Jump to content

கல்வியில் தொடர்ந்தும் தமிழ் சிறார்கள் முன்னிலையில்


Recommended Posts

tamils.jpg

கல்வியில் தொடர்ந்தும் தமிழ் சிறார்கள் முன்னிலையில்

நோர்வே ஆரம்ப பாடசாலை கல்வியில் இலங்கை பின்புலத்தை கொண்ட தமிழ் மாணவர்கள் சராசரி புள்ளி அடிப்படையில் நோர்வேஜிய பெற்றோரின் பிள்ளைகளை விடவும் முன்னிலையில் இருப்பதாக புதிததாக வெளிவந்துள்ள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

2012 ஆண்டு தொடக்கமான தேசிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளை மையமாக வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் சில வெளிநாட்டு பின்புலத்தை கொண்ட பெற்றோரின் பிள்ளைகள் ஆரம்ப பாடசாலை கல்வியில் நோர்வே பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகளை விட முன்னணியில் இருப்பதாக Aftenposten செய்தி வெளியிட்டுள்ளது. இதிலும் குறிப்பாக இலங்கை பின்புலத்தை கொண்ட பெற்றோரின் பிள்ளைகள் ஏனைய நாட்டு பிள்ளைகளையும் விட கல்வியில் முன்னணியில் உள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெற்றோர் உயர் கல்வியை கற்றவர்களாக இருக்கும் போது அவர்களின் பிள்ளைகளும் கல்வியில் சிறந்து விளங்குவது பொதுவாக முன்னைய ஆய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ள போதும், இலங்கை பின்னணியை கொண்ட பிள்ளைகள் விடயத்தில், உயர் கல்வி தகைமை இல்லாத பெற்றோரின் பிள்ளைகளும் தேசிய சராசரி புள்ளிகளை தாண்டி முன்னிலையில் இருப்பது ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.

நோர்வேயில் இலங்கை பெற்றோரின் இரண்டாம் தலைமுறை பிள்ளைகள் கல்வியில் சிறந்து காணப்படுவது ஒன்றும் புதிதல்ல, ஆனால் இந்த முன்னேற்றம் தொடர்வதையும் அது மேலும் ஒரு படி முன்னோக்கி செல்வத்தையும் புதிய ஆய்வுகள் காட்டுகின்றன.

இரண்டு பெற்றோரும் நோர்வேஜியர்களாக (etinisk norsk) உள்ள ஒரு பிள்ளை ஆரம்ப பள்ளி முடிவில் சராசரியாக 38 புள்ளிகளை பெரும் நிலையில் தமிழ் பெற்றோரின் பிள்ளைகள் 42.5 புள்ளிகளை பெறுவதாக SSB யின் கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

ஏனைய வெளிநாட்டு பின்புலத்தை கொண்ட பிள்ளைகளை பொறுத்தமட்டில் இந்தியா வியட்னாம் சீனா,
அப்கானிஸ்தான் பெற்றோரின் பிள்ளைகள் சராசரிக்கும் மேலாக சிறந்து விளங்கும் அதேவேளை துருக்கி மொரோக்கோ கொசோவோ நாட்டு பெற்றோரின் பிள்ளைகள் குறைந்த புள்ளிகளை பெற்றுள்ளனர்.

https://oslovoice.no/tamil-norway/கல்வியில்-தொடர்ந்தும்-தம/?fbclid=IwAR36l0L3vxMi40GVwEyv1uCXEX00j3ZsdhiFzmz4YYFFuxYojJqUkvVrqGA

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில்..... தமிழனை  என்று நினைக்க, பெருமையாக உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.