Jump to content

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு


Recommended Posts

625.187.560.350.160.300.053.800.330.160.

கடந்த 2018ஆம் ஆண்டு பிரித்தானியாவில் வைத்து புலம்பெயர் தமிழ் மக்களை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

லண்டன், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தால் இன்றையதினம் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொது ஒழுங்கு சட்டத்தின் பிரிவு 4 ஏ இன் கீழ் தமிழர்களை அச்சுறுத்தினார் என்பதன் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை கழுத்தறுப்பது போன்று சைகை மூலம் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ எச்சரித்திருந்தார்.

அதன் பின்னர் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதுடன், இந்த விடயம் பாரிய எதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு லண்டன் வெஸஸட்மினிஸ்டர் நீதிமன்றினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

https://www.tamilwin.com/community/01/233121?ref=imp-news

 

புலம்பெயர் தமிழர்களுக்கு கழுத்தை அறுப்பதாக அச்சுறுத்தல்! இன்று பிரியங்கவுக்கு தீர்ப்பு?

பிரித்தானியத் தலைநகர் லண்டனிலுள்ள ஸ்ரீலங்காவின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து 'கழுத்தை அறுக்கும்' சைகையை காண்பித்து அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்ரீலங்கா இராணுவத்தின் பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு இன்றைய தினம் லண்டனில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதற்கமைய, லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றில் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான வழக்கின் இறுதி விசாரணைகள் இடம்பெறவுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானியத் தலைநகர் லண்டனிலுள்ள ஸ்ரீலங்காவின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் விசேட கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. ஸ்ரீலங்காவின் சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு வெளியில் புலம்பெயர் தமிழர்கள் கணடனப்போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை பார்த்து ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு பதவி நிலை அதிகாரியாக கடமையாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ கழுத்தை அறுப்பது போல் சைகையை காண்பித்திருந்தார். இந்த செயல் காணொளியாக பதிவு செய்யப்பட்டு ஊடகங்களிலும், சமூகவலைத் தளங்களிலும் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பிரிகேடியரின் இந்த செய்கையால் தமது உயிர்களுக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதுடன், மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டி அவருக்கு எதிராக பாதிக்கப்பட்ட சிங்கள இளைஞர் உட்பட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்கள் வழக்கு தாக்கல் செய்தனர். லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதவான் நீதிமன்றம், இந்த வழக்கை விசாரித்த போது பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவோ அவரது சார்பில் சட்டத்தரணிகளோ முன்னிலையாகாத நிலையில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

எனினும் இந்த பிடியாணை ஸ்ரீலங்கா அரசின் கடும் அழுத்தங்கள் மற்றும் இராஜதந்திர முயற்சியினால் பிரித்தானிய வெளியுறவுத்துறை தலையீட்டின் பின்னர் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டது. எவ்வாறாயினும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் இந்த செயல் அவருக்கு வழங்கப்பட்டிருந்த இராஜதந்திர பணிக்கு உட்பட்டது அல்ல என்று நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இதற்கமைய, குறித்த வழக்கின் அனைத்து சாட்சி விசாரணைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அறியமுடிகின்றது.

https://www.ibctamil.com/srilanka/80/132530?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் !

பிரித்தானியத் தலைநகர் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து சைகைசெய்து அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று இலண்டன், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Brigadier-Priyanka-Fernando.jpg

அதன்படி, சுமார் 2400 பவுண்ட் அபராதம் விதிப்பதாக இலண்டன், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி, இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை சைகை மூலம் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ எச்சரித்திருந்தார்.

அதன் பின்னர் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றினால் இந்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/70588

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியத் தலைநகர் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து சைகைசெய்து அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று இலண்டன், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Brigadier-Priyanka-Fernando.jpg

அதன்படி, சுமார் 2400 பவுண்ட் அபராதம் விதிப்பதாக இலண்டன், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி, இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களை சைகை மூலம் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ எச்சரித்திருந்தார்.

அதன் பின்னர் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றினால் இந்த தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/70588?fbclid=IwAR1nxV9a8oaggYLpXCpuN29I9mgqyJWdbUkodhzpFej2iJsZERVMayl2pC0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தீர்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகேடியரின் இந்த செய்கையால் தமது உயிர்களுக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதுடன், மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டி அவருக்கு எதிராக பாதிக்கப்பட்ட சிங்கள இளைஞர் உட்பட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்கள் வழக்கு தாக்கல் செய்தனர்.

தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அபராத தொகை பாதிக்கபட்டவர்களுக்கு எப்படி உதவும்? இதற்கு நஷ்ட ஈடு அல்லவா வழங்கப்பட்டிருக்கவேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ரதி said:

என்ன தீர்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது?

roflphotos-dot-com-photo-comments-20191010215538.png

:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

என்ன தீர்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது?

இனிமேல் இப்பிடி கழுத்திலை விரலை வைச்சு அறுப்பன் எண்டு வெருட்டக்கூடாது.😎

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அவருக்கு எதிராக பாதிக்கப்பட்ட சிங்கள இளைஞர் உட்பட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்கள் வழக்கு தாக்கல் செய்தனர்.

அவ்வளவு காசையும் அந்த ஒருவருக்கு கொடுக்கலாமே....

Link to comment
Share on other sites

பிரிகேடியர் என்ற இந்த கேடியை சிங்களம் பதவி உயர்த்தி இல்லை பிரித்தானியாவிற்கே தூதுவராகவும் அனுப்பவும் கூடும் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிரிகேடியர் யுத்தத்தில்  ஊனமுற்றவர் போல் தெரிகின்றார். அனைத்து படங்களிலும்  இடது கை பாதிக்கப்பட்டுள்ளது தெளிவாக காணக்கூடியதாக  உள்ளது. இதுபற்றி எவருக்கும் தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vanangaamudi said:

இந்த பிரிகேடியர் யுத்தத்தில்  ஊனமுற்றவர் போல் தெரிகின்றார். அனைத்து படங்களிலும்  இடது கை பாதிக்கப்பட்டுள்ளது தெளிவாக காணக்கூடியதாக  உள்ளது. இதுபற்றி எவருக்கும் தெரியுமா?

பெர்னாண்டோ  பொன்சேகாவுக்காக  பொண்ணம்பலத்தாருக்கு எதிராக போராடியிருக்கின்றார்.....

Link to comment
Share on other sites

4 hours ago, vanangaamudi said:

இந்த பிரிகேடியர் யுத்தத்தில்  ஊனமுற்றவர் போல் தெரிகின்றார். அனைத்து படங்களிலும்  இடது கை பாதிக்கப்பட்டுள்ளது தெளிவாக காணக்கூடியதாக  உள்ளது. இதுபற்றி எவருக்கும் தெரியுமா?

ஆட்களை கடத்தி கழுத்தறுக்கேக்க ஏதாவது நடந்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

பிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்

பிரிட்டனின் நீதிமன்றம் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணாண்டோவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் அவரை மீண்டும் நியாயப்படுத்தியுள்ளது.

பிரிட்டனிற்கான  இலங்கை தூதரகத்தில் 2018 இல் இலங்கையின் சுதந்திரதின நிகழ்வுகள் இடம்பெற்ற வேளை ஆர்ப்பாட்டம் செய்தவர்களை நோக்கி மரண அச்சுறுத்தல் விடுத்ததன் மூலம் பிரிகேடியர் பெர்ணான்டோ குற்றமிழைத்தார் என பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுடன் அபராதமும் விதித்துள்ளது.

 எனினும் இந்த வழக்கு தொடர்பான சம்பவங்கள் இடம்பெற்ற ஒழுங்கு  இது ஒரு அரசியல் ரீதியான நோக்கத்தை அடிப்படையாக கொண்டது என்பதை புலப்படுத்துகின்றது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரிகேடியர் பெர்ணாண்டோ இராஜதந்திர விடுபாட்டுரிமைக்குரிய,இலங்கை தூதரகத்தில் பணிபுரிந்த இராஜதந்திரி என்ற தனது நிலைப்பாட்டை தொடர்ந்தும் பேணுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நீதிமன்ற விசாரணைகள், பிரிகேடியர் பெர்ணான்டோவின் இராஜதந்திர விடுபாட்டுரிமையை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளமை,பிரிட்டனின் தேர்தல் வேளையில் தீர்ப்பு வெளியாகியுள்ளமை,வழக்கு விசாரணைகள் இடம்பெற்றவேளை வழக்கு தொடுநரின்  ஆதரவாளர்கள் விடுதலைப்புலிகளின் கொடியை  ஏந்தியவாறு நீதிமன்ற வழக்குகளின் போது அடாத்தான விதத்தில் , அச்சுறுத்தும் விதத்தில் நடந்துகொண்டமை,வழக்கு தொடுநரினால்  நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட இரகசிய விபரங்கள் பகிரங்கமாகியமை,போன்ற சம்பவங்கள் இது அரசியநோக்கங்களை அடிப்படையாக கொண்டது என்பதை புலப்படுத்தியுள்ளது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/70629

 

Link to comment
Share on other sites

19 hours ago, ampanai said:

பிரிகேடியர் பிரியங்கர விவகாரம்-அரசியல் நோக்கம் கொண்டது என்கின்றது அரசாங்கம்

சொறிலங்கா கொலைகாரர்களை தூதுவர்களாகவும், தூதரக அலுவலர்களாகவும் நியமிப்பது போர்க்குற்ற அரசியல் சார்ந்தது.
அங்கையும் போய் சொறிய வெளிக்கிட்டா ஒட்ட நறுக்குப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீர்ப்பு பத்தாது. இவருக்கு பயணத்தடைகள்.. விதிக்கப்பட்டிருக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

Foreign Ministry slams brandishing of LTTE flags outside British court

Sri Lanka yesterday slammed the brandishing of flags of a banned terrorist organisation in front of a British court in the case against Brigadier Priyanka Fernando, former Defence Attache at the High Commission in London.

 

82.jpg

http://www.sundaytimes.lk/191208/news/foreign-ministry-slams-brandishing-of-ltte-flags-outside-british-court-381695.html

Link to comment
Share on other sites

On 12/7/2019 at 12:28 AM, பெருமாள் said:

அதன்படி, சுமார் 2400 பவுண்ட் அபராதம் விதிப்பதாக இலண்டன், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மொத்தமாக 4000 பவுண்ட்க்கு மேலாக செலுத்த வேண்டுமாம்.

வழக்கு தாக்கல் செய்யும் போது பலர் இணைந்து நட்டஈடு கேட்டு வழக்கு தாக்கல் செய்திருந்தால் இத்தொகை பல மடங்கு அதிகரித்திருக்குமாம்.

Link to comment
Share on other sites

பிரியங்க பெர்னான்டோவுக்கு ராணுவத்தில் புதிய பதவி

ELbBAWIWoAUnoy0.jpg

 

 

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ ராணுவத்தின் காணி, சொத்து மற்றும் விடுதி ஆகியவற்றுக்கான புதிய பணிப்பாளராக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

ராணுவத் தலைமையகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் தனது கடமைகளைப் உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, முன்னதாக ரணவிரு சம்பத் மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியிருந்தார்.

2018ஆம் ஆண்டு லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, புலம்பெயர் தமிழர்களை கழுத்தை அறுக்கும் சைகையை காட்டி அச்சுறுத்தியதாக பிரியங்க பெர்னான்டோ மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 2400 பவுண்ட்ஸ் (இலங்கை மதிப்பில் 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய்) அளவில் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ELbBAV9X0AAsH1W.jpg

ELbBAVzX0AA7d5d.jpg

http://athavannews.com/priyanka-fernando-assumed-duties-as-the-new-director-of-real-estate/

Link to comment
Share on other sites

புத்தபிரான் உயிருடன் இருந்திருந்தால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்திருப்பார் 😔

Link to comment
Share on other sites

52 minutes ago, ampanai said:

புத்தபிரான் உயிருடன் இருந்திருந்தால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்திருப்பார் 😔

அசோகச் சக்கரவர்தி என்கிற மிக மோசமான மனிதப் படுகொலைகாரன் முதல் ராஜபக்ச கொலைகாரக் கும்பல் வரை புத்தரைப் பயன்படுத்தியே நல்லவர்கள் வேடம் தரித்து உலகை ஏமாற்றி வருவருவதால், அவர்களின் கோட்பாடுகளின் படி புத்தர் மிகமோசமான நரகலோகத்தில் கடூழிய தண்டனைகளை அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

இன்றைய உலகில் ஆளுபவர்கள் பலரும் 'பலம்' மிக்க உள்ளவர்கள். (ட்ரம்ப், பூட்டின், வடகொரிய அதிபர், பிலிப்பைன்ஸ் அதிபர், துருக்கி அதிபர், ... இலங்கை அதிபர்)

தமிழர்களுக்கு இன்றுள்ள தலைமைகள் மென்மையான இதயம் உள்ளவர்களாக உள்ளார்கள்.  அதனால், எமது மக்கள் தான் இன்று உண்மையான புத்தபிரான் போதனைகளை பின்தொடருபவர்களாக உள்ளார்கள் !

Link to comment
Share on other sites

குற்ற எண்ணம் : டிரம்ப் பதவி நீக்கத் தீர்மானம்: குற்றச்சாட்டுகளை வெளியிட்டது அவை நீதிக்குழு.அவர்களின் சட்டப்படி குற்றம் செய்தார் என நிரூபிக்க தேவையில்லை. குற்ற எண்ணம் இருந்தது என்பதே போதுமானது. 

இது உலகின் முக்கிய செய்தி. இங்கே ருசிய நாடு இடம் அதிபர் ட்ரம்ப் அதற்கு ஆதரவாக உள்ளார், அதனால் உக்ரேன் நாட்டிற்கான பண / இராணுவ உதவியை தாமதப்படுத்தினார், அதற்காக தனக்கு எதிராக போட்டியிடும் சனநாயக வேட்ப்பாளர் ஒருவரின் மகனை ஊழலில் குற்ரேம் சாட்டினார்.

இவ்வாறு உள்ள ட்ரம்ப் இன்று வெள்ளை மாளிகையில் உருசியா நாட்டின் வெளிவிவகார அமைச்சரை வரவேற்றார். அதேபோன்று ஒரு சர்வாதிகார, எதையும் யாரையும் அலட்டிக்கொள்ளாத போக்கையே இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களும்  கையாளுகின்றனர். 

இவர்களுக்கு இடையே பொதுவானது குற்றம் செய்யும் எண்ணம். 

Link to comment
Share on other sites

13 hours ago, ampanai said:

புத்தபிரான் உயிருடன் இருந்திருந்தால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்திருப்பார் 😔

புத்தராவது கழுத்தறுத்து சாகிறதாவது.

அந்தாள் இன்னும் சில தமிழர்ற்ற கழுத்தை அறுத்துப்போட்டு நித்தியானந்தா மாதிரி போதனைகள் செய்திருப்பார்.

Link to comment
Share on other sites

1 minute ago, Rajesh said:

புத்தராவது கழுத்தறுத்து சாகிறதாவது.

அந்தாள் இன்னும் சில தமிழர்ற்ற கழுத்தை அறுத்துப்போட்டு நித்தியானந்தா மாதிரி போதனைகள் செய்திருப்பார்.

எனது கருத்தானது கீழ் உள்ள நிழற்படம் பற்றியது. கால ஓட்டத்தில் சிங்களம் யார் இந்த புத்த பிரான் அவரின் கொள்கைகள் என்ன என்று தெரியாமலேயே அவரின் பெயரில் செய்யும் .....  

ELbBAV9X0AAsH1W.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.