Sign in to follow this  
ampanai

"இங்கிலாந்தில் கொன்சவேடிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனம் எமது நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தலாகும்"

Recommended Posts

(எம்.ஆர்.எம்.வஸீம்)

இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலுக்காக கொன்சவேடிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை இரண்டு அரசாங்கங்களாக பிரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது எமது நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்படும் பாரிய அச்சுறுத்தலாகும். இதுதொடர்பாக வெளிவிவகார அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

udaya.jpg

பிவிதுரு ஹெலஉறுமய கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 13ஆம் திகதி இடம்பெற இருக்கின்றது. இதற்காக அந்நாட்டு ஆளும் கட்சியான கொன்சவேடிவ் கட்சி கடந்த 25ஆம் திகதி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருந்தது. 

அதில் இலங்கையில் இடம்பெறும் பிரச்சினைக்கு தீர்வாக இந்த நாட்டில் இரண்டு அரசுகளை உருவாக்கவேண்டும் என தேர்தல் விஞ்ஞாபனத்தின் 53 ஆம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.   

அதாவது, உலகம் பூராகவும் நல்லிணக்கம், நிலையான தன்மை மற்றும் நீதியை நிலைநாட்ட மேற்கொள்ளும் சர்வதேச ஆரம்பகர்த்தாக்களுக்கு எமது ஆதரவை வழங்குவதுடன் சைப்ரஸ், இலங்கை, மற்றும் மத்திய கிழக்கு போன்ற தற்போது அல்லது முன்னர் இருந்த பிரச்சினை இருக்கும் வலயங்களுக்கு தீர்வாக இரண்டு அரசுகள் உருவாக எமது ஆதரவை வழங்கிவருவோம் என தெரிவிக்கப்படுள்ளது.

தமிழ் ஈழத்தை உருவாக்குவதற்கே இவர்கள் முயற்சிக்கின்றனர். இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் ஈழம் அல்லது வேறு பெயரிலோ தமிழ் அரசு ஒன்று இருந்ததில்லை. 

அதனால் இவ்வாறான அரசு ஒன்றுக்காக தலையீடு செய்வதற்கு அவர்களுக்கு எந்த நியாயமான காரணமும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

https://www.virakesari.lk/article/70340

 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ampanai said:

இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலுக்காக கொன்சவேடிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை இரண்டு அரசாங்கங்களாக பிரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் பின்னால் உள்ள இங்கிலாந்து வாழ் புலம்பெயர் செயல்பாட்டார்களுக்கு பாராட்டுக்கள்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

பாராட்டுவதற்கு  கொஞ்சம் எச்சரிக்கயுடன் இருக்கவேண்டிய உள்ளது.  செய்தி மூலங்கள் அப்படி. 

Share this post


Link to post
Share on other sites

இந்த இலங்கை பிரச்சினை என்பது பிரிட்டீஷாரினால் உருவாக்கப்படட ஒன்று. எனவே இது அவர்களின் தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்சினை.

இருந்தாலும் என்ன நோக்கத்துக்காக இப்படியான ஒரு தீர்மானத்தை அவர்களது தேர்தல் விஞ்சபனத்தில் சேர்த்தர்களோ தெரியவில்லை. நல்ல நோக்குடன் செய்து நிறைவேற்றுவார்களானால் அதை வரவேற்போம்.

Share this post


Link to post
Share on other sites

UK’s Conservative Party clarifies its stance on Sri Lanka

Clarifying the UK's Conservative Party’s stance with regard to its reference to Sri Lanka in its election manifesto, senior party officials said the reference is applicable only to the Middle East but not to Cyprus or Sri Lanka.

The Foreign Ministry said in a statement that its attention had been drawn to remarks made by a member of parliament, Udaya Gammanpila, over media yesterday in connection with the reference to Sri Lanka in the election manifesto of the Conservative Party in the run-up to the general election in the United Kingdom scheduled for December 12, 2019.

The full statement is as follows:

http://www.dailymirror.lk/top_story/UKs-Conservative-Party-clarifies-its-stance-on-Sri-Lanka/155-179006

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ampanai said:

Clarifying the UK's Conservative Party’s stance with regard to its reference to Sri Lanka in its election manifesto, senior party officials said the reference is applicable only to the Middle East but not to Cyprus or Sri Lanka.

இதை முன்பு வேறு திரியில் சொல்லி இருந்தேன்.

எழுதியபடி,  conservative கட்சியின் விஞ்ஞாபன அறிவிப்பில் உள்ள கருத்தை, இருவேறு அர்த்தம் கற்பிக்கலாம். அதுவும் கண்டு கொண்டோம், ஒன்று இலங்கை இரு தேசம், மற்றது கட்சியின் விளக்கமான, கருத்து  மத்திய கிழக்குக்கு மட்டுமே, இதுவே உத்தியோக பூர்வமான கொள்கை ஆகும்.

ஆனாலும், conservative கட்சியின் விஞ்ஞாபன அறிவிப்பில் உள்ள கருத்தின் nuance ஐயும், இருண்டவன் கண்ணனுக்கு  கண்ணனுக்கு மருண்டதெலாம் பேய்யைப் போல அமைச்சரும், இதை இரு தேசமாக கருதியவர்களும் cannot see wood for the trees.

conservative கட்சியின் விஞ்ஞாபன அறிவிப்பில் உள்ள கருத்து, பிஜேபி இன் இந்து, பௌத்த பிரதேசங்கள் எனும் செயல் திட்டத்துடன் ஒருங்கி வருவதாக தென்படுகிறது.

Share this post


Link to post
Share on other sites
14 minutes ago, Kadancha said:

conservative கட்சியின் விஞ்ஞாபன அறிவிப்பில் உள்ள கருத்து, பிஜேபி இன் இந்து, பௌத்த பிரதேசங்கள் எனும் செயல் திட்டத்துடன் ஒருங்கி வருவதாக தென்படுகிறது.

இந்திய, இங்கிலாந்து வெளிவிவகார கொள்கைகளில் தமிழீழம் பற்றிய முன்னேறகரமான மாற்றமாக பார்க்கலாமா? 

Share this post


Link to post
Share on other sites

இந்த தேர்தல் விஞ்ஞாபனம்  தேர்தல் வரைக்குமா? அதற்கு பின்னும் தொடருமா ?

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites
On 12/4/2019 at 4:24 PM, ampanai said:

இந்திய, இங்கிலாந்து வெளிவிவகார கொள்கைகளில் தமிழீழம் பற்றிய முன்னேறகரமான மாற்றமாக பார்க்கலாமா?

"

On 12/4/2019 at 7:36 PM, ரதி said:

இந்த தேர்தல் விஞ்ஞாபனம்  தேர்தல் வரைக்குமா? அதற்கு பின்னும் தொடருமா ?

 

தனிப்பட்ட தொடர்புகள் மூலம் அறிந்தவற்றை சொல்கிறேன்.

கான்செர்வ்டிவ் கட்சியில் தீவிரமான செல்வாக்கும், நிலையும் உள்ள ஒருவரால் இது சொல்லப்பட்டது.

கான்செர்வ்டிவ் தமது இருதேச கருத்து இலங்கை தீவீற்கு பொருந்தாது எனும் விளக்கம், சிங்களத்தை குளிர்மை  படுத்தவும் மற்றும் தாக்கத்தை குறைக்கவும்.

மேலும் அந்த கான்செர்வ்டிவ் கட்சியில் தீவிரமான செல்வாக்கும், நிலையும் உள்ளவர் சொன்ன விளக்கம்,

இஸ்ரேல்-பலஸ்தீன் இல் ஓர் முழுமையான  சுதந்திர அரசும், பகுதி சுதந்திர அரசும் உள்ளது,
சைப்பிரஸ் நிலைமையில்,   ஓர் முழுமையான  சுதந்திர அரசும், நிழல் அரசும் உள்ளது,
ஸ்ரீ லங்கா இவற்றுடன் கொள்கை அளவில் வகைப்படுத்தப்பட்டதன் காரணம், இறுதி தீர்வுகள் இவை எல்லாவற்றிற்கும், கான்செர்வ்டிவ் கட்சியை பொறுத்தவரை, ஒரே வடிவத்திலேயே இருக்கும் என்பதால்.

இதில், முக்கியமாக நாம் காண்பது, பிரித்தானியரின் அதி உச்ச ராஜதந்திரம். 

Edited by Kadancha
add info.

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Kadancha said:

கான்செர்வ்டிவ் தமது இருதேச கருத்து இலங்கை தீவீற்கு பொருந்தாது எனும் விளக்கம், சிங்களத்தை குளிர்மை  படுத்தவும் மற்றும் தாக்கத்தை குறைக்கவும்

ஒரு பக்கத்தில் தமிழர் தரப்பு சர்வதேச அழுத்தம் ஊடாக சிங்களம் தமிழர் பிரச்சனைக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வை பெறலாம் என எதிர்பார்க்கின்றது. 

மறுபக்கம், தாயகத்தில் உள்ள மக்களும் அவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளும் ஒற்றையாட்சி கட்டமைப்பிற்குள் அரசியல் பகிர்வை கோருகின்றன. 

இவை இரண்டையுமே சிங்களம் அதன் இனவாதிகள் ஒரு "பயமாக" தமது மக்களுக்கு கூறிவருகிறார்கள். 

தமிழர் தரப்பால், தமிழகம் உட்பட,  இராணுவ ரீதியாகவோ இல்லை வேறு எந்த வழியிலுமோ பாதிப்பு வராது என்ற நம்பிக்கையை வளர்த்து ஒரு உடன்படிக்கைக்கு வந்தால், சிங்களம் ஒரு தீர்வை தரக்கூடிய சாத்தியங்கள் உண்டு. 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • காய்ச்சலைக் கண்டறிய சன் கிளாஸ்... AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சீனா! சீனாவின் வுஹான் மாவட்டத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது வரை உலகம் முழுவதும் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த நாடான சீனாவில், தற்போதுதான் படிப்படியாக ஊரடங்கு விலக்கப்பட்டு மக்கள் பொது இடங்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சீனாவில் காய்ச்சலைக் கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவுக் கருவி ஒன்றைப் பயன்படுத்துகின்றனர். செயற்கை நுண்ணறிவு நிறுவனமான 'ரோகிட்' காய்ச்சலை இரண்டே நிமிடங்களில் கண்டறியும் கருவியை வடிவமைத்துள்ளது. இந்தக் கண்ணாடிகளை ஜனவரி மாதம் முதலே, ஹாங்ச்சாவு (Hangzhou) நகரில் உள்ள பாதுகாப்புப் பணியாளர்களுக்கு இந்நிறுவனம் வழங்கிவந்துள்ளது. இந்தக் கண்ணாடி மூலம் இரண்டே நிமிடங்களில் நூற்றுக்கணக்கான மக்களின் உடல் வெப்ப நிலையைக் கண்டறிய முடியும். இந்த ஸ்மார்ட் கண்ணாடிகளின் எடை100 கிராம் தான். மேலும், இந்தக் கண்ணாடிகள் பார்ப்பதற்கு சாதாரண கண்ணாடி போலவே உள்ளது. ஆனால், வெப்பநிலையைக் கண்டறிவதற்காக இதனுடன் கூடுதலாக தெர்மல் இமேஜிங் கேமரா மற்றும் கேபிள் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு, ஏற்கெனவே பல துறைகளில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. தற்போது இப்படி காய்ச்சலைக் கண்டறிவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதை வைத்துக் கொண்டு சீனாவின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள ஹாங்யூஹான்(Hongyuan) பூங்காவில் வேலை செய்யும் பாதுகாப்புப் பணியாளர்கள், மக்களின் வெப்பநிலையைக் கண்காணித்துவருகின்றனர். இதை அணிந்துகொண்டு ஒரு மீட்டர் தொலைவிலிருந்தே உங்களால் வெப்ப நிலையைக் கண்டறிய முடியும். இதற்கு முக்கியக் காரணம், தொடர்பில்லாமல் வெப்பத்தைக் கண்டறியும் AR (augmented reality) திறனே ஆகும். இந்தக் கண்ணாடி மூலம் அதிக உடல் வெப்ப நிலை கண்டறியப்பட்டால், உடனே எச்சரிக்கை அளிக்கிறது. இவற்றோடு, அந்த நபரின் முக அடையாளத்தை சேமிக்கும் ஃபேஷியல் ரெகக்னைசன் தொழில்நுட்பமும் உள்ளது. மேலும், அவர்களைப் பற்றிய தகவல்களையும் டிஜிட்டல் வழியே சேகரித்துக்கொள்கிறது . கொரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறிய ஒவ்வொரு நாடும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டவண்ணம் உள்ளன. இந்தத் தொற்றின் முதல் அறிகுறியாக காய்ச்சலே உள்ளது. இந்தக் காய்ச்சலைக் கண்டறிய உதவும் செயற்கை நுண்ணறிவுக் கண்ணாடி சோதனை முறையை இன்னும் சுலபமாக்கியுள்ளது.
  • #நுண்ணுயிரிகள் நுண்ணுயிரிகள் கண்ணுக்கு தெரியாதவை. அதில் பல நன்மை அளிப்பவை. சில மட்டுமே கெடுதல் விளைவிக்கும். அதிக நோய் பரப்புகிற கிருமி வோல்பேக்கியா எனும் பாக்டீரியா. ஆனால் அது மனிதர்களைத் தாக்குவதில்லை. மாறாக அது இறால், புழுவைத் தாக்கும் என்கிறார்கள். முற்காலத்தில் பலர் வியாபாரம் செய்ய வெளிநாடுகள் சென்றாலும் கடல் பயணத்தில் உப்புக்காற்றில் அழிந்துவிடும் என நம்பினர். ஒரு வேளை கிருமிகள் இருந்தாலும் நோய் எதிர்ப்பு சக்தியால் அதை வென்றனர்.   #வைரஸ் வைரஸ் என்ற சொல்லுக்கு நச்சு என்பது பொருள். கண்டறிந்தவர் டிமிட்ரி ஐவனோஸ்கி. இது மிக நுண்ணிய துகள்களாகும். இவை பாக்டீரியங்களை விடச் சிறியவை. பொதுவாக 20nm 300nm வரை விட்டமுடையவை. TMV வைரஸின் அளவு 300*20nm ஆகும். (1892ல் கண்டறியப்பட்ட புகையிலை தேமல் வைரஸ்) வைரஸ் ஒரு ஒட்டுண்ணி. தனித்திருக்கையில் அவை செயலற்றவையும் தீங்கற்றவையும் ஆகும். ஆனால் பொருத்தமான செல்களில் ஒட்டிக்கொண்டால் சுறுசுறுப்பாகிவிடும். ஓர் உயிரினத்தின் செல்லுக்குள் புகுந்து அந்த செல்லிலுள்ள திட திரவப் பொருள்களை உட்கொண்டு பல்கிப் பெருகிவிடும். இதுவரை 5000 வகை வைரஸ்கள் அறியப்பட்டுள்ளன. ஜலதோசத்தில் தொடங்கி எய்ட்ஸ் வரை நம்மைப் பாதிக்கின்றன.   #வேலைனு வந்துட்டா வைரஸ்காரன் உயிருள்ள பொருளில் முதலில் தங்கி அதிக வைரஸ்களை உற்பத்தி செய்கிறது. பின்னர் தாக்குவதற்கு நிறைய செல்களைத் தேடி அழிக்கிறது. HIV உள்ளிட்ட வைரஸ்கள் சில மரபணுக்களையே வைத்திருந்தாலும் அதன் பாதிப்பு அதிகம். இவை அனைத்தையும் மின்னணு நுண்ணோக்கியில்தான் காண முடியும். பாக்டீரியாவைத் தாக்கும் வைரஸ்களுக்குப் பாக்டீரியோபேஜ் என்று பெயர். வைரஸில் RNA அல்லது DNA ஏதாவது ஒன்றுதான் காணப்படும். தாவரங்களை தாக்குபவை பெரும்பாலும் RNA வைரஸ்கள். மனிதர்களை DNA மற்றும் RNA இரண்டுமே தாக்கும். HIV விலங்கு வைரஸாக இருப்பினும் RNAவைக் கொண்டுள்ளதால் மனிதர்களைத் தாக்கும். எய்ட்ஸ் கிருமியால் மனிதர்கள் இறப்பதில்லை. இது T லிம்போசைட் எனும் முக்கிய வெள்ளை அணுவில் புகுந்து வளர்ந்து அதை அழிக்கிறது. இதனால் சாதாரண கிருமிகளை அழிக்கும் திறனைக் கூட உடல் இழந்துவிடுவதால் மரணம் வருகிறது. 1959ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான காங்கோவில் முதலில் HIV கண்டறியப்பட்டது. #வைரஸ் பரவுவதல் வைரஸ் தொற்று பரவுதலை மூன்றாகப் பிரிக்கலாம். எண்டமிக், எபிடமிக் மற்றும் பாண்டமிக். * எண்டமிக் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த நேரம் வேண்டுமானாலும் பரவக்கூடிய வைரஸாகும். உதாரணமாக அம்மை போன்ற விஷயங்களை சொல்லலாம். * எபிடமிக் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அதிகமாகப் பரவக்கூடிய நோயாக இருக்கும். உதாரணமாக டெங்குக் காய்ச்சல் வரும். அந்தக் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்த வைரஸ் பரவுவது குறைந்துவிடும். * பாண்டமிக் வகையைச் சேர்ந்த வைரஸ்கள் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் பரவக்கூடியதாகும். ஒரு நாட்டிலிருந்து மற்ற நாட்டுக்கு இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் பயணிக்கும்போது, அந்தக் குறிப்பிட்ட நாட்டில் வைரஸ் பரவக்கூடிய சூழல் இருந்தால், அது அங்கும் பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணத்திற்குத் தற்போதைய கொரோனாவைக் குறிப்பிடலாம்.   #வைரஸ் நோய்கள் தாவரங்களுக்கு 10 வகையான நோய்கள் வைரஸ்களினால் ஏற்படுகின்றன. விலங்குகளுக்குக் கோமாரி நோய், வெறிநாய் கடி, குதிரைகளின் மூளைத் தண்டுவட அழற்சி நோய் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. மனிதர்களுக்கு சளி, ஹெப்பட்டைடிஸ் B, புற்றுநோய், சார்ஸ், எய்ட்ஸ், வெறிநாய்க்கடி, பொன்னுக்கு வீங்கி, இளம்பிள்ளைவாதம், சிக்கன் குனியா, பெரியம்மை, சின்னம்மை, தட்டம்மை ஏற்படுகிறது. தற்போது கொரோனா நோய் severe acute respiratory syndrom=Sars-2 என்ற வகையைச் சேர்ந்த இந்த வைரஸ் உருவாக்கும் நோயே கோவிட்-19. இதுவரை உலகை உலுக்கிய முக்கிய நோய்க்கிருமிகளாக ஜிபா, நிபா, எபோலோ, சார்ஸ், மெர்ஸ், லஸ்ஸா, மார்பர்க் ஆகியவற்றைச் சொல்லலாம். #தடுப்பு மருந்து தடுப்பு மருந்து (vaccine) நோய் ஏற்படுவதற்கு முன் உடலில் வீரியம் குறைந்த நோய்க் கிருமியைச் செலுத்தி குறிப்பிட்ட நோய்க்கு எதிராக எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள பயன்படுத்தப்படுகிறது. பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்களுக்கு எதிராய் தடுப்பு மருந்து பயன்படுத்த முடியும். மற்றொன்று antibiotic எனும் எதிர் உயிரி மருந்து. நோய் வந்தபிறகு அந்நோய்க் கிருமிகளை நேரடியாய் அழிக்கப் பயன்படுவது. இது பாக்டீரியா நோய்களுக்கு எதிராக மட்டுமே செயல்படக்கூடியவை. வைரஸ்கள் செல் அற்ற வளர்சிதை மாற்ற நிகழ்வை மேற்கொள்ளாத நுண்ணுயிரி ஆதலால் இவற்றை antibiotic களால் அழிக்க முடியாது. #கொரோனாவுக்கு ஏன் தடுப்பு மருந்து இல்லை? வைரஸ்களை அழிப்பதுவும், கட்டுப்படுத்துவதும் கஷ்டம். வைரஸ்கள் அடிக்கடி தங்கள் வடிவம் மற்றும் தன்மைகளை மாற்றிக்கொள்ளும். அதனாலேயே பல நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்க முடியவில்லை. வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த புதிய வகை வைரஸ் நோவல் கொரோனா என்று பெயர். இவ்வைரஸ் தாக்குதலில் ஈடுபடும் நோய் எதிர்ப்பு செல்களில் நுழைத்து சேதப்படுத்தி குழப்பமடைய வைக்கின்றன. உதாரணமாக கொரோனா வைரஸ்களை அழிப்பதற்கு பதில் தம் நோய் எதிர்ப்புச் செல்லையே அழித்துவிடுகிறது. நன்றாய் இருக்கும் நுரையீரல் செல்களையும் அழிக்கிறது. இதனால் பாக்டீரியா மற்றும் நிமோனியா தாக்குதலால் மரணம் ஏற்படுகிறது. நம் கண்ணை வைத்து நம்மையே குத்த வைக்கிறது கொரோனா. லட்சக்கணக்கான வகைகளில் மாறிக்கொண்டே இருப்பதால் அடையாளம் கண்டு அழிக்கக்கூடிய மருந்து கண்டுபிடிக்க முடிவதில்லை. எதிர்காலம் கேள்விக்குறியாகவும், கடந்த காலம் ஆச்சர்யக் குறியாகவும் இருக்கிறது தற்போது. ஆகவே கடும்காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இருந்தால் மருத்துவரை அணுகலாம். நோய்த் தொற்று ஏற்படாமல் தடுப்போம். எனவே நோய் நாடி நோய் முதல் நாட தனிமையை நாடுவோம் -மணிகண்ட பிரபு https://www.vikatan.com/health/miscellaneous/article-about-virus-and-types
  • 1990ம் ஆண்டுக்கு முத‌ல் புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்த‌ உற‌வுக‌ளுக்கு இந்த‌ பாட‌சாலை நிக‌ழ்வு கிடைத்து இருக்காது / 1992ம் ஆண்டு , முத‌லாம் ப‌குப்பு ப‌டித்த‌ போது , கார்த்திகை மாத‌ம்   மாவிர‌ நாள் தொட‌ங்க‌ ப‌த்து நாளுக்கு முத‌லே பாட‌சாலையில் ஒவ்வொரு வ‌குப்பில் ப‌டிக்கும் பிள்ளைக‌ள் , பாட‌சாலை க‌ம்ப‌த்தில் எம‌து தேசி கொடி ஏத்தும் போது ( ஏறுது பார் கொடி ஏறு பார் என்ர‌ எங்களின் தேசிய‌ கீத‌ம் ப‌டிக்க‌னும்) பெரிய‌ வ‌குப்பு அக்கா மார் தான் தேசிய‌ கீத‌ம் பாடுவின‌ம் அவையோட‌ சேர்ந்து என்ர‌ வ‌குப்பு பிள்ளைக‌ளும் பாட‌னும் 🙏 / அடுத்த‌ நாள் ம‌ற்ற‌ வ‌குப்பு பிள்ளைக‌ளின் நாள் அவையும் நிரைக்கு நின்று தேசிய‌ கொடி ஏறும் போது சேர்ந்து பாட‌னும் / மேல் வ‌குப்பு ப‌டிச்ச‌ அண்ணா மார் பின் நாளில் போராட்ட‌த்தில் இணைந்து த‌ங்க‌ளின் உயிரை தாய் ம‌ணுக்கு தியாக‌ம் செய்தார்க‌ள் / அவ‌ர்க‌ளின் முக‌ம் ஒரு போதுன் என் க‌ண்ணில் இருந்து நீங்காது 😓/    
  • உண்மைதான் சிறித்தம்பி.நானும் களவாய் படம் பாத்து அடிவாங்கினது கொஞ்சம் இல்லை. ஒருக்கால் மாமியார் வீடு படம் பார்க்க வின்சர் தியேட்டருக்கு போனனான். அப்ப ஊர் பொடியன் என்னை கண்டுட்டான்.அப்பவும் நான் அவனிட்டை கெஞ்சி மண்டாடி வீட்டை சொல்லிப்போடாதை எண்டு சொல்லி தேத்தண்ணியும் கடலை வடையும் வாங்கிக்குடுத்தனான்.  அப்பிடியிருந்தும் அவன் முதல் வேலையாய் செய்த வேலை வீட்டை போய் அண்ணரிட்டை மாமியர்வீட்டுக்கு நான் போனதை சொன்னது தான்.அதுக்கு பிறகு பூவரசம் கேட்டியாலை விழுந்த பூசை இருக்கே எழுத வார்த்தைகள் இல்லை.நான் குளறினது அஞ்சாறு வீடு தள்ளி கேட்டிருக்கும். இந்தபாட்டு இல்லாட்டி மாமியார்வீடு  எண்ட சொல்லை கேட்டால் அந்த நன்றி கெட்ட நாயின்ரை ஞாபகம் தான் வரும்.தேத்தண்ணியும் வடையும் வாங்கிக்குடுத்தும் நன்றி விசுவாசம் இல்லாத பன்னாடைய நினைச்சால்...🤬  
  • என்ன கொரோனா வைரஸ் வந்தாலும்,  இயற்கை அனர்த்தம் வந்தாலும் அதை அரசியலாக்குவதுதான்  எமக்கு உள்ள  திறமை. நாட்டில் அல்லல் படுவோர் பலர் இருந்தாலும், எமக்கொரு  ஆபத்தென்றால் நமக்கு கைகொடுப்பவர்கள் இவர்கள் தான். நாம்  இப்போ செய்வதை சமயம் வரும்போது  வேறு வழியாய் பெற்றுகொள்வோமில்ல.