Jump to content

ஓராண்டு வரை கெடாமல் இருக்கும் புதிய ஆப்பிள் வகை அறிமுகம்.


Recommended Posts

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல தேவையே ஏற்படாது என்பது விஞ்ஞானிகளின் கூற்று. இந்நிலையில் ஓராண்டிற்கு கெடாமல் இருக்க கூடிய வகையில் புதிய ரக ஆப்பிள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ரகத்திற்கு காஸ்மிக் கிரிஸ்ப் என்று பெயரிடப்பட்டுள்ளது. சரியான முறையில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் பறித்தது முதல் சுமார் ஓராண்டுக்கு கெடாமல் இருக்கும் என்று ஆராயாச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த புதிய ரக ஆப்பிள் நேற்று முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஆப்பிளானது ஹனிகிரிஸ்ப் + எண்டர்ப்ரைஸ் ஆகியவற்றின் கலப்பினம். இது முதன் முதலில், 1997-ம் ஆண்டு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயிரிடப்பட்டது.

ஹனிகிரிஸ்ப் ரகமானது நல்ல இனிப்பு சுவை மிக்கது. அது போல எண்டர்ப்ரைஸ் ரகமானது நோய் எதிர்ப்பு சக்தி மிக்கது. இவற்றின் கலவையாகவே தற்போது இந்த புதிய ரக ஆப்பிள் உள்ளது. திடமான, மிருதுவான, சாறு நிறைந்த இந்த ஆப்பிளை கண்டறிந்து வணிகரீதியாக வெளியிடுவதற்கு இந்திய மதிப்பில் சுமார் 72 கோடி ரூபாய்செலவிடப்பட்டுள்ளது.

குறுக்கு மகரந்த சேர்க்கை மற்றும் தரம், சுவை உள்ளிட்ட பலகட்ட சோதனைகளுக்கு பிறகு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த காஸ்மிக் கிரிஸ்ப் ஆப்பிள் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ரக ஆப்பிளின் சிவப்பு நிற தோலின் மேல் படரும் வெள்ளை நிற புள்ளிகள், இரவுநேர வானத்தை பிரதிபலிப்பதால், காஸ்மிக் கிரிஸ்ப் என பெயரிடப்பட்டுள்ளது.

https://www.polimernews.com/dnews/91110/ஓராண்டு-வரை-கெடாமல்இருக்கும்-புதிய-ஆப்பிள்-வகைஅறிமுகம்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.