Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி கூட்டாக தேர்தலை சந்திக்க முயற்சி!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிறுபான்மை கட்சிகள் கூட்டாக களமிறங்க பேச்சு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முன் முயற்சியை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசே மேற்கொண்டுள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கின்றது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய, சிறுபான்மையினங்களின் முக்கிய கட்சிகள் கூட்டணியாக செயற்பட கலந்துரையாடல்கள் நடந்து வருகிறது.

தற்போதைய நிலையில், முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியன இது குறித்து பேச்சுக்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் வீட்டு சின்னத்திலும், முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியில் மரச்சின்னத்திலும் போட்டியிடுவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வடக்கு கிழக்கிற்கு வெளில்- குறிப்பாக கொழும்பில்- கூட்டாக களமிங்குவது குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுடன் பேச்சு நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆர்வம் காட்டி வருகிறது.

கடந்த 19ம் திகதி நடந்த முஸ்லிம் காங்கிரசின் அரசியல் உயிர்பீட கூட்டம் நடந்தபோது, சிறுபான்மை கட்சிகளின் கூட்டமைப்பு குறித்து கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் இந்த கூட்டணி யோசனையை முன்வைத்துள்ளார். இதற்கு, ரவூப் ஹக்கீம் சாதகமாக பதிலளித்துடன், பேச்சு முயற்சிகளை ஆரம்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.pagetamil.com/91836/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அப்போ ரிசார்ட் பதீயுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாருடன் கூட்டு  சேரும்? எல்லாருமே அவரை கை விட்டிடீர்களா? இருந்தாலும் இந்த கூட்டு இலகுவாக இருக்காது.  அமைப்பாறையில் ஹாரிஸ் உடன் சிக்கல் உருவாகும்.  இருந்தாலும் சிங்கள அரசை கட்டுக்குள் கொண்டுவர இப்படியான ஒன்று கடடயம் தேவைப்படும். ஒரு சந்தேகம், சோனிகள் தொப்பி பிரட்டி விடடால்? 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இது போன்ற முயற்சி ஒன்றும் இலங்கை அரசியலில் புதிதல்ல. முன்பும்  பலமுறை தமிழ் தரப்பிலிருந்து கூட்டு  அரசியலுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதும் காலங்காலமாக சிங்கள அரசுகளின் தொடர் அரவணைப்பில் குதூகலித்திருந்த முஸ்லிம்கள் எமது வேண்டுகோள் எதையும் காதில் போட்டுக்கொண்டதாக சரித்திரம் இல்லை. இன்று நிலைமை வேறு. தமது இருப்பையும் அரசியல் பலத்தையும் தக்கவைக்கும் ஒரு மூலோபாயம் அத்தியாவசியம் என்று ஆனபோது முஸ்லிம் தலைவர்கள் தமிழர்களுடன் கூட்டு சேர முன்வருவது தமிழர்களுக்கு எந்தளவு சாதகமானது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

சிறுபான்மை மக்கள் ஒன்று சேர்ந்து அரசியல் செய்யும் பட்சத்தில் பெரும்பான்மை இன மக்கள் இன்னும் அதிகமாகவே ஒன்றிணைந்து தமது அரசியல் பலத்தையும், இனவாதத்தையும் நிலைநிறுத்தவே முயற்சிப்பார்கள். அதுபோக சிறுபான்மை மக்களின் அரசியல்  கூட்டுறவில் சரியான வழிநடத்தல், புரிந்துணர்வு, அரசியல் திட்டம் என்பவற்றுடன் இஷ்திரமான  அரசியல் ஒப்பந்தம் ஒன்றும் பங்காளிகளுக்கிடையே இல்லாதுபோனால் கூட்டுறவுக்கு பதிலாக இனங்களுக்கிடையே மேலும் விரிசல் வருவதும் சாத்தியம்.

தமிழ் அரசியல் கட்சிகள் தமக்குள்ளாகவே கூட்டு அரசியல் செய்ய விருப்பம் கொண்டவை  அல்ல. கட்சியின் அங்கத்தவர்கள் தமது கருத்து பேதங்களை பேசி தீர்ப்பதற்கு பதிலாக தமக்கென சொந்தமாக புதிய கட்சிகளை உருவாக்கி கொண்டதையும் இங்கே குறிப்பிடவேண்டும். கடந்த காலங்களில் இதுபோன்ற முட்டாள் தனமான செயற்பாடு தமிழ் தலைவர்களிடையே  பாரிய அரசியல் ரீதியான பிரிவினைகளையும் போட்டியையும் நானா நீயா என்ற இழுபறியான நிலையையும் தோற்றுவித்தது.

 

Link to comment
Share on other sites

18 hours ago, vanangaamudi said:

காலங்காலமாக சிங்கள அரசுகளின் தொடர் அரவணைப்பில் குதூகலித்திருந்த முஸ்லிம்கள் எமது வேண்டுகோள் எதையும் காதில் போட்டுக்கொண்டதாக சரித்திரம் இல்லை. இன்று நிலைமை வேறு. தமது இருப்பையும் அரசியல் பலத்தையும் தக்கவைக்கும் ஒரு மூலோபாயம் அத்தியாவசியம் என்று ஆனபோது முஸ்லிம் தலைவர்கள் தமிழர்களுடன் கூட்டு சேர முன்வருவது

இது போன்ற ஆபத்தான வேலைகளை மட்டுமே தமிழரசுக் கட்சி செய்து வருகிறது.

சிங்கள பேரினவாதிகளுடன் கூட்டுவைச்சு தமிழின அழிப்பு தொடர்வதை உறுதி செய்த தமிழரசுக் கட்சி இப்ப முஸ்லீம் மதவெறியர்களுடன் சேர்ந்து தமிழின அழிப்பு தொடர்வதை உறுதி செய்ய முயல்கின்றது.

Link to comment
Share on other sites

அடுத்த செருப்படி வாங்கப்போகுது கூட்டமைப்பு 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆர், 

இவன்களோடயே, 

கூட்டணியே, 

ஐயே.......

வேண்டாமே.!!!!!!!!!!!!!.

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நல்ல  முயற்சி

தொப்பி  மட்டும்  கவனம்??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • எமதர்மராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தார்..! அவள் மானுடப் பெண் என்றாலும் , அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது. அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். அவர் மணந்த பெண் நல்லவள் தான். என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது. மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் , மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார். மகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார். மகனே.. நீ சிறந்த வைத்தியனாக வேண்டும். மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம். எப்படித் தெரியுமா...? ஒருவர் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். உனக்கு மட்டும் நான் கண்ணுக்குத் தெரிவேன். நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே. நீ வைத்தியம் செய்து அவர் இறந்து போனால் உன் புகழ் குறையும். எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால், தைரியமாக மருந்து கொடு. அவன் பிழைத்து எழுந்து கொள்வான். அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன். மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல், மகனை அணைத்து கண்ணீர் விட்டு எமதர்மன் நழுவி விட்டார். மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான். ஒருவர் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது, எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான். இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது. கொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் , அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன், ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா. அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி. எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார். வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள். ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி, ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும். இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார். எப்படி அவரை விரட்டுவது..? பளிச்சென்று யோசனை பிறந்தது. வாசல் பக்கம் பார்த்து கத்தினான். அம்மா....!! அப்பா உள்ளே இருக்கார். ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே....!! இங்க இருக்கார்.....! என்று அலறினான்....! அவ்வளவுதான் துண்டைக் காணோம் , துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடியேவிட்டான்....!! கட்டுனது எமனாயிருந்தாலும், இல்லை எவனாயிருந்தாலும் ,,,, பொண்டாட்டிக்கு பயந்தே தான் ஆகனும்...!! மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...!!!    
  • நடக்கபோகும்நாட்கள் நல்லதாகநடக்கட்டும் SV; பாடல்:- கண்ணதாசன்; பாடியவர்:- P.சுசிலா;
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.