• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
  • ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்     ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர் இன்று (24)  ஆரம்பமாகவுள்ளது. ஜெனீவாவில் இடம்பெறும் இந்தக் கூட்டத்தொடர் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை குறித்த விவாதம் நடைபெறவுள்ளது. அத்துடன், வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் 26 ஆம் திகதி உரை நிகழ்த்தவுள்ளார். எதிர்வரும் புதன்கிழமை நடைபெறும் பேரவையின் உயர்நிலை அமர்வில் உரையாற்றவுள்ள அமைச்சர் தினேஷ் குணவர்தன அரசாங்கத்தின் தீர்மானத்தை உறுப்பு நாடுகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மனத-உரமகள-பரவயன-43ஆவத-கடடததடர-இனற-ஆரமபம/150-245985  
    • ஹக்கீமின் கருத்தை நிராகரித்த ஜே.வி.பி.   by : Jeyachandran Vithushan பொதுத் தேர்தலில் போட்டியிட கூட்டணி அமைப்பது குறித்து இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அண்மையில் வெளியிட்ட கருத்தினை மக்கள் விடுதலை முன்னணி மறுத்துள்ளது. கண்டியில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் கூட்டத்தில் கருத்து தெரிவித்த ரவூப் ஹக்கீம், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிட ஜே.வி.பி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புகளுடன் இணைந்து கூட்டணி அமைப்பது குறித்து கட்சி பரிசீலித்து வருவதாக அறிவித்தார். அத்தோடு இந்த விடயம் தொடர்பாக தற்போது விவாதங்கள் இடம்பெற்று வருவதாகவும் ஹக்கீம் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், ஜே.வி.பி. இன்று (திங்கட்கிழமை) வெளியிட்ட உத்தியோகப்பூர்வ அறிக்கையில், இந்த அறிவிப்பை முற்றாக மறுத்துள்ளதுடன் இது வெறுமனே ரவூப் ஹக்கீமின் தனிப்பட்ட கருத்து என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரங்கள் தொடர்பாக எம்முடனோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்புடனோ அல்லது சிவில் அமைப்புக்களுடனானோ எந்தவொரு பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது. இதேவேளை தேர்தலில் போட்டியிட கூட்டணி அமைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் கீழ் மட்டுமே கட்சி தேர்தலை சந்திக்கும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. http://athavannews.com/jvp-refutes-slmc-statement-on-alliance/
    • அரசாங்கத்தின் இயலாமையை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் – கயந்த!     by : Jeyachandran Vithushan நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கத்தின் இயலாமை பற்றி பொதுமக்கள் கேள்வி எழுப்பிவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், வெங்காயத்தின் விலை உயர்வுக்கு தற்போது அரசாங்கத்தில் இருப்பவர்களே காரணம் என குற்றம் சாட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த மூன்று மாதங்களில் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளது. அரசாங்கம் வரி குறைப்பை நடைமுறைப்படுத்தியிருந்தாலும், அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்து ஆதரவளிக்கும். தேர்தலின்போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கோருவது அரசாங்கத்தின் இயலாமையையே வெளிப்படுத்துகின்றது. மேலும் எதிர்க்கட்சியின் நடவடிக்கைகள் காரணமாக, பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்க முடியவில்லை என்று அரசாங்கம் இப்போது கூறிக்கொண்டாலும், தற்போதைய அரசாங்கத்தின் நோக்கங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திருக்கிறார்கள்” என்றும் கயந்த கருணாதிலக குறிப்பிட்டார். http://athavannews.com/அரசாங்கத்தின்-இயலாமையை-ம/
    • பிரேரணைகளில் இருந்து தன்னிச்சையாக விலக முடியாது பெரும்பான்மை நாடுகளின் ஆதரவு வேண்டும் என்கின்றார் வாசு!     by : Jeyachandran Vithushan மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருக்கும் அனைத்து பிரேரணைகளில் இருந்தும் தனித்து நீங்க முடியாது என்றும் பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடனே விலக முடியும் என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். குறித்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், 2015ஆம் ஆண்டு ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவந்த 30/1 பிரேரணையை கடந்த அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர தன்னிச்சையாக கைச்சாத்தினார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அவ்வாறான பிரேரணைக்கு கைச்சாத்திடுவதாக இருந்தால் அந்த விடயம் தொடர்பாக அமைச்சரவைக்கு தெரிவித்து அனுமதியை பெற்றுக்கொள்வதுடன் நாடாளுமன்றத்திற்கும் அறிவித்திருக்க வேண்டும். ஆனால் அமைச்சரவைக்கும் தெரிவியாது, ஜனாதிபதிக்கும் அறிவிக்காமலே மங்கள சமரவீர இந்த பிரேரணையில் கைச்சாத்திட்டனர். அத்துடன் கடந்த ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையின்போதும் குறித்த பிரேரணையின் 40/1க்கும் கடந்த அரசாங்கம் கைச்சாத்திட்டிருக்கின்றது. ஆனால் எமக்கு எதிராக யுத்தக்குற்றம் தெரிவித்து ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு பிரேரணை கொண்டுவந்த அமெரிக்கா, மனித உரிமை பேரவையில் இருந்து விலகியுள்ளது. அவ்வாறான நிலையில் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கிவந்த நாங்கள் பிரேரணையில் இருந்து நீங்குவதால் எந்த பிரச்சினையும் இல்லை. இதில் கைச்சாத்திட்ட மங்கள சமரவீரவுக்கு பிரச்சினை ஏற்படலாம். ஏனெனில் அவர் இலங்கை அரசாங்கத்தின் அனுமதி இல்லாமலே அதில் கைச்சாத்திட்டிருக்கின்றார். அவர்களின் நடவடிக்கை தேசத்துரோக செயலாகும்” என கூறினார். http://athavannews.com/பிரேரணைகளில்-இருந்து-தன்/
    • கட்சியில் இருந்து விலகிச்சென்றவர்களுக்கு ரவூப் ஹக்கீம் முக்கிய அறிவிப்பு           by : Yuganthini ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிச்சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைந்து  கொள்ளுமாறு  கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அழைப்பு விடுத்துள்ளார். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 29 ஆவது பேராளர் மாநாடு, கண்டி-  பொல்கொல்ல பகுதியில் இடம்பெற்றது. இதன்போது குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ரவூப் ஹக்கீம் மேலும் கூறியுள்ளதாவது, “சரியாகவோ, பிழையாகவோ, தடுமாற்றத்தின் காரணமாகவோ அல்லது ஏனைய காரணங்களினாலோ கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு மீண்டும் இணைவதற்கு அழைப்பு விடுக்கின்றேன். இந்த இயக்கத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்ற நாள்முதல் எவரையும் வலுக்கட்டாயமாக கட்சியிலிருந்து விலக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எந்ததொரு செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. எமது முன்னாள் செயலாளர் நாயகம் அஸன் அலியை ஞாபகப்படுத்துகின்றேன். இந்தக் கட்சியில் இருந்து அவர் விலகியிருப்பது குறித்து கவலைப்படுபவர் என்னை விட வேறு எவரும் இருக்க முடியாது” என குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/கட்சியில்-இருந்து-விலகி/