Jump to content

கையடக்க தொலைபேசி வாங்கினால் வெங்காயம் இலவசம்..!


Recommended Posts

தமிழகத்தில், ஸ்மார்ட் தொலைபேசி வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்ற  தொலைபேசி  கடைக்காரரின் அறிவிப்பு, வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

india.PNG

ஆடம்பர பொருளான தங்கத்தின் விலையைப் போன்று, மக்களின் அத்தியாவசிய தேவைப் பொருளான வெங்காயத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்றத் தாழ்வுகளை சந்தித்து வருகிறது.

இந்தியாவில், தற்போது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 200 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே உள்ள 'எஸ்.டி.ஆர் மொபைல்ஸ்' எனும்  தொலைபேசி  விற்பனை கடை, ‘ஸ்மார்ட்  தொலைபேசி  வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்’ என, அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

பொதுவாக,  தொலைபேசி  வாங்கும்போது டெம்பர் க்ளாஸ், ஹெட்போன், ஸ்பீக்கர், மெமரி கார்டு, ஹெட்செட் போன்ற பொருட்கள்தான் இலவசமாக வழங்குவது வழக்கம். 

ஆனால், ஸ்மார்ட்  தொலைபேசி  வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படும் என்ற  தொலைபேசி கடைக்காரரின் இந்த வித்தியாசமான அறிவிப்பு, வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

https://www.virakesari.lk/article/70693

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிலோ முருங்கைக்காய் 800 ரூபாய்.. 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி மாத்திப் போட வேண்டியதுதான் ஒரு கிலோ  வெங்காயம் வாங்கினால் ஒரு ஸ்மார்ட் போன் இலவசம் என்று....!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவெல்லாம் வெங்காயத்தை காசுக்கு பதிலாய் குடுக்கலாமாம்.....அதிலையும் சில்லறை வெங்காயம் ரொம்ப காமெடி..😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த மாலை .. தேன் சிந்தும் வேளை..

onion234-1575886522.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.