Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன், சுமந்திரன், சேனாதிராஜா ஆகியோர் சிறிது காலத்திற்கு பதவியை இராயினாமா செய்து ஒதுங்கியிருப்பது தமிழ் மக்களிற்கு செய்யும் பெரும் உதவியாக இருக்கும் என வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜெனிவா விடயம் தொடர்பில் அடிக்கடி கூறிக்கொள்ளும் சுமந்திரன், ஜெனிவா அமர்வின்போது விடுதலைப்புலிகளே அதிகளவான மக்களை கொன்றனர் என தெரிவித்த கருத்துடன் ஜெனவா சாட்சியமாக மாற்றப்பட்டு அப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது. அப்போது ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்பாக செயற்பட்டு, ரணில் விக்கரமசிங்கவிற்காக செயற்பட்டு வந்த சுமந்திரன் இன்று தற்போதுள்ள அரசுக்கும் அவ்வாறாக செயற்படமுற்படுகின்றார் என அவர் குறித்த ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார். தற்போது மீண்டும் ஜெனிவா விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் தெரிவித்து வரும் சுமந்திரன் மீண்டும் ஏற்கனவே கூறியது போன்றதான விடயத்தை மீண்டும் கூறி ஜெனிவா சாட்சியத்தை முதலாவதாக பதிவு செய்யப்போகின்றார் எனவும் அவர் இதன்போது குற்றம் சாட்டினார்.

இவ்வாறான நிலையிலேயே, இன்று அனைவரும் ஒரே குடையின்கீழ் ஒன்று சேர வேண்டும் என சுமந்திரன் அழைப்பு விடுத்து வருகின்றார். நீங்கள் இதுவரை காலமும் தமிழ் மக்களிற்கு செய்த துரோகங்கள் போதும் எனவும், குறிப்பிட்ட சில காலத்திற்கு ஒதுங்கி இருங்கள் எனவும் இதன்போது ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு தொடர்ந்தும் நீங்கள் கொடுத்த வந்த ஆதரவினால் தமிழ் மக்களிற்கு எந்த நன்மையும் ஏற்பட்டிருக்கவில்லை. நீங்கள் பல இலட்சம் பெறுமதியில் வாகன சலுகைகளை பெற்று சுகங்களை அனுபவித்தீர்கள். இந்த நிலையில் மாற்று அணிகள் ஒன்றும் தேவை இல்லை. அனைவரும் எம்முடன் இணையுங்கள் என சுமந்திரன் தெரிவிக்கின்றார். நீங்கள் இதுவரை தமிழ் மக்களிற்கு செய்தது போதும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

2006, 2007 ம் ஆண்டுகளில் இந்திய அரசியலமைப்பு முறையிலான தீர்வு திட்டம் ஒன்றே எமது அரசியல் பிரச்சினைக்கு தீர்வு என தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளேன். இவ்விடயம் தொடர்பில் அப்போது இருந்த ஜனாதிபதி மற்றம் அஸ்கிரிய தேரர்கள் ஆகியோருக்கு தெளிவு படுத்தியுள்ளேன். அவர்களும் அதை ஏற்றனர். சிங்கள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றிருந்தனர். அதேவேளை பெரும்பாலன சிங்கள மக்களும் அதனை ஏற்றிருந்தனர். இன்று மீண்டும் குறித்த தீர்வை முன்வைப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தசந்தர்ப்பத்தினை மீண்டும் நான் ஆரம்ப புள்ளியாக பயன்படுத்த உள்ளேன். தமிழர் விடுதலை கூட்டணி அழிந்துவிட்டதாக எண்ணாதீர்கள். அது அழியா வரம் பெற்றது. இதுவரை ஏமாற்று அரசியல் செய்தவர்களை் யார் என்பதை மக்கள் நன்று உணர்ந்துள்ளனர். இந்த நிலையில் அரசியல் தீர்வை ஆரம்பித்த தமிழர் விடுதலை கூட்டணியே முடிவுக்கு கொண்டு வந்தது என்ற நிலைப்பாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றாக இணையுங்கள் என அவர் இதன்போது அழைப்பு விடுத்ததார்.

2006, 2007ம் ஆண்டுகளில் ஜனாதிபதி மற்றும் அஸ்கிரிய தேரர்களிற்கு எழுதிய கடிதங்கள், அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் என அனைத்தையும் மீண்டும் இந்திய ஜனாதிபதி பிரதமர் மற்றும் அரச தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். அவர்களிற்கு அவற்றை அனுப்பி வைத்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார். ஓரிரு நாட்களில் ஜனாதிபதி உள்ளிட்டோரை நான் சந்திக்க உள்ளேன். நல்லதொரு சந்தர்ப்பம் மீண்டும் கூடியுள்ளது. தம்முடன் இணையுமாறு தெரிவிப்பதற்கு சுமந்திரனுக்கோ சம்பந்தனுக்கோ தகுதி கிடையாது.

நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமது கருத்தை ஏற்றே வாக்களித்ததாக கூறிக்கொள்கின்றனர். உண்மை அதுவல்ல. தமழ் தேசிய கூட்மைப்பு எவ்வாறான நிலை எடுக்கும் என்பதை மக்கள் அவர்களின் அறிவிற்புக்கு முன்பாகவே அறிந்திருந்தனர். ஆனால் தமிழ் மக்கள் ஏற்கனவே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானித்திருந்தனர். இந்த நிலையில் தாம் கூறிதான் மக்கள்  தீர்மானித்தனர் என்பது முழுக்க முழுக்க பொய் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழர் விடுதலை கூட்டணி விட்ட இடத்திலிருந்து தமிழ் மக்களிற்கான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கின்றது. இதுவரை தமிழ் மக்கள் ஒரு தரப்பினருக்கு தமது அதிகாரத்தை வழங்கினர். ஒருமுறை அதனை மாற்றி எம்கு அந்த சந்தர்ப்பம் ஒன்றை தந்து பாருங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

யார் துரோகமிழைத்தனர் என்பதை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இந்த நிலையில் அனைத்து தரப்பினரும் தமிழர் விடுதலை கூட்டணியுடன் இணைந்து பயணிக்க வருமாறு பிகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன். தமிழர் விடுதலை கூட்டணி என்பது பெரும் தலைவர்களால் விட்டு செல்லப்பட்ட பெரும் சொத்து. அந்த கட்சியின் ஊடாகவே தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். எனவே, அனைவரும் ஒன்றாக இணையுமாறும் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தங்கரி இதன்போது அழைப்பு விடுத்திருந்தார்.

http://ilakkiyainfo.com/சம்பந்தன்-சுமந்திரன்-மா/

Link to comment
Share on other sites

புலிகளுக்கு விரோதமாக கருத்துக்களை கூறி சிங்கள அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு அவர்களிடமிருந்து சன்மானங்களை பெற்ற சங்கரி ஐயா இப்போது மற்றவர்களை குற்றம் சாட்டுவது அவ்வளவு நியாயமாக தெரியவில்லை.

ஒரு காலத்தில் தமிழர்களுக்கு எதிராகத்தான் நீங்கள் செயல்படடீர்கள். மத்தவர்கள் ஓய்வெடுக்கு முன்னர் நீங்கள் ஓய்வெடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். 

Link to comment
Share on other sites

மன்மதராசாவுக்கு மட்டும் இளமை துள்ளி விளையாடுதோ ? 

நீங்களும்தான் நிரந்தர ஓய்வு எடுக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலையில் இருந்து ஓய்வு பெறும் வயதை அரசியல்வாதிகளும் பின்பற்ற சட்டம் இயற்றுங்கோ!

Link to comment
Share on other sites

சம்பந்தர் ஐயா பற்றி பேசும் விமர்சிக்கும் அருகதை நண்பர் ஆனந்தசங்கரி அவர்களுக்கு இல்லை என்பதை பணிவன்புடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maharajah said:

மன்மதராசாவுக்கு மட்டும் இளமை துள்ளி விளையாடுதோ ? 

நீங்களும்தான் நிரந்தர ஓய்வு எடுக்க வேண்டும். 

ஆ-சங்கரி:-  அதெல்லாம் ஏலாது.....  கிளிநொச்சியிலை இப்பதான் மாங்கொட்டை  தாட்டு வைச்சனான்.அது முளைச்சு வளர்ந்து காய் காய்ச்சு பழம் பழுத்து அதின்ரை கொட்டை சூப்பிப்போட்டுத்தான் ஓய்வெடுப்பன். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகம் செய்தவன் எல்லாம் திருந்தினாலும் நல்லவனா இருந்து துரோகம் செய்கிறவன் தான் இன்னும் இருந்து கொண்டு இருக்கிறான் ஆனந்த சங்கரியர் கூறியதில் பிழை இல்லை போல் தோன்றுது பெயருக்கு மட்டும் சம், சும் , சேனா கும்பல் இதுவரைக்கும் இருக்கு 

2 hours ago, poet said:

சம்பந்தர் ஐயா பற்றி பேசும் விமர்சிக்கும் அருகதை நண்பர் ஆனந்தசங்கரி அவர்களுக்கு இல்லை என்பதை பணிவன்புடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

கருத்தும் , விமர்சனமும் யாரும் சொல்லலாம் அல்லவா பொயட்

 

6 hours ago, Vankalayan said:

புலிகளுக்கு விரோதமாக கருத்துக்களை கூறி சிங்கள அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு அவர்களிடமிருந்து சன்மானங்களை பெற்ற சங்கரி ஐயா இப்போது மற்றவர்களை குற்றம் சாட்டுவது அவ்வளவு நியாயமாக தெரியவில்லை.

ஒரு காலத்தில் தமிழர்களுக்கு எதிராகத்தான் நீங்கள் செயல்படடீர்கள். மத்தவர்கள் ஓய்வெடுக்கு முன்னர் நீங்கள் ஓய்வெடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். 

புலிகளுக்கு எதிராக கருத்துக்கள் யார்தான் கூறவில்லை 

Link to comment
Share on other sites

4 hours ago, poet said:

சம்பந்தர் ஐயா பற்றி பேசும் விமர்சிக்கும் அருகதை நண்பர் ஆனந்தசங்கரி அவர்களுக்கு இல்லை என்பதை பணிவன்புடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

உங்களின் கருத்துப்படி பார்த்தால் சம்பந்தர் ஐயா தன்னைத்தானே விமர்சித்தால்தான் உண்டு.

(நீங்கள் கூறவிரும்புவதை புரிந்துகொள்கிறேன்.  ஆனாலும்.. ஒரு சின்னக் கடி கடிச்சால் தான் எனக்கு நித்திரை வரும் 😃)

 

Link to comment
Share on other sites

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

துரோகம் செய்தவன் எல்லாம் திருந்தினாலும் நல்லவனா இருந்து துரோகம் செய்கிறவன் தான் இன்னும் இருந்து கொண்டு இருக்கிறான் ஆனந்த சங்கரியர் கூறியதில் பிழை இல்லை போல் தோன்றுது பெயருக்கு மட்டும் சம், சும் , சேனா கும்பல் இதுவரைக்கும் இருக்கு 

கருத்தும் , விமர்சனமும் யாரும் சொல்லலாம் அல்லவா பொயட்

 

புலிகளுக்கு எதிராக கருத்துக்கள் யார்தான் கூறவில்லை 

அன்புக்குரிய தனிக்காட்டு ராஜா , மன்னிக்க வேண்டுகிறேன்.  விமர்சன கருத்து சொல்ல எலோருக்கும் உரிமை உண்டு. யாரும் சொல்லல்லாம் . திரு.ஆனந்தசங்கரி சொன்ன கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என பதிவு செய்திருக்க வேண்டும். நன்றி

Link to comment
Share on other sites

1 hour ago, Maharajah said:

(ஆனாலும்.. ஒரு சின்னக் கடி கடிச்சால் தான் எனக்கு நித்திரை வரும் 😃)

 

இவ்வளவு நாளும் எனக்கு மட்டும் தான் இப்படியான வியாதி இருக்கு என்று நினைச்சுக் கொண்டு இருந்தனான் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த சங்கரியே......  👉🏿 "காறித் துப்பும்" 👈🏿 அளவுக்கு,
சம்பந்தன், சுமந்திரன், மாவையின்... அரசியல் இருப்பது... பெரும்  கேவலம்.  :shocked:

இதிலிருந்து... தமிழ் மக்களுக்கு, விடிவே... கிடைக்காதா
2020´ம் ஆண்டு, நல்ல செய்தியை... கொண்டு வரட்டும்.

Link to comment
Share on other sites

53 minutes ago, poet said:

அன்புக்குரிய தனிக்காட்டு ராஜா , மன்னிக்க வேண்டுகிறேன்.  விமர்சன கருத்து சொல்ல எலோருக்கும் உரிமை உண்டு. யாரும் சொல்லல்லாம் . திரு.ஆனந்தசங்கரி சொன்ன கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என பதிவு செய்திருக்க வேண்டும். நன்றி

புலவரே, 

கூறியவரின் தகுதியில் குறைகண்டீரோ அல்லது கூறியவரின் கருத்தில் குறை கண்டீரோ ? 

Link to comment
Share on other sites

7 hours ago, Maharajah said:

புலவரே, 

கூறியவரின் தகுதியில் குறைகண்டீரோ அல்லது கூறியவரின் கருத்தில் குறை கண்டீரோ ? 

Maharajah  பக்கத்தில் முருங்கை மரங்கள் இல்லை. பதில்தானே? தலை வெடிக்கமுன் சொல்லிவிடுகிறேன். ஆதாரபூர்வமான விவாதங்களை விடுத்து ”சாத்தான் வேதம் ஓதுகிறதுபோல” என்று கூறியவரின் தகுதியில் குறைகாணுவது சிறந்த விவாத முறைமையில்லை. பதிலில் நிலவும் தெரிவுகள் பற்றி  ஒன்று கூற வேணும். மக்களும் எதிரியும் சர்வதேச சமூகமும் ஏன் வாக்களிக்கும் மக்கள்கூட கழத்தில் நின்று நிலவும் தெரிவுகளுக்கு மத்தியில் தான் அரசியல் செய்வார்கள். சதுரங்கமும் அப்படித்தானே ஆடுகிறார்கள். இருக்கிற காய்களை பலப்படுத்தி நகர்த்தித்தானே ஆடுவீர்கள். எங்கள் ராணிக்காய் தேசிய இன அரசியல் தான். இன்றைய நிலையில் எல்லா விமர்சனங்களோடும் தன் வல்லமைக்குள் சம்பந்தரைதவிர வேறுயாரும் அந்தக் காயைப் போட்டுடைக்காமல் காப்பாற்ரவில்லை. வெட்டுப்பட்ட காய்களை நகர்த்த முடியாது  அல்லது நீங்கள் விரும்புமிடத்தில் விரும்பும்காயை தள்ளி வைத்தும் நகர்த்த முடியாது.  சதுரங்கப் பலகையில் மட்டுமல்ல அரசியல் பலகையிலும் அப்படித்தான். அதனால்தான் ஜனாதிபதித்தேர்தலின்போது வடகிழக்கு மாகாணங்களில்  சஜித் பெற்ற வெற்றியை சம்பந்தன் ஐயாவின் வெற்றியெனவாதிட்டு நாம் நகர்த்தக்கூடிய காயை பலப்படுத்தினேன். நண்பன் தமிழ் சிறியும்  என் பதிலை வாசிக்க வேண்டும். நிழலிக்கு, சிறப்பு வரவேற்பும் விருந்தும். விபரத்துக்கு பைபிள் கதைகளை வாசிக்கவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, poet said:

Maharajah  பக்கத்தில் முருங்கை மரங்கள் இல்லை. பதில்தானே? தலை வெடிக்கமுன் சொல்லிவிடுகிறேன். ஆதாரபூர்வமான விவாதங்களை விடுத்து ”சாத்தான் வேதம் ஓதுகிறதுபோல” என்று கூறியவரின் தகுதியில் குறைகாணுவது சிறந்த விவாத முறைமையில்லை. பதிலில் நிலவும் தெரிவுகள் பற்றி  ஒன்று கூற வேணும். மக்களும் எதிரியும் சர்வதேச சமூகமும் ஏன் வாக்களிக்கும் மக்கள்கூட கழத்தில் நின்று நிலவும் தெரிவுகளுக்கு மத்தியில் தான் அரசியல் செய்வார்கள். சதுரங்கமும் அப்படித்தானே ஆடுகிறார்கள். இருக்கிற காய்களை பலப்படுத்தி நகர்த்தித்தானே ஆடுவீர்கள். வெட்டுப்பட்ட காய்களை நகர்த்த முடியாது  அல்லது நீங்கள் விரும்புமிடத்தில் விரும்பும்காயை தள்ளி வைத்தும் நகர்த்த முடியாது.  சதுரங்கப் பலகையில் மட்டுமல்ல அரசியல் பலகையிலும் அப்படித்தான். அதனால்தான் ஜனாதிபதித்தேர்தலின்போது வடகிழக்கு மாகாணங்களில்  சஜித் பெற்ற வெற்றியை சம்பந்தன் ஐயாவின் வெற்றியெனவாதிட்டு நாம் நகர்த்தக்கூடிய காயை பலப்படுத்தினேன். நண்பன் தமிழ் சிறியும்  என் பதிலை வாசிக்க வேண்டும். நிழலிக்கு, சிறப்பு வரவேற்பும் விருந்தும். விபரத்துக்கு பைபிள் கதைகளை வாசிக்கவும். 

ஜெயபாலன் அண்ணா.... வணக்கம்.
உங்களை... யாழ். பல்கலைக் கழக..  முன் வீதியில் உள்ள,
குமாரசாமி வீதியில்.... சிவராஜலிங்கம் மாஸ்ரர் வீட்டிற்கு முன் இருந்த,
மண் கும்பியில்  இருந்து, அரசியல் பேசி இருக்கின்றோம்.
அந்தத் தருணங்களை... என்றுமே... மறக்க மாட்டேன்  :)

அப்போதும், இப்போதும்.... எமது  அரசியல் பார்வைகள் எதிரானவை. :120_speaking_head:

ஆனால்... நீங்கள்  இன்றும் எனது  நண்பர். 👯‍♂️
அதுதான் முக்கியம். 💓

Link to comment
Share on other sites

3 hours ago, poet said:

Maharajah  பக்கத்தில் முருங்கை மரங்கள் இல்லை. பதில்தானே? தலை வெடிக்கமுன் சொல்லிவிடுகிறேன். ஆதாரபூர்வமான விவாதங்களை விடுத்து ”சாத்தான் வேதம் ஓதுகிறதுபோல” என்று கூறியவரின் தகுதியில் குறைகாணுவது சிறந்த விவாத முறைமையில்லை. பதிலில் நிலவும் தெரிவுகள் பற்றி  ஒன்று கூற வேணும். மக்களும் எதிரியும் சர்வதேச சமூகமும் ஏன் வாக்களிக்கும் மக்கள்கூட கழத்தில் நின்று நிலவும் தெரிவுகளுக்கு மத்தியில் தான் அரசியல் செய்வார்கள். சதுரங்கமும் அப்படித்தானே ஆடுகிறார்கள். இருக்கிற காய்களை பலப்படுத்தி நகர்த்தித்தானே ஆடுவீர்கள். எங்கள் ராணிக்காய் தேசிய இன அரசியல் தான். இன்றைய நிலையில் எல்லா விமர்சனங்களோடும் தன் வல்லமைக்குள் சம்பந்தரைதவிர வேறுயாரும் அந்தக் காயைப் போட்டுடைக்காமல் காப்பாற்ரவில்லை. வெட்டுப்பட்ட காய்களை நகர்த்த முடியாது  அல்லது நீங்கள் விரும்புமிடத்தில் விரும்பும்காயை தள்ளி வைத்தும் நகர்த்த முடியாது.  சதுரங்கப் பலகையில் மட்டுமல்ல அரசியல் பலகையிலும் அப்படித்தான். அதனால்தான் ஜனாதிபதித்தேர்தலின்போது வடகிழக்கு மாகாணங்களில்  சஜித் பெற்ற வெற்றியை சம்பந்தன் ஐயாவின் வெற்றியெனவாதிட்டு நாம் நகர்த்தக்கூடிய காயை பலப்படுத்தினேன். நண்பன் தமிழ் சிறியும்  என் பதிலை வாசிக்க வேண்டும். நிழலிக்கு, சிறப்பு வரவேற்பும் விருந்தும். விபரத்துக்கு பைபிள் கதைகளை வாசிக்கவும். 

ஆரோக்கியமான, பரஸ்பரம் மரியாதைமிக்க கருத்தாடல் எப்போதும் நன்மை பயக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் ஐயா தன் இயலாமைகளை இயலுமையாக சொல்லி சொல்லி சொந்த மக்களையே ஏமாற்றிவிட்டார் என்றே நான் கருதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நிழலி said:

இவ்வளவு நாளும் எனக்கு மட்டும் தான் இப்படியான வியாதி இருக்கு என்று நினைச்சுக் கொண்டு இருந்தனான் ..

எல்லோருக்கும் சிலர் கடிச்சால் பல்லு விழுந்தும் என்ற பயத்தில் கடிப்பதில்லை ஆனால் நானோ கடிக்காமல் செல்வதில்லை இந்த கோதாரிப்பழக்கம் எனக்கும் இருக்கு வெளியில் லைட்டா காட்டிக்கொள்வது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ரெண்டு பேரும் ஒரு ஓரமா விளையாடுக ..👌

Soori_random+3_memekadai.blogspot.com.jp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/29/2019 at 12:56 PM, ஏராளன் said:

வேலையில் இருந்து ஓய்வு பெறும் வயதை அரசியல்வாதிகளும் பின்பற்ற சட்டம் இயற்றுங்கோ!

👍

வேலையில் உள்ள சதாரண மக்கள் வேலையில் இருந்து ஓய்வு பெறும் வயது வரும் வரை இருக்காமல் அதற்கு முன்பே எப்படியாவது வேலையில் இருந்து ஓய்வு பெற்றுகொள்ள முயற்சிக்கிறார்கள். ஆனால் அரசியல்வாதிகள் மட்டும் ஏன் ஓய்வு பெற்று கொள்ள விரும்புவது இல்லை? அரசியலில் உள்ள அதிகமான லாபங்களும் அதில் இருந்து கிடைக்கும் கிக்கும்.தமிழர்களுக்காகவே தலைவர் தனது இறுதி மூச்சுவரை உழைத்தார் என்கின்ற பெயர்.

Link to comment
Share on other sites

On 11/30/2019 at 11:23 AM, Maharajah said:

ஆரோக்கியமான, பரஸ்பரம் மரியாதைமிக்க கருத்தாடல் எப்போதும் நன்மை பயக்கும். 

உண்மை Maharajah , நான் கிண்டலாக முருங்கை மரம் என்றது நட்போடு சொன்னதுதான், மனசை நோகவைத்திருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்

 

Link to comment
Share on other sites

1 hour ago, poet said:

உண்மை Maharajah , நான் கிண்டலாக முருங்கை மரம் என்றது நட்போடு சொன்னதுதான், மனசை நோகவைத்திருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்

 

புலவரே, 

உண்மையில் நான் அதை உங்களுக்கு எழுதவில்லை..  பொதுவாகவே எழுதினேன்  ஏனென்றால் எண்களில்  பலர் தங்கள் நியாயமான கோபங்களை வெளிக்காட்டும் போது நிதானம் தவருகின்றனர்.  அதற்காகத்தான் பொதுவாக கூறினேன்.  உங்களை சுட்டியல்ல. 

Link to comment
Share on other sites

இதுவரை ஒன்டுக்குமே உதவாத சம்பந்தன், சுமந்திரன், மாவை, துரைசிங்கம், ஆனந்தசோணகிரி, எல்லாம் ஒதுக்கினால் நல்லதொரு வெளி பிறக்கும்.

Link to comment
Share on other sites

புலிகளை எல்லோரும் குற்றம் சொல்லுவது இருக்கட்டும் ராஜா . ஆனால் இவர் புலிகளை குற்றம் சொல்லி சன்மானம், வெகுமதி பெற்றுக்கொண்டவர். இவர் புலிகளை வென்ற புலி. 

Link to comment
Share on other sites

6 hours ago, Vankalayan said:

ஆனால் இவர் புலிகளை குற்றம் சொல்லி சன்மானம், வெகுமதி பெற்றுக்கொண்டவர். இவர் புலிகளை வென்ற புலி. 

இப்ப ஓநாய்களெல்லாம் புலிகளைப் பற்றி பேசுற காலம்!

Link to comment
Share on other sites

17 hours ago, Gowin said:

இப்ப ஓநாய்களெல்லாம் புலிகளைப் பற்றி பேசுற காலம்!

புலி வருது , புலி வருது , புலித்தோல் போர்த்த நரி வருது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.