Jump to content

ஈழத் தமிழர்களை இந்தியா காப்பாற்றுமா?

Recommended Posts

இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச ­ பதவியேற்ற கையோடு இலங் கைக்கு வருகை தந்த இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதியைச் சந்தித் துக் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டா பய ராஜபக்­ச இந்தியாவுக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். இச்சந்திப்பின்போது ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்ட முடியும் என்றும் பிரதமர் மோடி எடுத்துரைத்திருந்தார்.

இதன்போது அமைதிகாத்த ஜனாதிபதி கோட்டாபய; இந்துப் பத்திரிகைக்கு அளித்த செவ்வியில், 13ஆவது திருத்தச் சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாது என்றும் குறிப்பாக காணி, பொலிஸ் அதிகாரத்தை வழங்க முடியாது என்றும் கூறியிருந்தார்.

காணி, பொலிஸ் அதிகாரத்தை வழங்க முடியாமைக்கு; சிங்கள மக்களின் எதிர்ப்பே காரணம் என்றும் கோட்டாபய ராஜபக்ச­ சுட்டிக் காட்டியிருந்தார்.
அதாவது காணி, பொலிஸ் அதிகாரத்தை தமிழ் மக்களுக்கு வழங்குவதை சிங்கள மக் கள் எதிர்ப்பார்கள் என்பது ஜனாதிபதி கோட்டாபய முன்வைக்கும் காரணம்.

ஆக, இலங்கையில் தமிழர்களின் உரிமையும் வாழ்வும் சிங்கள மக்களின் விருப்பத்தைப் பொறுத்தது என்றும் தமிழ் மக்களுக்கு எதைக் கொடுப்பது எதைக் கொடுக்கக்கூடாது என் பதை சிங்கள மக்களே தீர்மானிப்பர் என்பதும்வெளிப்படையாகச்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே இலங்கையில் தமிழ் மக்களின் மனித உரிமைகள் தொடர்பிலோ அவர்களின் இன சுதந்திரம் தொடர்பிலோ எவரும் கதைக்க முடியாது.
மாறாக சிங்கள மக்கள் விரும்பினால் தமிழர்களுக்கு கொடுப்பார்கள். இல்லையேல் இருப்பதோடு தமிழ் மக்கள் தங்கள் காலத்தைக் கழிக்க வேண்டியதுதான் என்ற விடயம் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது விடயத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்­வை பாராட்ட வேண்டும்.

ஏனெனில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கதைவிடாமல், பிரதமர் மோடி சொல்வது போல அல்லது இந்தியா நினைப்பது போல எல்லாம் செய்ய முடியாது.

சிங்கள மக்கள் விரும்புவதை மட்டுமே நாம் செய்ய முடியும். சிங்கள மக்கள் விரும்ப வில்லை என்றால் அதை நாங்கள் ஒருபோதும் செய்ய மாட்டோம் என்ற முடிவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச­ இந்தியாவில் வைத்து மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்

இனி இது தொடர்பில் பிரதமர் மோடியின் நிலைப்பாடு என்ன என்பதுதான் நம் கேள்வி.

இந்தியாவை நம்புங்கள். இந்தியா உங்களைக் காப்பாற்றும் என்று தான் அளித்த வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றுவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

http://valampurii.lk/valampurii/content.php?id=20036&ctype=news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி பற்றி எரியுமா.?

78340375_2786210318111352_89337608845519

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்த திரி பற்றி எரியுமா.?

78340375_2786210318111352_89337608845519

இதுக்கெல்லாம்  பத்தாது தம்பி

சீமான் என்றொரு  சொல்லைப்போடுங்க

வறுத்தெடுத்து  விடுவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்த திரி பற்றி எரியுமா.?

78340375_2786210318111352_89337608845519

இல்லை எங்க காப்பாத்துற சீமான் முதல்வர் ஆனால் தான் உண்டு நாமளும் கொளுத்தி போடுவோம்

23 hours ago, விசுகு said:

இதுக்கெல்லாம்  பத்தாது தம்பி

சீமான் என்றொரு  சொல்லைப்போடுங்க

வறுத்தெடுத்து  விடுவோம்

26992050-936194369864339-347877469646984

Link to comment
Share on other sites

தமிழரை அழித்ததே இந்தியாதான் ,  பிறகெப்படி இந்தியா காப்பாற்றும் ?  மிச்சம் வச்சு,  ஆற அமர இருந்து,  பிறகோரு நேரம் வரும்போது அழிப்பதற்கா  ? 

வேண்டாம் நாங்கள் சிங்களவனாலேயே அழிந்து போகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா காப்பாற்றும் என்ற வார்த்தைக்கே இடமில்லை. தமிழகத்திலிருந்து ஆதரவுக்குரலுக்கு அப்பால் எதுவுமே கிடைக்கப்போவதில்லை. குறிப்பாக தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் வந்தால் கூட ஈழவர் தொடர்பாக பெரிய அளவில் எந்த மாற்றமும் வந்துவிடாது. இலங்கையைத் தன்பக்கம் ஈர்க்க இந்தியா முயற்சி செய்யலாம். கடந்த காலத்தில் இந்திரா காந்தி முயற்சித்ததைப்போல் தமிழர்கள் மத்தியில் உள்ள தேடலையும் தேவையையும் இந்தியா என்னும் நாடு தனது நலனுக்காக பயன்படுத்த முயற்சிக்கும். இம்முயற்சிக்கு இலகுவாக தமிழர் பக்கம் பலியாகும். காரணம் சிதறிக்கிடக்கும் தாயகமும், தமிழகமும் மிகப்பலவீனமான நிலையில் இருக்கின்றன மட்டுமல்ல இன்னும் அதிக நலிவை நோக்கி பயணிக்கின்றன. நாம் இன்னும் பலியாக தமிழகம் தெரியாமலே உடந்தையாகப்போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களை இந்தியா காப்பாற்றுமா?

ஈழத்தமிழர்கள் தான் இந்தியாவை காப்பாற்ற வேண்டிய தேவையேற்படலாம்.

இதுக்காகவே தலைவர் பிரபாகரன் தமிழர்கள் தான் இந்தியாவின் உண்மையான நண்பன் என்று பல தடவை கூறியிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maharajah said:

தமிழரை அழித்ததே இந்தியாதான் ,  பிறகெப்படி இந்தியா காப்பாற்றும் ?  மிச்சம் வச்சு,  ஆற அமர இருந்து,  பிறகோரு நேரம் வரும்போது அழிப்பதற்கா  ? 

வேண்டாம் நாங்கள் சிங்களவனாலேயே அழிந்து போகிறோம்.

ராஜீவை போட்டபடியாலைதான் கிந்தியா தமிழரை பழிவாங்கினதாம். இல்லாட்டி  ஈழத்தமிழனுக்கு ஆகா ஓகோ வாழ்க்கையாய் இருந்திருக்குமாம்

Link to comment
Share on other sites

1 hour ago, வல்வை சகாறா said:

இந்தியா காப்பாற்றும் என்ற வார்த்தைக்கே இடமில்லை. தமிழகத்திலிருந்து ஆதரவுக்குரலுக்கு அப்பால் எதுவுமே கிடைக்கப்போவதில்லை. குறிப்பாக தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் வந்தால் கூட ஈழவர் தொடர்பாக பெரிய அளவில் எந்த மாற்றமும் வந்துவிடாது. இலங்கையைத் தன்பக்கம் ஈர்க்க இந்தியா முயற்சி செய்யலாம். கடந்த காலத்தில் இந்திரா காந்தி முயற்சித்ததைப்போல் தமிழர்கள் மத்தியில் உள்ள தேடலையும் தேவையையும் இந்தியா என்னும் நாடு தனது நலனுக்காக பயன்படுத்த முயற்சிக்கும். இம்முயற்சிக்கு இலகுவாக தமிழர் பக்கம் பலியாகும். காரணம் சிதறிக்கிடக்கும் தாயகமும், தமிழகமும் மிகப்பலவீனமான நிலையில் இருக்கின்றன மட்டுமல்ல இன்னும் அதிக நலிவை நோக்கி பயணிக்கின்றன. நாம் இன்னும் பலியாக தமிழகம் தெரியாமலே உடந்தையாகப்போகிறது.

எமது பலத்தை நாம் உணரவேண்டும்.

 அடுத்து இந்தியாவிற்கு எமது பலம் என்ன என்று புரியவைப்பது.

அது இவ்வாறு...... 

வடக்கில் சீன துணை தூதரகத்தை திறந்து உதவுமாறு சீனாவிடம் கோரிக்கை வைக்கலாம். 

நெடுந்தீவிலொரு அகழ்வாராட்சி தொடங்கலாம். 

காங்கேயன்துறைமுகத்தை அபிவிருத்தி செய்துதரும்படி சீனாவை கோரலாம் 

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும்படி கேட்கலாம். 

பலாலி விமான நிலையத்தை உண்மையான உலகத்தரம் வாய்ந்த விமான நிலையமாக விரிவாக்கம் செய்யும்படி சீனாவிடம் கையளிக்கலாம். 

மொத்தத்தில் நெடுந்தீவை குட்டி சிங்கப்பூராகவும்,  வடமாகாணத்தை புதிய Hong Kong ஆக கட்டமைத்து தரும்படி சீனாவை கேட்டால் போச்சு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kavi arunasalam said:

காப்பாற்றாது. பயன்படுத்தும்

6-E3-C05-FD-67-BE-4509-8192-B55407-F7896

கேலிச்சித்திரம் பூனையும் எலியுமாக இருப்பது சாத்தியமா? இயல்பில் பூனை எலியை கபாளீகரம் பண்ணிவிடுமல்லவா இலங்கை என்ற எலியை இந்தியா என்ற பூனை விழுங்கக்கூடிய வல்லமையுடன் உள்ளதா? பூனையின் குறியீடும் எலியின் குறியீடும் சொல்ல முற்படுவது ரொம் அன்ட் ஜெர்ரி கார்ட்டூன் கதாப்பாத்திரங்களையா?

Link to comment
Share on other sites

12 hours ago, Kavi arunasalam said:

காப்பாற்றாது. பயன்படுத்தும்

6-E3-C05-FD-67-BE-4509-8192-B55407-F7896

எப்படி................? 

கடந்த 2500 வருடங்களாக பயன்படுத்திய விதமாகவோ   .......... ? 

போங்கப்பு நீங்களும் உங்கடவுள் கேலிச்சித்திரமும். 

இரண்டுபேரின் தலையையும் இடம் மாத்திப்போட்டடிருந்தால் கொஞ்சம் ரசிக்க கூடியதாக இருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kavi arunasalam said:

காப்பாற்றாது. பயன்படுத்தும்

6-E3-C05-FD-67-BE-4509-8192-B55407-F7896

1 hour ago, Maharajah said:

எப்படி................? 

கடந்த 2500 வருடங்களாக பயன்படுத்திய விதமாகவோ   .......... ? 

போங்கப்பு நீங்களும் உங்கடவுள் கேலிச்சித்திரமும். 

இரண்டுபேரின் தலையையும் இடம் மாத்திப்போட்டடிருந்தால் கொஞ்சம் ரசிக்க கூடியதாக இருந்திருக்கும்.

நோ.. கமெண்ட்ஸ்.  😎
ரசித்தேன்... சிரித்தேன். :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.