• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
சண்டமாருதன்

நித்தியாந்தாவின் தனிநாடு

Recommended Posts

ஐ.நா அதிகாரிகளுக்கும், அமெரிக்க சட்ட நிறுவனத்திற்கும் நித்தியானந்தா மற்றும் ஆசாரம் பாபுவின் ஆன்மீக காணொளிகளை, செய்திகளை கொடுத்தால் அவர்களும் கன்னித் தீவில் செட்டிலாகி 'மோட்சம்' கிட்ட  வாய்ப்புள்ளது.

கருமம், கருமம்..!!

காலங்காத்தாலை இந்த *** பற்றிய செய்தியை படிக்க வேண்டியதா போச்சுது.

'சுகன்' சாமிகளே, ஒங்களுக்கு வேற செய்தியே கிட்டலையா..? vil-modeste.gif

இங்கே தனிநாடு உருவாக, லட்சக் கணக்கில் மக்கள் மரணிக்க, இவருக்கு எப்படி இவ்வளவு எளிதாக உதவிகளும் அனுசரனைகளும் கிட்டுகின்றன..? என்பது வேடிக்கையாக உள்ளது.

 

Edited by மோகன்
நீக்கப்பட்டுள்ளது -மோகன்
 • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ராசவன்னியன் said:

ஐ.நா அதிகாரிகளுக்கும், அமெரிக்க சட்ட நிறுவனத்திற்கும் நித்தியானந்தா மற்றும் ஆசாரம் பாபுவின் ஆன்மீக காணொளிகளை, செய்திகளை கொடுத்தால் அவர்களும் கன்னித் தீவில் செட்டிலாகி 'மோட்சம்' கிட்ட  வாய்ப்புள்ளது.

கருமம், கருமம்..!!

காலங்காத்தாலை இந்த நாதாரி பற்றிய செய்தியை படிக்க வேண்டியதா போச்சுது.

'சுகன்' சாமிகளே, ஒங்களுக்கு வேற செய்தியே கிட்டலையா..? vil-modeste.gif

இங்கே தனிநாடு உருவாக, லட்சக் கணக்கில் மக்கள் மரணிக்க, இவருக்கு எப்படி இவ்வளவு எளிதாக உதவிகளும் அனுசரனைகளும் கிட்டுகின்றன..? என்பது வேடிக்கையாக உள்ளது.

 

இது ஒரு வழமையான சாமியர் சேட்டை என்றுதான் தோன்றும் ஆனால் நித்தியின் திட்டமிடல்கள் நகர்வுகள் எல்லாம் வேறு லெவலில் உள்ளது.  அதன் பின்னரே மத்திய அரசும் உளவுத்துறையும் நித்தி சிறுமிகளை கடத்தி வைத்திருப்பதாகவும் மீட்டு தரும்படியும் சிறுமிகளின் பெற்றோரை கொண்டு வழக்குகளை பதிவுசெய்கின்றது. சிலரை கைது செய்கின்றது. சர்வதேச காவல்துறையை நாடுகின்றது. தற்போது நித்தியை சர்வதேச அளவில் குற்றவாளியாக்கவேண்டிய கட்டாயம் இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. 

Share this post


Link to post
Share on other sites

நீ வேற லெவல் தலைவா!

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

நித்தியானந்த மதம் உலகெங்கும் பரவட்டும் 

Share this post


Link to post
Share on other sites

லூசு என்று நினைத்து லேசா விட்டாங்கள், இவங்கள் திட்டங்களை  லாஸ் ஆக்கி அது பாஸ் ஆகிட்டுது......!  🤔

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
Just now, suvy said:

லூசு என்று நினைத்து லேசா விட்டாங்கள், இவங்கள் திட்டங்களை  லாஸ் ஆக்கி அது பாஸ் ஆகிட்டுது......!  🤔

'சுவி'' என நினைத்தேன், இவர் ராஜேந்தரின் 'கவி' ஆகிவிட்டாரே..! 😎

Share this post


Link to post
Share on other sites

யாருக்காவது உவரின்ர புது விலாசம் தெரியுமோ  ? 

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, Maharajah said:

யாருக்காவது உவரின்ர புது விலாசம் தெரியுமோ  ? 

சீடராகப்போறியளோ?!

Share this post


Link to post
Share on other sites
47 minutes ago, ஏராளன் said:

சீடராகப்போறியளோ?!

ஒரே ஒரு கேள்வி கேட்டாகோணும் நித்தியிடம். 

ரஞ்சி இப்போ எங்கே  ???? 

எனக்கொரு உண்மை தெரிஞ்சக்கோணும் சாமி, எனக்கொரு உண்மை தெரிஞ்சாக்கோணும். 

 

31 minutes ago, வல்வை சகாறா said:

பேசாம நித்தியோட சேர்ந்தா என்ன?

நான் ஏறக்குறைய சேர்ந்தமாதிரி    😇😇💃💃💃💃💃😇😇

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, வல்வை சகாறா said:

பேசாம நித்தியோட சேர்ந்தா என்ன?

அவர்கள் தேடும் இரண்டு விடயம்
1)வயது
2)பணம்.

Share this post


Link to post
Share on other sites
2 minutes ago, ஈழப்பிரியன் said:

அவர்கள் தேடும் இரண்டு விடயம்
1)வயது
2)பணம்.

உங்களை நிராகரிச்ச கோபத்தில் சொல்லேல்லைத்தானே🤔

Share this post


Link to post
Share on other sites
6 minutes ago, வல்வை சகாறா said:

உங்களை நிராகரிச்ச கோபத்தில் சொல்லேல்லைத்தானே🤔

யாருங்கப்பு 'உலகம் சுற்றும் வாலிபரை' நிராகரிச்சது..?

வஞ்சி ரஞ்சியா..? 😋

Share this post


Link to post
Share on other sites

நித்தி ஒரு தனித்தீவை வாங்கி தேசம் அமைத்தால்.. நிச்சயம் அதனை வரவேற்க வேண்டும்.

அங்கு தமிழை முதன்மைப் பேச்சு மொழியாகவும்.. ஆங்கிலத்தை தொடர்பாடல் மொழியாகவும் பிரகடனம் செய்தால் இன்னும் சிறப்பு.

நித்தி.. ஒரு திருவண்ணாமலை தமிழன். அதற்கும் மேல்.. சைவத் தமிழனான சிவனின் பக்தன். 

நித்தியை குருவாகவோ.. கடவுளின் மறுவடிவமாகவோ.. சாமியாராகவோ.. நாங்கள் பார்க்கவில்லை. ஆனால்.. தமிழனாகப் பார்த்தால்.. தமிழனுக்கு என்று ஒரு சின்ன தீவாவது சொந்த நாடாகி இருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே.

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, Maharajah said:

யாருக்காவது உவரின்ர புது விலாசம் தெரியுமோ  ? 

விலாசம் எல்லாம் தரேலாது. நான் இப்ப இஞ்சை நிண்டு சிஷ்யைகளுக்கு பணிவிடைகள் செய்து கொண்டு நிக்கிறன். என்ன அலுவல் எண்டு சொன்னால் நான் சுவாமிகளிடம் கேட்டுச்சொல்லுறன் 😎

Share this post


Link to post
Share on other sites
5 minutes ago, குமாரசாமி said:

விலாசம் எல்லாம் தரேலாது. நான் இப்ப இஞ்சை நிண்டு சிஷ்யைகளுக்கு பணிவிடைகள் செய்து கொண்டு நிக்கிறன். என்ன அலுவல் எண்டு சொன்னால் நான் சுவாமிகளிடம் கேட்டுச்சொல்லுறன் 😎

உங்களை வழிக்கு கொண்டுவர நான் என்ன செய்யணும் (ஆ) சாமி  ??? 😇

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, Maharajah said:

ஒரே ஒரு கேள்வி கேட்டாகோணும் நித்தியிடம். 

ரஞ்சி இப்போ எங்கே  ???? 

எனக்கொரு உண்மை தெரிஞ்சக்கோணும் சாமி, எனக்கொரு உண்மை தெரிஞ்சாக்கோணும். 

Bildergebnis für ரஞ்சிதா

ரஞ்சிதாவுக்கு ... நித்தியின் கைலாஷ் என்ற தனிநாட்டில், மகாராணியாக  முடி சூட்டியாச்சு. :grin:

Share this post


Link to post
Share on other sites
21 minutes ago, Maharajah said:

உங்களை வழிக்கு கொண்டுவர நான் என்ன செய்யணும் (ஆ) சாமி  ??? 😇

27 minutes ago, குமாரசாமி said:

என்ன அலுவல் எண்டு சொன்னால் நான் சுவாமிகளிடம் கேட்டுச்சொல்லுறன் 😎

 

 

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, nedukkalapoovan said:

நித்தி ஒரு தனித்தீவை வாங்கி தேசம் அமைத்தால்.. நிச்சயம் அதனை வரவேற்க வேண்டும்.

அங்கு தமிழை முதன்மைப் பேச்சு மொழியாகவும்.. ஆங்கிலத்தை தொடர்பாடல் மொழியாகவும் பிரகடனம் செய்தால் இன்னும் சிறப்பு.

நித்தி.. ஒரு திருவண்ணாமலை தமிழன். அதற்கும் மேல்.. சைவத் தமிழனான சிவனின் பக்தன். 

நித்தியை குருவாகவோ.. கடவுளின் மறுவடிவமாகவோ.. சாமியாராகவோ.. நாங்கள் பார்க்கவில்லை. ஆனால்.. தமிழனாகப் பார்த்தால்.. தமிழனுக்கு என்று ஒரு சின்ன தீவாவது சொந்த நாடாகி இருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே.

நித்தி தமிழனாக இருக்கலலாம் ஆனால் சீஷ்யகள் பலவேறு மொழி / இனம் சார்ந்தவர்கள். ஒரு தீவை வாங்கினாலும் அடிபாடு நிச்சயம் உண்டு.

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, nedukkalapoovan said:

நித்தி ஒரு தனித்தீவை வாங்கி தேசம் அமைத்தால்.. நிச்சயம் அதனை வரவேற்க வேண்டும்.

அங்கு தமிழை முதன்மைப் பேச்சு மொழியாகவும்.. ஆங்கிலத்தை தொடர்பாடல் மொழியாகவும் பிரகடனம் செய்தால் இன்னும் சிறப்பு.

நித்தி.. ஒரு திருவண்ணாமலை தமிழன். அதற்கும் மேல்.. சைவத் தமிழனான சிவனின் பக்தன். 

நித்தியை குருவாகவோ.. கடவுளின் மறுவடிவமாகவோ.. சாமியாராகவோ.. நாங்கள் பார்க்கவில்லை. ஆனால்.. தமிழனாகப் பார்த்தால்.. தமிழனுக்கு என்று ஒரு சின்ன தீவாவது சொந்த நாடாகி இருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே.

யாழ்ப்பாணம் பெரிய தெருவில் கடை வைத்திருந்த தமிழர் ஒருவர் கரிபியன் தீவொன்றை வாங்கி அங்கு வாழ்கிறார்.

இத்தாலியில் கைவிடப்பட்ட பேய்த்தீவு மலிவாக விற்பனைக்கு வந்திருக்கிறது.

மொரிஷியஸ், சீஷெல்ஸ் நாடுகளிலும் தீவுகள் மலிவாக கிடைக்கும். அங்கு வணிக தேவைக்கு மட்டுமே தீவுகள் விற்கப்படுகின்றன.

நெடுக்கர், நீங்களும் வாங்கலாம். 😀 சீஷ்யைகளை பின்னே வரவைப்பதுதான் கடினமானது. வழி தெரிந்தால் சொல்லுங்கள், நானும் வருகிறேன். 😍

Share this post


Link to post
Share on other sites

அந்தாள்தான் ஒரு கோப்பை பாலுக்கு பத்து மாடும் ஒரு தீவும் வாங்கி அல்லாடுது என்றால் நீங்கள் வேற ......!   👍

 • Haha 2

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, குமாரசாமி said:

 

 

கடவுள் இடம் கொடுத்தாலும் பூசாரி வழிவிடான். 

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

நித்தியானந்தாவின் 'கைலாச நாட்டு'க்கு செல்ல கீழேயுள்ள இணையத்தை பார்க்கவும். 😋

குடியுரிமை கூட விண்ணப்பிக்கலாமாம்..!

https://kailaasa.org/

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இறுதி தேர்தல். ஐ.தே,க. வின் கதையையும் (இரண்டாக பிரித்து) மொட்டு முடிக்கலாம்.  
  • கார்வண்ணனுக்கு நன்றிகள். உண்மைகளை தெளிவாக கூறி உள்ளீர்கள். 1. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவருக்கு அறவிடப்படும், வரிகள் மற்றும் கட்டணங்களை விடவும் அதிகமான தொகை, பலாலி விமான நிலையத்தின் ஊடாக பயணம் செய்யும் பயணிகளிடம் அறவிடப்படுகிறது 2. பலாலி விமான நிலையம் ஒழுங்காக செயற்படத் தொடங்கினால், வடக்கிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை பயன்படுத்துவோர் தொகை குறையும்.   ..... இந்த நிலை நீடிக்கும் வரை பலாலி விமான நிலையம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியாது
  • ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்  43 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர், அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம். இறுதிக்கட்டப் போரின் போது லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையிலான 58 ஆவது டிவிசன் படையினர், நீதிக்குப் புறம்பான படுகொலைகள், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கிடைத்த நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்திருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கிறது. வெளிநாடுகளில் உள்ள அதிகாரிகள் மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்களில் ஈடுபட்டதற்கான நம்பகமான ஆதாரங்களை அமெரிக்க இராஜாங்க செயலர் கொண்டிருந்தால், அந்த நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அமெரிக்காவுக்குள் நுழையத் தகுதியற்றவர்கள் என்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின்  வெளிநாட்டு செயற்பாடுகளுடன்  தொடர்புடைய 7031 (சி) இலக்க சட்டத்தில் கூறப்பட்டுள்ளதன் அடிப்படையிலேயே, இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.   ஐ.நா மற்றும் பிற அமைப்புகளால் ஆவணப்படுத்தப்பட்ட லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள்,  தீவிரமானவை, நம்பகமானவை என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இலங்கை அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிவிப்பு வெளியானவுடன், வெளிவிவகார அமைச்சு வெளியிட்டிருந்த அறிக்கையில்  இருந்தே அதனைப் புரிந்து கொள்ள முடிகிறது. இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில், கூறப்பட்டிருப்பதைக் கொண்டே, இவ்வாறானதொரு அறிவிப்பை அதுவும் தற்போதைய தருணத்தில் இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருக்கவில்லை என்று கருத முடிகிறது. லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, கடந்த ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டவுடனேயே அமெரிக்கா அதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. கொழும்பில் அமெரிக்க தூதரகமும் வொஷிங்டனில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தன. அத்துடன், இந்த நியமனத்தினால் இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை செய்திருந்தது. அந்த அறிவிப்பை அப்போதைய அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.  இது புதிய அரசாங்கத்துக்கு ஊக்கமளிப்பதாகவே இருந்தது. அதனால் தான், கடந்த டிசம்பர் 31ஆம் திகதியுடன், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக இருந்த அட்மிரல் ரவீந்திர விஜேகுணவரத்ன ஓய்வுபெற்றதை அடுத்து, பதில் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை, நியமித்திருந்தார் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ. இந்த நியமனத்தின் மூலம், அவர், ஐ.நா.வுக்கும் ஒரு செய்தியை வழங்கியிருந்தார். ஐ.நா அல்லது சர்வதேச நெருக்குதல்களுக்கு அடிபணியப் போவதில்லை என்பதே அந்த செய்தி. அந்த செய்தியை அமெரிக்கா புரிந்து கொண்ட பின்னரே, இலங்கையின் இராணுவத் தளபதி மற்றும் குடும்பத்தினருக்கு தமது நாட்டுக்குள் நுழைவதற்குத் தடை விதித்திருக்கிறது. இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், பாதுகாப்பு மறுசீரமைப்பு போன்றவற்றுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக கூறியுள்ள அமெரிக்கா, போர்க்குற்றச்சாட்டுகள் விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் கூறியிருக்கிறது. இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பின்னர் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வந்திருப்பதை கேள்விக்குட்படுத்தியிருக்கிறது அரசாங்கம். இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதும் அமெரிக்கா எதிர்ப்பை வெளிப்படுத்தியது. ஆனாலும், அதனை இலங்கை அரசாங்கம் கருத்தில் கொள்ளாமல் தான், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவை பாதுகாப்பு அதிகாரிகளின் பதில் பிரதானியாக நியமித்திருந்தார் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ. அந்த நியமனம், இடம்பெற்று 45 நாட்களுக்குள் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறது அமெரிக்கா. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வு எதிர்வரும் 24ஆம் திகதி தொடங்கப் போகிறது. இந்த அமர்வில் இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது. ஏற்கனவே இலங்கைக்கு வழங்கிய கால அவகாசம் முடிவடையும் நிலையில், இலங்கை அரசாங்கம் ஜெனீவாவில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்தநிலையில், தற்போதைய அரசாங்கம் காலக்கெடுக்களுக்கு அமைய செயற்படத் தயாரில்லை என்று கடந்த வியாழக்கிழமை, ஐ.நா பாதுகாப்புச் சபையில், அமைதியைக் கட்டியெழுப்புதல் மற்றும் நிலையான அமைதி மோதல்கள் மற்றும் மோதல்களுக்குப் பிந்திய நிலைமைகளில், நிலைமாறுகால நீதி என்ற தலைப்பில் நடந்த திறந்த அமர்வில்,  உரையாற்றிய இலங்கைப் பிரதிநிதி சேனுகா செனிவிரத்ன அறிவித்திருக்கிறார். எனவே, ஜெனீவாவில் இம்முறை இலங்கை அரசாங்கம், பொறுப்புக்கூறல் கடப்பாடுகளை ஏற்றுச் செயற்படும் என்று கருத இடமில்லை. இவ்வாறான நிலையில், இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அல்லது இம்முறை கூட்டத்தொடர் விடயத்தில் கடும்போக்கு நீடிக்கும் என்ற செய்தியைக் கொடுக்க முயன்றிருக்கலாம் அமெரிக்கா. இலங்கையில் போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் அல்லது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்கள் என்ற அடிப்படையில், அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டவர்கள் பலர். இராணுவ அதிகாரிகள் மாத்திரமன்றி, விடுதலைப் புலிகளின் முன்னாள் பிரமுகர்கள் பலரும் கூட, அவ்வாறான தடையில் இருக்கின்றனர். ஆனாலும், இலங்கையைச் சேர்ந்த ஒருவர் பற்றி, இவ்வாறானதொரு பகிரங்க தடை அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டிருப்பது இது தான் முதல் முறை. ஏற்கனவே தற்போதைய பாதுகாப்புச் செயலர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, ஜெனரல் ஜெகத் ஜயசூரிய உள்ளிட்ட பல இராணுவ அதிகாரிகளுக்கு, அமெரிக்கா வீசா வழங்க மறுத்திருந்தது. பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் கூட அமெரிக்காவுக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இவர்கள் அனைவருக்கும் வீசா மறுக்கப்பட்டதே தவிர, அது பற்றி அமெரிக்கா பகிரங்கப்படுத்தவில்லை. தனிப்பட்ட நபர்களின் வீசா கோரிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்துவதற்கு சட்டத்தில் இடமில்லை என்றே அமெரிக்க அதிகாரிகள் கூறியிருந்தனர். அத்துடன், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இராணுவ அதிகாரிகளுக்கு மாத்திரம் வீசா மறுக்கப்பட்டதே தவிர, அவர்களின் குடும்பத்தினருக்கு மறுக்கப்படவில்லை. ஆனால், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு பகிரங்கமாகவே தடை அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதுடன், அவரது நேரடி குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். இது, இலங்கையில் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களை அணுகுகின்ற விடயத்தில் அமெரிக்கா இன்னுமொரு படி முன்னே சென்று முடிவெடுத்திருக்கிறது என்பதையே காட்டுகிறது. அதனால் தான், “பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நீதிக்காக பல வருடங்கள் போராடியதன் விளைவால் இடம்பெற்ற சிறியதொரு முன்னேற்றமாக இதை நாம் காண்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியிருக்கிறது. ஆனால், இது இலங்கைக்கு எதிரான கடுமையானதொரு நடவடிக்கை அல்ல. இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான முடிவுகளையும் அமெரிக்கா எடுக்கவில்லை. இராணுவத் தளபதிக்கு எதிராக, அவரது குடும்பத்தினருக்கு எதிராகவே அமெரிக்கா முடிவுகளை எடுத்திருக்கிறது. அதேவேளை இலங்கையுடன் உறவுகள், ஒத்துழைப்புகள் தொடருவதற்கான சமிக்ஞைகளையும் காட்டியிருக்கிறது. அமெரிக்காவின் இந்த முடிவை, இலங்கை அரசாங்கம் கடுமையாக எதிர்த்திருக்கிறது. இது குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள தகவல், ஆதாரங்களை சரிபார்த்து இந்த முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியிருக்கிறது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று வழக்கம்போலவே தட்டிக்கழிக்க முனைந்திருப்பதுடன், ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு இராணுவத் தளபதியை நியமிக்கும் உரிமையை வெளிநாடு ஒன்று கேள்விக்குட்படுத்தும் விடயமாகவே பார்ப்பதாகவும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் மேற்கொள்ளப்படும் குறுக்கீடு என்றே கருதுவதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த காலத்திலிருந்தே, புறச் சக்திகளின் தலையீடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் நாட்டின் இறைமை, சுதந்திரம் போன்ற விடயங்களில் யாருக்கும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்றும் கூறிவந்திருக்கிறது. அதனையே தான் வெளிவிவகார அமைச்சின் அறிக்கை சற்று வேறுபட்ட மொழிநடையில் வெளிப்படுத்தியிருக்கிறது. லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் விதிக்கப்பட்டுள்ள தடை, ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள சூழலில், இந்த விவகாரத்தை இன்னும் பரபரப்புக்குள்ளாக்கியிருக்கிறது. சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பாக அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் விடயத்தில் அமெரிக்கா ஒருபோதும் தடுமாறாது என்று கூறியுள்ளதானது, நீதியை எதிர்பார்த்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய தெம்பைக் கொடுப்பதாகவும் அமைந்திருக்கிறது.   https://www.virakesari.lk/article/75823
  • திடீர் வேகத்துடன் பணிகள் முடிக்கப்பட்டு, அவசர அவசரமாக திறக்கப்பட்ட யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த போதும், வெற்றிகரமானதாக செயற்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. கடந்த ஒக்டோபர் மாதம் திறந்து வைக்கப்பட்ட போதும், நவம்பர் 11ஆம் திகதியே யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான பயணிகள் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. எயார் இந்தியாவின் இணை நிறுவனமான எலையன்ஸ் எயார் நிறுவனம் வாரத்தில் மூன்று நாட்களுக்கு மாத்திரம் சேவைகளை நடத்துகிறது. 72 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ஏரிஆர் விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்ற போதும், இப்போது இந்த சேவையில் பயணிகளின் எண்ணிக்கை திருப்திகரமானதாக இல்லை என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. விமான நிலையம் திறக்கப்படுவதற்கு முன்னதாக, பலாலி விமான நிலையத்துக்கு இந்தியாவிலிருந்து சேவையை நடத்துவதற்கு இன்டிகோ, பிட்ஸ் எயார் உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியிடப்பட்டன. கடந்த ஆண்டின் பின் அரையாண்டுப் பகுதியில் பலாலி விமான நிலையம் மற்றும் அதற்கான சேவைகளை நடத்துவதற்கு ஆர்வம் கொண்டுள்ள நிறுவனங்கள் குறித்து அடிக்கடி பரபரப்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. எலையன்ஸ் எயார் நிறுவனம் சேவையை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், பிட்ஸ் எயார் நிறுவனம் சென்னைக்கு வாடகை விமான சேவையை நடத்துவதற்கு பரீட்சார்த்த பயணம் ஒன்றை நடத்தியிருந்தது. அதற்குப் பின்னர், அந்த நிறுவனமோ, இன்டிகோ நிறுவனமோ அல்லது வேறு எந்த நிறுவனங்களோ, விமான சேவைகளை ஆரம்பிக்க ஆர்வம் காட்டவில்லை. பலாலி விமான நிலையம் திறக்கப்படுவதற்கு முன்னர், இந்தியாவிலிருந்து சேவைகளை ஆரம்பிக்க ஆர்வம் வெளியிட்ட நிறுவனங்கள், இப்போது ஒதுங்கிக் கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. பலாலி விமான நிலையத்தின் ஊடாக எதிர்பார்க்கப்பட்டளவு பயணிகள் போக்குவரத்து இடம்பெறாமை அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். தற்போது 72 ஆசனங்களைக் கொண்ட விமானம் ஒன்று, வாரத்தில் மூன்று நாட்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகிறது . இதில், சராசரியாக 50 இற்கு குறைவான பயணிகளே பயணம் செய்வதாக கூறப்படுகிறது. சென்னை – பலாலி விமான சேவை தொடங்கப்பட்ட முதல் மாத நிறைவில், 857 பயணிகள், பலாலி விமான நிலையம் வழியாக பயணம் மேற்கொண்டிருந்தனர் என்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியிருந்தன. முதல் மாத காலத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு 472 பேர் பயணித்தனர் என்றும், சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு 385 பேர் பயணம் மேற்கொண்டனர் என்றும் கூறப்பட்டது. எனினும், அதற்குப் பின்னர் இந்த எண்ணிக்கையில் பெரிய அதிகரிப்பு ஏற்படவில்லை. பயணிகள் போக்குவரத்தில் எதிர்பார்க்கப்பட்டளவுக்கு வளர்ச்சி இல்லாதமைக்கு அரசாங்கத்தின் மீதும், சேவையை நடத்தும் நிறுவனம் மீதும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. எலையன்ஸ் எயார் நிறுவனம் சென்னை – பலாலி இடையிலான போக்குவரத்துக்கு அறவிடும் கட்டணம், கொழும்பு –- சென்னை இடையிலான பயணத்துக்கு ஏனைய நிறுவனங்கள் அறவிடும் கட்டணத்தை விட மிக அதிகமாக உள்ளது. பலாலி -– சென்னை விமானக் கட்டணம் இந்தளவு அதிகரித்திருப்பதற்கு, விமான நிறுவனத்தின் கட்டணம் மாத்திரம் காரணமல்ல. இலங்கை அரசாங்கத்தின் வரிகள் மற்றும் கட்டணங்களுக்காக மாத்திரம், சுமார் 11,500 ரூபா அறவிடப்படுகிறது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவருக்கு அறவிடப்படும், வரிகள் மற்றும் கட்டணங்களை விடவும் அதிகமான தொகை, பலாலி விமான நிலையத்தின் ஊடாக பயணம் செய்யும் பயணிகளிடம் அறவிடப்படுகிறது . இந்தளவு வரிகள் மற்றும் கட்டணங்களை அறவிடும் அரசாங்கம், பலாலி விமான நிலையத்தில் பயணிகளுக்கான முழு வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத பலாலி விமான நிலையத்திலிருந்து பயணம் செய்பவர்களிடம், பயணச்சீட்டுக் கட்டணத்தில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் வரிகளாகவும், கட்டணங்களாகவும் அரசாங்கத்தினால் அறவிடப்படுகிறது. பலாலி விமான நிலையம் கடந்த அரசாங்கத்தின் பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் அவசரமாக திறக்கப்பட்டது. எந்த அடிப்படை வசதிகளும் செய்யாமல் திறக்கப்பட்டதாக அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த தற்போதைய ஆளும்கட்சியினர் குற்றம்சாட்டினர். அரசியல் நலன் கருதியாவது, அப்போதைய அரசாங்கம் பலாலி விமான நிலையத்தை திறந்திருந்தது. அந்த வாய்ப்பு நழுவ விடப்பட்டிருக்குமானால், பலாலி சர்வதேச விமான நிலையம் திறக்கப்படாமலேயே போயிருக்கலாம். ஏனென்றால், தற்போதைய அரசாங்கத்துக்கு பலாலி சர்வதேச விமான நிலையத்தின் மீது அக்கறையில்லை. அதனால், ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், பலாலி விமான நிலையம் அதனை சார்ந்த அபிவிருத்திகள் குறித்த செய்திகள் எல்லாமே அருகிப் போய் விட்டன. மத்தள விமான நிலையத்தை மீண்டும் செயற்பட வைப்பதில் காட்டும் அக்கறையில் நூறில் ஒரு பங்கேனும் பலாலியின் மீது தற்போதைய அரசாங்கம் காண்பிக்கவில்லை.. இதற்கு அரசியல் காரணிகள் மாத்திரமன்றி, இன ரீதியான காரணிகளும், பொருளாதாரக் காரணிகளும் கூட இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. பலாலி விமான நிலையம் ஒழுங்காக செயற்படத் தொடங்கினால், வடக்கிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை பயன்படுத்துவோர் தொகை குறையும். அது, தென்பகுதியின் பொருளாதார வாய்ப்புகள், வளர்ச்சி என்பனவற்றை பாதிக்கும். எனவே, சிங்கள மேலாதிக்கச் சிந்தனை கொண்ட ஒரு அரசாங்கம், பலாலி போன்ற பிராந்திய விமான நிலையங்களின் வளர்ச்சியை அனுமதிக்க வாய்ப்பில்லை. தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த சில வாரங்களுக்குப் பின்னர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பரபரப்பாக ஊடகங்களுக்கு ஒரு தகவலை வெளியிட்டார். பலாலி விமான சேவையை ஆரம்பித்த முன்னைய அரசாங்கம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அறவிடப்படும், கட்டணங்கள், வரிகளுக்கு இணையாகவே பலாலியிலும் அறவிடுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு அநியாயம் செய்திருக்கிறது. கூட்டமைப்பும் இதற்கு துணைபோயிருக்கிறது என்று அவர் குற்றம்சாட்டியிருந்தார். பலாலி விமான நிலைய கட்டணங்கள், வரிகள் குறித்து மீளாய்வு செய்வது தொடர்பாக அமைச்சரவையில் பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தார். புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து 3 மாதங்களாகி விட்ட போதும், எந்த மீளாய்வும் நடக்கவில்லை. வரிகளைக் குறைக்கவோ, விமானக் கட்டணத்தைக் குறைக்கவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அதிகளவு கட்டணங்களை செலுத்தியே பயணங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. தனி நபர்கள், நீண்ட பயணத்தை தவிர்க்க விரும்புபவர்கள், அவசர பயணங்களை மேற்கொள்பவர்கள் மாத்திரமே, இவ்வாறு அதிக கட்டணங்களை செலுத்த முன்வருவார்கள். வடக்கிலிருந்து குடும்பங்களாக, குழுக்களாக இந்தியா செல்பவர்களே அதிகம். அவர்களுக்கு ஏற்றதாக, அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யக் கூடியதாக, பலாலி விமான நிலையம் ஊடான சேவைகள் அமையவில்லை. இந்தியாவுக்கு சென்று திரும்புகிறவர்கள் அங்கிருந்து பொருட்களை கொண்டு வரவே விரும்புவார்கள். தற்போது சேவையை நடத்தும் எலையன்ஸ் எயார் நிறுவனம், 15 கிலோ பொதிகளை மாத்திரமே அனுமதிக்கிறது. கொழும்பு – சென்னை இடையே ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில், பயணம் செய்பவர்கள், 30 கிலோ பொதிகளை கொண்டு வர முடியும். அதில் பாதியைத் தான் பலாலி வழியாக கொண்டு வர முடிகிறது. மேலதிக ஒவ்வொரு கிலோவுக்கும் 20 டொலர்கள் வரை செலுத்த வேண்டியிருக்கும். அதிகளவு பொதிகளைக் கொண்டு வர முடியாமல் இருப்பது, வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்க முடியாமல் இருப்பதற்கு முக்கியமான காரணியாக உள்ளது. கனடா, அவுஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளிலிருந்து சென்னை வழியாக பலாலிக்கு பயணங்களை மேற்கொள்ளக் கூடிய வசதிகள் உள்ளன. அவ்வாறு வருபவர்கள் அதிகளவு பொதிகளை கொண்டு வர விரும்புவார்கள். அதற்கு ஏற்றதாக எலையன்ஸ் எயர் நிறுவனத்தின் கட்டணங்கள் அமைந்திருக்கவில்லை. இதனால் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை அதிகளவில் ஈர்க்க முடியாத நிலையில் பலாலி விமான நிலையம் இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் ஒரு சர்வதேச விமான நிலையம் இருக்கிறது என்ற பெயர் தான் உள்ளதே தவிர, அதனை அபிவிருத்தி செய்து இன்னமும் வருமானமும் போக்குவரத்தும் அதிகம் கொண்டதாக மாற்றுவதற்கு எந்த ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலை நீடிக்கும் வரை பலாலி விமான நிலையம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியாது. - கார்வண்ணன் https://www.virakesari.lk/article/75835