• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
பெருமாள்

இரண்டரை கட்சிகளுடனான கூட்டமைப்பு மக்கள் ஆணையை மீறி விட்டது; விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணி உருவாகிறது: சுரேஷ் அதிரடி அறிவிப்பு!

Recommended Posts

DSC05860-1-696x391.jpg

இரண்டரை கட்சிகளை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் ஆணைகளை புறந்தள்ளி செயற்பட்டு அரசாங்கத்தை பாதுகாக்கும் கட்சியாகவே உள்ளது. காலத்தின் தேவையுணர்ந்து முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் புதிய மாற்று அணியை கொண்ட கூட்டு விரைவில் உருவாகும் என தெரிவித்துள்ளார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

டவவுனியாவில் உள்ள தனியார் விடுதியொன்றில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்தியகுழு இன்று (1) கூடியது. அதன் நிறைவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவா இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான அரசியல் நிலவரங்கள் கள நிலவரங்கள் பற்றி வடக்கு கிழக்கு மாகாணங்களின் பல மாவட்டங்களில் இருந்து வந்த எங்களது மத்தியகுழு உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துக்களை பரிமாறியிருந்தனர்.

இதன்போது எதிர்வரும் மாகாணசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் முகம்கொடுப்பதற்கு எவ்வாறான ஏற்பாடுகளை செய்வது என்பது தொடர்பாகவும் நாங்கள் பல கருத்துப்பரிமாற்றங்களை செய்திருந்தோம்.

இதனூடாக தமிழர்களுக்கு மாற்றுத் தலைமையொன்று தேவை என்பதனை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அந்தவகையில் மாற்று அணிக்கான செயற்பாட்டை நாங்கள் முன்னின்று செயற்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பலவீனமான நிலையில், அதிலும் இரண்டரைக் கட்சிகளுடன் அங்கம் வகிக்கும் நிலையில் உள்ளது. ஆகவே அவர்களுடைய தவறுகள் அவர்களுக்கு தமிழ் மக்கள் கொடுத்த ஆணைகளை கைவிட்டு செயற்பட்டமை, அரசாங்கத்தினை பாதுகாப்பதே அவர்களது நோக்கமாகியது இவை எல்லாவற்றையும் நாங்கள் கவனத்தில் எடுத்து மாற்று தலைமை அவசியம் என்பது எங்கள் எல்லோராலும் உணரப்பட்டுள்ளது.

நாங்கள் ஒட்டுமொத்தமான தமிழ் கட்சிகளின் ஐக்கியத்திற்கு எதிரானவர்கள் அல்ல. திம்பு பேச்சுவார்த்தையில் இருந்து தமிழ் மக்கள் தமிழ் கட்சிகள் ஐக்கியப்பட வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருந்திருக்கின்றோம். அதற்காக முன்னின்று பணியாற்றியிருக்கின்றோம். தற்போதும் அந்த விடயங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் கிடையாது. தமிழ் மக்களின் உரிமைகள் வெல்லப்படுவதற்கு ஓரணியில் நிற்க வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை.

ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்பது அதற்கு உகந்த ஸ்தாபனமாக தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. அதுவே பரவலான குற்றச்சாட்டாகவும் உள்ளது. 15 வருடங்களுக்கு மேற்பட்ட அந்த ஸ்தாபனத்திற்கான யாப்போ அதற்கான வடிவமோ அதற்கான உயர்மட்ட குழுக்களோ இல்லாமல் ஓரிருவர் மாத்திரம் முடிவெடுக்கும் அமைப்பாகவும் தேர்தலுக்கு மாத்திரம் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக ஐக்கியத்தினைப்பற்றி பேசுகின்ற நிலைமைதான் தோன்றியிருக்கின்றது.

ஆகவே இவற்றினை எல்லாம் கவனத்தில் எடுத்து ஒரு மாற்றுத்தலைமை தேவை என்பதனை இன்றைய எமது மத்திய குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பான நடவடிக்கைகளை எமது கட்சி முன்னெடுத்துத செல்லும்.

இந்தவகையில் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள அரசியல் நிலைமைகள் என்பது வித்தியாசப்படுகின்றன. கிழக்கிலே ஏனைய தேசிய இனங்களால் அவர்களுடன் சேர்ந்து வாழ்வதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு அவர்கள் முகம் கொடுத்து வருகின்றனர். கடந்த காலங்களில் மிக மோசமாக தமிழர் தரப்பு பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே கிழக்கு மாகாணத்தில் மாகாணசபையில் தமிழ் தலைமைத்துவம் தேவை என்பதிலும் கட்சி மிக உறுதியாக உள்ளது.

ஆகவே தேர்தல் வருகின்றபோது அதற்கேற்றவகையில் எமது வியூகங்கள் அமையும். தமிழர்களது நலன்கள் பாதிக்கப்படகூடாது தமிழர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் இருந்து எமது முடிவுகள் எட்டப்பட வேண்டும் என்ற கருத்தும் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே எமது முடிவுகள் அனைத்தும் வடக்கிலோ கிழக்கிலோ தமிழ் மக்களின் அரசியல் இருப்பு பொருளாதார அபிவிருத்தி அனைத்தையும் மையமாக வைத்ததாக இருக்கும்.

செய்தியாளர்- கிழக்கு மாகாணத்தில் தமிழ் தலைமைத்துவம் மாகாணசபையில் தேவை என்பதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் செல்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுமா?

அந்த நேரத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்னவிதமான முடிவுகளை எடுக்கப்போகின்றது என்பதில்தான் தங்கியிருக்கின்றது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு வாயளவில் தற்போது ஐக்கியம் பற்றி பேசுகின்றார்கள். சுமந்திரன் சில நாட்களுக்கு முன்பாக ஐக்கியத்தினைப்பற்றி பேசியிருந்தார். ஆனால் ஐக்கியத்தினை உருவாக்குவதற்கு ஏதுவான நிலை கூட்டமைப்புக்குள் இல்லை. அவ்வாறான சூழ்நிலையில் ஐக்கியம் பற்றி பேசப்படுகின்றபோது அதற்கு தகுந்ததாக அந்த அமைப்பு மாற்றப்பட வேண்டும் என்பதே உண்மை. ஆகவே அவை அனைத்தும் மாற்றப்பட்டு வருகின்றபோது நிச்சயமாக அதனைப்பற்றி ஆய்வு செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனை ஒருபுறம், அபிவிருத்தி மறுபுறம் என்பதாக உள்ளது. தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக தமிழ் தேசிய எல்லைக்குள் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஒருமித்த கருத்து இருக்கின்றது. அவற்றை அடைவதற்கான வியூகங்களை அமைப்பதும் வேலைத்திட்டங்களை உருவாக்குவதும் அவற்றை செயல்முறைப்படுத்துவதும் நாங்கள் கூட்டாக எடுக்க வேண்டிய முடிவுகள். நிச்சயமாக அந்த முடிவுகள் கூட்டாக எடுக்கப்படும்.

அபிவிருத்தி என்று வருகின்றபோது வடக்கு மாகாண அபிவிருத்தி கிழக்கு மாகாண அபிவிருத்தி என இருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் புறந்தள்ளப்பட்டிருக்கின்றார்கள். அதுபோல வடக்கிலும் போரால் பாதிக்கப்பட்டுள்ளவர்களும் அபிவிருத்தி கிடைக்காமல் உள்ளனர்.

செய்தியாளர்- ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடன் கலந்துரையாடுவீர்களா?

கோட்டாபய ராஜபக்ச என்பவர்தான் இந்த நாட்டின் ஜனாதிபதி. ஆகவே அந்த ஜனாதிபதியுடன் பேசக்கூடாது என யாரும் சொன்னால் அது சரியான கருத்தாக இருக்க முடியாது. அது அபிவிருத்தியாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி. அவர் இந்தியாவுக்கு சென்றபோது மோடி இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவரிடம்தான் சொல்லியிருக்கின்றார். அவர் தீர்ப்பாரா இல்லையா என்பது வேறு பிரச்சனை. ஆகவே அவருடன் பேச வேண்டிய தேவை சகலருக்கும் இருக்கின்றது. நாங்கள் இலங்கை பிரஜை என்ற அடிப்படையில் தமிழ் மக்களை பிரதிநிதிப்டுத்துபவர்கள் என்ற வகையில் அவருடன் பேச வேண்டி ஏற்பட்டால் பேசத்தான் வேண்டும். பேசுவது தவறு என்றும் கருதவில்லை.

செய்தியாளர்- முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் ஒரு கூட்டு உருவாகுமா? அதனை ஏற்பீர்களா?

நிச்சயமாக அவ்வறான கூட்டு மிக விரைவில் உருவாகும் எனவும் தெரிவித்தார்.

http://www.pagetamil.com/91073/

Share this post


Link to post
Share on other sites

சபாஷ் சரியான போட்டி. 

உவங்களை வச்சே வெல்லப்போவது யார்  என்கின்ற போட்டியை நாங்கள் நடத்தலாம். 

Share this post


Link to post
Share on other sites

ஐங்கரநேசன் போன்ற பாத்தீனியம் செடிகளை உள்வாங்கினால் கதை கந்தலாகப் போய்விடும்
பாத்தீனியம் செடிகளை புடுங்கி எறிவது தான் நல்லது.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

சம்பந்தர் வந்தாலும் ஒன்றுதான், விக்கி வந்தாலும் ஒன்றுதான். இங்கு யாரும் ஒன்றயுமே புடுங்க போவதில்லை. மண்டையன் குழுவும் இத்தனை வருடங்கள் TNA  இல் இருந்தர்கள்தானே. என்னத்தை புடுங்கினார்கள். இப்போது விக்கியுடன் புடுங்கப்போகிறார்களாம்.

இந்த திம்பு கோட்ப்பாடு, ஈழ கோட்ப்பாடு, சமஷடி கோட்ப்பாடு athu, இது எண்டு எதுக்குடா அப்பாவி மக்களை ஏமாத்துகிறீர்கள். 50 ,60 வருடமாக  இதைத்தாண்ட  சொல்றீங்க . கடைசியா   முள்ளி  வாய்க்காலில் கொண்டுபோய் விடடீங்க. இப்போ எங்கட கொண்டு   போய் விடப்போறிங்க. கடைசியா அபிவிருத்தியும் இல்ல அரசியல் தீர்வும் இல்ல.  

ஒன்று மட்டும் நிச்சயம். உலகம் இருக்கும் வரையும் இதே பேச்சு , இதே கொள்கை. தமிழன் இருக்கிறதயும் இழக்காமல் இருந்தாலே பெரிய காரியம்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • 30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல – சுதர்ஷனி! 30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்காகவே இராணுவ தளபதி சவேந்திர சில்வா யுத்தவெற்றிக்கு பாரிய பங்களிப்பு வழங்கினார். 30 வருட கால யுத்தம் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது அல்ல. உலகில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலை புலிகள் அமைப்பினை முற்றாக இல்லாதொழிக்க வேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்திற்கு காணப்பட்டது இது சாதாரண விடயம். ஒரு நாட்டின் இறையான்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அமைப்புக்களுக்கு எந்த நாடுகளும் ஆதரவு வழங்காது இதில் இலங்கை மாத்திரம் விதிவிலக்கல்ல. விடுதலை புலிகள் அமைப்பின் நோக்கங்களை கருத்திற் கொண்டு அமெரிக்கா இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கு பயணத்தடையினை விதித்துள்ளது. பல மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அமெரிக்காவின் மீது சுமத்தப்பட்டள்ளன. ஆகவே எமது நாடு தொடர்பாக தீர்மானங்களை தன்னிச்சையாக எடுக்கும் அதிகாரம் அமெரிக்காவிற்கு கிடையாது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஏதும் இதுவரையில் ஆதார பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் எவ்வித முன்னறிவித்தல், பேச்சுவார்ததைகளுமின்றி அமெரிக்க பயணத்தடை விதித்துள்ளமை கடுமையாக கண்டனத்திற்குரியவை. இந்த நெருக்கடியை அரசாங்கம் வெற்றிக் கொள்ளும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/30-வருட-கால-யுத்தம்-தமிழ்-மக/
  • திருப்பூர் சாலையில் கோர விபத்து – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு அவினாசி அருகே இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி பயணித்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும் கோவையிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் கற்கள் ஏற்றிக்கொண்டு பயணித்த, கண்டெய்னர் லொரியும் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், பேருந்து முற்றிலும் சிதைவடைந்ததுடன், பேருந்தில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி உடல் உறுப்புகளை இழந்தனர் என்பதோடு, பலர் உயிரிழந்தனர். விபத்து குறித்து அதிகாரிகளுக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைப் பலனளிக்காது, மேலும் 8 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது. மேலும் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/திருப்பூர்-சாலையில்-கோர/
  • சென்னையில் இருவருக்கு கொரோனா அறிகுறி சென்னை வந்த கப்பலில் சீனர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கத்திற்கான அறிகுறி இருந்ததால் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை துறைமுக கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 18ஆம் திகதி வந்த எம்.வி. மேக்னட் கப்பலில் 19 சீனர்கள் இருந்ததாகவும் அவர்களிடம் துறைமுக மருத்துவ குழுவினர் நடத்திய சோதனையில் 2 பேருக்கு லேசான காய்ச்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் கப்பலிலேயே 2 பேரும் தனிமைபடுத்தப்பட்டு, கடற்பகுதியில் இருந்து சிறிது தொலைவில் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை குறித்த இருவரிடமும் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு கிண்டி கிங்ஸ் நிறுவனத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பியிருப்பதாகவும் அதன் முடிவு இன்று கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் சென்னை துறைமுக கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://athavannews.com/சென்னையில்-இருவருக்கு-கொ/
  • நிர்பயா குற்றவாளி.... தற்கொலை முயற்சி? நிர்பயா குற்றவாளிகளின் சந்தேகநபர்களில் ஒருவரான வினய் சர்மா, திகார் சிறையில் சுவற்றில் தலையை மோதிக்கொண்டதால் காயம் ஏற்பட்டுள்ளது. நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3ஆம் திகதி தூக்கு தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டனையை இரத்து செய்யவும் தள்ளிப் போடவும் குற்றவாளிகள் பலமுறை முயற்சித்தும் அவை அனைத்தும் தோல்வியடைந்தன. இந்நிலையில் திகார் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்போது வினய் சர்மா, சுவரில் தனது தலையை மோதியதால், காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, சிறை அதிகாரிகள் உடனடியாக அவரை வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதற்கு முன்னர் சிறையில் உள்ள கிரிலில் தனது கையை கொடுத்து, எலும்பு முறிவு ஏற்படுத்த முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் பெப்ரவரி 16ஆம் திகதி நடந்ததாகவும் இது குறித்து வினய்யின் தாய் கேட்டபோதும் அவர் அதை கண்டுகொள்ளவில்லை எனவும் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான புதிய திகதி அறிவிக்கப்பட்டது முதல் அவரது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வினய் சர்மாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் தெரிவித்தார். ஆனால் சிறை மூத்த அதிகாரிகள் கூறுகையில், “சமீபத்தில் நடத்தப்பட்ட மனநிலை சோதனையில் 4 பேரும் நலமாக உள்ளனர். ஆனால் புதிய திகதி அறிவிக்கப்பட்டது முதல் குற்றவாளிகள் 4 பேரும் சிறை காவலர்களிடம் கடுமையாக நடந்து வருகின்றனர். அவர்களின் செயற்பாடுகளில் மாற்றம் வந்துள்ளது. மற்றவர்களுடன் பேசுவதை குறைத்துக்கொண்டுள்ளனர். உணவு சாப்பிட மறுத்து வருவதால், அவர்களை சமாதானப்படுத்தி சாப்பிட வைத்து வருகிறோம். குற்றவாளிகள் 4 பேரும் தற்கொலை முயற்சியில் ஈடுபடக்கூடாது என்பதற்காக அவர்களின் அறையில் சி.சி.ரி.வி கமரா பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளனர். பெற்றோர்களை மட்டும் சந்திக்க அனுமதிக்கப்படுவதாகவும் சில சமயங்களில் அவர்களை சந்திக்கவும் குற்றவாளிகள் மறுத்து விடுவதாகவும் சிறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் மூர்க்கதனமாக நடந்துகொள்வதும் தங்களை காயப்படுத்திகொள்வதும் வழமையானதே என கூறப்படுகிறது. ஒருவேளை குற்றவாளிகளுக்கு காயம் ஏற்பட்டாலோ, எடை குறைந்தாலோ அவர்கள் உடல்நலம் தேறும் வரை தண்டனை நிறைவேற்றுவது தள்ளி போகும் என சிறைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வினய் சர்மா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா, முரட்டுத்தனமாக தன்னை தானே காயப்படுத்திக்கொண்டாரா அல்லது தண்டனையை தள்ளிப்போடுவதற்காக இவ்வாறு செய்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். http://athavannews.com/நிர்பயா-குற்றவாளி-தற்கொல/