Jump to content

தமிழகத்தில் நாம் தமிழர் ஆட்சி: ஜெயக்குமார் பதில்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் நாம் தமிழர் ஆட்சி: ஜெயக்குமார் பதில்!

3.jpg

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும் என்ற சீமானின் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

மதுரை ஒத்தகடையில் கடந்த 27ஆம் தேதி நடந்த மாவீரர் நாள் பொதுக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “ நாம் தமிழர் கட்சியின் போஸ்டர்களை கிழிப்பவர்கள், தம்பிகள் மீது வழக்கு போடுபவர்கள் எல்லோரும் நாங்கள் ஆட்சிக்கு வருவதற்குள் இறந்துவிடுங்கள். இல்லையென்றால் அவர்களை கொன்றுவிடுவேன். வழக்கு போடுபவர்களின் பெயர்ப்பட்டியலை தயார் செய்து வைத்துள்ளேன்” என்று தெரிவித்தார்.மேலும், வரும் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் மட்டுமே மக்கள் வாழ முடியும் இல்லையெனில் செத்து மடிய வேண்டியதுதான் என்றும் பேசியிருந்தார்.

சென்னையில் நேற்று (நவம்பர் 29) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம், இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவரோ, “தேர்தலில் சீமானின் பலம் என்பது 3 சதவிகிதம்தான். தமிழினம் என்பது சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றையெல்லாம் கடந்தது. பரந்துபட்ட மனம் கொண்டவன் தமிழன். ஆனால், தமிழன் என்ற அடையாளத்தை பயன்படுத்தி அதன்மூலம் வாக்குகளை பெறலாம் என்ற கண்ணோட்டம் தவறானது. மக்கள் இப்போது எந்தளவுக்கு சீமானுக்கு ஓட்டுப் போடுகிறார்களோ அதே அளவுதான் வருங்காலத்திலும் வாக்குகள் வாங்குவார். அதைத் தாண்டாது” என்று கருத்து தெரிவித்தார்.

நாம் தமிழர் ஆட்சிக்கு வரும் என்று சீமான் கூறியுள்ளது தொடர்பாக பதிலளித்த ஜெயக்குமார், “நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வருவோம் என்று கூறுவது, கடல் எப்போது வற்றுவது, கொக்கு எப்போது கருவாடு தின்பது என்ற கதைதான்” என்று விமர்சித்தார். 

 

https://minnambalam.com/k/2019/11/30/3

Link to comment
Share on other sites

சீமானையும் அவர் தம்பிகளையும் ஏதும் ஒரு மென்டல் கொஸ்பிட்டலுக்கு அனுப்பினால் மிச்சம்மீதி இருக்கிற மானத்தையாவது காப்பாற்றி கொள்ளலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு அண்ணா திமுக அமைச்சரே பதில் சொல்ல வேண்டிய நிலைமையில் உள்ளது.

Link to comment
Share on other sites

4 hours ago, அபராஜிதன் said:

சீமானையும் அவர் தம்பிகளையும் ஏதும் ஒரு மென்டல் கொஸ்பிட்டலுக்கு அனுப்பினால் மிச்சம்மீதி இருக்கிற மானத்தையாவது காப்பாற்றி கொள்ளலாம் 

ஏன் அனுப்ப வேண்டும் என கூறுவீர்களா  ?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அபராஜிதன் said:

சீமானையும் அவர் தம்பிகளையும் ஏதும் ஒரு மென்டல் கொஸ்பிட்டலுக்கு அனுப்பினால் மிச்சம்மீதி இருக்கிற மானத்தையாவது காப்பாற்றி கொள்ளலாம் 

சீமான் இல்லை என்றால் மிச்சம்மீதி இருக்கிற நிலங்கள் மலைகள் என்று வித்து சொத்து சேர்க்க சுகமாக இருக்கும்.

அவர் சொல்லும் விதத்தில் தவறுகள் இருக்கலாம்.

சொல்வது அத்தனையும் நிதர்சனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maharajah said:

ஏன் அனுப்ப வேண்டும் என கூறுவீர்களா  ?? 

மிச்சம்மீதி இருக்கிற மானத்தையாவது காப்பாற்றி கொள்ளலாம்  என்று கருத்தாளரின் பதில் விளக்கமாகவே உள்ளது.

Link to comment
Share on other sites

6 hours ago, விளங்க நினைப்பவன் said:

மிச்சம்மீதி இருக்கிற மானத்தையாவது காப்பாற்றி கொள்ளலாம்  என்று கருத்தாளரின் பதில் விளக்கமாகவே உள்ளது.

யாருடைய மானத்தை ? விளக்கமாக கூறமுடியுமா ? 

சீமான் தனது நிலத்தையும்,  நீரையும்,  மொழியையும்,  மக்களையும்  பாதுகாக்க விரும்பினால் பிழையென்று கூறுவீர்களா   ?  

(பி.கு. :  பொதுவெளியில் கருத்திடும் போது சிறிது நிதானத்தை கடைப்பிடிப்பது எப்பொழுதும் வரவேற்கத்தக்கது )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் “நாம் தமிழர் கட்சியின் போஸ்டர்களைகிழிப்பவர்கள், தம்பிகள் மீது வழக்கு போடுபவர்கள் எல்லோரும் நாங்கள் ஆட்சிக்கு வருவதற்குள் இறந்துவிடுங்கள். இல்லையென்றால் அவர்களை கொன்றுவிடுவேன்” மற்றும் “ வரும் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் மட்டுமே மக்கள் வாழ முடியும் இல்லையெனில் செத்து மடிய வேண்டியதுதான்” என்ற கருத்துக்களால் ஒரு பலனுமில்லை ஆனால் பல எதிரிகளை மட்டுமே உருவாக்கும் 

சீமானுக்கு யாராவது ஒரு நல்ல அறிவுறை சொல்லுபவர் பக்கத்திலிருத்தால் நல்லது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.