• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ampanai

பேராயர் மெல்கம் ரஞ்சித் நான்கு மணி நேரம் ஆணைக் குழு முன் சாட்சியம்!

Recommended Posts

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இந்தியா நான்கு முறை இலங்கையை எச்சரித்ததாக இந்திய உயரிஸ்தானிகர் என்னை சந்தித்த போது தெரிவித்ததாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்தார்.

 

20191206_140407.jpg

 

தாக்குதல் இடம்பெற்ற கால கட்டத்தில் நாட்டுக்கு சிறந்த தலைமைத்துவம் இல்லாமல் இருந்தமையும் தாக்குதலை முறியடிக்க முடியாமல் போனமைக்கான காரணங்களில் ஒன்றாகும்.  

இந்த தாக்குதல் விடயம் குறித்த எச்சரிக்கை ஒன்றினை எவரும் எமக்கு இறுதிவரை தெரிவிக்கவில்லை. அப்படி எனக்கு குறித்த எச்சரிக்கை தகவலை அளித்திருந்தால் அன்றைய உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் அனைத்தையும் நிறுத்தி நான் மக்களின் உயிரை காத்திருப்பேன் என்றும் அவர் கூறினார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் இன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில்  இடம்பெற்றது.

இதன்போது மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேனவின் நெறிப்படுத்தலில் அவரின் கேள்விகளுக்கு பதிலளித்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேற்படி விடயங்களை சாட்சியமாக பதிவு செய்தார்.  

நான்கு மணி நேரம் பதிவு செய்யப்ப்ட்ட அவரின் சாட்சியத்தில் இரு மணிநேர இரகசிய சாட்சியமும் உள்ளடங்கியிருந்தது.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  நிசங்க பந்துல கருணாரத்ன,  ஓய்வுபெற்ற நீதிபதிகளான  நிஹால் சுனில் ரஜபக்ஷ,  அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி அகியோர் முன்னிலையில் இன்று 2.00 மணி முதல்  பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சாட்சியமளித்தார்.

இதன்போது பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சார்பில்  ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேரா தலைமையில்  கிம்ஹானி கமகே,  துதிக பெரேரா,  சமத் பெர்ணான்டோ,  சந்துன் நாகஹவத்த,  பிரேமால் ரத்வத்த,  வருண சேனாதீர ஆகிய சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/70585

Share this post


Link to post
Share on other sites

தமிழ் ரஞ்சித்துக்கும் , சிங்கள ரஞ்சித்துக்கும் பிரச்சனைகள் வித்தியாசமானவை  என்பதை இரு ரஞ்சித்துக்களும் அறிவார்களா?

Share this post


Link to post
Share on other sites

வாக்குமூலம் வழங்கினார் கார்டினல்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் வாக்மூலம் வழங்கியுள்ளார்.

இன்று மூன்று மணித்தியாலங்கள் கார்டினல் வாக்குமூலம் வழங்கியுள்ளதோடு, நேற்று அவர் சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/வககமலம-வழஙகனர-கரடனல/175-242166

Share this post


Link to post
Share on other sites
43 minutes ago, ampanai said:

இன்று மூன்று மணித்தியாலங்கள் கார்டினல் வாக்குமூலம் வழங்கியுள்ளதோடு, நேற்று அவர் சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

மணித்தியாலத்துக்கு எவ்வளவு கூலி தாராங்கள்?

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, putthan said:

தமிழ் ரஞ்சித்துக்கும் , சிங்கள ரஞ்சித்துக்கும் பிரச்சனைகள் வித்தியாசமானவை  என்பதை இரு ரஞ்சித்துக்களும் அறிவார்களா?

யார் தமிழ் ரஞ்சித் அண்ணை?

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ரஞ்சித் said:

யார் தமிழ் ரஞ்சித் அண்ணை?

தமிழ் கிறிஸ்தவர்களுக்கு உள்ள பிரச்ச்னையை சிங்களகிறிஸ்தவ மதகுரு அறிவாரா? என்ற கேள்வியை தான் அப்படி எழுதினேன்

Share this post


Link to post
Share on other sites
58 minutes ago, putthan said:

தமிழ் கிறிஸ்தவர்களுக்கு உள்ள பிரச்ச்னையை சிங்களகிறிஸ்தவ மதகுரு அறிவாரா? என்ற கேள்வியை தான் அப்படி எழுதினேன்

ஓ......அந்த அர்த்தத்திலா?? சரி சரி.

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, putthan said:

தமிழ் கிறிஸ்தவர்களுக்கு உள்ள பிரச்ச்னையை சிங்களகிறிஸ்தவ மதகுரு அறிவாரா? என்ற கேள்வியை தான் அப்படி எழுதினேன்

யாராவது  கிறிஸ்தவர்களிடம் தான் கேட்கவேண்டும். இவர் எதை பற்றி இந்த ஏழு மணித்தியாலம் பேசி இருக்கிறார்? இந்த தமிழ் கிறிஸ்தவர்களுக்கும் சிங்கள கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான பிரச்சினை பற்றியா? மாறி மாறி குண்டு வைத்திருப்பார்களோ ? சும்மா இருந்த சோனிகளை மாட்டி விட்டுவிட்டார்களோ? எல்லாம் அல்லாவுக்கு தான் தெரியும்.

Edited by Jude

Share this post


Link to post
Share on other sites

ஈழ விடுதலையின் போது , நாவாலி உட்பட தமிழ் கிறிஸ்தவர்கள் ஈழ மண்ணில்  கொல்லப்படும்பொழுது இவர் அமைதிகாத்தார். அதன் மூலம் சிங்கள இனவழிப்பாளர்களுக்கு துணை போனார். அவர் அன்றும் உயிர்களுக்காக குரல் கொடுத்திருந்தால் அவரின் சாட்சியங்கள் இன்றும் உண்மையாக இருந்திருக்கும்.  

Share this post


Link to post
Share on other sites
On 12/7/2019 at 5:32 PM, Jude said:

யாராவது  கிறிஸ்தவர்களிடம் தான் கேட்கவேண்டும்.

 

10 minutes ago, ampanai said:

ஈழ விடுதலையின் போது , நாவாலி உட்பட தமிழ் கிறிஸ்தவர்கள் ஈழ மண்ணில்  கொல்லப்படும்பொழுது இவர் அமைதிகாத்தார். அதன் மூலம் சிங்கள இனவழிப்பாளர்களுக்கு துணை போனார்.

நன்றி கிறீஸ்தவரே, முன்வந்து உண்மையை சொன்னதுக்கு. நாவாலி உட்பட தமிழ் கிறிஸ்தவர்கள் ஈழ மண்ணில்  கொல்லப்படும்பொழுது இவர் அமைதிகாத்தார் என்ற உள்வீட்டு உண்மையை வெளியே கொண்டுவந்ததற்கு நன்றி. அப்போதும் இவர் கார்டினலாகவா இருந்தார்? நான் நினைத்தேன் அந்த நாட்களில் இவர் இளைய வயதினராக எங்கோ கூட்டிப்பெருக்கிக்கொண்டு இருந்திருப்பார் என்று. நீங்கள் எழுதித்தான் தெரிகிறது இவர் நீண்டகாலம் இந்த பதவியில் இருக்கிறார் என்று. எல்லாம் அல்லாவுக்கு தான் தெரியும்.

Share this post


Link to post
Share on other sites

இவரை வட கிழக்கு கத்தோலிக்க மக்கள் தங்களது கர்தினாலாக ஏற்றுக்கொள்ளவில்லை. இவர் சிங்கள மக்களுக்குத்தான் கர்தினால். வட கிழக்கு தமிழ் கத்தோலிக்கர்கள் தங்களுக்கு தனியான பிரிவை கேட்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள். இது வெளியில் தெரியாவிடடாலும் நீறு பூத்த நெருப்பாக இது கனன்றுகொண்டு இருக்கிறது.

நீங்கள் நன்றாக கவனித்தீர்களானால் இது விளங்கும். காத்தோலிக்கர்களின் முக்கியமான மடுமாதா  திருவிழாவில் இவர் ஒரு நாளுமே கலந்துகொள்ளவில்லை. போப்பாண்டவர் இலங்கை வந்தபோது இவரையும் அழைத்துக்கொண்டு மடுவுக்குப்போனார் பிரச்சினையை தீர்க்க. இருந்தாலும் இது இன்னும் தீர்க்கப்படவில்லை.

இவர் தன்னை ஒரு சிங்கள கத்தோலிக்கராகவே அடையாளப்படுத்துபவர். அதனால் தமிழ் கத்தோலிக்கர்கள் அவரை ஏற்றுக்கொள்வதில்லை.

ஏப்ரில் குண்டு தாக்குதலுக்கு பின்னர் இவர் எல்லா இடமும் சென்றார் , ஏன் ஒரு பவுத்த பிக்கு உண்ணாவிரதமிருந்து இடத்துக்கும்  சென்றார். ஆனாலும் மடடகளப்பு   கிறிஸ்தவ   தேவாலயத்துக்கு  செல்லவில்லை. அநேக பத்திரிகைகளில் இதை சுட்டிக்காடிய பின்னர்தான் அங்கு ஓடிப்போனார். இருந்தாலும் தனக்கு கிடைத்த கோடிக்கணக்கான  பணத்தில் அவர்களுக்கு சொல்லும்படியாக ஏதும் கொடுக்கவுமில்லை. 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • பிள்ளையானின் முதல் நியமனம்? சிறையில் இருந்து மகிந்தவுக்கு பறந்த செய்தி! மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிபாரிசில் முதலாவது நியமனம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருக்கும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன் தற்போதைய அரசாங்கத்தை சிறையில் இருந்து இயக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பிள்ளையானின் முதல் நியமனமாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நியமனம் அமைந்துள்ளது. வெகு விரைவில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபர் நியமிக்கப்பட உள்ள நிலையில். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக வருவதற்கு பலரது பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டிருந்த போதும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சந்திரகாந்தனின் சிபாரிசில்  கலாமதி பத்மராஜா அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு அவர் நியமிக்கப்பட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிபாரிசில் நடைபெற்ற முதலாவது அதி உயர் அரச நியமனம் இது என்பதுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அதிகாரம் இதனூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் என்பதுடன் அரச நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள் அதிகரிக்கலாம் என பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இதை விட நாட்டின் கௌரவ ஜனாதிபதி அவர்கள் மோசடிகளில் ஈடுபட்ட அரச அதிகாரிகளை உயர் பதவிகளில் நியமிக்க மாட்டேன் என்று கூறியுள்ள நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் விசாரணை செய்யப்பட்டவர்களை அரசியல இலாபங்களுக்காக நியமிப்பாரா? என்ற கேள்வி எழுகிறது. அதுவும் கொலைக் குற்றச்சாட்டுகளில் சிறையில் இருக்கும் ஒருவரது சிபாரிசில் மாவட்ட அரசாங்க அதிபர் ஒருவரை ஜனாதிபதி அவர்கள் நியமிக்கமாட்டார் என பொது ஜன பெரமுன கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எது எவ்வாறு இருப்பினும் தற்போதைய நிலவரப்படி மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருக்கும் பிள்ளையானிடம் இருந்து கட்சியின் செயலாளர் பிரசாந்தன் ஊடாக பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு அனுப்பப்பட்ட தகவலின் படி கலாமதி பத்மராஜா அவர்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டு அவரது பெயர் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.   http://www.battinaatham.net/description.php?art=23307
  • விசேட தீர்வு திட்டங்களுடன் ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம் (எம்.மனோ­சித்ரா) ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக் ஷ விசேட தீர்வு திட்­டங்கள் மற்றும் சலு­கை­க­ளுடன் இம்­மாத இறு­திக்குள் வடக்­கிற்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக ஜனா­தி­பதி செய­லக ஊட­கப் ­ப­ணிப்­பாளர் மொஹான் சம­ர­நா­யக்க தெரி­வித்தார். வடக்­கிற்கு விஜயம் செய்­வ­தற்கு உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள போதிலும் இன்னும் தினம் குறித்து தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை என்றும் அவர் தெரி­வித்தார். வடக்­கிற்கு விஜயம் செய்­ய­வுள்ள ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக் ஷ அர­சி­யல்­வா­திகள் மாத்­தி­ர­மின்றி இளை­ஞர்கள், புத்­தி­ஜீ­விகள் உள்ளிட்ட பல­த­ரப்­பட்­ட­வர்­க­ளையும் சந்­திக்­க­வுள்ளார். இந்த விஜ­யத்தின் போது காணி விடு­விப்பு, காணாமல் ஆக்­கப்­பட்டோர் விவ­காரம், மக்­களின் அடிப்­படை பிரச்­சினை, குடிநீர் பிரச்­சினை, வேலை வாய்ப்­புக்கள் என்­ப­வற்­றோடு வடக்கின் அபி­விருத்தி உள்­ளிட்ட மேலும் பல முக்­கிய விட­யங்கள் தொடர்­பிலும் கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது. இவற்­றுக்கு மேல­தி­க­மாக விசேடமாக வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட தமிழ் அர­சியல் கட்­சி­க­ளுடன் சந்திப்புக்­களில் ஈடு­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக் ஷ வடக்­கிற்கு மேற்­கொள்­ள­வுள்ள முத­லா­வது விஜயம் என்­பதால் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக இருக்கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. ஐக்­கிய நாடுகள் சபையின் இலங்­கைக்­கான வதி­வி­டப்­பி­ர­தி­நிதி ஹனா சிங்­க­ரு­ட­னான சந்­திப்பில் 'தமிழ் அர­சி­யல்­வா­திகள் தமது அர­சியல் அபி­லா­ஷை­க­ளுடன் முரண்­பட்­டுள்ள போதிலும், காணாமல் போனோ­ரது உற­வி­னர்­களின் குடும்­பங்­களின் நல­னுக்­கான செயற்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­பது அர­சாங்­கத்தின் எதிர்­பார்ப்­பாகும்' என்று ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக் ஷ சுட்­டிக்­காட்­டி­யிருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.   https://www.virakesari.lk/article/73469
  • ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் ஏமனில் 60 பேர் உயிரிழப்பு ! ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இராணுவ முகாம் மீது நடத்திய தாக்குதலில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஏமனின் தெற் பகுதியில் உள்ள இராணுவ முகாம்களை தகர்ப்பதற்காக கிளரச்சியாளகர்கள் ட்ரோன்கள் (drones) மற்றும் பிளாஸ்டிக் ஏவுகணைகள் (ballistic missiles) பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அத்தோடு அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹவுத்தி கிளர்ச்சியாகர்களின் தாக்குதலில் பொதுமக்கள் அதிகளவில் உயிரிழந்துள்ளதோடு , சொத்துக்களுக்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளது. அத்தோடு நேற்றைய தினம் ஏமனில் இராணு முகாம் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 25 இராணுவத்தினர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.   https://www.virakesari.lk/article/73477
  • சிங்கள பௌத்த அமைப்புகளைச் சேர்ந்த பௌத்த மதகுருமார்கள் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு விஜயம் பௌத்த கலாசார மத்திய நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் ராவண பலகாய அமைப்பின் தலைவர் இத்தா கந்தே சத்தா திஸ்ஸ தேரோ மற்றும் சிக்கலே அமைப்பைச் சேர்ந்த மடில்லே பஞ்ஞாலோக தேரோ ஆகியோர் அடங்கிய குழுவினர் முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு விஜயம் செய்தனர். கொழும்பில் இருக்கும் பௌத்த மதகுருமார்களைவிடவும் வடக்கு, கிழக்கில் வசிக்கும் மதகுரமார்கள் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாகவும் தமிழ் இனவாதிகளால் அவர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகவும் அந்த நிலைமைகள் குறித்து ஆராயும் நோக்கோடு அவர்களுக்குரிய பாதுகாப்பை ஏற்படுத்தி பௌத்த மதத்தை வளர்க்கும் நோக்கோடு தாம் இப்பகுதிக்கு விஜயம் செய்ததாக ராவண பலகாய அமைப்பின் தலைவர் இத்தா கந்தே சத்தா திஸ்ஸ தேரர் இதன்போது கருத்து தெரிவித்திருந்தார். குறித்த குழுவினர் நேற்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில் அங்கு சென்று ஆலயம் அமைந்துள்ள பகுதியை பார்வையிட்டதோடு, பிள்ளையார் ஆலய பகுதியில் அமைக்கப்படுள்ள பௌத்த விகாரையைச் சேர்ந்த அமைப்பினருடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)   http://www.samakalam.com/செய்திகள்/சிங்கள-பௌத்த-அமைப்புகளைச/
  • கிளிநொச்சியில் சமூக சீர்கேடு செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் கிளிநொச்சி- விநாயகபுரம் பகுதியில் சமூக சீர்கேடு செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். விநாயகபுரம் கிராம அபிவிருத்தி சங்க மண்டபம் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.குறித்த பிரதேசத்தில் இயங்கும் பாலியல் விடுதியை தடை செய்யவும் அதற்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளக் கோரியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. குறித்த சட்டவிரோத செயற்பாட்டைக் கட்டுப்படுத்தி தமது பிரதேசத்தை பாதுகாத்துத் தருமாறும், பிரதேசத்தின் நன்மதிப்பை மீளப் பெற்றுத் தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/கிளிநொச்சியில்-சமூக-சீர்/