• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
பெருமாள்

இந்தியா உதவ முன்வராவிட்டால் சீனாவையே நாடுவோம்: கோத்தபய

Recommended Posts

0212-2019%20world-gotapaya.jpg?itok=1wmKlcnj

இந்தியாவும் மேற்கத்திய நாடுகளும் இலங்கையில் முதலீடு செய்யாவிட்டால் மறுபடியும் நிதி உதவிக்காக சீனாவை நாடவேண்டிய நிலை ஏற்படும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். படம்: ஊடகம்

2 Dec 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Dec 2019 10:41

இந்தியாவும் மேற்கத்திய நாடுகளும் இலங்கையில் முதலீடு செய்யாவிட்டால் மறுபடியும் நிதி உதவிக்காக சீனாவை நாடவேண்டிய நிலை ஏற்படும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். மாற்று நிதி உதவி கிட்டாத இதர ஆசிய நாடுகள்கூட சீனாவின் பிரம்மாண்டமான ‘பெல்ட் அண்ட் ரோடு’ உள்கட்டமைப்புத் திட்டத்தை அணுக வேண்டி இருக்கும் என்றும் அவர் இந்தியாவின் ‘த இந்து’ நாளிதழிடம் கூறியுள்ளார்.

இலங்கை பல்லாண்டு காலமாக இந்தியாவின் நட்பு நாடாக இருந்து வருகிறது. ஆயினும் 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை சுமார் பத்தாண்டு காலம் அதிபராகப் பதவி  வகித்த மகிந்த ராஜபக்சே சீனாவுடன் நெருக்கமாக இருந்தார். முதலீடாகவும் கடன்களாகவும் 7 பில்லியன் டாலர் (S$9.57 பில்லியன்) வரை சீனாவிடம் உதவிபெற அவர் ஒப்பந்தம் போட்டார்.

இந்நிலையில் சென்ற மாதம் 16ஆம் தேதி புதிய அதிபராகப் பொறுப்பேற்ற மகிந்தவின் தம்பி கோத்தபய ராஜபக்சே மூன்று நாள் அதிகாரத்துவப் பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா சென்றார். 

இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய எந்தவோர் அம்சத்தையும் தமது அரசாங்கம் செய்யாது என்ற அவர் முதலீட்டுக்கான அழைப்புகளை விடுத்தார்.

“இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்றவையும் இன்னும் பல நாடுகளும் தங்களது நாட்டில் உள்ள நிறுவனங்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும். அதன் மூலம் இலங்கை வளர்ச்சி பெறும். 

“அவ்வாறு செய்யாவிட்டால் இலங்கையைப் போல பிற ஆசிய நாடுகளுக்கும் பிரச்சினை எழலாம். நாடுகள் ஒன்றுக்கொன்று உதவாவிட்டால் சீனாவை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஹம்பன்தோட்டா துறைமுகம் போன்ற உத்திபூர்வ முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் நிலையில் இலங்கை அரசாங்கம் உள்ளது,” என்று திரு கோத்தபய தமது 

பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilmurasu.com.sg/world/story20191202-37183.html?fbclid=IwAR0F1cPZrNqjPMn_jTFWbyBh0PZibK1OL2Pfz2bG5PGuH0F0Z-SYeqwADJk

Share this post


Link to post
Share on other sites

எந்த ஒரு நாட்டுக்கும் அவர்களது பொருளாதாரம் மிகவும் முக்கியம். மேட்கு  நாடுகள், இந்திய, ஜப்பான் போன்ற நாடுகள் பொருளாதார உதவி, முதலீடுகள் (FDI)  செய்யவிடடால் இலங்கைக்கு வேறு வழிகள் இருப்பதாக தெரியவில்லை. எனவே நிச்சயமாக சீனா இதனை பயன்படுத்தும். பின்னர் வந்து குய்யோ , முய்யோ என்று சத்தம்போடுவதில் பிரயோசனம் இல்லை. இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இனியும் இதில் கவனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Share this post


Link to post
Share on other sites

You mentioned India’s suspicions of the past, those include differences over China, and the Tamil issue, but also your allegation that Indian agencies conspired for regime change against your brother. Can your government turn the page on these past suspicions?

I am sure [we can turn the page]. We did hear about agencies conspiring, including the US, for regime change. Some of their suspicions were due to our ties with China, but that was a misunderstanding. We had a purely commercial agreement with China. I want to tell India, Japan, Singapore and Australia and other countries to also come and invest in us. They should tell their companies to invest in Sri Lanka and help us grow, because if they do not, then not only Sri Lanka, but countries all over Asia will have the same [problem]. The Chinese will take the Belt and Road Initiative all over unless other countries provide an alternative. 

https://www.thehindu.com/news/international/need-more-coordination-between-delhi-colombo-says-gotabaya-rajapaksa/article30125809.ece

Share this post


Link to post
Share on other sites

இப்படி நேரடியாய் வெருட்டி கடன் வாங்குவதற்கும் ஒரு தில் இருக்க வேண்டும் 😂
 

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

இலங்கைக்கு தேவையான பணத்தை சீனாவால் மட்டுமே வழங்க முடியும்.

Share this post


Link to post
Share on other sites

இந்தியா கொடுக்க முன்வந்த பணம், 450 அமெரிக்க டாலர்கள் இந்திய நலன்களை முன்னிட்டு வழங்கப்படுகின்றன. மேலும், அதில் உள்ள நிர்ப்பந்தங்கள் பற்றி பெரிதாக கூறவில்லை. 

சீனாவிடம் அதை விட பெரிய பணம் உள்ளது. அது, சிங்கள இடங்களை அபிவிருத்தி செய்யவும், மீண்டும் தேர்தலில் அவர்கள் வாக்குக்குகளை  மட்டுமே வைத்தும் வெல்லலாம். தேரர்களை கட்டுப்படுத்தும் வல்லமையும் தூண்டிவிடும் பலத்தையும் கொண்டவர்களாக இராசபக்சேக்கள் உள்ளனர்.  

மொத்தத்தில், இந்தியா பணம் கொடுக்க வேண்டிய கட்டாய நிலையில் உள்ளது. 
சிங்களம், அந்த பணம் வேண்டாம் என கூறும் நிலையை கூட எடுக்கலாம். 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • இந்த மனுஷன் இன்னும் 2 மாதமிருக்க இப்ப ஏன் குத்திமுறிக்கிறார். பல கிறீஸ்தவர்களே இந்த ஆளின் கூத்துக்களைப் பாத்து பம்மி பம்மி சிரிக்கீனம். இதுக்குள்ள ஒருசில ஆட்கள் இவர் ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களின் தலைவர் என்டு ரீல் விடவும் தவறுவதில்லை.
  • குறித்த எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெற்ற இடங்களைப் பார்க்கும் போது பண்டைய மனிதர்கள் அடக்கம் செய்தல், சடங்குகள் செய்வதற்கு போதுமான அதிநவீன அறிவுடையவர்களாக இருந்துள்ளார்களா? என்பது பற்றிய விவாதத்திற்கு தம்மை இட்டுச் செல்வதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஈராக்கின் குறித்த சனிதர் குகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட எழும்புக் கூடுகள் போன்று 1950 மற்றும் 1960களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது 10 நியண்டர்டால் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த எலும்புக்கூடு இரண்டு தசாப்தங்களின் பின் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நியண்டர்டால் எலும்புக்கூடு ஆகும். இந்த எலும்புகள் அவற்றின் அசல் நிலைகளிலிருந்து இன்னும் மாற்றமடையாத ஒழுங்கமைக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போதைய அதிநவீன நுட்பங்களைப் பயன்படுத்தி இழந்த மனித இனங்களின் "சவக்கிடங்கு நடைமுறைகளை" விசாரிக்க குறித்த எலும்புக்கூடுகள் இணையற்ற வாய்ப்பை வழங்குகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/75991 https://www.rt.com/news/481132-neanderthal-remains-found-shanidar/
  • ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ.இந்த முறையும் ஒருத்தன் மாட்டமாட்டானா    
  • சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரிலிருந்து கொரோனா என்ற கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவியதால் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பாதிக்கப்பட்ட நபர் தும்மினாலோ, இருமினாலோ வெளியாகும் நுண் எச்சில் நீர் துகள்கள் மூலம் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. இவர்கள் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பலருக்கும் கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. இதன் காரணமாக 29 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியது. சீனாவில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமாக உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு உலகை அச்சுறுத்திய சார்ஸ் வைரஸை விட மிகவும் கொடியதாக காணப்படுகிறது. சீனாவிலும் சுமார் 14 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குணமாகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. சீனாவின் ஹூபே மாகாணத்தில் நேற்று ஒரே நாளில் 136 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது 74 ஆயிரத்து 185 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சீன மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 11 ஆயிரத்து 977 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபரின் நுண் எச்சில் நீர் துகள்கள் படிந்த நாணயத்தாள்கள் மூலமும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹூபே மாகாணத்தின் மருத்துவமனை, கடைத்தொகுதிகள், பேருந்துகள் போன்றவற்றில் புலங்கிய நாணயத்தாள்களை&nbsp;சுத்தம் செய்ய சீன மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் இடங்களில் இருந்து வங்கிக்கு வரும் நாணயத்தாள்களை 14 நாட்கள் அல்ட்ரா வைலட் கதிர்கள் அல்லது அதிக வெப்பத்தில் வைத்து அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/76011 <p></p>
  • உணர்வுபூர்வமாக நீங்கள் இதை எழுதியுள்ளீர்கள். ஆனாலும் எனக்குத் தெரிந்த பல அம்மாக்கள் சுயநலம் கொண்டவர்களாக எதிர்வினையாற்றுபவர்களாகவே இக்காலத்தில் இருக்கின்றனர். எம் பெற்றோரை வைத்து   நாம் எல்லோருக்குமாகப் பொதுவாக எழுதுவது பொருந்தாது இக்காலத்துக்கு.