• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ampanai

பௌத்த அடிப்படையைக் கட்டியெழுப்பி பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும் - ரணில்

Recommended Posts

நா.தனுஜா)

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை ஆராந்து பார்க்கும் போது எமக்கு பௌத்த அடிப்படையிலான மத்திய வர்க்கத்தினதும், இளைய சமுதாயத்தினதும் வாக்குகள் கிடைக்கவில்லை என்பது தெளிவாகின்றது. 

ranil.jpg

எனவே இது குறித்து மாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி எமது அடுத்தகட்ட செயற்திட்டங்களைத் தயாரிக்கவேண்டும். 

தற்போது எமது குறைபாடுகள் என்னவென்பதை அறிந்துகொண்டு முன்நோக்கிப் பயணிக்க வேண்டுமே தவிர ஒருவரோடு ஒருவர் வாக்குவாதம் செய்வதில் எவ்வித பயனுமில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் அக்கட்சியின் இளைஞரணியுடன் ரணில் விக்கிரமசிங்க இன்று நடத்திய கலந்துரையாடலின் போதே இவ்வாறு குறிப்பிட்டார். 

https://www.virakesari.lk/article/70752

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, ampanai said:

பௌத்த அடிப்படையிலான மத்திய வர்க்கத்தினதும், இளைய சமுதாயத்தினதும் வாக்குகள் கிடைக்கவில்லை

 

4 hours ago, ampanai said:

இது குறித்து மாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி எமது அடுத்தகட்ட செயற்திட்டங்களைத் தயாரிக்கவேண்டும்

ஒம் பேரினவாத பூதத்தை மகா நாய்களை கொண்டு எப்படி ஊதி இன்னும் பத்து தலைமுறைக்கு கொண்டு செல்லலாம் எண்டு ஆராய்வது மிக முக்கியம். அப்படி தான் ஒரு நாட்டை நிரந்தரமாக சீரழிக்கலாம். 

உங்களை வைத்து பழம் புடுங்க வெளிக்கிட்ட வர்கள்பாடு ........

Share this post


Link to post
Share on other sites

ரணில் இந்தப் பாதையில் தான் போவார் என்று எப்பவோ நாங்கள் இங்கு யாழில் எழுதிட்டம்.

எங்களின் வயதை விட கிட்டத்தட்ட இரட்டிப்பு அரசியல் அனுபவம் உள்ள சம் மாவை கும்பல்.. தமிழ் மக்களை ஏமாற்றுவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை. 

Share this post


Link to post
Share on other sites
On 12/9/2019 at 8:21 PM, ampanai said:

பௌத்த அடிப்படையைக் கட்டியெழுப்பி பொதுத்தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும் - ரணில்

அதான் உங்கட கையாள் சுமந்திரன் இருக்காரு தானே!
பிறகென்ன கவலை?

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
20 minutes ago, Rajesh said:

அதான் உங்கட கையாள் சுமந்திரன் இருக்காரு தானே!
பிறகென்ன கவலை?

ஐ.தே.கவின் எதிர்காலம் அவர்கள் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற ஒரு சந்தியில் நிற்கின்றது. 

அவர்கள், பௌத்த பேரினவாத கொள்கையினை முன்னெடுத்தால் மட்டுமே தாம் வளர முடியும் என எண்ணுகிறார்கள். இல்லாவிட்டால் யாரின் ஆதராவும் இல்லாமல் மொட்டு மீண்டும் வெல்லலாம். 

அதேவேளை, பௌத்தத்தை நிராகரித்து 21ஆம் நூற்றாண்டு சிந்தனையை, உலக ஒழுங்கை ஏற்கவும் மனோபாவத்திற்கு சிங்கள மக்களும் வரவில்லை.    

Share this post


Link to post
Share on other sites
On 12/10/2019 at 1:51 AM, ampanai said:

எமக்கு பௌத்த அடிப்படையிலான மத்திய வர்க்கத்தினதும், இளைய சமுதாயத்தினதும் வாக்குகள் கிடைக்கவில்லை என்பது தெளிவாகின்றது. 

 

 இலங்கை பவுத்தத்தின் அடிப்படையே இன மதவாதத்தை கொண்டு  உங்களால் கட்டி எழுப்பப் பட்டது. இப்போ அது தன் வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது. இனி அதற்கு உங்களால் தீனி போட முடியுமே தவிர கட்டுப்படுத்த முடியாது. அப்படி நீங்கள் செய்யவும் மாட்டிர்கள். முயன்றால் அது உங்களையே தீர்த்துக் கட்டிவிடும். அதையே இப்போ அனுபவவிக்கிறீர்கள்.

Share this post


Link to post
Share on other sites

ஐக்கிய தேசிய கட்சியிலும் நிறைய இனவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் தமிழ், முஸ்லீம் வாக்குகளுக்காக அடக்கி வாசிக்கிறார்கள். மத்தபடி சந்தர்ப்பம் கிடைக்கும்போது எடுத்துவிடுவார்கள். அதட்கு சம்மந்தனோ, சுமந்திரனோ தேவை இல்லை.

சிங்கள வாக்குகள் இனி தேவைப்பட்ட்தால் இனவாதத்தை எடுத்து விடுவார்கள். சந்தர்ப்பத்துக்கு ஏட்ப அதை கையாளுவார்கள். மத்தபடி இரண்டு பேருமே ஒன்றுதான். 

Share this post


Link to post
Share on other sites

'நான் இங்கு எந்தநாளும் இருக்க போவதில்லை’

புதிய தலைமைத்துவத்தை முன்னிறுத்துவதற்கு தான் தயாராக உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (17) இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “ ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாங்கள் ஒரே இடத்தில் இருக்க முடியாது. முன்னோக்கி செல்ல வேண்டும். அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளன. அதற்கமைய ஜனவரி மாதம் முதல் நாங்கள் முன்னோக்கி செல்வோம்.

நான் இங்கு எந்தநாளும் இருக்க போவதில்லை. புதிய தலைமைத்துவத்தை முன்னிறுத்துவதே எனக்கு தற்போது காணப்படும் பொறுப்பு.

சஜித் பிரேதமதாச உள்ளிட்ட ஏனையவர்கள் நாடாளுமன்றின் பொறுப்பினை ஏற்றுக்கொள்வார்கள். அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வோம்.” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/நன-இஙக-எநதநளம-இரகக-பவதலல/175-242578

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this