• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ரஞ்சித்

ரஜினி திரணகமவைக் கொன்றது யார்?

Recommended Posts

90 களின் நடுப்பகுதியில், தினமுரசில் வெளிவந்துகொண்டிருந்த அல்பேர்ட் துரையப்பா முதல் என்று ஆரம்பிக்கும் அரசியல் தொடரில் எழுதிவந்த அற்புதன், ஒருமுறை ரஜிணி திரணகமவின் கொலை பற்றிக் குறிப்பிடும்பொழுது, அனைவரும் நினைப்பது போல இக்கொலையைப் புலிகள் செய்யவில்லை. ஈ. பி. ஆர். எல். அப் குழுவே செய்தது என்று எழுதியிருந்தார். இதனால், ரஜிணியைக் கொன்றது அக்குழுதான் என்று நாம் நம்பி இன்றுவரை தொடர்ந்தும் வேறு வேறு இடங்களிலும், என்னுடன் பேசுபவர்களிடமும் கூறி வருகிறேன். இன்று ஆங்கில இணையத்தளமான கோராவில் சில நண்பர்கள் இதுபற்றிக் கேட்டபோது, தினமுரசில் படித்ததைச் சொன்னேன். ஆனால், உறுதிப்படுத்தமுடியவில்லை. இதுபற்றித் தேடலாம் என்று தொடங்கியபோது இக்கொலை தொடர்பான சில கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதிலொன்று டி. பி. எஸ் ஜெயராஜினுடையது. 

அவரது கட்டுரையில்க் கூட புலிகளோ அல்லது ஈ. பி. ஆர் எல் எப் போ செய்திருக்கலாம் என்ற குழப்பமிருந்தாலும்கூட, புலிகளே இதைச் செய்தார்கள் என்று ஆணித்தரமாகக் கூறுகிறார். இந்திய ராணுவத்தினருடன் ரஜினி அடிக்கடி முரண்பட்டு வந்ததால், அன்று இந்திய ராணுவத்தின் கூலிகளாக இயங்கிய  ஈ பி ஆர் எல் எப் இக்கொலையை நடத்தியதாக சந்தேகம் எழுந்திருந்த வேளையில், ரஜினி பல்கலைக்கழகம் விட்டு வீட்டிற்கு வரும் வழியில் பார்த்திருந்து , சரியாக 4 மணியளவில், கொக்குவிலில் இருக்கும் அவரது  வீட்டிற்கருகில், அவர் சைக்கிளிலிருந்து இறங்கும்பொழுது, அவரது பெயரைக் கூறியழைத்து, நெற்றியின் மீது துப்பாக்கியை வைக்கவும், வெறும் கைகளால் தனது முகத்தை ரஜினி மூடிக்கொண்டார் என்றும், துப்பாக்கிதாரி முதலில் நெற்றியிலும், பின்னர் கீழே விழுந்த ரஜினியின் தலையிலும் சுட்டுவிட்டுச் சென்றதை சாட்சியங்கள் பார்த்ததாகவும் கூறுகிறார். 

இக்கொலையினைப் புலிகளே செய்தார்கள் என்பதற்கு ஆதாரமாக, "என்னைக் கொல்லக் காத்திருப்பவர்கள் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்கள் தான்" என்று தனது கொலையை முன்கூட்டியே அறிந்திருந்த ரஜினி தனது நண்பர்களுடன் சொன்னதாகவும் ஜெயராஜ் கூறுகிறார். 

ஜெயராஜ் புலிகளுக்கு எதிரானவர். ஆகவே புலிகளைத்தவிர வேறு எவரையுமே அவர் சந்தேகிக்க வாய்ப்பில்லை. அற்புதனும் புலிகளுக்கு எதிரானவர், ஆனால் புலிகளுக்குச் சார்பாக தினமுரசில் எழுதுயதனால் மக்களிடையே பிரபலமானவர், ஆகவே அவர் மக்களை மகிழ்விக்க ரஜினியைக் கொன்றது புலிகள் இல்லை என்று எழுதியிருக்கலாம். 

இக்கொலை நடைபெற்ற நாட்களில் உங்களில் பலர் ஊரில் இருந்திருக்கலாம். அநேகமானவர்களுக்கு இக்கொலையினைப் புரிந்தவர்கள் பற்றிய அறிவு இருக்கலாம். அப்படித் தெரிந்தவர்கள் இதுபற்றிய மேலதிகத் தரவுகளைத் தரமுடியுமா? செய்தவர்கள் யார், எதற்காகச் செய்தார்கள்..............அவர்கள் புலிகளாகவே இருந்தாலும் கூட.

உடனேயே துரோகி, விரோதி என்று எழுதவேண்டாம். நடந்தவை பற்றிப் பகிர்வதில் தவறில்லையே? 

Share this post

Link to post
Share on other sites

இப்போ

அடிக்கடி  இப்படித்தான்  வருகின்றீர்கள்

நடுவில்  கொஞ்ச  பக்கங்களை  காணவில்லை  என்பது  தான்  ஞாபகம்  வருகிறது???

Share this post

Link to post
Share on other sites
7 minutes ago, ரஞ்சித் said:

முறிந்த பனை  எழுதினது இவர்தானே இருந்தாலும் புலிகள் மீது அதிகமாக குற்றங்கள் சுமத்தினாலும் ஒரு பெண்ணைக்கொல்ல வேண்டிய அவசியம் புலிகளுக்கு இருந்திராது  

இப்படித்தான் வவுணதீவில் பொலிசாரைக்கொன்றது முன்னாள்  புலிதான் என குற்றம் சாட்டி  கைதும் பண்ணினார்கள் ஆனால் செய்தது யாரோ அது போல இருக்கலாம் என நான் நினைக்கிறன்

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
8 minutes ago, விசுகு said:

இப்போ

அடிக்கடி  இப்படித்தான்  வருகின்றீர்கள்

நடுவில்  கொஞ்ச  பக்கங்களை  காணவில்லை  என்பது  தான்  ஞாபகம்  வருகிறது???

குசா, என்ன பிரச்சினை?

நான் கேட்கக் கூடாத ஒன்றைக் கேட்டுவிட்டேன் என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கிருக்கும் தேசிய உணர்வே எனக்கும் இருக்கிறது. அதற்காகக் கேள்வி கேட்கக் கூடாதென்றால் என்ன செய்வது? இடையில் சில பக்கங்களைக் காணோம் என்றால் என்ன செய்ய? நான் வேறொரு தளத்தில் (ஆங்கிலம் மற்றும் தமிழ்)  எழுதுகிறேன். யாழில் எழுதும்போது வரும் தேவையற்ற விமர்சனங்களை, நக்கல்களை சிலவேளை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதனால், கருத்துக்களை வாசிப்பதுடன் நகர்ந்து சென்று விடுகிறேன். ஆனாலும், சில வேளைகளில் எனது கேள்விகளுக்கான பதில்களை இங்கே தேடுகிறேன். சிலர் உண்மையாகவே எழுதுவார்கள். பலர் என்னை நீங்கள் கூறுவதுபோல் விலைபோய்விட்ட துரோகி என்று கூறுவார்கள். அது உங்களின் கருத்து, நான் என்ன செய்ய முடியும்? 

நான் 2007 இலிருந்து இங்கே எழுதிவருகிறேன். நான் எழுதுவதில் மாற்றமில்லை. எனது எண்ணங்கள் புலிகள் பற்றிப் போற்றி எழுதுவதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. மக்களுக்கான நிரந்தர விடுதலை பற்றியும் நாம் செயற்படவேண்டும் என்று எண்ணுகிறேன். சில விடயங்கள் தொடர்பான தெளிவு எமக்கு அவசியம். இதனாலேயே எனக்கு அறியவேண்டிய கேள்விகளை இங்கே தெரிந்தவர்களிடம் கேட்கிறேன். 

நீங்கள் பயப்படத் தேவையில்லை. நான் இலங்கை பொலீஸ் பிரிவின் உளவுப்பிரிவில் இன்னும் சேரவில்லை. 

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
39 minutes ago, ரஞ்சித் said:

அப்படித் தெரிந்தவர்கள் இதுபற்றிய மேலதிகத் தரவுகளைத் தரமுடியுமா? செய்தவர்கள் யார், எதற்காகச் செய்தார்கள்..............அவர்கள் புலிகளாகவே இருந்தாலும் கூட.

அண்மையில் இவ்விடயம் பற்றி நண்பர் ஒருவருடன் உரையாடியிருந்தேன். முறிந்த பனைகள் நூலில் புலிகளைப் பற்றிய விமர்சனங்கள் இருந்த காரணத்தால்தான் கொல்லப்பட்டார். ஈபிஆர்எல்எவ் மீதான குற்றச்சாட்டை அற்புதன் தவிர வேறு எவரும் வைக்கவில்லை.

The new Indian government of V.P.Singh announced the withdrawal of the IPKF on September 20, 1989. The very next day, we were given the most grim indicator of what was to follow: The LTTE assassinated Dr.Rajani Thiranagama, a founder activist of the UTHR(J), the head of the Anatomy Department and one of the four who co-authored 'The Broken Palmyra'. 

http://www.uthr.org/history.htm

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
5 minutes ago, கிருபன் said:

நன்றி கிருபன். இதைத்தான் எதிர்பார்த்தேன். இக்கொலையினைப் புலிகள் செய்திருந்தால்க் கூட, அவர்கள் பக்க நியாயத்தை நான் மறுக்கவில்லை. அறிந்துகொள்வதற்காகக் கேட்ட்கிறேன், அவ்வளவுதான். 

Share this post

Link to post
Share on other sites

இதை அப்பபோதைய சூழலில் புலிகளின் தலையில் கட்டி விடவே அவர்கள் செய்தார்கள் 
அதில் பெருத்த வெற்றியும் கண்டார்கள். காரணம் அப்போது நடந்துகொண்டு இருந்த புலி வேட்டைதான் 
அப்போ ரஜனிஜை கொன்றது புலிகள் என்பதால் அது பலரும் வைத்து வைத்து இழுத்தார்கள் 
இதே காலப்பகுதியில் புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் 
எத்தனையோ பேர்கள் ஈபி யாலும் ஈ என் டி எல் பாலும் கொல்லபட்டார்கள் அவர்களை இன்று யாருக்கும் நினைவில்லை.

இவரின் வீட்டில் இருந்த நிர்மலா மற்றும் கணவரை சிங்கள இராணுவம் கைது செய்த்தே 
புலிகளுக்கு ஆதரவு கொடுத்தார்கள் என்பதால்தான். அவர்கள் எதோ ஒரு தகவலின் அடிப்படையில்தான் வந்திருக்கிறார்கள் அப்போது எதற்ச்சையாக புலிகளின் முதல் மாவீரர் சங்கர் அங்குதான் நின்று இருந்தார் 
அவர் பின் மதிலால் பாய்ந்து ஓடிவிடவே இவர்களை கைது செய்து போனார்கள்.

புலிகள் எங்கே பதுங்கி இருக்கிறார்கள் யார் யார் அடைக்கலம் கொடுக்கிறார்கள்? 
எனும் போர்வையில்தான் ரஜனி இலக்கனார் .... சுடவர்களுக்கு அவர் புத்தகம் எழுதியதே 
தெரிந்து இருக்காது என்றுதான் நான் நம்புகிறேன். ஈப்பி அப்போது புலிகள் இல்லாத வெறுமையை பயன்படுத்தி  யாழ் பல்கலைக்கழக சப்போர்ட்டை தமது பக்கம் திருப்ப பல முயற்சிகளை செய்ததர்கள் 
அதுக்கு இவர் நேரடியாகவே இந்திய இராணுவத்தையும் அவர்களுடன் கூடி இருந்தவர்களையும்  விமர்சித்து 
அவர்களுடன் இவரே விரோதத்தை ஏற்படுத்தி இருந்தார். அது ஒரு அசாதாரண துணிச்சல் .. அந்த சூழ்நிலைக்கு பொருத்தம்  இல்லாத ஒன்றை ... எந்த தைரியத்தில் செய்தார் என்பது தெரியவில்லை.

இவரின் மரணம்தான் செல்விக்கு சாதகமானது செல்வியை வைத்தே ஈப்பி அப்போது யாழ் கம்பசுக்குள் 
பல சித்து விளையாட்டுகளை செய்துவந்தார்கள்.

புலிகள் செய்தார்கள் என்பது எமது மக்களின் ஒரு லாஜிக்கும் இல்லாத பேய் பிசாசு கதைதான் 
புலிகளே செய்து இருந்தாலும் .... அந்த காலத்தில் புலிகளுக்கு இருந்த காரணம் என்ன? 

இவைகள் நான் செவி வழி அறிந்தது .....
ஆனால் 89 90களில் இவரின் வீடு புலிகளுக்கு எதிரான கருத்ததுடன் இருந்தது .... வெறுப்புடன் இருந்த்தது 
அவர்கள் புலிகள்தான் செய்தார்கள் என்பதை நம்பி இருந்தார்கள் என்பதை நேரடியாக என்னால் உணர முடிந்தது. ஆரம்ப காலத்தில் போராடத்துக்கு ஆதரவாக இருந்தாதவர்கள் பின்னாளில் எதுவுமே செய்ததில்லை  விடுதலைப்போரின் விரோதிகள்போல ஆகி இருந்தது துரதிர்ஷ்டம்.  

இந்திய இராணுவம் வெளியேறினாலும்  ஈப்பியின் தமிழ் இராணுவம் நிலைகொள்ளும் எனும் எண்ணம் 
இந்திய இராணுவம்   ஈப்பி இருவருக்கும் இருந்தது அந்த காலப்பகுதியில் என்பதுதான் நீங்கள் பார்க்க வேண்டிய முக்கிய விடயம். 

Edited by Maruthankerny
 • Like 1

Share this post

Link to post
Share on other sites
10 minutes ago, Maruthankerny said:

ஜெயராஜின் கட்டுரையைப் படிக்கும்வரை இக்கொலையினைப் புலிகள் செய்யவில்லை என்று ஆணித்தரமாக நம்பியிருந்தேன். ஆனால், அக்கட்டுரையின் பின்னர் சிலவேளை செய்திருக்கலாம் என்றும் படுகிறது. ஆனால், அற்புதன் ஏன் அவ்வாறு எழுதினார் என்பதும் சிந்திக்கப்படல் வேண்டும். 

அவர் கொல்லப்பட்டது கவலையாக இருக்கிறது. புலிகள் இதைச் செய்யவில்லை என்றே நம்ப விரும்புகிறேன். 

நீங்கள் கூறியதுபோல பல எதிரிகளை அவர் அன்று உருவாக்கியிருந்தார். இந்திய ராணுவம், அவர்களது கூலிகள், இலங்கை அரச ராணுவம் , புலிகள் என்று அனைத்துச் சக்திகளையும் விமர்சித்திருந்தார். ஆனால், எல்லோரைக் காட்டிலும் புலிகள் பற்றி அதிக விமர்சனங்களை இவர் முன்வைத்ததன் காரணத்தால், பலர் இயல்பாகவே புலிகள் தான் கொன்றார்கள் என்கிற முடிவிற்கு வந்துவிடுகிறார்கள். 

வாழ்விற்கும் சாவுக்குமான அன்றைய நாட்களில் ரஜினி இவ்வாறானதொரு புத்தகத்தை வெளியிட்டிருக்கத் தேவையில்லை. அவரது கொலைக்காக இரங்குவதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும். 

நீங்கள் கூறும் கவிஞர் செல்வி பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், நான் மட்டக்களப்பில் இருந்த காலம் அது. சரியான விபரங்கள் தெரியாது. எழுதினால் அறிந்துகொள்கிறேன். 

Share this post

Link to post
Share on other sites
36 minutes ago, ரஞ்சித் said:

குசா, என்ன பிரச்சினை?

நான் கேட்கக் கூடாத ஒன்றைக் கேட்டுவிட்டேன் என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கிருக்கும் தேசிய உணர்வே எனக்கும் இருக்கிறது. அதற்காகக் கேள்வி கேட்கக் கூடாதென்றால் என்ன செய்வது? இடையில் சில பக்கங்களைக் காணோம் என்றால் என்ன செய்ய? நான் வேறொரு தளத்தில் (ஆங்கிலம் மற்றும் தமிழ்)  எழுதுகிறேன். யாழில் எழுதும்போது வரும் தேவையற்ற விமர்சனங்களை, நக்கல்களை சிலவேளை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதனால், கருத்துக்களை வாசிப்பதுடன் நகர்ந்து சென்று விடுகிறேன். ஆனாலும், சில வேளைகளில் எனது கேள்விகளுக்கான பதில்களை இங்கே தேடுகிறேன். சிலர் உண்மையாகவே எழுதுவார்கள். பலர் என்னை நீங்கள் கூறுவதுபோல் விலைபோய்விட்ட துரோகி என்று கூறுவார்கள். அது உங்களின் கருத்து, நான் என்ன செய்ய முடியும்? 

நான் 2007 இலிருந்து இங்கே எழுதிவருகிறேன். நான் எழுதுவதில் மாற்றமில்லை. எனது எண்ணங்கள் புலிகள் பற்றிப் போற்றி எழுதுவதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. மக்களுக்கான நிரந்தர விடுதலை பற்றியும் நாம் செயற்படவேண்டும் என்று எண்ணுகிறேன். சில விடயங்கள் தொடர்பான தெளிவு எமக்கு அவசியம். இதனாலேயே எனக்கு அறியவேண்டிய கேள்விகளை இங்கே தெரிந்தவர்களிடம் கேட்கிறேன். 

நீங்கள் பயப்படத் தேவையில்லை. நான் இலங்கை பொலீஸ் பிரிவின் உளவுப்பிரிவில் இன்னும் சேரவில்லை. 

உங்கள் மீது மேலே  நீங்கள்  சொன்ன  எந்தக்குற்றச்சாட்டையம்  நான் வைக்கவில்லை

வைப்பதுமில்லை

யாரையும் துரோகி  என்று  நான் அழைத்ததுமில்லை

இதெல்லாம் பழைய அதிலும்  பலமுறை விவாதித்தவிடயம்

உங்களுக்கு ஒரே  பதில்தான்

அவர்கள்  எதைச்செய்வார்கள்

எதைச்செய்யமாட்டார்கள்  என்று  எமக்குத்தெரியணும்

தெரியும்

ஏனெனில் நாங்கள்  தான்  புலிகள்

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, விசுகு said:

அவர்கள்  எதைச்செய்வார்கள்

எதைச்செய்யமாட்டார்கள்  என்று  எமக்குத்தெரியணும்

தெரியும்

ஏனெனில் நாங்கள்  தான்  புலிகள்

சிலவேளைகளில் அப்படி நடப்பதில்லை குசா. எமது அறிவுக்கும் எதிர்பார்ப்பிற்கும் அகப்படாத வழியில்க் கூட அவர்கள் செயற்பட்டிருக்கிறார்கள். 
அவர்களை நியாயப்படுத்தும்பொழுது, சரியான ஆதாரங்களோடு நியாயப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறேன். இக்கேள்விகூட இன்னொரு தளத்தில் புலிகள் இதைச் செய்யவில்லை என்பதை நிறுவத்தான். 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
12 minutes ago, Maruthankerny said:

இவரின் வீட்டில் இருந்த நிர்மலா மற்றும் கணவரை சிங்கள இராணுவம் கைது செய்த்தே 
புலிகளுக்கு ஆதரவு கொடுத்தார்கள் என்பதால்தான். அவர்கள் எதோ ஒரு தகவலின் அடிப்படையில்தான் வந்திருக்கிறார்கள் அப்போது எதற்ச்சையாக புலிகளின் முதல் மாவீரர் சங்கர் அங்குதான் நின்று இருந்தார் 
அவர் பின் மதிலால் பாய்ந்து ஓடிவிடவே இவர்களை கைது செய்து போனார்கள்.

புலிகள் எங்கே பதுங்கி இருக்கிறார்கள் யார் யார் அடைக்கலம் கொடுக்கிறார்கள்? 
எனும் போர்வையில்தான் ரஜனி இலக்கனார் .... சுடவர்களுக்கு அவர் புத்தகம் எழுதியதே 
தெரிந்து இருக்காது என்றுதான் நான் நம்புகிறேன்.

மருது,

சம்பவங்களைக் குழப்புவது மாதிரி இருக்கின்றது. லெப். சங்கர் 1982 இல் மரணித்த மாவீரர்.

ராஜினி திரணகம கொல்லப்பட்டது 21 செப் 1989.

On the 21st September 1989, Dr. Rajini Thiranagama, a live wire and leading member of the UTHR (Jaffna) was murdered while returning home, a few yards from the Faculty of Medicine where she worked. One may ask, in a community benumbed by hundreds of senseless killings and driven to protec­tive indifference, what is the significance of this particular murder? To be sure, as many speakers had pointed out at commemoration meetings, the killing was a dastardly act against a lone, helpless and unarmed woman, and a mother of two little girls. Its phenomenal significance lay in what the killers were trying to destroy. This represented a whole spectrum of values which Rajini upheld both in practice and precept and deemed both by her and fellow members of the UTHR as being necessary for the life and freedom of the community. Her field of activities included, telling the truth about the unpleasant side and hypocrisy of this suicidally‑bent community, the practice of academic freedom, telling students that some of their views were simplistic and narrow, and practical involvement in the concerns of women who had suffered.

The killing was very different from what one might expect from an undisciplined military force in a state of anger. It was coldly premedi­tated and meticulously planned. Even the detail of minimum disruption, by scheduling the killing just after the last viva voce examinations in Ana­tomy had been looked into. The murder took place on the second day of the ceasefire. The killer had waited at a relatively lonely spot that she would have to pass while rushing home from work to care for her little ones. He had even found the time, after Rajini had fallen, to park his bicycle and pump a few more bullets into her head, before making his escape.

Even Rajini’s death brought out from the society around many of the attributes of fascist regimentation ‑ the antithesis of a freedom struggle ‑ the very thing Rajini had stood against throughout her career. On hearing the assassin’s shots, with the exception of a few medical students and some ordinary people, the rest ran away or shut themselves inside their homes. It was difficult to find a vehicle to transport her to hospital. Those who volunteered to look after her children or visited them the night following the killing were neither neighbours nor colleagues. There was fear of association: Many close to the family admitted fear of attending the fune­ral and the meetings which followed. Far from showing a sense of solidarity and outrage, the local medical profession and her faculty colleagues were divided and confused as to how to respond to this killing. No doubt every­one knew that it was wrong and totally unjustified, not least the killers. The latter chose silence and anonymity. Rajini’s friends and admirers were many, who had enjoyed her personal care and had benefited from the many risks she had personally undertaken. Her enemies were those who were against what she stood for, but would not say it openly, lest they expose before the people their emptiness, real motivations and intentions. Yet initially at least, the dominant reaction to her killing, as for other killings, was not anger, but a mixture of sadness and fear. This was the society, pliable and spiritless, that her killers were trying to build; and herein lies the chief significance of the event.

http://www.uthr.org/Reports/Report3/Rajaniwork.htm

Share this post

Link to post
Share on other sites
7 minutes ago, விசுகு said:

ஏனெனில் நாங்கள்  தான்  புலிகள்

83 கலவரத்தோடு துவக்குச் சத்தமே கேட்காமல் பிளேனில் ஏறிய நீங்கள் புலிகள் என்றால், அறியாப் பருவத்தில் இராணுவ முகாம்களைச் சுற்றியிருந்த சென்றிகளில் பல நாட்கள் காவல் இருந்த நாங்கள் பெரும் புலிகளாக அல்லவோ இருக்கவேண்டும்😂

சத்தியப்பிரமாணம் எடுக்காத எவரும் தங்களைப் புலிகள் என்று சொல்வது பிழை விசுகு ஐயா! விரும்பினால் புலிகளின் உறுதியான புலம்பெயர் ஆதரவாளர் என்று சொல்லிக்கொள்ளுங்கள்.

 • Like 1
 • Haha 2

Share this post

Link to post
Share on other sites

புலிகள் மீது கொலைப்பழி ரஜினி திரணகமவை பெண்

முறிந்தபனை புத்தகத்தை எழுதி ரஜினி திரணகமவை யாழ்ப்பாண பல்கலைக்கழக
வாயிலில் வைத்து சுட்டுக்கொன்றது யார் என்பதை கொன்றவர்களே பத்திரிகை
வாயிலாக ஒப்புக்கொண்டபின்பு இன்றும் விடுதலைப்புலிகளின் மீது குற்றம்
சுமத்தி இலக்கியவாதிகள் வரலாற்றையும் உண்மையையும் திரிவுபடுத்தி இந்திய
ராணுவமும் ரோ அமைப்பும் கூட்டுசேர்ந்து செய்த பல நூற்றுக்கணக்கான
படுகொலைகளினிமித
்தம் வழிந்த குருதிக்குள் உண்மைகளை புதைக்க முயன்று வெகுவாகவே
நிர்வாணப்பட்டு நிற்கின்றனர்.........
மட்டக்களப்பு சிறையை தகர்த்து ரஜினி திரணகமவின் சகோதரியை மீட்டு
லண்டனுக்கு அனுப்பிவைத்தவர்கள் புலிகளே
இந்தியாவின் அடிமை வேலைகளை செய்ய ஈழத்தீவில் தங்கியிருந்த
ஒருலட்சத்துக்கும் அதிகமான இந்திய ராணுவத்தின் பாலியியல் சேஷடைகள் களவு
கஞ்சா பாத்தீனிய செடிகளை ஈழத்துக்கு கொண்டுவந்தது யார் என்பதை இந்த
இலக்கியவாதிகள் எப்படி மறந்தார்கள்
ஈழத்தை விட்டு சென்ற பல இந்திய ராணுவத்தினரின் பைகளில் ஈழத்தில்
கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பெருமளவில் இருந்து கண்டுபிடிக்கபட்
டது
இவை எல்லாம் பேசு பொருள் அல்ல
(ரகு)
மனிதவுரிமைகளுக்கான யாழ்பல்கலைக்கழக ஆசிரியர்கள்( UTHR(j) ) எனும்
அமைப்பு 1988 களில் யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உடற்கூற்றியல்துறைத்
தலைவர் மறைந்த ரஜினி திரணகமவினால் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பின்
நோக்கம் அக்காலகட்டத்தில் தமிழர்தாயகத்தில் பலராலும் இடம்பெற்று வந்த
மனிதவுரிமை மீறல்ச் செயற்பாடுகளைக் கண்டித்து அவற்றை வெளியுலகிற்குக்
கொண்டுவருதலாக அமைந்திருந்து. இவ்வமைப்பினுள் பல்வேறு எண்ணங்கள்,
கோட்பாடுகள், ஆதரவுநிலைப்பாடுகளைக் கொண்ட நபர்கள் உறுப்பினர்களாக
இருந்தனர். ஈழமண்ணில் இந்திய அமைதிப்படையினர் நிலைகொண்டிருந்தகாலத்தில்
இந்தியப் படைகள்,சிறிலங்காப் படைகள்,புலிகள், மற்றும் ஈழத்தில்
அக்காலத்தில் இயங்கி வந்த தமிழ் ஆயுதக் குழுக்களின் மனிதவுரிமை மீறல்கள்
பற்றி வெளிக் கொணர்ந்திருந்தனர். இதில் முக்கியமானதாக "முறிந்த பனை"
எனும் நூல் இந்தியப்படைகள், சிறிலங்கா அரசபடைகள், புலிகள், தமிழ்
ஆயுதக்குழுக்களின் கொலை,கொள்ளை,ஆட்கடத்தல்,நீதிக்குப் புறம்பான
நடவடிக்கைகளை அப்பட்டமாக எடுத்துரைப்பதும்,விமர்சிப்பதும
ானதொரு நூலாகும்.
ஆரம்ப காலங்களில் ரஜினி புலிகளுக்காகச் செயற்பட்டாரெனக் கூறப்படும்
பொழுதிலும் பின்னாட்களில் அவர்களின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்த
ு அவர்களை விட்டுவிலகி அவர்கள் மேற்கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.
இந்திய அமைதிப்படையினரின் மனிதவுரிமை மீறல்களை
வெளிப்படுத்தியிருந்தமையால் அவர்களாலும் நெருக்குதல்களுக
்குள்ளாகிய இந்தியப் படைகளால் பல தடவைகள் இவரின் வீடு
சோதனைக்குள்ளாக்கப்பட்டு இவரின் ஆவணங்கள் பல இந்தியப்படைகளால்
சேதப்படுத்தப்பட்டும் எடுத்துச் செல்லப்பட்டுமிருந்தன.(ஆதாரம்: அற்புதன்,
அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை தொடர்கள் 176,186)
இந்தியாவில் தேர்தலால் ஆட்சி மற்றம் ஏற்பட்டு ராஜீவ்காந்தி தோல்வியைத்
தழுவிய பின்னர் பிரதமராக பதவியேற்ற பி.வி.சிங் 1989 செப்ரொம்பர் மாதம் 20
திகதியன்று இந்தியப்படைகள் இலங்கையிலிருந்து வெளியேறுமென
அறிவித்தார்.அடுத்த நாளான 1989 செப்ரொம்பர் 21 ஆம் திகதியன்று
மனிதவுரிமைச் செயற்பாட்டாளரும் உடற்கூற்றியல் மருத்துவருமான கலாநிதி ரஜனி
திரணகம ஆயுததாரியொருவரினால் சுட்டுக் கொல்லப்படுகின்றார்.
மனிதவுரிமைகளுக்கான யாழ்பல்கலைக்கழக ஆசிரியர்கள் (UTHR(j) )அமைப்பு
ரஜினியால் உருவாக்கப்பட்டு ராஜன்ஹூல், தயா சோமசுந்தரம், சிறிதரன் உட்பட
பலர் இயங்கியிருந்தாலும் பிற்காலத்தில் பலர் அவ்வமைப்பை விட்டு
விலகியிருந்தனர். 90 களின் பின்னர் யாழ்,பல்கலைக்கழகத்தில் மேற்போன்றதொரு
அமைப்பு இயங்கவில்லையெனவும் அறிவித்திருந்தனர். ரஜினி திரணகம
இருந்தவரையில் துடிப்புடன் இயங்கிய இவ்வமைப்பு 90 களின் பிற்பட்ட
காலங்களில் யாரால், எங்கிருந்து இயக்கப்படுகின்ற
தென்பது தெரியாமல், புலிகளை,அவர்களின் குற்றம்,குறை, செயற்பாடுகளையே
அதிகளவில் விமர்சித்து வந்ததுடன் ஏனையவர்களின்செயற்பாடுகளை ஒரு
கண்துடைப்புப் போலவே சாடி வந்ததிருந்தது.
மேற்படி அமைப்பின் அதன் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் அவ்வமைப்பின்
இறுதி அறிக்கையாக 11 யூன் 2009 திகதியிடப்பட்ட Deportation of Bob Rae:
Some Fundamental Questions for the future of Minorities and the
Erasure of Democracy எனும் அறிக்கையே காணக்கிடைத்தது, எனினும் UTHR(j)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இனிமேல் இயங்கமாட்டாது என்ற அறிவித்தலுடன்
ஒரு அறிக்கையொன்றினையும் 02.01.2010 அன்று வெளியிட்டிருந்ததாக Wikipedia
மூலம் அறிய முடிகின்றது. புலிகளைக் குற்றஞ்சாட்டுவதிலேயே முழுமையாகத்
தன்னை ஈடுபடுத்தியிருந்த UTHR(j) அமைப்பானது 2009 மே புலிகளின்
அழிவுக்குப் பின்னர் ஈழத்தமிழினம் சிங்கள ஒடுக்குமுறையரசி
னால் எவ்வாறான வழிகளிலெல்லாம் இனப்படுகொலைக்குட்பட்டு
வருகின்றார்களென்பதனை வெளியுலகிற்கு அம்பலப்படுத்துவதனை விடுத்து
திடீரெனத் தனது செயற்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்தமையானது இவ்வமைப்பானது
இதுவரைகாலமும் பேசி வந்ததாக சொல்லப்படும் மனிதவுரிமை போன்ற விடயங்களும்,
இதனது செயற்பாடுகளும் ஒரு பக்கச்சார்புடையதாகவும் , ஏதோவொரு
பின்னணியுடனும், வெறொருவர்காகவுமே செயற்பட்டு வந்திருந்தது என்றே எண்ணத்
தோன்றுகின்றது.
- Karvanna Subhas
3 மணி நேரம் · பொது

Aathimoola Perumal Prakash
புலிகள் சிறைமீட்ட பெண் வேட்டொலி

Share this post

Link to post
Share on other sites
15 minutes ago, கிருபன் said:

நன்றி சகோ நான் சொன்னது உங்களுக்கு புரிந்திருக்காது என்று நான் எடுத்துக்கொள்ளமாட்டேன்   எதுக்கு சும்மா நேரத்தை வீணாக்குவான் 

Share this post

Link to post
Share on other sites
17 minutes ago, கிருபன் said:

மருது,

சம்பவங்களைக் குழப்புவது மாதிரி இருக்கின்றது. லெப். சங்கர் 1982 இல் மரணித்த மாவீரர்.

ராஜினி திரணகம கொல்லப்பட்டது 21 செப் 1989.

On the 21st September 1989, Dr. Rajini Thiranagama, a live wire and leading member of the UTHR (Jaffna) was murdered while returning home, a few yards from the Faculty of Medicine where she worked. One may ask, in a community benumbed by hundreds of senseless killings and driven to protec­tive indifference, what is the significance of this particular murder? To be sure, as many speakers had pointed out at commemoration meetings, the killing was a dastardly act against a lone, helpless and unarmed woman, and a mother of two little girls. Its phenomenal significance lay in what the killers were trying to destroy. This represented a whole spectrum of values which Rajini upheld both in practice and precept and deemed both by her and fellow members of the UTHR as being necessary for the life and freedom of the community. Her field of activities included, telling the truth about the unpleasant side and hypocrisy of this suicidally‑bent community, the practice of academic freedom, telling students that some of their views were simplistic and narrow, and practical involvement in the concerns of women who had suffered.

The killing was very different from what one might expect from an undisciplined military force in a state of anger. It was coldly premedi­tated and meticulously planned. Even the detail of minimum disruption, by scheduling the killing just after the last viva voce examinations in Ana­tomy had been looked into. The murder took place on the second day of the ceasefire. The killer had waited at a relatively lonely spot that she would have to pass while rushing home from work to care for her little ones. He had even found the time, after Rajini had fallen, to park his bicycle and pump a few more bullets into her head, before making his escape.

Even Rajini’s death brought out from the society around many of the attributes of fascist regimentation ‑ the antithesis of a freedom struggle ‑ the very thing Rajini had stood against throughout her career. On hearing the assassin’s shots, with the exception of a few medical students and some ordinary people, the rest ran away or shut themselves inside their homes. It was difficult to find a vehicle to transport her to hospital. Those who volunteered to look after her children or visited them the night following the killing were neither neighbours nor colleagues. There was fear of association: Many close to the family admitted fear of attending the fune­ral and the meetings which followed. Far from showing a sense of solidarity and outrage, the local medical profession and her faculty colleagues were divided and confused as to how to respond to this killing. No doubt every­one knew that it was wrong and totally unjustified, not least the killers. The latter chose silence and anonymity. Rajini’s friends and admirers were many, who had enjoyed her personal care and had benefited from the many risks she had personally undertaken. Her enemies were those who were against what she stood for, but would not say it openly, lest they expose before the people their emptiness, real motivations and intentions. Yet initially at least, the dominant reaction to her killing, as for other killings, was not anger, but a mixture of sadness and fear. This was the society, pliable and spiritless, that her killers were trying to build; and herein lies the chief significance of the event.

http://www.uthr.org/Reports/Report3/Rajaniwork.htm

இந்த ஆக்கம் கூட அவர் சார்ந்திருந்த அமைப்பினால் எழுதப்பட்டதுதானே கிருபன்? ஆக, புலிகள் தான் இதைச் செய்தார்கள் என்று நம்பிக்கொண்டு, இன்றுவரை புலிகளைத் தொடர்ச்சியாக விமர்சித்துவரும், மனிதவுரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் குழு - யாழ்ப்பாணம் என்பவர்கள் புலிகளுக்கெதிரான மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர்கள், பாசிஸ்ட்டுக்கள் என்ற சொற்றொடரை புலிகளுக்கெதிராக முதன்முறையாகப் பாவித்தவர்கள், சந்திரிக்கா உற்பட்ட பல சிங்கள இனவாதிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு வழங்கியவர்கள், உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் புலிகளையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் பயங்கரவாதம் என்று சித்தரிப்பதற்காக மேற்கோள் காட்டப்பட்டவர்கள். ஆகவே, இவர்கள் புலிகள்தான் கொன்றார்கள் என்று சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வதும் கடிணம்தான். 

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ரஞ்சித் said:

90 களின் நடுப்பகுதியில், தினமுரசில் வெளிவந்துகொண்டிருந்த அல்பேர்ட் துரையப்பா முதல் என்று ஆரம்பிக்கும் அரசியல் தொடரில் எழுதிவந்த அற்புதன், ஒருமுறை ரஜிணி திரணகமவின் கொலை பற்றிக் குறிப்பிடும்பொழுது, அனைவரும் நினைப்பது போல இக்கொலையைப் புலிகள் செய்யவில்லை. ஈ. பி. ஆர். எல். அப் குழுவே செய்தது என்று எழுதியிருந்தார். இதனால், ரஜிணியைக் கொன்றது அக்குழுதான் என்று நாம் நம்பி இன்றுவரை தொடர்ந்தும் வேறு வேறு இடங்களிலும், என்னுடன் பேசுபவர்களிடமும் கூறி வருகிறேன். இன்று ஆங்கில இணையத்தளமான கோராவில் சில நண்பர்கள் இதுபற்றிக் கேட்டபோது, தினமுரசில் படித்ததைச் சொன்னேன். ஆனால், உறுதிப்படுத்தமுடியவில்லை. இதுபற்றித் தேடலாம் என்று தொடங்கியபோது இக்கொலை தொடர்பான சில கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதிலொன்று டி. பி. எஸ் ஜெயராஜினுடையது. 

அவரது கட்டுரையில்க் கூட புலிகளோ அல்லது ஈ. பி. ஆர் எல் எப் போ செய்திருக்கலாம் என்ற குழப்பமிருந்தாலும்கூட, புலிகளே இதைச் செய்தார்கள் என்று ஆணித்தரமாகக் கூறுகிறார். இந்திய ராணுவத்தினருடன் ரஜினி அடிக்கடி முரண்பட்டு வந்ததால், அன்று இந்திய ராணுவத்தின் கூலிகளாக இயங்கிய  ஈ பி ஆர் எல் எப் இக்கொலையை நடத்தியதாக சந்தேகம் எழுந்திருந்த வேளையில், ரஜினி பல்கலைக்கழகம் விட்டு வீட்டிற்கு வரும் வழியில் பார்த்திருந்து , சரியாக 4 மணியளவில், கொக்குவிலில் இருக்கும் அவரது  வீட்டிற்கருகில், அவர் சைக்கிளிலிருந்து இறங்கும்பொழுது, அவரது பெயரைக் கூறியழைத்து, நெற்றியின் மீது துப்பாக்கியை வைக்கவும், வெறும் கைகளால் தனது முகத்தை ரஜினி மூடிக்கொண்டார் என்றும், துப்பாக்கிதாரி முதலில் நெற்றியிலும், பின்னர் கீழே விழுந்த ரஜினியின் தலையிலும் சுட்டுவிட்டுச் சென்றதை சாட்சியங்கள் பார்த்ததாகவும் கூறுகிறார். 

இக்கொலையினைப் புலிகளே செய்தார்கள் என்பதற்கு ஆதாரமாக, "என்னைக் கொல்லக் காத்திருப்பவர்கள் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்கள் தான்" என்று தனது கொலையை முன்கூட்டியே அறிந்திருந்த ரஜினி தனது நண்பர்களுடன் சொன்னதாகவும் ஜெயராஜ் கூறுகிறார். 

ஜெயராஜ் புலிகளுக்கு எதிரானவர். ஆகவே புலிகளைத்தவிர வேறு எவரையுமே அவர் சந்தேகிக்க வாய்ப்பில்லை. அற்புதனும் புலிகளுக்கு எதிரானவர், ஆனால் புலிகளுக்குச் சார்பாக தினமுரசில் எழுதுயதனால் மக்களிடையே பிரபலமானவர், ஆகவே அவர் மக்களை மகிழ்விக்க ரஜினியைக் கொன்றது புலிகள் இல்லை என்று எழுதியிருக்கலாம். 

இக்கொலை நடைபெற்ற நாட்களில் உங்களில் பலர் ஊரில் இருந்திருக்கலாம். அநேகமானவர்களுக்கு இக்கொலையினைப் புரிந்தவர்கள் பற்றிய அறிவு இருக்கலாம். அப்படித் தெரிந்தவர்கள் இதுபற்றிய மேலதிகத் தரவுகளைத் தரமுடியுமா? செய்தவர்கள் யார், எதற்காகச் செய்தார்கள்..............அவர்கள் புலிகளாகவே இருந்தாலும் கூட.

உடனேயே துரோகி, விரோதி என்று எழுதவேண்டாம். நடந்தவை பற்றிப் பகிர்வதில் தவறில்லையே? 

நான் DBS ன் கட்டுரைகளை பெருமளவு நம்புவதில்லை.  எனது சொந்தனுபவத்தில் இவர் பேனை பெருமாளாக்குவதில்  (தவறு இருந்தால் திருத்தவும் ) வல்லவர்.  பலதடவை இவரிடம் இவரின் கட்டுரையின் உண்மைத்தன்மை பற்றி ஆதாரங்கள் தரவுகளுடன் கேள்வி எழுப்பியிருந்தேன்.  ஆள்  எஸ்கேப் .  

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

எமக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் தோன்றியதை சொல்ல விழைகிறேன்.

போராட்டம் முடிஞ்சி ஒரு சதாப்தமும் தாண்டியாச்சுது..

இன்னமும் பழைய புண்களை சொறிந்து பார்ப்பதால் யாருக்கு பயன்..? நிச்ச்யம் மணக்காது..!

இப்படியே விட்டால்,

பற்குணத்தை கொன்றது யார், சற்குணத்தை போட்டது யார், கெளசல்யனை தூக்கியது யார்.. துரைரட்தினத்தை அனுப்பியது யார்.. என தொடர் நீளும் போலிருக்கே..?

இனி நடக்கப் போவதை, தாழ்விலிருந்து எப்படி மீள்வது என சிந்திப்பது பயன் தருமல்லவா..?

 • Like 5
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, ரஞ்சித் said:

குசா, என்ன பிரச்சினை?

நான் கேட்கக் கூடாத ஒன்றைக் கேட்டுவிட்டேன் என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கிருக்கும் தேசிய உணர்வே எனக்கும் இருக்கிறது. அதற்காகக் கேள்வி கேட்கக் கூடாதென்றால் என்ன செய்வது? இடையில் சில பக்கங்களைக் காணோம் என்றால் என்ன செய்ய? நான் வேறொரு தளத்தில் (ஆங்கிலம் மற்றும் தமிழ்)  எழுதுகிறேன். யாழில் எழுதும்போது வரும் தேவையற்ற விமர்சனங்களை, நக்கல்களை சிலவேளை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதனால், கருத்துக்களை வாசிப்பதுடன் நகர்ந்து சென்று விடுகிறேன். ஆனாலும், சில வேளைகளில் எனது கேள்விகளுக்கான பதில்களை இங்கே தேடுகிறேன். சிலர் உண்மையாகவே எழுதுவார்கள். பலர் என்னை நீங்கள் கூறுவதுபோல் விலைபோய்விட்ட துரோகி என்று கூறுவார்கள். அது உங்களின் கருத்து, நான் என்ன செய்ய முடியும்? 

நான் 2007 இலிருந்து இங்கே எழுதிவருகிறேன். நான் எழுதுவதில் மாற்றமில்லை. எனது எண்ணங்கள் புலிகள் பற்றிப் போற்றி எழுதுவதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. மக்களுக்கான நிரந்தர விடுதலை பற்றியும் நாம் செயற்படவேண்டும் என்று எண்ணுகிறேன். சில விடயங்கள் தொடர்பான தெளிவு எமக்கு அவசியம். இதனாலேயே எனக்கு அறியவேண்டிய கேள்விகளை இங்கே தெரிந்தவர்களிடம் கேட்கிறேன். 

நீங்கள் பயப்படத் தேவையில்லை. நான் இலங்கை பொலீஸ் பிரிவின் உளவுப்பிரிவில் இன்னும் சேரவில்லை. 

எப்ப கு சாவும்,விசுகு அண்ணாவும் ஒரே ஆளா மாறினவை

Share this post

Link to post
Share on other sites

என்னைப் பொறுத்த வரை ஏற்றுக் கொள்கிறோமோ ,இல்லையோ இவரை புலிகள் தான் கொன்றார்கள் 

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, கிருபன் said:

மருது,

சம்பவங்களைக் குழப்புவது மாதிரி இருக்கின்றது. லெப். சங்கர் 1982 இல் மரணித்த மாவீரர்.

ராஜினி திரணகம கொல்லப்பட்டது 21 செப் 1989.

On the 21st September 1989, Dr. Rajini Thiranagama, a live wire and leading member of the UTHR (Jaffna) was murdered while returning home, a few yards from the Faculty of Medicine where she worked. One may ask, in a community benumbed by hundreds of senseless killings and driven to protec­tive indifference, what is the significance of this particular murder? To be sure, as many speakers had pointed out at commemoration meetings, the killing was a dastardly act against a lone, helpless and unarmed woman, and a mother of two little girls. Its phenomenal significance lay in what the killers were trying to destroy. This represented a whole spectrum of values which Rajini upheld both in practice and precept and deemed both by her and fellow members of the UTHR as being necessary for the life and freedom of the community. Her field of activities included, telling the truth about the unpleasant side and hypocrisy of this suicidally‑bent community, the practice of academic freedom, telling students that some of their views were simplistic and narrow, and practical involvement in the concerns of women who had suffered.

The killing was very different from what one might expect from an undisciplined military force in a state of anger. It was coldly premedi­tated and meticulously planned. Even the detail of minimum disruption, by scheduling the killing just after the last viva voce examinations in Ana­tomy had been looked into. The murder took place on the second day of the ceasefire. The killer had waited at a relatively lonely spot that she would have to pass while rushing home from work to care for her little ones. He had even found the time, after Rajini had fallen, to park his bicycle and pump a few more bullets into her head, before making his escape.

Even Rajini’s death brought out from the society around many of the attributes of fascist regimentation ‑ the antithesis of a freedom struggle ‑ the very thing Rajini had stood against throughout her career. On hearing the assassin’s shots, with the exception of a few medical students and some ordinary people, the rest ran away or shut themselves inside their homes. It was difficult to find a vehicle to transport her to hospital. Those who volunteered to look after her children or visited them the night following the killing were neither neighbours nor colleagues. There was fear of association: Many close to the family admitted fear of attending the fune­ral and the meetings which followed. Far from showing a sense of solidarity and outrage, the local medical profession and her faculty colleagues were divided and confused as to how to respond to this killing. No doubt every­one knew that it was wrong and totally unjustified, not least the killers. The latter chose silence and anonymity. Rajini’s friends and admirers were many, who had enjoyed her personal care and had benefited from the many risks she had personally undertaken. Her enemies were those who were against what she stood for, but would not say it openly, lest they expose before the people their emptiness, real motivations and intentions. Yet initially at least, the dominant reaction to her killing, as for other killings, was not anger, but a mixture of sadness and fear. This was the society, pliable and spiritless, that her killers were trying to build; and herein lies the chief significance of the event.

http://www.uthr.org/Reports/Report3/Rajaniwork.htm

நான் எழுதியது பழைய விடயம் ....
இவர்களின் வீடு ஆரம்ப காலத்தில் இருந்தே போராளிகள் 
வந்துபோகும் வீடாக இருந்தது புலிகள் மட்டும் இல்லை மற்றைய 
இயக்க போராளிகளும் இங்கு வந்துபோவது என்று ஒரு விடுதலை விரும்பிகளின் 
வீடாக ரஜனி சுட்டுக்கொல்லும் வரை இருந்து இருக்கிறது. 81-82  களிலேயே
83 கலவரத்துக்கு முன்பே போலீஸ் அச்சுறுத்ததல்களை பார்த்தவர்கள். பின்னாளில் எமது விடுதலை 
போரையும் போராளிகளையும் விரோதிகளாக பார்க்கும் நிலைக்கு சென்று இருந்தார்கள் என்பதைத்தான் எழுதினேன். அதுதான் 89-90 க்கு முன் கால பகுதி எல்லாம் நான் கேள்விப்பட்டது அதன் பின்னான பகுதி நான் நேரிடையாக பார்த்தது என்று எழுதி இருந்தேன். 

3 hours ago, Maruthankerny said:

இதை அப்பபோதைய சூழலில் புலிகளின் தலையில் கட்டி விடவே அவர்கள் செய்தார்கள் 
அதில் பெருத்த வெற்றியும் கண்டார்கள். காரணம் அப்போது நடந்துகொண்டு இருந்த புலி வேட்டைதான் 
அப்போ ரஜனிஜை கொன்றது புலிகள் என்பதால் அது பலரும் வைத்து வைத்து இழுத்தார்கள் 
இதே காலப்பகுதியில் புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் 
எத்தனையோ பேர்கள் ஈபி யாலும் ஈ என் டி எல் பாலும் கொல்லபட்டார்கள் அவர்களை இன்று யாருக்கும் நினைவில்லை.

இவரின் வீட்டில் இருந்த நிர்மலா மற்றும் கணவரை சிங்கள இராணுவம் கைது செய்த்தே 
புலிகளுக்கு ஆதரவு கொடுத்தார்கள் என்பதால்தான். அவர்கள் எதோ ஒரு தகவலின் அடிப்படையில்தான் வந்திருக்கிறார்கள் அப்போது எதற்ச்சையாக புலிகளின் முதல் மாவீரர் சங்கர் அங்குதான் நின்று இருந்தார் 
அவர் பின் மதிலால் பாய்ந்து ஓடிவிடவே இவர்களை கைது செய்து போனார்கள்.

புலிகள் எங்கே பதுங்கி இருக்கிறார்கள் யார் யார் அடைக்கலம் கொடுக்கிறார்கள்? 
எனும் போர்வையில்தான் ரஜனி இலக்கனார் .... சுடவர்களுக்கு அவர் புத்தகம் எழுதியதே 
தெரிந்து இருக்காது என்றுதான் நான் நம்புகிறேன். ஈப்பி அப்போது புலிகள் இல்லாத வெறுமையை பயன்படுத்தி  யாழ் பல்கலைக்கழக சப்போர்ட்டை தமது பக்கம் திருப்ப பல முயற்சிகளை செய்ததர்கள் 
அதுக்கு இவர் நேரடியாகவே இந்திய இராணுவத்தையும் அவர்களுடன் கூடி இருந்தவர்களையும்  விமர்சித்து 
அவர்களுடன் இவரே விரோதத்தை ஏற்படுத்தி இருந்தார். அது ஒரு அசாதாரண துணிச்சல் .. அந்த சூழ்நிலைக்கு பொருத்தம்  இல்லாத ஒன்றை ... எந்த தைரியத்தில் செய்தார் என்பது தெரியவில்லை.

இவரின் மரணம்தான் செல்விக்கு சாதகமானது செல்வியை வைத்தே ஈப்பி அப்போது யாழ் கம்பசுக்குள் 
பல சித்து விளையாட்டுகளை செய்துவந்தார்கள்.

புலிகள் செய்தார்கள் என்பது எமது மக்களின் ஒரு லாஜிக்கும் இல்லாத பேய் பிசாசு கதைதான் 
புலிகளே செய்து இருந்தாலும் .... அந்த காலத்தில் புலிகளுக்கு இருந்த காரணம் என்ன? 

இவைகள் நான் செவி வழி அறிந்தது .....
ஆனால் 89 90களில் இவரின் வீடு புலிகளுக்கு எதிரான கருத்ததுடன் இருந்தது .... வெறுப்புடன் இருந்த்தது 
அவர்கள் புலிகள்தான் செய்தார்கள் என்பதை நம்பி இருந்தார்கள் என்பதை நேரடியாக என்னால் உணர முடிந்தது. ஆரம்ப காலத்தில் போராடத்துக்கு ஆதரவாக இருந்தாதவர்கள் பின்னாளில் எதுவுமே செய்ததில்லை  விடுதலைப்போரின் விரோதிகள்போல ஆகி இருந்தது துரதிர்ஷ்டம்.  

இந்திய இராணுவம் வெளியேறினாலும்  ஈப்பியின் தமிழ் இராணுவம் நிலைகொள்ளும் எனும் எண்ணம் 
இந்திய இராணுவம்   ஈப்பி இருவருக்கும் இருந்தது அந்த காலப்பகுதியில் என்பதுதான் நீங்கள் பார்க்க வேண்டிய முக்கிய விடயம். 

2 hours ago, கிருபன் said:

மருது,

சம்பவங்களைக் குழப்புவது மாதிரி இருக்கின்றது. லெப். சங்கர் 1982 இல் மரணித்த மாவீரர்.

ராஜினி திரணகம கொல்லப்பட்டது 21 செப் 1989.

On the 21st September 1989, Dr. Rajini Thiranagama, a live wire and leading member of the UTHR (Jaffna) was murdered while returning home, a few yards from the Faculty of Medicine where she worked. One may ask, in a community benumbed by hundreds of senseless killings and driven to protec­tive indifference, what is the significance of this particular murder? To be sure, as many speakers had pointed out at commemoration meetings, the killing was a dastardly act against a lone, helpless and unarmed woman, and a mother of two little girls. Its phenomenal significance lay in what the killers were trying to destroy. This represented a whole spectrum of values which Rajini upheld both in practice and precept and deemed both by her and fellow members of the UTHR as being necessary for the life and freedom of the community. Her field of activities included, telling the truth about the unpleasant side and hypocrisy of this suicidally‑bent community, the practice of academic freedom, telling students that some of their views were simplistic and narrow, and practical involvement in the concerns of women who had suffered.

The killing was very different from what one might expect from an undisciplined military force in a state of anger. It was coldly premedi­tated and meticulously planned. Even the detail of minimum disruption, by scheduling the killing just after the last viva voce examinations in Ana­tomy had been looked into. The murder took place on the second day of the ceasefire. The killer had waited at a relatively lonely spot that she would have to pass while rushing home from work to care for her little ones. He had even found the time, after Rajini had fallen, to park his bicycle and pump a few more bullets into her head, before making his escape.

Even Rajini’s death brought out from the society around many of the attributes of fascist regimentation ‑ the antithesis of a freedom struggle ‑ the very thing Rajini had stood against throughout her career. On hearing the assassin’s shots, with the exception of a few medical students and some ordinary people, the rest ran away or shut themselves inside their homes. It was difficult to find a vehicle to transport her to hospital. Those who volunteered to look after her children or visited them the night following the killing were neither neighbours nor colleagues. There was fear of association: Many close to the family admitted fear of attending the fune­ral and the meetings which followed. Far from showing a sense of solidarity and outrage, the local medical profession and her faculty colleagues were divided and confused as to how to respond to this killing. No doubt every­one knew that it was wrong and totally unjustified, not least the killers. The latter chose silence and anonymity. Rajini’s friends and admirers were many, who had enjoyed her personal care and had benefited from the many risks she had personally undertaken. Her enemies were those who were against what she stood for, but would not say it openly, lest they expose before the people their emptiness, real motivations and intentions. Yet initially at least, the dominant reaction to her killing, as for other killings, was not anger, but a mixture of sadness and fear. This was the society, pliable and spiritless, that her killers were trying to build; and herein lies the chief significance of the event.

http://www.uthr.org/Reports/Report3/Rajaniwork.htm

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, ராசவன்னியன் said:

எமக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் தோன்றியதை சொல்ல விழைகிறேன்.

போராட்டம் முடிஞ்சி ஒரு சதாப்தமும் தாண்டியாச்சுது..

இன்னமும் பழைய புண்களை சொறிந்து பார்ப்பதால் யாருக்கு பயன்..? நிச்ச்யம் மணக்காது..!

இப்படியே விட்டால்,

பற்குணத்தை கொன்றது யார், சற்குணத்தை போட்டது யார், கெளசல்யனை தூக்கியது யார்.. துரைரட்தினத்தை அனுப்பியது யார்.. என தொடர் நீளும் போலிருக்கே..?

இனி நடக்கப் போவதை, தாழ்விலிருந்து எப்படி மீள்வது என சிந்திப்பது பயன் தருமல்லவா..?

உண்மைதான்...பழையதை துருவிக்கொண்டிருந்தால் மறப்போம் மன்னிப்போம் என்ற சொற்பதத்திற்கு வாய்ப்பே இல்லை. அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நகரவே முடியாது.

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

என்னைப் பொறுத்த வரை ஏற்றுக் கொள்கிறோமோ ,இல்லையோ இவரை புலிகள் தான் கொன்றார்கள் 

உங்களை பொறுத்தவரை?
என்றால் அது என்ன? உங்களிடம் அதுக்கான ஏதாவது ஆதாரம் அல்லது அது சார்ந்த செய்தி 
அல்லது தனிப்பட ரஜனி யுடன் ஏதும் பழக்கம் இருக்கிறதா?

ஏற்றுக்கொள்வதுக்கும் மறுப்பதுக்கும் உங்கள் கருத்தில் என்ன இருக்கிறது?
"என்னை பொறுத்தவரை" என்பது என்ன? 

1 hour ago, ரதி said:

என்னைப் பொறுத்த வரை ஏற்றுக் கொள்கிறோமோ ,இல்லையோ இவரை புலிகள் தான் கொன்றார்கள் 

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, ராசவன்னியன் said:

எமக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் தோன்றியதை சொல்ல விழைகிறேன்.

போராட்டம் முடிஞ்சி ஒரு சதாப்தமும் தாண்டியாச்சுது..

இன்னமும் பழைய புண்களை சொறிந்து பார்ப்பதால் யாருக்கு பயன்..? நிச்ச்யம் மணக்காது..!

இப்படியே விட்டால்,

பற்குணத்தை கொன்றது யார், சற்குணத்தை போட்டது யார், கெளசல்யனை தூக்கியது யார்.. துரைரட்தினத்தை அனுப்பியது யார்.. என தொடர் நீளும் போலிருக்கே..?

இனி நடக்கப் போவதை, தாழ்விலிருந்து எப்படி மீள்வது என சிந்திப்பது பயன் தருமல்லவா..?

உண்மைதான் அண்ணா 
ஆனாலும் பல கொலைகள் வேண்டும் என்றே புலிகள் மேலே கட்டபட்டு இருக்கிறது 
புலிகள் எதையும் மறுப்பதும் இல்லை நேரம் வீணாக்கி அதை பற்றி பேசுவதும் இல்லை.

இந்த ரஜனி அவர்களின் கொலையில் சுடடவர்களே முன்வந்து சொல்லி இருக்கிறார்கள் 
நாம்தான் சுட்டொம் .... இன்னார்தான் இந்த நேரத்த்தில் இந்த இடத்தில் வைத்து சுட்டார் என்று 
இதுக்குப்பிறகும் இதுக்குள் எந்த காரணமும் இல்லாமல் புலிகளை இழுத்து விடுவதில் பலருக்கு அலாதி பிரியம். 

இவரின் கொலை என்பது அன்று பலருக்கு சாதகமாக யாழ் பல்கலைக்கழக வட்டதில் அமைந்தது 
அதைவைத்து அப்போதைய சில கல்வியாளர்களை புலிகளுக்கு எதிராக திருப்பி விடுவதுக்கு இதை பயன்படுத்தினார்கள். காலம் தாழ்ந்தே சிலர் தாம் ஏமாற்றபட்டதை உணர்கிறார்கள். சிலர் தாம்தான் புத்திசாலி என்று எண்ணி இன்னமும் உண்மைகளை உள்வாங்காது இருக்கிறார்கள். 

இவர் புலிகளுக்கு எதிரானவரும் இல்லை 
இவர் கொலையால் புலிகளுக்கு எந்த லாபமும் இல்லை 
மாறாக புலிகளின் ஆதரவு என்று கூறி இவர்களுக்கு இந்திய இராணுவத்தால் மட்டுமே 
பல அச்சுறுத்தல் இருந்துவந்தது..... இவரே தன்னை ஈப்பி சுடலாம் என்பதை சொல்லி வந்திருக்கிறார். 
காரணம் இவர் செல்வி என்ற இன்னொரு ஈப்பி ஆதரவாளரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இவருக்கும்    
ஈப்பிக்கும் ஒரு விரோத நிலை தோன்றி இருந்தது. ஆனால் சாமர்த்தியமாக  இவரின் கொலையை புலிகள் தலையில்  போட்டு பின்னாளில் செல்வி என்பவர் அதை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டார். 

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, nunavilan said:

புலிகள் மீது கொலைப்பழி ரஜினி திரணகமவை பெண்

முறிந்தபனை புத்தகத்தை எழுதி ரஜினி திரணகமவை யாழ்ப்பாண பல்கலைக்கழக
வாயிலில் வைத்து சுட்டுக்கொன்றது யார் என்பதை கொன்றவர்களே பத்திரிகை
வாயிலாக ஒப்புக்கொண்டபின்பு இன்றும் விடுதலைப்புலிகளின் மீது குற்றம்
சுமத்தி இலக்கியவாதிகள் வரலாற்றையும் உண்மையையும் திரிவுபடுத்தி இந்திய
ராணுவமும் ரோ அமைப்பும் கூட்டுசேர்ந்து செய்த பல நூற்றுக்கணக்கான
படுகொலைகளினிமித
்தம் வழிந்த குருதிக்குள் உண்மைகளை புதைக்க முயன்று வெகுவாகவே
நிர்வாணப்பட்டு நிற்கின்றனர்.........
மட்டக்களப்பு சிறையை தகர்த்து ரஜினி திரணகமவின் சகோதரியை மீட்டு
லண்டனுக்கு அனுப்பிவைத்தவர்கள் புலிகளே

இந்தியாவின் அடிமை வேலைகளை செய்ய ஈழத்தீவில் தங்கியிருந்த
ஒருலட்சத்துக்கும் அதிகமான இந்திய ராணுவத்தின் பாலியியல் சேஷடைகள் களவு
கஞ்சா பாத்தீனிய செடிகளை ஈழத்துக்கு கொண்டுவந்தது யார் என்பதை இந்த
இலக்கியவாதிகள் எப்படி மறந்தார்கள்
ஈழத்தை விட்டு சென்ற பல இந்திய ராணுவத்தினரின் பைகளில் ஈழத்தில்
கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பெருமளவில் இருந்து கண்டுபிடிக்கபட்
டது
இவை எல்லாம் பேசு பொருள் அல்ல
(ரகு)
மனிதவுரிமைகளுக்கான யாழ்பல்கலைக்கழக ஆசிரியர்கள்( UTHR(j) ) எனும்
அமைப்பு 1988 களில் யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உடற்கூற்றியல்துறைத்
தலைவர் மறைந்த ரஜினி திரணகமவினால் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பின்
நோக்கம் அக்காலகட்டத்தில் தமிழர்தாயகத்தில் பலராலும் இடம்பெற்று வந்த
மனிதவுரிமை மீறல்ச் செயற்பாடுகளைக் கண்டித்து அவற்றை வெளியுலகிற்குக்
கொண்டுவருதலாக அமைந்திருந்து. இவ்வமைப்பினுள் பல்வேறு எண்ணங்கள்,
கோட்பாடுகள், ஆதரவுநிலைப்பாடுகளைக் கொண்ட நபர்கள் உறுப்பினர்களாக
இருந்தனர். ஈழமண்ணில் இந்திய அமைதிப்படையினர் நிலைகொண்டிருந்தகாலத்தில்
இந்தியப் படைகள்,சிறிலங்காப் படைகள்,புலிகள், மற்றும் ஈழத்தில்
அக்காலத்தில் இயங்கி வந்த தமிழ் ஆயுதக் குழுக்களின் மனிதவுரிமை மீறல்கள்
பற்றி வெளிக் கொணர்ந்திருந்தனர். இதில் முக்கியமானதாக "முறிந்த பனை"
எனும் நூல் இந்தியப்படைகள், சிறிலங்கா அரசபடைகள், புலிகள், தமிழ்
ஆயுதக்குழுக்களின் கொலை,கொள்ளை,ஆட்கடத்தல்,நீதிக்குப் புறம்பான
நடவடிக்கைகளை அப்பட்டமாக எடுத்துரைப்பதும்,விமர்சிப்பதும
ானதொரு நூலாகும்.
ஆரம்ப காலங்களில் ரஜினி புலிகளுக்காகச் செயற்பட்டாரெனக் கூறப்படும்
பொழுதிலும் பின்னாட்களில் அவர்களின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்த
ு அவர்களை விட்டுவிலகி அவர்கள் மேற்கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.
இந்திய அமைதிப்படையினரின் மனிதவுரிமை மீறல்களை
வெளிப்படுத்தியிருந்தமையால் அவர்களாலும் நெருக்குதல்களுக
்குள்ளாகிய இந்தியப் படைகளால் பல தடவைகள் இவரின் வீடு
சோதனைக்குள்ளாக்கப்பட்டு இவரின் ஆவணங்கள் பல இந்தியப்படைகளால்
சேதப்படுத்தப்பட்டும் எடுத்துச் செல்லப்பட்டுமிருந்தன.(ஆதாரம்: அற்புதன்,
அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை தொடர்கள் 176,186)
இந்தியாவில் தேர்தலால் ஆட்சி மற்றம் ஏற்பட்டு ராஜீவ்காந்தி தோல்வியைத்
தழுவிய பின்னர் பிரதமராக பதவியேற்ற பி.வி.சிங் 1989 செப்ரொம்பர் மாதம் 20
திகதியன்று இந்தியப்படைகள் இலங்கையிலிருந்து வெளியேறுமென
அறிவித்தார்.அடுத்த நாளான 1989 செப்ரொம்பர் 21 ஆம் திகதியன்று
மனிதவுரிமைச் செயற்பாட்டாளரும் உடற்கூற்றியல் மருத்துவருமான கலாநிதி ரஜனி
திரணகம ஆயுததாரியொருவரினால் சுட்டுக் கொல்லப்படுகின்றார்.
மனிதவுரிமைகளுக்கான யாழ்பல்கலைக்கழக ஆசிரியர்கள் (UTHR(j) )அமைப்பு
ரஜினியால் உருவாக்கப்பட்டு ராஜன்ஹூல், தயா சோமசுந்தரம், சிறிதரன் உட்பட
பலர் இயங்கியிருந்தாலும் பிற்காலத்தில் பலர் அவ்வமைப்பை விட்டு
விலகியிருந்தனர். 90 களின் பின்னர் யாழ்,பல்கலைக்கழகத்தில் மேற்போன்றதொரு
அமைப்பு இயங்கவில்லையெனவும் அறிவித்திருந்தனர். ரஜினி திரணகம
இருந்தவரையில் துடிப்புடன் இயங்கிய இவ்வமைப்பு 90 களின் பிற்பட்ட
காலங்களில் யாரால், எங்கிருந்து இயக்கப்படுகின்ற
தென்பது தெரியாமல், புலிகளை,அவர்களின் குற்றம்,குறை, செயற்பாடுகளையே
அதிகளவில் விமர்சித்து வந்ததுடன் ஏனையவர்களின்செயற்பாடுகளை ஒரு
கண்துடைப்புப் போலவே சாடி வந்ததிருந்தது.
மேற்படி அமைப்பின் அதன் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் அவ்வமைப்பின்
இறுதி அறிக்கையாக 11 யூன் 2009 திகதியிடப்பட்ட Deportation of Bob Rae:
Some Fundamental Questions for the future of Minorities and the
Erasure of Democracy எனும் அறிக்கையே காணக்கிடைத்தது, எனினும் UTHR(j)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இனிமேல் இயங்கமாட்டாது என்ற அறிவித்தலுடன்
ஒரு அறிக்கையொன்றினையும் 02.01.2010 அன்று வெளியிட்டிருந்ததாக Wikipedia
மூலம் அறிய முடிகின்றது. புலிகளைக் குற்றஞ்சாட்டுவதிலேயே முழுமையாகத்
தன்னை ஈடுபடுத்தியிருந்த UTHR(j) அமைப்பானது 2009 மே புலிகளின்
அழிவுக்குப் பின்னர் ஈழத்தமிழினம் சிங்கள ஒடுக்குமுறையரசி
னால் எவ்வாறான வழிகளிலெல்லாம் இனப்படுகொலைக்குட்பட்டு
வருகின்றார்களென்பதனை வெளியுலகிற்கு அம்பலப்படுத்துவதனை விடுத்து
திடீரெனத் தனது செயற்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்தமையானது இவ்வமைப்பானது
இதுவரைகாலமும் பேசி வந்ததாக சொல்லப்படும் மனிதவுரிமை போன்ற விடயங்களும்,
இதனது செயற்பாடுகளும் ஒரு பக்கச்சார்புடையதாகவும் , ஏதோவொரு
பின்னணியுடனும், வெறொருவர்காகவுமே செயற்பட்டு வந்திருந்தது என்றே எண்ணத்
தோன்றுகின்றது.
- Karvanna Subhas
3 மணி நேரம் · பொது

Aathimoola Perumal Prakash
புலிகள் சிறைமீட்ட பெண் வேட்டொலி

4 hours ago, கிருபன் said:

மருது,

சம்பவங்களைக் குழப்புவது மாதிரி இருக்கின்றது. லெப். சங்கர் 1982 இல் மரணித்த மாவீரர்.

ராஜினி திரணகம கொல்லப்பட்டது 21 செப் 1989.

On the 21st September 1989, Dr. Rajini Thiranagama, a live wire and leading member of the UTHR (Jaffna) was murdered while returning home, a few yards from the Faculty of Medicine where she worked. One may ask, in a community benumbed by hundreds of senseless killings and driven to protec­tive indifference, what is the significance of this particular murder? To be sure, as many speakers had pointed out at commemoration meetings, the killing was a dastardly act against a lone, helpless and unarmed woman, and a mother of two little girls. Its phenomenal significance lay in what the killers were trying to destroy. This represented a whole spectrum of values which Rajini upheld both in practice and precept and deemed both by her and fellow members of the UTHR as being necessary for the life and freedom of the community. Her field of activities included, telling the truth about the unpleasant side and hypocrisy of this suicidally‑bent community, the practice of academic freedom, telling students that some of their views were simplistic and narrow, and practical involvement in the concerns of women who had suffered.

The killing was very different from what one might expect from an undisciplined military force in a state of anger. It was coldly premedi­tated and meticulously planned. Even the detail of minimum disruption, by scheduling the killing just after the last viva voce examinations in Ana­tomy had been looked into. The murder took place on the second day of the ceasefire. The killer had waited at a relatively lonely spot that she would have to pass while rushing home from work to care for her little ones. He had even found the time, after Rajini had fallen, to park his bicycle and pump a few more bullets into her head, before making his escape.

Even Rajini’s death brought out from the society around many of the attributes of fascist regimentation ‑ the antithesis of a freedom struggle ‑ the very thing Rajini had stood against throughout her career. On hearing the assassin’s shots, with the exception of a few medical students and some ordinary people, the rest ran away or shut themselves inside their homes. It was difficult to find a vehicle to transport her to hospital. Those who volunteered to look after her children or visited them the night following the killing were neither neighbours nor colleagues. There was fear of association: Many close to the family admitted fear of attending the fune­ral and the meetings which followed. Far from showing a sense of solidarity and outrage, the local medical profession and her faculty colleagues were divided and confused as to how to respond to this killing. No doubt every­one knew that it was wrong and totally unjustified, not least the killers. The latter chose silence and anonymity. Rajini’s friends and admirers were many, who had enjoyed her personal care and had benefited from the many risks she had personally undertaken. Her enemies were those who were against what she stood for, but would not say it openly, lest they expose before the people their emptiness, real motivations and intentions. Yet initially at least, the dominant reaction to her killing, as for other killings, was not anger, but a mixture of sadness and fear. This was the society, pliable and spiritless, that her killers were trying to build; and herein lies the chief significance of the event.

http://www.uthr.org/Reports/Report3/Rajaniwork.htm

நிர்மலா அவர்கள் தம்மால்தான் கைது ஆனார் என்பது 
புலிகளுக்கு தெரியும் அதனால்தான் இதை அவர்கள் 
அவருக்காக செய்தார்கள். 

Share this post

Link to post
Share on other sites
16 hours ago, ரதி said:

என்னைப் பொறுத்த வரை ஏற்றுக் கொள்கிறோமோ ,இல்லையோ இவரை புலிகள் தான் கொன்றார்கள் 

காரணம்?

ஆதாரம்??

புத்தகம்  எழுதினார்?

சிகரெட்  குடித்தார்??

மது அருந்தினார்??

இவை  எதுவும்  புலிகள் கொல்வதற்கான காரணங்களாக  தெரிகிறதா??

எப்பொழுதுமே  புலிகள் 3 எச்சரிக்கைகள்  கொடுப்பார்கள்?

அப்படி  எதுவும்  நடந்ததாக  அவர்  எங்காவது  குறிப்பிட்டுள்ளாரா??

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • வணிகங்களின் எழுதப்படாத முடிவுநிலை? அனுதினன் சுதந்திரநாதன்   / 2020 பெப்ரவரி 17 இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையும் பொருளாதார நிலையும் வணிகங்களைக் கொண்டு நடத்த மிகப்பெரும் தடையாக அமைந்துள்ளன. அதிகரித்துச் செல்லும் பணவீக்கம், வரிகள், கடனுக்கான வட்டி வீதங்கள், உலகளாவிய ரீதியிலான மாற்றங்களென அனைத்துமே, உள்ளூர் வணிகம் முதல் சர்வதேச அளவில் வணிகத்தை மேற்கொள்ளும் அனைவருக்குமே மிகப்பெரும் சிக்கலாக அமைந்திருக்கிறது. ஒருசாரார், இவை அனைத்தையும் மீறி சமூகத்தில் நிலைத்து நிற்பதே வணிகமென்று சொல்லுபவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு, போட்டித் தன்மைமிக்கதும், சவால்மிக்கதுமான வணிகச்சூழலில் வெற்றி பெறுகின்ற வணிகங்களை விரல்விட்டு எண்ணக்கூடியதாகவே இருக்கின்றது.   ஆனால், பெரும்பாலான வணிகங்களின் தோல்விக்கு, இந்தப் புறக்காரணிகளுக்கு மேலாக, வணிகத்தின் உரிமையாளர்களே காரணமாக இருப்பதை யாரும் உணர்ந்து கொள்ளுவதில்லை. மாறாக, வணிகங்களின் தோல்விக்குப் பொருளாதார சூழ்நிலை, வங்கிகளின் செயல்பாடுகளென முக்கியமற்ற காரணங்களை அடுக்கிக்கொண்டு, தங்களைச் சீர்தூக்கிப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள். விளைவு, மற்றுமொரு வணிகத்தை ஆரம்பிக்கும்போதும், இந்தப் பரிதாபநிலை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.  சந்தையை முழுமையாக அறிய முற்படாமை வணிகத்தை ஆரம்பிக்க விரும்புகின்ற எந்தவொரு வணிக முயற்சியாளருமே, தமது வணிகத் திட்டத்துக்கு வழங்கும் முன்னுரிமையில் பாதியளவைக் கூட, சந்தை ஆய்வுக்கு வழங்குவதில்லை. பெரும்பாலான வணிக முயற்சியாளர்கள், தாங்கள் மிகக் கஷ்டப்பட்டு உருவாக்கிய வணிக முயற்சியை, மக்கள் ஏற்றுக்கொள்ளுவார்கள் என்கிற ஆதீத நம்பிக்கையில், தமது வணிகத்தை மக்களிடம் அறிமுகம் செய்து தோற்று போய்விடுகிறார்கள்.  உண்மையில், மக்கள் வணிக முயற்சியாளர்கள் வழங்குகின்ற அனைத்தையுமே ஏற்றுக்கொள்ளுவதில்லை. மாறாக, அவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்கான தீர்வாகவுள்ள வணிகங்களை மாத்திரமே ஏற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். இதனால்தான், மிகப்பெரும் பிரபலமாக வெற்றியடைந்த வணிக முயற்சியாளர்கள் கூட, சந்தை ஆய்வின் மூலமாக மக்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்தார்கள்.  பின், அதற்கான தீர்வைச் சிந்தித்தார்கள்.  அதை வணிகமாக்குவதை, பிற்பாடாகப் பார்த்துக் கொள்ளலாம் எனச் சொல்கிறார்கள்.  தற்போதைய நிலையில், வணிகங்களை முன்னெடுக்கவும் அதனைக் கட்டியமைக்கவும் சந்தை ஆய்வுகளும் அதனைச் சார்ந்த தரவுகளும் மிக முக்கியமானதாக அமைகின்றன. ஆனாலும், இதன் முக்கியத்துவத்தைப் பெரும்பாலான வணிக உரிமையாளர்கள் இன்னமும் சரிவரப் புரிந்துகொள்ளவில்லை என்பதே வருத்தத்துக்குரியதாக இருக்கிறது.  வணிகத்தில் தக்கணப் பிழைத்தலிலான ஈடுபாடு  ஒரு வணிகத்தை ஆரம்பிக்கும் வணிகத்தின் உரிமையாளரிடம், அதற்கான ஈடுபாடு இல்லாமலா ? வணிகத்தை ஆரம்பிக்கிறார்கள் என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனாலும், வணிகத்தை ஆரம்பிக்கும்போது இருக்கின்ற ஈடுபாடு, அதைகட கொண்டு நடத்துவதில் தொடர்ச்சியாக இருக்கிறதா? என்பதே மிகப்பெரும் கேள்வியாக இருக்கிறது. பெரும்பாலான வணிக உரிமையாளர்கள், தமது வணிகத்தை ஆரம்பிக்கும்போது வழங்குகின்ற ஈடுபாட்டை, வணிகத்தில் ஏதேனும் தொய்வுநிலை ஏற்படுகின்றபோது, வழங்க முன்வருவதில்லை. அதேபோல, இலங்கை போன்ற போட்டித் தன்மைமிக்க நாடொன்றின் வணிக சூழலில், மேற்கத்திய நாடுகளிலும் பார்க்க அதீத ஈடுபாட்டை, வணிக உரிமையாளர்கள் வழங்க வேண்டியது அவசியமாகும். இதன்மூலமாகவே, வணிகத்தின் நீட்சியையும் அதுசார் வெற்றியையும் உறுதி செய்துகொள்ள முடியும்.  அதேபோல, வணிகங்களானவை இன்று ஆரம்பித்து நாளையே வெற்றியை வழங்குவதாக இருக்காது. அதற்கான காலமும், நேரமும் அமைய வேண்டும். எனவே, அந்தப் பொறுமை, வணிக உரிமையாளர்களிடம் இருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்தப் பொறுமையின்மை நிலையானது, வணிகத்தைப் பாதிப்பதாக அமையும்.   நிதியியல் தொடர்பான அறிவுக் குறைபாடு   இலங்கையின் பெரும்பாலான வணிகங்களின் தோல்விக்கு, நிதியியல் திறன் தொடர்பான குறைபாடு, மிக முக்கியமானது. காரணம், இலங்கையில் மிகமோசமாக உள்ள திறன்களில், இந்த நிதியியல் திறனும் ஒன்றாகும். என்னதான், வணிகத்தைத் திட்டமிடும், கொண்டு நடத்தும் திறனை உரிமையாளர்கள் கொண்டிருந்தாலும், தமது முதலீடுகளை மிகத்திறமையாகக் கையாண்டு, அதனைச் சிறப்பாகக் கொண்டு நடத்துவதில் தடுமாற்றத்தைக் கொண்டிருக்கிறார்கள். இது நிதியியல் திறன் குறைப்பாட்டை வெளிப்படுத்துவதாக உள்ளது.   குறிப்பாக, வணிகமொன்றைக் கொண்டு நடத்த தொழிற்பாட்டு மூலதனமானது அவசியமாகும். இந்த மூலதனம்தான் வணிகத்தின் நாளாந்த செயற்பாடுகளுக்கு அடிப்படையானதாகும். வணிகத்தின் வெற்றிக்கு, இந்த மூலதனம் மிக இன்றியமையாததாகும். இந்த மூலதனம்தான், வணிகத்தினைக் கொண்டு நடத்தப் பெரிதும் உதவியாக அமையும். ஆனால், பெரும்பாலான வணிக உரிமையாளர்கள், தமது வணிகத்தின் செயற்பாடுகளுக்குத் தனியே இந்தத் தொழிற்பாட்டு மூலதனத்தைக் கொண்டிருப்பதில்லை. இதன்காரணமாக, வணிகங்கள் தொடர்ச்சியாகச் செயற்படுவதில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகின்றன. பெரும்பாலும், வணிக உரிமையாளர்கள் தமது இலாபத்தையே, தொழிற்பாட்டு மூலதனமாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால், இலாபம் எப்போதும் பண வடிவில் நம்மிடத்தில் இருப்பதில்லை என்கிற உண்மையை உணராதவராக இருக்கிறார்கள். இதன் காரணமாக, பெரும்பாலான வணிகங்கள் தொடர்ச்சியாக, நடத்திச்செல்லப் போதுமான நிதியின்மை காரணமாக தோல்வியைச் சந்திக்கின்றன.  இதேபோல, முயற்சியாண்மை குறைபாடும், ஒருவிதத்தில் வணிகங்களைப் பாதிக்கின்றது. குறிப்பாக, வணிகத் திட்டங்களைத் திட்டமிடுவதும், அதனை கொண்டு நடத்தும் வணிக முயற்சியாளர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தமது வணிகத்தை முதலீட்டாளர்கள் மத்தியில் சமர்ப்பிக்கும் திறன் மிகக் குறைவாக இருக்கின்றது. இதன் விளைவாக, தமது வணிகத்துக்குக் கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த முதலீட்டு வாய்ப்புகளைக்கூடத் தவறவிட்டு, வணிகத் தோல்வியைச் சந்திக்க நேரிடுகிறது.  முதலீட்டுப் பற்றாக்குறை  இலங்கையின் தொழில் முயற்சிகளுக்கு உள்ள மிகப்பெரும் தடைக்கல்லாக, முதலீடுகள் அமைந்துள்ளன. முயற்சியாளர்கள் மக்களுக்குத் தேவையான வணிகத்தை முன்னெடுக்கத் தயாராகவுள்ள நிலையிலும், பொருத்தமான முதலீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியாதநிலை இலங்கையில் காணப்படுகிறது.  பெரும்பாலான முயற்சியாளர்கள் நிதியியல் ரீதியான இயலுமையைக் கொண்டிராத நிலையில், முதலீடு செய்ய வருகின்ற முதலீட்டாளர்களும் தமது முதலீட்டுக்கு அதிகமான வணிகப் பங்கினை (Business Share) எதிர்பார்க்கிறார்கள். இதனால், பெரும்பாலான வணிக உரிமையாளர்கள், தமது வணிக உரிமையை இழக்க விரும்பாது, கடன் முதலீடுகளை நோக்கி நகருகின்றார்கள். இதன்போது, சில வணிகங்கள் தம்மை நிலைநிறுத்திக்கொண்டு, கடன் பொறுப்புகளை மீளச்செலுத்தி, முன்னேறிக்கொண்டிருப்பதுடன், பல வணிகங்கள் தமது கடன் பொறுப்புகளை மீளச் செலுத்த முடியாமல், தமது வணிகங்களை மூடிக்கொண்டிருக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த முதலீட்டாளர்களுக்கும், வணிகங்களுக்கும் இடையில் உருவாகியுள்ள இடைவெளியைக் குறைத்து, இந்த முதலீட்டுக் குறைப்பாட்டை நிவர்த்திக்க வேண்டியது அவசியமாகிறது.  இது தற்போதைய நிலையில், இலங்கையின் வணிகத்துறையில் வணிகங்கள் சந்திக்கும் மிகப்பிரதானமான தோல்விக்கான காரணங்களாக அமைந்துள்ளன. இவை தவிர்ந்து, வணிகத்தில் தாக்கத்தினை செலுத்தும் புறக்காரணிகளும் அதிகமாக இருக்கின்றன. எனவே, வணிக முயற்சியாளர்கள் இவற்றைக் கருத்தில்கொண்டு, தமது வணிகங்களை முன்னெடுத்துச் செல்வதானது, வர்த்தக ரீதியில் தங்களை நிலைநிறுத்திடு, வணிகத்தினை வெற்றி நிலைக்குக் கொண்டுசெல்ல, உதவி புரிவதாக அமையும்.      http://www.tamilmirror.lk/வணிக-ஆய்வுகளும்-அறிமுகங்களும்/வணிகங்களின்-எழுதப்படாத-முடிவுநிலை/145-245616
  • நிதியியல் அறிவு அவசியமா? அனுதினன் சுதந்திரநாதன்   / 2020 பெப்ரவரி 11  உண்மையில், நமது கல்வியறிவு விகிதமானது, நமது நிதியியல் சார்ந்த விடயங்களைச் சார்ந்தோ நிதிசார் தேவைகளை முழுமைபெறச் செய்வதாகவோ அமைந்திருக்க வேண்டியதில்லை. ஆனாலும், அதிகரித்த கல்வியறிவு விகிதமானது, நாளாந்த நமது நிதியியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவோ அல்லது அடிப்படையான நிதியியல்சார் விடயங்களைப் பூர்த்தி செய்துகொள்ள உதவுவதாகவோ அமைந்திருக்க வேண்டியது அவசியமாகும். உதாரணமாக, கல்வியறிவு அதிகம் கொண்ட நம்மில் பலருக்கே, காசோலைகளை எப்படி நிரப்புவது, அதனை எப்படி வங்கியில் வைப்பிலிடுவது, பண வைப்பு மற்றும் பணம் மீளப்பெறல் இயந்திரங்களை எப்படி இயக்குவது, வங்கிக் கூற்றுகளை எவ்வாறு ஆய்வுசெய்வது, நிதிச் செயற்பாடுகளைத் திட்டமிடுவது  என்பதில் பலத்த குழப்பங்களும் சந்தேகங்களும் உள்ளன. படித்தவர்கள் நிலையே இவ்வாறிருக்க, சாதாரணப் பொதுமக்களின் நிலை என்னவாக உள்ளதெனச் சிந்தித்துப் பாருங்கள்.  தென்னாசியாவிலேயே, இலங்கையின் கல்வியறிவு விகிதமானது, ஏனைய அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் கல்வியறிவு விகிதத்துக்கு மிக நெருக்கமான போட்டித்தன்மை வழங்கும் நிலையிலேயே உள்ளது. குறிப்பாக, இலங்கையில் முதிர்ச்சி அடைந்தவர்களின் கல்வியறிவு விகிதமானது, 2018ஆம் ஆண்டின் பிரகாரம் 92 சதவீதமாக உள்ளது. ஆனாலும், ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்கிற பழமொழிக்கு ஏற்றாற் போல, இந்தக் கல்வியறிவு விகிதமானது, மக்களின் நிதியியல் சார்ந்த அறிவு விகிதத்தில் எவ்விதப் பயனையும் கொண்டிராத ஒன்றாகவே உள்ளது.   2018ஆம் ஆண்டு ஆய்வுகளின்படி, இலங்கையின் நிதியியல்சார் அறிவு விகிதமானது, 35 சதவீதமாகவுள்ளது. 92 சதவீதமான கல்வியறிவைக் கொண்டிருக்கும் நாம், நிதியியல் சார் அறிவில் 35 சதவீதமாக இருப்பது நமது கல்வியறிவுக்கும் நடைமுறை வாழ்வியல்சார் விடயங்களுக்கும் இடையிலான இடைவெளியைத் தெள்ளத்தெளிவாகக் காட்டி நிற்கின்றது.  நிதிசார் அறிவென்பதை, பணம் எவ்வாறு செயற்படுகின்றதென அறிந்து கொள்வதாக வரையறுத்துக்கொள்ள முடியும். இதனுள், எவ்வாறு பணத்தை உழைத்துக்கொள்வது, முதலீடுகளை எவ்வாறு செய்வது, செலவீனங்களைக் கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ளுவது, எவ்வாறு சேமித்துக்கொள்வது போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமைந்திருக்கும்.எனவே, தனிநபரொருவர் நிதியியல் சார் அறிவைப் பொருத்தமான வகையில் கொண்டிருக்கும்போது, அவர் தனது நிதி நலன்களைத் தானே சமாளித்துக் கொள்ளக்கூடியதாக இருப்பதுடன், அதுசார் வரிச் சுமைகள் தொடர்பான அறிவையும் தனது வருமானத்துக்கேற்ப செலவுகளைத் திட்டமிட்டுக் கொள்ளக்கூடிய திறனையும் கொண்டிருப்பவராக இருப்பார்கள்.   தெற்காசியாவில், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, இலங்கை போன்ற நாடொன்றில் மக்களுக்கும் வங்கிகளுக்கும் இடையிலான இடைவெளியானது, மிகக் குறைவாகும். உதாரணமாக, இந்தியா போன்ற நாடொன்றில், பல கிராமங்களில் பொருத்தமான வங்கி வசதிகளைக் கொண்ட வங்கிகளற்ற நிலையே காணப்படுகின்றது. ஆனாலும், இலங்கை போன்ற நாடொன்றில், மிகப்பெரிய முன்னேற்றகரமான நிலையுள்ள போதிலும், நிதியியல்சார் அறிவில் நம்மவர்கள் மிகவும் பின்தங்கி யநிலையிலுள்ளமை ஆச்சரியத்தைத் தரக்கூடிய தரவாக அமைந்துள்ளது. பெரும்பாலான நிதியியல் செயற்பாடுகள், வங்கிகளுடன் பின்னிப் பிணைந்திருப்பதால், நமது அடிப்படையான நிதியியல் செயற்பாடுகள் அனைத்துமே அங்கிருந்துதான் ஆரம்பிக்கின்றன. எனவே, இலங்கை போன்ற நாடொன்றில், வங்கிகளுடன் மிக நெருக்கமான உறவை நாம் கொண்டிருக்கின்ற போதிலும், அவை சார்ந்த அடிப்படையான விடயங்களில்கூட நாம் கவனம் செலுத்தவில்லை என்பதே உண்மையாகவுள்ளது.  நிதியியல் ரீதியான படிப்பினையானது, கல்விக் கூடங்களிலிருந்து ஆரம்பிப்பது என்பது பொருத்தமானதாகாது. மாறாக, அவை ஒவ்வொரு வீட்டிலும் அல்லது குடும்பங்களிலிருந்துமே ஆரம்பிக்கப்பட வேண்டும். அப்போதுதான், அவை மேலும் அர்த்தமுடையதாக அமையும். ஆனால், அவை நடைமுறைக்குச் சாத்தியமற்றே உள்ளன. இதற்குப் பிரதான காரணம், இலங்கையின் பெரும்பாலான குடும்பங்கள், பொருத்தமான நிதி ஆதாரங்களைக் கொண்டிருப்பதில்லை. எனவே, அத்தகைய குடும்பங்கள், நிதிசார் பராமரிப்புகளை மேற்கொள்ளவோ அதற்கு முக்கியத்துவம் வழங்கவோ முற்படுவதில்லை. மாறாக, அத்தகைய குடும்பங்கள், நாளாந்த நிதியியல் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதையே  பிரதானமானதாகக் கொண்டிருக்கின்றன. இதுதான், பெரும்பாலான நடுத்தர வருமானத்தைக் கொண்ட குடும்பங்களின் நிலையாகவும் இருப்பதால், நம்மவர்களின் நிதியியல்சார் அறிவு விகிதத்தில் தளம்பல் காணக் காரணமாகவுள்ளது.  இன்றைய இலங்கையில், பெரும்பாலும் நகரத்தை நோக்கி பறந்துகொண்டிருப்பவர்களும் நகரத்தில் வாழ்பவர்களும், நிதியியல் ரீதியான அடிப்படை அறிவைக் கொண்டிருக்கிறார்கள். இவர்களால், நிதிசார்ந்து வெளியிடப்படும் கவர்ச்சிகரமான விளம்பரங்களில் பெரும்பாலானவற்றின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ளக் கூடியதாகவும் உள்ளது. ஆனால், இவர்களில் பெரும்பாலானவர்களுக்கே கடனட்டையின் செயற்பாடுகள், வங்கியின் குறுங்கால மற்றும் நீண்டகால கடன்களுக்கு எவ்வாறு வட்டி விகிதம் அறிவிடப்படுகின்றது என்பது போன்ற பல்வேறு விடயங்களில், இன்னமும் தெளிவற்ற நிலையே காணப்படுகின்றது. இவை அனைத்துமே, நாம் இன்னமும் நிதியியல்சார் கல்வியறிவு விகிதத்தில் வளர்ச்சியடைய வேண்டும் என்பதையும் இது நம்மைச் சுற்றியிருக்கும் நிதி நிறுவனங்களுக்கும் ஏதுவாக அமைந்துள்ளது.  இலங்கையின் நகரங்களைத் தவிர்த்து, கிராமப்புறங்களில் இந்த நிலை மிக மோசமாக இருக்கின்றது. இதற்குப் பிரதான காரணம், கிராமங்களில் நிதியியல்சார் விடயங்கள், வீட்டின் தலைவர்களைச் சுற்றியே வியாபித்திருப்பதாகும். பெரும்பாலும், உழைக்கும் தரப்பாக ஆண்களிருப்பதுடன், அவர்கள் பெரும்பாலான நிதியியல் செயற்பாடுகளையும் நிதிசார் நெருக்கடிகளையும் குடும்பத்தில் பகிர்ந்துகொள்ளாத நிலையும் காணப்படுகின்றது. இதன் விளைவால், குடும்பங்களில் நிதியியல்சார் தகவல் பரிமாற்றம் குறைவடைகிறது. அத்துடன், பெண்கள் அடியோடு இது தொடர்பான புரிதலைக் கொண்டிராத நிலை ஏற்படுகிறது. இதன்காரணமாக, கிராமப்புறங்களில் சட்டத்துக்குப் புறம்பான நிதியியல்சார் செயற்பாடுகள், நேரத்துக்கு நேரம் புல்லுருவியாகத் தோன்றி, மக்களின் உழைப்பைச் சுரண்டிக் கொண்டுள்ளது. பணம் சார்ந்த கவர்ச்சியும் அதனை மிக விரைவாக உழைத்துக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலும், அதனுடன் சேர்ந்ததாக நிதியியல் சார்பாகப் போதிய அறிவின்மையும், இந்தச் சட்டத்துக்குப் புறம்பான நிதியியல் செயற்பாடுகள் வெற்றிபெறவும், அதனூடாக மக்கள் தமது உழைப்பை இழக்கவும் காரணமாகி இருக்கிறது.  இத்தகைய நிலையிலிருந்து நாம் மீளவும் நமது நிதியியல்சார் கல்வியறிவு விகிதத்தை அதிகரித்துக் கொள்ளவும், நாம் நிறைய விடயங்களை நமது குடும்பங்களிலிருந்தும் கல்வியியல் ரீதியாகவும் மாற்றவேண்டியது அவசியமாகிறது. குடும்பங்களைப் பொறுத்தவரை, பெண்களுக்கு நிதியியல் சார்ந்த சுதந்திரத்தை  வழங்குவது அவசியமாகிறது. தற்போதைய காலகட்டத்தில், ஆண்களுக்கு சமமாகப் பெண்களும் வீட்டின் தலைமைப் பொறுப்பைக் கையாளும் நிலையுள்ளது. எனவே, அவர்கள் நிதியியல் ரீதியான சுதந்திரத்தைக் கொண்டிருப்பதுடன், நிதிசார் அடிப்படை அறிவைப் பெற்றிருப்பதையும் உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும். அத்துடன், பெரும்பாலான கிராமப்புறங்களிலும் சரி நகர்ப்புறங்களிலும் சரி, நாட்கூலியை நம்பியே வாழ்க்கையைக் கொண்டு நடத்தும் குடும்பங்கள் இருக்கின்றன. இத்தகைய குடும்பங்களில், ஒரு நாள் வருமானம் இல்லாதுபோகின்ற போது, அவர்களுக்கான உணவைக்கூட அவர்கள் குறித்த நாளில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே, நாளாந்த வருமானத்தை நம்பியுள்ள குடும்பங்களில்கூட, இந்த நிதியியல் ஒழுக்கத்தை (Financial Discipline) கொண்டுவருகின்ற வகையில், இலங்கை அரசாங்கமும் இலங்கை வங்கியும், பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். இது, நாட்டின் பொருளாதாரத்துக்கும் ஒருவகையில் உதவுவதாக அமைந்திருப்பதுடன், சிறு குடும்பங்களின் பொருளாதார நலனைப் பாதுகாப்பதாகவும் அமையும்.  2016ஆம் ஆண்டின் இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் பிரகாரம், இலங்கை மக்களின் சராசரிக் கடனின் உச்ச வரம்பு, 196.00 ரூபாயெனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது, தனித்து வடக்கு - கிழக்கு பகுதிகளாகப் பார்க்கின்ற போது, இன்னும் அதிகமாகவிருக்க வாய்ப்புள்ளது. போர் காரணமாக, பல்வேறு வகையில் நிதியியல் இழப்புகளைச் சந்தித்துள்ள நம்மவர்கள், நிதியியல் ரீதியான ஒழுக்கநிலையில் இன்னமும் பின்தங்கியவர்களாகவே இருக்கின்றார்கள். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக, நுண்ணியல் நிதிக்கடனில் சிக்கியுள்ளவர்களின் நிலையே போதுமானது. எனவே, இந்த நிலையிலிருந்து மீண்டுவர, நமது இளம் சந்ததியினராவது கல்வியறிவு விகிதத்துடன், நிதியியல் சார் அறிவு விகிதத்தையும் அதிகரித்துக்கொள்வது  அவசியமாகிறது.    http://www.tamilmirror.lk/வணிக-ஆய்வுகளும்-அறிமுகங்களும்/நிதியியல்-அறிவு-அவசியமா/145-245337
  • ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ ஏன் பதிவு செய்யப்பட வேண்டும்? என்.கே. அஷோக்பரன்   / 2020 பெப்ரவரி 17 தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தனித்ததொரு கட்சியாக அல்லது கூட்டணிக் கட்சியாகப் பதிவுசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை, மிக நீண்ட காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றது.    இருந்தபோதிலும், பதிவுசெய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெறுவதற்கான எந்தவொரு சமிக்ஞையும் தென்படுவதாக இல்லை.    மறுபுறத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரளவிலான அமைப்பிலிருந்து, கூட்டுக்கட்சிகளும் அக்கட்சிகளின் உறுப்பினர்களும் விலகி, தனிவழி சென்று கொண்டிருக்கின்ற போக்கை, நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.    தமிழ் மக்களிடம், “நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; ஒன்றுபட்டால்தான் உண்டு வாழ்வு” என்று, விழுமிய வகுப்பெடுக்கும் இந்தக் கூட்டமைப்பின் தலைமைகள், கூட்டமைப்பைத் தனிக்கட்சியாகப் பதிவுசெய்து, முறையான கட்டமைப்பை உருவாக்கி இயங்குவதில், தொடர்ந்தும் மெத்தனம் காட்டி வருவது என்பது, முரண்நகை.    சுதந்திர இலங்கையில், ஒன்றுக்கொன்று வைரிகளாக இருந்த தமிழ்க் கட்சிகள், கூட்டணியாக ஒன்றிணைந்த சந்தர்ப்பங்கள் இரண்டு.    முதலாவது, 1972இல் அன்றைய சிறிமாவோவினதும் அவரது ‘தோழர்’களினதும் ஆட்சியில், தமிழ் மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டது. அதன்போது, தமிழர்கள் கட்சி ரீதியாகப் பிளவடைவது, தமிழ் மக்களையும் அவர்களது அரசியலையும் பலவீனப்படுத்தும் என்றுணர்ந்த அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர், கணபதிப்பிள்ளை காங்கேசர் பொன்னம்பலம், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸில் இருந்து பிரிந்து, இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஸ்தாபித்த சாமுவல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோர் ஒன்றிணைந்து தமிழர் ஐக்கிய முன்னணியை உருவாக்கினர்.    தமிழர் ஐக்கிய முன்னணி, 1976இன் வட்டுக்கோட்டை தனிநாட்டுத் தீர்மானத்தையொட்டி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஆனது. தமிழர்களிடம் பொதுவழக்கில், ‘கூட்டணி’ என்று அறியப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, தனித்த கட்சியாக இருந்ததுடன், அதற்கெனத் தனியான சின்னத்தையும் கொண்டிருந்தது. அதுதான், 1977ஆம் ஆண்டுத் தேர்தல் முதல், 2004ஆம் ஆண்டுத் தேர்தல் வரை, தமிழ் மக்களின் செல்வாக்கைப் பெற்ற சின்னமாக இருந்தது. தமிழ் அரசியலில் உதயம் பெற்ற இந்த முதலாவது கூட்டானது, முறைப்படி, தனிக்கட்சியாகப் பதிவுசெய்யப்பட்ட கூட்டாகவே அமைந்தது.   2001இல், ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ என்ற கூட்டை ஸ்தாபிப்பதில், கிழக்கிலங்கை ஊடகவியலாளர்களின் முதன்முயற்சி முக்கியமானது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, விடுதலைப் புலிகள் அமைப்பால் உருவாக்கப்பட்டது என்பதில் எந்த உண்மையும் இல்லை. அது அடிப்படையில்லாத ஒரு மாயை.    தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் கூட, அந்த மாயையை, தமக்கு வாக்குவங்கி ரீதியான செல்வாக்கை அதிகரிப்பதால், அதை மறுப்பதுகூட இல்லை.    ஆனால், உண்மையான அரசியல் வரலாறு என்னவென்றால், ஊடக மற்றும் சிவில் சமூகத்தின் முயற்சியாலேயே, ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ என்ற தமிழ்க் கட்சிகளின் கூட்டுச் சாத்தியமானது. இந்தக் கூட்டை, அடுத்த இரண்டு வருடங்களில், தமது அரசியல் முகவர்களாக, விடுதலைப் புலிகள் சுவீகரித்துக் கொண்டார்கள்.   2001இல், தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி (இது பெரும்பாலும் தமிழரசுக் கட்சியினரையும் குமார் பொன்னம்பலத்தோடு பிரிந்து சென்று, மீண்டும் தமிழ்க் காங்கிரஸை ஸ்தாபிக்காது கூட்டணியுடன் தொடர்ந்த எம். சிவசிதம்பரம், ஆனந்தசங்கரி உள்ளிட்ட முன்னாள் தமிழ்க் காங்கிரஸினரையும் கொண்டமைந்தது), தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பீ.ஆர்.எல்.எப் - சுரேஷ் பிரேமசந்திரனின் அணி) ஆகிய நான்கு கட்சிகள், பொது இணக்கப்பாடொன்றில் கையொப்பமிட்டதன் மூலம் பிறப்பெடுத்தது.    தமிழர் ஐக்கிய முன்னணியைப் போன்று, ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ இன்னொரு தனியமைப்பாகப் பிறப்பெடுக்கவில்லை. மாறாக, இது இந்த நான்கு கட்சிகளிடையேயான பொது இணக்கப்பாட்டை வௌிப்படுத்தும் தளமாகவும் தேர்தல் கூட்டாகவுமே பிறப்பெடுத்தது.   ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ என்ற பதாகையின் கீழ் இயங்கிய கட்சிகளிலும் ஒரு நிரந்தரத் தன்மையும் தொடர்ச்சியும் இருக்கவில்லை என்பதையும், நாம் காணக்கூடியதாக உள்ளது.    விடுதலைப் புலிகள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சுவீகரித்துக் கொண்டதன் பின்னர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்குள் இருந்த, விடுதலைப் புலிகள் அமைப்பு மீது நல்லபிப்பிராயம் இல்லாத தலைவர்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் தொடர்ந்திருக்க விரும்பவில்லை. ஆகவே, கூட்டமைப்பில் முதல் பிரிவாக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி கூட்டமைப்பிலிருந்து விலகியமை அமைந்திருந்தது.   இந்தப் பிரிவோடு கூட்டமைப்பு, தனது தேர்தல் சின்னத்தையும் இழந்திருந்தது. ஏனெனில், உதய சூரியன் சின்னம், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் சின்னமாகும்.    இந்தப் பிரிவைத் தொடர்ந்துதான், அதுவரை காலமும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த தமிழரசுக் கட்சியினர், மீண்டும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு உயிர்கொடுத்தார்கள். தமிழரசுக் கட்சியின் சின்னமான ‘வீடு’, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தேர்தலில் போட்டியிடும் சின்னமாக, விடுதலைப் புலிகள் அமைப்பால் சிபாரிசு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.    இது, விடுதலைப் புலிகள் அமைப்பின் முடிவாக இருந்திராவிட்டால், நிச்சயமாக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இதை ஏற்றுக்கொண்டிருக்கக் கூடிய வாய்ப்பு இல்லவேயில்லை எனலாம்.    2009 வரை விடுதலைப் புலிகள் அமைப்பே, கூட்டமைப்பின் இணைக்கும் சக்தியாக இருந்தது. அவர்களுக்குப் பின்னர், கூட்டமைப்பு பிளவடையத் தொடங்கியது. இன்று கூட்டமைப்பு என்பது, இலங்கைத் தமிழரசுக் கட்சிதான். டெலோவும் புளொட்டும் வெறும் தேர்தல் பங்காளிகள் மட்டுமே.    அரசியல் முடிவுகளில், நிலைப்பாடுகளில் டெலோவோ, புளொட்டோ எதுவிதப் பங்களிப்பும் செய்வதாகத் தெரியவில்லை. தமிழரசுக் கட்சித் தலைமைகளின் முடிவுகளை, அங்கிகரிக்க வேண்டிய நிலையில்தான் அவர்கள் தொடர்கிறார்கள்.    உண்மையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, பதிவு செய்யப்பட வேண்டும் என்ற மிக நீண்ட காலமாகக் குரல்கொடுத்த ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் அதன் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர், இப்போது கூட்டமைப்பில் இல்லை. கூட்டமைப்பிலுள்ள டெலோ, புளொட் ஆகியவை, தமக்குத் தேவையான தேர்தல் ஆசனங்கள் ஒதுக்கப்படும் வரை, தமிழரசுக் கட்சி எடுக்கும் முடிவுகளோடு, அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவில்லை.    எமக்கு, எமக்கான ஆசனங்களும் நாடாளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி மன்றம் போன்றவற்றுக்கான பதவிகள் இருந்தால் போதும் என்ற நிலையிலேயே, அவர்கள் இருக்கிறார்கள்.    தமிழரசுக் கட்சியைப் பொறுத்த வரையில், “தமிழரசுக் கட்சியும் நானே; கூட்டமைப்பும் நானே” எனத் தமிழரசுக் கட்சித் தலைமைகள் மிகச் சுதந்திரமாக, கூட்டுக் கட்சிகளின் எந்த அழுத்தமுமின்றிச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், கூட்டமைப்பைப் பதிவதற்கு, அவர்களுக்கு எந்த அவசியமும் தேவையும் ஆர்வமும் இருக்காது என்பது யதார்த்தமானதே.    ஆக, இவ்வாறானதொரு சூழ்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, பதியப்பட வேண்டும் என்பதற்கான தேவை என்ன என்ற கேள்வி எழலாம். அதற்கான பதில், தமிழர் அரசியலின் எதிர்காலம் என்பதாக அமைய வேண்டும்.   தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் என்பதே, நாம் பொதுவாக எண்ணுவதைவிட, மிகப்பெரியதொரு சாதனை. ஒன்றுக்கொன்று வைரிகளாக இருந்த கட்சிகளை, ஒரு மேடைக்குக் கொண்டுவருவது, அவ்வளவு எளிதானதொரு காரியமல்ல.    விடுதலைப் புலிகள் இருந்தவரை, கொள்கை ரீதியிலும் செயற்பாட்டு ரீதியிலும் தனிமனிதர்களால் கூட்டமைப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆகவே, கூட்டமைப்புக்கு உள்ளான ‘தடைகள் மற்றும் சமப்படுத்தல்களை’ விடுதலைப் புலிகளே செய்துவந்தார்கள்.    விடுதலைப் புலிகளுக்குப் பிறகு, கூட்டமைப்பு என்பது, தமிழரசுக் கட்சியின் கைப்பொம்மையாகவும் அதன் பின்னர், அது ஒன்றிரண்டு தமிழரசுக் கட்சித் தலைமைகளின் கைப்பொம்மையுமாக மாறிவிட்டது.   இதன்காரணத்தால், கூட்டுக் கட்சியினருக்கு மாற்றுக் கருத்துகளைத் தெரிவிக்கவோ, தமிழரசுக் கட்சி தலைமைகளின், கூட்டமைப்பின் மீதான அதிகாரச் செல்வாக்கை மட்டுப்படுத்தவதற்கானதொரு கட்டமைப்பு முறையோ இல்லாததன் காரணத்தால், தேர்தல் வெற்றி, பதவி ஆசை என்பவற்றைத் தாண்டி, தமது கொள்கை மீதும் அக்கறைகொண்ட தரப்பினரால், கூட்டமைப்புக்குள் நீடிக்க முடியவில்லை.    உண்மையில், இன்று கூட்டமைப்பென்பது தமிழரசுக் கட்சியும் அவர்களது சின்னத்தில் போட்டியிட்டால் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற தரப்புகளும்தான். கூட்டமைப்பிலுள்ள டெலோ, புளொட் கொள்கை சார்ந்த முடிவுகளில் மட்டுமல்ல, இராஜதந்திரச் சந்திப்புகளில் கலந்துகொள்வதுகூட மிக அரிதே!   தமிழரசுக் கட்சிக்காரருக்கு வேண்டுமானால், இது சாதகமான ஒன்றாக இருக்கலாம்; ஆனால், ‘தமிழரின் ஒற்றுமை’ என்று, மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லிக் கொண்டிருக்கும் கூட்டமைப்பின் தலைமைகள், உச்சரிக்கின்ற ‘ஒற்றுமையை’ச் சிதைத்து, இன்று தமிழ் மக்களின் அரசியல் பலத்தைக் கூறுபோட்டுக் கொண்டிருக்கிறது.   கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செல்பவர்களை விமர்சிப்பதற்கு அவசரப்படுபவர்கள், அவர்கள் ஏன் பிரிந்து செல்கிறார்கள் என்று சிந்திப்பதற்கு ஒரு நிமிடத்தையேனும் செலவளிப்பதில்லை.    உண்மையில், அவர்களுக்குப் பதவி ஆசை இருந்தால், அவர்கள் பிரிந்து சென்றிருக்கவே மாட்டார்கள். இன்றைய சூழலில், தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டிபோடுவது நிச்சயமான வெற்றியைத் தரும் என்பதைச் சிறுபிள்ளைகூட அறியும். அதையும் மீறி, அவர்கள் பிரிந்து செல்வதற்கு, என்ன காரணம் என்பதைச் சிந்திக்க வேண்டும்.    பல கட்சிகளினதும் அமைப்புகளினதும் கூட்டு என்பது, அனைத்துத் தரப்பையும் ஒன்றிணைக்கக் கூடியதொரு கட்டமைப்பைக் கொண்டதாக அமைய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், அந்தக் கூட்டு நிலைக்காது.    இன்று, கூட்டமைப்பு ஒரு முடிவை எடுக்கும் போது, அது வெறுமனே, தமிழரசுக் கட்சியின் முடிவாக மட்டுமோ, அவர்களால் திணிக்கப்படும் முடிவாக மட்டுமோ இந்தால், ஏனைய கட்சிகளால் அத்தகைய கூட்டுக்குள், எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்க முடியும் என்பது கேள்விக்குறியே.    ஆகவே தான், கூட்டமைப்பு ஒரு சுயாதீனமான கூட்டணியாகவும் அதற்கெனத் தனித்த ‘தடைகள் மற்றும் சமப்படுத்தல்களை’ உள்ளடக்கிய கட்டமைப்பையும் கொண்டமைய வேண்டும். அத்தகைய கட்டமைப்பு ஏற்படும் போது, அது தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப அல்லது ஒரு கட்சியின் விருப்பத்துக்கு மட்டுமே ஏற்ப இயங்கும் அமைப்பாக அல்லாது, அர்த்தபூர்வமான கூட்டமைப்பாக அமையும். இல்லாவிட்டால், கூட்டமைப்பென்பது ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை’யாகவே அமைந்துவிடும்.   மறுபுறத்தில், கூட்டமைப்பைப் பதிவுசெய்வதில் தமிழரசுக் கட்சிக்கு சட்டரீதியான நன்மையொன்றும் உள்ளது. இன்றைய சூழலில், தமிழரசுக் கட்சி அல்லாத ஏனைய கூட்டுக்கட்சி உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு, தேர்தலில் வெற்றிபெற்றுப் பின்னர் கட்சிதாவினாலோ, கட்சிக் கோட்பாடுகளுக்கு மாறாக நடந்தாலோ, தமிழரசுக் கட்சியால் அவர்களுக்கு எதிராக, எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.    அவர்களது மிக அடிப்படையான வாதமாக, “நாம், உங்கள் கட்சியின் உறுப்பினர் அல்ல; ஆகவே, எங்கள் மீது நடவடிக்கை எடுக்க, உங்களுக்கு எதுவித அதிகாரமோ நியாயாதிக்கமோ கிடையாது” என்பதாக அமையும்.    அரசியல் கட்சியொன்றின் வேட்பாளர் பட்டியலூடாகத் தெரிவுசெய்யப்பட்ட அல்லது பிரேரிக்கப்பட்ட நபரொருவர் குறித்த, அரசியல் கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே எமது சட்டமாகும். பஷீர் சேகுதாவூத் எதிர் பேரியல் அஷ்ரப் மற்றும் ஏனையோர் என்ற பஷீர் சேகுதாவூத் பதவி விலக்கல் வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், ‘பஷீர் சேகுதாவூத் தேசிய ஐக்கிய கூட்டணியின் உறுப்பினர் அல்ல; அவர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரே ஆவார். ஆகவே, தமது கட்சியின் உறுப்பினரல்லாத ஒருவரை, தேசிய ஐக்கிய கூட்டணியால், தமது கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்க முடியாது என்பதோடு, அதனால் அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க முடியாது’ என்று வழங்கியிருந்த தீர்ப்பு, இங்கு கவனிக்கத்தக்கது.    இதனால்தான், தனிக்கூட்டணியாகப் பதிவுசெய்யப்பட்டு ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, தனது யாப்பில், கூட்டணிக் கட்சியின் அங்கத்தவர்கள், கூட்டணியின் அங்கத்தவர்களாகக் கருதப்படுவார்கள் என்ற ஏற்பாட்டைக் கொண்டிருக்கிறது.    ஆகவே, தமிழரசுக் கட்சி அல்லாத கூட்டமைப்பின் ஏனைய கட்சி உறுப்பினர்கள் கட்சிதாவினாலோ, கட்சிக் கட்டுக்கோப்புக்கு முரணாகச் செயற்பட்டாலோ, இன்றைய சூழலில் தமிழரசுக் கட்சி எனப்படும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பால், எதுவுமே செய்ய முடியாது என்பதுதான், பட்டவர்த்தனமான உண்மையாகும்.   தமிழ்த் தேசிய கூட்டமைப்பை, தனித்த கூட்டமைப்பாகப் பதிவு செய்வதில் தமிழரசுக் கட்சியின் சுயநலத்தைத் தவிர வேறெதுவும் தடையாக இல்லை என்பதுதான், நடப்பவற்றை வைத்து, யூகிக்கக் கூடியதாக இருக்கின்ற விடயம் ஆகும்.     http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தேசிய-கூட்டமைப்பு-ஏன்-பதிவு-செய்யப்பட-வேண்டும்/91-245596
  • அ.தி.மு.கவுக்கு 2021 ஆதரவு அலை வீசுமா? எம். காசிநாதன்   / 2020 பெப்ரவரி 17 ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்து, நான்காவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறது அ.தி.மு.க ஆட்சி. தமிழ்நாட்டில், ஒரு தேர்தலில் மூன்று முதலமைச்சர்களைச் சந்தித்த காலகட்டமாக, 2016 முதல் 2021 வரையிலான ஆட்சிக் காலம் அமைந்து விட்டது.    முதலில் பதவியேற்ற ஜெயலலிதா, டிசெம்பர் 2016இல் மறைவு எய்தியதை அடுத்து, ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சரானார். அவருக்கும் சசிகலாவுக்கும் ஏற்பட்ட மோதலில், எடப்பாடி பழனிசாமி 2017 பெப்ரவரி மாதத்தில், தமிழகத்தின் முதலமைச்சரானார்.    ஆனால், குறிப்பிடத்தக்க நிகழ்வு என்னவென்றால், சசிகலாவின் தயவில் முதலமைச்சர்களாக ஆக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் பதவியில் நீடிப்பதற்கு, மத்தியில் உள்ள பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவாகவே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.   சசிகலா வெளியில் இருந்த நேரத்தில், ஓ. பன்னீர்செல்வத்தின் பா.ஜ.க ஆதரவு நிலைப்பாடு முதல், “ஸ்டாலினைப் பார்த்துச் சிரித்தார்” போன்ற குற்றச்சாடுகளைச் சுமத்தி, வெளியேற்றப்படும் சூழலுக்கு பன்னீர்செல்வம் தள்ளப்பட்டார்.    ஜெயலலிதாவின் சமாதியில், ‘தர்மயுத்தம்’ நடத்திய அவர், இன்றைக்குச் சசிகலா உருவாக்கிய, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்தில் துணை முதலமைச்சராக இருக்கிறார். காரணம், சசிகலாவால் முதலமைச்சராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு, யோகம் என்பது ‘சிறை’ வடிவில் கிடைத்தது.    அதாவது, ஜெயலலிதா- சசிகலா ஆகியோர் மீதான ஊழல் வழக்கில், நான்கு வருட சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டதால், சசிகலா பெங்களூர் சிறைக்குச் சென்றார். அவரது சிறைவாசம், எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.கவையும் ஆட்சியையும் தக்க வைத்துக் கொள்வதில் முக்கிய காரணியாக அமைந்துவிட்டது.    அதேநேரத்தில், பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் ஸ்டாலின், ‘கொல்லைப் புறமாக ஆட்சியைப் பிடிக்கப் போவதில்லை’ என்று அறிவித்து விட்டதால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சிக்கு, எவ்வித தொந்தரவும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது.   ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருந்த ‘சசிகலா ஆபத்தும்’ ‘ஸ்டாலின் ஆபத்தும்’ எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. ஆகவே, “நான் முதலமைச்சர்; இல்லையேல் தேர்தல்” என்ற ஒற்றை நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த எடப்பாடி பழனிசாமி, தன்னை எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வத்தையே, தனது தலைமையை ஏற்றுக் கொள்ள வைத்தார்.    கட்சிக்குள் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வம் இருந்தாலும், இன்று வரை அ.தி.மு.கவின் நிர்வாகக் கட்டுப்பாடு முழுக்க முழுக்க, எடப்பாடி பழனிசாமி கையிலேயே இருக்கிறது. தனக்குக் கட்டுப்படாத அமைச்சர் மணிகண்டனைப் பதவியை விட்டு நீக்குவதாக இருக்கட்டும், ராஜ்ய சபை உறுப்பினர் பதவிகளுக்கு தன் விசுவாசிகளுக்கு இடம் வழங்குவதாக இருக்கட்டும் அனைத்தும் எடப்பாடி பழனிசாமியின் அதிகார வட்டத்துக்குள் மட்டுமே நடந்தது. ஏன், ஓ. பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவையே கட்சியை விட்டு நீக்கும் அதிகாரத்தைக் கூட, பன்னீர்செல்வத்தால் தடுக்க முடியவில்லை.    இன்றைக்கு மூன்று வருடங்கள் ஆட்சி நிறைவு பெற்றுள்ள நிலையில், கட்சிக்குள் இருந்த அனைத்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக மாறி விட்டார்கள். அல்லது, “இனி நம் அதிகாரம் எடுபடாது” என்று அமைதியாகி விட்டார்கள் என்றே எண்ண இடமிருக்கிறது.   அ.தி.மு.கவுக்குள் இனி ‘ஓ.பன்னீர்செல்வம் அதிகாரம்’ என்று எதுவும் எஞ்சி இருப்பதாகத் தெரியவில்லை. ஆட்சியிலும் அவருக்கு என்று தனிப்பட்ட முக்கியத்துவமும் இருப்பதாகத் தெரியவில்லை.    அதனால்தானோ என்னவோ, ‘நிதி நிலை அறிக்கை தயாரிக்க ஆலோசனை வழங்கிய ஜெயலலிதா குறித்து, எப்படித் தனது ‘பட்ஜெட்’ உரையில் ஓ.பன்னீர்செல்வம்’ குறிப்பிடுவாரோ அதேபோல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய சிறந்த ஆலோசனைகள் என்று பட்ஜெட்டில் பாராட்டியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.    ஆகவே, கட்சி ரீதியாகவும் ஆட்சி ரீதியாகவும் அ.தி.மு.கவின் தலைவர் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி என்பது நூற்றுக்கு இரு நூறு சதவீதம் உறுதியாகி விட்டது.  ஆட்சியைப் பொறுத்தமட்டில், 16,382 கோப்புகளை மூன்று வருடங்களில் பார்த்துக் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்ததாக, ‘மூன்று ஆண்டு சாதனை’ பட்டியலை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.    அந்தக் பட்டியலில் பல்வேறு சாதனைத் திட்டங்கள் குறித்துக் கூறப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள், பொலிஸாரை நிம்மதியிழக்க வைத்துள்ளன.    தொடர் போராட்டங்களில் நிம்மதியிழந்த பொலிஸார், சென்னையில் போராடிய இஸ்லாமியர்கள் மீது, தடியடி நடத்த, இப்போது தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு பகுதிகளுக்கும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை நியமித்து, சட்டம், ஒழுங்குப் பிரச்சினைகளைக் கண்காணிக்க வேண்டிய கட்டாயம், இந்த அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிறது.    ஆகவே, குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க வாக்களித்தது மிகப்பெரிய தலைவலியாக அக்கட்சிக்கு தமிழகத்தில் மாறியிருக்கிறது. அது மட்டுமின்றி, சிறுபான்மையினர் வாக்குகளை இனிமேல் அந்தக் கட்சி கனவிலும் பெற முடியாது என்ற சூழல் ஏற்பட்டு விட்டது.    இதேபோன்று, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ‘காவிரி டெல்டா’வை அறிவிக்கப் போகிறேன் என்று முதலமைச்சர் கூறியிருந்தாலும் அந்தக் காவிரி டெல்டா பகுதிகளில், ஏற்கெனவே செயல்படும் அல்லது, புதிதாக ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டங்களின் நிலை என்ன? தொடருமா, அதற்கும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தின் கீழ், இரத்துச் செய்யப்படுமா என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.    மாநில அரசாங்கம், தனது அதிகாரத்தின் கீழ் இந்தச் சட்டத்தை நிறைவேற்றி விட முடியுமா? அப்படி நிறைவேற்றப்படும் சட்டத்தை, மத்திய அரசு ஏற்றுக் கொள்ளுமா? இதெல்லாம் மில்லியன் டொலர் கேள்விகளாக வலம் வருகின்றன.   இது போன்ற சூழ்நிலையில், புதிதாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அ.தி.மு.க ஆட்சியின் ‘கடைசி முழு நிதி நிலை அறிக்கை’, தேர்தல் நிதி நிலை அறிக்கையாகவோ தேர்தலை மனதில் வைத்தோ வெளியிடப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம், மாநிலம் 4.56 இலட்சம் கோடி கடனில் சிக்கிக் கொண்டிருப்பதே ஆகும்.    மிகப்பெரிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் எதற்கும், தேர்தல் வருடத்தில் செலவிட முடியாத அளவில், நிதி நெருக்கடியில் தமிழ்நாடு இன்றைக்கு உள்ளது. ஆகவே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்துக்கு, நிதி மேலாண்மை மிகப்பெரும் சவாலாகவே இன்றுவரை இருந்து வருகிறது.    எஞ்சியிருக்கின்ற ஒரு வருடத்துக்குள், இதைச் சரியான பாதையில் திருப்பி விட முடியும் என்று, பொருளாதார நிபுணர்களாலும் நம்பிக்கை தெரிவிக்க முடியவில்லை என்ற நிலை உள்ளது.   அரசாங்க நிர்வாகத்தில் அதிகாரிகளுக்கு மிகப்பெரிய ‘சுதந்திரம்’ கிடைத்துள்ள காலகட்டமாக, எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக் காலம் இருக்கிறது. அமைச்சர்களுக்குச் ‘சுதந்திரம்’ இருக்கிறது. ஆனால், அவை எல்லாம் ‘நிர்வாகத் திறமைகளாக’ அ.தி.மு.க ஆட்சிக்கு நல்ல பெயர் வாங்கித் தருவதாக இருக்கிறதா என்றால், “இல்லை” என்றே கூறிவிட வேண்டும்.   ஏனென்றால், வரலாறு காணாத வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் முறைகேடு, பல்வேறு ஊழல் புகார்கள் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள், ஊழல் வழக்குகள் அமைச்சர்கள் மீதே தொடரப்படுவது எல்லாம், இந்த மூன்றாண்டு கால ஆட்சி வெளியிட்டுள்ள ‘சாதனைப் பட்டியலுக்கு’ வேதனை அளிக்கும் நிகழ்வுகளாகவே இருக்கின்றன.   ஆகவே, தேர்தல் வருடத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் அ.தி.மு.கவுக்கு இப்போதைக்கு கட்சிக்குள் பிரச்சினை இல்லை; ஒற்றைத் தலைமை என்பது உறுதியாகி விட்டது. இனிமேல், சட்டமன்றத் தேர்தலில், ‘முதலமைச்சர் வேட்பாளர்’ யார் என்பதில், அடுத்த குழப்பம் வரலாம் என்பது மட்டுமே இப்போதுள்ள பிரச்சினை.    ஆனால், ஆட்சி நிர்வாகத்தில், மத்திய அரசு கொடுத்த ஆதரவைப் பயன்படுத்தி, ஒரு நல்ல நிர்வாகத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கம் கொடுத்து விட்டதா என்று கேட்டால், உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளில், அதற்கு ஆதரவான காட்சிகளைக் காணமுடியவில்லை.    அதற்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலும், அப்படியோர் உறுதிமொழியை அ.தி.மு.கவுக்குக் கொடுக்கவில்லை. இந்நிலையில், ‘மூன்றாண்டு சாதனை’, இனி அடுத்துச் சந்திக்கப் போகும் 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவுக்குச் சாதகமான ‘ஆதரவு அலை’ வீச வைக்கும் சாத்தியகூறுகள் காணப்படவில்லை என்பதே தற்போதைய நிலைமை.    ஒருவேளை இன்னும் இருக்கின்ற ஒரு வருடத்தில் அந்த ஆதரவு அலையை, அ.தி.மு.கவால் உருவாக்கிக் கொள்ள முடியுமா? அது மிகப்பெரிய சவால் என்றே அ.தி.மு.கவினருக்கு இப்போது தெரிகிறது.       http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அ-தி-மு-கவுக்கு-2021-ஆதரவு-அலை-வீசுமா/91-245592
  • யாழ்.மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபர் இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றார் புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள கணபதிப்பிள்ளை மகேசன் முன்னதாக மட்டக்களப்பு வாழைச்சேனை, வவுணதீவு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச சபைகளின் சிறப்பு ஆணையாளராக பதவி வகித்துள்ளார்.அத்துடன் கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் பதில் உயர்ஸ்தானிகராகவும் பணியாற்றியுள்ளதோடு, உணவு ஊக்குவிப்பு வாரியத்தின் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார். இந்நிலையில் யாழ்.மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் இன்று திங்கட்கிழமை காலை தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட செயலகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-மாவட்டத்தின்-புதிய-2/