Jump to content

தமிழர் அரசியல் விவகாரங்கள் ; இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராகும் கூட்டமைப்பு


Recommended Posts

656X60-X150.gif
 

(ஆர்.யசி)

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்த விடயத்தில் இந்திய தரப்புடன் தாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தயாராகி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது. 

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் மௌனமே நிலவியதாகவும் எனினும் தமிழர் அரசியல் விவகாரம் குறித்து தாம் நேரடியாக ஜனாதிபதியுடன் பேச தயாராக இருப்பதாகவும் கூட்டமைப்பு கூறுகின்றது. 

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் இந்திய பிரதமர் கவனம் செலுத்தியிருந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் இந்த விடயங்கள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் வினவிய போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்தார். 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ இந்திய விஜயத்தின் போது தமிழர் அரசியல் பிரச்சினை விவகாரத்தில் 13 ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்து வரவேற்கத்தக்க ஒன்றாகும். எமது மக்களின் அபிலாசைகளை வெற்றிகொள்ள வேண்டிய நகர்வில், அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவின் முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்ற எமது எதிர்பார்ப்பு இன்னும் சற்று பலமடைந்துள்ளது. ஆகவே பிரதமர் நரேந்திர மோடிக்கு எமது நன்றிகளை நாம் தெரிவிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/70156

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ இந்திய விஜயத்தின் போது தமிழர் அரசியல் பிரச்சினை விவகாரத்தில் 13 ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்து வரவேற்கத்தக்க ஒன்றாகும். எமது மக்களின் அபிலாசைகளை வெற்றிகொள்ள வேண்டிய நகர்வில், அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவின் முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்ற எமது எதிர்பார்ப்பு இன்னும் சற்று பலமடைந்துள்ளது. ஆகவே பிரதமர் நரேந்திர மோடிக்கு எமது நன்றிகளை நாம் தெரிவிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

இந்திய நாட்டிற்கு எந்த கடிவாளமும் இல்லை. 13இனை தவிர. 

ஆனால், எமது மக்களின் தலைமைகள் சோரம்போகாமல் இருக்கவேண்டும். 

Link to comment
Share on other sites

கூட்டமைப்பினர் சுயநிர்ணய உரிமையை இந்தியாவிடம் இரகசிமாயக வற்புறுத்தலாம். கடந்த சனாதிபதி தேர்தல் மீண்டும் இதன் நியாயத்தை தெளிவாக காட்டி நிற்கின்றது. சிங்களமும் தமிழர் தாயகத்தை அதன் நியாயமான வேண்டுகோளை நிராகரித்துள்ளது. 

ஸ்பெயினில் உள்ள கற்றலோனிய மாநிலம் சுயநிர்ணய உரிமைக்கு போராடுகின்றது. 
கனடாவில் உள்ள கியூபெக் மாநில கட்சி சுயநிர்ணய உரிமைக்கு போராடுகின்றது.

இந்தியாவின் பாதுகாப்பிற்கு, தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பாதுகாப்பாக அமையும் என்பதை கூட்டமைப்பு டெல்லிக்கு கூறவேண்டும். 

Link to comment
Share on other sites

10 hours ago, ampanai said:

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் வினவிய போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்தார். 

கடந்த 6 மாசமா உவையள் ஹிந்தியா போக வெளிக்கிடறதும் ரணில் உவைட பொக்கற்றுக்குள்ள காசை திணிச்சதும் அதை எண்ணி எண்ணி காலம் கழிக்கிறதுமா தான் காலம் ஓடுது.

இது இப்ப சிதம்பர ரகசியம் இல்லை கண்டியளோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

19598915_1880404962285092_51395469271828

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ampanai said:

கூட்டமைப்பினர் சுயநிர்ணய உரிமையை இந்தியாவிடம் இரகசிமாயக வற்புறுத்தலாம். கடந்த சனாதிபதி தேர்தல் மீண்டும் இதன் நியாயத்தை தெளிவாக காட்டி நிற்கின்றது. சிங்களமும் தமிழர் தாயகத்தை அதன் நியாயமான வேண்டுகோளை நிராகரித்துள்ளது. 

ஸ்பெயினில் உள்ள கற்றலோனிய மாநிலம் சுயநிர்ணய உரிமைக்கு போராடுகின்றது. 
கனடாவில் உள்ள கியூபெக் மாநில கட்சி சுயநிர்ணய உரிமைக்கு போராடுகின்றது.

இந்தியாவின் பாதுகாப்பிற்கு, தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பாதுகாப்பாக அமையும் என்பதை கூட்டமைப்பு டெல்லிக்கு கூறவேண்டும். 

அப்படின்ன என்ன என்று சம்பந்தன் கேட்பார் 

Link to comment
Share on other sites

14 hours ago, ampanai said:

இந்தியாவின் பாதுகாப்பிற்கு, தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பாதுகாப்பாக அமையும் என்பதை கூட்டமைப்பு டெல்லிக்கு கூறவேண்டும். 

சுயநிர்ணய உரிமை விடயத்தில் இந்திய அவ்வாறான  நிலையை எடுக்கமாட்டாது என்பது தான் இந்தியாவின் சர்வதேச நிலைப்பாடுகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது. இந்தியாவும் பல சிறுபான்மையினரை கொண்ட ஆசிய நாடுகளும் சுயநிர்ணய உரிமை என்பதை ஐரோப்பாவில் 20ம் நூற்றாண்டில் பிரபலமான ஒரு கோட்பாடாகவே பாக்கின்றனர். இந்த பின்னணியில் தான் 1979ம் ஆண்டில் இந்தியா ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமை பிரகடனத்தில் கைச்சாத்திடபோது சுயநிர்ணய உரிமையை இறையாண்மையை மீறி போகமுடியாது என திட்டவட்டமாக பதிவுசெய்துள்ளார் (மூலம் கீழே தரப்படுள்ளது). சுயநிர்ணய உரிமை என்பது வெளிச்சக்தி ஒன்றில் ஆளுமைக்கு உட்பட் ட (காலனித்துவம் ) மக்களுக்கு  மட்டுமே பொருந்தும் என்வும் சுதந்திர நாடுகளுகோ அல்லது அதனுள் வாழும் தேசிய இனங்களுகோ பொருந்தாது எனவும் இந்தியா 1979இல் பதிவு செய்துள்ளது . தனது தேசிய நலன் கருதி அவாறானதொரு நிலைப்பாடை எடுத்த இந்திய தனது நலன் கருதி இலங்கையிலும் அதனையே தொடர்ந்து செய்யும். 2018ல் ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் பாகிஸ்தான்  காஸ்மீர் சுயநிர்ணய உரிமை பற்றி பிரஸ்தாபித்தபோது சுயநிர்ணய உரிமை அடிப்படையில் இந்தியாவின் இறையாண்மையை மீறமுடியாது என இந்திய பிரதிநிதி பதிலளித்திருந்தார். இந்தியாவை சுற்றயுள்ள நாடுகள் இந்தியாவை பிரித்து தமது இலக்குகளை அடைய துடிக்கின்றனர். அது இந்தியாவை இந்த சுயநிர்ணய உரிமை விடயத்தில் மேலும் இறுக்கமடைய வைக்கும். 

என்னை பொறுத்தவரையில், நாம் பொருளாதார சுயநிர்ணய உரிமையை அடைவதன் ஊடக எமது அரசியல் நிலைமையை எமக்கு அதிகம் பாதகம் வராத வகையில் நீண்டகால அடிப்படையில் பார்த்துக்கொள்ளலாம். அந்த வகையில் இந்தியாவுடன் இறுக்கமான பொருளாதார உறவுகளை வளர்க்க கொள்கை வளர்க்கவேண்டும். அதட்கான பொறிமுறைகளை உருவாக்கவேண்டும். வர்த்தக மற்றும் கலாசார தொடர்புகளை வளர்க்கவேண்டும்., குறிப்பாக தமிழக பொருளாதார உறவுகளை நாம் மேம்படுத்தவேண்டும். குஜராத்தியர் போல பொருளாதார வலிமை பெறவேண்டும். 

எமக்கும் இந்தியாவுக்கும் இடையில் மிக கசப்பான வரலாறு இருந்தாலும் அதட்கு முன்னர் ஒரு சுமுகமான உறவு இருந்ததையும் மறக்கமுடியாது. நாம் விரும்பியோ விரும்பாமலோ ஆசியாவில் ஒரு தீவில் அடைபட்டுக்கொண்டுள்ள இனம். எவ்வளவு தூரம் ஐரோப்பிய சுயநிர்ணய உரிமை விடயங்களில் முற்போக்காக இருந்தாலும் அது எங்களுக்கும் பொருந்தும் என்பது பேச்சளவில் தான் இருக்குமே தவிர நிஜம் என்பது வேறு. அதிர்ஷ்டவசமாக எமக்கு ஒருநாள் விடுதலை வரக்கூடும் . ஆனால் அந்த தருணம் வரை நாம் தப்பி பிழைப்பதோடல்லாமல் நாம் வளர்ச்சியடைய என்ன வழிமுறைகள் உள்ளன என்பதை ஆராய்ந்து இன்றே இயங்கவேண்டும்.

International Covenant on Civil and Political Rights - 1966

Ratified பய  on 10/4/1979  with Reservations on Art 1, 9 and 13 and declarations on Articles 12, 19(3), 21, 22

Reservations:

Article 1: The Government of the Republic of India declares that the words `the right of self-determination' appearing in [this article] apply only to the peoples under foreign domination and that these words do not apply to sovereign independent States or to a section of a people or nation--which is the essence of national integrity.

Article 9: The Government of the Republic of India takes the position that the provisions of the article shall be so applied as to be in consonance with the provisions of clauses (3) to (7) of article 22 of the Constitution of India. Further under the Indian Legal System, there is no enforceable right to compensation for persons claiming to be victims of unlawful arrest or detention against the State.

Article 13: The Government of the Republic of India reserves its right to apply its law relating to foreigners.

 Declarations: 

Articles 12, 19(3), 21, 22: The Government of the Republic of India declares that the provisions of the said [article] shall be so applied as to be in conformity with the provisions of article 19 of the Constitution of India.

மூலம்: https://www.pmindiaun.gov.in/pages.php?id=867

Link to comment
Share on other sites

6 hours ago, putthan said:

அப்படின்ன என்ன என்று சம்பந்தன் கேட்பார் 

வலிமை மிக்க இராஜபக்சேக்களையும் அவர்களை பெரும்பான்மையாக ஆதரித்து நிற்கும் சிங்கள இனத்தையும் எதிர்கொள்ளும் வல்லமையும் திறமையும் இன்று எம்மிடம் இல்லை. மாறாக, இருக்கும் தமிழ்  தலைமைகளும் அழிக்கப்படும் சாத்தியங்களே அதிகம்.

எனவே, தமிழர்களின் நலன்களில் தான் இந்திய நலன்களும் அதன் தேசியத்தை பாதிக்காதவகையில் அமையும் என்பதை எடுத்துக்கூறவேண்டும். 

இதன்மூலம் தமிழகத்தில் கூட மோடியின் கட்சி ஒரு காலை ஊன்ற இது உதவும் என அவர்களும் கணக்கு போடலாம்.  

Link to comment
Share on other sites

பின் கதவால் கிடைக்கும் சில்லறைக் காசு இப்போதைக்கு கிடைக்காது என்று உறுதியாகிவிட்டது.

ஓநாய் ரணில் இவர்கள் எல்லோரினதும் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட்டுள்ளார்.

சுமந்திரன் பேச்சைக்கேட்டு ஓநாய் ரணிலுடன் கும்மாளம் அடித்தவர்கள் இனி வேறு யாராவது காலில் விழத்தானே வேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசாங்கத்தின் சகலவிதமான ஒத்துழைப்புக்களையும் நாம் எதிர்பார்க்கின்றோம்-சம்பந்தன்

இந்திய அரசாங்கத்தின் சகலவிதமான ஒத்துழைப்புக்களையும் நாம் எதிர்பார்க்கின்றோம்-சம்பந்தன்

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையில் உச்சபட்ச தீர்வுகளை வழங்குவதாக வாக்குறுதிகளை வழங்கிய அரசாங்கம் இப்போதாவது சர்வதேச குரல் மற்றும் தமிழ் மக்களின் நிலைகளை கருத்தில் கொண்டு 13 ஆம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.அரசியல் தீர்வு விடயத்தில் இந்திய அரசாங்கத்தின் சகலவிதமான ஒத்துழைப்புக்களையும் நாம் எதிர்பார்க்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/இந்திய-அரசாங்கத்தின்-சகல/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.