கிருபன்

ஈழப் பிரச்சனை குறித்து சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்

Recommended Posts

சீமான் ஈழப் பிரச்சனை குறித்து.. தமிழினப் பேரழிவு நிகழ்ந்த 2009 ப் பின் தான் பேசி வருகிறார். ஆனால் யோகேஸ்வரன் போன்றவர்கள்.. சொந்த இனத்தின் அழிவைக் கூட பேச முடியாமல்.. பேசா மடைந்தைகளாக இருந்து எதை சாதித்தார்கள்.

அதிலும் சீமான்.. பேசி.. ஒரு இனத்தின் துயரை சொந்தவர்களாவது சந்ததிக்கும் உணரச் செய்வது எவ்வளவோ மேல். அது தான் முக்கியம்.. ஒரு இனத்தின் வரலாற்று இருப்புக்கு. 

யோகேஸ்வரன் போன்றோர்.. தமிழ் இனத்தின் இருப்பை தான் காக்க முடியவில்லை.. குறைந்தது.. அந்த இனம்.. இலங்கைத் தீவில் வாழ்ந்தது என்ற வரலாற்றையாவது வாழ விடட்டும். 

Share this post

Link to post
Share on other sites

நான் நினைக்கின்றேன்  யோகேஸ்வரனை  சீமான்  தொட்டிருக்கணும்

அல்லது அந்தப்பயம் வந்திருக்கணும்

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த யோகேஸ்வரன் ஒரு இலங்கை வெங்காயம் அங்கால் சீமான் ஒரு இந்திய தமிழ் நாட்டு வெங்காயம் 

முதலில் அங்குள்ள அகதி சனத்து ஏதாவதை செய்துட்டு பீலா விடட்டும் , வைகோ , ஏன் ஈழம் பற்றி கூவுற அனைத்தும்  வெங்காயங்களும்  

உண்மை, இருவரும் வெங்காயங்கள் என்பது உண்மை. ஆனாலும் ஒரு வித்தியாசம் உள்ளது.

யோகேஸ்வரன் இரண்டு தடவைகளும் மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்தலில் வென்று பாராளுமன்றம் சென்றவர். அவருடைய கட்சியும் அடுத்த தேர்தலிலும் வடக்கு கிழக்கில் அதிகப்படியான வாக்குகளை பெறக் கூடிய கட்சி. ஆனால் சீமான்? ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமான அளவுக்கு கட்டுக்காசை இழக்கும் கட்சியை சேர்ந்தவர். பெரும்பாலான மக்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டவர். அடுத்தடுத்த அனைத்து தேர்தகளிலும் கூட தோற்கடிக்கப்படப் போகின்றவர்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
26 minutes ago, நிழலி said:

60வ‌ருட‌ க‌ட்சிக‌ளுட‌ன் 9வ‌ருட‌ க‌ட்சியை ஒப்பிட்டு பார்ப்ப‌து உங்க‌ளின் அறியாமை , ஊட‌க‌ ப‌ல‌ம்  ப‌ண‌ ப‌ல‌ம் இல்லாம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறார் அண்ண‌ன்சீமான் அதே பாராட்ட‌ த‌க்க‌து , காசை குடுத்தா ஓட்டை போடும் ம‌க்க‌ள்  ம‌த்தியில் , ஓட்டுக்கு காசு குடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறார் /

சீமான் என்ற‌ ஒரு ம‌னித‌ர் இல்லை என்றால் இப்ப‌ இருக்கிற‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு பிர‌பாக‌ர‌னையும் தெரிந்து இருக்காது எம் போராட்ட‌த்தையும் தெரிந்து இருக்காது , த‌ல‌ பான்ஸ் த‌றுத‌ல‌ பான்ஸ் என்ற‌ நிலையில் இருந்து இருப்பின‌ம்  , 

த‌மிழின‌த்தில் இப்போது உள்ள‌ சூழ் நிலையில் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை விட‌ அண்ண‌ன் சீமான் எவ‌ள‌வோ மேல் , எம‌க்காக‌ போராடுகிறோம் என்று வெளிக்கிட்ட‌ ஆட்க‌ள் க‌ட‌சியில் முக‌ மூடிய‌ க‌ழ‌ட்டிட்டு சிங்க‌ள‌வ‌னின் எலும்புதுண்டுக்கு விஸ்வாஸ்ச‌மாக‌ இருக்கின‌ம் , 

எங்க‌டைய‌ளே இப்ப‌டி இருக்கும் போது , இர‌வு ப‌க‌ல் என்று பாராம‌ல் க‌டினாமாக‌ இன‌த்துக்காக‌ உழைக்கும் அண்ண‌ன் சீமானை குறை சொல்ல‌ எங்க‌ளில் ஒருவ‌ருக்கும் த‌குதி இல்லை , 

த‌மிழ் நாட்டு அர‌சிய‌லில் வைக்கோவின் பொய் பித்த‌லாட்ட‌ம் க‌ருணாநிதியின் பொய் பித்த‌லாட்டாம் எல்லாம் எம் க‌ண்ணால் க‌ண்டு இருக்கிறோம் , 

ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ உண்மையா இர‌த்த‌ க‌ண்ணீர் வ‌டிச்ச‌து என்றால் அது எம்ஜீஆர்  ,

இப்போது உள்ள‌ நிலையில் மாவீர‌ர் நாள் தொட்டு எம்ம‌வ‌ர்க‌ளில் நினைவு நாளை நாம் த‌மிழ‌ர் க‌ட்சியை த‌விற‌ வேர‌ க‌ட்சிகார‌ர்க‌ள் செய்வ‌து இல்லை ,

உத‌வி செய்யாட்டியும் உவ‌த்திர‌ம் செய்ய‌ வேண்டாம் ,

ந‌ன்றி 

Share this post

Link to post
Share on other sites
30 minutes ago, நிழலி said:

தவறான கணிப்பு

காலம்  பதில்  சொல்லட்டும்

Share this post

Link to post
Share on other sites
Just now, விசுகு said:

தவறான கணிப்பு

காலம்  பதில்  சொல்லட்டும்

இதுக்கு தான் நான் மேல‌ த‌குந்த‌ விள‌க்க‌ம் குடுத்து இருக்கிறேன் புரியும் ப‌டி 

Share this post

Link to post
Share on other sites
22 minutes ago, பையன்26 said:

சீமான் என்பவர் உலகிற்கு தெரியமுன்னரே பல ஆயிரக்கணக்கான காயம்ப்பட்ட போராளிகளுக்கு மருத்துவம் செய்து அனுப்பி வைத்ததில் இருந்து டீசல் பெற்றோல் போன்றவற்றை கூட அனுப்பி வைத்த ஏராளமான தமிழக அன்பு உள்ளங்கள் தமிழகத்தில் இருந்தன என்பதை மறக்க வேண்டாம்.

கட்சி வேறுபாடுகள்  இல்லாமல் பல கட்சி, பல அமைப்புகள் என பரந்து பட்ட தமிழக மக்கள் மத்தியில் எம் போராட்டம் மீது இருந்த ஆதரவு அனுதாபம் அனைத்தையும் வெறும் ஒரு கட்சி ஆக்களிடம் மட்டுமே என்று குறுக்கி முன்னர் இருந்ததை விட பல மடங்கு ஆதரவை இழக்க வைத்த ஒருவர் எவரென்றால் அது சீமான் தான்.

இந்திய அவலப் படைகள் மீதான தாக்குதல்களுக்கு பின்பும் கூட  பார்ப்பனீயத்தை தூக்கிப் பிடிப்பவர்கள் மத்தியிம் மட்டுமே ஈழம் தொடர்பான எதிர்ப்புணர்வு இருந்தது.  திமுக, அதிமுக, திக என்று மட்டுமல்லாமல் பரந்து பட்டு இருந்த ஆதரவுத்தளத்தை மாற்றி ஈழ மக்கள் தொடர்பான கடும் எதிர்ப்புணர்வை தமிழக மக்களின் எல்லா தளங்களிலும் பரப்பிய ஒரு கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டுமே.

ஆனால் உங்களை போன்றவர்களுக்கு இது ஒரு போதும் புரியப் போவதில்லை. கைகள் வலிக்க வலிக்க அவருக்காக நியாயம் கதைப்பீர்கள். பக்கம் பக்கமாக எழுதி தள்ளுவீர்கள்.

ஒரு சந்தோசம் என்னவெனில் தாயக மக்கள் ஒரு மருந்துக்கும் கூட சீமானை நம்புவதும் கிடையாது, மதிப்பதும் கிடையாது.

நன்றி

  • Like 1
  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
19 minutes ago, பையன்26 said:

இதுக்கு தான் நான் மேல‌ த‌குந்த‌ விள‌க்க‌ம் குடுத்து இருக்கிறேன் புரியும் ப‌டி 

இதற்கு பேர் விளக்கம் இல்லை முட்டுக்கொடுப்பு 😄

Share this post

Link to post
Share on other sites
20 minutes ago, விசுகு said:

தவறான கணிப்பு

காலம்  பதில்  சொல்லட்டும்

நீங்கள் மேற்கோள் காட்டியிருப்பது வடக்கு கிழக்கில் எந்தக் கட்சி அதிகப்படியாக வாக்குகள்  பெறும் என்பது தொடர்பான நான் எழுதியதை. கண்டிப்பாக இது தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிகழும். விக்கியர் (தேர்தலில் நின்றால் அல்லது அவர் கட்சி ஆரம்பித்தால்), கஜேந்திரகுமார் போன்றவர்கள் மிகச் சிறிதளவு வாக்குகள் மட்டுமே பெறுவர். மிஞ்சிப் போனால் வடக்கில் ஒரு ஆசனம் மட்டும் கிடைக்கும்.

Share this post

Link to post
Share on other sites
11 minutes ago, அபராஜிதன் said:

இதற்கு பேர் விளக்கம் இல்லை முட்டுக்கொடுப்பு 😄

இது முட்டு கொடுப்பு இல்லை , ச‌ட்டிக்கை இருக்கிற‌து தான் அக‌ப்பேக்கை வ‌ரும் 😁 ,

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites

சீமான், தமிழருக்காக இயங்குவதை யாரும் தடுக்கவில்லை, சந்தோசமே!

ஆனால் புனைவுகளோடும், ஏகபோக உரிமைகளுடன் நானே இங்கு தக்கவன், மற்ற யாருமில்லை என்ற போக்கில் செல்வது சரியன்று.

Share this post

Link to post
Share on other sites
29 minutes ago, நிழலி said:

சீமான் என்பவர் உலகிற்கு தெரியமுன்னரே பல ஆயிரக்கணக்கான காயம்ப்பட்ட போராளிகளுக்கு மருத்துவம் செய்து அனுப்பி வைத்ததில் இருந்து டீசல் பெற்றோல் போன்றவற்றை கூட அனுப்பி வைத்த ஏராளமான தமிழக அன்பு உள்ளங்கள் தமிழகத்தில் இருந்தன என்பதை மறக்க வேண்டாம்.

கட்சி வேறுபாடுகள்  இல்லாமல் பல கட்சி, பல அமைப்புகள் என பரந்து பட்ட தமிழக மக்கள் மத்தியில் எம் போராட்டம் மீது இருந்த ஆதரவு அனுதாபம் அனைத்தையும் வெறும் ஒரு கட்சி ஆக்களிடம் மட்டுமே என்று குறுக்கி முன்னர் இருந்ததை விட பல மடங்கு ஆதரவை இழக்க வைத்த ஒருவர் எவரென்றால் அது சீமான் தான்.

இந்திய அவலப் படைகள் மீதான தாக்குதல்களுக்கு பின்பும் கூட  பார்ப்பனீயத்தை தூக்கிப் பிடிப்பவர்கள் மத்தியிம் மட்டுமே ஈழம் தொடர்பான எதிர்ப்புணர்வு இருந்தது.  திமுக, அதிமுக, திக என்று மட்டுமல்லாமல் பரந்து பட்டு இருந்த ஆதரவுத்தளத்தை மாற்றி ஈழ மக்கள் தொடர்பான கடும் எதிர்ப்புணர்வை தமிழக மக்களின் எல்லா தளங்களிலும் பரப்பிய ஒரு கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டுமே.

ஆனால் உங்களை போன்றவர்களுக்கு இது ஒரு போதும் புரியப் போவதில்லை. கைகள் வலிக்க வலிக்க அவருக்காக நியாயம் கதைப்பீர்கள். பக்கம் பக்கமாக எழுதி தள்ளுவீர்கள்.

ஒரு சந்தோசம் என்னவெனில் தாயக மக்கள் ஒரு மருந்துக்கும் கூட சீமானை நம்புவதும் கிடையாது, மதிப்பதும் கிடையாது.

நன்றி

உங்க‌ளுக்கு இது தெரிந்து இருக்குமோ தெரியாதோ இதை சொல்லி காட்ட‌ விரும்புகிறேன்  , 

அண்ண‌ன் சீமான் க‌ட்சி ஆர‌ம்பிக்க‌ முத‌ல் குளத்தூர் மணி தொட்டு ப‌ல‌ருட‌ன் ஒன்னா ப‌ய‌ணிக்க‌ தான் விரும்பினார் , ஏன் குள‌த்தூர் ம‌ணி ஜ‌யாவிட‌ம் அண்ண‌ன் சீமான் சொன்ன‌து , நீங்க‌ள் முன்னுக்கு நில்லுங்கோ நான் உங்க‌ளுக்கு பின்னுக்கு நிக்கிறேன் என்று , அதுக்கு குள‌த்தூர் ம‌ணி ம‌றுத்து விட்டார் ,

ஈழ‌ விடைய‌த்தில் வைக்கோவுக்கு ஈழ‌த்தை விட‌ திராவிட‌ம் தான் முக்கிய‌ம்  , ஈழ‌ விடைய‌த்தில் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் வைக்கோ போட்ட‌து  எல்லாம் வேச‌ம் , 

அண்ண‌ன் வேல் முருக‌ன்  அண்ண‌ன் சீமான் இவ‌ர்க‌ள் இருவ‌ரும் , எல்லாரையும் ஒன்னா இணைக்க‌ முய‌ற்சி எடுத்தார்க‌ள் அது கை கூட‌ வில்லை , 

அண்ண‌ன் சீமானால் தான் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ஈழ‌ம் ச‌ம்ம‌ந்த‌ம்மா வாய் திற‌க்கின‌ம் இல்லை இணையின‌ம் இல்லை என்றால்  இது ந‌ம்பும் ப‌டியாய் இல்லை ,

இப்போது உள்ள‌ சூழ் நிலையில் எதிரி கூட‌ கை குலுக்க‌ த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் அடுத்த‌ நிமிட‌மே த‌யார் , அதுக்கு உதார‌ண‌ம் ( வைக்கோ ம‌ற்றும் திருமாள‌வ‌ன் ) 

திராவிட‌ ஈழ‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளுக்கு ஈழ‌த்தை விட‌ திராவிட‌ம் தான் முக்கிய‌ம் அதை முத‌ல் புரிந்து கொள்ளுங்கோ ,

நீங்க‌ள் எழுதும் போது உங்க‌ளுக்கு கைவ‌லிச்சா ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கும் கை வ‌லிக்குது என்று அர்த்த‌மா 😂😁 /
ந‌ன்றி 

Share this post

Link to post
Share on other sites
5 minutes ago, நிழலி said:

நீங்கள் மேற்கோள் காட்டியிருப்பது வடக்கு கிழக்கில் எந்தக் கட்சி அதிகப்படியாக வாக்குகள்  பெறும் என்பது தொடர்பான நான் எழுதியதை. கண்டிப்பாக இது தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிகழும். விக்கியர் (தேர்தலில் நின்றால் அல்லது அவர் கட்சி ஆரம்பித்தால்), கஜேந்திரகுமார் போன்றவர்கள் மிகச் சிறிதளவு வாக்குகள் மட்டுமே பெறுவர். மிஞ்சிப் போனால் வடக்கில் ஒரு ஆசனம் மட்டும் கிடைக்கும்.

இல்லை  ராசா

நான்  மேலே  குறிப்பிட்டது

யோகேஸ்வரன் என்பவர் தனிப்பட்ட நபரோ

அல்லது  தனியொரு  கட்சியினைச்சார்ந்து  வென்றவரோ  அல்ல

பல  கட்சிகளின்  கூட்டமைப்பு

அதுவும்  புலிகளின் ஆசி  பெற்ற  கட்சியைச்சேர்ந்தவர்

இந்த  தகுதிகளையெல்லாம்  இவர்கள் இழந்து வருவதும்

அடுத்த  கட்டங்களை நோக்கி  மக்கள் தயாராவதும்  தாயக  நிலமை

இதனை நீங்களும் அறிவீர்கள்

ஆனால் சீமான்  அப்படியல்ல..

அதனையே  குறிப்பிட்டேன்

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, Kavi arunasalam said:

DAD51648-04-AE-43-D3-A50-B-F8388-B2-E5-E

எங்கட கருத்துக்கள "மூனா" விடம் கொஞ்சம் கவனமாத்தான் கதைக்கவேணும்........ மனுசன் கார்டூன் படம்போட்டு காவடி ஆட வைத்துவிடுவார்...... யப்பா நான் இந்தப்பக்கம் இனி தலை வச்சும் படுக்கமாட்டன்.

ZestySarcasticFlatcoatretriever.webp

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
40 minutes ago, வல்வை சகாறா said:

எங்கட கருத்துக்கள "மூனா" விடம் கொஞ்சம் கவனமாத்தான் கதைக்கவேணும்........ மனுசன் கார்டூன் படம்போட்டு காவடி ஆட வைத்துவிடுவார்...... யப்பா நான் இந்தப்பக்கம் இனி தலை வச்சும் படுக்கமாட்டன்.

அடுத்த படம் உங்களுடையது தான்.

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, நிழலி said:

சீமான் என்பவர் உலகிற்கு தெரியமுன்னரே பல ஆயிரக்கணக்கான காயம்ப்பட்ட போராளிகளுக்கு மருத்துவம் செய்து அனுப்பி வைத்ததில் இருந்து டீசல் பெற்றோல் போன்றவற்றை கூட அனுப்பி வைத்த ஏராளமான தமிழக அன்பு உள்ளங்கள் தமிழகத்தில் இருந்தன என்பதை மறக்க வேண்டாம்.

கட்சி வேறுபாடுகள்  இல்லாமல் பல கட்சி, பல அமைப்புகள் என பரந்து பட்ட தமிழக மக்கள் மத்தியில் எம் போராட்டம் மீது இருந்த ஆதரவு அனுதாபம் அனைத்தையும் வெறும் ஒரு கட்சி ஆக்களிடம் மட்டுமே என்று குறுக்கி முன்னர் இருந்ததை விட பல மடங்கு ஆதரவை இழக்க வைத்த ஒருவர் எவரென்றால் அது சீமான் தான்.

இந்திய அவலப் படைகள் மீதான தாக்குதல்களுக்கு பின்பும் கூட  பார்ப்பனீயத்தை தூக்கிப் பிடிப்பவர்கள் மத்தியிம் மட்டுமே ஈழம் தொடர்பான எதிர்ப்புணர்வு இருந்தது.  திமுக, அதிமுக, திக என்று மட்டுமல்லாமல் பரந்து பட்டு இருந்த ஆதரவுத்தளத்தை மாற்றி ஈழ மக்கள் தொடர்பான கடும் எதிர்ப்புணர்வை தமிழக மக்களின் எல்லா தளங்களிலும் பரப்பிய ஒரு கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டுமே.

ஆனால் உங்களை போன்றவர்களுக்கு இது ஒரு போதும் புரியப் போவதில்லை. கைகள் வலிக்க வலிக்க அவருக்காக நியாயம் கதைப்பீர்கள். பக்கம் பக்கமாக எழுதி தள்ளுவீர்கள்.

ஒரு சந்தோசம் என்னவெனில் தாயக மக்கள் ஒரு மருந்துக்கும் கூட சீமானை நம்புவதும் கிடையாது, மதிப்பதும் கிடையாது.

நன்றி

இந்திய மத்திய அரசு இயக்கங்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்து வளர்த்தது இலங்கையில் குழப்பங்களை ஏற்படுத்தி தனக்கு சாதகமாக தலையீடு செய்வதற்காக அன்றி தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத்தர இல்லை. தமிழகத்தில் இருந்த ஆதரவு மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை உடைத்தெறிந்து கொடுக்கப்பட்ட ஆதரவு கிடையாது. மேலும் பத்மநாபா கொலை ராஜீவ் கொலைகளுக்கு பிறகு ஆங்காங்கே இருந்த ஆதரவு என்பது எந்த ஒரு அரசியல் நன்மையையும் ஈழத்தமிழருக்கு ஏற்படுத்துமளவுக்கு வலிமையாக இருந்தது கிடையாது. இறுதியுத்தத்தில் மக்கள் அழிவை எவ்வகையிலும் தமிக அரசியலால் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தடுக்க வக்கற்ற நிலையிலேயே இந்த ஆதரவு இருந்தது. நாம் தமிழர் கட்சியின் தமிழ்த்தேசிய அரசியல் முன்னெடுப்பு இலங்கையில் தமிழர் விடுதலைப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டு பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டதில் இருந்து ஆரம்பிக்கின்றது. போராட்ட காலத்தில தமிழகத்தில் இருந்த ஆதரவானது  அரசியல் வலிமையற்றதால் இறுதியில் நடந்த படுகொலைகளை கூட தடுக்க முடியாத நிலையின் விழைவில் இருந்த அரசியல் வலிமையை வளர்த்தெடுப்பது நோக்கியே நாம்தமழர் கட்சி தொடங்குகின்றது. மேலுள்ள உங்கள் கருத்துக்கள் மொட்டந்தலைக்கும் முழுங்காலுக்கும் முடிச்சுபோடுவதாக உள்ளது. 

தாயக மக்கள் தமிழீழத்தில் உள்ள அரசியல் கட்சிகளையே நம்புவதில்லை, வேறு வழியில்லாததால் தேர்தல் வரும்போது வாக்களிக்கின்றனர். அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்பது மக்களுக்கு தெரியும். அதேபோல் புலம்பெயர் மக்களையும் சரி நாடுகடந்த அரசையும் சரி எதையும் அவர்கள் நம்புவதில்லை. நம்பவும் முடியாது. அரசியலுக்கான  தளமே இல்லாதபோது அரசியல் சார்ந்த நம்பிக்கைகள் அர்த்தமற்றது. தமிழ் இனத் தேசீய அரசியல் தமிழகத்திலோ இல்லை ஈழத்திலோ வலிமையற்று எதையும் செய்ய முடியாத வக்கற்ற நிலையிலேயே உள்ளது. தமிழகத்தில் திராவிட கட்சிகளின் அரசியல் சாதீயக் கட்சிகளின் அரசியல் மதவாதக் கட்சிகளின் அரசியல் ஈழத்தில்  பிரதேசவாத அரசியல் மதவாத அரசியல் என்று தமிழின அரசியல் சிதைந்துபோன நிலையில் நாம்தமிழர் என்ற குரல் இங்கு பலருக்கு மிகப்பெரும் கொதிப்பையும் காழ்ப்புணர்வையும் ஏற்படுத்துவதை பலரது கருத்தில் இருந்தும் கருத்துப்படங்களில் இருந்தும் காணக்கூடியதாக உள்ளது. 

9 hours ago, Kavi arunasalam said:

DAD51648-04-AE-43-D3-A50-B-F8388-B2-E5-E

முன்பு கவிஞர் வைரமுத்து குறித்து அறியப்பட்டவர்கள் என்ற தலைப்பில் ஒரு கருத்துப்படம்  வரைந்திருந்தீர்கள். ஆதராமற்ற குற்றச்சாட்டுக்கு உங்களின் அவசர ஆர்வக்கோளாறு புரிந்தது. இவ்வாறான படங்களால் யாருக்கு என்ன நன்மை என்பது புரியவில்லை.  இவ்வாறான படங்களால் தமிழ்ச் சமூகத்திற்கு நன்மைசெய்வதாக நீங்கள் கருதினால் அதில் எனக்கு உடன்பாடு கிடையாது என்பதை பதிவு செய்கின்றேன். 

  • Like 2
  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
16 minutes ago, சண்டமாருதன் said:

நீங்கள் உங்கள் கருத்துக்களை  எழுத்துக்களாக வெளிப்படுத்துவது போல அவர் தனது கருத்துக்களை கோட்டோவியங்களாக வெளிப்படுத்துகிறார். ஒருவர் வெளிப்படுத்தும் கருத்து கட்டாயமாக உங்களின் கருத்துகளுடன் உடன்பாடாக தான் இருத்தல் வேண்டும் என எதிர்பார்க்க முடியாது தானே.. உங்களின் கருத்துக்கள் அவரின் ஆர்வத்தினை மட்டுப்படுத்தும் ஜனநாயகவெளியில் எல்லோருக்கும் தமது கருத்துக்களை எல்லாவடிவத்திலும் வெளிப்படுத்த உரிமை  உள்ளது என்பது.ஜனநாயக நாடொன்றில் வாழும் உங்களிற்கு தெரியாததல்ல..இதற்கும் உங்களிடம் விளக்கங்கள் இருக்கலாம்..என்கருத்தை தெரிவித்துள்ளேன்.உங்களை கருத்துக்களால் காயப்படுத்தும் நோக்கம் இல்லை 

Share this post

Link to post
Share on other sites
18 minutes ago, அபராஜிதன் said:

// முன்பு கவிஞர் வைரமுத்து குறித்து அறியப்பட்டவர்கள் என்ற தலைப்பில் ஒரு கருத்துப்படம்  வரைந்திருந்தீர்கள். ஆதராமற்ற குற்றச்சாட்டுக்கு உங்களின் அவசர ஆர்வக்கோளாறு புரிந்தது. இவ்வாறான படங்களால் யாருக்கு என்ன நன்மை என்பது புரியவில்லை.  இவ்வாறான படங்களால் தமிழ்ச் சமூகத்திற்கு நன்மைசெய்வதாக நீங்கள் கருதினால் அதில் எனக்கு உடன்பாடு கிடையாது என்பதை பதிவு செய்கின்றேன். //

உங்கள் கருத்துக்கு நன்றிகள்.  ஓவியத்தை வரைவதும் இணைப்பதும் அவரது உரிமை அவரது ஓவியக் கருத்தில் சமூக நன்மை குறித்து எனக்கு உடன்பாடு இல்லை என்பதை பதிவுசெய்துள்ளேன் அவ்வளவுதான். இதனால் சமூகத்திற்கு நன்மை என்று கருதுபவர்கள் இவ் ஓவியத்துடன் உடன்படுவார்கள். அது அவர்களது உரிமை. அதில் குறுக்கிடவும் இல்லை. கருத்து சுதந்திரத்துக்கு எதிராக எனது கருத்தும் இல்லை. 

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, சண்டமாருதன் said:

முன்பு கவிஞர் வைரமுத்து குறித்து அறியப்பட்டவர்கள் என்ற தலைப்பில் ஒரு கருத்துப்படம்  வரைந்திருந்தீர்கள். ஆதராமற்ற குற்றச்சாட்டுக்கு உங்களின் அவசர ஆர்வக்கோளாறு புரிந்தது. இவ்வாறான படங்களால் யாருக்கு என்ன நன்மை என்பது புரியவில்லை.  இவ்வாறான படங்களால் தமிழ்ச் சமூகத்திற்கு நன்மைசெய்வதாக நீங்கள் கருதினால் அதில் எனக்கு உடன்பாடு கிடையாது என்பதை பதிவு செய்கின்றேன். 

சண்டமாருதன் உங்கள் பதிவை வாசித்தேன்.

பொதுவாக எனது கருத்துப் படங்களுக்கு வரும் விமர்சனங்களுக்கு நான் பதில் எழுதுவதில்லை.

எனது கருத்தில் மாற்றம் இல்லை. உங்கள் கருத்தை மாற்ற வேண்டும் என்ற தேவையும் எனக்கு இல்லை.

பாராட்டுக்களைவிட. எதிர்ப்பில்தான் எனக்கு நாட்டம் அதிகம். அதுதான் எனக்கு ஒரு உத்வேகத்தைத் தரும்.

நன்றி சண்டமாருதன்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

ஈழப் போராட்டத்தை தமிழக அரசியல் கட்சிகள் அரசியல் இலபத்திற்காக பயன்படுத்தின என்ற குற்றச்சாட்டுகளில் நியாயம் இருப்பினும் தமிழகத்தில்  இருந்த ஈழப்போராட்ட ஆதரவு தளத்தை எம்மவரது முன்யோசனை அற்ற  நடவடிக்கைகளும் பாரிய உந்து சக்தியை வழங்கியது என்ற உண்மையையும் நாம் மறக்காமல் இருப்பது எதிர்காலத்தில் அப்படியான தவறு ஏற்படாம் இருக்க உதவும். எமது உண்மையான எதிரிகளுக்கு 

1980 களின் ஆரம்பத்தில்  ஆட்சியில் இருந்த எம். ஜி.ஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியும் 1989 ஜனவரியில் பதவிக்கு வந்த கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியும் இந்திய  ஈழப்போராட்டத்திற்கு வழங்கிய மறைமுக உதவிகள்  இந்தி அரசியலமைப்பையே மீறிய செயல்கள். 

டக்டலின் சூளைமேடு துப்பாக்கு சூடு எம்ஜியாருக்கு தர்ம சங்கடத்தையும் பத்மநாபா மீதான தாக்குதல் கருணாநிதிக்கு தர்ம சங்கடத்தையும் கொடுத்திருந்தன. ஈழப்போராட்டத்திற்கான மக்கள் ஆதரவு த்தளத்தின் வீழ்சசிக்கு இவை முக்கிய காரணியாக இருந்தன. 1989 இந்திய இராணுவத்துடனான போர்க்காலத்தில் திமுக ஆட்சியில் புலிகளுக்கு வழங்கிய மறைமுகமான பல உதவிகளை இன்றும் அவர்களால் வெளியில் சொல்ல முடியாது. ஏதாவது பொலிஸ்  பிரச்சனை என்றால் சுப்புலட்சுமி அம்மாவுக்கு போன் பண்ணினால்  போதும் என்று போராளிகளே தமக்குள் உரையாடும்  அளவுக்கு நிலமை இருந்தது. (சுப்புலட்சுமி ஜெகதீசன் அன்றைய தமிழக உள்துறை அமைச்சர்)

இன்று சீமான் ஆட்சிக்கு வந்தாலும் மாநிலத்தின் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட கடமைப்பட்டவர். இந்திய அரசியமைபை மீறி அவரால்  எதுவும் செய்ய முடியாது. அவரின் ஈழ  மக்கள் மீதான கரிசனை வரவேற்க தக்கது. அதை உண்மையான வினை திறனுடன் ஆற்ற அவர் பொறுப்புணர்வுடன் நடந்து  நட்பு சக்திகளை வளர்த்து கொள்ள வேண்டும். தன்னைவிட மற்றவர்கள் எல்லோரும்  அயோக்கியர்ககள் என்ற அவரது பரப்புரை தவறானது.  அரசியலில் தகுதி மிக்க நபராக சீமான் தன்னை வளர்தது க் கொள்வதன் மூலம்  ஈழ மக்களுக்கும் உதவும் அவரின் விருப்பை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலாவது நடைமுறைப்படுத்தலாம். (இந்திய அரசியலமைப்பின் படி அது தான் உடனடி சாத்தியமான நடைமுறை) 

நான் ஆட்சிக்கு வருவதற்கு முன் எனக்கு எதிராக செயல்பட்டவர்கள் எல்லோரும் இறந்து விடுங்கள். அல்லது அவர்களை கொலை செய்த பழியை நான் சுமக்க வேண்டு வரும் என்ற  அவரின் உரையும்  அதற்கு விசில் அடித்த ஆதாரவாளர்களின் செயலும்  சர்வதேச பத்திரிகைகளில் வருவது அவருக்கும் அவர் பேசும் தமிழ் தேசிய அரசியலுக்கும் உதவப் போவதில்லை. மாறாக எதிர்மறையாக எமக்கு  பாதகமாகவே முடியும். சுதந்திரத்தை வேண்டி போரடும் இனத்தின் நன்மதிப்பை இது பாதிக்கும். 

  • Like 4

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, Kavi arunasalam said:

சண்டமாருதன் உங்கள் பதிவை வாசித்தேன்.

பொதுவாக எனது கருத்துப் படங்களுக்கு வரும் விமர்சனங்களுக்கு நான் பதில் எழுதுவதில்லை.

எனது கருத்தில் மாற்றம் இல்லை. உங்கள் கருத்தை மாற்ற வேண்டும் என்ற தேவையும் எனக்கு இல்லை.

பாராட்டுக்களைவிட. எதிர்ப்பில்தான் எனக்கு நாட்டம் அதிகம். அதுதான் எனக்கு ஒரு உத்வேகத்தைத் தரும்.

நன்றி சண்டமாருதன்.

இவை எல்லாம் கருத்துப்படங்கள் என்று நினைத்துத்தான்  கிறுக்கி கொண்டிருக்கிறீர்களா? நான் எதோ கேலிச்சித்திரம் எண்டெல்லோ நினைச்சன்!!

இம்ரான் கான் கட்சி தொடங்கிய போதும் எத்தனையோ விமர்சனங்கள் வந்தன ஆனால் இப்போ அவர் பிரதமர். என்ன பாகிஸ்தான்  சனம் கொஞ்சம் யோசிக்க கூடியது! ஆனால் தமிழ் நாட்டில் ***** ******  நல்ல விடயங்கள் சென்றடைய கூட வருடங்கள் எடுக்கலாம்??

Edited by நியானி
பண்பற்ற சொல்லாடல் நீக்கப்பட்டுள்ளது

Share this post

Link to post
Share on other sites

சீமான் கூடாதவன் என்று சொல்லிவிட்டேன் 
நிரூபிக்க சீமான் கூடாதவனாக மாறுவதுக்கு 
............... இப்போ காத்து இருக்கிறேன். 

அப்போ அப்போ ஏதும் இப்படியாக வந்து என்னை 
கிளு கிளுப்பாக வைத்திருக்கிறது.
ஆனாலும் எனது நிரந்தர புத்திக்கு மகிழ்ச்சி இன்னமும் இல்லை. 

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, Eppothum Thamizhan said:

இவை எல்லாம் கருத்துப்படங்கள் என்று நினைத்துத்தான்  கிறுக்கி கொண்டிருக்கிறீர்களா? நான் எதோ கேலிச்சித்திரம் எண்டெல்லோ நினைச்சன்!!

இம்ரான் கான் கட்சி தொடங்கிய போதும் எத்தனையோ விமர்சனங்கள் வந்தன ஆனால் இப்போ அவர் பிரதமர். என்ன பாகிஸ்தான்  சனம் கொஞ்சம் யோசிக்க கூடியது! ஆனால் தமிழ் நாட்டில் ***** ******  நல்ல விடயங்கள் சென்றடைய கூட வருடங்கள் எடுக்கலாம்??

இம்ரான் கான் க‌ட்சி ஆர‌ம்பிக்கும் போது ஊட‌க‌ங்க‌ள் கேள்விக்கு மேல‌ கேள்விக‌ள் கேட்டின‌ம் ந‌ண்பா ( அவையின் கேள்விக்கு இம்ரான் கான் சொன்ன‌ ப‌தில் ( என‌க்கு வாக்க‌ளிக்கும் பிள்ளைக‌ள் இப்போது பாட‌சாலைக‌ளில் ப‌டித்து கொண்டு இருக்கிறார்க‌ள் என்று சொல்லி விட்டு க‌ட‌ந்து சென்று விட்டார் ) 

Share this post

Link to post
Share on other sites