• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ampanai

கிறிஸ்தவ ஆலயத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் பரிதாபமாக பலி

Recommended Posts

 
பர்கினோ பாசோ நாட்டில் கிறிஸ்தவ ஆலயத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் பரிதாபமாக பலியாகினர்.

ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள அந்நாட்டின் கிழக்குப்பகுதியின் ஹண்டொகுவோரா நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.‘ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

அதன் பின்னர் ஆலயத்தில் இருந்து சிறிது தொலைவில் இருந்த பாதுகாப்பு படைகளையும் தாக்கினர். இதில் 3 அதிகாரிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை’.

https://www.polimernews.com/dnews/91113/கிறிஸ்தவ-ஆலயத்தில்பயங்கரவாதிகள்-நடத்தியதாக்குதலில்-14-பேர்பரிதாபமாக-பலி

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • பிரித்தானியாவை பொறுத்தவரை, இலங்கை தீவு பற்றிய கொள்கை மாறவில்லை. கட்சிகளின் விஞ்ஞாபனமும், அந்த கொள்கைகளுக்கு வளைந்து கொடுக்கும் அளவிலேயே உள்ளது. ஆங்கில இலக்கணப்படி, இரு தேசம் என்ற கான்செர்வ்டிவ் இன் விஞ்ஞாபனமும் மத்திய கிழக்கிற்கே பொருந்தும். இதை முன்பே இங்கு வேறு திரியில் சொல்லிவிட்டேன்.   மாறாக, கான்செர்வ்டிவ் இற்கு, இலங்கை பிரித்தனியாரிடம்  இருந்த போது, இலங்கையை விட்டு பிரித்தானியர் போகும் தறுவாயில் பிரித்தானியாவில்  காலூன்றிய சிங்களவர்கள்  ( இவர்கள் எல்லோருமே பிரித்தானியாவின், மற்றும் ஆங்கிலேயரின் தயவில் இலங்கையின் புதிய பொருளாதாரத்தில் கடை முதலாளித்துவ மற்றும் உயர் நடுத்தர குழாமாக வந்தவர்கள்), மற்றும் அந்த சிங்களவர்களின்   சந்ததிகளின் ஆதரவும், இப்போதைய சிங்களவர்களின் ஆதரவும் உண்டு. இரு தேசம் என்று விஞ்ஞாபனத்தில் வந்ததை பார்த்து, இந்த சிங்களவர்கள் எல்லோரும் விஞ்ஞாபன வசனத்தை மாற்றுவதற்கு கடும் பிரயத்தனம் செய்தார்கள். ஆயினும், கான்செர்வ்டிவ்வ் கட்சி அதற்கு இணங்காமல், அவர்களின் முயற்சியை புறம் தள்ளி விட்டது. ஆனாலும், முன்பு நான் வேறு திரியில் கூறியது போல, ஸ்ரீ லங்கா, மத்திய கிழக்கு மற்றும் சைப்ரஸ் உடன் வகைப்படுத்தப்பட்டதற்கு காரணம், இறுதி தீர்வுகள் இவற்றிற்கு ஒரே வடிவத்திலேயே இருக்கும் என்பதால் என்பது கான்செர்வ்டிவ் கட்சியில் உள்ள தீவிர செல்வாக்கும், நிலையும் உள்ளவரால் சொல்லப்பட்டது. இது ஓர் சிறு பகுதிக்கே பொருந்தும்.
    • ஓம், ஓம், அவரைப்போல இனவாதமற்ற ஆட்களை கிழக்கில் பார்க்க ஏலாது. யாராவது சொன்னா இனசனம் பாக்காமல் தமிழ் ஆட்களையும் கொல்லக் கூடியவர்.
    • ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மாவ‌ட்ட‌த்தில் முஸ்லிம்க‌ளும், த‌மிழ‌ர்க‌ளும் இணைந்து போட்டியிட்டால் ஒருவ‌ர்வெற்றிய‌டைய‌க்கூடிய‌ சாத்திய‌ம் உள்ள‌து என உல‌மா க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார்.கட்சி ஆதரவாளர்களுடன் இன்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறுக் கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும்,க‌ட‌ந்த‌ ஜ‌னாதிப‌தி தேர்த‌லில் மொட்டுக் க‌ட்சிக்கு ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மாவ‌ட்ட‌த்தில் கிடைத்த‌ வாக்குக‌ள் சுமார் 38 ஆயிர‌ம். அதேவேளை த‌னித்து போட்டியிட்ட‌ ஹிஸ்புல்லா பெற்ற‌ மொத்த வாக்குகள் 12 ஆயிர‌ம்.இவ்வாறு பார்க்கும் போது ஆளும் க‌ட்சியாக‌ இருந்த‌ ஐ.தே.க‌ கூட்டுக்கெதிராக‌ ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மாவ‌ட்ட‌த்தில் கிடைக்க‌ப்பெற்ற‌ வாக்குக‌ள் சுமார் ஐம்ப‌தினாயிர‌ம்.த‌ற்போது பெர‌முன‌ க‌ட்சியே ஆளும் க‌ட்சியாக‌ இருப்ப‌தாலும் இன்னும் 10 வ‌ருட‌ங்க‌ளுக்கு அக்க‌ட்சியை அசைக்க‌ முடியாது என்ப‌தை ம‌க்க‌ள் புரிந்திருப்ப‌தாலும் ம‌க்க‌ளின் வாக்குக‌ள் அதிக‌ரிப்ப‌த‌ற்கான‌ சாத்திய‌க்கூறுக‌ள் உள்ள‌ன‌.இந்த‌ நிலையில் பெர‌முன‌ க‌ட்சி சில‌ வேலைத்திட்ட‌ங்க‌ளை ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மாவ‌ட்ட‌த்தில் முன்னெடுத்தால் மிக‌ அதிக‌ப்ப‌டியான‌ வாக்குக‌ளை பெற‌ முடியும்.முத‌லில் முஸ்லிம் ம‌க்க‌ளுக்கெதிராக‌ இன‌வாத‌ம் பேசி வாக்குப்பெற‌ முடியாது என்ற‌ உண்மையை க‌ருணாவுக்கும், வியாழேந்திரனுக்கும் ப‌கிர‌ங்க‌மாக‌ உண‌ர்த்த‌ வேண்டும். இந்த‌ இரு இன‌ங்க‌ளுக்கிடையிலான‌ இன‌வாத‌த்தை த‌மிழ் ம‌க்க‌ளும் முஸ்லிம்க‌ளும் விரும்ப‌வில்லை என்ப‌தை க‌ட‌ந்த‌ தேர்த‌ல் உண‌ர்த்துகிற‌து.ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மாவ‌ட்ட‌த்தில் பிள்ளையானுக்கு கணிச‌மான‌ வாக்குக‌ள் உள்ள‌தால் பிள்ளையானும், ஹிஸ்புல்லாஹ்வும் இணைந்து பெர‌முன‌ க‌ட்சியில் போட்டியிட்டால் இருவ‌ரும் வெல்லும் வாய்ப்பு உள்ள‌து. பிள்ளையான் இன‌வாத‌ம‌ற்ற‌ ஒருவ‌ர் என்ப‌தை அனைவ‌ரும் அறிவ‌ர். பிள்ளையானை விடுவிப்ப‌தும் க‌ள‌ நிலைவ‌ர‌த்தை சாத‌க‌மாக்கும்.அத்துட‌ன் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மாவ‌ட்ட‌ அபிவிருத்திக்குழு த‌லைவ‌ராக‌ உள்ள‌ வியாழேந்திர‌ன் ச‌க‌ல‌ ம‌க்க‌ளுக்கும் சேவை செய்து அர‌சுக்கு ஆத‌ர‌வாக‌ த‌மிழ், முஸ்லிம்க‌ளை திருப்ப‌ வேண்டும். த‌மிழ் தேசியக் கூட்ட‌மைப்பு மீது த‌மிழ் ம‌க்க‌ளுக்கு வெறுப்புள்ள‌ இன்றைய‌ நிலையை எப்ப‌டி அர‌ச‌ சேவையின் மூல‌ம் அர‌சுக்கு ஆத‌ர‌வாக‌ மாற்ற‌லாம் என்ப‌தை ஆலோசிக்க‌ வேண்டும்.முன்னைய‌ கால‌த்தை விட‌ த‌மிழ் ம‌க்க‌ள் இப்போது உண்மையை உண‌ர்ந்து ம‌ஹிந்த ராஜ‌ப‌க்ச த‌லைமையிலான‌ பெர‌முன‌ க‌ட்சியின் ப‌க்க‌ம் திரும்பி பார்ப்ப‌தை காண‌ முடிகிற‌து. இவ்வாறு செய‌ல்ப‌ட்டால் சில‌ வேளை பெர‌முன‌ க‌ட்சி மட்டக்களப்பு மாவ‌ட்ட‌த்தை வெல்ல‌க்கூட‌ வ‌ழி வ‌குக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். https://www.madawalaenews.com/2019/12/blog-post_378.html