Jump to content

தூதரக பணியாளரை மருத்துவசிகிச்சைக்காக இலங்கைக்கு வெளியே கொண்டு செல்ல சுவிஸ் வேண்டுகோள்- அரசாங்கம் மறுப்பு


Recommended Posts

இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும்  சுவிஸ் தூதரக பணியாளரை மருத்துவசிகிச்சைக்காக இலங்கையிலிருந்து சுவிஸிற்கு கொண்டு செல்வதற்கு சுவிட்சர்லாந்து தூதரகம் அனுமதி கோரியதாகவும் அதனை மறுத்துவிட்டதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட போதிலும் குறிப்பிட்ட பெண் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளிக்கவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பெண்ணை மருத்துவசிகிச்சைக்காக அவரது குடும்பத்தினருடன் இலங்கையிலிருந்து வெளியே கொண்டு செல்வதற்கான அனுமதி கோரப்பட்டது,என தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தூதரக பணியாளரை கொண்டு செல்வதற்காக அம்புலன்ஸ் விமானத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு சுவிஸ் அதிகாரிகள் முயன்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 25 ம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் சம்பவம் குறித்து குறிப்பிட்ட பெண்ணிடமிருந்தோ அல்லது தூதுவரிடமிருந்தோ உத்தியோகபூர்வ முறைப்பாடுகள் எதனையும் பெறாத போதிலும் தூதுவர் வழங்கிய குறைந்தளவு தகவல்களை அடிப்படையாகவைத்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர் என தெரிவித்துள்ள அமைச்சர் இந்த விசாரணைகளின் போது குற்றச்சாட்டுகள் சிறிதளவு கூட உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எங்கள் அரசியல்தலைமைத்துவத்தின் மீது சேற்றைவாரியிறைக்கும்,பொய்களையும் பிழையான தகவல்களையும் தெரிவிக்கும் மற்றுமொரு நடவடிக்கையாக இதனை காண்கின்றேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/70432

Link to comment
Share on other sites

Probe on Swiss Embassy incident: Diplomats apprised of progress

The government today briefed Colombo based diplomats including the Switzerland Ambassador to Sri Lanka on updates of the investigation into the incident involving a staffer attached to the Swiss Embassy, Foreign Minister Dinesh Gunawardane said today.

He told a news conference that the sequence of events in connection with the incident attempted to paint a wrong picture of newly-elected President Gotabaya Rajapaksa.

“Some events relating to the alleged abduction and detention of a local staffer of the Swiss Embassy are untrue. The sequence of events and timeline of the incident do not correspond with actual movements of the victim on that day. The victim has not yet made any complaint with the police. She is not available to record a statement. We are doing our part. We hope she will make a statement once she recovers from ill-health,” he said.

He assured protection to the victim who had allegedly been abducted and requested her family members to make a police statement in order to carry out the investigation.

Besides, he said the Swiss Government made a request to permit the victim to fly to Switzerland for medical treatment. However, the government could not heed to that request as her identity had not been disclosed, he said.

Meanwhile, Ministry Secretary Ravinatha P. Aryasinha said police should record a statement from MP Rajith Senaratne who had made serious remarks on this incident.

In addition, State Minister of International Relations Susil Premajayantha said several individuals attempted to make false statements on the incident. (Sheain Fernandopulle)

http://www.dailymirror.lk/breaking_news/Probe-on-Swiss-Embassy-incident-Diplomats-apprised-of-progress/108-179034

Link to comment
Share on other sites

To : colombo@eda.admin.ch

Subject : Swiss embassy worker and rights 

To whom it may concern,

Continued denial of justice by Sri Lankan government is appalling. 
 
Would like to express my support with the government of Switzerland for rights, justice to all, and in particular for the people of Sri Lanka. 
 
Truly,

 

Link to comment
Share on other sites

சர்வதேச நாடுகளுடனான அரசாங்கத்தின் முரண்பாடுகள்  : நாடு தனிமைப்படும் நிலை -  முஜுபூர்

(இராஜதுரை ஹஷான்)

சர்வதேச நாடுகளுடன் தற்போதைய அரசாங்கத்தின் முரண்பாடுகளினால் மீண்டும் நாடு தனிமைப்படும் சூழ்நிலைகளே காணப்படுகின்றது.

சுவிஸ் தூதரக  பெண் அதிகாரி கடத்தல் விவகாரத்தில் இடைக்கால அரசாங்கம் பொறுப்பற்ற விதமாகவே செயற்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹுமான் குற்றஞ்சாட்டினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயமான சிறிகொதாவில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சர்வதேசத்தின் மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இலங்கை 2015ம் ஆண்டுக்கு பிறகே வளர்ச்சியடைந்த நாடுகளின் நன்மதிப்பினை பெற்று  சர்வதேசத்தின் அங்கிகாரத்தினையும் பெற்றுக் கொண்டது. 

முறையாக வெளிவிவகார கொள்கைகள் வகுக்கப்பட்டது. பல உதவிகளும் இதனூடாக கிடைக்கப் பெற்றது.

2015ம் ஆண்டுக்கு முற்பட்ட  அரசாங்கம்  சர்வதேசத்தில் முரண்பட்டுக் கொண்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. எந்த வளர்முபக நாடுகளும் இலங்கையுடன் நல்லுறவினை பேணவில்லை. 

இந்நிலைமை மீண்டும் சுவிஸ்  தூதரக விவகாரத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் தூதரக பெண் ஊழியர் கடத்தில் விவகாரத்தில் இடைக்கா அரசாங்கம் அக்கறையில்லாமலே செயற்படுகின்றது.   உண்மையினை  பகிரங்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை மாறாக போட்டித்தன்மையுடன் செயற்படுகின்றது.

பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேர்தல் பிரச்சார மேடைகளில் குறிப்பிட்ட விடயங்கள் இன்று  தலைகீழாக இடம் பெறுகின்றது.

அமைச்சரவையின் எண்ணிக்கையினை குறைத்து இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையினை அதிகரித்து முறையற்ற விதத்தில் செயற்படுகின்றது.

தமிழ்- முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஆரம்ப காலத்தில் இருந்து போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது .

தேசிய பாதுகாப்பை முன்வைத்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் , ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய பாதுகாப்பு குறித்து புதிதாக எதனையும்  செயற்படுத்தவில்லை.

தேசிய பாதுகாப்பு வெறும் தேர்தல் பிரச்சாரத்திற்காக மாத்திரமே பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/70430

Link to comment
Share on other sites

சுவிஸ் தூதரக ஊழியர் இலங்கையில் உள்ளாரா அல்லது வெளிநாடு சென்றுள்ளாரா என்று எதுவுமே தெரியாது - அமைச்சரவை பேச்சாளர்கள்

(ஆர்.யசி)

சுவிஸ் தூதரக பெண் ஊழியர்கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக  கூறப்படும் விவாகரத்தில் அவராகவந்து வாக்குமூலம் வழங்க வேண்டும்.

அவரது வாக்குமூலம் மாத்திரம் போதுமானது, ஆனால்  சுவிஸ் தூதரக பெண் ஊழியர் இலங்கையில் உள்ளாரா அல்லது வெளிநாடு சென்றுள்ளாரா என்ற எதுவேமே தெரியாது என்கிறனர் அமைச்சரவை பேச்சாளர்கள். 

வலுக்கட்டாயமாக வாக்குமூலம் பெற அரசாங்கம் முயற்சிக்கவில்லை. அவ்வாறு ஏதேனும் முயற்சிகள் எடுத்தால் அதுவும் எமக்கு எதிராகவே மாறும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். 

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. 

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர்களான பந்துல குணவர்தன மற்றும் ரமேஷ் பத்திரண  இதனை கூறினார்கள். 

சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் முறையான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர்கள் இதன்போது கூறினார்.

https://www.virakesari.lk/article/70482

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.