பெருமாள்

ஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை

Recommended Posts

8 minutes ago, ampanai said:

"ஹைதராபாத் நகரில் பெண் கால்நடைமருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். "

குற்றம் நிரூபிக்கப்படாதவரையில், அவர்கள் நிரபராதிகளே.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் டி.என்.ஏக்கள்  ஒத்துப்போகிறது என காவல்துறை அறிக்கை சொல்வதாக செய்தி வந்துள்ளது.

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, ராசவன்னியன் said:

குற்றம் சாட்டப்பட்டவர்களின் டி.என்.ஏக்கள்  ஒத்துப்போகிறது என காவல்துறை அறிக்கை சொல்வதாக செய்தி வந்துள்ளது.

சொல்வதை கேட்பதை பார்ப்பதை வைத்து நியாயம் வழங்கலாம் என்றால் நீதிமன்றங்கள் எதற்கு ?

Share this post

Link to post
Share on other sites

மரணம் என்பது மிகப் பெரும் விடுதலை. வலியில் இருந்து, நோயிலிருந்து, முதுமையிலிருந்து மட்டுமல்ல செய்த பெரும் குற்றங்களிலிருந்தும் மரணம் கொடுப்பது விடுதலையை.

என் கவுண்டரின் மூலம் சுட்டுக் கொல்லப்பட்ட இந்த நான்கு அயோக்கியர்களும் மிக இலகுவாக தம் குற்றங்களிருந்து பெரும் விடுதலையை ஒரு சில வினாடிகளுக்குள், வலியை உணராமலே பெற்றுவிட்டனர்.

ஆகக் குறைந்தது இரண்டு வருடங்களாவது கடூழிய சிறையில் அடைக்கப்பட்டு 'சிறை நீதி' யை ஏனைய குற்றவாளிகள் மூலம் கொடுக்கப்பட்டு பின் மரண தண்டனை கொடுக்கப்பட்டு இருந்தால் மிகவும் சிறப்பாக இருந்து இருக்கும்.

நீதித்துறையிலும், அரச இயந்திரத்திலும், சமூகத்திலும் ஆணாதிக்கமும் வர்க்க வேறுபாடுகளும் நிரம்பிய இந்தியா சரியான சட்ட நடவடிக்கைகளின் மூலமாக நீதியை நிலை நாட்ட முடியாத நாடு என மீண்டும் நிரூபித்துள்ளது. குற்றத்தின் மூலம் இன்னொரு குற்றம் செய்தவர்களை தண்டித்து வெகுசன மனநிலையை தணித்து இருக்கு. நாளைக்கு இதே பாணியை தன் அரசு மீது விமர்சனம் வைப்பவர்கள் மீதும் அரச எதிர்ப்பாளர்களின் மீதும் கூட கைகொள்வதற்கான ஒரு புறச்சூழலை மீண்டும் உருவாக்கி இருக்கு

பாலியல் வல்லுறவுக்குள்ளாகி பலியான அந்த பெண் மீண்டும் மீண்டும் பலியிடப்பட்டுக் கொண்டு இருக்கின்றாள்.

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, ampanai said:

சொல்வதை கேட்பதை பார்ப்பதை வைத்து நியாயம் வழங்கலாம் என்றால் நீதிமன்றங்கள் எதற்கு ?

அது சரி..

இன்னும் ஒரு 10 அல்லது 15 வருடம் சட்டப்படி காத்திருக்கலாம்.

நிர்பயா வழக்கு இன்னமும் 7 வருடமாய் நடந்து கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட்வர்களின் மனநிலையை ஒருகணம் யோசிக்க வேண்டும்.

Delayed justice is denied justice.

Edited by ராசவன்னியன்
 • Like 1

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, ராசவன்னியன் said:

அது சரி..

இன்னும் ஒரு 10 அல்லது 15 வருடம் சட்டப்படி காத்திருக்கலாம்.

நிரபராதியான ஒருவர் கூட தண்டிக்கப்படக்கூடாது என்பதால் தான் எம்மால் இதை கூட எழுதக்கூடியதாக உள்ளது. இல்லை என்றால் நாம் சீனாவிற்கு குடிபெயரலாம்.

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, nunavilan said:

லண்டன் சம்பவம்,  நேற்றைய அமெரிக்க சம்பவம், ஆந்திராவின் சம்பவம் என்பன  நீதிமன்றம், வழக்கு என இழுத்தடிக்காமல் இலகுவாக போட்டு தள்ளி விடுகிறார்கள்.

நுணா, லண்டன் சம்பவன் இவ்வாறான ஒன்றல்ல. லண்டனில் சாதாரணப் பொலிசார் துப்பாக்கிகளை வைத்திருப்பது இல்லை. இந்த வாரம் இடம்பெற்ற சம்பவத்தில் விசேட பொலிசார் வரவழைக்கப்பட்டு பொதுமக்களால் பிடித்து வைத்திருக்கப்பட்ட குற்றவாளியை கைது செய்ய முனையும் போது அவரது உடலில் தற்கொலை அங்கியை கண்ட பின் தான் சுட்டு இருக்கின்றார்கள். ஆள் இறந்த பின் தான் அவர் அணிந்து இருந்த தற்கொலை அங்கி போலியானது என தெரிந்தது. அமெரிக்கா எப்பவும் இப்படித்தா - ஆனால் குற்றவாளிகளாக கருதப்படுகின்றவர்கள் கருப்பர் என்றால் மாத்திரமே (ஹைதரபாத் சம்பவத்தில் ஏழைகள் என்பதால் போன்றது)

Share this post

Link to post
Share on other sites

என்கவுண்ட்டர்

என்கவுண்ட்டரில் நான்கு பேர்களும் கொல்லப்பட்டது குறித்து பலருக்கும் சந்தோஷம். காலையிலிருந்தே சமூக ஊடகங்களில் இதுதான் இன்றைய கொண்டாட்டமாகியிருக்கிறது. பிரியங்கா ரெட்டி கொல்லப்பட்டது பற்றி விலாவாரியாக செய்தி வந்த தினத்தில் ஏதோவொரு இனம்புரியாத பயம் பற்றிக் கொண்டது. இரவு நேரத்தில், ஆளரவமற்ற பகுதியில்- ஆணோ பெண்ணோ அந்நியர்களின் பிடியில் சிக்கிக் கொள்ளும் கணங்கள் எவ்வளவு கொடுமையானவை? ‘இவர்களின் பார்வையே சரியில்லை’ என்று தனது தங்கையிடம் சொன்ன போதே அந்தப் பெண்ணுக்கு சிக்கிக் கொண்டோம் என்கிற நடுக்கம் வந்திருக்கும். இவர்களிடமிருந்து எப்படித் தப்பிப்பது, எங்கே ஓடுவது என்று பதறியிருப்பார். ஒரு கட்டத்தில் தப்பிக்கவும் முயற்சித்திருப்பார். நான்கு முரட்டு ஆண்களிடம் இரவு நேரத்தில் ஓர் இளம்பெண் எப்படித் தப்பித்திருக்க முடியும்? அடித்து இழுத்துச் சென்றிருப்பார்கள். எல்லாவிதமான வன்முறையையும் பிரயோகித்திருப்பார்கள். அந்தச் சூழலை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
 
குற்றத்தைச் செய்தவர்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும்; எரித்துக் கொன்றுவிட வேண்டும் என்கிற வேகமும் கோபமும் மிக இயல்பானது. எனக்கும் அப்படித்தான் இருந்தது. இன்று காலையில் அந்தச் செய்தியைப் பார்த்த போது கொஞ்சம் ஆசுவாசமாகவும் இருந்தது. அருமை என்றே நினைத்தேன். ஆனால் ஒரு சந்தேகம் மட்டும் அரிக்க ஆரம்பித்துவிட்டது. அவர்கள் நான்கு பேர்கள்தான் உண்மையான குற்றவாளிகளா? இனிமேல் ஒவ்வொரு குற்றத்திலும் காவல்துறையே தொடர்ச்சியாக முடிவெடுத்து தீர்ப்புகளை எழுதினால் என்ன ஆகும்? அந்த யோசனைதான்.
 
அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் செய்யும் குற்றச்செயல்கள் பற்றி- அது எவ்வளவு பெரிய குற்றச் செயல்கள் என்றாலும் கூட- ஊடகங்கள் அதைப் பற்றி விரிவாக அலசுவதில்லை. விவாதங்கள் உருவாக்கப்படுவதில்லை. ‘நமக்கெதுக்கு வம்பு?’ என்கிற மனநிலையில் மக்களும் அலட்டிக் கொள்வதில்லை. கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் மட்டும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமை, அந்தச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கைகள், அளிக்கப்பட்ட தண்டனைகள் குறித்தெல்லாம் யோசித்துப் பார்த்தால் எந்த தண்டனையுமே நினைவுக்கு வருவதில்லை. அதனால்தான் ஹைதரபாத்தில் நிகழ்ந்தது போன்ற ஊடக கவனம் பெற்ற சம்பவங்களில் எந்த வெளிப்படையான விசாரணையுமில்லாமல் நான்கு பேரைச் சுட்டுக் கொன்றுவிட்டு விசாரணை முடிக்கப்படுவது சரியான அணுகுமுறையா என்றுதான் மனம் யோசிக்கிறது.
 
இந்த நால்வரும்தான் குற்றவாளிகள் என்பது 100% உண்மையாக இருந்தால் சுட்டுக் கொன்றதில் தவறேயில்லை. சம்பவம் நடந்த இடத்தில் உயிரோடு எரித்துக் கொன்றிருந்தாலும் தகும். ஆனால் அதற்காக சட்டத்தை மாற்றி, அவசர வழக்காகக் கருதி, எவ்வளவு சீக்கிரம் விசாரிக்க முடியுமோ விசாரித்து தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அதற்கான வழிமுறைகளை, சட்ட சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்ள வேண்டும். அதற்கான வலியுறுத்தல்களைச் செய்யலாம்.
 
என்ன சந்தேகமெனில், ஒருவேளை இத்தகைய குற்றச் செயலை அரசியல் அல்லது ஆளும் வர்க்கத்தில் செல்வாக்குப் பெற்றவர்கள் செய்திருந்து, தடுக்கமுடியாத விதத்தில் அதன் மீது ஊடக வெளிச்சமும் விழுந்த பிறகு ஏதேனும் நான்கு பேர்களைக் கணக்குக் காட்டுவதற்காக சுட்டிருந்தால் அதை எப்படி சரி என்று ஏற்றுக் கொள்வது? அப்படியெல்லாம் செய்யமாட்டார்கள் என்று அரசியல்வாதிகளையும், காவல்துறையையும் முழுமையாக நம்புகிறீர்களா? கேட்கவே நாதியில்லாத லட்சக்கணக்கான மக்கள் உலவும் நாடு இது. யாரை வேண்டுமானாலும் இழுத்துச் சென்று ‘சம்பவம்’ செய்துவிட்டு பொதுமக்களின் அழுத்தத்தை போக்கிவிட்டு கைதட்டலும் வாங்கிக் கொள்வதற்கான எல்லாவிதமான சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
 
இன்று காலையில் சுட்டுக் கொல்லப்பட்ட நான்கு பேர்களும் தமது நிலைப்பாட்டை வெளிப்படையாக முன்வைக்க எந்தவிதமான சூழலும் உருவாக்கித் தரப்படவில்லை. ‘அவனுகளுக்கு என்ன நிலைப்பாடு? போட்டுத் தள்ளுறது சரிதான்’ என்றுதான் நம்மில் பலரும் நினைப்போம். அது சரிதான். ஆனால் அந்த நால்வரில் ஒருவன் ஏதோ காரணத்துக்காக சிக்க வைக்கப்பட்டிருந்தாலும் கூட பரிதாபமில்லையா? அப்படி சிக்க வைக்க வாய்ப்பேயில்லை என்று முழுமையாக நம்ப முடியுமா?
 
குற்றச் செயல் நிகழ்ந்த இடத்திலேயே நான்கு பேரையும் சுட்டுக் கொன்றது நிச்சயமாக பொதுவெளியில் ஒரு பயத்தை உருவாக்கும். ஆனால் இந்தியா மாதிரியான ஜனநெரிசல் மிகுந்த தேசத்தில் இத்தகைய பயங்கள் நிலையானவை அல்ல. அவை தற்காலிகமானவை மட்டுமே. நிர்பயா சம்பவம் நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டது. ஆனால் எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது? ‘செஞ்சுட்டு தப்பிச்சுக்கலாம்’ என்கிற தைரியத்தில்தான் பலரும் குற்றத்தைச் செய்கிறார்கள். ஹைதரபாத் சம்பவமும் கூட அப்படித்தான் கரைந்து போகும். இத்தகைய குற்றச் செயல்கள் ஒவ்வொன்றுக்கும் தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும். யார் செய்தாலும் சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாக இருக்கும் என்கிற பயம்தான் அவசியமே தவிர, நூறு சம்பவங்களில் ஒன்றில் மட்டும் நான்கு பேரைச் சுட்டுக் கொல்வது என்பது கடலில் கரைத்த பெருங்காயம் மாதிரியான விளைவையே உண்டாக்கும்.
 
அரசியல் செல்வாக்கு மிக்கவர்களுக்கு ஒரு மாதிரியான தண்டனை, விதவிதமான தப்பித்தல்கள், ஊடகங்களின் மெளனம், பேரமைதி கொண்ட மக்கள் என்றிருந்துவிட்டு ஹைதராபாத் சம்பவத்துக்கு மிக அதிகப்படியான சந்தோஷத்தையும் கொண்டாட்டத்தையும் காட்டுவது கூட தவறான முன்னுதாரணமாகத்தான் அமையும். திடீரென ஊடகக் கவனம் பெற்ற சம்பவங்களில் மக்களிடமிருந்து அழுத்தம் வரும் போது அதிலிருந்து தப்பிக்க அரசும் காவல்துறையும் யாரை வேண்டுமானாலும் பொதுவெளியின் கண்களில் காட்டிவிட்டு போட்டுத் தள்ளுவதற்கான சாத்தியங்களை சமூகம் உருவாக்கித் தருகிறது என்று கூட புரிந்து கொள்ளலாம். 
 
ஹைதராபாத் என்கவுண்ட்டரை எதிர்க்கிறேனா என்றால் இல்லை என்றே சொல்வேன். ஆனால் இது வெறும் கண்கட்டி வித்தையாக இருந்துவிடக் கூடாது; பொது சமூகத்தை ஏமாற்றும், அதன் கோபத்தை வடிகட்டுவதற்காக இத்தகைய சம்பவத்தைச் செய்துவிட்டு மறந்துவிடக் கூடாது என்றே விரும்புகிறேன். பரவலாக பயத்தை உண்டாக்கி, மனநிலை மாற்றத்தை நோக்கி நகர்த்தி, குற்றச் செயல்களைக் குறைப்பதற்கான வாய்ப்புகளையும், சட்டத்திருத்தங்களையும், நடைமுறை மாற்றங்களையும் உருவாக்க வேண்டும். புகார் அளிக்க வருபவரை அலட்சியப்படுத்தியதும் இதே சம்பவத்தில்தான் நடந்தது. ‘ஹைலைட்’ செய்யப்பட வேண்டியது அதுவும்தான். அதில் தொடங்கி குற்ற விசாரணைகளில், தண்டனை முறைகளில் மாற்றங்களைச் செய்யாவிட்டால் இத்தகைய சம்பவங்களில் ஒரு கணம் விசிலடித்து குதூகலிப்பது தவிர மற்ற அனைத்தும் வழமை போலவே அனைத்தும் தொடரவே வாய்ப்புகள் அதிகம். 

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, குமாரசாமி said:

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களை வன்புணர்வு செய்பவர்களை என்கவுண்ட்டர் செய்வோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

”மரணமே தண்டனை என்றால் தான் ஒழுக்கம் வரும்; நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நடக்கும்” - சீமான்

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது நினைவு நாளையொட்டி அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் தெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொடூரமான முறையில் எரித்து கொன்றவர்களை என்கவுன்டர் செய்ததை வரவேற்பதாக தெரிவித்தார்

மேலும், பெண்களை போகப் பொருளாக நினைத்து வன்புணர்வு செய்பவர்களுக்கு மரணத்தை தவிர வேறு தண்டனை கிடையாது என்று கூறிய அவர்,

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளை குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்தது தவறு என்று குறிப்பிட்டார்

https://tamil.news18.com/news/tamil-nadu/seeman-about-hyderabad-encounter-san-232447.html

நான் ரெடி,  நீங்க ரெடியா  ? 

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, விசுகு said:

தண்டனை வரவேற்கத்தக்கது

ஆனால்  அதை  ஒரு  அரசு  செய்திருக்கக்கூடாது

நாளை  நீதிமன்றங்களில்  இதை  வேறு  பலரும் உதாணமாக்கலாம்...

போடணும்  என்று முடிவு  எடுத்துவிட்டால் அப்பனாலேயே  போடமுடியும்

அரசு செய்தால் மீள் விசாரணை இல்லையே பலரும் ஏன் உதாரணமாக்கணும் தவறு செய்தவனுக்கு தண்டனை பொலிஸ் கொடுத்துள்ளது அவ்வலவுதான் கேஸ் முடிஞ்சுது 

அப்பன் போட்டால் அது கேஸாகும் அரசு போட்டால் அது என்கவுண்டர் ஆகும் 

 • Like 2
 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அரசு செய்தால் மீள் விசாரணை இல்லையே பலரும் ஏன் உதாரணமாக்கணும் தவறு செய்தவனுக்கு தண்டனை பொலிஸ் கொடுத்துள்ளது அவ்வலவுதான் கேஸ் முடிஞ்சுது 

அப்பன் போட்டால் அது கேஸாகும் அரசு போட்டால் அது என்கவுண்டர் ஆகும் 

மேலிடத்து உத்தரவும் 

உத்தரவாதமும் இல்லாமல்  இப்படி  செய்யமுடியாது  ராசா

அப்பன்  செய்தாலும்  மேலிடத்தவரால்  காப்பாற்ற  முடியும்

Share this post

Link to post
Share on other sites
10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அப்பன் போட்டால் அது கேஸாகும் அரசு போட்டால் அது என்கவுண்டர் ஆகும் 

தம்பீ

இந்த ஒரு வசனத்துக்காகவே சினிமாக்காரங்கள் உங்களை தூக்கப் போறாங்கள்.

Share this post

Link to post
Share on other sites

முகநூல் பதிவு  ஒன்று :

ஒரு குழந்தை பிறந்தவுடன் அதன் ரோசாப்பூக் கைகளை எடுத்து நமது கைகளுள் பொதிந்துகொள்கிறோம். நமது உடலிலிருந்து பிரிந்த இன்னொரு உயிராக அது வளர்கிறது. அது நம்மை நோக்கி ஓடிவந்து பட்டுப் பந்தென மோதும்போது உடல் சிலிர்க்க அள்ளி இறுக்கிக்கொள்கிறோம். அதன் தலைமுடியுள் முகத்தைப் புதைத்துக் கொஞ்சும்போது அன்பின் மிகுதியால் விம்முகிறது நெஞ்சு.

அதே குழந்தை சிதைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொலையுண்டு கிடப்பதைக் காணும்போதில் ஏறத்தாழ நாம் இறந்துவிடுகிறோம். அதன்பிறகு வாழ்வெனச் சொல்ல ஒன்றுமேயில்லை.

இங்கு சட்டம் இயங்கும் விதம் எத்தகையதென்பதை அறிவோம். அவ்வளவு பாரபட்சமானது; குருட்டுத்தனமானது; குரூரமானது… எல்லாந்தான். நீங்கள் சொல்வது சரி… இந்த என்கவுண்டர் படுகொலைகளை நாம் ஆதரித்தோமானால், எதையும் செய்யத் துணியும் காவற்றுறை என்கிறீர்கள். அதற்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்கிவிடுவதாகும் என்கிறீர்கள். மேலும், சட்டமும் நியாயமும் இப்போது மிக ஒழுங்காக இருக்கிறது பாருங்கள்!!! உலகத்தில் இங்கு போலில்லை எங்கும் நீதி!

பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு, தன் பிள்ளை எப்படியெல்லாம் துடிதுடித்து இறந்ததோ என்றெண்ணி எண்ணி மருகும் பெற்றோருக்கு, சகோதரர்களுக்கு உங்களால் பேசப்படும் நியாயங்கள் புரியாது.
பாதிக்கப்பட்டவர்கள் ஓர்மம் மிக்கவர்களெனில், இந்தப் பாரபட்சமான நீதியால் விடுவிக்கப்படுபவர்கள் என்றோ ஒருநாள் சம்பந்தப்பட்டவர்களால் தெருக்களில் அநாதைகளாகக் கொல்லப்படுவார்கள் அல்லது, காணாப் பிணங்களாக்கப்படுவார்கள் என்பது உறுதி.

சட்டம் எப்போதாவதுதான் கடமையைச் செய்கிறது. செய்யட்டும்.

ஆ ஊவென்று யாரும் இங்கே நியாயம் பேச வரவேண்டாம். நான் பதில் சொல்லப்போவதுமில்லை. இந்த மாதிரி விசயங்களில் அசட்டுப்பிசட்டு ஜனநாயகமும் மனிதாபிமானமும் செல்லுபடியாகாது.

என் வீட்டில் இப்படியொன்று நடந்தால் காவற்றுறை செய்து முடிக்கும்வரை நான் காத்திருக்கமாட்டேன்.

Thamizhnathy Nathy

https://www.facebook.com/thamizhnathy?__tn__=%2CdC-RH-R-R&eid=ARAE4qCJEtjR315PkZzSGB0Uo4eXDVpJBuIciN40xf7Ugrhfn48vWUYPkarMsCWAEMbcQXlM_Af7Dz51&hc_ref=ARRshr7ag5JAp0rZTMHdPiFdYHgEqi7RXfQYMZKeepbZFXR-9MXWDzSN1uCdeVn0gYU&fref=nf

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, விசுகு said:

மேலிடத்து உத்தரவும் 

உத்தரவாதமும் இல்லாமல்  இப்படி  செய்யமுடியாது  ராசா

அப்பன்  செய்தாலும்  மேலிடத்தவரால்  காப்பாற்ற  முடியும்

மக்கள் ஆதரவு யார் பக்கம் இருக்குதோ அப்படி இருக்கும் பட்சத்தில் மேலிடம் அடிபணிய வேண்டும் என்ன அதிகாரிகளுக்கு எச்சரிக்கும் அதற்கிடையில் அடுத்த பிரச்சினை வந்துவிடும் இதை மறந்து போவார்கள் 

Share this post

Link to post
Share on other sites

ஐயா நீதிமான்களே,

இதையும் பாருங்கள் 👇

50 வருடங்களுக்கு முன் பொய் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரை அண்மையில் குற்றவாளிகள் இல்லை என தீர்ப்பளித்துள்ளது பிரித்தானிய நீதிமன்றம்.

https://www.dailymail.co.uk/news/article-7759287/Wrongful-convictions-Oval-Four-quashed-nearly-50-years-on.html 

Rule of law என்பதுவே சன்நாயகத்தின் அடிப்படை. நாம் சுதந்திரமாக வாழும் வெளிநாட்டு பொலீசுகள், இலங்கை இந்திய பொலிசு போல இல்லை என நிம்மதி அடைவோமே? ஏன் தெரியுமா ? ஏனென்றால் இந்த நாட்டு பொலிசு சட்டத்தின் ஆளுகைக்கு (rule of law) மதிப்பளிக்கிறது.

இன்றைக்கு இந்த நாலு பேர், நாளைக்கு தெருவில் போனவன் வெறியில் சொன்ன குற்றச்சாடை காட்டி இன்னொருவன்.

விசாரணை இல்லாத தண்டனை என்பது, இன்னுமொரு குற்றமே ஒழிய ஒருபோதும் ஒரு குற்றத்துக்கு தண்டனை ஆகாது.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, ஈழப்பிரியன் said:

தம்பீ

இந்த ஒரு வசனத்துக்காகவே சினிமாக்காரங்கள் உங்களை தூக்கப் போறாங்கள்.

நம்மளை தூக்கி என்ன செய்வது அண்ண ரைமிங்கா இருக்குமே அதான் சொன்னது 

Share this post

Link to post
Share on other sites
7 minutes ago, விசுகு said:

முகநூல் பதிவு  ஒன்று :

ஒரு குழந்தை பிறந்தவுடன் அதன் ரோசாப்பூக் கைகளை எடுத்து நமது கைகளுள் பொதிந்துகொள்கிறோம். நமது உடலிலிருந்து பிரிந்த இன்னொரு உயிராக அது வளர்கிறது. அது நம்மை நோக்கி ஓடிவந்து பட்டுப் பந்தென மோதும்போது உடல் சிலிர்க்க அள்ளி இறுக்கிக்கொள்கிறோம். அதன் தலைமுடியுள் முகத்தைப் புதைத்துக் கொஞ்சும்போது அன்பின் மிகுதியால் விம்முகிறது நெஞ்சு.

அதே குழந்தை சிதைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொலையுண்டு கிடப்பதைக் காணும்போதில் ஏறத்தாழ நாம் இறந்துவிடுகிறோம். அதன்பிறகு வாழ்வெனச் சொல்ல ஒன்றுமேயில்லை.

இங்கு சட்டம் இயங்கும் விதம் எத்தகையதென்பதை அறிவோம். அவ்வளவு பாரபட்சமானது; குருட்டுத்தனமானது; குரூரமானது… எல்லாந்தான். நீங்கள் சொல்வது சரி… இந்த என்கவுண்டர் படுகொலைகளை நாம் ஆதரித்தோமானால், எதையும் செய்யத் துணியும் காவற்றுறை என்கிறீர்கள். அதற்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்கிவிடுவதாகும் என்கிறீர்கள். மேலும், சட்டமும் நியாயமும் இப்போது மிக ஒழுங்காக இருக்கிறது பாருங்கள்!!! உலகத்தில் இங்கு போலில்லை எங்கும் நீதி!

பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு, தன் பிள்ளை எப்படியெல்லாம் துடிதுடித்து இறந்ததோ என்றெண்ணி எண்ணி மருகும் பெற்றோருக்கு, சகோதரர்களுக்கு உங்களால் பேசப்படும் நியாயங்கள் புரியாது.
பாதிக்கப்பட்டவர்கள் ஓர்மம் மிக்கவர்களெனில், இந்தப் பாரபட்சமான நீதியால் விடுவிக்கப்படுபவர்கள் என்றோ ஒருநாள் சம்பந்தப்பட்டவர்களால் தெருக்களில் அநாதைகளாகக் கொல்லப்படுவார்கள் அல்லது, காணாப் பிணங்களாக்கப்படுவார்கள் என்பது உறுதி.

சட்டம் எப்போதாவதுதான் கடமையைச் செய்கிறது. செய்யட்டும்.

ஆ ஊவென்று யாரும் இங்கே நியாயம் பேச வரவேண்டாம். நான் பதில் சொல்லப்போவதுமில்லை. இந்த மாதிரி விசயங்களில் அசட்டுப்பிசட்டு ஜனநாயகமும் மனிதாபிமானமும் செல்லுபடியாகாது.

என் வீட்டில் இப்படியொன்று நடந்தால் காவற்றுறை செய்து முடிக்கும்வரை நான் காத்திருக்கமாட்டேன்.

Thamizhnathy Nathy

https://www.facebook.com/thamizhnathy?__tn__=%2CdC-RH-R-R&eid=ARAE4qCJEtjR315PkZzSGB0Uo4eXDVpJBuIciN40xf7Ugrhfn48vWUYPkarMsCWAEMbcQXlM_Af7Dz51&hc_ref=ARRshr7ag5JAp0rZTMHdPiFdYHgEqi7RXfQYMZKeepbZFXR-9MXWDzSN1uCdeVn0gYU&fref=nf

நீதி தேவதை ஏன் கண்களை கட்டி கொண்டுளது? நீதிக்கு பாரபட்சம் இல்லை. 

நீதி, நீதியே ஒழிய பழிவாங்கும் படலம் அல்ல.

பாதிக்கபட்ட குடும்பத்தின் மனநிலை எப்படி இருக்கும்? நிச்சயமாக அவர்களை துன்புறுத்தி கொல்ல வேண்டும் என்றே இருக்கும்.

ஆனால் நீதி பழி வாங்கும் உணர்சிக்கு மேலானது.

நீதி - தீர விசாரித்து, குற்றம் நிரூபிக்கப் பட்டால்- சட்டம் வரையறுத்த தண்டனையை வழங்கும்.

நீதி பரிபாலனத்தில் ஓட்டையா? அதை சரி செய்யுங்கள். நீதியை கையில் எடுக்காதீர்கள்.

Share this post

Link to post
Share on other sites

முகநூல் பதிவு  இன்னொன்று :

•என்கவுன்டர் கொலைகள் தவறானவை
அதை ஒருபோதும் ஆதரிக்கக்கூடாது

மக்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கும்போது அதனைப் பயன்படுத்தி என்கவுன்டர் கொலைகளை பொலிஸ் செய்துள்ளது.

பொலிஸ் தன் கையில் தண்டனை வழங்கும் அதிகாரத்தை எடுப்பது தவறாகும். இது மோசமான விளைவுகளையே எதிர் காலத்தில் ஏற்படுத்தும்.

ஏனெனில்,

(1) இந்த என்கவுன்டர் கொலைகளில் ஏழை மக்களே பலியாவர். பணக்காரர்கள் அல்லது அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மீது என்கவுன்டர் நடத்தப்படாது.

(2) முக்கியமாக இத் தண்டனைகள் மூலம் குற்றங்களை ஒழித்துவிட முடியாது. மரண தண்டனை வழங்கும் அரேபிய நாடுகளைவிட குறைவான தண்டனைகள் வழங்கும் ஜரோப்பிய நாடுகளில் பாலியல் குற்றங்கள் குறைவாகவே இருப்பதை நாம் அவதானிக்க வேண்டும்.

(3) ஏற்கனவே இந்த என்கவுன்டர் போலி மோதல்கள் மூலம் மாவோயிஸட் போராளிகள் மற்றும் தமிழ்தேசிய போராளிகள் கொல்லப்படுகின்றனர். இந்நிலையில் என்கவுன்டர் கொலைகளை மக்கள் ஆதரித்தால் இனி அதிக அளவில் போராளிகள் கொல்லப்படும் அபாயம் உருவாகும்.

எனவே மக்கள் உணர்வுபூர்வமாக சிந்தித்து இந்த என்கவுன்டர் கொலைகளை கண்டிக்க வேண்டும்.

Balan Chandran

https://www.facebook.com/balan.tholar?__tn__=%2CdCH-R-R&eid=ARAXFwbIXoDd6hX2G78N4YQHLh1s_qw3tUfYASre0kzblTC4ODUCKTwgOCkw6WDdabCI71B_oDGf99RO&hc_ref=ARQ9CbDlO-ZDbdmwKtvqUOJMD0a7DTCLzst6f4PLR_vqyagdiKj2RKOlkOO_UkwcETg&fref=nf

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, goshan_che said:

ஐயா நீதிமான்களே,

இதையும் பாருங்கள் 👇

50 வருடங்களுக்கு முன் பொய் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரை அண்மையில் குற்றவாளிகள் இல்லை என தீர்ப்பளித்துள்ளது பிரித்தானிய நீதிமன்றம்.

https://www.dailymail.co.uk/news/article-7759287/Wrongful-convictions-Oval-Four-quashed-nearly-50-years-on.html 

Rule of law என்பதுவே சன்நாயகத்தின் அடிப்படை. நாம் சுதந்திரமாக வாழும் வெளிநாட்டு பொலீசுகள், இலங்கை இந்திய பொலிசு போல இல்லை என நிம்மதி அடைவோமே? ஏன் தெரியுமா ? ஏனென்றால் இந்த நாட்டு பொலிசு சட்டத்தின் ஆளுகைக்கு (rule of law) மதிப்பளிக்கிறது.

இன்றைக்கு இந்த நாலு பேர், நாளைக்கு தெருவில் போனவன் வெறியில் சொன்ன குற்றச்சாடை காட்டி இன்னொருவன்.

விசாரணை இல்லாத தண்டனை என்பது, இன்னுமொரு குற்றமே ஒழிய ஒருபோதும் ஒரு குற்றத்துக்கு தண்டனை ஆகாது.

உண்மை👍
இதில் வேடிக்கை என்வென்றால் இங்கே இந்திய பொலீசின் என் கவுண்டர் கொலையை ஆதரிக்கும் தமிழர்கள் தனிக்காட்டு ராஜாவை தவிர வெளிநாட்டு சனநாயக நாடுகளில் சுதந்திரமாக வாழ்பவர்கள்😪

Share this post

Link to post
Share on other sites
32 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உண்மை👍
இதில் வேடிக்கை என்வென்றால் இங்கே இந்திய பொலீசின் என் கவுண்டர் கொலையை ஆதரிக்கும் தமிழர்கள் தனிக்காட்டு ராஜாவை தவிர வெளிநாட்டு சனநாயக நாடுகளில் சுதந்திரமாக வாழ்பவர்கள்😪

முதலில் நாங்களும்  மனிதர்கள்  தானப்பு.....??

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, விசுகு said:

முதலில் நாங்களும்  மனிதர்கள்  தானப்பு.....??

மனிதர்களாக இருந்து கொண்டு இந்திய பொலீசின் என்கவுண்டரை கொண்டாடுவது தான் கவலையானது.

Share this post

Link to post
Share on other sites

இலங்கை இந்தியா போன்ற வளர்ச்சியடைந்துவரும் நாடுகளுக்கு 100% ஜனநாயக பண்புகள் ஒருபோதும் சரிப்பட்டுவராது.
இங்கே ஜனநாயகத்துடன் சற்றுச் சர்வாதிகாரம் கலந்த பண்புகளே நாட்டை நிருவகிக்க பொருத்தமானவை.
இங்கே பயத்தின் மூலமாகவே சிலவற்றை கட்டுப்படுத்த முடியும்.
இலங்கையில் புலிகள் இருந்த காலத்தில் தமிழர் பகுதிகளில் குற்றச் செயல்கள் குறைவாக இருந்தமைக்கும் அதுதான் காரணம்.
போட்டுத்தள்ளிவிடுவார்கள் அல்லது பச்சைமட்டையால் கட்டிவைத்து அடிப்பார்கள் என்ற பயம்தான் அன்று தமிழ்ச் சமூகத்தைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தது.
இந்தியாவின் தெலுங்கானா மாநில ஐதராபாத்தில் பெண் கால்நடை வைத்தியர் ஒருவரைப் பாலியல் வல்லுறவு செய்து பின்னர் படுகொலை செய்த குற்றவாளிகள் நால்வரையும் அந்தப் பெண் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் வைத்தே தெலுங்கானா பொலிசார் சுட்டுக்கொன்றுள்ளனர்.
இதைப் பலரும் பாராட்டும் வேளையில் சில மனித உரிமைக் காவலர்கள் ஒப்பாரி வைப்பதையும் காணமுடிகிறது.
உண்மையில் குறித்த நால்வரையும் பொலிசார் கொலை செய்தமை சட்டரீதியாக தவறான விடயம் என்றபோதிலும் இவ்வாறான பாலியல் வன்கொடுமை செய்யத் துணியும் கயவர்களுக்கு என்கவுண்டர்தான் சரியான தீர்வு.
பெண்களைப் போகப்பொருளாகப் பார்க்கும் மனநிலை கட்டமைக்கப்பட்ட நாடுகளில் பாலியல் குற்றங்களைக் குறைக்க இதுவே சரியான வழி.
பயத்தின் மூலமாக குற்றங்களைக் குறைக்க முடியாது என்பதெல்லாம் பொய்யான கதைகள்.
மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் (வெவ்வேறு சம்பவங்கள்)சிறுமிகளைக் கடத்திக் கப்பம் கேட்டு படுகொலைசெய்தவர்களை என்கவுண்டர் செய்த பின்னர் குறித்த பகுதிகளில் குழந்தைகளைக் கடத்திக் கப்பம் கேட்க இதுவரை எந்தக் கொள்ளையனும் துணிந்ததில்லை என்பதை அனுபவத்தினூடாக கண்டவர்கள் நாங்கள்.
எனவே மனித உரிமைக் காவலர்கள் வழக்கம் போல ஒப்பாரி வைப்பதையெல்லாம் கணக்கிலெடுக்காது இனிமேலும் இவ்வாறான குற்றங்களைச் செய்யும் கயவர்களைப் போட்டுத்தள்ள பொலிசார் பின்நிற்க கூடாது.
எமது நாட்டிலும் இவ்வாறான ஆக்கபூர்வமான விடயங்களைக் கையாள பொலிசார் துணிய வேண்டும்.
இலங்கை போன்ற நாடுகளில் காவல்த்துறைக் கட்டமைப்புகள் மோசமான நிலையிலுள்ளமை உண்மை என்ற போதிலும் நியாயமான துணிச்சலான அதிகாரிகளும் இல்லாமலில்லை.
அரசியலுக்கு அப்பால் இவற்றைக் கையாளத் துணிந்த அதிகாரிகள் வளரவேண்டும்.
இந்தியாவில் பாலியல் வன்கொடுமை செய்யும் கயவர்களுக்கெதிரான புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்த #தெலுங்கானா_பொலிசாருக்கு பாராட்டுக்கள்.

மூலம் முகப்புத்தகம் 

 • Like 3

Share this post

Link to post
Share on other sites

"நீதி மன்றங்களை.... விமர்சிப்பது, பெரும் குற்றம்"  என்று சொல்லும்....
இந்திய, இலங்கை... நீதி மன்றங்கள் செய்யும் தவறுகள் அதிகம். 👈🏿

அதற்குள்.... ஜனநாயக நாடுகள் என, "பீற்றிக்" கொண்டு திரியும் இவர்களை...
வெள்ளைக்காரன்.. நம்பினாலும், நாம்.... நம்பத் தயாரில்லை. :grin:

இந்தியாவில்.... உச்ச  மன்ற நீதிபதிகளே... 
தமக்கு.. அரசியல் அழுத்தம் உள்ளதாக,  போராட்டம்  நடத்தியவர்கள்.
அதில், ஒரு தமிழரை பிடித்து, சிறையிலும் தள்ளியதுதான்... இந்திய ஜனநாயகம்.

வழக்கு என்று... போனால், ஆசிய நாட்டில், விடிவு கிடைக்காது.

கையோடை.. "கம்மாரிசு"  போடுவதைத் தவிர, 
வேறு வழி  எதுவுமே...   இப்போதைக்கு.... இல்லை.

Share this post

Link to post
Share on other sites
31 minutes ago, ரதி said:

இலங்கை இந்தியா போன்ற வளர்ச்சியடைந்துவரும் நாடுகளுக்கு 100% ஜனநாயக பண்புகள் ஒருபோதும் சரிப்பட்டுவராது.
இங்கே ஜனநாயகத்துடன் சற்றுச் சர்வாதிகாரம் கலந்த பண்புகளே நாட்டை நிருவகிக்க பொருத்தமானவை.
இங்கே பயத்தின் மூலமாகவே சிலவற்றை கட்டுப்படுத்த முடியும்.
இலங்கையில் புலிகள் இருந்த காலத்தில் தமிழர் பகுதிகளில் குற்றச் செயல்கள் குறைவாக இருந்தமைக்கும் அதுதான் காரணம்.
போட்டுத்தள்ளிவிடுவார்கள் அல்லது பச்சைமட்டையால் கட்டிவைத்து அடிப்பார்கள் என்ற பயம்தான் அன்று தமிழ்ச் சமூகத்தைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தது.
இந்தியாவின் தெலுங்கானா மாநில ஐதராபாத்தில் பெண் கால்நடை வைத்தியர் ஒருவரைப் பாலியல் வல்லுறவு செய்து பின்னர் படுகொலை செய்த குற்றவாளிகள் நால்வரையும் அந்தப் பெண் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் வைத்தே தெலுங்கானா பொலிசார் சுட்டுக்கொன்றுள்ளனர்.
இதைப் பலரும் பாராட்டும் வேளையில் சில மனித உரிமைக் காவலர்கள் ஒப்பாரி வைப்பதையும் காணமுடிகிறது.
உண்மையில் குறித்த நால்வரையும் பொலிசார் கொலை செய்தமை சட்டரீதியாக தவறான விடயம் என்றபோதிலும் இவ்வாறான பாலியல் வன்கொடுமை செய்யத் துணியும் கயவர்களுக்கு என்கவுண்டர்தான் சரியான தீர்வு.
பெண்களைப் போகப்பொருளாகப் பார்க்கும் மனநிலை கட்டமைக்கப்பட்ட நாடுகளில் பாலியல் குற்றங்களைக் குறைக்க இதுவே சரியான வழி.
பயத்தின் மூலமாக குற்றங்களைக் குறைக்க முடியாது என்பதெல்லாம் பொய்யான கதைகள்.
மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் (வெவ்வேறு சம்பவங்கள்)சிறுமிகளைக் கடத்திக் கப்பம் கேட்டு படுகொலைசெய்தவர்களை என்கவுண்டர் செய்த பின்னர் குறித்த பகுதிகளில் குழந்தைகளைக் கடத்திக் கப்பம் கேட்க இதுவரை எந்தக் கொள்ளையனும் துணிந்ததில்லை என்பதை அனுபவத்தினூடாக கண்டவர்கள் நாங்கள்.
எனவே மனித உரிமைக் காவலர்கள் வழக்கம் போல ஒப்பாரி வைப்பதையெல்லாம் கணக்கிலெடுக்காது இனிமேலும் இவ்வாறான குற்றங்களைச் செய்யும் கயவர்களைப் போட்டுத்தள்ள பொலிசார் பின்நிற்க கூடாது.
எமது நாட்டிலும் இவ்வாறான ஆக்கபூர்வமான விடயங்களைக் கையாள பொலிசார் துணிய வேண்டும்.
இலங்கை போன்ற நாடுகளில் காவல்த்துறைக் கட்டமைப்புகள் மோசமான நிலையிலுள்ளமை உண்மை என்ற போதிலும் நியாயமான துணிச்சலான அதிகாரிகளும் இல்லாமலில்லை.
அரசியலுக்கு அப்பால் இவற்றைக் கையாளத் துணிந்த அதிகாரிகள் வளரவேண்டும்.
இந்தியாவில் பாலியல் வன்கொடுமை செய்யும் கயவர்களுக்கெதிரான புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்த #தெலுங்கானா_பொலிசாருக்கு பாராட்டுக்கள்.

மூலம் முகப்புத்தகம் 

ரதி, இலங்கை, இந்தியா, மற்றும் தென்னாசிய நாடுகளில் இருக்கும் பிரச்சனையே இவர்கள் உண்மையான குற்றவாளிகளை தப்ப வைக்க அப்பாவிகளை மாட்டி விடுவது தான். இங்கும் இவர்கள் நான்கு பேருமே குற்றவாளிகளா அல்லது ஒரு சிலரா என்பது வெகுசனத்துக்கு தெரியப் போவதில்லை.

சுவாதி கொலையில், ராம்குமாரை கைது செய்த பின் அவர் வயரை கடித்து இறந்தார் போன்ற சோடிப்புகள் இங்கும் நிகழ்ந்து இருக்கலாம். ராம்குமாரை ஒரு நாள் கூட நீதிமன்றத்துக்கு கொண்டு வரவில்லை.

இப்படியான உடனடி நீதிகளில் தண்டிக்கப்படும்  அனைவரும் பரம ஏழைகளாக இருக்க டெல்லியில் தலித்  சிறுமியை கோவிலில் வைத்து பல நாட்கள் வல்லுறவு செய்து கொன்றதில் துணை போன பிஜேபி பிரமுகர்கள், வக்கீல்கள் எல்லாம் பிணையில் சுந்தந்திரமாக உலாவிக் கொண்டு இருக்கின்றார்கள். பொள்ளாச்சி வழக்கில் கைதானவர்கள் அரசியல் பின் புலம் இருப்பதால் குண்டாஸ் பிரிவில் இருந்தும் அவ் வழக்கை நீக்கியிருகின்றார்கள்.

இந்திய உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மீது கூட அவருக்கு உதவியாளராக இருந்த பெண் ஒருவர் பாலியல் வன்முறை குற்றம் ஒன்றை சுமத்தியிருந்தார் (அவர் பிஜேபி யின் செல்வாக்கால் நியமிக்கப்பட்டவர் என்பதால் வழக்கை நிராகரித்து விட்டனர்)

இவ்வாறான என் கவுண்டர்கள் மூலம் இத்தகைய குற்றங்கள் குறையாது. வல்லுறவுக்குள்ளாகும் பெண்களை மேலும் கொன்றழிப்பதில் தான் இனி குற்றவாளிகள் அதிகமாக ஈடுபடுவர்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

ஹைதராபாத் பாலியல் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கும்பல் கொலை செய்ய வேண்டும் என பெண் அரசியல்வாதிகளான ஜெயா பச்சன் மற்றும் மாயாவதி ஆகிய இருவரும் பொதுவெளியில் கருத்து வெளியிட்டனர்.

அதேவேளையில், ஒரு முரண்பாடாக பாலியல் வல்லுறவு தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவர், நாட்டின் மிக பெரிய மாநிலத்தில் முதல்வராக உள்ளார் (அவர் குற்றம் சாட்டப்பட்டவர், அவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட சிலர் இறந்துவிட்டனர். அவர் இன்னும் இருக்கிறார்). இதேபோல் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவர் நாட்டை விட்டு தப்பி செல்ல அனுமதிக்கப்பட்டு, தற்போது சொந்தமாக ஒரு புதிய நாட்டை உருவாக்கப்போவதாக அவர் கூறுகிறார்.

வர்கள் மீது சட்டத்தின் கரங்கள் நீளவில்லை. பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு தீவைத்து தாக்குதலுக்கு உள்ளான மற்றொரு பெண் தன் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் வேளையில் இது தொடர்பான அரசியல்வாதியின் வழக்கின் வேகம் குறையக்கூடும்.

இந்த நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அதிகாரத்தில் இருப்பவர்கள் உள்ளார்கள்.

https://www.bbc.com/tamil/india-50686125

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் உணர்வெழுச்சி மற்றும் துக்கம் ஆகியவை எனக்கு நன்றாக புரிகிறது. தங்களின் ஆருயிர் இழப்புக்கு பதிலாக மற்றொரு உயிர் போகவேண்டும் என்று தங்கள் தரப்பில் அவர்கள் சில சமயங்களில் கேட்கக்கூடும்.

ஆனால், அனைவரும் அப்படி கோருவதில்லை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பவர்களுக்கு கருணை அளிக்க சோனியா காந்தி கேட்டுக் கொண்டதை நாம் மறந்துவிடுகிறோம்.

பாலியல் வல்லுறவு தொடர்பாக கடுமையான சட்டம் வேண்டும் என்று கேட்டோம். இது தொடர்பான பொதுமக்களின் அறைகூவலின் விளைவாக நீதியரசர் வர்மா தலைமையிலான கமிட்டியின் நீண்ட பரிந்துரை மற்றும் ஆலோசனைக்கு மிக கடுமையான, திருத்தப்பட்ட சட்டம் 2013இல் நமக்கு கிடைத்தது.

டெல்லியில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரின் போராட்டங்கள் வீண்போகவில்லை என்பது இதில் முக்கியமான விஷயம்.

நிர்பயாவின் தைரியம் மற்றும் அவரது இழப்பால் அவரது குடும்பம் மற்றும் நாட்டுக்கு மரியாதை தரும் வகையில் நிர்பயா சட்டம் உள்ளது.

இந்த பிரச்சனையின் தீர்வு சட்டத்தை மதிக்காத துப்பாக்கி விசையை அழுத்தி மகிழ்வடையும் போலீசார் அல்ல. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வருத்தம், இழப்பால் தீர்மானிக்கப்படுவதல்ல நீதி வழங்கல் மற்றும் நீதிமன்ற தீர்ப்பு.

மிக அதிக போலீஸ் பாதுகாப்பு வளையத்தில், எந்த ஆயுதமும் இல்லாமல் இருந்த நான்கு சந்தேக நபர்களை கொல்வதில் என்ன நோக்கம் உள்ளது? ஒரு உயிரிழப்பை மற்றொரு உயிரிழப்பால் சரிசெய்ய இயலாது.

இந்திய அரசியல் சாசனத்தின் 21-வது சட்டவிதியின்படி ''எந்த மனிதரின் உயிரையும் சட்டத்திற்கு அப்பாற்பட்ட வழியில் எடுக்கக்கூடாது'. ஆகவே இந்த சட்டவிதியை தாண்டி பறிக்கப்படும் உயிர்கள் சட்டத்தை மீறிய செயலாகும்.

ஒரு பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இதற்கு பதிலாக நான்கு சந்தேக நபர்கள் ஒரு வாரத்துக்குள் கொல்லப்பட்டுள்ளனர். குற்றவியல் விசாரணை தொடங்கி எந்த முன்னேற்றமும் ஏற்படாமலே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களின் பங்கு இந்த விவகாரத்தில் முழுவதும் விசாரிக்கப்படவில்லை. அவர்களுக்கு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்படவில்லை.

இவர்கள் தப்பியோட முயற்சித்தபோது தற்காப்பு காரணங்களுக்காக போலீஸ் சுட்டதாக அதிகாரபூர்வ தரப்பு தெரிவிக்கிறது.

தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்வது என்பது ஆயுதம் ஏந்திய ஒருவர் மற்றவரை கொல்ல முயற்சிக்கும்போது செய்வது தானே? போலீஸ் காவலில் இருந்த இந்த நால்வரிடமும் எந்த ஆயுதமுமில்லை. இம்மாதிரியான என்கவுன்டர் சம்பவங்கள் குறித்து ஆந்திர பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் நீண்ட விவாதம் நடத்தியுள்ளோம்.

மாநிலத்தை சேர்ந்த போலீசார் அரசியல் அமைப்புக்கு உட்பட்டு குற்றவியல் நடைமுறைகள் மற்றும் தண்டனை சட்டத்தில் பயிற்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும். அவர்களுக்கு துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் வழங்கியிருப்பதன் காரணம், மக்களை பாதுகாக்க தானே தவிர, யாரையும் கொல்லவோ, அச்சுறுத்தவோ அல்ல.

நீதிக்காக கடுமையான, வலி நிறைந்த பயணம் மேற்கொள்ளும் சூழலிலும், போலீசாரின் ரத்த வேட்கைக்கு உடன்படுவது பெண்களாக எங்களுக்கு மிகவும் ஆபத்தானதாகும். நீதிக்காக போராடுவது கடுமையான பயணமாக இருந்தாலும், நீதி, நியாயம் நிறைந்த சமூகத்தை உருவாக்குவதில் நமக்கு மாற்று வழி பயணம் இல்லை.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • சென்னை: தமிழகம் முழுவதும் கரோனா பரவும் அபாயம் எழுந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், கரோனா பாதிப்பு இருப்பவா்கள், கரோனா தொற்றை மறைத்தால் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதித்த 20 மாவட்டங்களிலும் சுகாதாரத் துறையினா் வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகின்றனா். காய்ச்சல், சளி, சுவாசப் பாதிப்பு இருக்கும் அனைவரும் தனிமைப்படுத்தப்படுகின்றனா். இந்த நிலையில், சுகாதாரத் துறை சாா்பில் வியாழக்கிழமை ஓா் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், தமிழகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கரோனா அறிகுறிகள் இருப்பவா்கள் தாங்களாகவே முன்வந்து தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது: தமிழக பொது சுகாதாரச் சட்டம் 1939 பிரிவு - 62 இன்படி, தொற்று நோய் பாதிப்பு எதுவாக இருந்தாலும் அதனை மறைக்கக் கூடாது. மாறாக, அதனை உடனடியாக சம்பந்தப்பட்டவா்கள் சுகாதாரத் துறைக்கு தெரிவிப்பது அவசியம். அதேபோன்று, ஆய்வகங்கள், மருத்துவமனைகள், மருத்துவா்கள் என எவராக இருப்பினும், தொற்று நோய் பாதிப்புக்குளான நோயாளிகளின் விவரங்களை அரசிடம் அளிக்க வேண்டும். அதுவும், நோய் கண்டறியப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அதனை தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கரோனா பாதிப்பை சம்பந்தப்பட்ட நோயாளிகளும், அவா்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவா்களும் தெரிவிப்பது அவசியம். அவ்வாறு தெரிவிக்காத பட்சத்தில் ஆறு மாதம் வரை சிறைத் தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா். https://www.dinamani.com/tamilnadu/2020/apr/03/corona-spread-throughout-tamil-nadu-3393560.html
  • தில்லியில் கரோனா பாதிப்பு 293 ஆக உயா்வு: இருவா் பலி   புது தில்லி: தில்லியில் வியாழக்கிழமை கரோனாவால் 141 போ் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தில்லியின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 293ஆக அதிகரித்தது. இதில் 182 போ் தில்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவா்கள். இதனிடையே, நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற கரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா் என தில்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இத்துடன் சோ்த்து தில்லியில் இதுவரை 4 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். 8 போ் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனா். வெளிநாட்டைச் சோ்ந்த ஒருவா் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா். கரோனா தொற்று சந்தேகத்தால் 31,307 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.   https://www.dinamani.com/india/2020/apr/03/coronavirus-death-toll-rises-to-293-in-delhi-3393586.html      
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 75 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானது. பதிவு: ஏப்ரல் 03,  2020 05:30 AM சென்னை,    தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 75 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் பாதித்தோரின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.   முதல் இடத்தில் மராட்டியமும், 3-வது இடத்தில் கேரளாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நேற்று பாதிக்கப்பட்ட 75 பேரில், 74 பேர் டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் ஆகும். மேலும் ஒருவர் வெளிநாடு சென்று வந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர் என தெரியவந்துள்ளது.   இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-   தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் 86 ஆயிரத்து 342 பேர் உள்ளனர். மேலும் விமான நிலையங்களில் அருகே அரசு கண்காணிப்பில் 90 பேர் உள்ளனர். தமிழகத்தில் 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பை 4 ஆயிரத்து 70 பேர் முடித்துள்ளனர்.   தமிழகத்தின் நேற்று (நேற்று முன்தினம்) கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக இருந்தது. இன்று (நேற்று) மேலும் 75 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இதில் 74 பேர் டெல்லி தப்லித் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். மேலும் ஒருவர் சென்னையை சேர்ந்தவர். அவர் ஏற்கனவே கொரோனா பாதித்த நபருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் இருந்து டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட 1,103 பேருக்கும் சளி மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்று வருகிறது. தற்போது தமிழகத்தில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 264 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.   தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த கோவை டாக்டருக்கும் நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.   கொரோனா வைரஸ் என்பது புதிய நோய். இதை கட்டுப்படுத்துவது பெரிய சவாலாக உள்ளது. உலகில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகள் எடுக்கும் நடவடிக்கை குறித்தும், அங்கு நாளுக்கு நாள் எவ்வாறு பரவியது என்பது குறித்து ஆராய்ந்து உள்ளோம்.   கொரோனா என்பது மலேரியா, டைபாய்டு காய்ச்சல் போன்று பழைய நோய் இல்லை. இது சீனாவில் இருந்து தொடங்கப்பட்டு தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது.   இவ்வாறு அவர் கூறினார். https://www.dailythanthi.com/News/TopNews/2020/04/03024313/Corona-impact-in-India-Tamil-Nadu-is-2nd-75-people.vpf