Jump to content

தெண்டைமானாறு வான் கதவுகள் திறப்பு -வடமராச்சியில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தெண்டைமானாறு வான் கதவுகள் திறப்பு -வடமராச்சியில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

தெண்டைமானாறு வான் கதவுகள் திறப்பு -வடமராச்சியில்  பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

கடும் மழை காரணமாக பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழங்கியுள்ளன.மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் தேங்கியுள்ளதால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கான உதவிகள் பருத்தித்துறை பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 118 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தெண்டைமானாறு வான் கதவுகள் அனைத்தும் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் இதனால் பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.(15)
 
http://www.samakalam.com/செய்திகள்/தெண்டைமானாறு-வான்-கதவுகள/

Link to comment
Share on other sites

15 hours ago, கிருபன் said:

தெண்டைமானாறு வான் கதவுகள் அனைத்தும் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் இதனால் பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.(15)

தமிழ் ஊடகங்களின்ட தமிழ் ஊடகவியலாளர்களின்ட மிகக் கேவலமான தரத்திற்கு இதுவும் ஓர் சான்று.

அதெப்பிடி தொண்டைமனாறில் வான் கதவுகள் அனைத்தும் திறந்து விடப்படுவதால் பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்டநிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும்?

இந்த நிலவமைப்பு தெரிஞ்ச ஆராவது சொல்லுங்கோ பாப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Rajesh said:

ஒரு வேளை வெள்ளம் சுத்திப்போய் பருத்திதுறை மக்களை பார்க்க போயிருக்குமோ என்னவோ தெரியல😎😋

Link to comment
Share on other sites

2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு வேளை வெள்ளம் சுத்திப்போய் பருத்திதுறை மக்களை பார்க்க போயிருக்குமோ என்னவோ தெரியல😎😋

ம்ம்.. இருக்கும் இருக்கும்.
ஆராவது அனுப்பின காசுல நல்ல பைக் வாங்கி ஜாலியா சுத்தி போயிருக்கும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Rajesh said:

தமிழ் ஊடகங்களின்ட தமிழ் ஊடகவியலாளர்களின்ட மிகக் கேவலமான தரத்திற்கு இதுவும் ஓர் சான்று.

அதெப்பிடி தொண்டைமனாறில் வான் கதவுகள் அனைத்தும் திறந்து விடப்படுவதால் பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்டநிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும்?

இந்த நிலவமைப்பு தெரிஞ்ச ஆராவது சொல்லுங்கோ பாப்பம்.

ஊடக தார்மீகம் தெரியாதா ஊத்தை ஊடகங்களின் செய்திகள்... லாசுவியாவின் படத்தைப்போட்டு ரசிகர்கள் அதிர்ச்சி...நடிகையின் படத்தைப் போட்டுஅதிர்ச்ச்சி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Rajesh said:

தமிழ் ஊடகங்களின்ட தமிழ் ஊடகவியலாளர்களின்ட மிகக் கேவலமான தரத்திற்கு இதுவும் ஓர் சான்று.

அதெப்பிடி தொண்டைமனாறில் வான் கதவுகள் அனைத்தும் திறந்து விடப்படுவதால் பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்டநிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும்?

இந்த நிலவமைப்பு தெரிஞ்ச ஆராவது சொல்லுங்கோ பாப்பம்.

“வடமராட்சி வடக்கு கிழக்கு காரியதரிசி பிரிவு தொண்டைமானாறு முதல் தற்போதய வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட சுண்டிக்குளம் வரையிலான ஒரு நீண்ட கரையோர பிரதேசத்தைக் கொண்ட 19 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கியதாக நிர்வகிக்கப்பட்டு வந்தது”

வடமராட்சி வடக்கு பகுதியில் தொண்டைமானாறும் பருத்தித்துறையும் உள்ளதால் குழம்பியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

5 hours ago, கிருபன் said:

நன்றி!

5 hours ago, கிருபன் said:

வடமராட்சி வடக்கு பகுதியில் தொண்டைமானாறும் பருத்தித்துறையும் உள்ளதால் குழம்பியிருக்கலாம்.

வடமராட்சி மேற்கில் தானே தொண்டைமனாறு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Rajesh said:

வடமராட்சி மேற்கில் தானே தொண்டைமனாறு?

வரைபடத்தில் பார்த்தால் மேற்கில் இருப்பதாகத் தெரியும். ஆனால் தொண்டமானாறு கடற்கரையை ஒட்டி இருப்பதால் வடமராட்சி வடக்கு அதிகாரத்திற்குள் வரும்.

வடமராட்சி தெற்கு- மேற்கு கரவெட்டிப் பிரதேச சபையைக் குறிக்கும். இந்தப் பகுதியில் அல்வாய், அத்தாய், இமையாணன், கட்டைவேலி, கப்பூது, கரணவாய், கரவெட்டி, மாத்தோணி, நெல்லியடி, சமரபாகு, இலக்கிணாவத்தை, துன்னாலை, உடுப்பிட்டி, வல்வெட்டி ஆகிய ஊர்கள் இருக்கின்றன.

dist_jaffna.jpg

Link to comment
Share on other sites

21 hours ago, கிருபன் said:

வரைபடத்தில் பார்த்தால் மேற்கில் இருப்பதாகத் தெரியும். ஆனால் தொண்டமானாறு கடற்கரையை ஒட்டி இருப்பதால் வடமராட்சி வடக்கு அதிகாரத்திற்குள் வரும்.

நல்ல தகவல்களுக்கு நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

78592644_1650047671818801_74076885066899

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்துடன் பல வீடுகளின் முன்பு சீமெந்து/ அல்லது செங்கல்/ மாபிள்  முற்றம் அமைக்கப் பட்டிருக்கின்றது. இவை மழை நீரை உறிஞ்சாமல் பக்கத்து வீட்டு வளவுகளுக்குள் தள்ளி விடுகின்றது. மழை நீரை நிலத்திற்கு விடக்கூடிய முற்றங்களை அமைக்க அதிகாரிகள் ஆலோசனை வழங்க வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2019 at 11:50 AM, Rajesh said:

ம்ம்.. இருக்கும் இருக்கும்.
ஆராவது அனுப்பின காசுல நல்ல பைக் வாங்கி ஜாலியா சுத்தி போயிருக்கும். 🤣

நல்ல நகைசுவை, ஆனால் நான் இதை இரசிக்கவில்லை😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு இயற்கை தானாக பாதைகள் அமைத்து 
மழைநீர் கடலை சென்றடையும் வடிவிலேயே வடமராட்ச்சி இருந்தது 
தொண்டமானாறு மேலேயும் கீழயேயும் கடலுடன் தொடுத்தே இருந்தது 
கடல் மட்டம் நில மட்டத்திலும் குறைவாக இருக்கும் வரை மழை  நீர் வழிந்து ஓடிவிடும்.

இப்போ காணி பிடிப்பால் பலர் இந்த நீர் வடியும் வழிகளை 
மேவி காணிகளை மேம்படுத்தி இருப்பதால் மழைநீர் போக வழியில்லாது 
ஊருக்குள்ளேயே தேங்கி விடுகிறது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.