Jump to content

கூகுளின் 'ஆல்பபெட்' சி.இ.ஓ.வாக சுந்தர் பிச்சை நியமனம்


Recommended Posts

'ஆல்பபெட் ' சி.இ.ஓ.வாக சுந்தர் பிச்சை நியனம்

கூகுள் நிறுவனத்தினை தாய் நிறுவனமான ஆல்பாபட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டார்.


அமெரிக்காவை சேர்ந்த, 'கூகுள்' நிறுவனம், தேடுதல் இணையதளம் தொடர்பான சேவையில், உலகளவில் முன்னணியில் உள்ளது. தேடுபொறி, சர்வர் தொழில்நுட்பம், மென்பொருள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை, கூகுள் அளித்து வருகிறது.
 

தகவல் தொழில்நுட்பத் துறையில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் இந்த 'கூகுள்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக, தமிழகத்தின், சென்னையைச் சேர்ந்த, சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2425849

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தை நிறுவியவர்களான லாரி பேஜ், மற்றும் செர்ஜி பிரைன் இருவரும் கூட்டாக அறிவிப்பை வெளியிட்டனர். அதில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பொறுப்புடன் அதன் துணை நிறுவனமான 'ஆல்பபெட்' நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக கூடுதலாக சுந்தர் பிச்சை கவனிப்பார். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

  • Alphabet CEO Larry Page will step down from the role and Google CEO Sundar Pichai will take over, adding to his current responsibilities. Co-founder Sergey Brin will also step down as president of Alphabet and the role will be eliminated.
  • Page and Brin said in a blog post that “it’s the natural time to simplify our management structure.”
  • Page became CEO of Alphabet after Google restructured to form the parent company in 2015. He had previously been CEO of Google.

https://www.cnbc.com/2019/12/03/larry-page-steps-down-as-ceo-of-alphabet.html

Link to comment
Share on other sites

சுந்தர் பிச்சைக்கு பாராட்டுக்கள்!

உலகின் மிகப்பெரும் பலமான நிறுவனங்களில் ஒன்றான 'அல்பபெட்'டின் நிறைவேற்று அதிகாரி என்பது உலக தமிழர்கள் அனைவரையும் பெருமை கொள்ள வைப்பதாகவும். இந்த கடினமான பணியில் சுந்தர் பிச்சை வெற்றி பெற வாழ்த்துக்கள். 

இந்த பதவியில் இருந்து விலகும்பொழுது சுந்தர் பிச்சை உலக தமிழினத்தின் எழுச்சிற்கு தனது பங்கையும் ஆற்ற வேண்டும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைய செய்திகளில்... உலகம் பலவும் வாழுகின்ற, பல  தமிழ் மக்கள்...
பெரும் சாதனைகளை படைத்து வருவது மகிழ்ச் சியான விடயம்.  

வாழ்த்துக்கள்....சுந்தர் பிச்சை.

 

 

 

Link to comment
Share on other sites

> இந்த பதவியில் இருந்து விலகும்பொழுது சுந்தர் பிச்சை உலக தமிழினத்தின் எழுச்சிற்கு தனது பங்கையும் ஆற்ற வேண்டும்.  

ஆற்றுவார் ஆற்றுவார் . அவர்  தீவிர தமிழ்ப் பற்றுள்ளவருங்கோ ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுந்தர் பிச்சை: தகவல் தொழில்நுட்பத் துறையில் புது உச்சத்தை தொட்ட இந்த தமிழர் யார்?

சுந்தர் பிச்சைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசுந்தர் பிச்சை

கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை.

கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக 2015ஆம் ஆண்டு பொறுப்பேற்ற சுந்தர் பிச்சை தற்போது கூடுதலாக ஆல்ஃபபெட்டையும் கவனித்து கொள்வார்.

சென்னையை பிறப்பிடமாகக் கொண்ட அவர், கரக்பூரிலுள்ள ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்ற பின்னர், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்காகச் சென்றார்.

அங்கு எம்.எஸ் பட்டம் பெற்ற பின்னர், உலகப் புகழ்பெற்ற வார்ட்டன் பல்கலைக்கழகத்தின் வர்த்தகப் பள்ளியில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார்.

சந்தர் பிச்சை கடந்து வந்த பாதை என்ன?

சென்னையில் பிறந்தவரான அவருக்கு படிப்பில் எந்த அளவுக்கு ஆர்வம் இருந்ததோ, அதே அளவுக்கு விளையாட்டிலும் ஆர்வம் இருந்தது. பள்ளிக்கூட கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கியவர் அவர்.

சுந்தர் பிச்சைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

பிராந்தியங்களுக்கிடையிலான போட்டிகள் பலவற்றில் அவரது அணி வெற்றிபெற்றிருக்கிறது.

பள்ளிக்காலத்திலிருந்தே தொலைபேசி எண்களை நினைவில் வைத்திருப்பதில் சுந்தர் பிச்சைக்குத் தனித் திறமை இருந்துவந்தது.

தந்தையின் கவனம்

இரு அறைகளைக் கொண்ட வீட்டில் வசித்துவந்த சுந்தர் பிச்சையின் வீட்டில் சொந்தமாக டிவி, கார் போன்றவை இருந்திருக்கவில்லை. ஆனால், சுந்தர் பிச்சையின் தந்தை, தன் மகன்களின் கல்வியில் கூடுதல் கவனத்தைச் செலுத்திவந்தார்.

ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பனியில் பணியாற்றிய சுந்தர் பிச்சையின் தந்தை ரகுநாத பிச்சை, வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு, அன்று தன் வேலையில் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து மகன்களிடம் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறுகிறார்.

பள்ளிப்படிப்பை முடித்த பிறகு காரக்பூரில் உள்ள ஐஐடியில் உலோகப் பொறியியல் படிப்பை முடித்தார் சுந்தர் பிச்சை.

அதற்குப் பிறகு, உதவித் தொகையுடன் அமெரிக்க ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு சுந்தர் பிச்சைக்குக் கிடைத்தது.

அக்காலப்பகுதியில் அமெரிக்கா செல்வதற்கான விமான டிக்கட்டின் கட்டணம் சுந்தர் பிச்சையின் தந்தையின் ஒரு வருட சம்பளத்திற்கும் அதிகமானதாக இருந்தது.

சுந்தர் பிச்சைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்க நிறுவனங்களில் இந்தியர்கள்

2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் இணைந்த அவரது மேற்பார்வையின் கீழ், கூகுளின் இணைய உலவியான க்ரோம், மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்ட் ஆகியவை உருவாக்கப்பட்டன.

கூகுள் நிறுவனத்திற்கு வருமானத்தைப் பெற்றுத்தரும் கூகுள் தேடல், விளம்பரம், கூகுள் மேப் மற்றும் யூ டியூப் உள்ளிட்ட தயாரிப்புகளில் சுந்தர் பிச்சையின் பங்களிப்பு இருந்துவந்தது.

அந்நிறுவனத்தின் உயர்பதவியில் இருந்த லாரி பேஜ், செர்ஜி ப்ரின் போன்றவர்கள் நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பொறுப்புகளை சுந்தர் பிச்சையிடம் அளித்து வந்தனர். தொடர்ந்து, 2015ல் அதிகாரபூர்வமாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக அவர் பதவியேற்றார்.

அமெரிக்க தொழில்நுட்பத்துறையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் உயர்பதவியில் உள்ள சத்யா நாதெல்லாவுக்குப் பிறகு, மற்றொரு இந்தியரான சுந்தர் பிச்சை இந்த உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்.

சுந்தர் பிச்சைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அதிக ஊதியம் பெறும் அமெரிக்க நிர்வாகி

கூகிள் நிறுவனத்தின் தலைவரான, சுந்தர் பிச்சை, அமெரிக்காவில் மிக அதிக ஊதியம் பெறும் உயர் அதிகாரி ஆவார். 2015ல் அவர் கூகுளின் தாய் நிறுவனமான, ஆல்ஃபபெட், தன் நிறுவனத்தின் ஒரு பகுதியாக மாறியபோது அந்நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு வந்தார்.

அவருக்கு சுமார் 230 மிலியன் டாலர்கள் மதிப்புள்ள கூகிள் நிறுவனப் பங்குகள் தரப்பட்டதாக அதிகாரபூர்வ ஆவணங்கள் காட்டின.

இதன் மூலம் அவரது தனிப்பட்ட பங்கு மதிப்பு சுமார் 650 மிலியன் டாலர்களாக உயர்ந்தது.

https://www.bbc.com/tamil/global-50655296

Link to comment
Share on other sites

2 hours ago, ஏராளன் said:

அதிக ஊதியம் பெறும் அமெரிக்க நிர்வாகி

கூகிள் நிறுவனத்தின் தலைவரான, சுந்தர் பிச்சை, அமெரிக்காவில் மிக அதிக ஊதியம் பெறும் உயர் அதிகாரி ஆவார். 2015ல் அவர் கூகுளின் தாய் நிறுவனமான, ஆல்ஃபபெட், தன் நிறுவனத்தின் ஒரு பகுதியாக மாறியபோது அந்நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு வந்தார்.

அவருக்கு சுமார் 230 மிலியன் டாலர்கள் மதிப்புள்ள கூகிள் நிறுவனப் பங்குகள் தரப்பட்டதாக அதிகாரபூர்வ ஆவணங்கள் காட்டின.

இதன் மூலம் அவரது தனிப்பட்ட பங்கு மதிப்பு சுமார் 650 மிலியன் டாலர்களாக உயர்ந்தது.

https://www.bbc.com/tamil/global-50655296

ஒரு இமயத்தை தொட்ட சாதனை.

இவரின் வழியில் மேலும் தமிழர்கள் சாதனைகள் படைத்து, தமிழினத்திற்கும் சமூகத்திற்கும் அதன் முன்னேற்றத்திற்கும் உதவவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, எருமை said:

> இந்த பதவியில் இருந்து விலகும்பொழுது சுந்தர் பிச்சை உலக தமிழினத்தின் எழுச்சிற்கு தனது பங்கையும் ஆற்ற வேண்டும்.  

ஆற்றுவார் ஆற்றுவார் . அவர்  தீவிர தமிழ்ப் பற்றுள்ளவருங்கோ ..

வணக்கம் எருமை 😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.