Jump to content

The Road of Lost Innocence.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

19370741-BB1-F-4-AB0-A61-D-AFD0-B1-E77-D
 

The Road of Lost Innocence 

எனது பெயர் சோமாலி மாம்..சோமாலி என்றால் “ கன்னி வனத்தில் தொலைந்த பூச்சரம்” பெயரின் அர்த்ததைப்போலவே எனது வாழ்க்கையும் என்று ஆரம்பிக்கிறது இந்த புத்தகம்.

கடும் போக்ககுடைய கம்னீயூஸ்ட கட்சி ஆட்சியிலிருந்த (Khmer Rouge) சமயத்தில் பிறந்த சோமாலி(1971?), பெற்றோர்களை தெரிந்திருக்கவில்லை, தாய்வழிப்பாட்டியும் இவரை காட்டில் விட்டுவிட்டு மாயமாகிவிட, Taman எனும் முஸ்லீம் வீட்டில் வளர்க்கப்படுகிறார். 9 வயதாகும் சமயத்தில் திடீரென  பாட்டனார் எனக்கூறி வந்த ஒருவரால் கூட்டி செல்லப்படுகிறார், பின்பு பாட்டனாரினாலும் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டு சீன வியாபாரியால் பலாத்காரப்படுத்தபடுகிறார். அப்போது இருந்த கம்போடியாவில் பெண்களை சிறுவர்களை(பெரும்பாலும் சிறுமிகள்) அடக்கி ஆளப்படுவதாகவும், வன்முறைகளுக்கும், பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவது, பெற்றோர், கணவன் போன்றவர்களால் விபச்சார விடுதிகளுக்கு விற்கப்படுவதும் சகஜம் என்று இந்த புத்தகத்தில் கூறுகிறார்.

பாட்டனார் தனது கடனை அடைப்பதற்காக, 14 வயதில் ஒரு இரானுவ வீரனுக்கு திருமணம் என்ற பெயரில் தன்னை விற்றுவிடுவதுடன், அந்த கணவன் போரில்   காணாமல் போக, பாட்டனார் அவரை Aunty Nopன் விபச்சாரவிடுதியில் தன்னை கொண்டுபோய்விடுவதையும், அங்கே நடக்கும் சிந்தையை கலங்கவைக்கும் கொடூரங்களை இந்த புத்தகத்தில் கூறுகிறார். அந்த சிறுமியர், பெண்களின் உளவியல் ரீதியான பாதிப்புகள்,  சுகாதாரமற்ற வாழ்க்கை மற்றும் உடலுறவினால் வந்த தொற்று நோய்கள் சமூகத்தில் அவர்களது நிலை என இந்த புத்தகம் பல விடயங்களை வெளிப்படையாக கூறுகிறது.

இந்த விடுதிகளில் வாழும் பெண்கள்   “Srey Kouc” ( Broken women) மனமுடைந்த/களங்கமடைந்த பெண்களாக கூறுகிறார். அவர்களது வாழ்க்கையை பற்றி, சித்ரவதைகளை அறியும் போது உள்ளம் நடுங்குவது உண்மை.

தன்னுடைய வாழ்க்கை துனையை சந்தித்த விதம், அவருடன் பிரான்ஸில் வாழ்ந்த வாழ்க்கை, பின் இருவரும் கம்போடியாவிற்கு திரும்பியது என்று தன் வாழ்கையை கூறும் இவர், ஒரு ஒன்பது வயது சிறுமியை இந்த கொடூரத்தில் இருந்து மீட்டதில் ஆரம்பித்து இந்த மாதிரி விற்கப்படும் சிறுமியர், பெண்களை மீட்டெடுக்க, அவர்களுக்கு உதவ என தான் எடுத்த நடவடிக்கைகள், அதற்கு வந்த முட்டுக்கட்டைகள், பயமுறுத்தல்கள் பற்றி கூறுகிறார். 

இந்த புத்தகம் வெளி வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இன்று இவரைப்பற்றி ஊடகங்கள் பலவிதமாக கூறுகிறது. அது உண்மையா இல்லையா என நான் ஆராயப்போவதில்லை, ஆனால் என்னைப்பொறுத்தவரை இவரை போன்று சிறுவயதில் இந்த கொடூரங்களுக்குள் தள்ளப்பட்ட சிறுமியர், பெண்களின் அவலம் குறையவில்லை. வன்முறைகளின் வடிவங்கள் மாறிவிட்டது ஆனால் வலிகள் குறையவில்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.