Jump to content

தூதரக பணியாளரின் உடல்நிலை காரணமாக அவரை விசாரணைக்குட்படுத்த முடியாத நிலை- சுவிஸ் மீண்டும் தெரிவிப்பு


Recommended Posts

இலங்கையில் கடத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தனது தூதரக பணியாளரின் உடல்நிலை காரணமாக அவரை விசாரணைக்கு உட்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக சுவிட்சர்லாந்து மீண்டும் தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் State secretary பாஸ்கல் பெரிஸ்வில் இதனை தெரிவித்துள்ளார்.

ஜேர்மனிக்கும் சுவிட்சர்லாந்திற்குமான இலங்கையின் தூதுவர் கருணாசேன ஹெட்டியாராச்சியை சுவிட்சர்லாந்திற்கு அழைத்து தனது நாட்டின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியவேளை அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் வெளிவிவகாரத்திற்கான சமஸ்டி திணைக்களம் உரிய சட்டங்களை பயன்படுத்தி இந்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான அனைத்து  நடவடிக்கைகளிற்கும் ஆதரவளிக்கும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

உடல்நிலை காரணமாக குறிப்பிட்ட பணியாளர் இன்னமும் விசாரணைக்கு உட்படுத்த முடியாதவராக காணப்படுகின்றார் என பாஸ்கல் பெரிஸ்வில் உறுதி செய்தார்,தனிநபரின் உடல்நிலையே முக்கியமான விடயம் என அவர் வலியுறுத்தினார் என   சுவிட்சர்லாந்தின் வெளிவிவகாரத்திற்கான சமஸ்டி திணைக்களம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இலங்கை அதிகாரிகளின் விசாரணைகளை  தாமதப்படுத்தும் நோக்கம் எதுவும் சுவிட்சர்லாந்திற்கு இல்லை, சுவிட்சர்லாந்தின் வெளிவிவகாரத்திற்கான சமஸ்டி திணைக்களம தனது பணியாளர் குறித்த தனது கடமைகளை தீவிரமானதாக கருதுகின்றது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை தூதுவருடனான இந்த சந்திப்பின் போது இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கை  குறித்தும் சுவிட்சர்லாந்து அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைவெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தூதரக பணியாளர்  தொடர்பான சம்பவத்திற்கு எதிரான ஆதாரங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறித்து தூதுவரை தெளிவுபடுத்துமாறு சுவிட்சர்லாந்து அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கைக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையிலான உறவுகளில் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/70312

https://yarl.com/forum3/topic/235075-சுவிஸ்-தூதரக-பணியாளரை-விசாரணை-செய்யவேண்டும்-தூதுவரை-நேரில்-சந்தித்து-முக்கிய-அதிகாரிகள்-வேண்டுகோள்/

 

Link to comment
Share on other sites

பாதிக்கப்பட்ட சுவிஸ் தூதரக பணியாளர் நாட்டிலிருந்து வெளியேறுவதை தடுப்பதற்கு முயற்சி?

இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார் எனதெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு அரசாங்கம் உத்தியோகப்பற்றற்ற தடையை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவிஸ் தூதரக பணியாளர் தொடர்பான சர்ச்சையை தொடர்ந்து விசாரணைகள் முடிவடையும் வரை அவர் இலங்கையிலிருந்து வெளியேறுவதை தடை செய்வதற்கான உத்தியோகப்பற்றற்ற எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பிட்ட பணியாளரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்து அவரை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள்  இடம்பெறுவதாக முக்கிய அரசவட்டாரங்கள் தெரிவித்தன என டெய்லிமிரர் குறிப்பிட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானநிலைய ஊழியர்களிற்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம், நடந்தது என்னவென்பதை உறுதி செய்வதற்கு பாதிக்கப்பட்டவர் வாக்குமூலம் அளிப்பது அவசியம் என முக்கிய அரசவட்டாரங்கள் தெரிவித்தன என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.

எனினும் பாதிக்கப்பட்ட பணியாளரிடமிருந்து இதுவரை சிஐடியினர் வாக்குலம் பெறவில்லை என்;பதையும்  அரசவட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

சுவிஸ் தூதுவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சிஐடியினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள போதிலும் இதுவரை  பாதிக்கப்பட்டவரின்  அறிக்கை தமக்கு கிடைக்கவில்லை என சிஐடியினர் தெரிவிப்பதாக  டெய்லிமிரர் குறிப்பிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/70277

Link to comment
Share on other sites

சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்ட விவகாரம்: ஓரிரு வாரங்களுக்குள் உண்மைகள் வெளிப்படும் - கெஹெலிய 

(எம்.மனோசித்ரா)

இலங்கையிலுள்ள சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எதிர்வரும் ஓரிரு வாரங்களுக்குள் சாட்சியுடன் உண்மைகள் வெளிப்படுத்தப்படும் என்று முதலீட்டு மேம்பாடு இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 

இலங்கையிலுள்ள சுவிஸ் தூதரக ஊழியர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி கடத்தப்பட்டார் என்று ராஜித சேனாரத்ன கூறுவது நாட்டைக் காட்டிக் கொடுக்கும் செயலாகும். 

இவர்கள் இதற்கு முன்னரும் இவ்வாறான கீழ்தரமான அரசியலில் ஈடுபட்ட முயற்சித்து அந்த முயற்சிகள் தோல்வியடைந்தமையால் மீண்டும் அவ்வாறு செயற்பட ஆரம்பித்துள்ளனர். 

எனவே இவ்வாறு வெளிநாடுகளில் இலங்கையை காட்டி கொடுக்கும், நாட்டுக்கு அவ பெயரை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம். 

https://www.virakesari.lk/article/70313

Link to comment
Share on other sites

பக்கசார்பின்றி விசாரணைகளை முன்னெடுக்கவும்

 

கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் பணியாளர் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில், பக்கசார்பின்றி விசாரணைகளை முன்னெடுக்குமாறு, இலங்கை மனித உரிமைகள்  ஆணைக்குழு பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவரின் கையெழுத்துடன், பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்கிரமரத்னவுக்கு கடிதம் மூலம் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/பககசரபனற-வசரணகள-மனனடககவம/175-241976

Link to comment
Share on other sites

FDFA வெளியிட்ட முழு அறிக்கை,

Incident at the Swiss embassy in Sri Lanka: State Secretary Pascale Baeriswyl summons Sri Lankan ambassador to the FDFA

Following several demarches from the FDFA over the incident concerning an employee of the Swiss embassy in Colombo, State Secretary Pascale Baeriswyl has received the Sri Lankan ambassador to Switzerland based in Berlin, Karunasena Hettiarachchi, in Bern. Ms Baeriswyl confirmed at the meeting that Switzerland supports measures to investigate and settle this matter by due process of law. However, the employee concerned still cannot be questioned on health grounds.

At the end of November, a local employee at the Swiss embassy in Colombo was detained on the street and threatened by unidentified men to force her to disclose embassy-related information. The FDFA responded to this incident through a series of demarches. The embassy reported the incident to the Sri Lankan authorities, calling for a swift and thorough investigation to be conducted. 

Ms Baeriswyl emphasised to the Sri Lankan ambassador that the FDFA would support all measures to investigate and resolve this matter by due process of law. She confirmed that the employee concerned still cannot be questioned on health grounds, stressing that the individual's health must take priority. She also indicated that while Switzerland had no interest in delaying investigations by the Sri Lankan authorities, the FDFA takes its responsibilities to its staff very seriously. 

In conveying this message, Ms Baeriswyl was responding to a statement issued by the Sri Lankan Ministry of Foreign Affairs on 1 December 2019, which questioned the embassy's presentation of the facts. She also asked Ambassador Hettiarachchi to explain the purported evidence against the events described by the embassy, which the Sri Lankan Ministry of Foreign Affairs had alluded to in its press release. 

She affirmed to Ambassador Hettiarachchi that Switzerland remained ready to take the necessary steps to restore confidence between Switzerland and Sri Lanka.

https://www.fdfa.admin.ch/eda/en/fdfa/fdfa/aktuell/news.html/content/eda/en/meta/news/2019/12/2/77350?pk_campaign=communique&pk_kwd=@swissmfa

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.