Jump to content

லைகா நிறுவனர் சுபாஸ்கரன் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க ஆசை: மணிரத்னம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
லைகா நிறுவனர் சுபாஸ்கரன் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க ஆசை: மணிரத்னம்படத்தின் காப்புரிமை Getty Images Image caption கோப்புப் படம்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (சனிக்கிழமை) வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

லைகா நிறுவனர் சுபாஸ்கரன் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க ஆசை: மணிரத்னம்

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனர் சுபாஸ்கரனின் சமூக சேவைகளைப் பாராட்டி, மலேசியாவின் அமிஸ்ட் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

விஜய் நடிப்பில் வெளியான 'கத்தி' படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் சுபாஸ்கரன் அல்லிராஜா. தனது லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தொடர்ந்து பல்வேறு பிரம்மாண்ட படங்களைத் தமிழில் தயாரித்து வருகிறார். தற்போது ரஜினி நடிக்கும் 'தர்பார்', கமல் நடிக்கும் 'இந்தியன்-2', மணிரத்னம் இயக்க உள்ள 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வருகிறார்.

லைகா நிறுவனர் சுபாஸ்கரன் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க ஆசை: மணிரத்னம்

இவரது லைகா குழுமம், இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் ஒரு பிரிவான லைகா மொபைல் நிறுவனம், உலகின் பல நாடுகளில் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக விளங்குகிறது.

இது மட்டுமின்றி, சமூக சேவையிலும் சுபாஸ்கரன் கவனம் செலுத்தி வருகிறார். இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் தமிழர்களுக்காக நூற்றுக்கணக்கான வீடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள சிறுவர்களுக்கு பல வகையான உதவிகள், விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள், குடிநீர் தட்டுப்பாடு உள்ள நாடுகளில் அதற்கான வசதிகள் என பல உதவிகளைச் செய்து வருகிறார்.

இந்நிலையில், அவரது சமூக சேவைகளைப் பாராட்டி மலேசியாவில் உள்ள அமிஸ்ட் (ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிசின், சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி) பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

இதையொட்டி, சுபாஸ்கரனுக்கு பாராட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குநர் மணிரத்னம் பேசும்போது, ''சுபாஸ்கரனின் அபார வளர்ச்சி வியக்க வைக்கிறது. அதை ஒருநாள் சினிமாவாக பண்ண ஆசை'' என்றார்.

தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் பேசும் போது, ''நம்மை ஆட்சி செய்த பிரிட்டிஷார் மத்தியில் அவர் பிரபல தொழிலதிபராக ஆட்சி செய்து கொண்டிருப்பது நம் அனைவருக்கும் பெருமை. அவரது வெற்றிக் கதை ஒரு பாகத்தில் அடங்காதது. முதல் பாகத்தை மணிரத்னம் எடுத்தால், நான் 2-ம் பாகம் பண்ணிக் கொள்கிறேன்'' என்றார்.

https://www.bbc.com/tamil/india-50703011?ocid=socialflow_facebook&fbclid=IwAR0cfmWK62tmN6_YqvMr4uy_E-K1DLoGUFMp0I0K4CtVXpv1H3cXHaF-L3g

Link to comment
Share on other sites

லைகா லிபறா போன்ற பல தொழிலதிபர்கள் எம்மத்தியில் வளர்வதிலேயே ஈழத்தமிழினத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது

அரசியல்வாதிகளில் அல்ல.

எம்மத்தியில் தோன்றும் தொழிலதிபர்களுக்கு உறுதுணையாக இருப்போம். 

குற்றம் காண்பின் சுற்றம் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மணிரத்தினம் சார்  திருப்பியும்  ஒரு ஈழக்கதையை வைச்சு காசு பார்க்கப்போறாரு 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனர் சுபாஸ்கரனின் சமூக சேவைகளைப் பாராட்டி, மலேசியாவின் அமிஸ்ட் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இவர்கள் செய்வது சமூக சேவையா..??! முடியல்ல.

காசு கொடுத்தா.. கெளரவ பட்டங்கள் சும்மா கிடைக்கும்.

மேலும் மணிரத்தினம்.. கொஞ்சம் வசதியான ஆட்களிடம் மசிவது ஒன்றும் புதிதல்ல.

இவரின் சுயசரிதையை படமாக்க வேண்டுமாயின் பிரான்ஸில் இருந்து சுருட்டிக் கொண்டு இங்கிலாந்துக்கு ஓடி வந்தது முதல்....... 

கொடுமை.

இதில.. இப்படியானவர்கள் வளரனுமாம்..

வளர்ந்து.... ஊரை சுருட்டனுமாக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

மணிரத்தினம் சார்  திருப்பியும்  ஒரு ஈழக்கதையை வைச்சு காசு பார்க்கப்போறாரு 🤣

ஈழத்தவன் காசிலேயே காசு பார்ககப் போகிறார்.

ஈழத்தமிழன் தென்னிந்திய திரைப்படத்துறை  தயாரிப்பாளர் ஆவது ஒரு சமூக சேவை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.