• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
பெருமாள்

‘முழு நட்டஈட்டையும் நானே செலுத்துகிறேன்’: பிரியங்கவிற்காக களமிறங்கிய சிங்கள தொழிலதிபர்!

Recommended Posts

792_n-696x928.jpg
 

பிரித்தானிய தூதரகத்தால் குற்றவாளியென அறிவிக்கப்பட்டு, பிரியங்க பெர்ணான்டோவிற்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை தானே செலுத்துவதாக அறிவித்துள்ளார் பிரித்தானியாவில் வாழும் சிங்கள தொழிலதிபர் ஒருவர்.

இலங்கை தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்களை நோக்கி கழுத்தை வெட்டுவதை போல சமிக்ஞை காண்பித்ததாக பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்தில் பயிணாற்றிய பிரிகேடியர் பிரியங்க மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 2018ம் ஆண்டு இலங்கை சுதந்திரதின நிகழ்வின்போது இந்த சம்பவம் நடந்தது.

இது தொடர்பான வழக்கு நடைபெற்ற நிலையில், இராஜதந்திர சிறப்புரிமை அவருக்கிருப்பதாக தெரிவித்து வழக்கு விசாரணை கைவிடப்படவிருந்தது. எனினும், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம், பிரியங்கவிற்கு சிறப்புரிமை இல்லையென குறிப்பிட்டு, வழக்கை நடத்தியது. அதன் தீர்ப்பில், அவரை குற்றவாளியாக அறிவித்து, 2400 ஸ்ரேலிங் பவுண் அபராதம் விதித்தது. அத்துடன் வழக்கு செலவு, நட்டஈடு உள்ளிட்ட இதர கட்டணங்களும் சேர்ந்து 4419.80 ஸ்ரேலிங் பவுண் அவர் செலுத்த வேண்டியிருந்தது.

இந்த நிலையில், பிரித்தானியாவிலுள்ள சிங்கள தொழிலதிபராக ரஞ்சன் பஸ்நாயக்க என்பவர், அந்த நட்டஈட்டை தானே செலுத்துவதாக அறிவித்துள்ளார்.

https://www.pagetamil.com/92602/

Share this post


Link to post
Share on other sites

துவேசத்தை காட்டுவதும் குற்றம் இந்த நாடுகளில் அந்த குற்றவாளிக்கு வரிந்து கட்டிக்கொண்டு ஆதரவு குடுப்பது அதை விட பாரிய குற்றம் இந்த https://www.facebook.com/ranjan.basnayake என்ற சிங்களவர் அனுபவ குறைவு உள்ள ஆள் போல் இருக்கிறார் இப்படித்தான் சாம் சிக்கின்  என்ற சிங்கள முதலாளி இறுதி யுத்தத்துக்கு பணம் குடுத்தவர் விலாசமாய் அவரிடம் வேலை செய்தவர்கள் முக்கால்வாசி விசா இல்லா  சிங்களம் பிறகென்ன எங்கடையல்  பெண்டு நிமித்தி விட்டுதுகள் .

Share this post


Link to post
Share on other sites

இங்கிலாந்து நாட்டு சட்டங்கள் இதற்கு இடம் கொடுக்குமா தெரியவில்லை. இந்த '(சிங்கள) நாட்டுப்பற்று' வரக்காரணம், அவனுக்கு பின்னால் ஒரு நாடு உள்ளது என்ற இறுமாப்பு. 

இப்படிப்பட்டவர்களை எத்தனை இங்கிலாந்து வாழ் சிங்களவர்கள் எதிர்கிறார்களோ தெரியவில்லை.

 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ampanai said:

இங்கிலாந்து நாட்டு சட்டங்கள் இதற்கு இடம் கொடுக்குமா தெரியவில்லை. இந்த '(சிங்கள) நாட்டுப்பற்று' வரக்காரணம், அவனுக்கு பின்னால் ஒரு நாடு உள்ளது என்ற இறுமாப்பு. 

இப்படிப்பட்டவர்களை எத்தனை இங்கிலாந்து வாழ் சிங்களவர்கள் எதிர்கிறார்களோ தெரியவில்லை.

 

இங்கிலாந்து நாட்டுச் சட்டங்கள்  எப்படியும் இருந்துவிட்டுப் போக்கட்டும். ஆனால் இலங்கையிலுள்ள மாகாணங்கள் ஒன்றில் அடுத்த ஆளுனராக வரப்போவது, சிங்கள தொழிலதிபரான ரஞ்சன் பசநாயக்க என்பவர்தான். 

Share this post


Link to post
Share on other sites
35 minutes ago, Paanch said:

இங்கிலாந்து நாட்டுச் சட்டங்கள்  எப்படியும் இருந்துவிட்டுப் போக்கட்டும். ஆனால் இலங்கையிலுள்ள மாகாணங்கள் ஒன்றில் அடுத்த ஆளுனராக வரப்போவது, சிங்கள தொழிலதிபரான ரஞ்சன் பசநாயக்க என்பவர்தான். 

அடுத்தமுறை, எமது முரளீதரர்கள்  4419.80 ஸ்ரேலிங் பவுண்சினை செலுத்திவிடுவார்கள் .

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.