Sign in to follow this  
கிருபன்

லண்டனில் முன்னாள் போராளிகள் சிறப்பாக நடத்திய தேசிய தலைவரின் பிறந்தநாள் நிகழ்வு

Recommended Posts

லண்டனில் முன்னாள் போராளிகள் சிறப்பாக நடத்திய தேசிய தலைவரின் பிறந்தநாள் நிகழ்வு

Thalaivar-BD-2.jpg

முன்னாள்போராளிகளால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 65வது அகவை நாள்நிகழ்வு மேற்கு லண்டனிலுள்ள பெருவில் ( Perivale) பகுதியில் 26.11.2019 கொண்டாடப்பட்டது.

தமிழீழவிடுதலைப்புலிகளின் முன்னாள் மருத்துவப் போராளி உயர்ச்சி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்தமிழீழ தேசிய கொடியினை முன்னாள்கடற்புலி போராளி சுடரொளி ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் முன்னாள்போராளிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் பிடித்த உணவான கோழிப்புக்கை இந்த நிகழ்வில் வழங்கப்பட்டது .

தலைவர் பிரபாகரன் பற்றி தனது நினைவுகளை மக்களுடன்பகிர்ந்து கொண்ட முன்னாள் கடற்புலி போராளி சுடரொளி தலைவர் அவர்களின் மனிதநேய பண்புகள் பற்றி உரையாற்றியிருந்தார். 1996ல்விடுதலைப்புலிகள் முல்லைத்தீவுஇராணுவமுகாம் மீது நடாத்திய வெற்றித்தாக்குதலான ஓயாதஅலை- 1 நடவடிக்கையில் உயிர்தப்பிய சிங்கள இராணுவ சிப்பாய் ஒருவர் பலநாட்களாகமுல்லைத்தீவு இராணுவமுகாமிருந்த பகுதியில் மறைந்துவாழ்ந்து வந்த நிலையில் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டிருந்தார். பல நாட்களாக போதியளவுஉணவு கிடைக்காமையினால் அவரது உடல் நிலை மோசமடைந்திருந்தது. அவரதுகைது பற்றி விடுதலைப் புலிகளின் தலமைப்பீடத்திற்கு அறிவித்த பொழுது தலைவர் பிரபாகரன் அவர்கள் அந்த இராணுவ சிப்பாய்க்கு தேவையான மருத்துவ உதவியினை செய்து அவரை இலங்கை செஞ்சிலுவைசங்கத்தினூடாக பாதுகாப்பாக இலங்கை அரசிடம் கையளிக்கும் படி உத்தரவிட்டிருந்தாத்தாக அவர் குறிப்பிட்டார்.

மேலும்வேறொரு சந்தர்ப்பத்தில் கடற்புலிகளின் சர்வதேசக் கப்பல் ஓன்றுக்கு ஆழ்கடலில் வைத்து எரிபொருள்நிரப்ப வந்த வேற்றுநாட்டு படகு ஒன்று தற்செயலாக தீப்பிடித்தபொழுது தீக்காயங்களுக்குள்ளான அதிலிருந்த படகோட்டிகளை கப்பலிலிருந்த கடற்புலிகள் காப்பாற்றியிருந்தனர். அவர்களைகப்பலுக்கு கொண்டுவந்து முதலுதவியளித்த பின்னர் அவர்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் பற்றி முல்லைத்தீவு கடற்கரைலிருந்த விடுதலைப் புலிகளின் கட்டளை மையத்துடன் தொடர்புகொண்ட பொழுது கட்டளை மையத்தினர் தலைமைபீடத்துடன்தொடர்பினை ஏற்படுத்தி மேலதிக நடவடிக்ககைள் தொடர்பில் வினவிய பொழுது தலைவர் பிரபாகரன் அவர்கள் அப் படகோட்டிகளை அவர்களுடைய நாட்டு மருத்துவமனையில் சேர்க்கும்படி உத்தரவிட்டிருந்தார். இவ்வாறு உத்தரவிட்டிருந்த தலைவருக்கு ஆழ்கடலில் கடற்புலிகளின் கப்பல் தரித்து நிற்பது மிகவும் ஆபத்தானது எனத் தெரிந்திருந்தும் அப்படகோட்டிகளை அந்நாட்டு மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கையெடுத்ததானது அப்படகோட்டிகளின் குடும்பத்தினர் அவர்களின் நலன்பற்றி கரிசனையுடன் இருப்பார்கள் என்பதற்காகவே என குறிப்பிட்டிருந்தார். இந்நிகழ்வுக்கு நேரடிச்சாட்சியாகவிருந்தமுன்னாள் போராளிகள் இன்னமும் இருப்பதாகவும் சுடரொளி கூறினார்.

அத்துடன்தலைவர் அவர்கள் போராளிகளை சந்திக்க வருகின்ற பொழுது தனக்கு மிகவும் பிடித்தமான கோழிப்புக்கையினை போராளிகளுக்கு சமைத்து அளிக்கும்படி சமையல் பிரிவுக்கு கூறுவதனாலேயே அவருடைய அகவை நாளில் முன்னாள்போராளிகள் சிலர் இணைந்து கோழிப்புக்கையினை சமைத்து வழங்கியதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிகழ்வில் தேசியதலைவர் பற்றிய நினைவுப் பகிர்வுகள் , தாயக எழுச்சிப் பாடல்கள் மற்றும் கவிதை ஆகியவை இடம்பெற்றன. ( அங்கயற்கண்ணி).

Thalaivar BD (1)Thalaivar BD (3)Thalaivar BD (4)

 

 

http://www.samakalam.com/செய்திகள்/லண்டனில்-முன்னாள்-போராளி/

Share this post


Link to post
Share on other sites

இந்த தண்ணி பார்ட்டி யாற்றை செலவாம் 

Share this post


Link to post
Share on other sites
44 minutes ago, ரதி said:

இந்த தண்ணி பார்ட்டி யாற்றை செலவாம் 

ஏன் நீங்கள் கொடுக்கவா???

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
34 minutes ago, MEERA said:

ஏன் நீங்கள் கொடுக்கவா???

நான் இவையளுக்கு காசு கொடுத்தால் அது தலைவருக்கே அடுக்காது 

அது சரி நந்தனார் போகேல்லையா 😀

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, ரதி said:

இந்த தண்ணி பார்ட்டி யாற்றை செலவாம் 

இங்க அண்ணன்ர  படத்தை செயார் பண்ணுனவனையே கொண்டு போய் விசாரிக்காங்க இவங்கள் வேற இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லோரும் செளக்கியமே 

15 hours ago, MEERA said:

ஏன் நீங்கள் கொடுக்கவா???

கொடுக்கிறத இங்க உள்ள யாராவது ஒர்  முன்னாள் போராளிக்கு அனுப்பலாம் 

Edited by தனிக்காட்டு ராஜா

Share this post


Link to post
Share on other sites

பிரான்சிலும்  ஆரம்பத்திலிருந்து முன்னாள்கள் தான்  செய்கிறார்கள்

தலைவருடைய  பிறந்தநாள்  என்பதால் 

அவர் வளர்ப்பு தெரியும்படியாகவே இருக்கும்

நானும்   ஒவ்வொருவருடமும் சென்று

தலைவர்  கேக்  என  மக்களுக்கும்  கொண்டு  வந்து கொடுப்பது  வழக்கம்

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, ரதி said:

இந்த தண்ணி பார்ட்டி யாற்றை செலவாம் 

செலவைப் பற்றி யோசிக்கவேண்டாம். நீங்களும் தாராளமாக கலந்துகொள்ளலாம். உங்களுக்கு எல்லாம் இலவசம்.  

Share this post


Link to post
Share on other sites
22 hours ago, Maharajah said:

செலவைப் பற்றி யோசிக்கவேண்டாம். நீங்களும் தாராளமாக கலந்துகொள்ளலாம். உங்களுக்கு எல்லாம் இலவசம்.  

ஏன் நீங்கள் அமைப்போ?

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ரதி said:

ஏன் நீங்கள் அமைப்போ?

கற்பனை குதிரையை கொஞ்சம் கட்டிவையுங்கோ.  😃

Share this post


Link to post
Share on other sites
On 11/29/2019 at 2:34 PM, ரதி said:

இந்த தண்ணி பார்ட்டி யாற்றை செலவாம் 

அது ஆர் ரதி

Share this post


Link to post
Share on other sites
On ‎12‎/‎1‎/‎2019 at 1:04 PM, Maharajah said:

கற்பனை குதிரையை கொஞ்சம் கட்டிவையுங்கோ.  😃

பின் எப்படி எனக்கு எல்லாம் இலவசம் என்று சொன்னனீங்கள் 😁

On ‎12‎/‎1‎/‎2019 at 4:49 PM, வல்வை சகாறா said:

அது ஆர் ரதி

யாரை கேட்கிறீங்கள் ?

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ரதி said:

பின் எப்படி எனக்கு எல்லாம் இலவசம் என்று சொன்னனீங்கள் 😁

யாரை கேட்கிறீங்கள் ?

இரகசியம் காக்கோணும் அக்கா,  இரகசியம் காக்கோணும்.

எனக்கென்ன ஓட்டை வாயா இல்லையே

😃😃 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this