Jump to content

ஆறுமுகநாவலரின் நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

DSC07994-720x450.jpg

ஆறுமுகநாவலரின் நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு

ஆறுமுகநாவலரின் 140 ஆவது நினைவு தினம் வவுனியாவில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா பிரதான சந்தைக்கு அருகில் அமைந்துள்ள ஆறுமுகநாவலரின் நினைவு தூபியில் இன்று (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு வவுனியா நகரசபை உபதவிசாளர் குமாரசாமி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது நினைவுத் தூபிக்கான மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், திருவுருவச் சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வவுனியா விளைபொருள் உற்பத்தியார்கள் சங்கம் மற்றும் நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வவுனியா தமிழ் சங்கத்தின் அமைப்பாளர் தமிழருவி சிவகுமாரன், பிரதேச கலாசார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், நகரசபை உறுப்பினர்கள் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் மற்றும் வர்த்தகர்கள், சமூக சேவையாளர்கள், பொதுமக்கள், நகரசபை ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியா நகரசபையினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டபோதிலும் நகரசபை தலைவர் மற்றும் நகரசபையின் பல உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஆறுமுகநாவலரின்-நினைவு-தி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலஸ்ரீ  ஆறுமுகநாவலர் அவர்கட்கு  நினைவாஞ்சசாலிகள்......!   💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகநாவலரின் புகழ் மேன்மேலும் தழைத்தோங்கட்டும்.

அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சாதி வெறியருக்கு நினைவு தினம் தேவையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10 hours ago, ரதி said:

ஒரு சாதி வெறியருக்கு நினைவு தினம் தேவையா?

இவரின் சாதி கொள்கைகள் மற்றும் வெறி, சிறுவர் சிறுமியரை கூட விடவில்லை என்பதே உண்மை.

அநாகரிக தர்மபால, சமகாலத்தவர் இல்லை ஆயினும், சிங்கள இனத்தை, அதாவது பூர்விக சிங்களவர்களையம், காலனியத்தினால் தட்றபோதையா தமிழ் நாடு, கேரளம், ஆந்திர வின் பூர்விகமும், சிங்களத்துக்குள் சீரழிந்து மாறிய சிங்களவர்களையும்  ஒற்றுமை ஆக்குவதற்கு தொண்டு செய்துள்ளார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் மறைந்த ஈழப்போராட்ட முன்னோடிகளில் ஒருவரான ஈரோஸ் அருளர் (பாடகி MIA இன் தந்தை) கூட சாதிரீதியாக கீழ்த்தரமான முகநூல் பதிவுகளை (முகநூல் பெயர்:  Richard Arudpragasam) பதிந்துள்ளார். இத்தனைக்கும் சமதர்மத்தை வலியுறுத்தி அவரது “லங்கா ராணி” நாவலில் எழுதியவர்தான் அவர்.

எனவே, பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்து வளர்ந்து மறைந்த நாவலரின் அன்றைய கால கருத்தியல் அவருக்குச் சரியாக இருந்திருக்கலாம். ஆனால் அவரது கருத்தியலை அருளர் போன்றவர்களும் 21 ஆம் நூற்றாண்டிலும் வைத்திருந்ததுதான் முரண்நகை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, கிருபன் said:

வரலாற்றில் வாழ்ந்தவர்களை அவர்கள் காலத்தில் இருந்து பார்ப்பது சரியே என்றபோதும், அவர்கள் தப்புக்களை வெளிக்கொணர்வதில் தப்பேதும் இல்லை.

நாவலரின் நல்லவற்றை நினவுகூறும் அதே வேளை அவரின் கறுப்பு பக்கங்களையும் நினைவுகூர்ந்து அவற்றை மறுதலிப்பதுதான் அறிவார்ந்த போக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

இவரின் சாதி கொள்கைகள் மற்றும் வெறி, சிறுவர் சிறுமியரை கூட விடவில்லை என்பதே உண்மை.

அநாகரிக தர்மபால, சமகாலத்தவர் இல்லை ஆயினும், சிங்கள இனத்தை, அதாவது பூர்விக சிங்களவர்களையம், காலனியத்தினால் தட்றபோதையா தமிழ் நாடு, கேரளம், ஆந்திர வின் பூர்விகமும், சிங்களத்துக்குள் சீரழிந்து மாறிய சிங்களவர்களையும்  ஒற்றுமை ஆக்குவதற்கு தொண்டு செய்துள்ளார். 

ஆயிரம் நல்லது இருந்தாலும் ஒரு ஊத்தையை தூக்கிப்பிடித்து கழுவி ஊத்துவதுதான் எம்மவரின் மிகப்பெரிய திறமை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, goshan_che said:

வரலாற்றில் வாழ்ந்தவர்களை அவர்கள் காலத்தில் இருந்து பார்ப்பது சரியே என்றபோதும், அவர்கள் தப்புக்களை வெளிக்கொணர்வதில் தப்பேதும் இல்லை.

நாவலரின் நல்லவற்றை நினவுகூறும் அதே வேளை அவரின் கறுப்பு பக்கங்களையும் நினைவுகூர்ந்து அவற்றை மறுதலிப்பதுதான் அறிவார்ந்த போக்கு.

நாவலருக்குச் சரியாக இருந்திருக்கலாம் என்றுதான் கூறினேன். அவரது வர்ணாமிசரத்தை வலியுறுத்தும் பிரசாரங்களில் ஒருபோதும் உடன்பட்டது கிடையாது. அருளர் போன்றவர்களும் சாதிய ரீதியிலான பிற்போக்குக் கருத்துக்களை பொதுவெளியில் பதிந்தது ஆச்சரியமாக இருந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

ஆயிரம் நல்லது இருந்தாலும் ஒரு ஊத்தையை தூக்கிப்பிடித்து கழுவி ஊத்துவதுதான் எம்மவரின் மிகப்பெரிய திறமை. 

அதற்காக தான் நினைவு கூரப்படுகின்றார் என்று நினைக்கிறன், நல்லவைகள் நன்மையில் முடிந்தவைகள்.

நல்லவைகள் நன்மையில் முடிந்தாலும், விட்ட தவறுகளையும் வரலாற்ற்றில்  சமூகமாக, இனாமாக, தேசமாக மறக்க கூடாது.   

ஆயினும், நாவலரின் இந்த செய்கை,  ஓர் தேசமாக எங்கே கொண்டு வந்து   விட்டுள்ளது எல்லோரும்  காணக் கூடியதாக இருக்கிறது, 30 வருட சாதி கடந்த கொடூர அழிவுகள் கூட சாதியை களையும் என்பதிலும் குறைவாக, சாதியின் முக்கியத்துவத்தை மழுங்கடிக்காமல் விட்டு இருக்கிறது.   

நாவலர் இப்படி செய்தது, வடக்கில் சாதிகளுக்கு பாடசாலை என்பதில் முடிவடைய இருந்து தெய்வாதீனமாக தப்பியது.   

நல்லவைகள், நன்மைகள் மூலம் நாவலரை சமூக சீர்திருத்த ஆர்வலர் என்று சொல்ல முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

நாவலருக்குச் சரியாக இருந்திருக்கலாம் என்றுதான் கூறினேன். அவரது வர்ணாமிசரத்தை வலியுறுத்தும் பிரசாரங்களில் ஒருபோதும் உடன்பட்டது கிடையாது. அருளர் போன்றவர்களும் சாதிய ரீதியிலான பிற்போக்குக் கருத்துக்களை பொதுவெளியில் பதிந்தது ஆச்சரியமாக இருந்தது

லங்காராணி நான் வாசித்த முதல் புத்தகங்களில் ஒன்று. அப்போதும் அதன் பின்னும் முற்போக்குவாதியாக தெரிந்த அருளர், 80 களின் பிற்பகுதியியிலேயே நிலைதடுமாறி விட்டார். 

டயான், வாசு, சோமவன்ச என 70, 80 களில் சோசலிச முற்போக்குவாதிகளாக தம்மை உருவகித்த பலரும் பின்னாளில் இன, சாதி வாத சகதியில் புரெண்டே எழுந்தார்கள்.

நான் நினைக்கிறேன் இவர்கள் எப்போதும் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள், இடையில் முற்போக்கு வாதம் பேஷன் ஆனபோது அதை உடுத்திவிட்டு, பின்னாளில் அது பேஷன் இல்லை என்றானவுடன் மறுபடியும் நிர்வாணமாகிவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kadancha said:

அதற்காக தான் நினைவு கூரப்படுகின்றார் என்று நினைக்கிறன், நல்லவைகள் நன்மையில் முடிந்தவைகள்.

நல்லவைகள் நன்மையில் முடிந்தாலும், விட்ட தவறுகளையும் வரலாற்ற்றில்  சமூகமாக, இனாமாக, தேசமாக மறக்க கூடாது.   

ஆயினும், நாவலரின் இந்த செய்கை,  ஓர் தேசமாக எங்கே கொண்டு வந்து   விட்டுள்ளது எல்லோரும்  காணக் கூடியதாக இருக்கிறது, 30 வருட சாதி கடந்த கொடூர அழிவுகள் கூட சாதியை களையும் என்பதிலும் குறைவாக, சாதியின் முக்கியத்துவத்தை மழுங்கடிக்காமல் விட்டு இருக்கிறது.   

நாவலர் இப்படி செய்தது, வடக்கில் சாதிகளுக்கு பாடசாலை என்பதில் முடிவடைய இருந்து தெய்வாதீனமாக தப்பியது.   

நல்லவைகள், நன்மைகள் மூலம் நாவலரை சமூக சீர்திருத்த ஆர்வலர் என்று சொல்ல முடியாது. 

அதெல்லாம் எமக்கு தெரியாது எமக்கு எப்பவும் எல்லாரையும், எல்லாவறையும் “சுரங்க பார்வை” (tunnel vision) மட்டுமே பார்க்க முடியும். ஒருவர் நமக்கு ஹீரோ என தெரிந்து விட்டால் அவரின் நல்லதை மட்டுமே பார்ப்போம். வில்லன் என முடிவு செய்தால் தீயதை மட்டுமே பார்ப்போம்😂.

கூடவே நாவலர் நம்ம மதக்காரன், நம்ம சாதி வேற - அவரின் தீமைகளை எல்லாம் தூக்கி பிடித்துக் கதைப்பது - எந்த வகையில் நியாயம்.  கண்டும் காணாம விட வேண்டியதுதான்.

இதுவே நாவலர் ஒரு கத்தோலிக்க பாதிரியா இருந்தா கிழிச்சு தொங்க விடுவோம் 😂.

பிகு:  தமிழர் இடையே இந்து சமயம் அருகவும், கிறீஸ்தவம் பரவவும் மிக முக்கிய ஆரம்ப கால ஊக்கி தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட விவிலியம்.

தன் சொந்த நலனுக்காக, விவிலியத்தை தமிழில் மொழி பெயர்த்து - சைவத்துக்கு நாவலர் அடித்த ஆப்புப் போல, வேறு எந்த இந்து-அல்லாதவரும் ஆப்படிக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழிலையும் ஓர் ஆறுமுக நாவலர் இருந்தார் நல்ல மனுசன் ஆளை கண்டு கனகாலம் 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

நான் நினைக்கிறேன் இவர்கள் எப்போதும் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள், இடையில் முற்போக்கு வாதம் பேஷன் ஆனபோது அதை உடுத்திவிட்டு, பின்னாளில் அது பேஷன் இல்லை என்றானவுடன் மறுபடியும் நிர்வாணமாகிவிட்டார்கள்.

இளவயதில் பிற்போக்குகளுக்கு எதிர்ப்பான உணர்வும், மனித குலத்திற்கு நன்மை பயக்கும் என்ற சமத்துவக்கொள்கைகளில் பிடிப்பும் வருவது வழமை. ஆனால் படித்து முடித்து வேலை, குடும்பம், ஊர் என்று போகும்போது வழமையான வட்டத்திற்குள் அமிழ்வதும் நடக்கும்.  இளமைக்கால இலட்சியங்கள் எல்லாம் காற்றில் பறந்துவிடும்.  எதிலும் ஊறாமல் அருகே போய் வருபவர்கள்தான் இந்த ஊசலாடிகள். ஆனால் தங்களுக்கு முதிர்ச்சி அல்லது ஞானோதயம் வந்துவிட்டது என்று சப்பைக்கட்டும் கட்டுவார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, கிருபன் said:

இது சொல்லப்போனால் எனக்கே நடந்துள்ளது. 20 வருடங்களுக்கு முன் இருந்த பல கொள்கை நிலைப்பாடுகள் இப்போ இல்லை, அல்லது அந்தளவுக்கு இறுக்கமாக இல்லை.

20-40-60 வயதுகளில் ஒரே கொள்கையைப் இம்மியளவும் பிசகாமல் பின் தொடர்பவர் ஒரு பிடிவாதகாரராவே இருக்க முடியும்.

ஆனால் அன்றும் இன்றும் சில விடயங்களில் சமரசம் இல்லை. சாதி விடயத்தில் எப்படி நிலைப்பாடு மாற முடியும் எனத்தான் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நான் நினைக்கிறேன் இவர்கள் எப்போதும் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள், இடையில் முற்போக்கு வாதம் பேஷன் ஆனபோது அதை உடுத்திவிட்டு, பின்னாளில் அது பேஷன் இல்லை என்றானவுடன் மறுபடியும் நிர்வாணமாகிவிட்டார்கள்.

70 80 களில் முற்போக்கு வாதம் சோசலிசம் பேசுவது எல்லாம் ஒரு பெரிய பாசனாகவே இலங்கையில் தமிழர்களிடம் இருந்துள்ளது தெரியவருகிறது.புளட் இயக்கம் சோசலிச தமிழீழம் மலர்ந்து தான் உலகநாடுகளை சோசலியமயமாக்கும் என்று கூறியதாம்.மூஞ்சுறு தான் போக வழியை காணவில்லை அதுகுள்ள உலகநாடுகளை சோசலியமயமாக்கும் திட்டம்.😡

3 hours ago, கிருபன் said:

நாவலருக்குச் சரியாக இருந்திருக்கலாம் என்றுதான் கூறினேன்.

சிங்கள இனவாதிக்கு தனது செயல்கள் சரியாக இருந்திருக்கலாம் குண்டுவைத்து மற்றவர்களை கொல்லும் முசுலீமுக்கு தனது செயல்கள் சரியாக இருந்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

On 12/5/2019 at 2:03 PM, suvy said:

ஸ்ரீலஸ்ரீ  ஆறுமுகநாவலர் அவர்கட்கு  நினைவாஞ்சசாலிகள்......!   💐

ஸ்ரீலஸ்ரீ  ஆறுமுகநாவலர் அவர்களால் தான் எமது கலாச்சாரத்தின் முக்கிய அம்சமான சாதிய கட்டமைப்பு இன்றும் நிலைத்திருக்கிறது.  நாவலர் பெருமானுக்கு ஆயிரம் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜுட் ,  சென்ற நூறாண்டில் வாழ்ந்த மொழியில் அறிவில் மேதமை மிக்க ஒரு தமிழனின்  நினைவஞ்சலி. அவரால் வகுத்து கொடுத்த பாடநூல்களின் வழி கற்றுத்தான் இன்று இங்கு தட்டிக் கொண்டிருக்கின்றேன். ஒரு தமிழனாகவும்,மாணவனாகவும் இருந்து அவருக்கு அஞ்சலி செய்யவில்லையெனில் வேறு யாருக்கு செய்வது.....!

நீங்கள், இந்த உலகத்தில் பிறந்து வாழ்ந்து மறைந்த யாரேனும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட  மூன்றாவதாக   ஒருவரை கூறுங்கள் , நான் இந்த அஞ்சலியை அகற்றி விடுகின்றேன்.....! 

முதல் இருவர் ஜூட்  & சுவி.....!   🤔

17 minutes ago, Jude said:

ஸ்ரீலஸ்ரீ  ஆறுமுகநாவலர் அவர்களால் தான் எமது கலாச்சாரத்தின் முக்கிய அம்சமான சாதிய கட்டமைப்பு இன்றும் நிலைத்திருக்கிறது.  நாவலர் பெருமானுக்கு ஆயிரம் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, suvy said:

ஒரு தமிழனாகவும்,மாணவனாகவும் இருந்து அவருக்கு அஞ்சலி செய்யவில்லையெனில் வேறு யாருக்கு செய்வது.....!

அவர் செய்தவகைளில் நன்மை பயத்தவைகளின் அடிப்படையில் , அஞ்சலியையோ அல்லது நினைவு கூருவதையோ தடுக்கவோ, நிந்திக்கவோ இல்லை. 

அப்படி செய்தால், அவர் செய்ததிலும் பார்க்க நாம் இவ்வளவு காலம் கடந்து  செய்வது  பிற்போக்கு தனம் மட்டுமன்றி, ஏனைய நாகரிக கூர்ப்புகள் எம்மை சீர்திருத்தவில்லை.

ஆனாலும், வரலாற்றை மறக்க முடியாது. 

எனது தனிப்பட்ட பார்வையில், அஞ்சலி செலுத்துவத்துடன், அவரின் செய்தவைகளால் வந்த வரலாற்று தீங்குகள், மறுபடியும் அப்படியான செய்கைகள் மீட்கப்படுவது கண்டிக்கப்பட்டு நினைவு கூரப்பட்டு வேண்டும்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யாழிலையும் ஓர் ஆறுமுக நாவலர் இருந்தார் நல்ல மனுசன் ஆளை கண்டு கனகாலம் 🙂

அவரை கலைச்சதே நாங்கள் தானே....🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kadancha said:

அவர் செய்தவகைளில் நன்மை பயத்தவைகளின் அடிப்படையில் , அஞ்சலியையோ அல்லது நினைவு கூருவதையோ தடுக்கவோ, நிந்திக்கவோ இல்லை. 

அப்படி செய்தால், அவர் செய்ததிலும் பார்க்க நாம் இவ்வளவு காலம் கடந்து  செய்வது  பிற்போக்கு தனம் மட்டுமன்றி, ஏனைய நாகரிக கூர்ப்புகள் எம்மை சீர்திருத்தவில்லை.

ஆனாலும், வரலாற்றை மறக்க முடியாது. 

எனது தனிப்பட்ட பார்வையில், அஞ்சலி செலுத்துவத்துடன், அவரின் செய்தவைகளால் வந்த வரலாற்று தீங்குகள், மறுபடியும் அப்படியான செய்கைகள் மீட்கப்படுவது கண்டிக்கப்பட்டு நினைவு கூரப்பட்டு வேண்டும்.    

நண்பரே, சிங்களத்தில் ஒரு பழமொழி உண்டு.... எல்லோருக்கும் நல்லவளாக இருப்பவள்  எந்நாளும் பிள்ளைத்தாச்சியாக இருப்பாள் என்று. அப்படி சில முரண்கள் இருக்கலாம்....அந்த முரண்கள் அவர்காலத்துக்கு முன்பும் இருந்தன, இன்றும் இருக்கின்றன, நாளை இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்.  அவர் செய்த நல்லவற்றை நினைந்து நினைவு கூறலாம் தப்பில்லை.....!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, suvy said:

அவர் செய்த நல்லவற்றை நினைந்து நினைவு கூறலாம் தப்பில்லை.

1 hour ago, Kadancha said:

அவர் செய்தவகைளில் நன்மை பயத்தவைகளின் அடிப்படையில் , அஞ்சலியையோ அல்லது நினைவு கூருவதையோ தடுக்கவோ, நிந்திக்கவோ இல்லை. 

அப்படி செய்தால், அவர் செய்ததிலும் பார்க்க நாம் இவ்வளவு காலம் கடந்து  செய்வது  பிற்போக்கு தனம் மட்டுமன்றி, ஏனைய நாகரிக கூர்ப்புகள் எம்மை சீர்திருத்தவில்லை.

அவர் செய்தவகைளில் நன்மை பயத்தவைகளின் அடிப்படையில், நினைவு கூருங்கள் என்பது. ஆனால் எல்லோராலும் நினைவு கூரப்பட வேண்டும் என்பதை திணிக்காதீர்கள் என்பதும்

விரும்பினால், 

Quote

எனது தனிப்பட்ட பார்வையில், அஞ்சலி செலுத்துவத்துடன், அவரின் செய்தவைகளால் வந்த வரலாற்று தீங்குகள், மறுபடியும் அப்படியான செய்கைகள் மீட்கப்படுவது கண்டிக்கப்பட்டு நினைவு கூரப்பட்டு வேண்டும்.

ஆனால், மேலே சொல்லுவதை செய்வதற்கு, அப்படி அவர் நினைவு கூரப்பட வேண்டும் என்று எண்ணுபவர்கள், இடமளிப்பார்களா?   
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

 அவரின் செய்தவைகளால் வந்த வரலாற்று தீங்குகள், மறுபடியும் அப்படியான செய்கைகள் மீட்கப்படுவது கண்டிக்கப்பட்டு நினைவு கூரப்பட்டு வேண்டும்.    

இது நீங்கள் சொன்னது, மேலே நீங்கள் கோட் பண்ணியது போல்  நான் சொல்ல வில்லை. மேலும் நான் யாரையும் வற்புறுத்தவில்லை.என்னளவில் எனது மரியாதையை செலுத்தினேன். அதுக்கு இவ்வளவு அக்கப்போரா ..... இன்று நீங்கள் ஒரு மார்கமாய்த்தான் நிக்கிறீங்கள்.(ஜுட்  கவனிக்கவும்). .....!   😁

Link to comment
Share on other sites

15 minutes ago, suvy said:

இது நீங்கள் சொன்னது, மேலே நீங்கள் கோட் பண்ணியது போல்  நான் சொல்ல வில்லை. மேலும் நான் யாரையும் வற்புறுத்தவில்லை.என்னளவில் எனது மரியாதையை செலுத்தினேன். அதுக்கு இவ்வளவு அக்கப்போரா ..... இன்று நீங்கள் ஒரு மார்கமாய்த்தான் நிக்கிறீங்கள்.(ஜுட்  கவனிக்கவும்). .....!   😁

மார்க்கம் என்றால் என்ன? (கனடாவுக்கு வழியை காட்டாதீர்கள் - அங்கே தமிழர் இருக்கிறார்களாம், போக பயமாக இருக்கிறது.😀)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, suvy said:

இது நீங்கள் சொன்னது, மேலே நீங்கள் கோட் பண்ணியது போல்  நான் சொல்ல வில்லை. மேலும் நான் யாரையும் வற்புறுத்தவில்லை.என்னளவில் எனது மரியாதையை செலுத்தினேன். அதுக்கு இவ்வளவு அக்கப்போரா ..... இன்று நீங்கள் ஒரு மார்கமாய்த்தான் நிக்கிறீங்கள்.(ஜுட்  கவனிக்கவும்). .....!   

உங்களுக்கு என்று தனித்து சொல்லவில்லை, பொதுவாகத் தான் சொன்னேன்.

பொது இடத்தில் வரும் போது என்பதை கொண்டே எனது கருத்துக்கள் எல்லாம்.

போரோ, மார்க்கமோ இல்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.