Jump to content

நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்ப கெட்டுப் போச்சு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

கோஸ்டிச் சண்டை குழுச் சண்டை என்று சினிமாவில் நிறையப் பார்த்திருக்கிறோம். கதாநாயகன் எதிராளியையும் அவனது அடியாட்களையும் அடித்து துவம்சம் செய்யும் வரை சினிமாவில் போலீஸ் வரவே வராது.

ஆனால் நிஜத்தில் அது வேறு விதமாக இருக்கிறது. யேர்மனியில் Bochum என்ற நகரில் உள்ள Lidl என்கிற சூப்பர்மார்க்கெட்டின்  வாகனங்கள் நிறுத்துமிடத்தில் 01.12.2019 ஞாயிற்றுக்கிழமை இரண்டு குழுக்கள் மோதிக்கொண்டன. எதற்காக மோதிக் கொண்டார்கள் என்பதற்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை.

Baseball bat, கோடாரி என்று பல ஆயுதங்களுடன் மோதல் நடந்திருக்கிறது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்திருக்கிறார். பலருக்கு சில வீரவடுக்கள் மட்டுமே. சினிமாபோல் அல்லாமல் சண்டை நடக்கும் போதே போலீஸ் வந்துவிட சண்டையை அப்படியே விட்டு விட்டு  மோதிக்கொண்டவர்கள் சிதறி ஓடியிருக்கிறார்கள். ஓடியவர்களில் சிலரை துரத்திப் பிடித்து பொலீஸ் கைது செய்தது.  ஓடியவர்களில் ஒருவர் தனது காரில் ஏறி அதிவேக சாலையில் பறந்திருக்கிறார். அவரை துரத்திச் சென்று போலீஸ்  கைது செய்தது. அநேகமாக அவர் குழுத் தலைவனாகக் கூட இருக்கலாம்.

மோதலில் ஈடுபட்டோரைப் பார்த்தால் வெள்ளைத் தோலாக இருக்கிறது. நம்மவர்கள் இல்லை என்பதில் சற்று ஆறுதல்.

https://www.rtl.de/cms/bochum-schwerverletzter-bei-massenschlaegerei-auf-supermarkt-parkplatz-4446910.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.