Jump to content

‘புலம்பெயரிகள்’ ஒரு நோக்கு -நிவேதா உதயராஜன்

Recommended Posts

வழக்கப் போல் ஒற்றைப் பார்வையுடன் எழுதப்ப கட்டுரை.

நான் கடந்த நான்கு வரிசங்களாக ஊருக்கு போய் வருகின்றேன். இது வரைக்கும் எந்த உறவுகளும் இவ்வளவு தா என தொந்தரவு செய்ததில்லை, நானும் கொடுக்கின்ற ஆளும் இல்லை.

ஊரில் நிற்கும் போது வெளிநாட்டு வாழ்வு முகத்தில் தந்த சில மாறுதல்கள் மட்டுமே வெளிநாடு ஒன்றில் வந்த ஒருவனாக காட்டும். மற்றப்படி பாட்டா செருப்பும் வெளியே விட்ட சேர்ட்டுமாகவே திரிவதுண்டு. என் முகனூலில் இருக்கும யாழ் கள உறவுகள் பலருக்கு இது தெரிந்து இருக்கும்.

ஊரில் வெளிநாட்டு பண உதவி எதுவும் இல்லாமல் சொந்த கடை நடத்தியும் விவசாயம் செய்தும் வாழும் பலரை என்னால் காட்ட முடியும். அரசு எந்தவொரு தொழிலையும் பொருளாதார மேம்பாடுகளையும் செய்யாமல், அது பற்றி தமிழ் எம் பிக்கள் எந்த பிரக்ஞை யும் அற்று இருக்கும் சூழ்நிலையிலும் தம் சொந்த கால்கள தங்கியிருக்கும் இளையவர்கள் பலர் உள்ளனர்.

அங்கு உள்ள படித்த அல்லது ஏதாவது ஒன்றில் திறமையுள்ள ஒருவர் வெளிநாடு வர விரும்பின் அதற்கான வழிமுறைகள் பற்றி அறிய என்னிடம் கேட்டால் எனக்கு தெரிந்த வழிமுறைகள் அனைத்தையும் கூறுவது உண்டு. ஏனெனில் அங்கு தமிழர்கள் சுயமரியாதையுடன் நிம்மதியாக வாழும் காலம் இனி வரப் போவதில்லை என்பதில் தெளிவாக இருக்கின்றேன். 

வெளிநாட்டு வாழ்வு என்பது புலம்பெயர் தமிழர்களுக்கு போராளிகளின் தியாகத்தால் விளைந்த வாய்ப்பு. அங்கு இருப்பது அந்த வாய்ப்பை தந்தவர்களை சுமந்து நின்ற மண். அந்த மண்ணில் வாழ்கின்றவர்களுக்கு எம் மேல் இருக்கும் கோபம் பலவற்றுக்கு நியாயமான காரணங்கள் இருக்கு. அதை புரிந்து கொள்ளாமல் நாம் பணம் தந்தவர்கள்/ இப்பவும் தருகின்றவர்கள் தானே என நாட்டாமை குணத்தை காட்ட நினைத்தால் அவர்களுக்கும் எமக்குமான இடைவெளி தான் இன்னும் அதிகரிக்கும்.

நன்றி

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

உங்கள் உண்டியலில் விழ வேண்டிய பணமெல்லாம் மாறி கிருபனின் உண்டியலில் விழுந்திருக்கு.

 உண்டியலில்  விழுந்தவற்றை வைத்துக் கனடாவுக்குச் சென்றவர்கள் கிளிநொச்சியில் விற்க இருக்கும் மாபிள் பதித்த வீட்டை வாங்கப்போகின்றேன்🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

வெளிநாட்டு வாழ்வு என்பது புலம்பெயர் தமிழர்களுக்கு போராளிகளின் தியாகத்தால் விளைந்த வாய்ப்பு. அங்கு இருப்பது அந்த வாய்ப்பை தந்தவர்களை சுமந்து நின்ற மண். அந்த மண்ணில் வாழ்கின்றவர்களுக்கு எம் மேல் இருக்கும் கோபம் பலவற்றுக்கு நியாயமான காரணங்கள் இருக்கு. அதை புரிந்து கொள்ளாமல் நாம் பணம் தந்தவர்கள்/ இப்பவும் தருகின்றவர்கள் தானே என நாட்டாமை குணத்தை காட்ட நினைத்தால் அவர்களுக்கும் எமக்குமான இடைவெளி தான் இன்னும் அதிகரிக்கும்.

போராட்ட காலத்தில் பலர் தேசியம் சார்ந்து உதவியதைவிட போராளிகளின் தியாகத்தினால் கிடைத்த  வசதியான புலம்பெயர்வாழ்வு என்ற குற்ற உணர்வினால் உதவினார்கள்.

ஆனால் பக்கத்து வீட்டில் உப்பு, புளியை அவசரத்திற்கு வாங்குவதைக்கூட மரியாதைக்குறைவாக நினைத்த சமூகம் மற்றவர்களிடம் வாய்விட்டு உதவி கேட்கும் நிலையை, பொருளாதாரத் தடை நிலவிய போராட்ட காலம்தான் உருவாக்கியது. அதன் பிற்பாடு தோன்றிய தலைமுறையினரில் பெரும்பகுதியினருக்கு கடும் உழைப்பில் நாட்டம் உள்ளதா என்று தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Dash said:

தமிழனை அழிக்க யாரும் தேவை இல்லை; தானே புலம்பெயர்ந்து அழிந்து போவான், என்னுடைய சகோதரனின் நண்பன் 30 வயது அவர் உள்ளுர் நிறுவனத்தில் 100,000/=  சம்பளம் மனைவிக்கு சர்வதேச நிறுவனத்தில் 150,000= இதையெல்லாம் விட்டு போட்டு கனடாவில்  வந்து குப்பை கொட்டீனம்......

தாயக கனவுடன் உயிர் நீத்த மாவீர் தான் பாவம் ...புலம் பெயர்வு தான் குறிக்கொள் என்றால் ஏன் இத்தனை அழிவு.... போராடாமல் புலம் பெயர்ந்து இருக்கலாம்.

தாஸ் அண்ணை, 

போராட்டத்தியும் புலம் பெயருதலையும் போட்டு நாம் குழப்பிக்கொள்ள கூடாது.
1978, 1979 களில் நான் சிறுவனக இருந்த காலத்திலேயே, ஜெர்மன் போக கொழும்பில் வந்து யாழ்ப்பாணாத்து இளைஞ‌ர்கள் இருபதை கண்டுள்ளேன். இது இலங்கையர்களின் இயல்பு, வறுமையான நாடுகளில் வாழும் இளைஞ‌ர்கள் எப்படியாவாது நாட்டை விட்டு போகவே முயற்சிப்பர்.

மேலும் புலம் பெயர்ந்து யாரும் அழிந்து போக மாட்டார்கள், மாறக செழிப்படைவார்கள்

மேலும் கட்டுரையாளர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஆற்றமையை வெளிப்படுத்தியுள்ளார், இவர் எழுதியதுபோல் புலத்தில் எல்லோரும் அப்படியல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்மையைச் சொன்னதற்கு நன்றி தம்பியா. வெளிநாட்டவரைத் திட்டி வரும் வீடியோக்களும், முகநூல் பதிவுகளாலும் ஏற்பட்ட கடுப்பினாலும் கசப்பினாலும் எழுதியது இது.
என்னிடம் உதவி கேட்ட ஒரு உறவு ஒரு ஆண்டில் கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பத் தருகிறேன் என்று வாங்கிய பணத்தை நான்கு ஆண்டுகளாகியும் தரவே இல்லை. அவர் முகநூலில் போடும் பதிவுகளை பார்த்துக் கடுப்பாகி என் பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பித் தாருங்கள் என்று கேட்டதற்கு இரு மாதங்களுக்கு ஒரு தடவை 5000 ரூபாய் போடுகிறேன் என்கிறார். சரி என்று அங்குள்ள பாதிக்கப்பட்ட ஒருவருக்கு போகுமாறு ஒழுங்கு செய்தால் ஒரு மாதம் போட்டுவிட்டு மூன்றாம் மாதம் போடவில்லை. ஏன் போடவில்லை என்று கேட்டால் மனைவி குழந்தைகளுடன் சுற்றுலாச் சென்றதாகக் கூறுகிறார். எனக்கு எப்படி இருக்கும் என்று பாருங்கள்.

இன்னுமா அவர் அந்த பணத்தை கொடுக்கல ?? 

12 hours ago, நிழலி said:

அங்கு உள்ள படித்த அல்லது ஏதாவது ஒன்றில் திறமையுள்ள ஒருவர் வெளிநாடு வர விரும்பின் அதற்கான வழிமுறைகள் பற்றி அறிய என்னிடம் கேட்டால் எனக்கு தெரிந்த வழிமுறைகள் அனைத்தையும் கூறுவது உண்டு. ஏனெனில் அங்கு தமிழர்கள் சுயமரியாதையுடன் நிம்மதியாக வாழும் காலம் இனி வரப் போவதில்லை என்பதில் தெளிவாக இருக்கின்றேன். 

ஏதும் விவசாயம் சார்ந்த வேலைகள் ஏதும் கிடைக்குமாக இருந்தால் பகிரவும் அல்லது அறிவிக்கவும் பலர் சொல்கிறார்கள் ஏன் காசும் கொடுத்துள்ளார்கள் பண்ணைகள் (கோழி , மாடு) வேலை வாய்ப்பு இருக்குதாம் என  அப்படி ஏதும் வேலை வாய்ப்புக்கள் அங்கு கிடைக்குமா?? நிழலி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே ஆண்களைக்காட்டிலும் பெண்களால் எவ்விடயத்தையும் கூர்மையாக அவதானிக்கமுடியும். உங்கள் கட்டுரை சொல்லும் செய்தி அதுதான். அநேகமாக புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டு தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு பொருளாதார உதவி செய்பவர்கள் இப்படியாக இக்கட்டில் கணிசமாகவே மாட்டுப்பட்டுள்ளனர். தாயகத்தின் மீதான பற்றுதலால் அங்குள்ள உறவுகளுக்கு நேர்ந்த துன்பங்களால் இப்படியான கசப்பான உணர்வுகளை நேர் கொண்டபோதும் அதனை பெரிது படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள். ஒரு புதிய சமூகம் அங்கு உருவாகி இருக்கிறது என்பது உண்மை. சில சமயங்களில் தம் குண இயல்புகளுக்கு அப்பால் பொருளாதார மோகம் பிறள்வுகளை உருவாக்கி அவர்களை சுரணையற்றவர்களாகக்கூட ஆக்கிவிடுகிறது. அன்பொழுக அழைப்பார்கள் உணவு தருவார்கள் என்பதெல்லாம் போராட்டகாலத்திற்கு முந்தையது அந்த எதிர்பார்ப்பை இப்போது நாங்கள் தேடுவது தவறு. ஏனென்றால் அச்சத்துடனான அவர்கள் அன்றாட வாழ்வை பெரும் பிணியோடு கடந்தவர்கள். ஒரு வேளை உணவுக்காகக்கூட ஒவ்வொரு குடும்பமும் தத்தளித்திருக்கின்றன. அதன் நிமித்தம் மற்றவரை உபசரிக்கும் பண்புகள் இழந்திருக்கின்றன. நீண்ட காலமாக எதிலியாக இடங்கள் மாறி தத்தம் சொந்தத்தேவைகளைப் பாதுகாக்க சுயநலமியாக மாறவேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டவர்கள். இன்னும் அந்நிலையின் ஆதிக்கத்திலிருந்து விடுபடாத தன்மைகள் அவர்களை உபசரிக்கும் பண்பிலிருந்து விலத்தி வைத்திருக்கிறது. இவற்றை தவறென்று கருதிவிட முடியாது. புலம்பெயர்ந்தவர்கள் கஸ்டப்படுகிறோம் என்பதை அவர்கள் உணரவில்லை என்று சொல்லிவிடமுடியாது நாங்கள் கஸ்ரப்படுவதை தாங்கள் அறிந்திருப்பதாக காட்டிக்கொண்டால் உங்களிடம் பெறக்கூடிய ஏதேனும் உதவிகளை கேட்க முடியாதே அதுதானே அடிப்படை நீங்கள் சரியாக கஸ்ரப்படுகிறீர்கள் என்று சொல்லிவிட்டு எனக்கு ஏதேனும் உதவி செய்யலாம்தானே என்று கேட்க முடியுமா? இல்லைத்தானே... அடுத்து போராட்ட காலத்தில் ஓடியோடி அன்றாட தொழில்களை செய்யாமல் நிலையற்ற தன்மையால் சோம்பேறிகள் ஆகியிருக்கிறார்கள்.  தொழில் ரீதியாக நமக்குள் உள்ள ஏற்றத்தாழ்வுகளால் சாதிய வன்மங்களால் இப்போது அங்குள்ள இளையவர்கள் அவர்களுக்கான தொழிலைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். கூலித் தொழில் செய்பவர்கள் அநேகமாக முதியோர்களாகவே இருக்கிறார்கள். இளைவர்கள் மத்தியில் உழைப்பு என்றால் வெளிநாடு என்பதுதான் வேதமாக இருக்கிறது. எப்படியாவது வெளிநாடு போய்விட்டால் இந்த பொருளாதாரம் மற்றும் சமூக வன்மங்களிலிருந்து விடுபட்டுவிடுவோம் என்ற நப்பாசைதான். நாங்கள் புலம்பெயர்ந்து இருந்தாலும் எங்கள் சமூக அடிப்படைக்குணத்திலிருந்து விடுபட்டுவிட்டோம் என்று சொன்னால் அது வேசமாகும். புலம்பெயர்ந்த நாங்கள் கொஞ்சம் பொருளாதார மேம்பாட்டுடன் எம் சமூகத்திற்கே உரிய அடிப்படை குணங்களை மறைத்து மேக்கப்போட்டு மறைத்திருக்கிறோமேயன்றி மாறவில்லை. வசதி வாய்ப்புகள் இருக்கும் நாங்களே மாற்றமில்லாதவர்களாக பயணிக்கும்போது வாய்ப்புகளும் இல்லாமல் வசதியும் இல்லாமல் அத்தோடு ஒடுக்கப்பட்ட வாழ்வியலுக்குள் நின்று மன அழுத்தங்களுக்குள் ஆட்பட்டிருக்கும் சமூகமாகவே அவர்களை நாங்கள் நோக்கவேண்டும். கூர்மையான நோக்கல்கள் உங்கள் கட்டுரையில் நிறைந்திருக்கின்றன. அதே நேரம் உள் ஊடுருவும் பார்வையைத் தவிர்த்து விட்டீர்கள். உங்கள் நேரடியான அநுபவங்களும் ஆதங்கமும் தெரிகிறது. ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் அநுபவங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும் அவை அவரவர்கள் உணரும் விதம் வேறல்லவா. உங்களுடைய பதிவில் உள்ளவைகள்  எனக்கும் ஏற்பட்டிருக்கின்றன. நாம் ஏற்றுக்கொள்ளும் விதம் மாறுபடுகிறது சுமே. ஆரோக்கியமான பதிவுதான் பலரை பேசவைக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இன்னுமா அவர் அந்த பணத்தை கொடுக்கல ?? 

ஏதும் விவசாயம் சார்ந்த வேலைகள் ஏதும் கிடைக்குமாக இருந்தால் பகிரவும் அல்லது அறிவிக்கவும் பலர் சொல்கிறார்கள் ஏன் காசும் கொடுத்துள்ளார்கள் பண்ணைகள் (கோழி , மாடு) வேலை வாய்ப்பு இருக்குதாம் என  அப்படி ஏதும் வேலை வாய்ப்புக்கள் அங்கு கிடைக்குமா?? நிழலி 

உங்களுக்கு வேற வேலை இல்லை...இவர்களது பேச்சை நம்பி மனிசியையும்,பிள்ளையையும் விட்டுட்டு இந்த குளிருக்குள்ள வந்து கஷ்ட படாமல் இருப்பதை கொண்டு திருப்தியாய் வாழுங்கோ ...அல்லது மத்திய கிழக்கு நாடுகளுக்கு 1, 2 வருச விசாவில் போய் உழையுங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நிழலி said:

வழக்கப் போல் ஒற்றைப் பார்வையுடன் எழுதப்ப கட்டுரை.

நான் கடந்த நான்கு வரிசங்களாக ஊருக்கு போய் வருகின்றேன். இது வரைக்கும் எந்த உறவுகளும் இவ்வளவு தா என தொந்தரவு செய்ததில்லை, நானும் கொடுக்கின்ற ஆளும் இல்லை.

ஊரில் நிற்கும் போது வெளிநாட்டு வாழ்வு முகத்தில் தந்த சில மாறுதல்கள் மட்டுமே வெளிநாடு ஒன்றில் வந்த ஒருவனாக காட்டும். மற்றப்படி பாட்டா செருப்பும் வெளியே விட்ட சேர்ட்டுமாகவே திரிவதுண்டு. என் முகனூலில் இருக்கும யாழ் கள உறவுகள் பலருக்கு இது தெரிந்து இருக்கும்.

ஊரில் வெளிநாட்டு பண உதவி எதுவும் இல்லாமல் சொந்த கடை நடத்தியும் விவசாயம் செய்தும் வாழும் பலரை என்னால் காட்ட முடியும். அரசு எந்தவொரு தொழிலையும் பொருளாதார மேம்பாடுகளையும் செய்யாமல், அது பற்றி தமிழ் எம் பிக்கள் எந்த பிரக்ஞை யும் அற்று இருக்கும் சூழ்நிலையிலும் தம் சொந்த கால்கள தங்கியிருக்கும் இளையவர்கள் பலர் உள்ளனர்.

அங்கு உள்ள படித்த அல்லது ஏதாவது ஒன்றில் திறமையுள்ள ஒருவர் வெளிநாடு வர விரும்பின் அதற்கான வழிமுறைகள் பற்றி அறிய என்னிடம் கேட்டால் எனக்கு தெரிந்த வழிமுறைகள் அனைத்தையும் கூறுவது உண்டு. ஏனெனில் அங்கு தமிழர்கள் சுயமரியாதையுடன் நிம்மதியாக வாழும் காலம் இனி வரப் போவதில்லை என்பதில் தெளிவாக இருக்கின்றேன். 

வெளிநாட்டு வாழ்வு என்பது புலம்பெயர் தமிழர்களுக்கு போராளிகளின் தியாகத்தால் விளைந்த வாய்ப்பு. அங்கு இருப்பது அந்த வாய்ப்பை தந்தவர்களை சுமந்து நின்ற மண். அந்த மண்ணில் வாழ்கின்றவர்களுக்கு எம் மேல் இருக்கும் கோபம் பலவற்றுக்கு நியாயமான காரணங்கள் இருக்கு. அதை புரிந்து கொள்ளாமல் நாம் பணம் தந்தவர்கள்/ இப்பவும் தருகின்றவர்கள் தானே என நாட்டாமை குணத்தை காட்ட நினைத்தால் அவர்களுக்கும் எமக்குமான இடைவெளி தான் இன்னும் அதிகரிக்கும். 

நன்றி

உங்களுக்கு வாய்த்த அனுபவத்தை வைத்துக்கொண்டுதான் நீங்களும் கதைக்கிறீர்கள்.  
நாங்கள் ஒன்றும் வெளிநாட்டில் இருந்தவர்கள் என்று பந்தா காட்டுவதில்லை. உன்னட்டை இதைவிட நல்ல உடுப்புகள் இல்லையோ என்று கேட்க்கும் அளவுக்கு மிகச் சாதாரணமாகவே நானோ அல்லது இன்னும் சிலரோ திரிவது. ஆனாலும் எப்படியோ வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்று அவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது. ஒட்டோ பிடித்துத் திரியாமல் பஸ்சில் திரிகிறா என்று சிரித்தவர்களும் உண்டு.

நான் கூறியது என் அனுபவம் மட்டும் அல்ல.

போரினால் தான் நாம் இங்கு வந்தோம் என்றாலும் எம்மைக் கண்டபடி திட்டுவதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அவர்களுக்கு உரிமை இருக்கு என்றால் எமக்கும் உரிமை உண்டு. நீங்கள் வழமைபோல் வேண்டுமென்றோ அல்லது உங்கள்மனதில் படத்தை எழுதுகிறீர்கள் அவ்வளவே.

13 hours ago, colomban said:

தாஸ் அண்ணை, 

போராட்டத்தியும் புலம் பெயருதலையும் போட்டு நாம் குழப்பிக்கொள்ள கூடாது.
1978, 1979 களில் நான் சிறுவனக இருந்த காலத்திலேயே, ஜெர்மன் போக கொழும்பில் வந்து யாழ்ப்பாணாத்து இளைஞ‌ர்கள் இருபதை கண்டுள்ளேன். இது இலங்கையர்களின் இயல்பு, வறுமையான நாடுகளில் வாழும் இளைஞ‌ர்கள் எப்படியாவாது நாட்டை விட்டு போகவே முயற்சிப்பர்.

மேலும் புலம் பெயர்ந்து யாரும் அழிந்து போக மாட்டார்கள், மாறக செழிப்படைவார்கள்

மேலும் கட்டுரையாளர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஆற்றமையை வெளிப்படுத்தியுள்ளார், இவர் எழுதியதுபோல் புலத்தில் எல்லோரும் அப்படியல்ல.

எல்லோரும் என்று நான் எங்கே எழுதினேன். அப்ப நீங்களும் கட்டுரையை வடிவாக வாசித்து விளங்கிக்கொள்ளவில்லை 😀

5 hours ago, வல்வை சகாறா said:

சுமே ஆண்களைக்காட்டிலும் பெண்களால் எவ்விடயத்தையும் கூர்மையாக அவதானிக்கமுடியும். உங்கள் கட்டுரை சொல்லும் செய்தி அதுதான். அநேகமாக புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டு தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு பொருளாதார உதவி செய்பவர்கள் இப்படியாக இக்கட்டில் கணிசமாகவே மாட்டுப்பட்டுள்ளனர்.

ஆண்கள் பற்றிய உங்கள் அவதானிப்பு மிகச் சரியாகவுள்ளது 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

உங்களுக்கு வேற வேலை இல்லை...இவர்களது பேச்சை நம்பி மனிசியையும்,பிள்ளையையும் விட்டுட்டு இந்த குளிருக்குள்ள வந்து கஷ்ட படாமல் இருப்பதை கொண்டு திருப்தியாய் வாழுங்கோ ...அல்லது மத்திய கிழக்கு நாடுகளுக்கு 1, 2 வருச விசாவில் போய் உழையுங்கோ 

அப்படித்தான் யோசித்து இருக்கிறன் ரதி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, வல்வை சகாறா said:

சுமே ஆண்களைக்காட்டிலும் பெண்களால் எவ்விடயத்தையும் கூர்மையாக அவதானிக்கமுடியும். உங்கள் கட்டுரை சொல்லும் செய்தி அதுதான்.

பெண்கள் ஆண்களை விட  எல்லாவிடயத்தையும் கூர்ந்து கவனிக்கிறதெல்லாம் வீடுகளுக்கு சரி வந்தாலும்....நாடு/ உலகம் என்று வரும்போது பூச்சியமாகவே இருந்து தொலைக்கின்றது.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16 hours ago, ரதி said:

உங்களுக்கு வேற வேலை இல்லை...இவர்களது பேச்சை நம்பி மனிசியையும்,பிள்ளையையும் விட்டுட்டு இந்த குளிருக்குள்ள வந்து கஷ்ட படாமல் இருப்பதை கொண்டு திருப்தியாய் வாழுங்கோ ...அல்லது மத்திய கிழக்கு நாடுகளுக்கு 1, 2 வருச விசாவில் போய் உழையுங்கோ 

அதே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆண்கள் பற்றிய உங்கள் அவதானிப்பு மிகச் சரியாகவுள்ளது 😀

சுமே ஏன் ராசாத்தி எல்லாம் ஒழுங்காத்தானே போயிட்டிருக்கு....😶  இதில் நம்ம பங்குக்கு நம்ம எண்ணத்தை எழுதினோம் தப்பா...... ஐ கெய்ட் யுவர் கொலைவெறி🤬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/30/2019 at 6:26 PM, கிருபன் said:

புலத்தில் வாழும் இளம் பெண்களைப் பொறுத்தவரை வெளிநாடு என்பது சொர்க்கம் என்னும் அசைக்கமுடியாத நம்பிக்கை அவர்கள் எல்லோர் மனதிலும் வேரூன்றியிருக்கிறது. வெளிநாட்டு மாப்பிளைகளையே பெற்றோரும் விரும்புவதற்குக் காரணம் பிள்ளைகள் அங்கு சென்றால் தம் பொருளாதார வளம் சீரடையும் என்ற எண்ணமும் வெளிநாட்டில் பிள்ளை வசதியாக வாழ்வாள் என்ற எண்ணப்போக்கும்தான். பல பெற்றோர் கூட மணமகனுக்கு எந்தவிதக் கல்வித் தகுதியோ  அல்லது எத்தனை வயது வித்தியாசம் இருந்தாலும் கூட அதைப்பற்றி எவ்வித கவலையும் இன்றி மணமகனின் குணநலன்களைக் கூட விசாரிக்காது அல்லது கண்டுகொள்ளாது  மணமுடித்துக் கொடுக்கின்றனர். இதற்கான காரணம் பணமும் வசதியான வாழ்வும் என்ற எண்ணமேயன்றி வேறென்ன இருக்கமுடியும்?

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நல்லாய் இருக்க வேண்டும் என நினைப்பது தப்பா மேடம்?

எவ்வித கல்வித்தகமைகள் இல்லாமலும் பலர் நல்லபடியாகத்தான் வாழ்கின்றார்கள். இதையும் அவர்கள் உதாரணமாக எடுத்திருக்கலாம் அல்லவா? tw_glasses:
 
உடன் பதில் தரவும் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2019 at 9:11 AM, ராசவன்னியன் said:

சரியான வேலை வாய்ப்புகள் அமையாமல், பொருளீட்ட நியாயமான, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு புலம் பெயர ஆசை கொள்வதில் நிச்சயம் தவறில்லை.

ஆனால் எப்படியோ வாய்ப்பு கிட்டி, புலம் பெயர்ந்து அங்கே செட்டிலாகிய பின், தாயகத்திலிருந்து பின்னால் புலம் பெயர எத்தனிப்பவர்களைப் பார்த்து "இங்கொன்றும் சரியில்லை, நீங்கள் அங்கேயே தாயகத்தில் சமாளித்து வாழுங்கள்..!" என அறிவுறுத்துவது சரியன்று.

ஆனால் இங்கு நிலமை வேறு.50-- 60 இலச்சங்கள் செலவளித்து  அதுவும் உத்திரவாதம் இல்லாமல் வெளிநாடு செல்ல முயற்ச்சிப்பது எந்தளவுக்கு உகந்த செயல் என்று தெரியவில்லை.அப்படி போய் சேர்ந்தாலும் வேலை என்பது அடுத்த பிரச்சனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வல்வை சகாறா said:

சுமே ஏன் ராசாத்தி எல்லாம் ஒழுங்காத்தானே போயிட்டிருக்கு....😶  இதில் நம்ம பங்குக்கு நம்ம எண்ணத்தை எழுதினோம் தப்பா...... ஐ கெய்ட் யுவர் கொலைவெறி🤬

நானும் என் எண்ணத்தைத் தாம்மா எழுதினது 🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நல்லாய் இருக்க வேண்டும் என நினைப்பது தப்பா மேடம்?

எவ்வித கல்வித்தகமைகள் இல்லாமலும் பலர் நல்லபடியாகத்தான் வாழ்கின்றார்கள். இதையும் அவர்கள் உதாரணமாக எடுத்திருக்கலாம் அல்லவா? tw_glasses:
 
உடன் பதில் தரவும் 😀

தமிழ் சமூகம் இன்னும் பெற்றோரை மிக உயர்வாக்கச் சித்தரித்து ஏமாற்றுகிறது. பலர் நல்ல பெற்றோராக இருந்தாலும் சிலர் சுயநலமுள்ளவர்களாகவே இருக்கின்றனர் அங்கும் இங்கும். பலர் தம் சுமை குறைந்தால் போதும் என்னும் சுயநலத்தில் தான் எதையும் கண்டுகொள்ளாது பிள்ளைகளை வெளிநாட்டுக் கிழட்டு மாப்பிளைகளுக்கும், திருடர்களுக்கும் திருமணம் முடிதத்துக் கொடுக்கின்றனர். இதில் பிள்ளை நல்லாய் இருக்கவேண்டும் என்பது எங்கே வருகிறது குமாரசாமி ???. 

கல்வித் தகைமை பற்றிப் பார்க்காத தேவையில்லை. வயது வித்தியாசத்தை திருமணம் ஆனவரா இல்லையா என்பதைக் கூடப் பார்ப்பதில்லை. சில பெற்றோர் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுடன் தம் பிள்ளைகளை தெரிந்தே ஊர் சுற்ற விட்டுப் பணம் ஈட்டுகின்றனர். இவை எல்லாம் சரி என்கிறீர்களா ???

உடனடியாய் வாசிக்கவும் 😎

3 hours ago, சுவைப்பிரியன் said:

ஆனால் இங்கு நிலமை வேறு.50-- 60 இலச்சங்கள் செலவளித்து  அதுவும் உத்திரவாதம் இல்லாமல் வெளிநாடு செல்ல முயற்ச்சிப்பது எந்தளவுக்கு உகந்த செயல் என்று தெரியவில்லை.அப்படி போய் சேர்ந்தாலும் வேலை என்பது அடுத்த பிரச்சனை.

ராஜவன்னியன் அண்ணாவுக்கு எம்மவர்களின் வாழ்வியல் தெரியவில்லை. எல்லோரும் வசதியாக வாழ்வதாக எண்ணிக்கொண்டிருக்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தமிழ் சமூகம் இன்னும் பெற்றோரை மிக உயர்வாக்கச் சித்தரித்து ஏமாற்றுகிறது. பலர் நல்ல பெற்றோராக இருந்தாலும் சிலர் சுயநலமுள்ளவர்களாகவே இருக்கின்றனர் அங்கும் இங்கும். பலர் தம் சுமை குறைந்தால் போதும் என்னும் சுயநலத்தில் தான் எதையும் கண்டுகொள்ளாது பிள்ளைகளை வெளிநாட்டுக் கிழட்டு மாப்பிளைகளுக்கும், திருடர்களுக்கும் திருமணம் முடிதத்துக் கொடுக்கின்றனர். இதில் பிள்ளை நல்லாய் இருக்கவேண்டும் என்பது எங்கே வருகிறது குமாரசாமி ???. 

கல்வித் தகைமை பற்றிப் பார்க்காத தேவையில்லை. வயது வித்தியாசத்தை திருமணம் ஆனவரா இல்லையா என்பதைக் கூடப் பார்ப்பதில்லை. சில பெற்றோர் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுடன் தம் பிள்ளைகளை தெரிந்தே ஊர் சுற்ற விட்டுப் பணம் ஈட்டுகின்றனர். இவை எல்லாம் சரி என்கிறீர்களா ???

உடனடியாய் வாசிக்கவும் 😎

ராஜவன்னியன் அண்ணாவுக்கு எம்மவர்களின் வாழ்வியல் தெரியவில்லை. எல்லோரும் வசதியாக வாழ்வதாக எண்ணிக்கொண்டிருக்கிறார்

இவ்வளவும் உண்மை...அநேகமான குடும்பங்களில் இந்தக் கதை தான் நடக்குது 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

...ராஜவன்னியன் அண்ணாவுக்கு எம்மவர்களின் வாழ்வியல் தெரியவில்லை. எல்லோரும் வசதியாக வாழ்வதாக எண்ணிக்கொண்டிருக்கிறார்

அப்படி நான் எங்குமே சொல்லவில்லையே அம்மணி..?

மேற்கத்திய நாடுகளின் குளிரில் பலரும் ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று வேலை செய்து கடினமாக உழைத்து பொருளீட்டிதான் வாழ்கிறார்கள் (சிலர் செல்வந்தர்களாக இருக்கலாம்)என அறிந்துதான் உள்ளேன்.

நான் முன்பு சொன்னது புலம் பெயர்வது, செல்லும் நாட்டின் சட்டவிதிகளுக்கு உட்பட்டதாய் இருக்கவேண்டும் என்பதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2019 at 2:03 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தமிழ் சமூகம் இன்னும் பெற்றோரை மிக உயர்வாக்கச் சித்தரித்து ஏமாற்றுகிறது. பலர் நல்ல பெற்றோராக இருந்தாலும் சிலர் சுயநலமுள்ளவர்களாகவே இருக்கின்றனர் அங்கும் இங்கும். பலர் தம் சுமை குறைந்தால் போதும் என்னும் சுயநலத்தில் தான் எதையும் கண்டுகொள்ளாது பிள்ளைகளை வெளிநாட்டுக் கிழட்டு மாப்பிளைகளுக்கும், திருடர்களுக்கும் திருமணம் முடிதத்துக் கொடுக்கின்றனர். இதில் பிள்ளை நல்லாய் இருக்கவேண்டும் என்பது எங்கே வருகிறது குமாரசாமி ???. 

கல்வித் தகைமை பற்றிப் பார்க்காத தேவையில்லை. வயது வித்தியாசத்தை திருமணம் ஆனவரா இல்லையா என்பதைக் கூடப் பார்ப்பதில்லை. சில பெற்றோர் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுடன் தம் பிள்ளைகளை தெரிந்தே ஊர் சுற்ற விட்டுப் பணம் ஈட்டுகின்றனர். இவை எல்லாம் சரி என்கிறீர்களா ???

மறுத்துவிட்டு அகல முடியாத விடயம்.  பெற்றோர் திருமணம் செய்து வைக்கிறார்கள் பிள்ளைகள் திருமணம் செய்கிறார்கள் இதில் உங்களுக்கு ஏன் வருத்தம் என்று பலர் கேட்கக்கூடும். ஒரு திருமண முகவராக செயற்படுவதால் இவ்விடயத்தில் இருக்கும் உண்மையை அதிகம் அறியக்கூடியதாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2019 at 8:03 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தமிழ் சமூகம் இன்னும் பெற்றோரை மிக உயர்வாக்கச் சித்தரித்து ஏமாற்றுகிறது. பலர் நல்ல பெற்றோராக இருந்தாலும் சிலர் சுயநலமுள்ளவர்களாகவே இருக்கின்றனர் அங்கும் இங்கும். பலர் தம் சுமை குறைந்தால் போதும் என்னும் சுயநலத்தில் தான் எதையும் கண்டுகொள்ளாது பிள்ளைகளை வெளிநாட்டுக் கிழட்டு மாப்பிளைகளுக்கும், திருடர்களுக்கும் திருமணம் முடிதத்துக் கொடுக்கின்றனர். இதில் பிள்ளை நல்லாய் இருக்கவேண்டும் என்பது எங்கே வருகிறது குமாரசாமி ???. 

கல்வித் தகைமை பற்றிப் பார்க்காத தேவையில்லை. வயது வித்தியாசத்தை திருமணம் ஆனவரா இல்லையா என்பதைக் கூடப் பார்ப்பதில்லை. சில பெற்றோர் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுடன் தம் பிள்ளைகளை தெரிந்தே ஊர் சுற்ற விட்டுப் பணம் ஈட்டுகின்றனர். இவை எல்லாம் சரி என்கிறீர்களா ???

உடனடியாய் வாசிக்கவும் 😎

ஒரு சில குடும்பங்கள் அல்லது வறுமையில் வாடும் குடும்பங்களின் நடவடிக்கைகளை வைத்து ஒட்டுமொத்த சமூகத்தையும் கணிப்பிடலாகாது.
சமூக நடப்புகளை நிதானமாக ஆராய்ந்து விட்டு நிதானமாக பதில் எழுதவும்.✍️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“சில பெண்கள் அங்கு ஒரு காதலன் இருக்க அவரின் சம்மதத்துடனும் திட்டத்துடனும் திருமணம் செய்துகொண்டு வந்து இங்கு விசா பெற்றுக்கொண்டபின் கணவனை விவாகரத்துச் செய்துவிட்டு பழைய காதலனைக் கூப்பிட்டுத் திருமணம் செய்து வாழ்கிறார்கள்.”

இந்த கருத்தை வாசித்த போது எனக்குள் கேள்வி எழுந்தது.. 

ஒரு காதலி/பெண் இந்த  மாதிரி நடப்பதற்கு சம்மதம் தெரிவிக்கும் காதலன்/ஆணிற்கு(? ) கூட பொருளாதார முன்னேற்றம் மட்டுமே கண்களில்  தெரிகிறதோ என்று?
 
Link to comment
Share on other sites

21 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

திருமணம் செய்து ஸ்பான்சர் பண்ண  அவர்கள் விமானநிலையத்தில் வந்திறங்கி  காதலனுடன் சென்ற சம்பவங்கள் எனக்கு தெரிந்து இரண்டு.

அவர்கள் வெளிநாட்டுவாழ்க்கைக்காக எந்த எல்லைக்கும்  செல்ல தயாராக இருக்கிறார்கள் வயது வித்தியாசம் 15 மேல் அநேகமான தற்போதைய திருமணங்களில்,அதை விட காதலன் காதலியை வெளிநாட்டு மாப்பிளை க்காக கைவிடுதல் இது இப்போது ஆரம்பித்ததல்ல இப்பிடி இன்னும் பல 

பணம் தேவை எனும் போது அடுத்தடுத்து அழைப்பினை எடுக்கும் உறவுகள் பணம் கையில் கிடைத்தவுடன் அது கிடைத்து விட்டது என போன் பண்ணி சொல்வதற்கு கூட மறக்கிறார்கள் அடுத்தமுறை பணத்தேவை ஏற்படும் போது தான் எங்கள் நினைவு அவர்களிற்கு வருகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“அவர்கள் வெளிநாட்டு வாழ்க்கைக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயராக இருக்கிறார்கள்”.

உண்மைதான், இது இருபாலாருக்குமே பொருந்தும். ஏனெனில் உங்களுக்கு தெரிந்த சம்பவங்கள் இரண்டு வேறு, எனக்கு தெரிந்த சம்பவங்கள் நான்கு வேறுவிதம், இன்னும் பலருக்கு இன்னும் பலவித சம்பவங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித கண்ணோட்டத்துடன் பார்ப்பார்கள், கருத்துக்களை எழுதுவார்கள். நான் எனது கருத்தை எழுதினேன். 

உங்களது கருத்திற்கும் மிக்க நன்றிகள் அபராஜிதன்.

Link to comment
Share on other sites

 எனது மேல் உள்ள கருத்தில் தனியாக பெண்கள் வர்க்கத்தை மட்டுமே குற்றஞ்சாட்டுவது போல ஒரு தொனி இருப்பதாக படுகிறது அல்லது தவறாக புரிந்து கொள்ளப்படக்கூடுமென நினைக்கிறேன்..அதில் பெண்களை மட்டும் குற்றம் சொல்லவில்லை பொதுவான சமூக போக்கினை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதும் கருத்துகள் மூலம் மற்றையவர்களை வருத்தப்பட வைக்க வேண்டும் என்பது எனது நோக்கம் இல்லை. அப்படி ஏதும் எழுதிருந்தால் மன்னிக்கவும். 

நான் கூற வந்த கருத்து இதுதான் “ வெளிநாட்டு மோகம், பொருளாதார தேவை கருதி தனது காதலி இன்னொருவரை திருமணம் செய்ய சம்மதம் கொடுக்கும் போது காதலன்/ஆண் என்ற தகுதியை, சுயமரியாதையை இழந்து விடுகிறான், அந்த பெண் கூட இப்படியான ஒருவனை காதலிப்பதை விட தன்னை திருமணம் செய்தவருடன் உண்மையாக வாழ்ந்துவிட்டு போனால் அந்த பெண் புத்திசாலி”
இங்கே அந்த சில பெண்களில் மட்டுமல்ல அந்த சில ஆண்களிலும் தவறு உள்ளது.
ஒருவர் எப்படி வாழ வேண்டும் என்பது அவரவர் விருப்பம். ஆனால் இந்த மாதிரி விடயங்களில்  பெரும்பலான  சமயங்களில் பெண்களை குற்றம் கூறுவது எனக்கு சரியாக தோன்றவில்லை.

மேலும், புலத்தில் இப்பொழுது “ வெளிநாட்டு மோகம்” குறைந்து வருவதை நான் காண்கிறேன். முன்பு போல் அல்லாது இப்பொழுது இங்கேயுள்ள வாழ்க்கை முறைகள், பிரச்சனைகள், நடக்கும் சம்பவங்களை அறியும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை உள்ளூரிலேயே திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்கள், அதே போல ஆண் பெண் இருவருமே ஓரளவிற்கு சம்பாதிக்க கூடியதாக இருப்பதால், வெளிநாட்டு திருமணங்களை அதிகம் விரும்புவதில்லை.

அதே போல, படித்த கல்விக்கு ஏற்ற வேலைவாய்ப்பு இல்லாவிடிலோ, பொருளாதார முன்னேற்றம் கருதி புலம்பெயர விரும்புவர்கள் கூட, தம்பதிகளாகவே இங்கே வருகிறார்கள், முன்னேறுகிறார்கள், தமது குடும்பம், சமூகத்தையும் முன்னேற்றுகிறார்கள்.

நான் முன்பே கூறியது போல, ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும், அதைப்பற்றிய அவர்களது கண்ணோட்டமும் வித்தியாசமாகவே இருக்கும். 

நன்றி..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.