Jump to content

வயதோ 34.. பதவியோ பிரதம மந்திரி..!


ampanai

Recommended Posts

157587976092022.jpg

பின்லாந்து நாட்டை சேர்ந்த பெண் உலகின் மிக இளம் வயது பிரதமர் ஆனார்.

அந்த நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், சமூக ஜனநாயக கட்சி வெற்றி பெற்று நான்கு கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது. அக்கட்சியைச் சேர்ந்த அண்டி ரின்னே, பிரதமராக பதவியேற்றார்.

இந்நிலையில் பின்லாந்தில் இரண்டு வாரங்களாக நடைபெற்ற தபால் துறை வேலைநிறுத்த விவகாரத்தை, பிரதமர் அண்டி ரின்னெ சரியாக கையாளவில்லை என்று குற்றம்சாட்டி அவருக்கு அளித்த ஆதரவை கூட்டணி கட்சிகள் விலக்கிக் கொண்டன. இதனால் அண்டி ரின்னே பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து சமூக ஜனநாயக கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது.

இதில் அதிக வாக்குகள் பெற்ற சன்னா மரின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த 34 வயதான சன்னா மரின், பின்லாந்து நாட்டின் பிரதமராக பதிவேற்றதன் மூலம் உலகில் மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

https://www.polimernews.com/dnews/92022/வயதோ-34..-பதவியோ-பிரதமமந்திரி..!

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.