Lara

விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பல்ல – சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு - நிதி திரட்டியவர்கள் விடுவிப்பு

Recommended Posts

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு குற்றவியல் அமைப்பு இல்லை என தீர்ப்பு வழங்கியுள்ள சுவிட்சர்லாந்து நீதிமன்றம் 12 தமிழர்களிற்கு எதிராக அந்த நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களம் சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுதலை செய்துள்ளது..

1999 முதல் 2009 ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் விடுதலைப்புலிகளிற்கு நிதி சேகரித்ததாக சுவிசின் குற்றவியல் கோவையை மீறியதாக 12 பேரிற்கு எதிராக சுவிஸின் சட்டமா அதிபர் அலுவலகம்  குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது.

ஓன்பது வருட காலமாக மேற்கொண்ட விசாரணையின் பின்னர் உலக தமிழ் ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினர்களிற்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

எனினும் 2018 யூன் மாதம் சமஸ்டி நீதிமன்றம் விடுதலைப்புலிகளிற்கும் உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கும் இடையிலான தலைமைத்துவ தொடர்புகளிற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என சமஸ்டி குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ஏப்பிரல் மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் இந்த தீர்ப்பிற்கு எதிராக முறையீடு செய்திருந்ததுடன் குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றவியல் அமைப்பிற்கு ஆதரவளித்துள்ளனர் என தெரிவித்திருந்தது.

இது குறித்து இன்று தனது தீர்ப்பை வெளியிட்டுள்ள சமஸ்டி நீதிமன்றம் தனது முன்னைய தீர்ப்பை மீண்டும் உறுதிசெய்துள்ளது.

சுவிசின் குற்றவியல் கோவையின் 260 வது பிரிவு திட்டமிடப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டது, அதன் பின்னர் அல்ஹைதா போன்ற அமைப்புகளிற்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

நிதி திரட்டப்படும் வேளை விடுதலைப்புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பாக கருதப்படவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அக்காலப்பகுதியில் சுவிட்சர்லாந்தில் விடுதலைப்புலிகளிற்காக நிதி திரட்டியவர்கள் தாங்கள் பின்னர் சட்டத்தை மீறுவார்கள் என கருதியிருக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பினர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களது பிரதான நோக்கம் இனசமூகத்திற்கு சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதே என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/70347

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
9 minutes ago, Lara said:

விடுதலைப்புலிகள் அமைப்பினர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களது பிரதான நோக்கம் இனசமூகத்திற்கு சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதே என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சுவிஸ் நாட்டிற்கும் நீதிமன்றிற்கும் நன்றிகள் !

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
THIS CONTENT WAS PUBLISHED ON DECEMBER 3, 2019 1:17 PMDEC 3, 2019 - 13:17
people smiling

Lawyer Marcel Bosonet (in tie) surrounded by supporters of the accused at the Federal Criminal Court in June 2018

(© Ti-press)

The Swiss Federal Court has ruled that the Tamil Tigers are not a criminal organisation and has acquitted 12 people of charges filed by the Office of the Attorney General (OAG).

In its indictment, the OAG had accused the people of violating the Swiss Penal Code by raising funds for the Liberation Tigers of Tamil Elam (LTTE) between 1999 and 2009. After its nine-year investigation, the OAG suspected the accused of financially supporting the World Tamil Coordinating Committee (WTCC).

But in June 2018 the Federal Criminal Court found that the hierarchical link between the LTTE and WTCC could not be sufficiently established. The judges also felt there was not enough proof to consider the LTTE a criminal group.

In April the OAG appealed against the verdict, insisting that the accused had supported a criminal group.

In a decision published on Tuesday the Federal Court upheld the previous ruling, noting that Article 260 in the Swiss Penal Code was designed to combat organised crime of a mafia nature. Since then it has also been applied to terrorist groups such as al-Qaeda or the Islamic State (IS) terrorist militia. The LTTE was not regarded as a criminal organisation at the time of the fundraising, stated the Federal Court.

According to the court, those who procured money for the LTTE in Switzerland at that time could not assume that they would later violate the law. Even if it had carried out terrorist attacks, the LTTE’s primary objective was to be recognised as an independent ethnic community.

Protesters supporting accused

VERDICT AWAITEDSwiss Tamil Tiger trial has cost over $4 million

The eight-week Swiss trial of 13 financiers accused of funnelling money to the Sri Lankan Tamil separatist group LTTE has cost CHF3.79 million.

 

Keystone-SDA/sm

Share this post


Link to post
Share on other sites

பிரித்தானிய அரசின் உள்ளக ம ற்றும் வெளியாக புலனாய்வு மற்றும் உளவு அமைப்புக்களை, கன்னத்தில் அறைந்து, தலையில் குட்டி, முதுகிலும், நெஞ்சிலும் வலிக்குமாறு அழுத்தி, சொல்லப்பட்டிருக்கிறது, ஐரோப்பாவில் விடுதலைப் புலிகள் குற்றவாளிகள் என்பது சட்டத்தின் முன் ஒரு போதுமே நில்லாது.

சுவிற்சலாந்ந்து, பிரித்தனியாவின் சட்ட  நாய்க்குட்டியாக  இருப்பதை விடுத்தது, விடுதலைப் புலிகளை 
பொறுத்தவரை சுந்தந்திரமான கொள்கை நிலை எடுக்க வேண்டிய கட்டாயம். 

Share this post


Link to post
Share on other sites

நல்ல மகிழ்ச்சியான விடயம். இது எதிர்வரும் காலங்களில் ஐரோப்பிய நாடுகளிலும் எதிரொலிக்கும்.

 

Share this post


Link to post
Share on other sites
2 minutes ago, நிழலி said:

நல்ல மகிழ்ச்சியான விடயம். இது எதிர்வரும் காலங்களில் ஐரோப்பிய நாடுகளிலும் எதிரொலிக்கும்.

 

இதற்கு இலங்கை அரசு ஏதாவது குத்தல் குடைச்சல் கொடுக்குமென நான் நினைக்கிறன். இருந்தாலும் செல்லாது 

Share this post


Link to post
Share on other sites

மிகவும் மகிழ்ச்சியான செய்தி......!   😄

Share this post


Link to post
Share on other sites

சந்தோசமான தீர்ப்பு.

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள்..👍

Share this post


Link to post
Share on other sites

மகிழ்ச்சியான செய்தி. இருந்தாலும் சுவிற்சலாந்து நாட்டின் தீர்ப்பை பிறநாடுகளும் பின்பற்ற விடாது செய்வதற்கு சிறீலங்கா ஏதாவது உபாயம் தேடும். பிறநாடுகள் சிறீலங்காவை அலட்சியம் செய்தாலும், இந்தியா அந்நாடுகளைச் சமாதானப்படுத்தி சிறீலங்காவுக்கு உதவிட முனையும் என்பது நிச்சயம்.

1 hour ago, Lara said:

நிதி திரட்டப்படும் வேளை விடுதலைப்புலிகள் அமைப்பு குற்றவியல் அமைப்பாக கருதப்படவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அக்காலப்பகுதியில் சுவிட்சர்லாந்தில் விடுதலைப்புலிகளிற்காக நிதி திரட்டியவர்கள் தாங்கள் பின்னர் சட்டத்தை மீறுவார்கள் என கருதியிருக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நிதி திரட்டியவர்கள் சட்டத்தை மீறவில்லை. திரட்டிய நிதியைப் பதுக்கி வைத்திருப்பவர்களை எந்தச் சட்டம் பாதுகாக்கிறது.? 🤔 

Share this post


Link to post
Share on other sites

மற்றைய நாடுகளோடு ஒப்பிடும்போது சுவிஸ் எப்போதுமே நம்மவர்களுக்கு சாதகமாகவே இருந்து வருகிறது.

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

அண்மையில் இலங்கையில் சுவிஷ் தூதரக பணியாளர் கோத்தாவின் புலனாய்வாளர்களால் கடத்தப்படவில்லையெனில் இப்படியான ஒரு தீர்ப்பு கிடைதிருக்குமோ தெரியாது.
சர்வதேச அரங்கில் இது போன்ற தீர்ப்புகளால் மட்டுமே சிறிலங்கா அரசின் இனவாத ஒடுக்குமுறை  அராஜகம்  முடிவுக்கு கொண்டுவரப்படலாம். இதை தமிழ் மக்களுக்கு சார்பான நகர்வாக மாற்றுவது எமது அரசியல் வாதிகளின் காய் நகர்த்தலில் தங்கியுள்ளது

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
21 hours ago, ampanai said:

சுவிஸ் நாட்டிற்கும் நீதிமன்றிற்கும் நன்றிகள் !

இயற்கை நீதி வென்றுள்ளது!

21 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதற்கு இலங்கை அரசு ஏதாவது குத்தல் குடைச்சல் கொடுக்குமென நான் நினைக்கிறன். இருந்தாலும் செல்லாது 

நீங்க நினைக்கிற மாதிரி இந்த அரசுக்கு உள் நாட்டில கடத்துற வலு இருந்தாலும் வெளிநாட்டில அந்த வலு இல்லை!

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, Gowin said:

நீங்க நினைக்கிற மாதிரி இந்த அரசுக்கு உள் நாட்டில கடத்துற வலு இருந்தாலும் வெளிநாட்டில அந்த வலு இல்லை!

சிங்களத்துக்கு உண்மையில் இல்லைத்  தான்.

ஆனால், சொறி சிங்களம் இஸ்ரேல் உடனான உத்தியோகபூர்வமில்லாத உறவில், இந்த அனுபவத்தை பெற முயதர்சி செய்ததாக செய்திகள் உண்டு. 
 

Share this post


Link to post
Share on other sites

ஒவ்வொரு வருசமும் ஐநா  முன்றலில் கூடியபோது

அதை  தேவையற்ற

பிரயோசனமற்ற

வேற  வேலை  இல்லாதவர்களின் ஒன்று  கூடல்  என 

நையாண்டி செய்தவர்களுக்கு  சமர்ப்பணம்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஒருநாள் இந்தியாவிலும் தடை உடையும்.. அதற்கும் ஒரு சீமான் 🙂  துணைபுரிவாராக !

Share this post


Link to post
Share on other sites
2 minutes ago, ampanai said:

ஒருநாள் இந்தியாவிலும் தடை உடையும்.. அதற்கும் ஒரு சீமான் 🙂  துணைபுரிவாராக !

ஏற்கனவே அதற்கான முன்னெடுப்புக்கள் தொடங்கிவிட்டன.

3 hours ago, விசுகு said:

ஒவ்வொரு வருசமும் ஐநா  முன்றலில் கூடியபோது

அதை  தேவையற்ற

பிரயோசனமற்ற

வேற  வேலை  இல்லாதவர்களின் ஒன்று  கூடல்  என 

நையாண்டி செய்தவர்களுக்கு  சமர்ப்பணம்

நையாண்டி செய்கிறவர்களில் பலர் எதுவித பங்களிப்பும் செய்யாதவர்களே.

 

On 12/3/2019 at 10:53 AM, Lara said:

விடுதலைப்புலிகள் அமைப்பினர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களது பிரதான நோக்கம் இனசமூகத்திற்கு சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதே என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்காக உழைத்த அத்தனை பேருக்கும் தலைவணங்குகிறேன்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, ampanai said:

ஒருநாள் இந்தியாவிலும் தடை உடையும்.. அதற்கும் ஒரு சீமான் 🙂  துணைபுரிவாராக !

கண்டிப்பாக... சீமான் நரம்பு புடைக்க நாம் தாம் தமிழக மண்ணில் வைத்து ராஜீவை கொன்றோம் என்றெல்லாம் உரிமை கோரிக் கொண்டு இருப்பதால் மத்திய அரசு பயந்து போய் வெருண்டு போய் தடையை நீக்கும்!

 • Haha 2

Share this post


Link to post
Share on other sites
On 12/3/2019 at 10:26 AM, தனிக்காட்டு ராஜா said:

இதற்கு இலங்கை அரசு ஏதாவது குத்தல் குடைச்சல் கொடுக்குமென நான் நினைக்கிறன். இருந்தாலும் செல்லாது 


இந்த வழக்கை பின்னிருந்து ஆரம்பித்ததே சிங்களம்தான் முன்னைநாள் 
மகிந்த அரசின் பணத்தில்தான் இது ஆரம்பத்தில் வழக்கனது. பெரும் செலவில் 
பணம்களை கொடுத்து நீட்டிக்கொண்டு இருந்தார்கள் அரச தரப்பிலேயே இதற்கு 4 மில்லியன் அளவில் 
முடிந்து இருக்கிறது ( சுவிஸ் மக்கள் இதுக்கு புறுபுறுத்துக்கொண்டு இருக்கிறார்கள்). சுவிஸ் நாட்டில் இன்னமும் கொஞ்ச புலிகளின் சொத்து இருக்கிறது ஆனால் அவை ஏதும் இதில் குற்றம் சுமத்தியவர்கள் பேர்களில் இல்லை 
இதில் குற்றம் சுமத்த படவர்கள் அப்பாவிகள்தான். காசை சுருட்டியவர்கள் எல்லாம் வழக்குக்கு வெளியில்தான் இருக்கிறார்கள். இந்த தீர்ப்பு கொஞ்சம் புலிகளுக்கு சார்பானது (ஆதாவது நீதிக்கு புறம்பானது) இந்த வழக்கின் நோக்கம்  புலிகள் பயங்கரவாதிகள் என்ற கோணத்தில் இருக்கவில்லை. சுவிஸ் சட்ட்த்துக்கு மாறாக பணமோசடி செய்தது என்பதாகும் அதுதான் அரசு தரப்பு வாதம் உண்மையில் அது நடந்து ... அதுக்கு போதிய ஆதாரமும் இருந்தது. இந்த தீர்ப்பு என்பது சுவிஸ் வாழ் தமிழருக்கு பெருத்த வெற்றி என்று எண்ணுகிறேன்.

சுவிஸ் கடத்தல் சம்மந்தமாக சுவிஸ் வெளிநாட்டு அமைச்சர் நேற்று பேசி இருக்கிறார் 
தனக்கு உடனடியாக முழு தகவலும் வேண்டும் என்று இலங்கை சுவிஸ் தூரகத்தையும். சுவிஸில் இருக்கும் 
இலங்கை துரகத்துக்கும்  ஒரு லெட்டர் அனுப்பி இருக்கிறார். 

19 hours ago, vanangaamudi said:

அண்மையில் இலங்கையில் சுவிஷ் தூதரக பணியாளர் கோத்தாவின் புலனாய்வாளர்களால் கடத்தப்படவில்லையெனில் இப்படியான ஒரு தீர்ப்பு கிடைதிருக்குமோ தெரியாது.
சர்வதேச அரங்கில் இது போன்ற தீர்ப்புகளால் மட்டுமே சிறிலங்கா அரசின் இனவாத ஒடுக்குமுறை  அராஜகம்  முடிவுக்கு கொண்டுவரப்படலாம். இதை தமிழ் மக்களுக்கு சார்பான நகர்வாக மாற்றுவது எமது அரசியல் வாதிகளின் காய் நகர்த்தலில் தங்கியுள்ளது

 

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites
On 12/3/2019 at 9:53 PM, நிழலி said:

நல்ல மகிழ்ச்சியான விடயம். இது எதிர்வரும் காலங்களில் ஐரோப்பிய நாடுகளிலும் எதிரொலிக்கும்.

விரைவில் அவ்வாறு எதிரொலிக்க வேண்டும்!
நல்ல செய்தி!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • கராச்சி விமான விபத்து: விமானியின் அலட்சியமே காரணம் இஸ்லாமாபாத்: கராச்சி விமான விபத்து நடந்ததற்கு கட்டுப்பாட்டு மையத்தின் அறிவுறுத்தலை விமானி அலட்சியம் செய்ததே காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது.     கடந்த வெள்ளியன்று, லாகூரிலிருந்து, 98 பயணியர், ஒன்பது ஊழியர்கள் என, 107 பேருடன் புறப்பட்டு சென்ற, பி.ஐ.ஏ., எனப்படும், 'பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்' நிறுவன விமானம், கராச்சி விமான நிலையம் அருகே, குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 97 பேர் இறந்தனர். விபத்து தொடர்பான விசாரணையில் விமானம் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டு அறையின் எச்சரிக்கையை அலட்சியம் செய்ததாக கூறப்படுகிறது.   விபத்து நடந்த அன்று மதியம் 2.30க்கு கராச்சியில் தரையிறங்க இருந்த விமானம் 15 நாட்டிகல் மைல் தொலைவில் 7,000 அடி உயரத்தில் பற்ப்பதற்கு பதிலாக 10,000 அடி உயரத்தில் பறந்ததாக கூறப்படுகிறது. மேலும் கராச்சி விமானநிலையத்தை அடைய 10 நாட்டிகல் மைல் இருக்கும் போது 3,000 அடி உயரத்தில் பறப்பதற்கு பதிலாக 7,000 அடி உயரத்தில் பறந்துள்ளது.   இந்நிலையில் உயரத்தை குறைக்கும் படி இரண்டு முறை கட்டுப்பாட்டு மையம் விமானிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கையை பின்பற்றாததே விபத்து நடந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. https://www.dinamalar.com/news_detail.asp?id=2545989
  • நேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர் காத்மாண்டு: நேபாளத்தின் கூர்க்கா படைகளுக்கு முன்னால்இந்திய படைகள் நிற்பது கடினம் நேரம் வரும் போது பதில் அளிக்க தயாராக இருக்கும் என அந்நாட்டின் ராணுவ அமைச்சர் ஈஸ்வர் போகரல் தெரிவித்து உள்ளார். லிபுலேக்,கலாபானி, மற்றும் லிம்பியாதுரா உள்ளிட்ட பகுதிகள் குறித்து கடந்த சில தினங்களாக இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. நேபாளத்தின் புதிய எல்லை வரைபடத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே இந்தியராணுவ தளபதி எம்.எம். நாரவனே நேபாளம் வேறொருவரின் சார்பாக குரல் கொடுக்கும் வழக்கறிஞராக இருந்து வருகிறது என குறிப்பிட்டார்.   இந்திய தளபதியின் கருத்து குறித்து நேபாள நாட்டு ராணுவ அமைச்சர் ஈஸ்வர் போக்ரெல் கூறி இருப்பதாவது: இந்தியாவின் பாதுகாப்புக்காக நேபாள ராணுவம் பல தியாகங்களை செய்துள்ளது. எங்களின் உணர்வுகளை இந்திய தளபதி கேலி செய்து வருகிறார். கூர்க்கா படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம். நேரம் வரும் போது எங்களின் ராணுவம் பதில் அளிக்க தயாராக இருக்கும். நேபாள ராணுவம் எப்போதும் அரசியலமைப்பிற்கும் அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கும் ஏற்ப போராட தயாராக உள்ளது. இருப்பினும் கலபான உள்ளிட்ட பகுதிகள் குறித்த சர்ச்சைக்கு தீர்வு காண ராஜ தந்திர பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காண முடியும் என கூறி உள்ளார். https://www.dinamalar.com/news_detail.asp?id=2546009   அப்படிபோடு அரிவாளை 🤣🤣
  • எல்லையில் பதற்றமான சூழ்நிலை: இந்தியாவில் இருந்து தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை கொரோனாவுக்கு மத்தியில் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்தியாவில் உள்ள தனது நாட்டு மக்களை வெளியேற்ற சீனா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பதிவு: மே 26,  2020 04:15 AM புதுடெல்லி,  இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நீண்ட காலமாகவே எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்திய சீன எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்திய படை வீரர்களும், சீன படை வீரர்களும் குவிக்கப்பட்டு அவ்வப்போது அவர்கள் மோதி வருகிறார்கள். இதற்கு மத்தியில், உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் காட்டுத்தீ போல பல இடங்களில் தீவிரமாக பரவுகிறது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில் இந்தியாவில் உள்ள தனது நாட்டு மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் சீனா அதிரடியாக இறங்கி உள்ளது. இதையொட்டி டெல்லியில் உள்ள சீன தூதரகத்தின் இணையதளத்தில் நேற்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் சீன மாணவர்கள், சுற்றுலா பயணிகள், தொழில் அதிபர்கள் யார் இந்தியாவில் சிக்கி இருந்தாலும், அவர்கள் சீனாவுக்கு சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துச்செல்லப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் எவ்வளவு சீனர்கள் சிக்கி இருக்கிறார்கள் என்பது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. அதே நேரத்தில் 27-ந் தேதிக்குள் (நாளை) அனைவரும் பதிவு செய்து கொண்டு விட வேண்டும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் யோகா பயிற்சி பெற வந்த சீனர்கள், புத்த மத சுழற்சி சுற்றுலாவுக்காக வந்திருப்பவர்களும்கூட நாடு திரும்பி விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு விமானங்கள் எந்த நகரங்களில் இருந்து, எப்போது புறப்படும் என்ற விவரம் தரப்படவில்லை. சீனர்கள், தங்களது விமான பயண டிக்கெட் கட்டணத்தை செலுத்த வேண்டும், சீனாவில் சென்று இறங்கியதும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், அந்த வைரஸ் தொற்று பாதித்திருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு ஆளாகி இருக்கிறவர்கள், காய்ச்சல், இருமல் போன்ற கொரோனா அறிகுறிகளுடன் 14 நாட்கள் இருப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. மேலும், கொரோனா நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், உடல் வெப்ப நிலை 37.3 டிகிரி செல்சியசுக்கு அதிகமாக இருப்பவர்களும் சீன விமானங்களில் ஏற அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு திரும்புவதற்கு பதிவு செய்கிற சீனர்கள் தங்களது மருத்துவ குறிப்புகளை மறைக்கக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதை மீறி நடந்து கொண்டால் அவர்கள் பொது பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியபோது, அங்கு தவித்துவந்த 700 இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டது நினைவுகூரத்தகுந்தது https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/26022111/Tense-situation-at-the-border-China-to-expel-its-nationals.vpf
  • லடாக் பகுதியில் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறை பிடித்ததா?   புதுடெல்லி, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சில இடங்களில் எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. அருணாசலபிரதேசத்தையும் சொந்தம் கொண்டாடுவதை சீனா வழக்கமாக கொண்டு உள்ளது. ஆனால் அருணாசலபிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதை சீனா சொந்தம் கொண்டாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் இந்தியா திட்டவட்டமாக பலமுறை தெரிவித்து விட்டது. இதனால் எல்லை பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்கு சீனா அவ்வப்போது தொல்லை கொடுத்து வருகிறது. குறிப்பாக லடாக் எல்லைப்பகுதியில் அத்துமீறலில் ஈடுபட முயற்சிக்கிறது. லடாக் எல்லையையொட்டி அமைந்துள்ள பங்கோங் டிசோ, கல்வான் பள்ளத்தாக்கில் தங்கள் பகுதிகளில் சீனா கூடுதல் வீரர்களை குவித்து உள்ளது. அங்குள்ள சர்ச்சைக்குரிய ஏரியில் சீன ராணுவ வீரர்கள் படகு மூலம் ரோந்து சென்று கண்காணிக்கிறார்கள். ஆனால் அங்கு இந்திய பகுதியில் சாலை அமைத்தற்கு சீனா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே, கடந்த 5-ந் தேதி லடாக் எல்லை பகுதியில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும், இது 6-ந் தேதி காலை வரை நீடித்ததாகவும் தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவானே அங்குள்ள லே பகுதிக்கு சென்று லடாக் எல்லை நிலவரம் குறித்து நேரில் ஆய்வு செய்துவிட்டு திரும்பினார். மேலும் லடாக் எல்லை பகுதியில் உள்ள நிலவரம் குறித்து உயர் ராணுவ அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், இரு தரப்புக்கும் இடையே 5-ந் தேதி ஏற்பட்ட கைகலப்பின் போது ஆயுதங்களுடன் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறிது நேரம் சிறைபிடித்து வைத்து இருந்ததாகவும், பின்னர் அவர்களை ஆயுதங்களுடன் விட்டுவிட்டதாகவும் சில ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆனால் இதை இந்திய ராணுவம் மறுத்து உள் ளது. இதுபற்றி ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “எல்லை பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டதாக வெளியான தகவலை ராணுவம் திட்டவட்டமாக மறுக்கிறது. நமது வீரர்கள் யாரும் சிறைபிடிக்கப்படவில்லை. ஊடகங்கள் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிடும் போது தேசத்தின் நலன்தான் பாதிக்கப்படும்” என்றார். https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/25040557/Chinese-army-detains-Indian-soldiers-in-Ladakh.vpf