Jump to content

லண்டன் காற்றைச் சுவாசிப்பது, 150 சிகரெட்டுகளைப் புகைப்பதற்கு சமமானது : நிபுணர்கள் எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

London-air-pollution-720x410.jpg

லண்டன் காற்றைச் சுவாசிப்பது, 150 சிகரெட்டுகளைப் புகைப்பதற்கு சமமானது : நிபுணர்கள் எச்சரிக்கை

பிரித்தானியாவின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் வாழ்வது ஒரு வருடத்திற்கு 150 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமமான வகையில் ஆரம்ப மரண அபாயத்தை அதிகரிக்கிறது எனவும் பிரித்தானியாவில் காணப்படும் காற்று மாசுபாடு பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட வேண்டுமெனவும் பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் வலியுறுத்தியுள்ளது.

லண்டனின் நியூஹாம் (Newham), வெஸ்ட்மின்ஸ்ரர் (Westminster), கென்சிங்ரன் (kensington) மற்றும் செல்சீ(Chelsea), இஸ்லிங்ரன் (Islington) பகுதிகளில் வசிக்கும் மக்கள் காற்று மாசுபாட்டால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இந்த தொண்டு நிறுவனத்தின் பகுப்பாய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

லண்டனிலுள்ள வோல்தம் ஃபொரஸ்ட் (Waltham Forest), ஹக்னி (Hackney), டவர் ஹம்லெட்ஸ் (Tower Hamlets), பார்கிங் (Barking), டகெனம் (Degenham), லம்பேத் (Lambeth) மற்றும் சவுத்வோர்க் (Southwark) ஆகிய பகுதிகளும் ஸ்லவ் (Slough), டார்ட்ஃபேர்ட் (Dartford), போர்ட்ஸ்மவுத் (Portsmouth), மெட்வே (Medway), லூற்ரன் (Luton), கிரேவ்சம் (Gravesham) மற்றும் துர்ரொக் (Thurrock) ஆகிய இடங்களைச் சேர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் வெற்றிபெற்று அடுத்ததாக ஆட்சி அமைக்கவுள்ள அரசாங்கம் உலக சுகாதார அமைப்பின் கடுமையான காற்று மாசுபாட்டு வரம்புகளை பிரித்தானியாவில் அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் வலியுறுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் ஒவ்வொரு ஆண்டும் இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் காரணமாக ஏற்படும் சுமார் 11,000 இறப்புகள் காற்று மாசுபாட்டால் ஏற்படுவதாகவும் இந்தத் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

http://athavannews.com/லண்டன்-காற்றை-சுவாசிப்பத/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.