Jump to content

கோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை… ஜஸ்மின்சூக்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை… ஜஸ்மின்சூக்கா

December 5, 2019

 

கோத்தாபயவிற்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தற்காலிகமாக வாபஸ்- ஏன்?

Jasmin.jpg?resize=800%2C500

இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்த 11 பேர் தங்கள் வழக்குகளை தற்காலிகமாக விலக்கிக்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி என்ற அடிப்படையில் கோத்தாபய ராஜபக்ச தனக்குள்ள விடுபாட்டுரிமையை வலியுறுத்துவதை தடுப்பதற்காகவே இந்த தந்திரோபாய நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

கோத்தாபய ராஜபக்சவின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் அவரிற்கு எதிராக மீள வழக்கு தாக்கல் செய்வதற்கு பாதிக்கப்பட்டவர்களிற்கு உள்ள உரிமையை பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின்சூக்கா- அவர் தற்போது தப்பலாம் ஆனால் ஒரு நாள் அவரும் அவரிற்கு உதவியவர்களும் பொறுப்புக்கூடும் நிலையேற்படும் என ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். இந்த தாமதம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக நீண்டநாள் காத்திருக்கவேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோத்தாபயவின் பதவிக்காலம் முடிவடையும் ஒரு நாளில் நீதி சாத்தியமாகலாம் என்பது குறித்து நம்பிக்கை கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

வழக்கு தாக்கல் செய்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களிற்கு எதிராக பழிவாங்கல் நடவடிக்கைகள் இடம்பெற்றால் இந்த குற்றங்களிற்கு யார் காரணம் என்பது தெளிவாகிவிடும் என ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகம் உன்னிப்பாக அவதானித்தவண்ணமுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் ஹவுஸ்பீல்ட் எல்எல்பி என்ற அமைப்புடன் இணைந்து வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

ஏப்பிரல் 2019 இல் கலிபோர்னியா நீதிமன்றில் ரோய் சமாதானம் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதன் பின்னர் யூன் மாதத்தில் இரண்டு சிங்களவர்கள் உட்பட பத்துபேர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களிற்கு அமெரிக்க நீதிமன்றில் நீதிவழங்கும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அவ்வேளை அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கோத்தாபய ராஜபக்சவிடம்இது குறித்து ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.

ஈவிரக்கமற்ற சித்திரவதைகளிற்கு கோத்தாபய ராஜபக்சவே காரணம் என்பதற்கான உறுதியான ஆதாரங்களை எங்கள் கட்சிக்காரர்கள் சமர்ப்பித்தனர் என அவர் சர்வதேச சட்டங்களின் கீழ் ஒரு நாள் இதற்கு பதிலளிப்பார் என மனித உரிமை சட்டத்தரணி ஸ்கொட் கில்மோர் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச தற்போது ஜனாதிபதியாகயிருப்பதன் காரணமாக எதிர்காலத்தில் அவரை பொறுப்புகூறுமாறு பாதிக்கப்பட்டவர்கள் கோருவதை தடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/2019/134219/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அவர் சர்வதேச சட்டங்களின் கீழ் ஒரு நாள் இதற்கு பதிலளிப்பார் என மனித உரிமை சட்டத்தரணி ஸ்கொட் கில்மோர் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் பதவி ஏதும் இல்லாமல் இருக்கும் போது தண்டிக்காத  உங்கட சட்டம் அவர் பதவி இறங்கும் வரை காத்திருக்குதாக்கும் தண்டிக்க. உங்கட சட்டம் அவரை தண்டிக்குதோ இல்லையோ அதற்கு முதல் தர்மம் அவரை பழிவாங்கிப்போடும், உங்களுக்கு அந்த சிரமம் இருக்காது.  இனிமேல் இலங்கையில் தேர்தலே இல்லயாம். பதவி இறக்கம்பற்றி கதைக்க இவையே இருப்பினமோ தெரியாது. 

Link to comment
Share on other sites

சித்திரவதைக்கு உள்ளான 11 பேர் கோத்தாவுக்கு எதிரான வழக்கை வாபெஸ் பெற்றனர்

சித்திரவதையால் ஏற்பட்ட சேதங்களுக்காக அமெரிக்காவில் கோட்டபாய
ராஜபக்சவிற்கு எதிராக வழக்குத் தொடுத்த பதினொரு இலங்கையர்கள், திரு ராஜபக்ச அவர்கள் ஜனாதிபதியாக இருந்து தண்டனையில் இருந்து பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதிலிருந்து அவரை தடுக்கும் அதேவேளையில் தமது வழக்கினைப் பின்வாங்கிக் கொள்ளும் தந்திரோயாபமாக முடிவினை மேற்கொண்டுள்ளார்கள்.

இந்த நகர்வானது அவர் பதவியை விட்டுச் சென்ற பின்னர் வழக்கினை மீளத்தாக்கல் செய்யக்கூடியதாக பாதிக்கப்பட்டவர்களின் உரிமையைப் பாதுகாக்கும்.

இவ்வாறு சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று (05) வெளியிட்ட விசேட அறிக்கையில் இதனை தெரிவித்தனர்.

அதில் மேலும்,

“வாழ்நாள் முழுவதும் கோத்தபாய ஜனாதிபதியாக இருக்கமாட்டார் அத்துடன் அவர் இப்போது வலையில் தபபியிருந்தாலும் ஒரு நாளைக்கு அவரும் அவருக்கு உதவியவர்கள் மற்றும் ஆதரவளித்தவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படுவார்கள்” என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு பாதிக்கப்பட்டவர்கள் நீணட காலத்திற்கு கூட காத்திருக்க வேண்டிவரும் என்பதை இந்த தாமதம் குறிக்கின்றது. “ஒரு நாளைக்கு கோததபாயவின் பதவிக்காலம் முடிவுக்குவரும் போது நீதி சாத்தியமாகும் என்ற உண்மையினால் நாங்கள்
பலமடைந்துள்ளளதாக உணர்கின்றோம் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.”

ITJP சர்வதேச சட்ட நிறுவனமான கோஸ்பெல்ட் LLP உடன் இணைந்து ஆரம்பத்தில் சித்திரவதையில் இருந்து
உயிர்தப்பிய றோய் சமதானம்1 என்பவரின் சார்பாக ஏப்பிரல் 2019 இல் மத்திய மாவட்டத்திற்கான அமரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் சிவில் நட்டஈட்டு வழக்கினை தயார்செய்தார்கள். 26 யூன் 2019 இல் இந்த முறைப்பாடனது பாதுகாப்பிற்காக வேணடுமென்றே பெயர்கள் வெளியிடப்படாமல் மேலும் எட்டு தமிழர்கள், இரண்டு சிங்களவர்கள் என பத்து வழக்குத்தொடுநர்கள் சேர்க்கப்பட்டு பின்னர் விரிவாக்கம் செய்பப்பட்டது.

நீதிமன்ற ஆவணங்களில், திரு ராஜபக்சவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பொலிஸ் நிலையங்கள் மற்றும் இராணுவ முகாம்களில் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவித்த பயங்கரமான மீறல்களை விபரித்துள்ளார்கள். ஆண்கள் மற்றும் பெண்கள் சூடாக்கப்பட்ட இரும்புக்கம்பியால் சூடு வைக்கப்பட்டார்கள், கேபிள்களால் அடிக்கப்பட்டார்கள், பெற்றோலில் தோய்க்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தலைகளிற்கு மேலாக போடப்பட்டு மூச்சுத்திறணச் செய்யப்பட்டார்கள். அத்துடன் அவர்களில் ஆறு பேர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். அத்துடன் பாலியல் துன்புறுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டார்கள்.

ஒரு தமிழ் வழக்குத்தொடுநர் 2009 இல் சிவில் யுத்தம் முடிவடைந்த பின்னர் மூன்று வருடங்களாக பாலியல் அடிமையாக நடத்தப்பட்டதாக விபரிக்கின்றார். அவரும் வேறு இளம் தமிழ்ப் பெண்களும் இராணுவ முகாம்களில் வைக்கப்பட்டார்கள் அங்கு இரவு நேரங்களில் கடமையில் இல்லாத இராணுவத்தினர் எந்தப் பெண்ணை வெளியில் கொண்டு சென்று பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவது என தெரிவு செய்வார்கள். அவர்கள் கற்பமாவதைத் தடுப்பதற்காக குடும்பக்கட்டுபப்பாடும் மேற்கொள்ளப்பட்டது. – என்றுள்ளது.

Link to comment
Share on other sites

"கோத்தாபய ராஜபக்ச வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின்சூக்கா- அவர் தற்போது தப்பலாம் ஆனால் ஒரு நாள் அவரும் அவரிற்கு உதவியவர்களும் பொறுப்புக்கூடும் நிலையேற்படும் என ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்"

இதையே இந்த  சீமாட்டி சொல்லாமல் ஒரு சீமான் சொல்லியிருந்தால் ......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.