமான மனிதர்களை பெற்றெடுக்கிறோம்  அதுக்கு முக்கிய காரணம்.... தான் யாரோடு உறவு வைப்பது இன  விருத்தி செய்வது 
என்பதை மனிதரை தவிர்த்து  பெண்தான் முடிவெடுப்பது. பெண்தான் முடிவு எடுப்பது என்றால் ஆண்களும்  
ஆரோக்கியமாக இருப்பத்துக்கு முயற்சி செய்வார்கள் ..... இது எப்படி இருந்தாலும் அம்மா ஊரில் இருந்து அனுப்புவா  என்று வந்ததும்  பிள்ளையை சுமக்கும் மனைவியை விட பெருத்த வண்டி ஒன்றை அவர்கள் வைத்துக் கொள்கிறார்கள்.   

சிர்த்தார்த்தங்கள் எல்லாம் நாம் வரிந்து கொண்டதுதான் ....
இயற்கை தன்பாட்டில் இன்னும் எழுச்சியாக நிற்கிறது. நாம்தான் அதையும் அழிக்கிறோம். 

Share this post

Link to post
Share on other sites

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
On 12/11/2019 at 12:10 AM, Maruthankerny said:

இது ஒரு அழமான பார்வை 
அதே நேரம் மேலோட்ட்மாக பார்த்தால் பைத்தியகார சிந்தனை போல இருக்கும்.
மற்றவர்களை புண்படுத்ததாது நாகரீகமாக நடந்துகொள்வோம் என்றுதான் 
பலவற்றை ஏற்றுக்கொள்கிறோம். 
நாம் சிறுவர்களாக இருக்குபோது சிரட்டைகள் எடுத்து சட்டி பானை 
என்று சொல்லி அதுக்குள் சோறு கறி காய்ச்சி விளையாடுவோம் 
சிறுவயதில் சிறட் டைகளை சட்டி பானை என்று கற்பனை செய்ததில் தவறு இல்லை 
அது மனிதனின் மூளை வளர்ச்சி என்றுதான் எண்ணுகிறேன்.

இதையே நான் வளர்ந்து ஆளான பிறகு எமது இந்து கோவிலுக்கு சென்று 
பார்த்துக்கொண்டு இருந்தால். நாம் ஐந்து ஆறு வயதில் விளையாடியதை 
அவர்கள் ஐம்பது வயது வந்தும் விளையாடிக்கொண்டு இருப்பார்கள்.
ஒரு கல்லை வைத்துவிட்டு அதுக்கு ஒரு பெயரை சொல்வார்கள் அம்மன் பிள்ளையார் முருகன் 
என்று பின்பு அவர்களுக்கு குளிக்க வார்க்கிறோம் என்று தண்ணி பால்  என்று ஊத்துவார்கள் 
பின்பு சேலை என்று ஒரு துண்டு துணியை சுத்துவார்கள் பூ பொட்டு எல்லாம் வைத்துவிட்டு 
தீபம் என்று காட்டுவார்கள் நாம் மணி அடித்து சங்கு ஊதி ஆர்பரிப்போம். 
இதை எல்லாம் பார்த்தல் ஏதும் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை .... ஆனாலும் 
இவற்றை எல்லாம் கடந்து எவ்வாறு வாழ்வது .... அதில் என்ன சுவாரசியம் இருக்க போகிறது?

ஒன்றை திடமாக நம்புகிறவன் அதன் வழியே போகிறான் 
வெளியில் இருந்து பார்த்தால் அதில் பெரிதாக அர்த்தம் இருக்காது  

👍👍👍

Share this post

Link to post
Share on other sites
On 12/9/2019 at 7:31 PM, goshan_che said:

இதை சொல்வதால் என்னை குதற வேண்டாம். உண்மையிலேயே பிரபாவை பார்த்து இவர் உடம்ப குறைக்க சொல்லி இருப்பாரா?

இப்படியான தனிப்பட்ட விமர்சனங்களை பிரபா சகிப்பதில்லை என்பதே நான் அறிந்தது.

நாங்கள் ஒருமுறை ஊருக்குச் சென்றபோது ஒரு பெரும் தொகையை நந்தவனத்தில் ஒப்படைக்கும் பணி எங்களுக்குத் தரப்பட்டது. தொகையைப்பெற்று வைப்பில் இட்டவருக்கு நாங்கள் வருவது முன்கூடியே தெரிந்திருந்தது. மாவீரர்கள் இருவருடைய சகோதரியும் அவர் கணவரும் இங்கு வந்திருந்தார்கள் அவர்களும் நீங்கள் வசிக்கும் பகுதிதான், அவர்களைத் தெரியுமா? என்று கேட்டு, அவர்கள் பெயர்களையும், அடையாளங்களையும் சொல்லும்போது, அந்தச் சகோதரிக்கு நீண்டு கறுத்துச் சுருண்ட அழகான தலைமயிர் என்றும், தலைவரும்  அதனைக் குறிப்பிட்டுப் பாராட்டினார் என்றும் தெரிவித்தார். 

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
On 12/9/2019 at 8:05 PM, Maruthankerny said:

அவரே தனது உடம்பை பற்றி கிண்டல் அடிப்பது உண்டாம் 

இவர்களிடம் சாதாரணமாக நாம் செய்யும் நக்கல் நளினம் எல்லாம் உண்டு.

பின்னாளில் இவரோடு வயதில் ஒத்தவர்கள் எல்லோரும் இல்லாமல் போய்விடார்கள் 
எமது சமூகத்த்தில் மிக சாதாரணமாக இருக்கும் வயதுக்கு தகுந்த (என்ற போலி) மரியாதை 
இருந்ததால் ........ பின்னைய நாட்களில் அது கொஞ்சம் குறைந்து போயிருக்கலாம். 

பிரபாகரன் சீரியசான விடயங்களை கூட நகைச்சுவையோடு பேசுபவர் 
இதுக்கு ஆதாரமாக பல வீடியோக்களே உண்டு. 

இதில் ஒருவரை ஒருவர் தோற்றம் பற்றி நக்கல் நளினம் செய்வது இருக்கிறது 

விருந்தினரையோ கலைஞர்களையோ  சந்திக்கும்  போது 

தலைவர் அல்லது  தளபதி நிலையிலிருந்து  முற்றுழுதுமாக  விடுபட்டு

அவரவர்  துறை  சார்ந்து பேசுவார்  என  சொல்வார்கள்

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.