தமிழ் சிறி

நேற்றிரவு பெய்த கனமழையால் மேட்டுப்பாளையத்தில் 3 வீடுகள் இடிந்து விழுந்து விபத்து: எண்ணிக்கை 15-ஆக உயர்வு

Recommended Posts

Tamil_News_large_2424554.jpg

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் அருகே நடூர் – ஏடிக்காலனி பகுதியில் தனியாருக்கு சொந்தமான காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த அனர்த்தத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் அருகே நடூர் – ஏடிக்காலனி பகுதியில் தனியாருக்கு சொந்தமான காம்பவுண்ட் சுவர் இடிந்து அருகில் உள்ள 4 வீடுகளின் மீது விழுந்துள்ளது. இதில் 4 வீடுகளில் இருந்த 12 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

இதனையடுத்து அவர்களை மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஈடுபட்டனர்.

அதற்கமைய இதுவரையில் 9 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் 4 வீடுகளில் இருந்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மேட்டுப்பாளையத்தில்-சுவ/

Share this post


Link to post
Share on other sites

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்றிரவு பெய்த கனமழையால் 3 வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிந்த நிலையில் 11-ஆக உயர்ந்துள்ளது. நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் 3 வீடுகள் மீது அருகிலுள்ள கருங்கல் சுவர், இடிந்து விழந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்து வருகின்றன. இந்நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் ஓட்டு வீடு ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் 4 பெண்கள், சிறுமி என 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அதிகாலை 3.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. வீட்டில் 12 பேர் இருந்த நிலையில், 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 3 பேரின் நிலைமை இன்னும் தெரியவில்லை என கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

தகவலறிந்து சென்ற வட்டாட்சியர், போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காலை முதலே தொடா்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. 3 வீடுகளில் இருந்த அனைவரசூடு உயிரிழிந்திருக்கலாம் என கருதப்படுகிறது. உயிரிழந்தவர்களில் 10 பெண்கள், 2 குழந்தைகள், 3 ஆண்கள் மேலும் அவர்களின் உறவினர்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. நேற்றிரவு அவர்கள் உறவினர்கள் அங்கு தங்கியதால் பலியின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என கூறப்படுகிறது. இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பாறைகள் அகற்றப்பட்ட பின்பு  மேலும் எதும் உடல்கள் இருக்கிறதா என தெரியவரும் என கூறப்படுகிறது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=545397

Share this post


Link to post
Share on other sites

மேட்டுப்பாளையம் அருகே 4 வீடுகள் இடிந்து 15 பேர் பலி

மேட்டுப்பாளையம் அருகே மழையால் இடிந்த வீடுகளின் இடிபாடுகளை அகற்றும் மண்வாரி இயந்திரம். Image captionமேட்டுப்பாளையம் அருகே மழையால் இடிந்த வீடுகளின் இடிபாடுகளை அகற்றும் மண்வாரி இயந்திரம்.

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் அமைந்துள்ள நடூர் கிராமத்தில் மழையால் வீடுகள் இடிந்ததில் 15 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக நீலகிரி மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், இங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் அடுத்துள்ள நடூர் கிராமத்தில், ஏ டி காலனி என்ற பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தப் பகுதிகளில் கனமழை பெய்தது. மேட்டுப்பாளையத்தில் 180.33 மி.மீ, அன்னூர் பகுதியில் 36 மி.மீ அளவிற்கு மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சாலைகள் துண்டிக்கப்பட்டன.

மழை வெள்ளம்.

நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக இப்பகுதியில் உள்ள 4 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதில் பெண்கள், சிறுமிகள் உட்பட 15 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே, மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/india-50625670

Share this post


Link to post
Share on other sites

மேட்டுப்பாளையம் விபத்து : இறந்தவர்களின் உடல்கள் மின் மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டன

கோவை மேட்டுப்பாளையம்: இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுக்கும் உறவினர்கள்

கோவை மேட்டுப்பாளையத்தில் இன்று (திங்கள்கிழமை) ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து அருகிலுள்ள வீடுகளின் மீது விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த 17 பேரின் உடல்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்டுள்ள நிலையில்,, இறந்தவர்களில் ஒருவரின் உடலை உறவினர் ஒருவர் கையெழுத்திட்டு பெற்ற நிலையில், மற்ற 16 உடல்களையும் காவல்துறையினர் சாந்திவனம் என்ற பகுதியில் உள்ள மின்மயானத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

தங்களின் கையெழுத்து இன்றி காவல்துறையினரே உடலை கொண்டு சென்றதாக இறந்தவர்களின் உறவினர்கள் சிலர் புகார் தெரிவித்தனர்

உயிரிழந்த 17 பேரின் உடல்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள், ஊர் மக்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் மாலையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் உள்ள பிபிசி தமிழ் செய்தியாளர் ஹரிஹரன், "இந்த விபத்துக்கு காரணமான வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இறந்தவர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி ஊர் மக்களும் இன்று காலையிலிருந்தே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழக அரசு அறிவித்துள்ள நான்கு லட்சம் நிவாரண தொகையை, 25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் இறந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசுவேலை வழங்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்" என்று தெரிவித்தார்.

மேட்டுப்பாளையம் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 குழந்தைகள், 11 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

வாக்குவாதம், தள்ளுமுள்ளு

மேட்டுப்பாளையம் விபத்து - வாக்குவாதம், தள்ளுமுள்ளு

இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மருத்துவமனையின் முன்பு அவர்களது குடும்பத்தினர் மட்டுமின்றி, 500க்கும் மேற்பட்ட ஊர்மக்கள் குவிந்துள்ளனர்.

இந்நிலையில், இறந்தவர்களின் உடல்களை பெற்றுக்கொள்ளுமாறு காவல்துறையினர் கூறியபோது, நடந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் தள்ளுமுள்ளாக மாறியது. அதையடுத்து, சிறிது தடியடி நடத்திய காவல்துறையினர், அங்கிருந்த சிலரை வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

மேலும், மருத்துவமனை வளாகத்தில் சில அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் முகாமிட்டுள்ளதால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

முன்னதாக, நொறுங்கி விழுந்த நான்கு வீடுகளும் ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த, ஹாலோ பிளாக் கல்லில் கட்டப்பட்ட எளிய வீடுகள் என்று கூறுகிறார் செய்தியாளர் ஹரிஹரன். வரிசையாக அமைந்திருந்த இந்த நான்கு வீடுகளுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு ஆடம்பர வீட்டின் சுற்றுச்சுவர் சுமார் 25 அடி உயரத்துக்கு, கருங்கல்லைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

கோவை மேட்டுப்பாளையம்: இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுக்கும் உறவினர்கள்

கட்டும்போதே தற்போது பாதிக்கப்பட்ட வீட்டைச் சேர்ந்தவர்களும், அந்தப் பகுதி மக்களும் இவ்வளவு உயரமான சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். அது இடிந்து விழலாம் என்று அச்சமும் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அப்போது அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் சொல்வதாகக் கூறுகிறார் ஹரிஹரன்.

கடந்த ஒரு வாரமாக நீலகிரி மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

https://www.bbc.com/tamil/india-50631491

Share this post


Link to post
Share on other sites

மேட்டுப்பாளையம் விபத்து: சுவர் இடிந்த வீட்டின் உரிமையாளர் கைது

ஸ்டாலின்படத்தின் காப்புரிமைM.K.STALIN/FACEBOOK

கோவை மேட்டுப்பாளையத்தில் நேற்று (திங்கட்கிழமை) சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், விபத்துக்கு காரணமான சுவர் இடிந்த வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் என்பவரை கோவை மாவட்ட காவல்துறையால் நியமிக்கப்பட்டிருந்த சிறப்பு படையினர் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கோவை மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட இடத்தை இன்று பார்வையிட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அதனை `தீண்டாமைச் சுவர்` என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், "இது அந்த வட்டாரத்தில் `தீண்டாமைச் சுவர்` என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் அதிகாலையில் பெய்த கனமழை காரணமாக அந்தச் சுவர் இடிந்து அருகில் இருந்த வீடுகளின் மீது விழுந்துள்ளது." என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கோவை

"மேட்டுப்பாளையத்தில் நடந்துள்ளதை சம்பவம் என்றோ, விபத்து என்றோ மட்டும் சொல்லிவிட முடியாது. வன்மம், அலட்சியம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றுக்கு 17 உயிர்கள் பரிதாபமான முறையில் பலியாகி உள்ளன," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.

பலியானவர்களுக்கு உகந்த இழப்பீடு தர வேண்டும் என போராட்டம் நடத்திய மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டது குறித்தும் கண்டித்துள்ள ஸ்டாலின் இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கோவை மேட்டுப்பாளையத்தில் நேற்று (திங்கட்கிழமை) சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 குழந்தைகள், 11 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

நொறுங்கி விழுந்த நான்கு வீடுகளும் ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த, ஹாலோ பிளாக் கல்லில் கட்டப்பட்ட எளிய வீடுகள் என்று கூறுகிறார் செய்தியாளர் ஹரிஹரன். வரிசையாக அமைந்திருந்த இந்த நான்கு வீடுகளுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு ஆடம்பர வீட்டின் சுற்றுச்சுவர் சுமார் 25 அடி உயரத்துக்கு, கருங்கல்லைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

கட்டும்போதே தற்போது பாதிக்கப்பட்ட வீட்டைச் சேர்ந்தவர்களும், அந்தப் பகுதி மக்களும் இவ்வளவு உயரமான சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். அது இடிந்து விழலாம் என்று அச்சமும் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அப்போது அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் சொல்வதாகக் கூறுகிறார் பிபிசி தமிழுக்காக செய்தி சேகரித்த செய்தியாளர் ஹரிஹரன்.

https://www.bbc.com/tamil/india-50642715

Share this post


Link to post
Share on other sites

மேட்டுப்பாளையம் விபத்து: 17 பேரையும் கொன்றது தீண்டாமை சுவர்தான் - ஊர் மக்கள் குற்றச்சாட்டு

ஹரிஹரன்பிபிசி தமிழுக்காக
மேட்டுப்பாளையம் விபத்துபடத்தின் காப்புரிமைTWITTER

மேட்டுப்பாளையம் நடூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில் கனமழையால் கருங்கல் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு காரணமான 25 அடி உயர் சுவர் தீண்டாமையின் குறியீடு என இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

''பல ஆண்டுகளாக சமமான நிலப்பரப்பில்தான் இங்கே வீடுகளும், காடுகளும் இருந்தன. 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிதிராவிடர் காலனிக்கு அருகே தனியார் வீடுகள் கட்டப்பட்டன. பல மடங்கு மண்னை கொண்டுவந்து கொட்டி, நாங்கள் வாழும் நிலப்பரப்பை விட மேடான பகுதியை உருவாக்கி, விபத்துக்குள்ளான வீட்டின் மிக அருகே, சொகுசு குடியிருப்பு ஒன்று கட்டப்பட்டது. அப்போது கட்டப்பட்டது தான் இந்த கருங்கல் சுவரும்.’’ என உள்ளூர் மக்கள் இந்த சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டனர்.

தீண்டாமைச் சுவர் Image captionராமசாமி

சுவர் இடிந்து வீடுகள் சேதமடைந்திருந்தை முதலில் பார்த்தவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் ராமசாமி. இவர் இந்த பகுதியில் பசும்பால் வியாபாரம் செய்து வருகிறார்.

''திங்கள்கிழமை அதிகாலை இடியுடன் தொடர்கனமழை பெய்தது. சுமார் 5 மணி அளவில் நான் வழக்கம்போல் வெளியே வந்து பார்த்தபோது, மாட்டுக்கொட்டையில் செந்நிறத்தில் நீர் ஓடியது. அதிர்ச்சி அடைந்து மாட்டுக்கொட்டைகைக்கு பின்னால் இருக்கும் வீடுகளை பார்த்தேன். வரிசையாக இருந்த நான்கு வீடுகளும் நொருங்கிய நிலையில் இருந்தது. அதிர்ச்சி அடைந்து மற்றவர்களையும் அழைத்து, காவல்துறைக்கு தெரிவித்தோம். வீட்டில் இருந்த 17 பேரும் உடல் நசுங்கி இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். இறந்தவர்கள் அனைவரும் தினக்கூலிகள், தாழ்த்தப்பட்ட மக்கள், மரணத்திற்கு காரணம் சுவரைக் கட்டி இருந்த ஜவுளிக்கடை உரிமையாளர்தான்' என குற்றம்சாட்டுகிறார் இவர்.

திங்கள்கிழமை காலை விபத்து நடந்த பகுதிக்கு வந்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, சுவர் கட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து, உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அரசு மருத்துவமனையில், இறந்தவர்களின் உறவினர்களும், ஊர்மக்களும், தமிழ் புலிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களும், பிரேதங்களை பெற்றுக்கொள்ள மறுப்பு தெருவித்ததோடு, அரசு நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர். போராட்டதை கலைப்பதற்காக காவலர்கள் தடியடி நடத்தி, தமிழ் புலிகள் கட்சி நிர்வாகி நாகை திருவள்ளுவன் உட்பட 26 பேரை கைது செய்தனர். பின்னர், உடல்கள் அனைத்தும் உறவினர்களின் கையப்பம் பெறப்பட்டு எரியூட்டப்பட்டது.

இந்த விபத்தும் உயிரிழப்பும் சாதிய அடக்குமுறையால் நடைபெற்றதாக ஆதிதிராவிடர் காலனி குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர்.

தீண்டாமைச் சுவர் Image captionதாசப்பன்

''இப்பகுதியில் வசிக்கும் அனைவரும் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கட்டிட வேலை, தோட்ட வேலை, கைவண்டி உணவகம் போன்ற எளிய தொழில் செய்யும் தினக்கூலிகள். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அரசு ஒதுக்கித்ததந்த நிலத்தில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களது பகுதிக்கு அருகே இருக்கும் மற்ற சமூகத்தினர், நாங்கள் அவர்களுக்கு மத்தியில் இருப்பதை வெறுக்கின்றனர்''

''பல வருடங்களாக சமமான நிலப்பரப்பில் தான் இங்கே வீடுகளும் காடுகளும் இருந்தன. 20 வருடங்களுக்கு முன்னர் அம்பேத்கர் காலனிக்கு அருகே தனியார் வீடுகள் கட்டப்பட்டன. பல மடங்கு மண்ணை கொண்டுவந்து கொட்டி, நாங்கள் வாழும் நிலப்பரப்பைவிட மேடான பகுதியை உருவாக்கி, விபத்துக்குள்ளான வீட்டின் மிக அருகே, சொகுசு குடியிருப்பு ஒன்று கட்டப்பட்டது. அப்போது கட்டப்பட்டது தான் இந்த கருங்கல் சுவரும். அன்று வெறும் 6 அடியில் தான் இந்த சுவர் இருந்தது''

8 அடியாக இருந்த சுவரை, 25 அடிக்கு அஸ்திவாரம் எதுவும் இல்லாமல், கடினமான கருங்கற்களைக் கொண்டு கட்டியதற்கு காரணம், அவரின் வீட்டிலிருந்து பார்த்தால் எங்களின் குடிசையும், இந்த மக்களும் தெரிவதால் தான். இந்த சுவரை இடிக்கக்கோரி அவரின் வீட்டில் வாசலில் பல நாட்கள் நின்றோம். எங்களைப் பொறுத்தவரை இது தீண்டாமைச் சுவர்தான், அவர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, மீதமிருக்கும் சுவரையும் இடிக்க வேண்டும்'' என்கிறார் இங்கு வசிக்கும் தாசப்பன்.

இச்சம்பவம் குறித்து, விபத்து ஏற்படுத்திய சுவர் எழுப்பப்பட்டிருக்கும் வீட்டின் உரிமையாளரையும், வீட்டில் இருந்தவர்களையும் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர்கள் வெளியே வந்து பதிலளிக்கவில்லை.

தீண்டாமைச் சுவர் Image captionஎழுத்தாளர் முருகவேள்

இதனிடையே கோவையை சேர்ந்த எழுத்தாளர் முருகவேள் ஒரு முக்கிய குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

'20 அடி உயரத்தில் சுவர் கட்ட வேண்டும் என்றால், 4 அடி அகலத்தில் அடித்தளம் அமைக்க வேண்டும். ஆனால், இடிந்த சுவரின் அடித்தள அகலம் வெறும் 1 அல்லது 2 அடி தான் இருக்கும். முறையான கட்டுமான விதிகளும் பின்பற்றப்படவில்லை, நகராட்சி அனுமதியும் பெறப்படவில்லை. இதோடு, தாழ்த்தப்பட்ட மக்களின் வழிப்பாதையாக இருந்த இடத்தை அடைத்து சுவர் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனடிப்படையில், வீட்டின் உரிமையாளர் மீது எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்கிறார் எழுத்தாளர் முருகவேள்.

https://www.bbc.com/tamil/india-50643366

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • ஆல்டா நகருக்கு அருகே சக்திவாய்ந்த நிலச்சரிவுக்குப் பின்னர் நோர்வேயில் எட்டு வீடுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. நிலச்சரிவை ஒரு உள்ளூர் குடியிருப்பாளரான ஜான் எகில் பக்கெடால் படமாக்கியுள்ளார் - இழந்த வீடுகளில் ஒன்று அவருக்கு சொந்தமானது - மேல் உள்ளது அவரின் ஒளி தொகுப்பு . இணைப்பு பெருமாள் https://www.theguardian.com/world/video/2020/jun/04/landslide-in-norway-sweeps-houses-into-the-sea-video?CMP=fb_gu&utm_medium=Social&utm_source=Facebook&fbclid=IwAR2iz_dBalPoyA48ZVC3TbZWT8bPKzklIxAe5UGcwrSy4FZRZVu4VXhExIo#Echobox=1591308230
    • Excellent Post Praba.  Much appreciated.  I will bother you in the future if I need any help. 
    • Tholar Balan 16 நிமிடங்கள்  ·    •கேட்பவன் கேணையன் என்றால் காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்று சொல்வார்கள்! செய்தி - புத்தரின் போதனைகள் மூலம் கொரோனோவை வெற்றி கொண்டுள்ளோம் - பிரதமர் மகிந்த ராஜபக்சா. நம்பிட்டோம் பிரதமர் அவர்களே! அப்படியே அந்த கிளிநொச்சிவரை வந்தவிட்ட வெட்டுக்கிளி கூட்டத்தையும் புத்தரின் போதனைகள் மூலம் விரட்டிவிடுங்கள். அடுத்து, மலையகத்தில் நேற்றும் ஒரு பெண் குளவிக்கடியால் இறந்துள்ளார். அந்த குளவிகளையும் கொஞ்சம் புத்தரின் போதனைகள் மூலம் கலைத்து விடுங்கள். தமிழர்களின் கிழக்கு மண்ணில் தொல்பொருள் ஆய்வு செயலணி நியமித்துள்ளீர்கள். அதில் ஒரு தமிழருக்குகூட இடமளிக்கவில்லை. அதற்கும்கூட புத்தரின் போதனைகள்தான் காரணமா பிரதமர் அவர்களே? அடுத்தமுறை இந்தியா சென்று திருப்பதி வெங்கடஜலபதியை வணங்கும்போது உங்கள் நண்பர் மோடிக்கும் புத்தர் போதனைகள் சிலவற்றை கூறிவிடுங்கள். ஏனெனில் அவர் இந்தியாவில் கொரோனோவுக்கு கை தட்டுங்கள் விளக்கு பிடியுங்கள் என்று உளறிக் கொண்டிருக்கிறார். இப்ப கடைசியாக கொரோனோவுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்கிறார்.             Tholar Balan 8 மணி நேரம்  ·    கடந்த வருடம் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாயார் ஒருவர் சுமந்திரனுக்கு செருப்பு காட்டினார். அப்போது அதை அரசியல் நாகரீகம் அற்றது என்று கூறி கண்டித்தவர்கள் இப்போது சுந்தரவள்ளி “அறுத்திடுவேன்” என்று பொதுவெளியில் பேசியதை அறச்சீற்றம் என்று பாராட்டுகிறார்கள். சம்பந்தர் ஜயாவிடம் தேசியக்கொடி பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்டதையே தவறு என்று கூறியவர்கள் அமெரிக்காவில் போராட்டத்தில் தேசியகொடி எரிக்கப்படுவதை பாராட்டுகிறார்கள். இந்த அரசியல் நாகரீகம் என்பதுகூட ஈழத் தமிழருக்கு ஒரு வரையறை, உலகத்திற்கு இன்னொரு வரையறை என்பதை நாம் தெரிந்துகொண்ட நாள் இன்று.                
    • நிதர்சனம்.👍 எனது சகோதரன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு ஏறக்குறைய ஐந்து வருடங்கள் உள்ளே இருந்து வந்தவர். அவர்,  இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பின்னர் இராணுவத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோரை அவர்கள் நாய்கள் போன்றுதான் நடாத்துவார்களாம். காட்டிக் கொடுக்காத, ஒத்துழைக்காத தமிழரை எவ்வளவு சித்திரவதை செய்தாலும், கடுமையாகத் துன்புறுத்தினாலும் மிகுந்த மரியாதை தருவார்களாம். அதிலும் குறிப்பாக, அதிகாரிகள் மட்டத்திலிலுள்ளோர், இயக்கத்திலிருந்தவர்களுக்குத் தனி மரியாதை செலுத்துவார்கள் என்று கூறுவார்.  இது எனது அனுபவமும் கூட. 🙂