Jump to content

கடிதத்துடன் இலங்கைக்கு வந்துள்ள பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்

Recommended Posts

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மகமூத் குர்ஸ்சி (Mahmood Qureshi) 2 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக நேற்று (01) இரவு  கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை  வந்தடைந்துள்ளார்.

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலருடன் முக்கிய சந்திப்புகளை நடத்த உள்ளார்.

அத்துடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கடிதம் ஒன்றையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிப்பதற்கு கொண்டு வந்துள்ளதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கடதததடன-இலஙககக-வநதளள-பகஸதன-வளவவகர-அமசசர/150-241841

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு. இலங்கை அரசு ISIS தீவிரவாதத்தை இலங்கையில் இருந்து ஒழிக்க இவர்களின் உதவியை பெற்றுக்கொள்ளலாம். மத்தபடி இவர்களால் ஒரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை.

கோத்த இந்தியாவிட்கு போனதை தங்க முடியாமல்தான் இவர் இங்கு ஓடி வந்திருக்கிறார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் உள்ள உறவும் , பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் உள்ள உறவின் வித்தியாசத்தை உணர முடியாதவர்கள்.

Link to comment
Share on other sites

18 minutes ago, Vankalayan said:

பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு. இலங்கை அரசு ISIS தீவிரவாதத்தை இலங்கையில் இருந்து ஒழிக்க இவர்களின் உதவியை பெற்றுக்கொள்ளலாம். மத்தபடி இவர்களால் ஒரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை.

பாகிஸ்தான் இலங்கையின் நட்பு நாடு.

18 minutes ago, Vankalayan said:

கோத்த இந்தியாவிட்கு போனதை தங்க முடியாமல்தான் இவர் இங்கு ஓடி வந்திருக்கிறார்.

ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?

இம்ரான் கான் கோத்தபாய வெற்றி பெற்ற போது வாழ்த்து தெரிவித்த போதும் சரி, மகிந்த பிரதமராக நியமிக்கப்பட்ட போது வாழ்த்து தெரிவித்த போதும் சரி, அவர்களை பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

அதற்கு முன் வெளிவிவகார அமைச்சரை இலங்கைக்கு அனுப்பியுள்ளார்.

Link to comment
Share on other sites

2 hours ago, Lara said:

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக நேற்று (01) இரவு  கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை  வந்தடைந்துள்ளார்.

இவர் பலாலி விமான நிலையத்துல இறங்கி வந்திருக்கலாம்.
இந்தியாவுக்கு காக்கை வலிப்பு வந்திருக்கும்.

Link to comment
Share on other sites

லாரா, பாகிஸ்தான் இலங்கையின் நட்ப்பு நாடோ , இல்லையோ தெரியவில்லை. ஆனல் ISIS , தலீபான், அல்கொய்தா போன்ற பயங்கரவாதிகளை உருவாக்கும் பயங்கரவாத நாடு. 

எல்லா நாடுகளும் வாழ்த்து தெரிவிக்கும், வரும்படி அழைப்பார்கள்.  ஆனல் பாகிஸ்தான்  வெளிவிவகார அமைச்சர் கடிதத்துடன் ஓடி வந்ததே இந்தியாவினால்தான். 

Link to comment
Share on other sites

5 minutes ago, Vankalayan said:

பயங்கரவாதிகளை உருவாக்கும் பயங்கரவாத நாடு. 

பயங்கரவாத அரசுகளை உருவாக்கும் நாடு இந்தியா.

Link to comment
Share on other sites

15 minutes ago, Vankalayan said:

லாரா, பாகிஸ்தான் இலங்கையின் நட்ப்பு நாடோ , இல்லையோ தெரியவில்லை. ஆனல் ISIS , தலீபான், அல்கொய்தா போன்ற பயங்கரவாதிகளை உருவாக்கும் பயங்கரவாத நாடு. 

சீனா, பாகிஸ்தான் இரண்டும் இலங்கையின் நட்பு நாடுகள்.

ISIS, தலிபான், அல்கெய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளை உருவாக்குவது அமெரிக்க CIA. 

Link to comment
Share on other sites

5 minutes ago, Vankalayan said:

எல்லா நாடுகளும் வாழ்த்து தெரிவிக்கும், வரும்படி அழைப்பார்கள்.  ஆனல் பாகிஸ்தான்  வெளிவிவகார அமைச்சர் கடிதத்துடன் ஓடி வந்ததே இந்தியாவினால்தான். 

நீங்கள் அவ்வாறு நினைக்கிறீர்கள். நான் அவ்வாறு நினைக்கவில்லை.

வாழ்த்து தெரிவிப்பது, வருமாறு அழைப்பது போல் கடிதத்துடன் வருவதும் சாதாரணம். 

சீனா ஏற்கனவே சீன தூதுவர் மூலம் கடிதத்தை கொடுத்திருந்தது. (கோத்தா இந்தியாவுக்கு செல்ல முதல்).

Link to comment
Share on other sites

18 hours ago, Gowin said:

பயங்கரவாத அரசுகளை உருவாக்கும் நாடு இந்தியா.

நிச்சயமாக. இந்திய ஒரு இந்துத்வ பயங்கரவாத நாடு. இருந்தாலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை உருவாக்கும் நாடு.

Link to comment
Share on other sites

18 hours ago, Lara said:

சீனா, பாகிஸ்தான் இரண்டும் இலங்கையின் நட்பு நாடுகள்.

ISIS, தலிபான், அல்கெய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளை உருவாக்குவது அமெரிக்க CIA. 

சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையின் நடப்பு நாடுகளாக இருக்கலாம்.

பயங்கரவாத அமைப்புக்களை உருவாக்குவது அமெரிக்கா CIA ஆக இருக்கலாம். இருந்தாலும் பயங்கரவாதிகளை உருவாக்குவது பாகிஸ்தான்.

18 hours ago, Lara said:

நீங்கள் அவ்வாறு நினைக்கிறீர்கள். நான் அவ்வாறு நினைக்கவில்லை.

வாழ்த்து தெரிவிப்பது, வருமாறு அழைப்பது போல் கடிதத்துடன் வருவதும் சாதாரணம். 

சீனா ஏற்கனவே சீன தூதுவர் மூலம் கடிதத்தை கொடுத்திருந்தது. (கோத்தா இந்தியாவுக்கு செல்ல முதல்).

சீனா சீன தூதுவர்மூலம்தான் கடிதம் கொடுத்தது. அமைச்சர் ஓடி வரவில்லை. அவ்வாறு பாகிஸ்தானும் செய்திருக்கலாம். ஏன் அப்படி செய்யவில்லை? இந்தியாதான் காரணம்.

Link to comment
Share on other sites

2 hours ago, Vankalayan said:

சீனா சீன தூதுவர்மூலம்தான் கடிதம் கொடுத்தது. அமைச்சர் ஓடி வரவில்லை. அவ்வாறு பாகிஸ்தானும் செய்திருக்கலாம். ஏன் அப்படி செய்யவில்லை? இந்தியாதான் காரணம்.

சீனா செய்வது போல் தான் பாகிஸ்தானும் செய்ய வேண்டுமோ?

இப்பொழுது சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக இலங்கைக்கான முன்னாள் சீன தூதுவரும் வெளிவிவகார அமைச்சர் சார்பில் இலங்கைக்கு வந்துள்ளார். 😀 அப்ப அது பிரச்சினையில்லையா?

நீங்கள் நினைப்பது போல் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வந்ததற்கு இந்தியா காரணமல்ல.

புலிகளையும் தமிழர்களையும் கொல்ல பாகிஸ்தானும் ஆயுதங்கள் வழங்கிய நாடு. தவிர அது இலங்கையின் நட்பு நாடு.

Link to comment
Share on other sites

1 hour ago, Vankalayan said:

பயங்கரவாத அமைப்புக்களை உருவாக்குவது அமெரிக்கா CIA ஆக இருக்கலாம். இருந்தாலும் பயங்கரவாதிகளை உருவாக்குவது பாகிஸ்தான்.

பிரித்தானியாவும் அமெரிக்காவும் சேர்ந்து பாகிஸ்தானை உருவாக்கியதே மத்திய கிழக்கில் பிரச்சினைகளை உருவாக்கவும், USSR க்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்ளவும்.

பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து பிரித்தானிய, அமெரிக்க உளவுத்துறைகள் பாகிஸ்தானுக்குள் உள்ளன.

USSR இந்தியா பக்கம் நின்ற போது அமெரிக்கா பாகிஸ்தான் பக்கம் நின்றது.

இந்திய RAW இஸ்ரேலிய Mossad உடன் இணைந்து செயற்படுவது போல் பாகிஸ்தானிய ISI அமெரிக்க CIA உடன் இணைந்து செயற்படுகிறது.

ISIS, தலிபான், அல் கெய்தா போன்ற அமைப்புகளை உருவாக்கியது, அதில் இணைவோருக்கு பயிற்சிகள் வழங்கியது அமெரிக்க CIA. அவர்களை பயன்படுத்துவது அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி போன்ற நாடுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்துக்கும் காரணம் இந்த இலுமினாட்டிகள்தான்

Link to comment
Share on other sites

1 hour ago, colomban said:

எல்லாத்துக்கும் காரணம் இந்த இலுமினாட்டிகள்தான்

நான் இலுமினாட்டிகள் பற்றி இங்கு கதைக்கவில்லையே.

முன்னர் இன்னொரு திரியில் இதை உங்களுக்கு இணைத்திருந்தேன். நீங்கள் பார்க்கவில்லை போல.

Link to comment
Share on other sites

3 hours ago, Lara said:

சீனா செய்வது போல் தான் பாகிஸ்தானும் செய்ய வேண்டுமோ?

இப்பொழுது சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக இலங்கைக்கான முன்னாள் சீன தூதுவரும் வெளிவிவகார அமைச்சர் சார்பில் இலங்கைக்கு வந்துள்ளார். 😀 அப்ப அது பிரச்சினையில்லையா?

நீங்கள் நினைப்பது போல் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு வந்ததற்கு இந்தியா காரணமல்ல.

புலிகளையும் தமிழர்களையும் கொல்ல பாகிஸ்தானும் ஆயுதங்கள் வழங்கிய நாடு. தவிர அது இலங்கையின் நட்பு நாடு.

சீனாவைப்போல பாகிஸ்தான் செய்யவேண்டுமென்று சொல்லவில்லை. இந்தியாவைப்போல செய்யவேண்டுமென்று பாகிஸ்தான் நினைக்கிறது.

மத்தபடி சீன தூதுவர் வந்தாரோ , ரஷ்யா தூதுவர் வந்தாரோ என்பதல்ல பிரச்சினை. பாகிஸ்தான் மட்டுமல்ல , உலகின் எல்லா நாடுகளுமே இலங்கையின் நடப்பு நாடுகள்தான்.

எந்த எந்த நாடுகளில் இலங்கை ஆயுதம் கேடடதோ எல்லோருமே தாராளமாக அள்ளி கொடுத்தார்கள். சிலர் முன் கதவால் கொடுத்தார்கள். சிலர் பின் கதவால் கொடுத்தார்கள். 

Link to comment
Share on other sites

3 hours ago, Lara said:

பிரித்தானியாவும் அமெரிக்காவும் சேர்ந்து பாகிஸ்தானை உருவாக்கியதே மத்திய கிழக்கில் பிரச்சினைகளை உருவாக்கவும், USSR க்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்ளவும்.

பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து பிரித்தானிய, அமெரிக்க உளவுத்துறைகள் பாகிஸ்தானுக்குள் உள்ளன.

USSR இந்தியா பக்கம் நின்ற போது அமெரிக்கா பாகிஸ்தான் பக்கம் நின்றது.

இந்திய RAW இஸ்ரேலிய Mossad உடன் இணைந்து செயற்படுவது போல் பாகிஸ்தானிய ISI அமெரிக்க CIA உடன் இணைந்து செயற்படுகிறது.

ISIS, தலிபான், அல் கெய்தா போன்ற அமைப்புகளை உருவாக்கியது, அதில் இணைவோருக்கு பயிற்சிகள் வழங்கியது அமெரிக்க CIA. அவர்களை பயன்படுத்துவது அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி போன்ற நாடுகள்.

எனக்கும் இந்த சரித்திரம் தெரியும். பாகிஸ்தான் மட்டுமல்ல மத்தியகிழக்கில் உள்ள எல்லா நாடுகளையும் அமெரிக்காவும் , பிரித்தானியாவும் திடடமிட்டு உருவாக்கியதுதான். ஏன் இஸ்ரேலும் பிரிடிஷ் சாம்ராஜ்ஜியத்தின் உருவாக்கம்தான்.

எப்படி இருந்தபோதிலும் இந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானில்தான் உருவாக்கப்படுகிறார்கள்.

அவர்களுக்கு அமெரிக்காவோ , சீனாவோ , பிரிட்டிஷாரோ , ரஷ்யாரோ யாருமே பயிர்ச்சி கொடுக்கலாம். பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் உருவாக்கப்படுகிறார்கள். 

Link to comment
Share on other sites

30 minutes ago, Vankalayan said:

சீனாவைப்போல பாகிஸ்தான் செய்யவேண்டுமென்று சொல்லவில்லை. இந்தியாவைப்போல செய்யவேண்டுமென்று பாகிஸ்தான் நினைக்கிறது.

நீங்கள் அவ்வாறு நினைக்கிறீர்கள்.

உண்மையில் இந்தியாவை போல் பாகிஸ்தான் செய்ய வேண்டுமென நினைக்கவில்லை. 

30 minutes ago, Vankalayan said:

மத்தபடி சீன தூதுவர் வந்தாரோ , ரஷ்யா தூதுவர் வந்தாரோ என்பதல்ல பிரச்சினை. பாகிஸ்தான் மட்டுமல்ல , உலகின் எல்லா நாடுகளுமே இலங்கையின் நடப்பு நாடுகள்தான்.

உலகின் எல்லா நாடுகளும் இலங்கையின் நட்பு நாடுகள் அல்ல. இந்தியா நட்பு நாடு அல்ல. இலங்கை தனது தேவைக்கு மட்டுமே அதை பயன்படுத்துகிறது. சீனா, பாகிஸ்தான் இலங்கையின் நட்பு நாடுகள்.

30 minutes ago, Vankalayan said:

எந்த எந்த நாடுகளில் இலங்கை ஆயுதம் கேடடதோ எல்லோருமே தாராளமாக அள்ளி கொடுத்தார்கள். சிலர் முன் கதவால் கொடுத்தார்கள். சிலர் பின் கதவால் கொடுத்தார்கள். 

ஆயுதங்கள் கொடுத்ததால் பாகிஸ்தான் நட்பு நாடு என நான் கூற வரவில்லை. ஆயுதங்களையும் கொடுத்தது. அதை விட நட்பு நாடு என கூற வந்தேன். அதனால் தான் “தவிர” என்ற சொல்லையும் பயன்படுத்தினேன்.

20 minutes ago, Vankalayan said:

எனக்கும் இந்த சரித்திரம் தெரியும். பாகிஸ்தான் மட்டுமல்ல மத்தியகிழக்கில் உள்ள எல்லா நாடுகளையும் அமெரிக்காவும் , பிரித்தானியாவும் திடடமிட்டு உருவாக்கியதுதான். ஏன் இஸ்ரேலும் பிரிடிஷ் சாம்ராஜ்ஜியத்தின் உருவாக்கம்தான்.

யூதர்கள் தமது பைபிளில் கூறப்பட்டுள்ள “இஸ்ரேல்” என்ற நாட்டை உருவாக்க நினைத்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு UN ஐ வைத்து தான் இறுதியில் உருவாக்கினார்கள்.

Link to comment
Share on other sites

22 minutes ago, Vankalayan said:

எப்படி இருந்தபோதிலும் இந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானில்தான் உருவாக்கப்படுகிறார்கள்.

அவர்களுக்கு அமெரிக்காவோ , சீனாவோ , பிரிட்டிஷாரோ , ரஷ்யாரோ யாருமே பயிர்ச்சி கொடுக்கலாம். பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் உருவாக்கப்படுகிறார்கள். 

தமிழ் போராட்ட இயக்கங்களுக்கும் பலர் பயிற்சிகள் வழங்கினார்கள். ஆனாலும் அவர்கள் தமிழ் பயங்கரவாதிகள் என்பது போல் உள்ளது இக்கருத்து.

Link to comment
Share on other sites

இந்திய பயணம் முடிந்து மூச்சு விடுவதற்குள், அதன் பரம எதிரியான பாகிஸ்தான் சிங்களம் வந்து போயுள்ளது. 

இதன் மூலம், சிங்களம் மோடியின் இந்தியாவிற்கு நட்பு என தெரிவித்து விட்டு அதன் பரம எதிரியுடன் கதைப்பது என்பது மூலம் சிங்களம் இந்தியாவிற்கு சவாலாகாவே உள்ளது. 

Link to comment
Share on other sites

18 hours ago, Lara said:

தமிழ் போராட்ட இயக்கங்களுக்கும் பலர் பயிற்சிகள் வழங்கினார்கள். ஆனாலும் அவர்கள் தமிழ் பயங்கரவாதிகள் என்பது போல் உள்ளது இக்கருத்து.

பயங்கரவாதிளுக்கும் , போராளிகளுக்கும் உள்ள வித்தியாசம் சிலருக்கு தெரிவதில்லை। புலி போராளிகள் எங்கு பயிர்ச்சி பெற்றாலும் அவர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதில்லை। அவர்கள் இலங்கை ராணுவத்துடன் சண்டையிட்ட்து தங்களது உரிமையை, தனித்துவத்தை காத்துக்கொள்வதட்காக।

பயங்கரவாதிகள் அப்படி அல்ல। அவர்களது நோக்கம் உலகம் முழுவதும் உள்ள மக்களை கொலை செய்வது, உயிருடன் எரிப்பது, விமானத்தை கடத்தி கடடடங்களை தகர்ப்பது போன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது।

பாலஸ்தீனிய போராளிகள் தங்கள் நாட்டுக்காக, உரிமைக்காக போராடுவது பயங்கரவாதம் இல்லை। ஆனால் பிற நாடுகளில் சென்று மக்களை கொலை செய்து தங்கள் வெறியை தீர்த்துக்கொள்ளுவது பயங்கரவாதம்। 

ஆனால் பாகிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்குத்தான் பயிட்சி கொடுக்கிறது। அவர்கள் போராளிகளுக்கு பயிட்சி கொடுப்பதில்லை।

Link to comment
Share on other sites

18 hours ago, Lara said:

நீங்கள் அவ்வாறு நினைக்கிறீர்கள்.

உண்மையில் இந்தியாவை போல் பாகிஸ்தான் செய்ய வேண்டுமென நினைக்கவில்லை. 

உலகின் எல்லா நாடுகளும் இலங்கையின் நட்பு நாடுகள் அல்ல. இந்தியா நட்பு நாடு அல்ல. இலங்கை தனது தேவைக்கு மட்டுமே அதை பயன்படுத்துகிறது. சீனா, பாகிஸ்தான் இலங்கையின் நட்பு நாடுகள்.

ஆயுதங்கள் கொடுத்ததால் பாகிஸ்தான் நட்பு நாடு என நான் கூற வரவில்லை. ஆயுதங்களையும் கொடுத்தது. அதை விட நட்பு நாடு என கூற வந்தேன். அதனால் தான் “தவிர” என்ற சொல்லையும் பயன்படுத்தினேன்.

யூதர்கள் தமது பைபிளில் கூறப்பட்டுள்ள “இஸ்ரேல்” என்ற நாட்டை உருவாக்க நினைத்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு UN ஐ வைத்து தான் இறுதியில் உருவாக்கினார்கள்.

நீங்கள் அவ்வாறு நினைக்கவிடடாலும் அவர்கள் இந்தியா செய்ததை போலவே செய்தார்கள்।

புலிகளுடனான யுத்த காலத்தில் சில கசப்புக்கள் இருந்தாலும் இப்போது இந்திய இலங்கையின் நெருங்கிய நடப்பு நாடு

। பாகிஸ்தான் இலங்கைக்கு ஆயுதம் மட்டுமல்ல , அதோடு சேர்த்து போதைவஸ்துக்களையும் இஸ்லாமிய பயங்கரவாதத்தையும் கொடுத்தது। இன்று இலங்கை சிறையில் உள்ள போதை வாஸ்து காரர்களில் அநேகமானவர்கள் இஸ்லாமியர்களும் பாகிஸ்தானியர்களும்தான்

। இஸ்ரவேலர்கள் உலகம் முழுவதும் சிதறடிக்கப்படட போது அவர்களுக்கு ஒரு நாடு இல்லாமலிருந்தது। அப்போது பலஸ்தீன என்ற இப்போது இஸ்ரேல் இருக்குமிடம் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இருந்தது। அப்போதுதான் இவர்களை பிரிட்டிஷார் முதலில் இங்கு குடியேத்தினார்கள் அதன் பின்னர் ஐக்கிய நாடுகள் இவர்களுக்கு அங்கீகாரத்தை வழங்கியது। உண்மையாகவே இவர்கள் சிதறடிக்கப்படுமுன்னர் பலஸ்தீன, ஜோர்டான்,சிரியா போன்ற எல்லா இடங்களும் இவர்களுடையதாக இருந்தது। இப்போது இவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு திரும்பி இருக்கிறார்கள்।

Link to comment
Share on other sites

53 minutes ago, Vankalayan said:

பயங்கரவாதிளுக்கும் , போராளிகளுக்கும் உள்ள வித்தியாசம் சிலருக்கு தெரிவதில்லை। புலி போராளிகள் எங்கு பயிர்ச்சி பெற்றாலும் அவர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதில்லை। அவர்கள் இலங்கை ராணுவத்துடன் சண்டையிட்ட்து தங்களது உரிமையை, தனித்துவத்தை காத்துக்கொள்வதட்காக।

பயங்கரவாதிகள் அப்படி அல்ல। அவர்களது நோக்கம் உலகம் முழுவதும் உள்ள மக்களை கொலை செய்வது, உயிருடன் எரிப்பது, விமானத்தை கடத்தி கடடடங்களை தகர்ப்பது போன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது।

பாலஸ்தீனிய போராளிகள் தங்கள் நாட்டுக்காக, உரிமைக்காக போராடுவது பயங்கரவாதம் இல்லை। ஆனால் பிற நாடுகளில் சென்று மக்களை கொலை செய்து தங்கள் வெறியை தீர்த்துக்கொள்ளுவது பயங்கரவாதம்। 

ஆனால் பாகிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்குத்தான் பயிட்சி கொடுக்கிறது। அவர்கள் போராளிகளுக்கு பயிட்சி கொடுப்பதில்லை।

பயங்கரவாதிகளுக்கும் போராளிகளுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியும். ஆனால் உலகம் சொல்வது பற்றியே எனது கருத்து.

அமெரிக்கா உட்பட பல நாடுகள் இன்னும் புலிகளை பயங்கரவாத பட்டியலில் வைத்துள்ளன.

https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/397.html

புலிகள் உட்பட்ட போராளி குழுக்களுக்கு பயிற்சி கொடுத்து அவற்றை தமது தேவைக்கு ஆரம்பத்தில் உளவு அமைப்புகள் பயன்படுத்தின.

புலிகள் தற்கொலைத்தாக்குதலை நடத்தியதை பார்த்து தான் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் தற்கொலைத்தாக்குதல் நடந்த வெளிக்கிட்டன என்றே உலகம் சொல்கிறது. ஆனால் புலிகளுக்கு தற்கொலைத்தாக்குதல் நடத்த பயிற்சி கொடுத்தது போல் இவ் உளவு அமைப்புகள் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு பயிற்சிகள் கொடுத்து அவற்றை தமது தேவைக்கு பயன்படுத்துகின்றன.

ராஜீவ் காந்தி, பிரேமதாசா போன்றோரை உளவு அமைப்புகள் கொன்று விட்டு (அதற்கு புலிகளை பயன்படுத்தினார்களா, இல்லையா என்ற விவாதம் இங்கு வேண்டாம்) பழியை புலிகள் மேல் போடாமல் விட்டிருந்தால் புலிகள் பயங்கரவாத பட்டியலில் இணைக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

பயங்கரவாதிகள் மக்களை கொல்வதற்கு அவர்களுக்கு பயிற்சி, நிதி உதவி செய்து, அவர்களை பயன்படுத்தும் CIA போன்ற உளவு அமைப்புகளால் தான் இன்று உலகத்தில் இஸ்லாமிய தீவிரவாதம் உள்ளது.

இஸ்லாத்தை அழிக்க வஹாபிஸத்தை உருவாக்கியது பிரித்தானியா.

இப்படியான நாடுகளே குற்றம் சாட்டப்பட வேண்டியன.

36 minutes ago, Vankalayan said:

நீங்கள் அவ்வாறு நினைக்கவிடடாலும் அவர்கள் இந்தியா செய்ததை போலவே செய்தார்கள்।

புலிகளுடனான யுத்த காலத்தில் சில கசப்புக்கள் இருந்தாலும் இப்போது இந்திய இலங்கையின் நெருங்கிய நடப்பு நாடு

ராஜபக்ச குடும்பத்துக்கும் பாகிஸ்தானுக்கும் நீண்டகால தொடர்பு உள்ளது.

Link to comment
Share on other sites

49 minutes ago, Vankalayan said:

பாகிஸ்தான் இலங்கைக்கு ஆயுதம் மட்டுமல்ல , அதோடு சேர்த்து போதைவஸ்துக்களையும் இஸ்லாமிய பயங்கரவாதத்தையும் கொடுத்தது। இன்று இலங்கை சிறையில் உள்ள போதை வாஸ்து காரர்களில் அநேகமானவர்கள் இஸ்லாமியர்களும் பாகிஸ்தானியர்களும்தான்

இந்தியாவிலிருந்தும் போதைவஸ்துகள் வருகின்றன. ஈஸ்ரர் குண்டு தாக்குதலை நடத்தியவர்கள் இந்தியாவிலும் பயிற்சி பெற்றவர்கள்.

CIA, Mossad கூட போதைப்பொருட்களை விநியோகிக்கிறது. 

https://en.m.wikipedia.org/wiki/Allegations_of_CIA_drug_trafficking 

50 minutes ago, Vankalayan said:

இஸ்ரவேலர்கள் உலகம் முழுவதும் சிதறடிக்கப்படட போது அவர்களுக்கு ஒரு நாடு இல்லாமலிருந்தது। அப்போது பலஸ்தீன என்ற இப்போது இஸ்ரேல் இருக்குமிடம் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இருந்தது। அப்போதுதான் இவர்களை பிரிட்டிஷார் முதலில் இங்கு குடியேத்தினார்கள் அதன் பின்னர் ஐக்கிய நாடுகள் இவர்களுக்கு அங்கீகாரத்தை வழங்கியது। உண்மையாகவே இவர்கள் சிதறடிக்கப்படுமுன்னர் பலஸ்தீன, ஜோர்டான்,சிரியா போன்ற எல்லா இடங்களும் இவர்களுடையதாக இருந்தது। இப்போது இவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு திரும்பி இருக்கிறார்கள்

இஸ்ரவேலர்கள் கூறும் வரலாறு எனக்கு தெரியும். ஆனால் இன்று இஸ்ரேலை ஆள்பவர்கள் முன்னைய இஸ்ரவேலர்களின் சந்ததிகள் அல்ல. இஸ்ரவேலர்கள் உண்மையில் கறுப்பினத்தவர்கள்.

பிரிட்டிஷ்காரங்கள் யூதர்களை பலஸ்தீனத்தில் குடியேற்ற முன் ஹிட்லர் குடியேற்றியவர்.

https://en.m.wikipedia.org/wiki/Haavara_Agreement

ஹிட்லருக்கெதிராக உலக யூதர்கள் ஒன்று திரட்டிய நாடுகள் தான் UN ஆக உருவானது. அந்த UN ஐ வைத்து தான் இறுதியில் இஸ்ரேலை பெற்றார்கள்.

Link to comment
Share on other sites

25 minutes ago, Lara said:

பயங்கரவாதிகளுக்கும் போராளிகளுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியும். ஆனால் உலகம் சொல்வது பற்றியே எனது கருத்து.

அமெரிக்கா உட்பட பல நாடுகள் இன்னும் புலிகளை பயங்கரவாத பட்டியலில் வைத்துள்ளன.

https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/397.html

புலிகள் உட்பட்ட போராளி குழுக்களுக்கு பயிற்சி கொடுத்து அவற்றை தமது தேவைக்கு ஆரம்பத்தில் உளவு அமைப்புகள் பயன்படுத்தின.

புலிகள் தற்கொலைத்தாக்குதலை நடத்தியதை பார்த்து தான் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் தற்கொலைத்தாக்குதல் நடந்த வெளிக்கிட்டன என்றே உலகம் சொல்கிறது. ஆனால் புலிகளுக்கு தற்கொலைத்தாக்குதல் நடத்த பயிற்சி கொடுத்தது போல் இவ் உளவு அமைப்புகள் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு பயிற்சிகள் கொடுத்து அவற்றை தமது தேவைக்கு பயன்படுத்துகின்றன.

ராஜீவ் காந்தி, பிரேமதாசா போன்றோரை உளவு அமைப்புகள் கொன்று விட்டு (அதற்கு புலிகளை பயன்படுத்தினார்களா, இல்லையா என்ற விவாதம் இங்கு வேண்டாம்) பழியை புலிகள் மேல் போடாமல் விட்டிருந்தால் புலிகள் பயங்கரவாத பட்டியலில் இணைக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

பயங்கரவாதிகள் மக்களை கொல்வதற்கு அவர்களுக்கு பயிற்சி, நிதி உதவி செய்து, அவர்களை பயன்படுத்தும் CIA போன்ற உளவு அமைப்புகளால் தான் இன்று உலகத்தில் இஸ்லாமிய தீவிரவாதம் உள்ளது.

இஸ்லாத்தை அழிக்க வஹாபிஸத்தை உருவாக்கியது பிரித்தானியா.

இப்படியான நாடுகளே குற்றம் சாட்டப்பட வேண்டியன.

ராஜபக்ச குடும்பத்துக்கும் பாகிஸ்தானுக்கும் நீண்டகால தொடர்பு உள்ளது.

புலிகளை பயங்கரவாதிகள் என்று வேறு நாடுகள் கூறினாலும் இவர்கள் இலங்கையத் தவிர வேறு நாடுகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடவில்லை. இவர்கள் தமிழர்களின் உரிமைகளுக்காகவே இலங்கையில் அப்படி செய்தார்கள். அரசாங்கம் சடடப்படி யுத்தம் செய்ததை என்ற கேள்வியும் எழும்.

ஆனாலும் பாகிஸ்தான் போராளிகளை அல்ல பயங்கரவாதிகளுக்கே பயிர்ச்சி கொடுக்கிறது. அது அமெரிக்காவாக , பிரிடிஷாக இருக்கலாம். அதை தடை செய்யும் பொறுப்பு பாகிஸ்தானுக்கு உண்டு.

 நேற்று சுவீடிஷ் அரசு கொடுத்த தீர்ப்பையும் கொஞ்சம் ஆராய்ந்தால் நல்லது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.