• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
ரஞ்சித்

இந்தியாவிற்கு அண்மித்த கச்சதீவுகளில் அணு உலையொன்றினை சீனா நிறுவுவதற்கு இலங்கை அனுமதி

Recommended Posts

4 hours ago, Maharajah said:

Port City 2 Mount Lavaniya ல் தொடரும் என ஒரு பேச்சு உண்டு. 

 

22 minutes ago, Lara said:

Port City ஐ Galle Face இலிருந்து Mount Lavinia வரை நீட்டிக்கும் எண்ணமிருப்பதாகவும் அதை இதனுடன் சேர்ந்து அல்லாமல் தனித்திட்டமாக முன்னெடுக்கவிருப்பதாகவும் முன்பு கூறப்பட்டது.

முழு இலங்கையை சீனாவுக்கு கொடுத்தாலும் போதாது.

2 hours ago, poet said:

இச்செய்தி இந்தியாவை ஆழம்பார்க்கும் தந்திரமாக இருக்கும். சீனாவின் ராசதந்திரம் கடைசிவரை  மாற்றாரை குழப்பிக்கொண்டிருப்பதும் திசை திருப்புவதும்தான். . தனது நண்பர்களை எதிரியின் நண்பராக காய் நகர்த்துவார்கள். சீனா வடகிழக்கு மாகாணங்களில் வீதி, புகையிரத வீதி  கட்டிடங்கள் அமைப்பதைக்கூட அமரிக்காவும் இந்தியாவும் இதுவரை அனுமதிக்கவில்லை. இலங்கையில் சீன அணிக்கும்  அமரிக்கா சக இந்தியா அணிக்குமிடையில் தென்னிலங்கை என் ஏரியா,  வடகிழக்கு  உங்க ஏரியா என்பதுபோல ஒரு எழுதப்படாத புரிந்துணர்வு,   மோதல் தவிர்ப்பு செயற்பாடு  நிலவுகிறது. ஆதலால் கச்சதீஇல் சீன அணுமின் நிலையம்  செய்தியில் உண்மை இருக்க வாய்பெதுவும் இல்லை.

நேரத்துக்கொரு செய்தியைப் போட்டு இலங்கை தான் உலகை குழப்புகிறது.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
15 minutes ago, ஈழப்பிரியன் said:

நேரத்துக்கொரு செய்தியைப் போட்டு இலங்கை தான் உலகை குழப்புகிறது.

சிங்களத்திடம் அரசு உள்ளது, ஊடகங்கள் உள்ளன, ..
எம்மிடம் அவை எதுவும் இல்லை. நாம் மட்டுமே ...

எனது பார்வையில், முடிந்தளவுக்கு நாம் இதை இந்திய நண்பர்கள் மத்தியில் சமூக வலை தளங்கள் ஊடாக சேர்த்துவிட வேண்டும். நல்லது நடக்கலாம்.

  

Share this post


Link to post
Share on other sites

மேலே உள்ள செய்தியில் உள்ள சீன கம்பனி, dongfang electric corporation என்ற கம்பனி (மின்)சக்தி பிறப்பாக்கிகள் உற்பத்தியும் , மற்றும் (மின்)சக்தி உற்பத்தி நிலையம் நிர்மாணத்திலும் ஈடுபடுவது.

இங்கு, நான் சொல்வது, நான் அறிந்தவற்றை கொண்டு அடைந்த முடிவு.

அண்மையில் சொல்லி இருந்தேன், கிந்தியா தேசிய மின்விநோயாக அமைப்பை முதலீடு என்ற போர்வையில் கேட்கிறது என்று.

அதனால், கோத்தா கிந்தியவிற்கு தான் விடுத்த சவாலான, வேறு எவரும் முதலிடாவிட்டால் சீனா வரவும், நாடுகள் சீனாவை நாடுவதும் தவிர்க்க முடியாதது என்பது, யதார்த்தமாக செயற்படுத்தப்படுகிறது தோற்றப்பாட்டை  காட்டுவதற்காக இருக்கலாம்.

மேலும், கச்சத்தீவில், காற்றாலை பண்ணை அமைப்பதற்கான முன்னோடியாக இருக்கலாம். 

ஏனெனில்,    கச்சத்தீவின் புவியியல் அமைவிடம், அதாவது இரு மருங்கும் ஒப்பீட்டளவில் உள்ள பெருநிலப்பரப்புக்களின் இடையில், ஒப்பீட்டளவில் தங்கு தடையற்ற கடல்வெளி,  ஓர் wind tunnel இன் நடுவே கச்சத்தீவு  இருப்பதாக உள்ளது.

Related image

Edited by Kadancha
add info

Share this post


Link to post
Share on other sites

கோத்தா தனது டெல்லி பிரயாணத்தில் இந்தியாவிற்கு கூறிய விடயங்களில் இந்தியாவின் வெளிவிவகார கொள்கைக்கு அமையாதவை : 

1. சீனாவுடனும் பொருளாதார அபிவிருத்திகளை சிங்களம் தொடரும்

2. பாகிஸ்தானுடனும் உறவுகளை பேணும் 

ஆனால், இவை இந்தியாவிற்கு பாதிப்பில்லாத வழியில் செய்யப்படும் என்பதாகும். ஆனால், அதை இந்தியா நம்ப தயாராகவில்லை. 13 என மோடி கூறினாலும் அதையும் கோத்தா ஏற்கவில்லை.  எனவே, இந்திய வெளிவிவாகர கொள்கையில் மாற்றம் வந்தாகவேண்டும்.   

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, நிழலி said:

லங்கா நியூஸ் போலியான செய்தியாகவே இருக்க 99 வீத வாய்ப்புகள் உள்ளன. கோத்தாவும் சரி, சிங்கள புத்திசீவிகளும் சரி தம் தலையில் தாமே மண்ணை போடக் கூடியவர்கள் அல்ல.  அத்துடன் கச்ச தீவு போன்ற நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்ட ஒரு சிறு தீவில் அணுமின் நிலையம் போன்ற அமைக்கும் அளவுக்கு சீனாவும் முட்டாள் கிடையாது என்றே நினைக்கின்றேன்.

இந்திய இலங்கை உடன்படிக்கையின்படி அப்படி அங்கு ஒன்றும் செய்ய முடியாது. இது ஒரு பொய்யான செய்தி. அதுவும் சீன அங்கு இந்த அணு உலையை அமைப்பதென்பது கடைந்தெடுத்த பொய். 

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, ஈழப்பிரியன் said:

 

முழு இலங்கையை சீனாவுக்கு கொடுத்தாலும் போதாது.

நேரத்துக்கொரு செய்தியைப் போட்டு இலங்கை தான் உலகை குழப்புகிறது.

திரு ஈழப்பிரியன் , நீங்கள் மேலே ”இலங்கை” என்பதை ”சீன ராசதந்திரிகளின் வழிநடத்தலில் இலங்கை” என்றே நான் கூற முனைகிறேன். 

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, ampanai said:

சிங்களத்திடம் அரசு உள்ளது, ஊடகங்கள் உள்ளன, ..
எம்மிடம் அவை எதுவும் இல்லை. நாம் மட்டுமே ...

எனது பார்வையில், முடிந்தளவுக்கு நாம் இதை இந்திய நண்பர்கள் மத்தியில் சமூக வலை தளங்கள் ஊடாக சேர்த்துவிட வேண்டும். நல்லது நடக்கலாம்.

 

இந்தச் செய்தியே போலியானது என்பதை கூகிளில் தேடினால் தெரியும். ஒரு நம்பிக்கையான reference உம் இல்லாத  fake news செய்தியை சமூக வலைத்தளங்களில் பரப்ப முனைவது ஆபத்தானது. நல்லது நடக்கும் என்பதை விட புருடாக்காரர்கள் என்ற பெயர்தான் வந்து சேரும்!

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.