Jump to content

ஒப்பரேசன் கோத்தா


Recommended Posts

 
 
 
       
 
'ஓபரேசன் கோத்தா' நெருங்கிவரும் கிளைமாக்சும் அதன் திரைக்கதையும் !

காட்சி 1 : ஏப்ரல் 21ம் திகதி, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் 'ஓபரேசன் கோத்தாவின் ' முதற்காட்சி விரிகின்றது.

காட்சி 2 : தாக்குதல் நடந்த மறுவினாடியே,  இந்திய மைய ஊடகங்கள் ஐ.எசு.ஐ.எசு தாக்குதல்தான் இதற்குகாரணம் என முதற் செய்தியை வெளியிடுகின்றது.

காட்சி 3 : உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்புக்கூறும் ஐ.எசு.ஐ.எசு தாக்குதாலிகளின் முதற் காணொளி காட்சி, இசுறேலிய ஊடகம் ஒன்றின் மூலமே வெளிவருகின்றது.

காட்சி 4 : மகிந்த அல்லது கோத்தபாய போன்ற வலிமையான தலைவர் ஆட்சிக்கு வந்தால்தான் சிறிலங்காவை பாதுகாக்க முடியும் என சுப்ரமணிய சுவாமி தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவு செய்கின்றார்.

காட்சி 5 : இந்திய பி.யே.பி அரசு, மகிந்த அல்லது கோத்தபாயவை ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என தனது ருவிற்றர் பக்கத்தில் மீண்டு பதிவிடுகின்றார்.

காட்சி 6 :  சிறிலங்காவில் இருந்து ஐ.எசு.ஐ.எசு பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்தார்கள் என செய்தி இந்திய ஊடகங்களில் பரப்பபடுகின்றது. தேடுதல் வேட்டை நடக்கின்றது.

காட்சி 7 : கோத்தா போன்ற வலிமையான ஒருவரே சிறிலங்காவுக்கு தேவை என்ற கருத்துருவாக்கம் செய்யப்படுகின்றது.
 
                  யு.என்.பிக்கு ஆதரவாக பெருமளவில் இருந்த சிங்கள கத்தோலிக்க, மத்திய தரவர்கத்திடம் இக்கருத்து மேலோங்குகின்றது.

காட்சி 8 : மகிந்த இராசபக்சவின் திருமணத்துக்கு சிறிலங்காவுக்கு வரும் சுப்ரமணிய சுவாமியை தனி விமானத்தில் மகிந்த தரப்பு வீட்டுக்கு வரவேற்கின்றது.

காட்சி 9 : தேர்தல் களம் பரபரக்கின்றது.

காட்சி 10 : சயித்துக்கான ஆதரவு தளத்தினை தமிழா: தேசியக் கூட்மைப்பு தரப்பினரை முன்வைக்க உந்தப்படுகின்றது.

காட்சி 11 : தமிழர்கள் வாக்குகள் இல்லாமலேயே தனிச்சிங்களவர்களின் வாக்குகள் மூலம் தலைவரை தேர்வு செய்யும் நிலை சிங்களப்பக்கத்தில் வலுக்கின்றது.

காட்சி 12 : இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு வழமையாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இருந்த தடை, 5 ஆண்டுகளுக்கு என நீட்டப்படுகின்றது.

காட்சி 12 : தேர்தல் களத்தில் கோத்தா வெல்கின்றார்

காட்சி 13 : கோத்தாவுக்கான வாழ்த்தினை தனது ருவிற்றர் மூலம் சுப்ரமணிய சுவாமி தெரிவிக்கின்றார்.

காட்சி 14 : இந்தியாவுக்கு வருமாறு மோடி, கோத்தாவுக்கு அழைக்க, அதனை மகிந்த தரப்பு ஏற்றுக் கொள்கின்றது.

இடைவேளை

முன்கதைகள் :

1 : பயங்கரவாத தாக்குதல் காட்சிகள் எவ்வாறு, ஏன் இசுறேலிய ஊடகத்தினால் வெளிவந்தது.

முன்கதை : இந்தியாவின் அணிசேரா கொள்கை நிமிர்த்தம், பலத்தீனியிர்கள் விவகாரத்தில் இசுறேலுடன் இந்தியா நட்புறவற்று இருந்த காலம். பின்னர். இசுறேலுடன் தனது நட்பை இந்தியா புதுப்பித்துக் கொள்ள அதற்கு ஏயெண்டாக இருந்தவர் சுப்ரமணிய சுவாமி.

இந்தியாவின் முதலாது இசுறேல் இராசதந்திரிக்கான இந்திய உள்நுழைவு டிப்போமற்றிக் அனுமதி, சுப்ரமணிய சுவாமி வீட்டில் வைத்து இசுறேலியருக்கு வழங்கப்பட்டது.

இசுறேலிய புலானய்வு அமைப்பின் இராசதந்திரி.

2 : உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னராக சுப்ரமணிய சுவாமியின் ருவிற்றர் பதிவுகள்

- மகிந்த, கோத்தா போன்ற  வலிமையான தலைவர்கள் சிறிலங்காவுக்க தேவை எண்டதும், இந்திய பி.யே.பி அரசு அதனை செய்ய வேண்டும் எண்டதும், கோத்தா வென்றபின் முதலில் வாழ்த்தியதும், மோடி வரச் சொல்லி முதல் அழைபபாக கோத்தாவை கூப்பிட்டது , தற்செயலானது அல்ல....

திரைக்கதையின் முடிச்சுக்களை அவிழத்த தருணங்கள் அவை.

3 : பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னும் பின்னுமாக, மகிந்த தரப்பு சுப்ரமணிய சுவாமியின் அழைப்பில் இந்தியா சென்று வந்ததும், பின்னர் மகிந்த அழைப்பில் சுவாமி சிறிலங்கா வந்ததும் தற்செயலானது அல்லது. இத்திரைக்கதையின் முக்கிய மூடிய அறை உரையாடல்கள்.

ஏன் இந்த ஒப்ரேசன் கோத்தா ?

இந்தியப் பெருங்கடல் அரசியலில் இலங்கைத்தீவு விடயத்தில் சீனா - இந்தியா - அமெரிக்கா என்று மூன்று தரப்புக்களின் யார் கைது ஓங்குகின்றது என்ற போட்டிக்களம்.

சிறிலங்காவை தனது கைப்பிள்ளையாக வைத்திருக்க நினைக்கின்ற இந்தியாவுக்கு இவர்களின் பிரச்சன்னம் (சீனா - அமெரிக்கா) இரசிக்கதக்க ஒன்றல்ல.

ரணில் தரப்பிலான சயீத்தின் அமெரிக்க சார்ப்பு, சீனாவுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் வெறுப்பான ஒன்று.

மீண்டும் இலங்கைத்தீவில் தான் விட்ட இடத்தை வலுவாக பிடிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, கோத்தா சர்வதேச நெருக்கடிக்குள் மாட்டுப்பட்டால், தானும் மாட்டுப்பட்டு விடுவோம் என்ற அச்சம் இந்தியாவுக்கு. ஏன்என்றால் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் இனப்படுகொலைகளத்தில் சிறிலங்காப் படையினரோடு நின்றது இந்தியப் படைகளும்தான்.

போர் குற்றவிசாரணை கோத்தா மீதான நெருக்கடி முற்றினால், அதனால் தான் அம்பலப்படுவது மட்டுமல்ல , தனது இராணுவத்துக்கு தனக்கும் நெருக்கடி ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் இந்தியாவுக்கு உண்டு.

( போருக்கு உதவிய இந்தியாவுக்கு மகிந்த தரப்பு பலதடவைகள் நன்றி சொன்ன விடயத்தின் மூலம் இதனை உணரலாம்)

இந்நிலையில்தான், கோத்தாவை தனது கட்டுப்பாட்டுகள் வைத்திருக்கவும், தான் ஆட்சிக்கு வர இந்தியாவின் வரைவுக்குள் கோத்தா போனதுமே, இத்திரைக்கதையின் மைய மூலக்கதை.

இந்தியாவின் வெளிவிகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளவர் ஒரு முன்னாள் றோ அதிகாரி. இவர் இந்திய இராணுவத்துடன் அமைதிப்படைக்காலத்தில் சிறிலங்காவின் நின்று பணியாற்றியவர்.

கிளைமைக்சு :

இந்தியாவுக்கு கோத்தா அழைக்கப்பட்டுள்ளார்.....இதில் இருந்துதான் கிளைமைக்சை நோக்கி திரைக்கதை விரிகின்றது.

இலங்கைத்தீவின் அயெண்டா இந்தியாவின் கைக்குள் சென்ற நிலையில், அமெரிக்காவும், சீனாவும் தனக்கான வழிகனை தேடப் போகின்ற களம் திறக்கின்றது.

சீனா தனது பிடியை ஒரு போதும் விடாது...விரும்பாது...

அமெரிக்கா தனது நலன்களை அடைய, தனது ஆயுதங்களை கையில் எடுக்கலாம்.

அதில் ஒன்றுதான் கோத்தாவின் அமெரிக்க குடியுரிமை விடயம்.

இன்னமும் மர்மமாகவே இருக்கும் இந்த முடிச்சுத்தான் கோத்தாவை தனது வழிக்கு கொண்டு வரவைப்பதற்கான அமெரிக்காவின் டீல்.

இந்த தரப்புக்களின் டீலுக்குள் தமிழர்கள் தமக்கான நன்மைகளை அடைவதற்கான வாய்ப்புக்கள் நிறையவே உண்டு.

இதுதான், முள்ளிவாய்க்கால் யுத்த்தின் கிளைமைக்சு எனில் , இந்த புவிசார் அரசியல் திரைக்கதையின் கிளைமைக்சே, தமிழர்களுக்கான. புதிய கதவை திறக்கும்.

ஒபரேசன் கோத்தா

நிறைவுறும்.
 
 
வாட்சொப்பில் எனக்கு வந்த திரைக்கதை.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.