Jump to content

காஷ்மீரில் கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும்


ampanai

Recommended Posts

வாஷிங்டன்:

காஷ்மீரில் கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்குமாறு  வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரமிளா ஜெயபால் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

image_c6e66b206c.jpg

 

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு, விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பெரும்பாலும் விலக்கிக்கொள்ளப்பட்டு உள்ளன.

எனினும் இணையத் தள சேவை இன்னும் வழங்கப்படாததுடன், தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.

 இத்தகைய கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வலியுறுத்தி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் இந்திய-அமெரிக்க எம்.பி. பிரமிளா ஜெயபால் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஜனநாயக கட்சி எம்.பியான பிரமிளா, குடியரசு கட்சியை சேர்ந்த ஸ்டீவ் வாட்கின்ஸ் எம்.பி.யுடன் சேர்ந்து இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

காஷ்மீரில் போராடுபவர்களுக்கு எதிராக அதிகப் படைகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும், அனைத்து மக்களின் மத சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தடுப்புக்காவலில் வைத்திருப்பவர்களை விடுதலை செய்வதற்கு மத்திய அரசு போடும் விதிமுறைகளுக்கும் அந்த தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த தீர்மானம் மிகவும் எளிமையானது என்றும், இது செனட் சபைக்கு அனுப்பப்படாது எனவும் எம்.பி.க்கள் கூறியுள்ளனர்.

மேலும் இதன் மீது வாக்கெடுப்பும் நடத்த முடியாது.

முன்னதாக இந்த தீர்மானத்தை தாக்கல் செய்யக்கூடாது எனக்கோரி பிரமிளாவின் வீட்டு முன் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் போராட்டம் நடத்தினர்.

மேலும் இது தொடர்பாக அவருக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இ-மெயில்களும் அனுப்பப்பட்டன. எம்.பி. பிரமிளா ஜெயபால், சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/கஷமரல-கடடபபடகள-உடனடயக-நகக-வணடம/50-242262

Link to comment
Share on other sites

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்க வாழ் இந்தியர்கள் போராட்டம்: அமெரிக்கர்கள் பங்கேற்பு

Tamil_News_2019_Dec_05__437816798686982.jpg

வாஷிங்டன்: பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்க வாழ் காஷ்மீரி பண்டிட்கள் மற்றும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்திய போராட்டத்தில் அமெரிக்கர்களும் பங்கேற்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. இதனால் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் தூதரக உறவு ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இதனால் இருநாடுகளிடையே நல்லுறவு சீர்கேடு அடைந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அண்மையில் கூடி விவாதம் நடைபெற்றது. எனினும் பாகிஸ்தானின் கோரிக்கைக்கு சீனா மட்டுமே ஆதரவு தெரிவித்தது.

ஆனால் மற்ற நாடுகள் அனைத்தும் இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டுள்ளன. இந்நிலையில் சர்வதேச அமைப்புகளில் பிரச்னையை எழுப்பி, தோல்வி கண்டது. இந்நிலையில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாக்.,கை கண்டித்து, அமெரிக்க வாழ் காஷ்மீரி பண்டிட்கள், அமெரிக்க வாழ் இந்தியர்கள், வாஷிங்டனில் உள்ள பாக்., தூதரகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அமெரிக்கர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டம் குறித்து, அமெரிக்க வாழ் இந்தியர்கள் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீரில் பாக்., நடத்திய தாக்குதல்கள் குறித்து உலகம் அறியும்.

காஷ்மீரில் இருந்த, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காஷ்மீரி ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த இனப் படுகொலையை நடத்தியது, பாக்., ஆதரவு பயங்கரவாதிகளே. அதேபோல், பாக்., ஆதரவு பயங்கரவாதத்தால், உலகெங்கும் பல்வேறு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். அதனால் தான், இந்தப் போராட்டத்தில் அமெரிக்கர்களும் பங்கேற்றனர் என கூறியுள்ளனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=547514

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அமெரிக்க பெண் எம்.பி.,யை சந்திக்க மறுத்தது ஏன்?

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க எம்.பி., பிரமிளா ஜெயபாலை, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்திக்க மறுத்தது குறித்து, வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.இந்திய - அமெரிக்க ராணுவ மற்றும் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு, சமீபத்தில் அமெரிக்காவில் நடந்தது. இதில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றனர்.அதன்பிறகு, அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். அமெரிக்க எம்.பி.,யான, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, பிரமிளா ஜெயபாலுடனான சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருப்பம் இல்லைஆனால், அந்த சந்திப்பை, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ரத்து செய்தார்.'ஜம்மு - காஷ்மீரில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்' என, அமெரிக்க பார்லிமென்டில், பிரமிளா ஜெயபால் சமீபத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். அதனால் தான், அவரை சந்திக்க ஜெய்சங்கர் மறுத்ததாக செய்திகள் வெளியாகின.'அந்த தீர்மானம் குறித்து தெரியும். ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புவதற்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தத் தீர்மானம் அமைந்துள்ளது. அவரை சந்திக்க விருப்பம் இல்லை' என, ஜெய்சங்கர் கூறியிருந்தார்.


இந்த சந்திப்பை ரத்து செய்ததற்கு, அமெரிக்காவைச் சேர்ந்த பல்வேறு, எம்.பி.,க்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.இது குறித்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:அமெரிக்க பார்லி.,யின் வெளியுறவு விவகாரக் குழுவினரை சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டது. செனட் குழுவினர் கூட்டத்தில், ஜெய்சங்கர் பங்கேற்று, ஆரோக்கியமான விவாதம் நடந்தது. அதே நேரத்தில், பிரதிநிதிகள் சபை குழுவில், உறுப்பினராக இல்லாத பிரமிளா ஜெயபாலையும் சேர்த்துள்ளனர். இது தொடர்பாக, நம்முடைய ஒப்புதலை கேட்கவில்லை.அனுமதி பெறவில்லைஅதனால் தான், இந்த சந்திப்பை, அமைச்சர் ஜெய்சங்கர் ரத்து செய்தார். ஆனால், அவர் சந்திக்க மறுத்ததாக, திரித்து செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. உண்மையில், பிரமிளாவை சந்திக்க நம்மிடம் அனுமதி பெறவில்லை. ஒரு வெளிநாட்டு அமைச்சரிடம், இவரை சந்திக்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2439778

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.