Jump to content

அபிவிருத்தி அரசியல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

அபிவிருத்தி அரசியல்

பி.மாணிக்கவாசகம்

அதி­காரப் பகிர்வு, அர­சியல் தீர்வு என்ற வட்­டத்தில் இருந்து தமிழ்த்­த­ரப்பு வெளியில் வர­வேண்­டிய நிர்ப்­பந்தம் எழுந்­துள்­ளது. அர­சியல் தீர்வு காண்­பது அவ­சியம்; மிக மிக அவ­சியம். அந்த வகையில் அர­சியல் தீர்வின் மூலம் அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காண முடியும். அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் அர­சியல் தீர்வே முடிவானது  என்ற வட்­டத்தில் தமிழ்த் ­த­லை­மைகள் மூழ்கி இருந்­தன. 

TNA.jpg

இந்த அர­சியல் நம்­பிக்­கையை தமிழ்த்­ த­ரப்பு யுத்­தத்­திற்கு முன்­னரும் கொண்­டி­ருந்­தது. பின்­னரும் பற்­றி­யி­ருந்­தது. இறுக்­க­மாகப் பற்­றி­யி­ருந்­தது. இந்த நம்­பிக்கை மீதான பற்­று­தலே, இணக்க அர­சி­யலில் இருந்து விலகி, அதனை எதிர்ப்­ப­ர­சி­யலில் ஈடு­படச் செய்­தி­ருந்­தது. அதுவும் தீவி­ர­மாக ஈடு­படச் செய்­தி­ருந்­தது.

சாத்­வீகப் போராட்­டங்­களும், ஆயுதப் போராட்­டமும் அர­சியல் தீர்­வுக்­கு­ரிய சாத­க­மான வழித் தடத்தைத் திறப்­ப­தற்கு உதவவில்லை. இந்தப் போராட்­டங்­களின் ஊடாக அர­சியல் தீர்­வுக்­காக அரசு மீது மேற்­கொள்­ளப்­பட்ட அழுத்­தங்கள் பேச்­சு­வார்த்தை மேசைக்கு இரு தரப்­பி­ன­ரையும் நகர்த்திச் சென்­றன. 

அந்த அழுத்த முயற்­சிகள் பேச்­சு­வார்த்தை என்ற புள்­ளியை நோக்கி இரு தரப்­பி­ன­ரையும் நகர்த்திச் சென்­ற­னவே தவிர, பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­கு­ரிய உள பூர்­வ­மான - இத­ய­சுத்­தி­யுடன் கூடிய இணக்­கப்­பாட்­டிற்குக் கொண்டு செல்­ல­வில்லை. இதனால், அந்தப் பேச்­சு­வார்த்­தைகள் வெற்றி பெறு­வதைப் போன்று தோற்றம் தந்­த­னவே தவிர வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. பலன்­களும் ஏற்­ப­ட­வில்லை.

யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் தமிழ்த்­த­ரப்பு தன்னை ஒன்­றி­ணைந்த ஓர் அர­சியல் சக்­தி­யாக மாற்­றிக்­கொள்ளத் தவ­றி­விட்­டது. அத்­த­கைய ஒரு சக்­தி­யாக அர­சியல் தீர்வு என்ற இலக்கை நோக்கி சாமர்த்­தி­ய­மாகக் காய் நகர்த்­தல்­களை அது மேற்­கொள்­ள­வில்லை. 

யுத்­தத்தில் பயங்­க­ர­வா­தத்தை இல்­லாமல் ஒழித்­து­விட்­ட­தாகக் கூறி­னாலும், விடு­த­லைப்­பு­லிகள் ஆயுத பலத்­துடன் மீண்டும் தலை­யெ­டுத்­து­வி­டு­வார்கள் என்ற அர­சியல் ரீதி­யான அச்­சத்தை மக்கள் மத்­தியில் பேணு­வ­தி­லேயே மஹிந்த ராஜ­பக்ஷ அர­சாங்கம் தீவிர கவனம் செலுத்தி இருந்­தது.

பதி­லில்லா கேள்­வி­களும் பொறுப்பு தவ­றிய நிலை­மையும்

விடு­த­லைப்­பு­லி­களின் மீள் எழுச்சி அல்­லது மீள் ஒன்­றி­ணைவு என்று புலிப்­பூச்­சாண்டி நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து, வடக்­கையும் கிழக்­கையும் அந்த அரசு  ரா­ணுவ மயப்­ப­டுத்தி இருந்­தது. ஒரு பக்கம்  ரா­ணுவ சூழல் உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தது. மறு­பக்­கத்தில் மீள்­கு­டி­யேற்றப் பிர­தே­சங்­களில் மக்­களைத் தொடர்ந்தும் அச்ச நிலையில் வைத்­தி­ருப்­ப­தற்­காகப் பல்­வேறு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. இவை அர­சாங்­கத்­திற்குத் தெரி­யாத நட­வ­டிக்­கை­க­ளா­கவே காட்­டப்­பட்­டி­ருந்­தன.  ரா­ணுவமயப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த சூழலில் அந்த நட­வ­டிக்­கைகள் அர­சாங்­கத்­துக்கு எவ்­வாறு தெரி­யாமல் போனது? ஏன் அவற்றை உட­ன­டி­யாகக் கட்­டுப்­ப­டுத்தி மக்­க­ளு­டைய அச்­சத்­தையும் பீதி­யையும் போக்­க­வில்லை என்­பது பதி­லில்­லாத கேள்­வி­க­ளாகத் தொக்கி நின்­றன. 

அடை­யாளம் தெரி­யாத கொள்ளைக் கூட்­டத்­தி­ன­ரு­டைய கொள்ளைச் சம்­ப­வங்கள், கிறிஸ் பூதத்தின் நட­மாட்டம் போன்ற செயற்­பா­டுகள் தமிழ் மக்­களைத் தொடர்ச்­சி­யான அச்ச நிலையில் வைத்­தி­ருப்­ப­தற்கு உத­வி­யாக இருந்­தன.

ரா­ணு­வத்­துக்குத் தெரி­யாமல் எந்­த­வொரு நிகழ்வும் இடம்­பெறக் கூடாது. அது குடும்ப நிகழ்­வாக இருக்­கலாம் அல்­லது பொது நிகழ்­வாக இருக்­கலாம். அனைத்துச் செயற்­பா­டு­களும் அந்­தந்தப் பிர­தே­சத்­துக்குப் பொறுப்­பான  ரா­ணு­வத்­தி­ன­ருக்குத் தெரிந்­தி­ருக்க வேண்டும். தெரி­யப்­ப­டுத்த வேண்டும் என்­பது எழு­தாத சட்­ட­மாக நடை­மு­றையில் இருந்­தது. 

இவ்­வ­கை­யான இரா­ணுவ கெடு­பி­டி­க­ளுடன் கூடிய அச்­சு­றுத்­தல்கள், கொள்­ளை­யர்­களின் கைவ­ரிசை மற்றும் கிறிஸ் பூதத்தின் நட­மாட்டம் என்­ப­வற்­றினால் பீதி உணர்வே மக்­களை ஆட்சி செய்­தன. அர­சியல் நிகழ்ச்­சி­நிரல் ஒன்றைப் பின்­ன­ணி­யாகக் கொண்­டி­ருந்த இந்த அச்சம் நிறைந்த சூழலை, ஆழ ஊடு­ருவி நோக்கி சரி­யான வழி­மு­றையில் மக்­களை வழி­ந­டத்­து­கின்ற பொறுப்பை தமிழ் அர­சியல் தலை­மைகள் கோட்­டைவிட்டிருந்­தன. 

யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த அர­சாங்கம் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சியல் ரீதி­யாகத் தீர்வு காண முற்­ப­ட­வில்லை. யுத்தம் மூள்­வ­தற்கு அடிப்­படை கார­ண­மா­கிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வின் மூலம் அரசு முடிவு கண்­டி­ருக்க வேண்டும். 

தீவிர யுத்த மோதல்கள் இடம்­பெற்ற வேளை, யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­ததும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­புடன் பேச்­சுக்கள் நடத்தி அர­சியல் தீர்வு காணப்­படும் என்ற அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். ஆனால் யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­ததன் பின்னர் அர­சியல் தீர்வு காண்­பதில் அரசு அக்­கறை செலுத்­த­வில்லை.  

கல்லில் நார் உரிக்கும் காரியம்

இந்­திய அரசின் துணையை நாடிய தமிழ்த்­தே­சியக் கூட்டமைப்பு அர­சியல் தீர்­வுக்­கான பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கு அர­சாங்­கத்தை நெட்டித் தள்­ளி­யி­ருந்த போதிலும், ஆக்­க­பூர்­வ­மாக அதனை நடத்தக் கூடாது என்ற அர­சாங்­கத்தின் நிகழ்ச்சி நிர­லின் ­ப­டியே நடை­பெற்­றது. ஒரு வருட காலம் நீடித்த அந்தப் பேச்­சு­வார்த்­தையை அரசு தன்­னிச்­சை­யாக முறித்த போதிலும், தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பே பேச்­சு­வார்த்­தையைக் குழுப்­பி­ய­டித்­தது என குற்றம் சுமத்­தி­யது. 

தமிழ்த்­த­ரப்­புக்கே அர­சியல் தீர்வு தேவை. அது தமிழ் மக்­களின் வாழ்க்­கைக்கு மிகவும் அவ­சி­ய­மா­னது. அந்த வகையில் அது அதி முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருந்­தது. அர­சாங்­கத்­துக்கு அந்தத் தேவை இருக்­க­வில்லை. அதற்­கான நிர்ப்­பந்­தமும் அர­சுக்கு ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை. 

அர­சாங்­கத்தின் இணக்­க­மில்­லாத நிலை­யி­லேயே அர­சியல் தீர்­வுக்­கான அந்தப் போச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. இதனால் அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­து­வது என்­பது கல்லில் நார் உரிப்­ப­தை­விட கடி­ன­மான காரி­ய­மாக இருந்­தது. அத்­த­கைய கடு­மை­யான சூழ­லி­லேயே தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு, மஹிந்த ராஜ­பக்ஷ அர­சாங்­கத்­துடன் பேச்­சுக்­களை நடத்­தி­யது. இதனை மறுப்­ப­தற்­கில்லை.

ஆனாலும் கடும் போக்­கையும் கடும் நிலைப்­பாட்­டையும் கொண்­டி­ருந்த அர­சாங்­கத்தை வழிக்குக் கொண்டு வரு­வ­தற்­கான அகப்­புற அழுத்­தங்­களைக் கொடுக்க வேண்­டிய பொறுப்பு தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பையே சார்ந்­தி­ருந்­தது; சார்ந்­தி­ருக்­கின்­றது என்­ப­தையும் மறுத்­து­ரைக்க முடி­யாது. யுத்தம் முடி­வ­டைந்த சூழலில் அதற்­கான வாய்ப்­புக்கள் சர்­வ­தேச அளவில் சாத­க­மாக இருந்­தன. அந்த சாத­க­மான நிலை­மையை தமிழ்த்­த­ரப்­பி­னரால் ரா­ஜ­தந்­திர அணு­கு­மு­றை­யுடன் கையாள முடி­யாமல் போய்­விட்­டது. களத்தில் உள்ள தரப்­பி­ன­ருக்கும், புலத்தில் உள்ள தரப்­பி­ன­ருக்கும் இது பொது­வான பொறுப்­பாக இருந்­தது. 

யுத்­த­மோ­தல்­க­ளின்­போது யுத்த பிர­தே­சத்தில் சிக்­கி­யி­ருந்த பொது­மக்­களைப் பாது­காக்க வேண்­டிய கட­மையில் இருந்து – பொறுப்பில் இருந்து ஐ.நா. தவ­றி­விட்­டது என்­பதை  அந்தச் சபையே  ஏற்றுக் கொண்­டி­ருந்­தது. சர்­வ­தேச நாடு­களும் பொறுப்பு கூறு­கின்ற கடப்­பாட்டை அரசு நிறை­வேற்ற வேண்டும் என்­பதில் அக்­க­றையும் ஆர்­வமும் கொண்­டி­ருந்­தன.

யுத்த வெற்­றியில் திளைத்­தி­ருந்த அர­சாங்கம் கடும் நிலைப்­பாட்டைக் கொண்டி­ருந்­த­துடன், விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தை முழு­மை­யான பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­யாகச் சித்திரித்து, அதன் அடிப்­ப­டையில் யுத்த மோதல்­களை தனக்குச் சாத­க­மான முறையில் பயன்­ ப­டுத்திக் கொண்­டது. இதன் கார­ண­மா­கவே அது போர்க்­குற்றச் சாட்­டுக்­க­ளுக்கு ஆளாக நேரிட்­டது. 

Gota.jpg

ஒரே பார்வை

ஆனால் யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் யுத்­தத்­தினால் அழிந்து போன வடக்­கையும் கிழக்­கையும் புன­ர­மைத்து சீர்செய்ய வேண்­டிய கட்­டாயக் கட­மையை, அபி­வி­ருத்தி என்ற போர்­வையில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தது. இதனை சுய அர­சியல்  லா­பத்­துக்­காக வடக்­கிலும் கிழக்­கிலும் பாரிய அபி­வி­ருத்தித் திட்­டங்­களை மேற்­கொண்­ட­தா­கவும், இத்­த­கைய அபி­வி­ருத்திச் செயற்­பா­டுகள் தெற்கில் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்ற ஒப்­பீட்டு பிர­சா­ரத்­தையும் அது மேற்­கொண்­டி­ருந்­தது.

யுத்­தத்­தினால் வடக்கு–கிழக்குப் பிர­தே­சங்கள் மட்­டு­மல்­லாமல் நாட்டின் ஏனைய பிர­தே­சங்­களும் ஏதோ ஒரு வழியில் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தன என்­பதை ஏற்­றுக்­கொள்­ளத்தான் வேண்டும். அதே­போன்று யுத்­தத்­தினால் நாட்டின் பொரு­ளா­தாரம், அர­சியல், சமூகக் கட்­ட­மைப்­புக்­களும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தன. அவற்றைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­துடன், முறை­யான அபி­வி­ருத்திச் செயற்­பா­டு­க­ளையும் மேற்­கொள்ள வேண்­டிய தேசிய மட்­டத்­தி­லான தேவையை உணர முடி­கின்­றது. 

ஆனால் அர­சியல் ரீதி­யான விட­யங்­க­ளுக்கு அர­சியல் ரீதி­யான அபி­வி­ருத்­தியும் - அர­சியல் ரீதி­யான தீர்வுச் செயற்­பா­டு­களும், பாதிக்­கப்­பட்ட மக்­களின் வாழ்­வா­தாரம், பொரு­ளா­தாரம், சமூக மேம்­பாடு என்­பன அந்­தந்தத் துறைக்கு ஏற்ற வகை­யி­லான நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். இந்த நட­வ­டிக்­கைகள் - அர­சியல் மற்றும் பொரு­ளா­தார அபி­விருத்திச் செயற்­பா­டுகள் சமாந்­த­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். முன்­னெ­டுக்­கப் ­ப­டவும் வேண்டும். 

இந்த விட­யத்தில் அரச தரப்­பினர் யுத்­தத்தின் பின்­ன­ரான கடந்த பத்து ஆண்­டு­களில் சரி­யான முறையில் - நாட்­டுக்கும் மக்­க­ளுக்கும் நன்மை அளிக்கும் வகையில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வில்லை என்றே கூற வேண்டும். மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களும் அத­னை­யொட்­டிய அபி­வி­ருத்தித் திட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. இல்­லை­யென்று கண்­மூ­டித்­த­ன­மாக மறுக்க முடி­யாது. ஆனால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் - பாதிக்­கப்­ப­டா­த­வர்கள், பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்கள், - பாதிக்­கப்­ப­டாத பிர­தே­சங்கள் என்ற தொகுப்பு நிலையில் அந்த நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­க­ளையும் பாதிக்­கப்­ப­டாத பிர­தே­சங்­க­ளையும் அதே­போன்று பாதிக்­கப்­பட்ட மக்­க­ளையும் பாதிக்­கப்­ப­டாத மக்­க­ளையும் ஒரே பார்­வையில் சமத்­துவ நோக்கில் வைத்து நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இதன் அடிப்­ப­டை­யில்தான் தேசிய அபி­வி­ருத்தி என்ற போர்­வைக்குள் தனது எதிர்­கால நட­வ­டிக்­கைகள் அமைந்­தி­ருக்கும். ஆட்சி  செயற்­பா­டுகள் இடம்­பெறும் என்று புதிய ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ தொனி செய்­தி­ருக்­கின்றார். 

இரு தரப்பும் ஒரு புள்­ளியில் சந்­திக்க முடி­யுமா.....?

அதி­காரப் பகிர்வு, அர­சியல் தீர்வு என்­பன பத்­தாம்­ப­ச­லித்­த­ன­மான கோரிக்­கைகள். அவற்றைத் தூக்கி எறிந்­து­விட்டு, பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை இலக்­காகக் கொண்டு செயற்­பட வேண்டும். அதற்கு அனைத்து மக்­களும் குறிப்­பாக சிறு­பான்மை இன மக்கள் அதிலும் தமிழ் மக்­களும் தன்­னுடன் ஒத்­து­ழைக்க முன்­வர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்­துள்ளார்.

 ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக்ஷ இரண்டு நிலைப்­பா­டு­களை மிகத் தெளி­வாக வெளிப்­ப­டுத்தி இருக்­கின்றார். இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வுக்­கான பேச்­சு­வார்த்­தைகள் கிடை­யாது. அதி­காரப் பகிர்வு, அர­சியல் தீர்வு என்ற குறு­கிய நீண்­ட­கால நிலைப்­பாட்டைத் தமிழ்த்­த­ரப்பு கைவிட வேண்டும். பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியே அவ­சியம். தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு தமிழ் மக்­க­ளி­னதும், தமிழ்ப் பிர­தே­சங்­க­ளி­னதும் அபி­வி­ருத்­தியில் கவனம் செலுத்த வேண்டும். என்ற நிலைப்­பாட்டை அவர் வெளிப்­ப­டுத்தி உள்ளார்.  

அபி­வி­ருத்தி மட்­டுமே இலக்கு என்ற கடும் நிலைப்­பாட்டில் அரசு நிற்­கின்­றது. அர­சாங்­கத்தின் இந்த நிலைப்­பாடும், தமிழ் மக்­களின் தமிழ்த்­தே­சியம் சார்ந்த தாயகம், சுய­நிர்­ணய உரிமை, சமஷ்டி என்ற தமி­ழர்­களின் தனித்­து­வத்­துக்­கான அர­சியல் தீர்வு நிலைப்­பாடும் ஒரு புள்­ளியில் இணக்க முறை­யி­லான சந்­திப்­புக்கு வழி வகுக்­க­மாட்­டாது.

இதுவே ஜனா­தி­ப­தி­யாக, முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ சிங்­கள பௌத்த தேசியப் போக்­கு­டைய பேரா­த­ர­வினால்  தெரிவு செய்­யப்­பட்ட பின்­ன­ரான நாட்டின் அர­சியல் யதார்த்­தம்.

இதனை தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு மிக நன்­றா­கவே உணர்ந்­துள்­ளது. எதிர் ­கா­லத்தில் அமைச்சுப் பொறுப்­புக்­களை ஏற்­பது தொடர்பில் கூட்­ட­மைப்பு பரி­சீ­லிக்கும் என்று அதன் பேச்­சா­ளரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய சுமந்­திரன் தெரி­வித்­துள்ள கருத்து இதனைத் தெளி­வாக்கி உள்­ளது. 

அமைச்சுப் பத­வி­களை ஏற்­பது என்­பது தமது மக்­க­ளுக்­கான அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களை வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுப்­ப­தையே நோக்­க­மாகக் கொண்­டி­ருக்கும். முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் அர­சு­களில் இணைந்து அமைச்சுப் பத­வி­களை ஏற்று இந்த வகை­யி­லேயே செயற்­பட்­டி­ருந்­தனர். தமது மக்­க­ளு­டைய வாழ்க்­கையை இதன் மூலமே அவர்கள் மேம்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

முஸ்லிம் அமைச்­சர்கள் அர­சாங்­கத்தில் அதி­காரம் பெற்­றி­ருந்த தரு­ணங்­களில் தமது மக்­களின் நன்­மை­களை கருத்­திற்­கொண்டு செயற்­ப­டு­வ­தி­லேயே கூடுதல் குறி­யாக இருந்­தனர். இதனால் முஸ்லிம் மக்­க­ளுடன் வாழ்ந்த போதிலும் தமிழ் மக்­களின் தேவைகள் பூர்த்தி செய்­யப்­ப­ட­வில்லை. ஒரு வகையில் வடக்­கிலும் கிழக்­கிலும் முஸ்லிம் அமைச்­சர்கள் தமி­ழர்­களைப் புறந்­தள்ளிச் செயற்­ப­டு­வ­தி­லேயே கவ­ன­மாக இருந்­தனர். 

அர­சியல் தீர்வும் அபி­வி­ருத்­தியும்

வடக்­கிலும் பார்க்க கிழக்கு மாகா­ணத்தில் தமி­ழர்­களின் உரி­மை­களைப் பறிப்­பதில் முஸ்லிம் அமைச்­சர்­களும் அதி­காரம் பெற்­றி­ருந்­த­வர்­களும் கூடிய கவனம் செலுத்தி இருந்­தனர். இதனால் தமிழ், முஸ்லிம் சமூ­கங்­க­ளி­டையே நில­விய நல்­லு­றவும் நல்­லி­ணக்­கமும் தகர்ந்து போயின. இன முறுகல் நிலைமை தலை­யெ­டுத்­தது. 

இதன் கார­ண­மா­கவே ஜனா­தி­பதி கோத்­த­பாய தலை­மை­யி­லான அர­சாங்­கத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு அமைச்சுப் பத­விகள் வழங்­கப்­ப­டாத நிலை­மையை முன்னாள் விடு­த­லைப்­பு­லி­களின் முக்­கிய உறுப்­பி­னரும் மஹிந்த ராஜ­பக்ஷ அணியில் இணைந்து முக்­கிய அர­சியல் புள்­ளி­யாகக் கரு­தப்­ப­டு­ப­வரும், தமிழ் மக்கள் விடு­த­லைப்­பு­லிகள் கட்­சியின் தலை­வ­ரு­மான கருணா அம்மான் என்ற வினா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் வர­வேற்­றுள்ளார். 

புதிய அமைச்­ச­ர­வையில் முஸ்­லிம்கள் இடம்­பெ­றா­தி­ருப்­பதைத் தமிழ் மக்­க­ளுக்குக் கிடைத்த வெற்றி என்ற வகை­யிலும் அவர் கருத்­து­ரைத்­துள்ளார்.

அர­சியல் ரீதி­யாக சிறு­பான்மை இன மக்­க­ளுக்கு அதி­கார நிலை­க­ளில் இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது என்­பதே புதிய அர­சாங்­கத்தின் உறு­தி­யான நிலைப்­பா­டாகத் தெரி­கின்­றது. புதிய அரசு தற்­கா­லி­க­மா­னது. பொதுத் தேர்தல் வரை­யுமே இந்த அரசு நிலைத்­தி­ருக்க முடியும். பொதுத்­தேர்­தலில் மக்கள் வழங்­கு­கின்ற ஆணையை அனு­ச­ரித்து, அதன் ஊடாகப் புதிய அமைச்­ச­ரவை அமைக்­கப்­ப­டும்­போது, அது எத்­த­கைய நிலைப்­பாட்டில் அமைந்­தி­ருக்கும் என்­பதை இப்­போது எதிர்வு கூற முடி­யாது. 

ஆனால் ஒன்று மட்டும் நிச்­சயம். புதிய அர­சாங்கம் ஜனா­தி­பதி கோத்­த­பாய தனது நிறை­வேற்று அதி­கார வல்­ல­மையைக் கொண்டு நிய­மித்­துள்ளார். பொதுத் தேர்தல் எத்தகைய தீர்ப்பை வழங்கும் என்பதை இப்போதே அறுதியிட்டுக் கூற முடியாது. ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றியீட்டியதைப் போலவே, பொதுத் தேர்தலிலும் பொதுஜன பெரமுன மிகப் பெரும்பான்மையான வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பே மேலோங்கி உள்ளது. 

அத்தகைய ஒரு நிலைமை உருவாகுமானால், தமிழ், முஸ்லிம் சமூகங்கள் நிச்சயமாக இன்னும் அதிகமாக ஓரங்கட்டப்படும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. ஆனாலும் அப்போதைய அரசியல் நிலைமைக்கு ஏற்ற வகையில் அத்தகைய நிலைமை ஏற்படாமலும் போகலாம். 

இத்தகைய பின்னணியிலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்பது தொடர்பில் பரிசீலனை செய்யும் என்ற கருத்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் இருந்து வெளிப்பட்டிருக்கின்றது. 

அமைச்சுப் பதவிகளை ஒருபோதும் ஏற்பதில்லை. அரசியல் தீர்வின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே பிரதான நோக்கம். அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக அமைச்சுப் பதவிகளை ஏற்பதில்லை என்றிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது என்பது, இப்போதைய அரசியல் யதார்த்த நிலைமையைத் தெட்டத் தெளிவாகக் காட்டியுள்ளது. 

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி மாற்றுத் தலைமையொன்றைக் குறிவைத்து அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியும் இப்போதைய அரசியல் நிலைமைகள் காரணமாகவே, அரசியல் தீர்வும் அபிவிருத்திச் செயற்பாடுகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளது. 

ஆக, அபிவிருத்தியும் அரசியல் தீர்வும் ஒன்றையொன்று தழுவி முன்னோக்கிச் செல்லுமா அல்லது ஒன்றையொன்று விழுங்க முற்பட்டு குழப்பமான நிலைமைதான் நீடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.   

 

https://www.virakesari.lk/article/70655

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.